பனி - 8
மறுநாள் காலை சூரியன் சுள்ளென அவன் கடமை செய்ய வந்து விட்டான். அமியும், ரிச்சும் கிளம்பினார்கள்.சீக்கிரமே செல்ல வேண்டும் வழியில் ஏகப்பட்ட அபாய பகுதிகள் உள்ளது.மிகுதியான பனிமழை வேறு அந்த பகுதிளில் பெய்யும்.
அமி.... ரிச்சிடம்..... ரிச் கிளம்பலாமா.... வெளிசத்தில் கிளம்பினால் ரொம்ப நல்லது. உன்னோட பொருள்களை சரி பார்த்துக் கொள் என்றான்.
நிஷ்தியும், இமானியும் மூச்சிரைக்க ஓடி வந்தார்கள்.
ரிச்.......இமானியை பார்த்தான், இமானி
மூச்சு வாங்க, கண்களில் கண்ணீர் பொங்க ரிச்சையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
நிஷ்தி இரு பாஷ்மினா சால்வைகளை அமிக்கும், ரிச்சிற்கும் கொடுததாள்.
இமானி கைகளை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தாள். கியாங் உன்னை விட்டு நான் எப்படி இருப்பேன்.என்னால உன்னை விட்டு ஒரு நிமிஷம்கூட இருக்கவே முடியாது. என்னையும் உன்னோட கூட்டிட்டு போ...கூட்டிட்டு போ உள்ளே கதறினாள்.
இதற்கு மேல் முடியாது என்று ஓடி சடாரென்று இமானி......கியாங்.... கியாங்.... என்று ரிச்சை கட்டிக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்.
கியாங் நீ இல்லாம என்னால இந்த உலகத்துல ஒரு நொடிகூட வாழ முடியாது. என்னையும் நீ எந்த உலகத்துக்கு போனாலும் என்னையும் கூட்டிட்டு போ என்று அழுதாள்.
அதை பார்த்ததும் அமியின் கண்கள் தெறித்து வெளியே வந்து விடும் போல்
அதிர்ச்சியாக இருநதது.
நிஷ்திக்கு நாக்கு உலர்ந்து மயக்கம் வருவது போல் இருந்தது.
இருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை
என்ன இது..... இஙகே என்ன நடக்குது.
இமானி அவன் உதடுகளில் முத்தமிட்டாள். அவ்வளவுதான் ரிச் அவளின் உயிரை உரிய ஆரம்பித்தான்.
அமி வாயை பிளந்து நின்றான்
நிஷ்தி கிழே உட்கார்ந்தே விட்டாள்.
கீழே இருந்து டென்ஸின் குரல் கேட்டது.
அமி..... ஐய்யோ இவரு வேற வந்து விடபோகிறார் என்று ஓடி சென்று,
இதோ ஐந்து நிமிடத்தில் கீழே வருகிறோம் என்று கூறி விட்டு வந்தான்.
அமிக்கு மூச்சு வாங்கியது. கடைசி நேரத்துல இவன் பண்ற காரியத்தால கம்பில கட்டி தொங்க விட்ருவான் போல இருக்கே.
எப்படியாவது தப்பிச்சு ஊருக்கு ஓடிறனும். கடவுளே காப்பாத்து என்ற வேண்டுதலுடன் உள்ளே வந்தான்.
ஈருடல் ஒர்உயிராய் பின்னி பிணைந்து நின்றார்கள்.
உள்ளே வந்த அமி டேய்.........இன்னுமா டா முடியல.
டென்ஸின் மட்டும் கத்தாம உள்ளே வந்துருந்தா இன்னிக்கு நீ முடிஞ்ச டா......
டேய் விடுடா.... டேய் விட்டுடா ரிச்.....
இங்க பாரு பக்கத்துல இந்த பாப்பாக்கு(நிஷ்திக்கு ) இதயமே நின்னு போச்சு. பேச்சு மூச்சு இல்லமா நிக்குதுடா.
விடுடா தம்பி.......ஒழுங்கா ஊரு போய் சேர்னும்...... டா என்று பேசியது இவர்களின் காதில் விழவேயில்லை.இவர்கள் வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
அமி திரும்பி நிஷ்தியை பார்த்தான்.
அய்யோ இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு.
கரண்டு ஒயர்ல கையை வைச்சு சாக் அடிச்ச மாதிரியே நிக்கறாளே....
நிஷ்தி...... நிஷ்தி....... இஹிம்...... நிஷ்தி அசையவே இல்லை.
அய்யோ நான் என்ன பண்ணுவேன்...
