• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பனி - 2

MK28

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
38
31
18
Chennai

பனி - 2​

IMG_20241208_024840_943.jpg

நீண்ட இரட்டைஜடை முழங்காலை தொட்டது.மேகவர்ணதில் பூத்தையல் இட்ட காஷ்மீரி மேல் அங்கியும்,,தளிர் மஞ்சளும், அரும்பின் வண்ணமும் கலந்த கலவையில் மயில் வர்ண கற்களால் தைக்கப்பட்ட ஆடம்பற சால்வையால் முக்காடிருந்தாள். எங்கிருந்தோ வந்த சூரியனின் ஒளிககதிரில் தங்கதேவைதை போல் ஜொலித்தாள். தானும் இயற்கை மட்டுமே உள்ளோம் என்ற சுதந்திர எண்ணத்தில்

அழகிய மான் போன்ற நடையுடன்

பாடிக்கொண்டே நடந்தாள்......

லதிஷா (லதிஷா) வை

எங்கே கரைந்துபோகிறாய்

என்..... பூக்களின் பனித்துளியே...!!

எங்கே ஊர்ந்து போகிறாய்

என்......வான்மேகமே......!!

எங்கே நகர்ந்து போகிறாய்

என்....... பூந்தென்றலே.....!!

என்னை கவர்ந்து விட்டாயே

என்னை மயக்கி விட்டாடயே....!!

என் பூக்களின் புல்வெளியே...!! ( குல்மார்க்கே )

அந்த இனிமையான குரலில்அமி தன்னை தொலைத்தான்.

கால்கள் அவனை கேளாமலே அவளை நோக்கி சென்றது.

இன்னிசையில் முழ்கி கொண்டே திடிரென்று ஏதோமீது மோதி விழப் பார்த்தான், அவனுடனே பஞ்சு பொதி ஒன்று சேர்ந்தே உருண்டது.

வெண்மையான பனி படர்ந்த சிகரங்களும், முக்கியமாக நீல வானமும் சில பஞ்சுபோன்ற வெண்மையான பருத்தி மேகங்களும் நிரம்பிய வயல்களில்

உருண்டு கொண்டிருந்தனர் இருவரும்.

எதுவோ ஒன்று அவளை அரவனைத்து தாங்கியது யார் என்று கண்களை மெதுவாக திறந்தாள்.

வண்ணத்துபூச்சி தன் இறக்கையை சிறிது சிறிதாக விரிப்பது போல் இருந்தது.

விரித்த இறக்கைகளுக்குள் தன் உருவத்தை பார்த்தான். கடலின் ஆழத்தின் உள்ளே தான் அடித்து செல்வது தெரிந்தது.

யுகம் யுகமாய் இந்த நீலநயனங்களின் ஆழத்திலிருந்து தான் வெளிவரவில்லை என்பதை உணர்ந்தான்.

இருவரின் பார்வைகளும் ஓரிடத்தில்

நிலைபெற்றது.

புவிஈர்ப்பு நிலை விசைக்கு வந்தவுடன்

விழிஈர்ப்பு விசையால் நிலை தடுமாறினர்

பேரழகனும், பேரழகியும்.

காந்தம் போல் கருவிழிகள் நான்கும் கவர்ந்தன.தீடிரென்று ஒரு பாப்லர் மரத்தின் நிர்வாண கிளைகளில் இருந்த பறவைகளின் சினுங்களில், உயிர்தெலுந்தனர்.

பார்த்தவனின் இதயம் பரவசப்பட்டது, சிறிய வயதில் பார்த்தவன் இப்போது லதிஷாவை பார்த்ததும் மையல் கொண்டான்.

லதிஷாவின் உடல் சிலிர்த்தது. பெண்மையின் வெட்கத்தினால் சுருங்கிவிட்டாள்.

வெள்ளை ஆம்பல் மலர்போல் இருந்தவள் சட்டென்ற முதல் ஸ்பரிசத்தில் செம்பவள வர்ணத்தை வதனத்திலும், மேனியிலும்

இட்டுக் கொண்டாள்.

ஒருநிமிடம் அமி வியந்து, மெய் மறந்து விட்டான். இதுவரை அவன் கண்டிராத பெண்மையின் மாற்றத்தை கண்டு ஸ்தம்பித்து விட்டான்.

இமை மூடும் நேரத்தில் மான் போல் துள்ளி

குதித்து காணாமல் போய்விட்டாள்.

அமியின் இதயத்தில் காதல் அம்பை

சொறுகி விட்டு சென்றுவிட்டாள்.

புன்சிரிப்புடன் வீடு நோக்கி விரைந்தான்.

