• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாகம் 2

MK21

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
30
15
8
Tamil nadu

2.எந்தன் தேன் ஜவ்வே​





நேரம் பதினொன்றை தாண்டி இருக்க மதிய விருந்திற்கு சொன்ன ஹோட்டலில் இருந்து உணவுகள் வந்த வண்டி ஹாரன் அடிக்க அதுவரை இருந்த இருந்த நிசப்தம் கலைந்து ..

ஹான் வந்துட்டேன் இங்க இறக்கி வைங்க என்று கார்த்தி போக கூடவே வேலாயுதமும் வெளியேறி இருந்தார்.

ஏன் கார்த்தி சாப்பாடு வந்துடுச்சு ஆனா மாப்ள வீட்டுல இன்னும் காணோமே…

காலையே போனை போட்டேன் அப்பா அவங்க மேடுமாய் தாண்டி வந்துட்டு இருக்காங்க எப்படியும் இன்னும் அரைமணிநேரம் தான் வங்துடுவாங்க..

ஓ சரிப்பா நீ உள்ள போ அங்க உன் பொண்டாட்டி எதுவும் கோவிச்சுக்க போற உங்க அம்மா நாளும் கிழமையுமா அவ பேச்சை எடுத்து இருக்கா வேற எதுவும் பிரச்சினை ஆகிடப்போகுது என்று உள்ளே அனுப்பி விட..

மதி..

சொல்லுங்க

ஏன் இங்கேயே உட்கார்ந்துட்ட எழுந்த வா மாடியில் இருக்க ரூம் போகலாம் பாப்பா கொஞ்சம் தூங்கி எழட்டும் கூட்டம் வந்துட்டா அப்புறம் அவளுக்கு ரெஸ்ட் இல்ல…

ம்ம்

மேலே அறைக்குள் நுழைந்ததும் தேனுக்கு ஏன் ஒரு வழி பண்ணாம இருக்கீங்க?

ஏன் மதி நான் எதுவும் பண்ணலாம்னு நீ நினைக்கிறியா…

பின்ன இல்லையா என்று மனதில் நினைத்தவள் அவனை ஏறிட்டு பார்க்க…

வந்து மாப்ள எல்லாம் வேணாம் ன்னு சொல்லுறாங்க நான் என்ன பண்ணட்டும் இதோ இப்ப வர மாப்ள கூட தேனுக்கு பேசினது தான் ஆனா கயலு போட்டோவை வீட்டில் பார்த்துட்டு அவளை கட்டிக்கிறேன் ன்னு என்று நிறுத்தி இருந்தான் மதியின் பார்வையில்..

என்ன மதி ..

உங்களுக்கு ஒரு தம்பி இருந்து நான் அப்படி சொல்லி இருந்தா உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்.

மதி…

என்ன மதி என்ன மதிங்குறேன் உங்க அம்மா சொல்லுறதில் என்ன தப்பு இருக்கு…அவளை கட்டி கொடுத்து அனுப்பினா தான் எல்லாருக்கும் நல்லது கடைசிவரை இங்கேயே வச்சு இருக்க முடியுமா இல்ல உங்க அப்பா அம்மா தான் காலம் பூரா இருக்க போறாங்களா?

இப்ப என்ன சொல்ல வர

ஒரு இழவும் இல்ல என்றவள் குழந்தையை தூங்க வைக்க சென்றுவிட..

கார்த்தி கீழ் இறங்கி வந்தான் வண்டி சத்தத்தில்..

வாங்க …

ஹாய் கார்த்தி

ஹாய் பவன் உள்ள வாங்க வாங்க அத்தை என்று வரவேற்றவன் அம்மா என்று கூக்குரலிட..

வந்துட்டேன் கார்த்தி வாங்க சம்மந்தி வாங்க மாப்ள என்னோடு நிறுத்தி கொள்ள..

பவன் உணர்ந்தே இருந்தான் பெண் மாறியதில் பார்வதிக்கு விருப்பம் இல்லை என்று அதனாலேயே அவர் எப்படி நடந்து கொண்டாலும் கண்டு கொள்ள கூடாது என்று வரும் போதே தாய்க்கு சொல்லி அழைத்து வந்து இருந்தான்.அம்மா மூஞ்சை கொஞ்சம் சாதாரணமா வை..

போடா இந்தம்மா முகத்தை காட்டும் நான் பணிஞ்சு போகனுமா? நான் மாப்ள அம்மா அதுக்கு தகுந்த மரியாதை வேண்டாம்…

அச்சோ அம்மா நீ இருக்கிற பிரச்சினையை பெரிசு பண்ணிடாத என்றவன் அவரை கைக்குள் வைத்து கொள்ள,மடமடவென நல்ல நேரம் முடியறதுக்குள்ள பேசி மோதிரம் மாத்திடலாம் மாமா என்றான் பவன்..

