பரிதி - 3
வேகமாக கதவைத் திறந்து உள்ளே வந்த நித்திலன், தசிராவிற்கு இருபுறமும் தயாவும், தனுவும் அமர்ந்திருப்பதைப் பார்த்து அப்படியே நிற்க, இதை முதலில் கவனித்த தயாதான், “தனு கம். கேன்டீன் போயிட்டு வரலாம். அம்மா ஒன்னும் சாப்பிட்டிருக்க மாட்டாங்க..” என அழைக்க,
“ம்ச் நீ ப்போ.. எனக்கு ஒன்னும் வேண்டாம்..” என எரிச்சலாகச் சொன்னவன், தயாவின் பார்வை சென்ற திக்கைப் பார்த்து, “நான் யாரையும் நம்பி விட்டுட்டு வரமுடியாது” என நித்திலனைப் பார்த்து பட்டென்று சொல்லிவிட,
“டேய்.” என நித்திலன் எகிறிக்கொண்டு வர, “ப்ச் தனு வா.. உனக்கு ஒவ்வொன்னும் சொல்லிட்டு இருக்கமுடியாது..” என அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியில் நடக்க,
“என் அக்காவுக்கு விருப்பம் இல்லன்னு மட்டும் தெரியட்டும், அப்புறம் இருக்கு எல்லோருக்கும்..” என நித்திலனின் முகத்துக்கு நேராகவே கத்திவிட்டு போக, “ஷப்பா.. இவனை..” என பல்லைக் கடித்த நித்திலன், “முதல்ல இவளை எப்படி சமாளிக்கன்னு தெரியல, அதுக்குள்ள அப்பா அம்மா, தம்பிங்கன்னு மொத்த குடும்பமும் ரவுண்டு கட்டி அடிக்குது, எப்படி சமாளிச்சு வரப்போறேனோ..” என புலம்பியபடியே மனைவியின் அருகில் அமர்ந்தான்.
அவளின் ஓய்ந்த தோற்றம் அவனுக்குள் பெரும் குற்றவுணர்ச்சியை உருவாக்கி விட்டிருக்க, என்ன செய்து இவளை சரிசெய்ய என மனதுக்குள் பெரும் போராட்டம்.
குழந்தையைக் கூட பார்க்கவிடாமல் செய்துவிட்டாளே பாவி. இப்படியொரு கோபமும், வீம்பும் அவளிடமிருந்து வெளிப்படுமென்று அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
இதில் விக்ரமின் பார்வை வேறு அவனை குற்றம் சாற்ற அது வேறு மனதை கொன்றது. மேலும் அத்தனை பேருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியவனே குற்றவாளியாக நிற்க, அதுவும் எரிச்சலைக் கொடுத்தது.
‘எல்லாருக்கும் நல்லவனா இருக்குறது ரொம்பவே கஷ்டம்போல’ என நெற்றியில் தட்டிக்கொண்டவன் அவள் கைகளைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டான்.
எண்ணங்கள் அவனை எங்கெங்கோ கொண்டு செல்ல, அதைத் தடுக்க முயன்று முடியாமல் அதன்போக்கில் விட்டுவிட்டான் நித்திலன்.
அப்போது தசிரா தன் MBA படிப்பிற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்று முழுதாக ஒருவருடம் ஆகிருந்தது.
இங்கிருக்கும் போதே இருவருக்கும் காதல்தான் என்றாலும், பெரிதாக இருவரும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ரேனுகா இருவருக்கும் தான் திருமணம் செய்யவேண்டும் என்று உறுதியாக சொல்லியிருக்க, எப்படியும் இருவருக்கும் தானே திருமணம் நடக்கும் என்ற எண்ணத்தில் இருவருமே தங்கள் காதலை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வெளிக்காட்டிக் கொள்ளவுமில்லை.
பெரியவர்கள் கேட்கும் போது மறுக்கவும் காரணமில்லை. அதனால் அவர்கள் திருமணத்தை பெரியவர்களே முடிவு செய்தனர்.