இவன் பண்ற வேலைனால இரண்டு உயிர் போயிரும் போல இருக்கே
நான் என்ன செய்வேன்.....
இதுக்கு முன்ன எங்க வேலை பார்த்தானோ.... பம்பு செட்ல தண்ணீயை உறியற மாதிரி அந்த பொண்ணை உறியரானே....என்று புலம்பியவன்
கடவுளே நான் என்ன செய்ய....
தண்ணீரை ஏடுத்து நிஷ்தி மீது தெளித்தான் அமி.
நிஷ்திக்கு சுய நினைவு வந்தது.
ஹப்பா.....கடவுளே ஒரு உயிரை காப்பாத்திட்டிங்க என்றான்.
நிஷ்தி என்ன நோமோ நடக்குது இங்கே, என்று அழுக ஆரம்பித்தாள்.
அட..... சப்தம் போடாம இரும்மா..... நீ வேற அழத...... டென்ஸின் வந்தர போறாரு,
இப்படின்னு தெரிஞ்சு இருந்தா உன்னோட மயக்கத்தை தெளிய வைச்சே இருக்க மாட்டேன்.அமைதியா இரு.
இங்க வா... வந்து இவங்கள பிரிச்சு விடு என்றான். இருவரையும் ஆளுக்கு ஒருபுறம் இழுக்க ஆரம்பித்தார்கள்.
எங்கே கோந்து அப்பியதுபோல
ஒட்டிக்கொண்டு இருந்தார்கள்.
ம்ம்ம்ம்.... இது வேலைக்கு ஆகாது என்று அமி.....டேய் என்று கத்தினனான்.
அப்போதுதான் இருவரும், ஏதோ சப்தம் கேட்டது போல் இருந்ததால் திரும்பினார்கள்.
அமியையும், நிஷ்தியையும் பார்த்து
ரிச்சும் இமானியும் வெட்கப்பட்டு கொண்டு நின்றார்கள்.
அப்போதுதான் அமிக்கு கோபம் வந்தது.
என்னடா இது ரிச் என்று கண்டிப்புடன் கேட்டான்.
ரிச்....இது விளையாட்டு இல்ல,ஒரு அப்பாவி பெண்ணோட வாழ்ககை. அதுவும் ஒண்ணுமே தெரியாத குழந்தை இவள்.
உன்னோட எல்லா தகுதிக்கு,இமானியால உன்னை எட்டகூட முடியாது.
ஆனா உண்மையான அன்பை கொட்டி குடுப்பா, இது தான் இவகிட்ட இருக்கு. இமானி சார்பா நான் ஒரு நோமோவா உனக்கு தெளிவு படுத்த வேண்டியது, சொல்ல வேண்டியது என்னோட கடமை
ரிச்,என்றான் தீவிரமான முகத்துடன்.
அமிக்கு....ரிச்சை பற்றி நன்றாக தெரியும் இருந்தாலும் பேச வேண்டியதை பேசியே ஆக வேண்டும் என்று பேசினான்.
அதுவரை நிதானமாக கேட்டுக் கொண்டிருந்த ரிச்,அமியை கட்டிக் கொண்டு உன்னை நண்பனா கொடுத்த கடவுளுக்கு பெரிய நன்றிகளை நான் சொல்லுவேன் மித் என்றான்.
இமானி என்னோட மனைவியா, இயற்கை சாட்சியா நேற்றே ஏத்துக்கிட்டேன். இங்க பார் என்று இமானியை அணைத்துக் கொண்டே வந்து அவள் வலது கையை நீடடினான்.
மோதிரவிரவில் ரிச்( மோதிரம் ) இருந்தான்.
எங்களை ஆசிர்வாதம் பண்ணு ரிச் என்றுகாலில் விழுந்தார்கள்.
அமியின் கண்ளில் கண்ணீர் பொழிந்தது. என் நண்பனை ஒரு நொடி சந்தேகித்து விட்டேனே என்று.
கடவுளே இந்த குழந்தைகளை வாழ்த்துங்கள்.என்று வேண்டினான்.
நான் போய்யிட்டு திரும்பி வரும்போது இவளை முறைப்படி கூட்டிச் செல்வேன் மித்.
இதோ இயற்கைக்கு,அடுத்து நீங்க இருவரும் சாட்சி என்றான் ரிச்.
என் உயிரே போனாலும் இமானியை கைவிட மாட்டேன் என்றான்.இமானி அவனை கட்டிக் கொண்டு பிரிவதற்காக நெஞ்சில் கைகளால் குத்திக் கொண்டு இருந்தாள். ரிச் தலை கவிழ்ந்து அவளின் பூக்கைகளின் குத்துகளை பெற்றுக் கொண்டே கலங்கி நின்றான்.
