பனி - 5
சாங்தாங் மக்கள் ஆட்டின் தோலினால் செய்யப்பட்ட கருவிகளில் பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை இசைக்கிறார்கள் ட்ருமியன் மற்றும் பிவாங் ஆகியவை முறையே ஆறு மற்றும் மூன்று சரங்களைக் கொண்டுள்ளன.இந்த இரண்டு கருவிகளும் மரங்களின் மரப்பட்டைகளை,மரத் தளமாகப் பயன்படுததி,, அதன்மேல் ஆட்டின் தோலால் மூடப்பட்டு இருக்கும்.இந்த ஆட்டுத்தோல் ஒலியின் தரத்தை மேம்படுத்துகிறது மற்றும் இயற்கையாகவே கருவியின் பேஸை அதிகரிக்கிறது என்று நம்பப்படுகிறது.
(.சாங்தாங் முன்னோர்களின் வீரதீரங்களையும், சாங்தாங் பூமியை பற்றியும் பாடுவது)
சாங்தாங் மக்களின் நாட்டுப்புற பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாக இந்த இசைகருவிகளை வாசிக்கிறார்கள்.
சாங்தாங் மக்களின் இந்த மகிழ்ச்சிதான் இவர்களின் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அதிகமாக்குகிறது.
மக்கள் எல்லோரும் விடை பெற்றார்கள்
அவர் அவர் வீடுகளுக்குள் சென்று கதவுகளை சாற்றியதும் தெருவின் முதல்வீட்டு ஆணும், கடைசி வீட்டின் ஆணும் ட்ருமியன் இசை கருவியில் பாடலில் வீடு சேர்ந்து விட்டோம் என்பதை இசையால் அறிவிப்பார்கள்.
இது எல்லோரும் நலமாக வீட்டை அடைந்து விட்டார்கள் என்பதை கூறும் சமிக்கை முறையாகும்.
அமியும், ரிச்சும் வாயடைத்து போயினர். வேற்றுமை இல்லா ஓற்றுமையான சமுகம் இவர்களுடையுது.
இமானியும், நிஷ்தியும் தூக்க கலகத்துடன் வீடு நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள்.
அமியிடம்.... இமானி ஜுலே( பாய், நன்றி )
நோமோ என்றாள்.
அமி.... கைகளை தூக்கி ஜுலே நோமோ லே என்றான்.பக்கத்தில் இரவு வெளிச்சத்தில் ரிச் இமானியை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கோண்டிருந்தான்.
நிஷ்தி இருவருக்கும் ஜுலே சொல்லி கடக்கும் போது
இமானியின் காலை இடறி விட்டான் தேம்ஸ் நாயகன். கீழே விழப்போனவளை தாங்கி பிடித்தான்.
மற்றவர்களின் கண்களுக்கு ரிச் காப்பாற்றியது போல் இருந்தது. இமானிக்கு மட்டுமே தெரியும் இது இவன் வேலை தான் என்று.
இடுப்பை பிடிப்பது போல் எத்தனை செண்டிமீட்டர் என்று.அளவெடுத்தான்
தட்டிவிட்டு எழமுடியாமல் அழுத்தி பிடித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.
முகத்தை பச்சைகுழந்தை போல் பாவ்லா செய்துக் கொண்டு, இடையில் பிவாங் இசையை வாசித்துக் கொண்டிருந்தான் இந்த இதயத்திருடன்.
அமிக்கும், நிஷ்திக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை ஏதோ அதிக வெளிச்சம் இல்லாத காரணத்தால் பிரச்சனை இல்லை.
அமிக்கு படபடப்பு அதிகமாகியது....
அடேய்..... விடுடா.....யாராவது பார்த்த அந்த இரும்பு கம்பில நானும் நீயும் நாளைக்கு ப்ரேக்பாஸ்ட், லஞ்ச்சுக்கு நாமதான்டா, மசாலா தடவி வாட்டிருவாங்கடா.
நண்பன்கிற ஒரே காரணத்துக்கு நீ பண்ற இந்த வேலைக்கு நானும்மாடா தொங்கனும். இன்னும் நான் உன்னளவுக்கு எதுமே பண்ணலடா ... விடுடா கண்ணா என்றான்.
அங்கே இமானி அவனின் நெஞ்சின் மீது கைகளை வைத்து திமிரிக் கொண்டிருந்தாள்.
தலைவன் சிரிப்புடன் அவளை பாரத்து வழிந்து கொண்டிருந்தன்.இமானி தீடீரன்று அவனை ஒரே தள்ளாக தள்ளி விட்டாள். கோபத்தால் முகம் மிளகாய் பழம் மாறியது.