அப்போதுதான் தசிராவிற்கு ஆஸ்திரேலியாவில் MBA சீட் கிடைக்க, அனைவருக்கும் சந்தோசம் என்றால், நித்திலன் வேண்டாம் என்று ஒரே பிடியில் நின்றான்.
தசிராவும் அவனிடம் எப்படியெல்லாமோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. அதில் கடுப்பானவள் “இது ஒன்னும் சாதாரணமா கிடைக்கல, என் ப்ராஜக்ட் பார்த்து எனக்கு கிடைச்ச சீட். என்னோட திறமைக்கு கிடைச்சது. இதை என்னால மிஸ் பண்ணமுடியாது. நான் போவேன்.” என நித்திலனிடம் நேருக்கு நேராக சொல்ல, “ஓக்கே உன் இஷ்டம்” என்றவன் அதன்பிறகு அவளிடம் அவன் பேசவே இல்லை.
அடுத்து மகளை அழைத்துக்கொண்டு மனைவி மகன்கள் சகிதம் குடும்பமாக ஆஸ்திரேலியா செல்ல முடிவெடுத்துவிட்டான் விக்ரம். அங்கு மகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து, அவளுக்கு அங்கே அனைத்தையும் பழக்கிவிட்டு வரலாம் என்பது அவன் எண்ணம்.
இதில் நித்திலனுடன் ஏற்பட்ட பினக்கை தசிரா மறந்தே போயிருந்தாள். இப்போது படிப்புதான் முக்கியம் என்பதில் அவள் தெளிவாக இருக்க, அவனை மூளைக்குள்ளே கூட விடவில்லை.
ஆனால் நித்திலனால் அப்படியிருக்க முடியவில்லை. தசிராவின் பதினைந்தாம் வயதிலிருந்து அவள் மீது உயிராய் இருப்பவன், எப்போதடா அவள் படிப்பை முடிப்பாள், திருமணத்தை முடித்து தன்னோடே வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருக்க, அந்த நினைப்பில் ஆசிட்டை ஊற்றுவது போல் நடந்தால் அவனும் என்னதான் செய்வான்.
அப்படியிருந்தும் ரேனுகாவிடம் சென்று, “ரேனும்மா.. இப்போ அவ படிக்கனும்னு என்ன அவசியம்.” என எரிச்சலாக கேட்க,
“ம்ச் நித்தி என்ன பேச்சு இது. உன் அத்தை இதை கேட்டா என்ன நினைப்பா.? உனக்காக எல்லாம் அவளை படிக்காம நிறுத்த முடியாது. நாளைக்கே சூழல் எப்படி வேனும்னாலும் மாறலாம். அப்போ இந்த படிப்பு இல்லாம அம்மு தினறக்கூடாது. இன்னொரு முறை இப்படி பேசாத.” என கண்டிப்பாக சொல்ல,
“ம்ச் மேரேஜ் முடிச்சுக்கூட அவளை அனுப்பலாம்தானே ரேனும்மா. உங்களுக்கு கூட என்னை புரியல.” என வருத்தமாக கூறியவனைப் பார்த்து அவருக்கே வருத்தமாகத்தான் இருந்தது.
ஆனால் அதற்காக எல்லாம் போய் விக்ரமிடம் பேச முடியுமா.? தாயென்றும் பாராமல் குதறி எடுத்துவிடுவான். அப்போதைக்கு நித்திலனைத்தான் அவரால் சமாதானம் செய்ய முடிந்தது.
தன்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை என்ற கோபமும், அவளைப் பார்த்தால் கோபத்தில் ஏதேனும் பேசிவிடுவோம் என்று பயந்தும், யாருக்கும் சொல்லாமல் கிளம்பி பாண்டிச்சேரி சென்றுவிட்டான்.