அதுவும் சரிதான் என்று அடுத்த அடுத்த வேலையில் மூழ்கி மோதிரம் மாற்றி பவன் கயல் திருமண தேதி முடிவு செய்து மதிய விருந்தும் முடிந்து மாப்பிள்ளை வீடு கிளம்பிய பிறகே வேலாயுதத்தின் முகத்தில் நிம்மதி பரவியது…

என்னோட எல்லா கடமையும் முடிஞ்சது இனி கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விடுவேன் கார்த்தி இப்ப தான் சந்தோஷமா இருக்கு…

ஆமா ப்பா கல்யாணம் அவங்க சைடு அதனால் நமக்கு வேலை இல்ல நம்ம செய்ய வேண்டியது எல்லாம் சரியா செஞ்சுட்டா அப்புறம் நமக்கு அடுத்த கட்டத்துக்கு போகலாம் என் கடமையும் முடிஞ்சது என்று கார்த்தி சொல்ல இருவரின் பேச்சில் அங்கே நின்று இருந்த மூன்று பெண்களுக்குமே சற்றே சலிப்பு தான் … பார்வதி எதை சொன்னாலும் புரிஞ்சுக்க போறது இல்ல என்று அமைதியாக நடப்பதை பார்க்க ,மதியோ முடிஞ்சா அப்ப மத்த வேலை எல்லாம் யார் பார்ப்பா இதோட தலைமுழுகுற மாதிரி இவ சும்மாவா இருப்பா இவ எதையுமே காட்டிக்காம சாதிக்கிறவளாச்சே என்று கயலை பார்த்து கொண்டு இருக்க..

என்ன அண்ணே இப்படி சொல்லிட்ட என்னைய கட்டி குடுத்துட்டு தலை முழுகிடலாம் ன்னு இருக்கியோ ?

கார்த்தி,”ஏய் பாப்பா என்ன பேசுற?

பின்ன நீ பேசுறது அப்படித்தானே இருக்கு.. கல்யாண முடிஞ்சதும் உனக்கு எந்த பொறுப்பும் இல்லாத மாதிரி பேசுற அதுக்கு அப்புறம் தான் எல்லா விஷயத்திலும் நீ முன்ன நிற்கனும் நீ மட்டும் தானே என் கூட பிறந்த பொறப்பு அந்த பொறுப்பு உனக்கு தானே…

ஆமா யார் இல்லன்னு சொன்னா..

அப்புறம் உன்னோட அடுத்த கட்டத்தை பார்த்து நகரனும் ன்னு சொன்னா என்ன அர்த்தம்?

மதி,”அதானே இது ஏழுரை சனியாச்சே விட்டுட்டு போய்டுமா என்ன? என்று மனதில் நினைத்தவள் கார்த்தியை பார்க்க..

என் பொறுப்பு தான் பாப்பா நீ எதையும் யோசிக்காம சந்தோஷமா இரு..

ஆமா ஆமா இங்க ஒருத்தி இருக்காளே அவளை தாட்டி விட்டு மாதிரி என்னையும் தாட்டலாம் ன்னு நினைக்காதீங்க எனக்கு முப்பது பவுன் போடுறேன்னு சொன்னீங்க இன்னும் இருபது நாள் தான் இருக்கு மீதி பத்து பவுன் எப்ப தயார் பண்ணுறது? என்றவள் திரும்பி தாய் இருக்கிறாளா என்று பார்த்துவிட்டு திரும்ப

அறையிலிருந்து வேகமாக வெளியே வந்த பார்வதி அதான் அதை வேண்டாம் ன்னு உன்னையே கட்டிக்க போற பையன் சொல்லிட்டாங்க இல்ல..

அவங்க சொல்லுவாங்க மா அதுக்கு அப்படியே அனுப்புவியா..

வேற என்னத்த பண்ணனும் உனக்கு ?

ஹம் சும்மா வெட்டியா பீரோல இருக்க நகையை எனக்கு போட்டு அனுப்ப சொல்லுறேன்.

ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சி கடைசியில் நீ எங்க வந்து நிற்கிற ன்னு பார்த்த இல்ல எல்லாமே அவளுக்கானது உனக்கு வேணும் அப்படித்தானே.

என்ன அவளுக்கானது அது எங்க அப்பா சம்பாதிச்சு வாங்கின நகை தானே ஏன் அதுல எனக்கு உரிமை இல்லையா…

இல்ல..

ம்மா

என்ன அம்மா அது ஒன்னும் உங்க

அப்பா வாங்கல..

அப்ப யார் வாங்கினா ?

கேட்கிறா இல்ல உங்க சமத்து பொண்ணு பதில் சொல்லுங்க

என்னப்பா சொல்லுறாங்க அம்மா..

…..

இப்ப பதில் பேசுங்க உங்க உதவாக்கரை பொண்ணு அவ கையில வச்சு இருந்த பிரசை வச்சு தான் இவ்வளவும் சம்பாதிச்சா ன்னு அது அவளோட உழைப்புக்கு கிடைச்சதுன்னு

பார்வதி..

என்னங்க என்று சாந்தமாக கேட்க..

கயல் அது அவளுக்கு ன்னு வாங்கினது உனக்கு நான் கல்யாணம் முடிஞ்சு செஞ்சு போடுறேன் இதோட விடு..

கயல்,”என்னப்பா விடனும் அப்ப அது யார் வாங்கினா?

அது வந்து…

கார்த்தி,”என்ன விஷயம் அப்பா அப்படி என்னத்த மறைக்குறீங்க?

என்ன நீங்க பெத்த, உங்களை சபை ஏத்தின இரண்டு பிள்ளைக்கும் கேட்குறாங்களே சொல்லுங்க

வேலாயுதம் பார்வதியை முறைக்க..

என்னைய பார்த்து என்ன புண்ணியம் உங்களுக்கே உறுத்தும் போது என்றவர் அகன்று விட..

ஏதோ விஷயம் இருக்கு என்னவா இருக்கும் ச்சே அதெல்லாம் நமக்கு எதுக்கு, அந்த நகை பூராவும் எனக்கு வேணும் என்று மனதில் ஓட்டியவள் அப்பா அந்த நகையை எனக்கு தான் தரனும் அவளுக்கு என்ன கல்யாணம் காட்சியா நடக்க போகுது என்று முடிக்கும் முன்பே கீழே சுருண்டு விழுந்தது இருந்தாள்..

ஏய் என்று கார்த்தி சத்தமிட..

மதி மாமனார் கணவன் என இருவரையும் பார்த்தவள்,மாமனாரிடம் மட்டும் மன்னிச்சிடுங்க மாமா எனக்கு தேனு கயல் இரண்டு பேரும் ஒரே மாதிரி தான் ..அவளுக்கு வரன் அமையலன்னு அவளை அப்படியே விட்டுட்டு போக முடியாது அவளுக்கும் என் வயசு தான் நான் ஒரு பிள்ளைக்கு தாயா இருக்கேன் அப்ப அவளுக்கும் ஒரு வாழ்க்கை வேணும் இல்ல

கயல்,”என்ன திடீர் பாசம்..

பாசமும் இல்ல பாயாசமும் இல்ல அவங்க அவங்களுக்கு குடும்பம் ன்னு இருந்தா நல்லது தானே…

ஓ அப்படிவரீங்க என்று மதியை பார்க்க

கார்த்திக் எனக்கு தெரிஞ்சதை நான் சொன்னேன் இதுக்கு மேல உங்க குடும்ப விஷயம் என்னவோ பண்ணுங்க ஆனா இதெல்லாம் நல்லாவே இல்ல என்று சென்றுவிட

இவளுக்குள்ளும் ஏதோ நல்லவிதமான எண்ணங்கள் இருக்கும் போல என்று பார்வதி எண்ணினார்.

இங்கே இவ்வளவு நடக்குது ஆனா இது எதையும் தெரியாம அங்க அவ பாட்டுக்கு வரைஞ்சுட்டு இருக்கா எப்ப அவளுக்கு விடிவு வருமோ..

இவ்வளவு பிரச்சினையின் முக்கிய ஆளோ அவளின் ஆருயிர் தோழியின் அணைப்பில் இருந்தாள்..

இந்தா இந்தா ன்னு உன்னையே பிடிக்க எனக்கு நாலு மாசம் ஆச்சு அந்த மாரி என்னான்னா ரொம்ப அலுத்துக்குறா..

தேனு,”என்ன டி பிரச்சினை ?

என்ன தேனு இப்படி கேட்டுட்ட உன்னையே பார்த்து ஐஞ்சு வருஷம் ஆகுது டி நாங்க தான் ஊர் மாறி போய்ட்டோம் நீயாச்சும் இந்த ஊர்ல இருக்கிறதுக்கு நம்ம கூட்டத்தோட கலந்துக் கிட்டு இருந்து இருக்கலாம்..

எது உங்க வாணர கூட்டத்தோடையா..

என்னடி இப்படி சொல்லுற

வேற எப்படி சொல்லனும் அதான் அந்த கருவாயன் தினமும் தான் ஊர்ல இருக்க ஒருத்தர் விடாம வம்பு பண்ணிட்டு இருக்கானே அப்புறம் என்னத்த கூட்டம் போடுறது அவன் ஒருத்தன் போதாது…

அடியேய் அவனை கூட கேட்டேன் டி அவன் தேனு எங்கன்னு தெரியலன்னு இல்ல சொன்னான்.

