பனி - 3
சீன எல்லைக்கு கிழக்கே உள்ள கிராமம் சாங்தாங் பீடபூமிகிராமம் உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 13,500 அடி உயரத்தில் உள்ளது. இங்கு குளிர்கால வெப்பநிலை −40 டிகிரி செல்சியஸ் வரை குறையும். இது ஒரு உயரமான பீடபூமி ஆகும்.இங்கு இந்தோ - திபெத்திய பழக்கவழங்கள் உள்ளன.
சாங்தாங் கிராமத்தில் வசிப்பதால் இவர்களை சாங்பா நாடோடி மக்கள் என்றே அழைப்பார்கள்.
தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு, செம்மறி ஆடுகளின் தோலை மாற்றியமைத்து, சூடாகவும் முரட்டுத்தனமாகவும் வடிவமைத்துக் கொள்வார்கள் சாங்பா மக்கள்.இது வெண்மையான அடர்த்தியான அங்கியாகும் . ( இந்த அங்கியின் பெயர் லாவா கோஞ்சா அல்லது கோஸ் கர் )
இதேபோல், இவர்களின் வலுவான காலணிகள், விலங்குகளின் தோலை கொண்டு கையால் செய்யப்பட்டவை.
இந்த ஆடை குளிர் மற்றும் பாலைவனத்தின் வானிலைக்கு ஏற்றவாறு இருக்கும்.
சாங்கபா இனமக்களின் முக்கிய தொழில் ஆயர் வாழ்கை முறையாகும். இரண்டு வகை ஆடுகளை வளர்க்கிறார்கள் ஒன்று சாங்க்பா ஆடுகள் இது இறைச்சிக்காகவும், இரண்டு பாஷ்மினா ஆடுகள் சால்வகைகளுக்காகவும்,
கம்பளிக்காகவும் வளர்க்கப்படுகின்றன.
.
பாஷ்மினா ஆடுகள் என்பது இமய மலையை ஒட்டிய பனி படர்ந்த பகுதிகளிலும், திபெத் - லடாக்கில் மட்டுமே காணப்படும் ஒரு ஆட்டினமாகும்.
குளிரைத் தாங்குவதற்கு ஏற்ப மென்மையான அடர் ரோமங்கள் இந்த ஆடுகளுக்கு உள்ளன. இந்த ஆட்டின் ரோமங்கள் 12-14 மைக்ரான் தடிமனில் மிக மென்மையாக இருப்பதால் இந்த ஆட்டின் ரோமங்களில் இருந்து செய்யப்படும் சால்வைகள் மிருதுவாக இருக்கும்.
பாஷ்மினா ஆடுகள் குளிர்கால ரோமங்களை ஒவ்வொரு வசந்த காலத்திலும் உதிர்த்து விடுகின்றன.
இம்மென்ரோமங்கள் மீண்டும் வளர்கின்றன, ஆடுகளை சீவுவதன் மூலம் ரோமங்கள் சேகரிக்கப்படுகிறது,
வெட்டுவதன் மூலம் அல்ல, ரோமங்ளை சேகரித்தே பாஷ்மினா சால்வைகள் தயாரிக்கப்படுகின்றது.
பாஸ்மினா சால்வைகளும், கம்பளிகளும் அதன் மென்மைத் தன்மைக்கு உலகப் புகழ்பெற்றவை.
தற்போது இந்த ஆடுகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. இந்த இன ஆடுகள் அழியாமல்இருப்பதற்கான
இந்தமக்கள் நிறைய போராடுகிறார்கள்.
தலைமுறை, தலைமுறையாக ஆடுமேய்த்தலையும், நெய்தலையுமே முக்கிய தொழிலாக செய்து வருகிறார்கள்.
பெரும்பாழும் இயற்கையை சார்ந்தே இவர்களது வாழ்கை உள்ளது.
அமிக்கும் இது முதல் பயணம் லேவை நோக்கி. இருவரும் மிகவும் களைத்து போய்விட்டனர்....
சாங்தாங் கிராமத்தில் நுழையும் முன்னே அழகிய பாங்காக்ஏரியின்
நீளபாதையில் கார் செல்கிறது.தூரத்தே வெள்ளையும், நீலமும் கலந்த மலைத்தொடர்களையும், ஏரியின் கரையில் பரந்த பச்சை மேய்ச்சல் நிலத்தை கண்டனர்.அதில் நிறைய வெள்ளை வெள்ளையாக ஏதோ அசைய கண்டனர், கார் இன்னும் சிறிது தூரம் கடந்ததும் சரக்கென்ற ஃசப்தத்துடன் கார் நின்றது.
