பனி - 7
அடுத்து வந்த இரண்டு நாட்கள் கடுமையான காய்ச்சல் உடன் ரிச் சுயநினைவே இல்லாமல் இருந்தான்.
டென்சினின் மனைவி போதிய அளவு மூலிகை மருந்துகளையும், மருந்து கஞ்சியையும் கொடுத்து உதவி புரிந்தார்.
இமானிக்கு உலகமே இடிந்து தன்தலை மீது விழுந்த நிலை இதயத்தின் பாரம் தாங்காமல் மிகவும் வருந்தினாள். இந்த இரண்டு நாட்களில் எத்தனை தடவை அவனைப் பார்த்து இருப்பாள், அவளுக்கே தெரியாது, அவனது அருகிலேயே பேசாமலேயே உட்கார்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருப்பாள். பச்சலை பற்று காய காய இட்டுக் கொண்டிருந்தாள்.
ஊண் உறக்கமின்றி அந்த இரண்டு நாட்களை கழித்தாள்.
இதை கண்டும் காணாமல் அமியும், நிஷ்டியும் இருந்தனர்.
பழைய இமானி இவள் இல்லவே இல்லை.....
மூன்றாவது நாள் மழையுடன் கூடிய காலை
ரிச்சிற்கு விழிப்பு வந்தது.
மித்..... என்றான் அவனின் குரலில் கண்விழித்த அமிக்கு
தம்பி எப்படிடா இருக்க எனறான் சந்தோஷத்துடன்.
ஏன் எனக்கென்ன நான் நல்லாதானே இருக்கேன் என்றான் ரிச்.
ஹோ... ஹோ......
சரிதான் என்ன நரகமா.... சொர்கமா எப்பிடி இருந்துச்சு என்றான்
என்ன உளறிட்டு இருக்கிறாள், என்ன நரகம், என்ன சொர்க்கம் என்றான்.
சரிடா தம்பி சரிதான்... டா.... நாங்கள் எல்லாம் உயிரை கைல புடிச்சிட்டு இருந்தோம் டா....
நீ இதுவும் கேட்பா, இதுக்கு மேலேயும் கேட்படா.... என்று, நடந்த நிகழ்வுகளை கூறினான்.
ரிச் இப்போதுதான் உணர்ந்தான், முதுகில் சிறிதுகூட வலியே இல்லை. உடம்பு அதிக புத்துணர்ச்சியுடன் நன்றாக இருந்தது.
அமி ரிச் நீ நல்லா ரெஸ்ட் எடு நானும் டென்சினும் மடாலயம் போய்ட்டு வந்துருவோம். ஏதாவது ஒரு தகவல் நாம டென்சினுக்கு சொல்ல,லாமாகிட்ட சொல்ல முடியுமான்னு அனுமதி கேட்டுட்டு வர்றோம்.
நாளை நாம கிளம்பனும்,
வெளிய மழை வருது நீ எங்கேயும் போகாதே. இந்தா கஞ்சி குடிச்சிட்டு ரெஸ்ட் எடு என்று அமி கிளம்பினான்.
ரிச்சிற்கு ஏதோ ஞாபகங்கள் வந்து,வந்து போன இமானியின் சோக முகம்,எது எதுவோ ஒரு துக்கம் தொண்டையை அடைத்தது.
அப்போது நிஷ்டி வந்தாள் ரிச்சிடம் மருந்து கசாயம் கொடுத்து குடிக்க சொன்னாள். முகத்தில் கஷ்டம் தெரியாமல் குடித்தான் நிஷ்டியின் முன் கெத்தாக.
நிஷ்டிக்கு அவனை பற்றி தெரியுமே, அதனால் சிரிப்பை அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தாள்.
பரவாயில்லை இன்று தெளிந்துவிட்டான். பழைய நிலைமைக்கு வநது விட்டான் என்று நினைத்தாள். பாவம் இமானி ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாள் இவன் உடம்பு நன்றாகி விட்டது என்பது தெரிந்தால் மிகவும் சந்தோஷப்படுவாள்.
நிஷ்டி சரி......நோமோ நான் கிளம்பறேன், மதியம் உணவு எடுத்துட்டு வருகிறேன் என்றாள்.
நிஷ்தியிடம்.....இமானி எங்கே, நீ மெய்சல்க்கு போகவில்லையா......என்றான், எனக்கு உடம்பு சரியில்லை இமானி பள்ளத்தாக்கு பகுதிக்கு போயி இருகிறாள் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.
வெளியே வந்ததவன் சுற்றியும் பார்த்துக்
கொண்டு இருந்தான் ஒரு பக்கம் கிண்மி பள்ளத்தாக்கு தெரிந்தது.
நாளை கிளம்பி விடுவோம், இப்பவே அந்த பள்ளத்தாக்கை பார்த்து விடலாம், அப்படியே பீட்ரூட்க்கு அதிர்ச்சி குடுக்கலாம் என்று கிளம்பி விட்டார்.
சாந்தாங் மக்களின் நோய்களைத் தீர்க்கும் மருந்து அருகில் இருக்கும் கிண்மி பள்ளத்தாக்கில் கிடைக்கும் மூலிகைகளிலிருந்து எடுக்கப்படும் ஓளதடம்
மிகவும்சக்தி வாய்ந்ததாகும்.
இந்த கிண்மி பள்ளத்தாக்கு மிகவும் ஆபத்தான பள்ளத்தாக்கு வழுக்கும் பாறைகள் ஆடர்த்தியான காடுகளுடன் நறுமணமிக்க காட்டு பூக்கள் கொட்டி கிடக்கும்.இந்த பூக்களின் வாசனைகளை நுகர்ந்தாலே நாம் சொர்க்கத்தில் இருப்பது போல் மயங்க வைக்கும்.இது ஒரு ரம்யமான பகுதிதான்.
சாந்தாங் மக்களுக்கு மட்டுமே இங்கே எப்படி போவதென்பது தெரியும். பள்ளத்தாக்கினுள்,பொளத்த விஹாரத்தின் அருகே நாம் கண்ட அந்த அருவி இந்த பள்ளத்தாக்கினுள் வந்தே பிரிந்து செல்கிறது.
இங்கு ஒரு இடத்தில் குகை போன்ற அமைப்பு இருக்கும்.மெய்ச்சல் மக்கள் வரும்போது மழை வந்துவிட்டால் இங்கே சிறிதுநேரம் தங்குவார்கள்.
சமவெளியிலிருந்து சரிவான மரங்களடர்ந்த பகுதி தென்பட்டது ரிச் உள்ளே சென்றான் வனத்திற்குள் சர்.. சர்... கூ... கூ... ஏராளமான பறவைகளின் சப்தம் கேட்டது.
மலர்களின் வண்ணங்களை பார்த்து ஆச்சரியப்பட்டான். அவன் சுவாசத்தில் பூக்களின் வாசனை சென்று மதியைமயக்கியது. ஆஹா என்ன ஒரு அழகான பள்ளத்தாக்கு என்று நினைத்துக் கொண்டே சில பெயர் தெரியாத வண்ணப் பூக்களை கொய்து எடுத்துக் கொண்டே
நடந்தான்.
தூரத்தில் பாஷமினா ஆடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன. உயரமான ஒற்றை கல்லில் இமானி உட்காந்து கொண்டு எங்கியோ வெறித்துக் கொண்டிருந்தாள்.
ரிச் மெல்ல மெல்ல இன்னொருபகுதியின்
வழியே ஏறி அவளின் பின்பகுதியில் உட்கார்ந்து கொண்டான்.
அவன் வந்ததை அறியாமல் கற்சிலை போல் அமர்ந்திருந்தாள்.