இதோ அதோ என்று அவள் குடும்பத்துடன் கிளம்புகிற நாளும் வந்தது. அவனைத் தவிர அனைவருமே ஏர்போர்ட்டிற்கு வந்திருக்க, முதலில் இதை கவனிக்காத தசிரா, பின் கவனித்து ரேனுகாவிடம் கேட்க “அவனுக்கு வேலை இருக்குன்னு போய் ரெண்டு நாளாச்சு. உனக்கு இப்போதான் கேட்கனும்னு தோனுதா.?” என அமைதியாக கேட்க, ‘என்ன’ என அதிர்ந்தவள்,
“எங்கிட்ட சொல்லவேயில்ல ரேனும்மா, நான் கிளம்புறேன்னு தெரியும்தானே” என்றாள் அழுகையை அடக்கியபடி.
“ம்ம் அவனுக்குத் தெரியுமான்னு எனக்குத் தெரியல. நீ சொன்னியா.?” என கேள்வியை அவளிடமே திருப்ப,
“நான் இன்னைக்கு போவேன்னு மாமாவுக்கு தெரியும், வேணும்னே பண்றாங்க..” என்ற தசிராவிற்கோ ஆஸ்திரேலியா செல்லும் எண்ணமே போய்விட்டது. மூக்கு சிவந்து கண்கள் இப்போதே நீரைக் கொட்டுவேன் என பயம் காட்டியது.
சட்டென்று பேத்தியின் முகம் வாடிவிட, அதைக் கவனித்த ரேனுகாவிற்கு இவர்களை எப்படி சரிசெய்வது என்றுத் தெரியவில்லை.
அப்போதிருந்து ஃப்லைட்டில் ஏறி அமரும் வரைக்குமே நித்திலனுக்கு அழைத்துக்கொண்டுதான் இருந்தாள் தசிரா. அவனோ யாரேனும் அழைத்துக்கொண்டே இருப்பார்கள், அல்லது ‘அம்மு போறா உடனே வா’வென்று அழைப்பார்கள், இப்போதைக்கு யாரிடமும் பேசும் எண்ணமில்லை என்பதால், போனை சைலன்டில் போட்டுவிட்டான்.
“என்ன அம்மு, என்ன அம்மு.” என எல்லோரும் கேட்டும் கூட அவளால் பதில் சொல்ல முடியவில்லை. ஒருவழியாக அவர்களது பயணம் முடிந்து ஆஸ்திரேலியா வர, அடுத்து அவனை நினைக்கக்கூட தசிராவிற்கு நேரமிருக்கவில்லை.
ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த ஃப்ளாட்டிற்கு வந்திருந்தவர்கள், அடுத்தடுத்து தசிராவிற்கு தேவையானதைப் பார்க்க ஆரம்பித்தனர்.
அங்கு இருக்கும் பாதுகாப்புகளை உறுதி செய்தவர்கள், அவள் ஒருவாரம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கல்லூரி சென்று வருவதை பார்த்தபிறகே ஊர் திரும்பினார்கள்.
நிசப்தி கூட ஒருவழியாக தன்னை தேற்றிக்கொண்டாள், விக்ரமும் அவனின் மகன்களும் தான் அவளைப் பிரிய முடியாமல் சோகத்தில் ஊர் வந்து சேர்ந்தனர்.
இங்கு அன்றிரவுதான் தன் மொபைலை எடுத்துப் பார்த்தான் நித்திலன். அதில் தெரிந்த இருபதிற்கும் மேற்பட்ட தவறிய அழைப்புக்ளைப் பார்த்து தலையில் கைவைத்துவிட்டான்.
‘அய்யோ அவளே எப்போதாவது தான் தன்னைப்பற்றி நினைப்பாள், அப்படி நினைத்து அழைக்கும்போது போனை எடுக்க முடியவில்லையே என நொந்து கொண்டவன், நேரத்தைப் பார்த்துவிட்டு உடனே ரேனுகாவிற்கு அழைத்துவிட்டான்.
“ரேனும்மா..” என்றவனிடம்,
“அப்படி என்ன கோபம் நித்தி உனக்கு. கடல்தாண்டி போற புள்ளையை அழவச்சு அனுப்பற, ம்ச் நானும் கோபமா பேசிட்டேன். எப்படி மனசு கஷ்டப்பட்டு போறாளோ..?” என அவனைப் பிடித்து திட்ட, ‘அவள் அழுதாள்’ என்பதிலேயே அவன் நின்றுவிட, ‘அய்யோ நித்தி ஏண்டா இப்படி சொதப்புற’ என புலம்பியபடியே போனை வைத்துவிட்டான்.
சில நிமிட யோசனைக்கு பிறகு அவளுக்கு மெசேஜை போட்டுவிட்டு, எப்போது பார்ப்பாளோ என அவன் தவம் கிடக்க, அவளோ அவனுக்கும் மேல பிடிவாதம் பிடித்தவளாய் இருக்க, அவன் மெசேஜை பார்க்கவுமில்ல, அவனுக்கு அழைக்கவுமில்லை.
அவன் அழைத்து அழைத்து சோர்ந்து போய், ‘சரிதான் போடி’ என கடுப்பாகி அழைப்பதை நிறுத்தியிருந்தான்.
அறைக்கு வந்து உணவை மறந்து படுக்கையில் விழுந்தவன் மனதில் தன் அம்முவின் நினைவுகளே வட்டமிட்டது.
விரைவில் இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற முடிவோடு உறங்கி போனான்.
விக்ரம் குடும்பம் மீண்டும் இந்தியா வந்து நாட்கள் அதன் போக்கில் நகர, இங்கு தசிராவும் அங்குள்ள வாழ்க்கைக்கு ஓரளவிற்கு பழகியிருந்தாள்.
கல்லூரியில் மிகவும் பிடித்த ஒரு தமிழ் பெண்ணை தன்னோடு தங்குவதற்கு வைத்துக்கொண்டாள். அதற்கு விக்ரமிடம் அனுமதி வாங்குவதற்குள் தசிராவிற்கு தலையே வெடித்துவிட்டது.
மகளுக்கு சரியென்று சொல்லிவிட்டாலும், அந்தப் பெண்ணின் குடும்பத்தைப் பற்றி, முழுதாக விசாரித்து அவனுக்கு சரியென்ற பிறகே அமைதியானான்.
இதையெல்லாம் பார்த்து ரேனுகாவும் நிசப்தியும் நக்கலாக சிரித்துக் கொள்வார்கள்.. அதில் காண்டாகி அவன் ஒருபாடு இருவரையும் கத்தித் தீர்த்துவிடுவான். ஆனாலும் அவர்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள். அவனை டென்சனோடு வைத்திருப்பதில் இருவருக்கும் அலாதி இன்பம்.
இங்கு தசிரா இல்லாமல் வீட்டுக்கே வருவதில்லை நித்திலன். அவள் மீதிருக்கும் கோபத்தில் வேலை வேலையென ஓடிக்கொண்டே இருந்தான்.
ரேனுகாவை தவிர்த்து வேறு யாருக்கும் காரணம் தெரியவில்லை. தன்னுடைய சுபாவத்தையே மறந்திருந்தான். இப்படியே செல்ல தசிராவின் பிறந்தநாளிற்கு இன்னும் ஒருவாரமே இருந்த நிலையில், மகளைக் காண போகயிருந்த விக்ரமால் போக முடியமால் போக, மற்றவர்களுக்கும் அதேநிலைதான்.
யாரும் வரவில்லை என தசிராவும் “யாருமே வரல, நான் இங்க எவ்ளோ லோன்லியா ஃபீல் பண்றேன் தெரியுமா..” என முகத்தை தூக்க, வேறுவழியில்லாமல் ரேனுகா, நித்திலனிடம் பேசி சரிகட்ட, அனைவரும் ஒரேமுடிவாக அவனை அனுப்பி வைத்தனர்.
“எனக்கு அங்க ஒர்க் இருக்கு மாமா, அது முடிஞ்சபிறகுதான் அம்முவை போய் பார்க்கமுடியும். அதனால டேட் எல்லாம் நீங்க சொல்லாதீங்க, நானே போயிடுறேன்.” என விக்ரமிடம் கூறிவிட்டான் நித்திலன்.
“டேய் உனக்கு வேலை இருக்குன்னுதான் போறியா, அம்முவை பார்க்க இல்லையா..?” என ரித்தி மகனை கடிய,
“சொல்லாம போன உங்க அம்முவுக்கு இதுவே அதிகம்.” என முணுமுணுத்தவன், “ம்மா இந்த அக்ரிமென்ட் எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கேத் தெரியும். அப்புறம் ஏன் இவ்ளோ எமோசன்ஸ்.” என கடுப்படிக்க, அதில் தன் கணவனை முறைத்துப் பார்த்தாள் ரித்தி.
“ஹேய் நான் என்ன பண்ணேன்” என ரவி அலற,
“இவன் உங்களை மாதிரியே இல்ல ரவி. எப்போவும் எல்லாரையும் டென்சன் பண்றான்..” என எரிச்சலாக சொல்ல,
“காலக்கொடுமைடா கதிர்வேலா.. இதுக்கு நான் என்னம்மா பண்ணமுடியும். அவன் அப்படியே உன் அண்ணனை மாதிரி வளர்ந்து நிக்கிறான். பாரு விக்கி எப்படியெல்லாம் அத்தையை டென்சன் பண்ணுவானோ அதே மாதிரிதான் இவனும் உன்னை டென்சன் பண்றான்..” என ரவி சிரிக்க,
“ப்பா.. உங்களுக்கு ஏன் என்மேல இவ்வளவு கொலைவெறி. சும்மாவே அவங்களை மலையிறக்க முடியாது. இதுல நீங்க வேற ராக்கெட்ல ஏத்திவிடுங்க..” என நொந்து போய் சொன்னவன், ரித்தியின் கையைப் பிடித்து “என்னம்மா நீங்க, கண்டிப்பா டூ டேய்ஸ்ல இந்த ஒர்க் முடிச்சிட்டு உங்க அம்முவை போய் பார்க்குறேன் இட்ஸ் ப்ராமிஸ்..” என தாயை சமாதானம் செய்து சத்தமில்லாமல் ஒரு பெருமூச்சைவிட்டான்.
நித்திலன் உறுதியாக சொல்லாத காரணத்தால், அவன் வருவதை யாரும் தசிராவிடம் தெரிவிக்கவில்லை. அடுத்த மூன்றாம் நாள் காலையில் அவளுக்கு எதிரே நின்றவனைப் பார்த்து ‘மாமா’ என முனங்கியபடியே விழி விரித்தாள் தசிரா.
“ம்ம்..” என புருவம் உயர்த்தியவனைப் பார்த்து அவள் விழிகள் கலங்க, அதற்கு மாறாக இதழ்கள் புன்னைகையில் விரிந்தது. அதேநிலைதான் அவனுக்கும்.
அவர்கள் பேசிக்கொள்கிறார்கள் ஆனால் வாய் திறக்கவில்லை, சத்தமில்லை. அவர்கள் மொழி அழகானது.
‘ஷப்பா இவ்ளோ கஷ்டப்பட்டு வந்தது வீண்போகல’ என மனதுக்குள் நினைத்துக்கொண்டவன், தன்னவளின் வதனத்தில் வந்து போன உணர்வுக்குவியலை தடையே இல்லாமல் ரசித்துக் கொண்டிருந்தான்.
நிமிடங்கள் சில கடந்தும் அவள் அப்படியே நிற்க, “மேடம் உள்ளே கூப்பிட்டு கருணை காட்டலாம்..” என சிரித்தபடியே சொல்ல, “மாட்டேன்..” என்றவள் வேகமாக அவனைச் சென்று இறுக்கமாக அனைத்துக்கொள்ள ‘ஹேய்’ என சந்தோசமாகக் கத்தி, இன்பமாக அதிர்ந்து போனான் நித்திலன்.