• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாகம் 3

MK21

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
30
15
8
Tamil nadu

3.எந்தன் தேன் ஜவ்வே​





உள்ளே வந்த மேனகாவை பார்த்து என்னம்மா ஒரே சந்தோஷமா இருக்க ..

ஆமா தேனு என்னோட உழைப்புக்கு கிடைச்ச பரிசு அதான் சந்தோஷம் ஹேய் இது சூப்பரா இருக்கே எப்ப ஆரம்பிச்ச எப்ப முடிச்ச

எதை டி கேட்டுகுற?

ஆமா நான் புதுசா உன்னையே கேட்குற மாதிரியே பேசுவ அழகா இருக்கு தேனு இந்த கிருஷ்ணனும் ராதையும்..

ம்ம்

நான் எடுத்துக்கவா?

மெலிதாய் சிரித்தவள் இன்னொன்னு செஞ்சு தரேனே..

ஏன் டி

இது ஒருத்தவங்க கேட்டாங்க..

ஓஓஓ..

இது எப்ப இருந்து பண்ணிட்டு இருக்க?

அது ஒரு மூணு வருஷமா, என்னோட ஏதோ ஒரு படத்தை பார்த்துட்டு வந்து கேட்டாங்க எனக்கே ஆச்சர்யமா இருந்தது மேகா, நான் இந்த ஊரை தாண்டியது இல்ல ஆனா அவங்க சென்னையில் இருந்து கேட்டு இருந்தாங்க உங்களுக்கு எப்படி தெரியும் ன்னு கேட்டேன் அதுக்கு அவங்க உங்க ஸ்கூல் பேப்பர் ல …

அடியேய் அது பேப்பர் இல்ல..

ஆமா ஆமா மேகசின் தான் எனக்கு தெரியுது டி அது அப்படியே சொல்லி பழகிட்டு இல்ல…

அதுவும் சரி தான் அப்ப எல்லாம் நமக்கு தெரிஞ்சது பேப்பர் மட்டும் தானே..அதுவும் தமிழ் பேப்பரூ என்று ராகம் போட சிரித்து கொண்டாள் தேனு..

சரி டி தேனு அம்மா எப்படி இருக்காங்க

நல்லா இருக்காங்க மேகா அப்புறம் உன்னோட வாழ்க்கை எப்படி போகுது எத்தனை பிள்ளைங்க..

அந்த சோக கதையை ஏன் கேட்கிற விடு அதை பேசினா நமக்கு நாள் முழுக்க சலிப்பா இருக்கும் ..

பிள்ளைங்க டி..

அந்த குட்டிச்சாத்தனுங்களை ஏன் இப்ப நியாபகப்படுத்துற?

ஏன் டி இப்படி சொல்லுற..

பின்ன சொல்லமா வேற என்ன பண்ண என் உயிரை வாங்குவாங்கடி…

என்னடி அமரன் பட டயலாக் மாதிரி பேசுற..

அடியேய் தேனு நீலாம் படம் பார்க்க போறியா டி…

ஏன் கேட்கிற…

இல்ல டயலாக் எல்லாம் சொல்லுறியே..

மேகா…

சரி சரி விடு என்று இருவரும் சேர்ந்தார் போல் சத்தமாக சிரிக்க தேனுவின் அப்பத்தா தான் இந்த பிள்ளை இவ்வளவு பேசுமா இப்படி எல்லாம் சிரிக்குமா என்று ஆச்சரியமாய் பார்த்து கொண்டு இருந்தார்… தேனு மேகா இருவரும் பேச ஆரம்பித்து மதிய சமையலை முடித்து விட்டு தான் உள்ளிருந்து வெளியே வர அப்பத்தா தேனுவை இமைக்காமல் பார்த்து இருந்தார்..

என்ன அப்பத்தா இப்படி உட்கார்ந்து இருக்க எதாவது வேணுமா சமையல் முடிஞ்சது வா சாப்பிடலாம்..

தேனு..

அப்பத்தா

இவ்வளவு பேசுவியா நீ..

மேகா, “ஏன் பாட்டி இப்படி கேட்குறீங்க”?

இதுவரை நான் தேனு இப்படி பேசி சிரிச்சு பார்த்தது இல்லம்மா…

மேகா சிரித்தவள் அச்சோ பாட்டி உங்க பேத்தி இருக்கிற இடம் சொர்க்கம் மாதிரி சிரிச்சிட்டே இருக்கலாம் லொட லொடன்னு பேசிட்டே இருப்பா…அவளுக்கு நல்லா பாடத் தெரியும் புதுசு புதுசா எதையாவது செஞ்சு அது உயிர் கொடுக்க தெரியும் அதை பத்தி அவ ஸ்டைல் ல பேசிட்டே இருப்பா நேரம் போறதே தெரியாது..

விழி விரிய அவளை பார்த்தவர் அப்புறம் ஏன் கண்ணு மேற் கொண்டு படிக்க போகல உனக்கு தான் புதுசா எதையும் கத்துக்க பிடிக்குமே..

அச்சோ அப்பத்தா விடுங்க எதுக்கு பழசை பேசி…

இப்ப என்ன கண்ணு பழசாகி போய்ட்டு நீ நினைச்சா எதையும் செய்யலாம்…

அப்பத்தா சொன்ன வார்த்தை அவளை எங்கோ இழுத்து கொண்டு சென்றது அந்த வார்த்தை கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது அந்த இனிமையான வார்த்தை, வருடி சென்ற தென்றலை போல் அந்த மேற்கு தொடர்ச்சி மலையோடு கரைந்து கொண்டு இருக்க,இவளின் மனமோ அனலை சுமந்து கொண்டு இருந்தது.

என்ன கண்ணு யோசனை?

ஒன்னு இல்ல அப்பத்தா எதுக்கு தேவையில்லாத பேச்சு அதெல்லாம் ஒரு காலம் இப்ப போய் நான்…ப்ச் விடுங்க இருக்கிறதை பார்க்கலாம் என்றவள் வாங்க சாப்பிட மேகா வா..

வரேன் வரேன் நீ சமைச்சு நான் சாப்பிடாமல் போனா அது இந்த காத்தவராயன் பொண்டாட்டிக்கு இழுக்கு இல்ல…

மேகா நிஜமாவே உன் புருஷன் பேரு காத்தவராயனா டி…

ஏன் நம்ப மாட்டியா..

அதெல்லாம் அப்புறம் பேசலாம் முதல்ல சோத்த போடு காத்தவராயன் பத்தி விலாவரியாக சொல்லுறேன்..

சரி சரி அப்பத்தா வாங்க என்றவள் சாப்பிட அமர்ந்து மூவரும் சாப்பிட்டு முடிக்கையில் பார்வதி போன் செய்து இருந்தார்..

அம்மா…

சொல்லுமா

தேனு என்ன பண்ணுறா?

இப்ப தான் சாப்பிட்டு முடிச்சோம் தேனு கூட்டாளி வந்து இருக்கு அவளோட பேசிட்டு இருக்கா..

என்னது தேனு பிரண்டா இந்த ஊர்லையா…

ஆமா பார்வதி அங்க எல்லாம் முடிஞ்சதா

முடிஞ்சது மா அவங்க அவங்க வேலை சரியா தான் போய்ட்டு இருக்கு ஆனா எனக்கு தான் மனசு எதுலையும் ஒட்டல..

அப்படி பேசாத பார்வதி அவளும் நீ பெத்த பொண்ணு தானே விடு தேனுக்கான வாழ்க்கை இனியா முடிவாக போகுது அவ பிறந்ததும் அவளுக்கானது என்னவோ அது கண்டிப்பா இருக்கும் ..

இருக்கும் தான் ஆனா நாம முயற்சி பண்ணாம இப்படியே இருந்தா என்ன பண்ணுறது?

கடவுள் வழி விடுவாரு விடு…

என்னம்மோ மா மனசே சரியில்லை நானும் செத்த நேரத்துல அங்க வந்துடுவேன் ..

ஏன் பார்வதி

இங்க இருக்க பிடிக்கல நான் வரேன் அம்மா ஒரு இரண்டு நாள் இருந்துட்டு தான் வருவேன் சரி வைக்கிறேன் என்றவர் தேவையானவற்றை எடுத்து கொண்டு வெளியேற..

வேலாயுதம் “என்ன பார்வதி வெளியே கிளம்பிட்ட ?

வீட்டுக்கு போறேன்.

என்னது?

தேனு அங்க இருக்கா நானும் இரண்டு நாள் அங்க இருந்துட்டு வரலாம் ன்னு இருக்கேன்..

ஏன் அங்க தான் அம்மா இருக்காங்களே

இருக்காங்க தான் அதுக்கு என்ன எனக்கு இரண்டு நாள் வீட்டுக்கு போக கூட உரிமை இல்லையா..

கிளம்பு பார்வதி என்றவர் திரும்பி கொள்ள விடுவிடுவென கிளம்பி விட்டார் பார்வதி

எங்க போகப்போற இங்க தான் வந்தாகனும் எந்த விதத்திலும் பெத்தவங்க சந்தோஷத்தை நிறைவேற்ற முடியாதவளுக்கு ஏன்டுக்கிட்டு போறா என்று முணுமுணுப்புடன் வீட்டிற்குள் செல்ல

அப்பா அப்பா என்று வாசலை வந்து அடைந்தாள் கயல்..

என்னம்மா …

அம்மா பீரோல இருக்கிற அந்த நகையெல்லாம் எங்க வச்சு இருக்காங்க

அது எதுக்கு இப்ப உனக்கு?

அப்பா பீரோல எந்த நகையும் இல்ல எனது எல்லாம் இன்னைக்கு நான் போட்டு இருக்கேன் அது எங்க என்று பரபரப்பாக அவள் கேட்க

யோசனையுடன் அறைக்குள் சென்று வேலாயுதம் பீரோவை பார்த்தவர் புரிந்து கொண்டார் மனைவி மகளின் நகைகளை எடுத்து கொண்டு தாய் வீடு சென்று விட்டாள் என்று ஒரு பெருமூச்சுடன் திரும்ப

எங்கப்பா…

கயல் என்று அதட்டியவர் உனக்கு என்ன பத்து பவுன் வேணும் அவ்வளவு தானே அதை செஞ்சு போடுறேன் போ..

என்ன போ போ ன்னு விரட்டுறீங்க அங்க என்னடான்னா கார்த்தி பொண்டாட்டி என்னைய கை நீட்டி அடிக்கிறா நீங்க எல்லாம் அமைதியா இருக்கீங்க இங்க என்னடான்னா அம்மா நகையை தரமாட்டேன் ன்னு இருக்கு இதெல்லாம் நல்லாவே இல்ல அவளுக்கு இருக்கு நான் அமைதியா வந்துட்டேன் அவ என்னைய அற்பமா நினைக்குறாளா அவளை பேசிக்கிறேன் ஏன் பா நான் உங்களை எத்தனை இடத்தில் பெருமைப்படுத்தி இருக்கேன் நீங்க நினைப்பதை நான் நிறைவேற்றல எவ்வளவு பெரிய போட்டி அதுல கஷ்டப்பட்டு வேலை வாங்கிட்டேன் அப்புறம் எனக்கு செய்யுறதுல உங்களுக்கு என்னப்பா கஷ்டம்

நான் தான் செய்யுறேன் ன்னு சொல்லிட்டனே அப்புறம் என்ன பாப்பா..

அப்பா எனக்கு அந்த நகை தான் வேணும்..

வேலாயுதம் மனதில் அதானே பார்த்தேன் என்று நினைத்தவர்,சரி செஞ்சு தரேன்.

செய்ய எல்லாம் வேணாம் அதுவே போதும் என்று வாக்குவாதம் செய்து கொண்டு இருக்க மேலே மாடியில் ஏன் மதி அவளை அடிச்ச..

பேசாம போங்க ஒருத்தி பேசமாட்டான்னா அவளை என்ன வேணா பேசுவீங்களா?

அவளை தானே சொல்லுறா நீ ஏன் பொங்குற?

நானும் அமைதியா இருந்தா நாளைக்கு எனக்கும் அந்த நிலைமை தான் இப்பவே தட்டி வைக்கல நாளைக்கு என் வாழ்க்கையில் விளையாடிடுவா

ஹேய் மதி என்ன பேசுற?

ஹான் தமிழ் தான் உங்க தங்கச்சி பத்தி தெரியாது இல்ல அவ பண்ணுற வேலை எல்லாம் பயங்கரமானது

என்ன பண்ணா?

நான் சொல்லி குடும்பத்தில் பிரச்சினை ன்னு சொல்லவா நீங்களே உங்க தங்கச்சியை கண்காணிங்க நான் ஏன் சொல்லுவேன் என்று நகர

என்னனு சொல்லு மதி

கார்த்தியை ஏற இறங்க பார்த்தவள் உங்க பெரிய தங்கச்சி வாழ்க்கை இப்படி இருக்க காரணமே இவ தான்..

மதி என்ன பேச்சு இது அவ என்ன பண்ணா?

அவ என்ன பண்ணா என்று நீங்களே கண்டுபிடிங்க என் வாயை கிளறாதீங்க அவ வாழ்க்கையில் எதையும் அவளா சுயமா செய்துக்க மாட்டா மத்தவங்களுதை தட்டி பறிக்கத்தான் தெரியும்.

கயலை பற்றி கார்த்திக்கு தெரியும் அவள் சுயநலவாதி தான் ஆனால் தேனு வாழ்க்கையில் இவள் பங்கு என்ன என்று தான் புரியவில்லை.. தேனுவுடையதை தட்டி பறிக்க என்ன இருக்கிறது என்று தான் கார்த்திக்கு புரியவில்லை அவன் யோசனையோடே இருக்க

இது திருந்தாது மூளை இருந்து இருந்தா நல்ல அண்ணனா இருந்து இருப்பான் எல்லாம் நம்ம தலையெழுத்து என்று நினைத்து கொண்டவள் தேனுவிற்கு உதவும் எண்ணம் தான் ஆனால் மதி தாய் சொல்லியது கண் முன்னே வர,ஏதோ நம்மால் முடிஞ்சதை செஞ்சுட்டோம் அதுக்கு மேல நாம் தலையிட்டா அப்புறம் நாம தான் சுமையை சுமக்கனும் என்று அமைதியாக இருந்து விட

கார்த்தி தான் கயலை பற்றி ஆராய கீழ் இறங்கி வந்தான் அவன் ஒவ்வொரு படியாய் இறங்க இறங்க அவன் காதுகளில் விழுந்த ஒவ்வொரு சொல்லும் இப்போ அப்பவோ என்று தடுமாறி விழந்து விடும் அளவிற்கு மயக்கம் தான். இந்த வார்த்தைகளே இப்படி என்றால் மதி சொல்லியதை ஆராய்ந்தால் என்று நினைக்கையில் தன்னால் நடுங்க ஆரம்பித்தது இருந்தது கார்த்தியின் மனம்.

நடந்தே வந்தவர் வீட்டிற்குள் நுழைய சிரிப்புடன் பாடிக்கொண்டு இருந்த தேனின் குரலில் தான் சமாதானம் ஆனது..

அவளின் அந்த மூணு முழ மல்லிகை பூ என்ற வார்த்தையில் அவ்வளவு கொஞ்சலும் ஆசையும் சேர்ந்து இருக்க மேகா தன் முகத்தை மூடி சிரித்து இருந்தாள்..

தேன் வருவாள்

 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
மதி சொல்றதை பார்த்தா இந்த கயலு ஏதோ பெருசா செஞ்சிருப்பா போலயே தேனு வாழ்க்கையில 🤔🙄

அதென்ன தேனு சுயமா சம்பாதிச்சு செய்த நகைமேல கண்ணு இந்த கயலுக்கு 😬

கஷ்டபட்டு வேலை வாங்கினேன்னு சொன்னவ அதுல தனக்கு வேண்டியதை செஞ்சுக்க வேண்டியது தானே 🤔

ஒரு அண்ணனா கார்த்திக் கயல் பண்ணின காரியத்தை கண்டுபிடிப்பானா? 🧐

தேனு அவ கூட்டாளியோட இருக்கிற இந்த நேரம்தான் மனசுவிட்டு சிரிச்சு சந்தோஷமா இருக்கா போல 😍

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
 

MK21

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
30
15
8
Tamil nadu
மதி சொல்றதை பார்த்தா இந்த கயலு ஏதோ பெருசா செஞ்சிருப்பா போலயே தேனு வாழ்க்கையில 🤔🙄

அதென்ன தேனு சுயமா சம்பாதிச்சு செய்த நகைமேல கண்ணு இந்த கயலுக்கு 😬

கஷ்டபட்டு வேலை வாங்கினேன்னு சொன்னவ அதுல தனக்கு வேண்டியதை செஞ்சுக்க வேண்டியது தானே 🤔

ஒரு அண்ணனா கார்த்திக் கயல் பண்ணின காரியத்தை கண்டுபிடிப்பானா? 🧐

தேனு அவ கூட்டாளியோட இருக்கிற இந்த நேரம்தான் மனசுவிட்டு சிரிச்சு சந்தோஷமா இருக்கா போல 😍

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
இருப்பா இருப்பா வீட்டில் எதாவது ஒன்னு இப்படி தான்