பாஷ்மினா ஆடுகள்....!!
இருவரும் காரை விட்டு துள்ளி குதித்தனர்.
ஒருவரை ஒருவர பார்த்துக் கொண்டே ஓட்ட பந்தயவீரர்கள்போல் ஆட்டு மந்தைகள் இருக்கும்மிடம் நோக்கி ஓடினார்கள்.
அமி பாஷ்மினா ஆடுகளை கண்டதும்
சிலிர்த்து நின்றான்.ஆடுகளில் எத்தனையோ ரகங்கள் இருந்தாலும் இவைகள் இந்த பகுதியில் மட்டுமே இருக்கும் உண்மையான பாஷ்மினா ஆடுகள்.
ஆனால்......ரிச் ஒரு குட்டி ஆட்டுக்குட்டியை கைகளில் ஏந்தி தடவி அதன்மீது முகத்தை வைத்து தேய்த்துக் கொண்டே அமியிடம் குட்டி ஆட்டின் அழகையும்,காதில் தொங்கும் மென்மையான ரோமங்களையும் வர்ணித்துக் கெண்டிருந்தான்.
தீடீரென்று ஒரு குரல் ஒலித்தது.....
இருவரும் ஒருசேர திரும்பினார்கள்
மந்தையின் நடுவிலிருந்து வெள்ளையான உருவம் ரிச்சை நோக்கி ஓடிவந்தது.
ரிச் தட்டென்று பயந்து ஆட்டுக்குட்டியுடன் பின்னே விழுந்தான்.
வெள்ளை உருவம் பக்கத்தில் நெருங்கி வரும்போதுதான் பெண் என்று தெரிந்தது.
கைகளை கட்டிக் கொண்டு அமி பார்க்க
அருகே வந்தவள் ரிச்சை பார்த்து கைகளை ஆட்டி கோபமாக திட்டிக கோண்டிருந்தாள்.
ஏதோ தீட்டுகிறாள் என்பது ரிச்சிற்கு தெரியும், பாஷை தெரியாது.
கீழே விழுந்தவன் கிழிருந்தே மேலே பார்த்தான், வெள்ளை ஆடையை பார்த்தவனின் கண்கள், மெல்ல மெல்ல மேலே சென்றது பீட்ரூட் கலரில் முகத்தின் நிறமும், அழகிய சிறிய சப்பை மூக்கும், சிறிய கண்களும், காந்தம் போன்ற குட்டி கருவிழிகளும், ஏதோ ஒன்று அவனை கவர்ந்தது.ஆனாலும் கொஞ்சம் அழகாக இருந்தாள்.
நீள இந்த அங்கி அவளின் முழு அழகையும் மறைத்து விட்டதே என்று சுச்.. சுச்சு...... என்று வருத்தப் பட்டான்.
கீழே ஒரு கையை தலைக்கு முட்டு கொடுத்துக் கொண்டு, ஒரு கால்களை ஆட்டிக் கொண்டு,மறு காலை மடக்கி கொண்டு மறுகையால் ஆட்டுக் குட்டியை பிடித்துக கொண்டிருந்தவனின் வாயும் வேணும்மென்றே ஒரு பாட்டை பாடியது.
நக்கலாக அவளை வர்ணித்து பாடிக் கொண்டிருந்தான்.
இரண்டு கைகளை நீட்டிக் கொண்டே ஆட்டுக்குட்டியை பிடுங்க வந்தாள். எதிர்பாரத விதமாக தடுக்கி அவன்மீதே விழுந்தாள்.
பெரிய ரோஜா மலர்கொத்து விழுந்ததை போல இருந்ததது ரிச்சிற்கு, அப்பாடியே வானத்தை பார்த்தவாறு படுத்து விட்டான்,கண்களைமூடிக் கொண்டே..... ஆஹா.... ஆஹா.... என்று ரசித்துக் கொண்டிருந்தவனின் முகத்தை பார்த்தவளுக்கு கோபம் தலைக்கேரியது.
பீட்ருட் முகம் இன்னும் அடர் வண்ணத்திற்கு மாறியது, எழுந்து கொள்ள முயன்றபோது
அவளின் அங்கியின் கயிறு அவனுடன் பிணைந்து விட்டது, வந்த கோபத்தில் ரிச்சின் தலையில் நங்கென்று ஒரு குட்டு குட்டினாள்.
ஆஆஆஆஆஆஆஆ...... ஐய்யோ
என்ற சப்தத்துடன் இமைகளை திறந்தவனின் முன்னே அவளின் அழகிய பல்வரிசையும், உதடுகளும் மட்டுமே தெரிந்தது.