பக்கத்தில் எதையோ தேடினாள், ஒரு மரத்தின் மட்டை கிடந்தது, எடுத்து முதுகில் ஒரு போடு போட்டாள்....
ஆ....ஆ.....ஆ.....ஆ..... ஐய்யோ என்று கத்தினான் ரிச்.
நிஷ்தியின் கைகளை பிடித்து இழுத்துக் கொண்டே ஓடினாள் இமானி.
நிஷ்தி அதிர்ச்சியில் இருந்து வெளி வராமல் அவளுடன் ஓடினாள்.
நிஷ்தி....... இமா அவன் என்னடி பண்ணினான் என்றாலள், அதிர்ச்சியாக,
ஹேய்...... நீ வா..... அவன் ஒரு கியாங்..... என்றாள்....ஓடிக் கொண்டே....
ஹான்.... ஹான்.... கியாங் உன்னை என்ன சேய்தது என்று கேட்டுக் கொண்டாள் நிஷ்தி.
வாயை முடு நிஷ்தி என்று அவள் வாயை மூடினாள்.
ரிச்சின் சத்தத்தில் டென்ஸின் வந்து என்ன ஆச்சு என்றார்
கிழே விழுந்து விட்டான் என்றான் அமி.சரி
வாருங்கள் தூங்க போகலாம் என்றார்.
ரிச் அமியை நன்றாக உற்று ஊடுறுவி பார்த்தான்.
நான் கீழே வழுக்கி விழுந்தேன்,
நீ அதை பார்த்த,.....சரியா....இதுதானே அங்க நடந்தது.......என்றான்
அமியிடம் கோபமாக.......
ஆமா ரிச்..... நீ தான்.....கீழே விழுந்த......வா போகலாம் என்றான்.
அறைக்கு வந்தவுடன் கோட்டை கழட்டி காட்டினான் முதுகின் குறுக்கே ஒரு கோட்டுடன் தோல் உறிநது இரத்தம் வழிந்தது.
இது நானே விழுந்தேன் இல்ல.... நானே கோடு போட்டுக்கிட்டேன் இல்ல என்றான்.
அமிக்கு கஷ்டமாக இருந்தது என்ன இந்த பெண்...... இப்படி தோலை உறிச்சுட்டா..... ( இதுக்கு பேருதான் தோலை உறித்து.......... தொங்க.......... விடுவதா )
அய்யைய்யோ..... என்றான் அமி
என்னடா வலி எனக்குதானே..... நீயேன்டா கத்தற என்றான் ரிச்
டேய்.... டேய்.... தம்பி ரிச்..... தம்பி ரிச்..... உன்ன பார்த்தா பாவம்மா இருக்குடா.....
பாலும், பன்னும் தின்னு வளர்ந்த பஞ்சு உடம்புடா..... எப்படி வளர்ந்தவன் இந்த கல்லு மலைல நீ என்ன ஆகபோறியோ.
என்று உச்சு கொட்டினான்.
ரிச் ஏன்டா என்னாச்சு ஏன் இப்படி பேசறா...
என் பீட்ரூட் தொடாம.... தொட்டா...
என்னைய....... ஹிஹிஹி....... வலிக்குது..... ஆனா வலிக்கல......என்றான்.
அமி..... ஆனாலும் உனக்கு மனதைரியம் அதிகம் டா.... தம்பி...அண்ணன் ஒரு கருத்து சொல்றேன், கேட்டுக்கோ இனிமே இந்த ஊரவிட்டு போறவரைக்கும் உள்உடுப்பு (பிரிப்ஸ்)போடுக்கடா....இல்ல தேம்ஸ் மானம் காத்துல பறந்துருந்துரும் டா.....
நினைக்கவே கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு, எங்க எப்போ வெளவால்(பேட்)மாதிரி ஆகப் போறியோ....
உனக்கு நல்லா வேணும் டா.....
யப்பா சாமி என்னடா பண்ண அந்த பொண்ணா.... அந்த பொண்ணு இடுப்பு உனக்கு வீணையா..... மீட்டறா...... கொஞ்சம் யாராவது பார்த்து
இருந்தா உன்னோட நரம்ப வெளில எடுத்து மீட்டிருப்பாங்க.டேய்.... நீ.... நல்லவனா.....கெட்டவனா.... டா.....
ஸ்ஸ்ஸ் முடியலடா...... ஆறு மணி நேரத்துக்கே மூச்சு முட்டுதுடா..... தம்பி.....