கண்இமை மூடாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான், பீட்ரூட் போன்ற முகம் வெளுத்து உருமாறி இருந்தது.
ரிச்சின் கண்கண் கலங்கின, எனக்காக ஒருத்தி இரண்டே நாளில் இப்படி ஆகிவிட்டாளே , என்னை பற்றி எதுவுமே இவளுக்கு தெரியாது, நான் நல்லவனா கெட்டவனா பேசியது தான் மிகமிக குறைவு,சண்டையிட்டதே அதிகம்.
என்மேல் ஏன் இந்த பரிசுத்தமான அன்பு எண்ணங்கள் எங்கெங்கோ சென்றது.
மெல்ல திரும்பியவள் அவன் உருவம் பார்த்ததும் திரும்பி விட்டாள்.
நாம் அவனையே நினைக்கிறோம், அவனால் வரமுடியாது என்று நினைத்துக் கொண்டே அழுதாள்.
அவளின் குழந்தை தனமான அழகை ரசித்தவனுக்கு இதயத்தில் வலித்தது.
சூடான வெப்பக்காற்றால் அவனின் பறம் திரும்பியவள் இது எப்படி நிஜமா, என்று தனது இடது கையால் அவனின் முகத்தின் மீது கையை வைத்து தடவினாள்.
நிஜம்தான் சட்டென்றுகையை இழுத்துக் கொண்டாள்.
அவனை வெறித்தாள் இரண்டு நாளாய் எப்படி இருந்தான் இப்போது சரியாகிவிடடா என்று அவன் ஆராய்ந்தாள்.ரிச்சின் கண்களில் ஒளி தெரிந்தது. நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
மழைசாரல் பட்டது அவ்வளவுதான் இமானி அவனின் கையை இழுத்துக் கொண்டு ஓடினாள், ரிச்சிற்கு ஒன்றுமே புரியவில்லை எங்கே கூட்டி போகிறாள்,
சரி.... நரகத்திற்கே இவள் கூட்டிச் சென்றாலும் நான் இனிமேல் போவேன் என்று நினைத்துக் கொண்டான்.
அவள் தன்னை இழுத்துச்செல்வது அவனுக்கு மிகவும் பிடித்தது.
கல்குகை அருகே வந்ததும் அவனை உள்ளே விட்டாள், திரும்பவும் ஓடினாள், ஹீ( குட்டி ஆடு )யையும், பிற ஆடுகளையும் அழைத்துக் கொண்டு வந்தாள்.
நீண்ட பெரிய குகைதான் எல்லா ஆடுகளும் உள்ளே வந்து நின்று கொண்டன.
வானத்திலிருந்து இடியும் மழையும் கொட்ட தொடங்கியது.
ரிச்சை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள் அங்கே சுவரிலேயே உட்காந்து கொள்ள இடமும் அதன்மீது ஆட்டுத் தோலும் போடப் பட்டிருந்தது.
குளிர் காற்று வீர்....விர்....ரென்று இவர்களை தொட்டது உடனே இமானி அங்கே உள்ள பெரிய குழிக்குள் இருந்த குச்சிகளை கொண்டு நெருப்பு மூட்டினாள்.சூடான காற்று குகை முழுவதும் பரவியது. தன்னிடம் உள்ள தண்ணீர் உள்ள குடுவையை தீக்கங்குவில் வைத்தாள் அதில் இரண்டு மூணாறு இலைகளை பிய்த்து போட்டாள் அத்தண்ணீர் கொதித்து டீஇலை வாசனையை கொடுத்தது.
கையில் இருந்த ரொட்டியை பிய்த்து அவன் கைகளில் கொடுத்தாள். அவன் மட்டுமே இவ்வளவு தரிசிக்க முடியும் என்பதால் பார்த்துக் கொண்டு இருந்தான்.