இமானிக்கு அவனின் தேக சூட்டில்லேயே உறங்க வேண்டும் போல் இருந்தது. பிரிவாற்றாமை இருவரையும் வாட்டியது.
நிஷ்தி வெறித்துக் கொண்டிருந்தாள்.
இமானியை அணைத்து இறுக்கி முத்தமிட்டு கோட்டில் இருந்து ஹீயின் மணியை எடுத்தான் ரிச்.இது உன் நினைவா என்கிட்ட இருக்கும்.போகவா என் குள்ள பீட்ருட் என்றான்.
தலையை ஆட்டி விடை கொடுத்தாள்.
நிஷ்தியிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள்.
டென்ஸின், மனைவி இருவரிடமும் சீக்கிரம் வருவதாக கூறிக் கொண்டு கிளம்பினார்கள்.
கார் பாங்காக் எரி வந்தவுடன் ரிச் நிறுத்தச் சொன்னான். இதுவரை இவர்களின் கேமரா நினைவில் இல்லை. ரிச் கேமராவை எடுத்து பாங்காக் ஏரியை புகைபடம் எடுத்தான்.
அமி கிளம்பலாம் ரிச், புகைபடம் எடுக்கும்
நேரமா இது என்றான்.ஐந்து நிமிடம் கொடு மித் என்றான்.
அமியும் சரி.....தம்பி பிரிவதற்கு கஷ்டப்படுகிறான் கொஞ்ச நேரம் நிற்போம் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே,
கியாங்.......என்ற சப்தம் கேட்டது.
அமி என்ன சப்தம் என்று திரும்பிய வேகத்தில் கண்ட காட்சி, இமானி ஓடி வந்து ரிச்சை கட்டிக கொண்டாள்.
டேய் என்னடா இது....மறுபடியுமா.... பேசமா இப்படியே கூட்டிட்டு கிளம்பு, ஆனா ஊருக்குள்ள மறுபடியும் வராதே, அப்படி.....நீ வந்தா உன்னை உறிச்சு மசாலா தடவிடுவாங்க எப்படி வசதி என்றான்.
ஆமா இமானி வருவான்னு உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டான்.
ரிச் இதயத்தை தொட்டுக் காட்டினான்.
அமி சரிதான் தம்பி கிளம்பலாமா என்றான்.
ரிச்.... அமி வா நாம புகைப்படம் எடுக்கலாம் என்று எல்லோரும் சேர்ந்த புகைப்படம் ஒன்றும்,இமானியும் ரிச்சும் இருக்கும் புகைபடம் ஓன்றையும் எடுத்தார்கள்.
பிரியா விடையளித்து கார் சாங்தாங் எல்லை கடந்து சென்றது.
இமானி கியாங் எப்போது நீ வருவாய்,நானும் நீலநிறஏரியும் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு கைகளை ஆட்டினாள்.
காதல் பிரிவு
கத்தியின்றி இரத்தமின்றி
ஊண்பிரிந்து
உணர்வுபிரிந்து
உயிரற்ற சிலைபோல்
சமைந்தாள்......இமானி
மாநில எல்லைகளை பிரிக்கலாம் இதயத்தின் எல்லைகளை பிரிக்க முடியாதே.
அமியும், ரிச்சும் சாங்தாங் கிராமத்திலிருந்து பயணம் ஆனார்கள்.
ஐம்பது கிலோமீட்டர் கடந்து வந்ததும் பெரிய கருமையான சாலைகள், எங்கும் வெள்ளை துகள்களை கொட்டியது போல் இருந்தது. கடுங்குளிர் காற்று நாசியில் நுழைந்து வயிற்றுக்குள் பனிக்காற்றை நிரப்பி வாய்வழியே புகையயை வெளியிடடது.
பனிக்கட்டி படுக்கையின் மீது வாகனம் செல்லும் போது ஊராய்வின் அழுத்தம் காரணமாக பனிக்கட்டிகள் வெடித்து தண்ணீர் ஓடியது.
பெரிய கட்டிடங்கள் வீடுகள் மரங்கள் எல்லாமே பனிபோர்வையால் மூடப்பட்டிருந்தது. பார்க்க பார்க்க திகட்டாத குளிர்பனியின் வேலைகள்.