சாப்பாட்டு மேசையில் கஷ்மிரிய

உணவு பதர்த்தங்களான ரிஸ்டா, கோஷ்டாபா மற்றும் கபாப் மிகமிக வாசனையுடன், நூரியின் கைபக்குவத்தில் தயாராக இருந்தது

நதிராவும், ஷாவும் சந்தோஷமாக வரவேற்றனர்.

.

நூரி..... அமிக்கு ஆசையுடன் உணவை ஊட்டிவிட்டார்.காரமாகவும், மிகவும் சுவையாகவும் இருந்த உணவை ரசித்து உண்டான்.

நூரி....... எந்த நாட்டிலும் இந்த சுவை இல்லையே, என் செல்ல நூரி என்று சொன்னவனின் கண்களில் கண்ணீருடன், பாசமும் வழிந்தோடியது.

அமியின் தாய் வேறுசில இனிப்பு பண்டகளை சமைப்பதில் சிறந்தவர் என்றால், இந்த வகைகளில் நூரியின் பண்டங்கள் சிறந்தவை,

அதனாலே அமியின் விருப்ப உணவுவகை இது ஆகும்.

சிறிது நேரத்திற்கு பிறகு நூரியிடம் நான் லடாக்கில் ஒரு புதிய தொழில் தொடங்கும் நிமித்தம் செல்ல விருக்கிறேன் என்பதை தூரத்தே தெரியும் திரைசிலைக்கு கேட்குமாறு உரக்க கூறினான்.

மறுபடியும் வாய் மட்டும் செய்திகளை சொல்ல, கண்கள் நாளாபுறமும் அலை பாய்ந்தது.

நூரிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. நமட்டு சிரிப்புடன் என் அருமை மகனே இன்னும் எனக்கு வயது ஆகவில்லை,

செவிடும் ஆகவில்லை என்றாள்.

அசட்டு சிரிப்புடன் கிளம்பினான் நெடியவன்.

திரைசீலையின் பின்னே நிழல்உருவம் மட்டும் தெரிந்தது.

அமி கார் கண்ணாடி வழியே கைகளை அசைத்தான். திரைசீலை அசைந்தது.

இதயத்தில் ஏதோ பிசைந்தது

இங்கு வரும்போது இறகை போல இருந்த இதயம் மிகவும் பாரமாக இருப்பதாக உணர்ந்தான்.

கார் மறையும் வரை காத்திருந்த லத்திஷாவின் மனதிலும், வயிற்றிலும் இன்ப அவஸ்தை பெருககெடுத்தது.

சொல்ல தெரியாத வேதனையும், துக்கமும்

ஒட்டிக் கொண்டது.

பாபாரேஷியில் மாலை என்பது சூரியன் வெகு சீக்கிரமே மறைந்து போய்விடுவார்.

இன்னும் இரண்டொரு நாட்களே இருப்பார்கள்.

பிறகு இந்த அழகிய கிராமத்தையும்,தன் அழகனையும் பிரிய வேண்டிய நேரம் என்பதை நினைத்தே அயர்ந்து போனாள் லதிஷா.

சட்டென்று மனது நத்தையின் கூட்டுக்குள் சுருங்கி கொண்டது. இதயத்தில் சோகத்தின் வலி ஒட்டிக் கொண்டது.

அமியின் தொழிகளில் விவசாயம், மற்றும்

கஷ்மிரிய கட்டக்கலைகளில் வல்லவன்.

லண்டனில் உள்ள கிழக்கு அயர்லந்தில் நிறைய கலைநயம் மிக்க வேலைபாடுகள்

உள்ள வில்லாக்கள் அமியின் வடிவமைப்பாகும்.

இங்கு உள்ள மக்கள் மிகவும் விரும்புவது இந்தியாவின் கலச்சாரத்தையும், சிறந்த கலைநயம்மிக்க பொருட்களையும் தான்.அதில் மிகமுக்கியமானது.

உலகதரம் வாய்ந்த தூய பாஷ்மினா சால்வகைளும், அதில் தீட்டபடும் பசோலி ஓவியங்களையும்.

இதற்காகவே லடாக்கிற்கு அமியும், ஆருயிர் தோழன் ரிச்சட் ஹென்றியும் செல்கிறார்கள்.

ஸ்ரீ நகரில் விமானம் வருபதற்கு முன் ரிச்சூவின்(ரிச்சட் ஹென்றி ) வாழ்கை வரலாறு.

தேம்ஸ் நதிகரையின் ராபர்ட் ஹென்றி, லிண்டா ஹென்றியின் ஒரே மகன் ரிச்.

ராபர்ட்டின் பரம்பரை தொழில் இசைகருவிகருவிகளை செய்வதும், விற்பதும்,அதற்கேதற்றார் போல மேல்நாட்டு இசையை நன்கு கற்றவர்கள்.( முன்னோர்கள் உட்பட )

ராபட் சிறந்த பியானோ வசிப்பவர், ஓவ்வொரு ஞாயிறும் தேம்ஸ் நதிக்கரையில் உள்ள சர்ச்தீவ் தேவாலயத்தில் ராபர் பியானோ வாசிப்பார்,

ரிச்சர்ட் கித்தார் இசைப்பதில் சிறந்த ஞானம் கொண்டவன், லாராவும் சிறந்த பாடகீ, ஓவ்வொறு ஞாயிறு அன்றும் இவர்களின் இசை ஆராதனைகளே சர்ச்தீவில் ஓலிக்கும்.

கடவுளுக்கு முன்னே மட்டுமே இவர்களின் இசை அரங்கேறும், கடவுளின் மீது மிகுந்த பற்று உள்ளவர்கள்.

ரிச்சட்டும், அமியும் முதுகலையை ஒரே வகுப்பில் பயின்றதாலும், ஒரே ரசனை, ஒத்த கருத்துகளால் கவரப்பட்டு ஆருயிர் தோழர்கள் ஆனார்கள்.

ரிச்சட்டிற்கு இந்திய வர்த்தகத்தில் மிகுந்த ஆர்வம் அதிகம். இந்தியாவின் வருமை மிக்க கிராமத்தில் கிடைக்கும் அரியவகை பொருட்களை வாங்கி, விற்கவே லடாக் வருகிறான்.இந்த வர்தகத்தில் அந்த ஒதுகுபுற கிராம மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் கொஞ்சம் உயரும்,என்ற நல்ல குறிக்கோளுடன், இந்த புதிய தொழிலை நண்பர்கள் இருவரும் தொடங்குகிறார்கள்.

இதோ விமானம் தரை இறங்குகிறது.

நாமும் ரிச்சர்ட்யை வரவேற்கலாம்.

ரிச்சர்ட் ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறான். சாம்பல் வானங்கள் சாய்ந்த கூரைகள் மற்றும் கீழே நீண்ட நீலநிறத்திலான ஏரிகள் நகரத்தின் மீது நிழலை வீசுவதைக் காண்கிறான்..

வெளியே வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ், ஸ்ரீ நகர் தங்கள அன்புடன் வரவேற்கிறது,விமானி இனிமையான குரலில் அறிவிக்கிறார்.ரிச்சர்ட்டிற்கு ஏனோ மேனி சிலிர்க்கிறது.

ஹென்றி ரிச்சர்ட் :

ஆறடிக்கும் மேல் உயரம், ஆங்கிலேய நிறம், நீலநிற கண்கள்,பலுப்புநிற தலைமுடி,சதைப்பிடிப்பே எங்கும் இல்லாத உடம்பு தேம்ஸ் நதிக்கரை ஆணழகன், கன்னத்தில் குழி விழுகும்,

இந்த கன்னக் குழி......நிறைய இதயஙகளை கவர்ந்திழுக்கும் .

எப்போதுமே உதட்டில் உறைந்திருக்கும் ஒருகிலோ சிரிப்பு.

பச்சை நிற ஓவர்கோட்டுடன், டெனிம் கருப்புநிற ஜீன்ஸ்சும்,பிரவுன்நைக் ஷூவும்,

கண்களை மறைத்த நீலகூலர்ஸ்சுடனும் தரை இறங்கியவனை வைத்த கண் வாங்கமல் வழி விட்டனர் விமான பெண்கள்.

விமானநிலையத்தின் வெளியே அமி காத்துக் கொண்டிருந்தான். மித் எனறு ஓடிவந்து கட்டிக் கொண்டே குதித்தான்.

அமி....வா வா......ரிச் காஷ்மீர் உன்னை வரவேற்கிறது என்று முகமன் கூறினான்.

அமி எவ்வளவு அமைதியோ அவ்வளவு ஆர்ப்பாட்டமானவன் ரிச்.

மித்......நான் டிரைவ் பண்ணவா என்றான் ரிச்

ஐய்யோ.......ரிச் இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும், அங்கு வேறு முறை,இங்கு வேறு முறை என்றான்.

ஹஹஹ.....

என்ற சத்தமாக சிரித்தான் ரிச்.

அவனின் சிரிப்பு சத்தத்தை பார்ததவர்கள், சிநேக சிரிப்புடனே சென்றார்கள்.