மேனகாவை பார்த்து சிரித்த தேனு,நீ ஏன் டி அவன் கிட்ட கேட்ட அவனுக்கும் அப்பாக்கும் வாய்க்கா தகராறு

என்ன அப்பா கூடவா?

ஆமா மேகா அவன் ஏதோ பெயிண்டிங் வேணும் ன்னு என்னைய பத்தி கேட்டு வாங்கி கட்டிக்கிட்டான் அப்புறம் எப்படி என்ன பத்தி சொல்லுவான்.

எதுக்கு தேடுத?

வேற எதுக்கு என் செல்லத்துக்கு மருமகன் இருக்கான் எப்ப மருமகளை தருவன்னு கேட்க தான்..

இதை கேட்க இங்க வரை வந்தியா எரும

ஆமா நான் எரும இவ இன்னும் பாப்பா அடப் போடி கெட் டூ கெதர் க்கு உன்னையே பிடிக்க முடியல அதுவும் இல்லாமா இந்த சின்ன குயிலை பார்க்கனும் தவம்

ஆஹான் நம்பிட்டேன்

அப்படி சொல்லப்படாது உனக்காக இங்கனையே சுத்திட்டு இருக்கேன்.

நிஜமாவே உன்னையே பார்த்ததும் ஸ்கூல் நாட்களை நினைக்க தோணுது காப்பியா இருந்தேன் அதே ஸ்கூல் என்று ஆரம்பிக்கும் போதே

தேனு தேவையில்லாத விஷயங்களை ஏன் நினைக்குற

அதுக்கு தான் நான் யாரோடவும் பேசுறது இல்ல மேகா

நீ பேசாம இருந்தா மட்டும் என்ன நடந்திடும்

எதுவும் நடக்க போறது இல்ல ஆனா மறுபடி காயப்படாம இருப்பேன் இல்ல

அது ஒரு காயம் ன்னு நீ முடிவு பண்ணிட்டு உன்னையே நீ மறந்துட்ட இல்ல

தேனு,மறக்க எல்லாம் இல்ல

அப்படியா?

ஆமா

அடப் போடி என்று சலுகையாய் அவள் தோள் சாய, மேனகா போன் தேனாய் இசைக்க படக்கென எழுந்தவள் செத்த இரு வரேன் என்று வெளியே ஓடி போனை எடுத்து நொடி கண்டுபிடிச்சிட்டேன்

…..

ஆமா அடுத்த என்ன?

….

ஓ அப்ப எப்ப கிளம்பி வரீங்க?

….

சீக்கிரம் ரொம்ப தள்ளினா அப்புறம் காரியம் நடக்காது..

….

ஓகே ஓகே வந்துட்டா நான் கிளம்புவேன் பாய் பார்த்து வாங்க

….

டன் ஹாப்பி ஜேர்னி..

தேன் வருவாள்

 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
கயலுக்கு இன்னும் ரெண்டு சேர்த்து போட்டிருக்கணும் அதோட கார்த்திக்கு சேர்த்து ஒண்ணு குடுத்திருக்கணும். 😬

வேலாயுதம் எதையோ மறைக்கிறார். அதெல்லாம் தெரிய வந்தா கயலும் கார்த்தியும் என்ற பண்ணுவாங்க? 🤔

சுயநலவாதிகள் 😠


மதி கொஞ்சமே கொஞ்சம் நல்லவதான் போல...

யாரந்த கருவாயன்? 🧐

தேனுவுக்கு அவன் தான் ஜோடியோ? 🤔

மேனகா யார்கிட்ட பேசினா? என்னவோ ப்ளான் பண்ணியிருக்கா போல 🧐🤩


அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
 
  • Like
Reactions: MK21

MK21

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
30
15
8
Tamil nadu
கயலுக்கு இன்னும் ரெண்டு சேர்த்து போட்டிருக்கணும் அதோட கார்த்திக்கு சேர்த்து ஒண்ணு குடுத்திருக்கணும். 😬

வேலாயுதம் எதையோ மறைக்கிறார். அதெல்லாம் தெரிய வந்தா கயலும் கார்த்தியும் என்ற பண்ணுவாங்க? 🤔

சுயநலவாதிகள் 😠


மதி கொஞ்சமே கொஞ்சம் நல்லவதான் போல...

யாரந்த கருவாயன்? 🧐

தேனுவுக்கு அவன் தான் ஜோடியோ? 🤔

மேனகா யார்கிட்ட பேசினா? என்னவோ ப்ளான் பண்ணியிருக்கா போல 🧐🤩


அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
தெரிஞ்சாலும் எதுவும் பண்ணாத கேட்டகிரி இரண்டும் மிக்க மகிழ்ச்சி சகோதரி