இதை பார்த்துக் கொண்டிருந்த அமி ஏரியை நோக்கி போக ஆரம்பித்தான்.
அமிக்கு லதிஷாவின் நினைவு வந்தது., இந்த இடத்தின் அமைதி, இந்த ஏரியின் தூய்மையான நீலநீர், அவள் தன் அருகே இருந்தால் என்று கண்ணை மூடிக் கொண்டு நினைத்துக் கொண்டிருந்தான்.
ஏதோ பெரிய சப்தத்தில் சிந்தனை கலைந்தவன் பார்த்த காட்சி அமிக்குமே சுவரஷ்யம் கலந்த திகைப்புத்தான்.
இங்கே சப்பென்ற அறை ரிச்சின் கன்னத்தில் விழுந்தது. அறைந்து விட்டு எழுந்தவள் ஆட்டுக்குட்டியை பிடுங்கி கொண்டாள்.
ரிச்சிற்கு ஒன்றுமே புரியவில்லை.
தலையை தேய்த்துக் கொண்டே என்ன இது
இவ.... அப்போ குட்டினா..... இப்போ அறையறா.....
என்னா இது..... என்று முழித்தான்.
எழுந்து நின்றவனை திட்டிக் கொண்டே நடந்தாள்.
ரிச்........ அமியிடம் வந்து என்னடா இது குட்டறா.....அறைஞ்சிட்டா.... என்று கேட்டான்
யார்ரா இவ.... இவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்....
ஆனாலும்......... மித்.....அவள் கோபம் அழகா இருக்கு இல்லடா என்று சொல்லி வெட்கப் பட்டான்.....
ஆமா...... மித்.....அவ அடிச்சத நீ பார்த்தியா....? நீ பார்க்கல..... சரியா..... மறந்துரு......என்றான்,கன்னத்தை தேய்துக் கொண்டே.
கோபமாக முறைத்த அமியிடம்.......
மித்..... இப்ப அவ.....வருவா பாரேன் என்றான் ரிச்
என்னடா சொல்ற.... வங்குனது பத்தாதா.... பாரு கன்னம் பன்னு மாதிரி இருக்கு, தலைல கொம்பு முளைச்சு இருக்கு,
உனக்கு இன்னமும்மா வேணும் என்றான்.
இரண்டு நிமிடங்களில் ரிச்சின் அருகே வந்தவள் மீண்டும் திட்ட ஆரம்பித்தாள்.
டேய் மித்.....இவ என்னடா பேசுற கர்ரா புர்ரானு....
ஒன்னுமே பரியல... என்று அவளை பார்ந்து குரங்கு போல் பழிப்பு காட்டினான் ரிச்.
கையில் வைத்திருந்த குச்சியை கொண்டு துரத்த ஆரம்பித்தாள்.
அமிக்கு....ஒன்றுமே புரியவில்லை...
இருவருமே புதியவர்கள், இப்படி சண்டையிடுகிறார்களே என்னமோ ரொம்ப நாள் பழக்கம் போல..... என்னடா நடக்குது இங்க......
அமியின் முதுகுபுறம் ரிச்சும், முன்புறம் அவளும் துரத்திக் கொண்டிருந்தனர்.
அமி...... ஹேய் நிறுத்துங்க என்று ஒரு கத்து கத்தியவுடன் இருவரும் அமைதி ஆனார்கள்.
அமி அப்பெண்ணிடம் நீ இந்த கிராமத்தை சேர்ந்தவளா, கிராமம் எவ்வளவு தூரத்தில் உள்ளது இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டான்.
அவளுக்கு கஷ்மீரி பாஷை புரியவில்லை.
முழித்துக் கொண்டிருந்தாள்.
சாங்தாங் மக்கள் பேசும் வட்டார மொழி சன்ஸாகாரி, வியாபார வர்த்தகத்திற்காக லடாக்கிய மொழியையும், பதார் (பலதார்) பௌதர்கள் பேசும் மொழியும் பேசுவார்கள்.
அமி லடாக்கிய மொழியில் கேட்டவுடன் அவளுக்கு முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.
இன்னும் அரை பர்லாங் தூரத்தில் கிராமம் வந்துவிடும் என்றும், யாரை பார்க்க வேண்டும் என்றும் தான் கூட்டிப் போவதாக கூறினாள்.
சாங்தாங் கிரமத்தின் தலைவரை டென்சின் என்று அழைப்பர்
டென்சினை பாருங்கள் என்றாள்....