ரிச்சின் நெடுநாளைய கனவு

இந்தியா வருவது.எதுவோ ஒன்று ரிச்சை இந்தியாவிற்கு இழுத்தது.

ஸ்ரீ நகரிலிருந்து கார் நகர்ந்தது லே லடாக்கை நோக்கி....

அழகிய வலது புறம் ஒடக்கூடிய சிந்து நதியும்,இடதுபறம் பச்சை நிறத்துடன் பசுமையான நெல் வயல்களின் முடிவில்லாத நிலப்பரப்பின் வழியாக செல்கிறது இவர்களின் பயணம்.

வழியில் ஒவ்வொரு சில நூறு மீட்டருக்கும்

இந்திய இராணுவத் தொடரணிகள் மற்றும் இராணுவ வீரர்கள் உள்ளனர், ஆனால் இந்த உயர்ந்த பாதுகாப்பு பயணிகளுக்கு உதவ மட்டுமே.

சில இடங்களில் கடுமுரடான பாதை, வழியில் மணல்புயல் வீசும்.நிறைய வேறுபட்ட கிரமங்கள், வானிலை ஒரே மாதிரி இல்லாமல் மாறி மாறி இருந்தது,

இந்த லே பயணம் அவ்வளவு சுலபமானது அல்ல, மிகவும் ஆபத்தான பயணம்.

சாலையோற உணவு கடை ஒன்றில் காரை நிறுத்தி கிரமத்து உணவுகளை உண்டனர்.

இது ரிச்சிற்கு சுவரஷ்யமான, ( மசாலா கலந்த காரமான உணவு ) அனுபவமாக இருந்தது.

சில கணவாய்களை கடந்தும் நிறைய தூசிகளை வாரி இறைக்கும் மணல் சீற்றங்களை கடந்தும் ட்ராஸூ கிரமத்ததை

அடடந்தனர்.

இங்குதான் கார்கில் போர் நினைவகம் உள்ளது, இது 1999 கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக கட்டப்பட்டது.

இருவரும் கார்கில் போர் நினைவகத்தை பார்வையிட்டனர், இந்திய வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் பற்றி அமி சொல்லிக் கொணடிருந்தான்.

மிகவும் ஆச்சரியத்துடனும், ஆர்வத்துடனும் கேட்டுக் கொண்டான் ரிச்.

வீரவணக்கத்தை பெருமையுடன் தெரிவித்தான் அபி.

அதே முறையை பின்பற்றி தன்னுடைய வணக்கத்தையும் கூறினான் ரிச்.

இந்தியர்களின் தாய்நாட்டு பற்றை கண்டு பிரமித்து போனான் தேம்ஸ் நாயன்.

கார்க்கில் போக்குவரத்து கிராமத்தில் காரை நிறுத்தினார்கள்.இங்கியே உணவுடன் கூடிய குடில்களும் உள்ளன.

ஸ்ரீநகரில் இருந்து லேவுக்குப் பயணிக்கும் பெரும்பாலான மக்கள் இரவில் தங்கியிருப்பார்கள்.இரவு உணவை முடித்துக் கொண்டு உறங்கினார்கள்.

அடுத்தநாள் அதிகாலையேகிளம்பினார்கள்

கார்கிலில் இருந்து அமியும், ரிச்சும்.

கார்கிலுக்கு அப்பால் செல்லும் பாதையில் இந்த அறிவிப்புகள் இருக்கும்.

ஜாக்கிரதை:

நீங்கள் எதிரிகளின் கண்காணிப்பில் இருக்கிறீர்கள்' போன்ற பயமுறுத்தும் பலகைகளுடன், பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (LoC) அபாயகரமாக அருகில் உள்ளது. என்பதை இந்திய இராணுவம் எச்சரிககை படுத்துவார்கள்.

(ஸ்ரீநகரிலிருந்த லே செல்லும் சாலைகளையும் கிரமங்களையும் வர்ணித்தால் நிறைய நிறைய சொல்லவேண்டும்)

சில இடங்களில் பார்லி வயல்கள் தங்க போர்வை போர்த்தியது போல் கண்களை பிரகாஷமாக்கும்.

வித்தியசாமான, வியக்கதக்க காலநிலை மாற்றங்கள், சாதகமாகவும், பாதகமாகவும் நடைபெரும்.

பனி ( தொடரும்)

Last edited:
  • Like
Reactions: MK3

MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43
Tamil nadu

பனி - 2​

View attachment 1369

லதிஷாவும் அமியை விரும்புறாளா?.அப்போ அந்த குழந்தை ?. அவளுக்கு குழந்தை இருந்து தெரியுமா?. யார் இந்த ரிச்?.
 
❤️