இமானி ரொட்டியை பிடுங்கி அவனுக்கு ஊட்டி விட்டாள்.குடுவையிலுள்ள வாசனை நீரை பருக வைத்தாள்.
அவனின் சோர்வு பறந்தது.
இமானி அவன் சாப்பிட்டதும், தன்னுடைய இரண்டு நாள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தாள். மீதம் இருந்ததை சாப்பிட்டாள் உண்டு முடித்தவுடன், இரண்டு நாள் களைப்பு அவளை விட்டு ஓடியது.
ரிச்சின் பார்வையை அப்போதுதான் உணர்ந்தாள்.எப்போதுமே அவனின் பார்வையை பார்த்ததும் கோபப்படவளுக்கு இன்று வெட்கம் வந்தது.
வெட்கத்துடன் முகம் பீட்ரூட் நிறத்திற்கு வந்தது. தீயின் வெளிசத்தில் மயக்கும் மோகியை போல் இருந்தாள் இமானி.
இடியும் மழையும் சப்தம்மிட்டது
வானைக் கிழித்துக் கொண்டு மின்னல் வெட்டியது பளிர் பளிர் என மின்னல் ஒலி காதில் வெடித்தது.
இயற்கையே உருவாக்கின கல்குகை என்பதால் குளிர் காற்று ஓரளவு மட்டுப்பட்டது.தீக்கங்குவின் வெப்பம் குகை முழுவதும் இருந்ததால் குளிரை தாங்கி கொண்டார்கள்.
சில இளம் ஆடுகள் இவளுக்கு அருகில் குளிர் காய்ந்தன. ஹீ இவள் மடியில் இவள் விரல்களை கடித்து கொண்டு தடவி கொண்டு விளையாடிக் கொண்டிருந்தாள்.
இமானி ஆட்டுக்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.ரிச்சிற்கு இனம் புரியாத ஏக்கமும் வலியும் அவனை இம்சித்தது.
ஏதோ அவனிடம் இருந்து பிரிந்து போவது போல் உணர்ந்தான். இறுகி பிடிக்க ஏதாவது வேண்டும் என்ன செய்யலாம்... என்ன செய்யலாம்...என்று யோசித்தான்.
பித்து பிடித்த நிலைக்கு தள்ளப்பட்டான். நாளை இவளை யறிந்து செல்ல வேணடுமே. இரண்டு நாள் சுயநினைவே இல்லாமல் இருநதும் கூட இவனின் நினைவில் இவளே நிரம்பி வழிந்தாள்.
இத்தனை வருட வாழ்க்கையில் அவன் யாருக்காகவும், எதற்காகவும் இப்படி பரிதவித்தது இல்லை.
ரிச்சை காதலித்த பெண்கள் பலர் பெரிய பெரிய செல்வந்தர் வீட்டு பெண்கள், அழகான பெண்கள் இவர்கள் யாரிடமும் வராத ஒன்று எப்படி இவளிடம் வந்தது.
மொழி தெரியாது, இப்போது கூட பேசினால் அவளுக்கு புரியாது. என்னுள் நீக்கமற நிறைந்து விட்டாளே,இவளை இந்த ஜென்மத்தில் நான் பிரிய மாட்டேன் இவள் என்னவள் என்ற உண்மையை அந்த நொடியில் உணர்ந்தான்.
ரிச் எழுந்து அவளருகே சென்றான் நிமிர்ந்து பார்த்தாள் இமானி, இந்த ரிச் இமானிக்கு மிகவும் புதிதாக தெரிந்தான்.
இருவர் கண்கள் மட்டும் பார்த்தன, பரிதவித்தன,ஆயிரம் உண்மைகளை உணர்ந்தார்கள்.
ரிச் தன் கையில் அணந்திருந்த பிளட்டினம் மோதிரம் (அதில் ரிச் என்ற பெயர் பொறிக்கப்பட்டது) கழட்டினான்.
இமானியை பார்த்தவன் அவள் வலது கையை எடுத்து மோதிர விரலில் மோதிரத்தை அணிவித்தான்.
கூடவே அந்த பூங்கொத்துக்களையும் நீட்டினான்.
இன்ப அதிர்ச்சியில் உறைந்தவளை பூக்களின் நறுமணம் கொள்ளை கொண்டது. கியாங் என்னோட கியாங்
இவன் என்னுடைய கணவன், சொல்லவே முடியாத ஆனந்த பரவசம் பரவியது.
அப்போது பெரிய இடி ஒன்று இடித்தது மின்னல் ஒளி குகை உள்ளே வரை வெள்ளையாக பாய்ந்தது.
பயத்துடன் இமானி ரிச்சை இறுகக் கட்டிக் கொண்டாள். ஆடுகள் பயந்து சப்தமிட்டன. இயற்கையே இவர்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்தது போல் இருந்தது.பாஷ்மினா ஆடுகள் விருந்தினர்களாக ஆசிகள் கூறியது.
இமானியின் ஸ்பரிசம் பட்டதும் ரிச்சிற்கு தன்மனைவி இவள் என்ற கரவம் வந்தது.
முதல் ஸ்பரிசம் இவர்களை இம்சை செய்தது. தேகத்தின் தாகத்தை எத்தனை வருடங்கள் காக்க வைப்பது. இதோ தாமரை தடாகம், அள்ளி பருக தெளிந்த நீர்.
அதுவரை கம்பளியை சுற்றி சுருங்கி மறைந்த பெண்மை தாமரை மலர் போல் மொட்டவிழ்த்தது.காதலுக்கு மொளன மொழியே போதும் என்று உலகுக்கு பறை சாற்றிக் கொண்டிருந்தார்கள். இவர்கள்.
ஜென்ம ஜென்மமாய் தவித்த இரண்டு உயிர்கள் தன்னிலையை இழந்து சங்கமித்தன.
மழை நின்றது. ரிச் இமானியை கட்டி பிடித்து கைகளை பற்றி வாக்கு கொடுத்தான்.
உனை நான் பிரியேன். நீ என் இதயத்தில் எப்போதுமே இருப்பாய் என்றான்.
இருவருக்குமே இதயம் வலித்தது. நேரம் நகராமல் இப்படியே இருந்து விடலாமே என்னுயிரே என்று இரண்டு இதயங்களுமே பேசிக் கொண்டன.
இமானியை முதலில் மந்தையோடு அனுப்பினான், பின்னோடு இவனும் செனறான் இவர்களின் கிராமம் வந்ததும் இமானி முனனே சென்றாள். அவள் வீட்டை அடைந்ததும். ரிச் டென்ஸின் வீடு வந்து சேர்ந்தான்.
அமி......எங்கடா போன....
மழை வேறு சொன்னா கேக்க மாட்டாயா டா என்று திட்டினான். இவன் அமைதியாக போய் படுத்துக் கொண்டான்.
இவனுக்கு என்ன ஆச்சு மூளை குழம்பிடுச்சா என்று ரிச்சை தொட்டு பார்த்தான். நல்லா தானே இருக்கிறான்.
பின்ன என்ன ஆச்சு என்று நினைத்தான்.
மழை அடித்து கொண்டிருந்தது. இரவு உணவு டென்ஸின் வீட்டிலிருந்து வந்தது. அமி ரிச்சை எழுப்பி சாப்பிட வைத்தான்.
அமி ரிச்சிடம் இன்று நடந்த நிகழ்வை சொல்லிக் கொண்டிரேந்தான். ரிச் அமைதியாக இருந்தான்.
காதல் சிலநேரங்களில் அதிகமாக பிணைத்தும் வைக்கும்......!!
காதல் சிலநேரங்களில் அதிகமாக
பிரித்தும் வைக்கும்......!!
பிணைப்பா........பிரிப்பா......??
பனி(தொடரும்)