முடியலடா....... முடியலடா...... தம்பி.....
முதலுதவி பெட்டியில் உள்ள மருந்தை எடுதது தடவி விட்டான் அமி.இருவரும் அவர்களின் இரவு கனவை காண ஆரம்பித்தார்கள்.
இரவின் நிழல் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, விடியலின் நிஜம் வானில் வரத்தொடங்கியது.
ஆடுகளின்.... மே..... மே.... சப்தமும்..... பேர் தெரியாத பறவைகளின்..... பர்.... பர்...... சப்தமும்.....கலவையான சப்தங்கள் அவர்களை எழுப்பி விட்டது.
வெளியே வந்த இருவரும் அந்த கிராமத்தின் விடியலை ரசித்தார்கள்.
சில வயதானவர் சக்கரத்தில் நூலை சுற்றிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் அங்கு உள்ள ஆரம்ப பொளத்த பாடசாலைக்கு கிளம்பி கொணாடிருந்தார்கள்.
சாங்தாங்கின் கலாச்சார வரலாற்றில் பௌத்தம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. இந்த பீடபூமியானது மடாலயங்கள் மற்றும் ஆன்மீக மையங்களாகவும், பண்டைய திபெத்திய மரபுகளின் களஞ்சியங்களாகவும் செயல்படும் வழிபாட்டு தளமாகும்.
இங்குள்ள பெளத்த மடலாயம் மிக பழமையானது.புத்த பெருமானின் செப்பு சிலைகள் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி ஸ்தூபிகள் மடாலயத்தை அலங்கரிக்கின்றன. இது பௌத்த நூல்களைப் படிக்கும் பள்ளியைக் கொண்டுள்ளது. துறவிகள் மூலிகைகள் மற்றும் மந்திரங்களைப் பயன்படுத்தி விஷஜந்துகள், குளிரகாய்ச்சல் நோய்களை குணப்படுத்தும் சடங்குகளையும், மூலிகை மருந்துகளையும் கொடுத்து மருத்துவ உதவி செய்கிறார்கள்.
இந்த பௌத்த மடாலயம். இரண்டு பக்கங்க:ளிலும் உயர்ந்த மலைச்சிகரங்களுக்கு இடையில் அமைந்த சமவெளிப் பிரதேசமாகும்.
இங்குள்ள புத்த விஹாரம் சுமார் 200-250 புத்த பிட்சுகளுக்கு பயிற்சிக்கூடமாகும். இந்த விஹாரத்துக்குச் செல்லும் வழி ஒரு
மலைப்பாதையாகும்.இந்த மக்களின் மருத்துவமனை இந்த மடாலயம் தான்.
புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள்.
நான்கு விசயங்களை விட்டு முற்றிலும் விலகியிருத்தல் வேண்டும் இது பொளத்த பிக்ஷுக்களின் கோட்பாடுகள்.
ஆண்-பெண் கலவி கூடாது.
புல்லைக் கூட திருடக் கூடாது.
உயிருள்ள சின்னசிறு உயிருக்கும் தீமை பயத்தலாகாது.
இயற்கைக்கு மாற்றாக அருஞ்செயலைத் தன்னால் செய்ய இயலுமென்று காட்டலாகாது.
கோம்" என்பது திபெத்திய மொழியில் தியானத்திற்கான இடம் கோம்பா என்றால் கோவில். வழக்கில் உள்ள பெயர்
விஹாரா என்பது மடாலயம் என்றும் பொருள்படும், இது பிக்ஷுகள்கள் வசிக்கும் பகுதி.
இருவரும் அங்குள்ள இயற்கையை ரசித்துக் கொண்டே காலை கடன்களை முடித்துக கொண்டு கீழே வந்தார்கள். டென்ஸின் வீட்டில் காலை உணவு சூப். கெட்டியான காய்கறி கஞ்சியையும் குடித்து விட்டு பக்கதது கிராமத்திற்கு டென்ஸினுடன் பயணம் ஆனார்கள்.
மோங்தாங் கிராமம் இவர்களின் பக்கத்து கிராமம்,இவர்களின் தொழில், பழக்கவழங்கள் எல்லாம் அச்சு அசல் மாறாமல் பின்பற்றுவார்கள்.அங்குள்ள டென்ஸினுடன் பேசி விட்டு நெசவு தயாரிப்புகளை பார்த்து 15 கிலோமீட்டர் அருகில் இருக்கும் குட்டி நகரத்தில் எரிபோருளை நிறைத்துக் கொண்டு புத்த மடலாயம் சென்றார்கள்.