ரிச் இவளை பார்த்து நிறைய சேட்டைகளை கைகளை ஆட்டி செய்து கொண்டிருந்தான்.
இதை பார்த்துக் கொண்டே அமியிடம் பேசிக் கொண்டிருந்தவள்
இந்த கியாங் ( காட்டு கலுதை ) யார் நோமோ ( அண்ணன் ) என்றாள்....
அமியால் சிரிப்பை அடக்க முடியாமல் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.
ரிச்சிற்கு புரிந்தது ஏதோ பெயர் வைத்து திட்டி இருக்கிறாள் என்று.
அதற்காகத்தான் மித் இப்படி சிரிக்கிறான் என்று....
அமி உன் பெயர் என்ன....நோமோ லே( தங்கை) என்றான்
அழகிய புன்னகையுடன்...இமானி நோமோ என்றாள்...
பிறகு..... இமானி,நோமோ என்னுடைய ஆட்டுக்குட்டியின் மணி இந்த கியாங்கிட்ட
இருக்கு வாங்கி கொடு என்றாள்.
அமி ரிச்சிடம்....டேய் மணியை குடுத்துடு என்றான்.
ரிச்..... மறுபடியும் இமானியின் புன்னகையில் விழுந்து மெய் மறந்து நின்றான்.
அமி..... அதுதான் சொன்னியா மணியை நீ எடுத்து வைச்சுட்டு, அவ திரும்பி வருவான்னு என்றான்.
ரிச்......டேய் அவளை ஒழுங்கா மன்னிப்பு கேக்க சொல்லு மணியை குடுக்கறேன் என்றான்.
நீ செமத்தியா அடி வாங்க போறடா.....பேசாம குடுத்துரு, இல்ல அவ உன்னை கொல்லப்போறா... நீ முடிஞ்சடா என்றான் அமி.
இமானிக்கும் புரிந்தது இவன் சரிபட மாட்டான் என்று முறைத்துக் கொண்டே இருந்தாள்
கியாங்க்...... நீ குடுக்கல இந்த ஏரியில தள்ளி விடபோறேன் பாரு என்றாள்.
அமி... ரிச்சிடம் சரிடா அவகிட்ட நிறைய வாங்க போற.... வெளிகாயம்மா வாங்கமா......உள்காயம்மா வாங்கிக்கோடா மானம் போகாது என்றான்.
ரிச் பார்த்துக்களாம்டா......கொஞ்சம் அசந்துட்டேன், இப்ப பாரு
ஐயா யாரு, எந்த ஊருன்னு இவளுக்கு தெரிய வைக்கிறேன் என்று தொடைகளை
தட்டினான்
இந்த பீட்ரூட் என்னைய ஒன்னும் செய்ய முடியாது.குட்டியா இருக்கறா,
இவளாவது, என்னைய ஏதாவது செய்யறதாவது.
ஹஹஹஹ.....
தலைவன் யாரு என்னனான்னு சொல்லு மித் என்று கெத்தாக அவளை அளவெடுத்தான்.
ரிச்சின் திமிர் செய்கையை பார்த்த இமானிக்கு கோபம் தலைக்கு ஏறியது,
இருடா கியாங் உன்ன என்ன செய்யப் போகிறேன் பாரு என்ற சபதத்ததுடன் ஒரு முடிவெடுத்தாள்.
சண்டைக்கு இருவரும் தயாராகும் நேரம்.இமானியின் அப்பா அங்கு வந்தார், கூடவே இமானியின் தோழி நிஷ்தி வந்தாள்...
சூரியன் மலை அடிவாரத்தில் மறையும்
நேரம் என்ன செய்கிறாய், யார் இவர்கள் என்றார்.
லடாக்கிய மொழியில் அவர்களை பற்றி கூறினாள் இமானி.அமியிடம் இமானியின் தந்தை எல்லா விவரங்களையும் கூறினார்.
இதற்கு மேல் காட்டு விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும் வாருங்கள் போகலாம் என்றார்.
ரிச்சிடம்..... இமானி.....
ஹீ ( ஆட்டுக்குட்டியின் பெயர்)
மணியை கொடு எனறாள்.
ரிச்.... மணியை தருவதுபோல் கையை நீட்டினான், அதை எடுக்க இமானி முயலும் போது மணியை தனது கோட்டினுள் பத்திரப்படுத்தி இதயத்தின்மீது கைகளை வைத்துக் கொண்டு கன்னத்தில் குழி விழுக சிரித்தான்.
பனி ( தொடரும்)
Last edited: