• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Oct 31, 2021
323
15
63
29
Sri Lanka Jaffna
வணக்கம் நண்பர்களே! 🌹🙏🌹

நான் பானுரதி துரைராஜசிங்கம் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவள்.

படிப்பு விபரம் என்று பார்த்தால் உளவியல் துறையில் படித்துக் கொண்டு இருக்கும் மாணவி.

என் பதினோறாவது வயதிலே பொன்னியின் செல்வன் படித்ததில் இருந்து தொடங்கியது புத்தகத்துக்கும் எனக்குமான காதல்... பல வருடங்கள் வாசகியாகவே இருந்தேன்.
எனக்கு எழுதுவதும் ரொம்பப் பிடிக்கும்... கவிதை என்கிற பெயரில் எனக்குத் தோன்றியது எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருப்பேன்.

அப்படியே கதையும் எழுதத் தொடங்கினேன்.
நான் எழுதத் தொடங்கி இரண்டு வருடங்கள் தான் ஆகிறது.
எனது முதற் கதை 'நான் தேடிய பொக்கிஷம் நீ'
அதற்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.

இரண்டாவதாக 'வெள்ளை ரோஜாக்கள்' என்கிற கதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

என்னை யாருக்குமே தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன்.

எனது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வதைக் கூட நான் எல்லோருக்கும் பொதுவான எழுத்து நடையிலேயே எழுதுகிறேன்... நான் என் கதைகளில் ஆங்கில வார்த்தைகள் பயன் படுத்துவது இல்லை. இவை எல்லாம் வாசகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுமா என்கிற கேள்வியைப் பலர் என்னிடம் கேட்டார்கள். இதை அதிகமான வாசகர்கள் வரவேற்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருந்தது.
இதுவரை எந்தவொரு எதிர்மறையான விமர்சனங்களும் என்னை நோக்கிப் பாயவில்லை.

இங்கே எனக்கு எழுதுவதற்கு வாய்ப்புக் கொடுத்த வதனியக்காச்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

எனது கதையின் குறை நிறைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

நன்றி 🌺