கரும்பாதைகள் மீது வாகனம் சிறிய சமவேளிபகுதியிலிருந்து சிறிய மலைபகுதிக்கு சென்றது முற்றிலும் கீழிருந்து செல்ல வெள்ளை அடிக்கப்பட்ட ஐம்பது படிக்கட்டுகள் வழியே சென்றார்கள் மேலே சென்றதும் புத்த விஹாரத்தத்தை சுற்றிலும் பெயர்தெரியாதவண்ண,வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கின.
ஆஹா.... எத்தனை ஆண்டுகள் பழமையான மடாலயம்.அமி, ரிச் இருவரின் மனதிற்கும் நிர்மலமான அமைதியை கொடுத்தது.
அங்காங்கே காவிநிறத்தில் பிக்ஷுக்கள் பூக்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டும், இன்னும்மொரு இடத்தில் சமையல் செய்துகொண்டும் சிறிய குழந்தைகள் முதல் பரியவர்கள் வரை பிக்ஷூகளே, இரண்டு, மூன்று அடுக்குகளை கடந்தவுடன் அந்த பழமையான புத்தபகவான் காட்சி அளித்தார்.
அமியின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது, ஆனந்த சிலிர்ப்பு மேனி எங்கும் பரவியது.
அமைதி.... அமைதி....... புத்த பகவானின் கருணை பொங்கி பெருகி அமியை வநதடைநதது போல் பரவசம் அடைந்தான்.
அப்போது அங்கு வந்த வயதான லாமா(பெரிய புத்த பிக்ஷு) மடாதிபதி மூவரையும் இன்முகத்துடன் வரவேற்றார். அவரின் கண்களின் தேஜஸ்யை பார்த்ததும் அமிக்கு அவரிடம் அவ்வளவு நெருக்கம் ஏற்பட்டது.
ஆசையை துறந்த துறவிகளின் முகத்தில் கடவுளின் ஒளி இருக்கும் என்பதை தூய்மையான பிஹூக்களின் முகத்தின் தேஜஸ்சே சொல்லிவிடும்.
மென்மையான குரலில் டென்ஸினிடம் ஊரை பற்றியும், ஏதாவது மக்களுக்கு வேண்டுமா என்றும் விசாரித்தார்.
டென்ஸின் இவர்களை பற்றியும் என்ன காரணத்திற்கு வந்து இருக்கிறார்கள் என்பதை பற்றியும் கூறினார்.
லாமா மகிழ்நது அமி, ரிச் இருவருக்கும் ஆசிர்வாதமும்,நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டு,மிகவும் அன்புடன் உணவு சாப்பிட்டு விட்டு செல்லுமாறு கூறினார்.
உணவில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட உணவுகள் உப்பு காரம் சிறிதே அளவு காட்டப்படும் அவ்வளவே ஆனால் ஆரோக்கியமான உணவு.
அமியின் நினைவில் தோன்றியது சிறிய வயதிலிருந்து ஒருநாள் கூட இறைச்சி இல்லாமல் சாப்பிட்டவனுக்கு இன்று இறைச்சி இல்லாமல் சாப்பிட்ட இந்த உணவு தேவாமிர்தமாக இருந்தது.இத்தனை ஆண்டுகளாக சாப்பிட்ட இறைச்சி ருசிகாக சாப்பிடப் பட்டது, இன்று சாப்பிட்ட உணவு அமைதிகாக சாப்பிட்ட உணவு போல் தோன்றியது. உடம்பும் மனதும் நிசப்தப்மாய் இருந்ததை உணர்ந்தான்.
பொளத்த விஹாரத்தின் மணியோசை கணீர் என்று கேட்டது. கூடவே பொளதரின் மூலமந்திரமும் ஒலித்தது.
புத்தம் சரணம் கச்சாமி
(புத்தரிடம் சரணாகதி அடைதல்)
தர்மம் சரணம் கச்சாமி
(தர்மத்திடம் சரணாகதி அடைதல்)
சங்கம் சரணம் கச்சாமி
(புத்த சங்கத்திடம் சரணாகதி அடைதல்)
இந்த மூன்றும் மூல மந்திரம் ஆகும்.
மூலமந்திரத்தின் அதிர்வில் எல்லா திசைகளிளும் ஒலிபிரவாகம் அந்த மலைகளையும்,இயற்கையையும்,அவர்களையும் ஆட்கொண்டது.
பனி ( தொடரும்)