குளிரின் அடர்த்தி தாங்காமல் சாலையோர தேநீர் கடையில் வாகனத்தை நிறுந்தினார்கள்,சூடான தேநீர் மற்றும் கஹ்வாவுடன் தேநீரை பருகினர்கள்.
ருசியாக குளிருக்கு இதமாக இருந்தது.
பயணம் தொடங்கியது ரிச்சும் அமியும் மாற்றி மாற்றி வாகனத்தை ஓட்டினர்கள்.
ஒருவர் மாற்றி ஒருவர் ஓய்வு எடுத்து ஓட்டினாராகள்.
இரவு ஒரு தாபாவில் இரவு உணவை முடித்துக் கொண்டு வாகனத்திலேயே படுத்துக் கொண்டார்கள்.
இருவருக்கும் அவர்களின் காதல் பெண்களின் ஞாபகமே வந்தது.இருவருக்குமே உறக்கம் வரவில்லை. உடம்பிற்கு மட்டும் ஓய்வு கொடுத்து, மனதிற்கு ஓய்வே இல்லாமல் கிளம்பினார்கள்.
இருவரின் எண்ணங்களும் வேவ்வேறு திசைகளில் எண்ணவோட்டங்களை அசை போட்டது.
பள்ளம் மேடு இருண்ட குகைகளை தாண்டி ஒருவழியாக குல்மார்க் வந்து சேர்ந்தார்கள்
அமியின் வெள்ளை மாளிகை என்றே சொல்ல வேண்டும். பெரிய கேட்டில் காவலாளி வணக்கத்துடன்
கேட்டை திறந்துவிட்டார். பெரிய அகலமான பாதைகள் இருபுறமும் அழகான பூச்செடிகளூம் மரங்களும் சீராக வெட்டப்பட்டு பறாமறிக்கப்பட்ட பூந்தோட்டம். ஒரு கிலோமீட்டர் வரை உள்ளே கார் பயணித்தது.
ரிச் அமியின் வீட்டிற்கு வருவது இதுவே முதல் முறை. அமியின் அப்பா அம்மாவை தெரியும். ஆனால் இவ்வளவு பெரிய செல்வந்தன் அமி என்று ரிச்சிற்கு தெரியாது.
பிரமாண்ட போர்டிக்கோவில் கார் நின்றது. உடனே ஒரு காவலாளி ஒடி வந்து கதவை திறநதான். அமி வணக்கத்தை தெரிவித்து புன்னகை சிந்தினான்.
ரிச்சை அணைத்துக் கொண்டு வெள்ளை மாளிகையில நுழைந்தான்.உள்ளே பளிங்குகல்லினால் இழைக்கப்பட்டு, வரவேற்பறையில் பெரிய தொங்கும் சண்டிலியர் விளக்குகள் அவர்களின் ஆடம்பரத்தை பறை சாற்றின.
அமியின் அபபாவும் அமமாவும மிகவும மகிழ்வுடன் வரவேற்றார்கள். ரிச்சிடம் நலம் விசாரித்தார்கள்.
அமியிடம் காட்டும் பாசம் போலவே, சிறிதும் குறையாமல் ரிச்சை கொண்டாடினர் அமியின் அம்மாவும் அப்பாவும்.
வாசனையான தேநீரை கொண்டு வைத்தார்கள் வேலை புரிபவர்கள்.
சூடான பானம் உளளே சென்றவுடன் அசதி குறைந்தது.
அமியின் அப்பாவும், அம்மாவும
வீட்டின் வேலைகாரர்களை அழைத்து அயிரம் வேலைகளை முடிக்குமாறு சொல்லிக் கொண்டிருநதார்கள்.
அமிககு ஒன்றுமே புரியவில்லை.
என்ன,........மீ....... இங்க என்ன நடக்குது என்றான்.
அங்கே நின்று கொண்டிருந்த பத்து பேர்களிடம் சிலபேப்பரை, கொடுத்து அவர்களின் வேலையை சிறப்பாக பண்ண வேண்டும் என்றுகேட்டுக் கொண்டு அனுப்பினார்.
அமியிடம் திரும்பிய இருவரும்
அமி உன்னிடம் கேட்காமல் உனக்கு நிக்காஹ் செய்ய முடிவெடுத்து விட்டோம்.
நாளை உனக்கு நிக்கா, எங்களின் ஒரே மகன் நீ எங்களின் கடைசி ஆசையை காப்பாற்று என்று ஒரு கவரை கையில கொடுத்தார்கள்.
அமி...... அதிர்ச்சியாகி..... மீ...... என்றவனின்
தொண்டை வேறு அடைத்துவிட்டது..
பனி (தொடரும் )
Last edited: