• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பார்வை - 03

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
949
434
93
Tirupur
பார்த்த பார்வையில் - 03

பெரியவரை அறைக்குள் விட்டு, மாயாவிடம் வந்த இளங்கோ “மாயா.. நேத்து ஏர்போர்ட்ல மாதுண்ணாவை பார்த்தேன்..” என்றதும் சட்டென்று மாயாவின் முகத்தில் வேதனையின் சாயல்.

“ம்ம்ம்.. சரி..” என்று அவனை பார்க்க,

“அவருக்கு சம்திங் ஹெல்த் இஸ்ஸு போல மாயா, கச்சேரிக்கு கூட அதிகம் போறது இல்லையாம். ஜீ டிவி ஷோ மட்டும் போறார்னு அந்த பிஏ சொன்னான்.” என்றதும்,

அதற்கும் “ம்ம்ம்” என்றாளேத் தவிர பதில் சொல்லவில்லை மாயா.

“மாயா.. ஐ னோ யுவர் ஃபீலிங்க்ஸ். பட் நீ மாமாவையும் யோசிக்கனும் இல்லையா? அவரோட வயசை யோசி. உன் கவலைதான் அவருக்கு..” என்ற இளங்கோவை அமைதியாகவும், அதே சமயம் அழுத்தமாகவும் பார்த்தாள்.

அந்த பார்வையில் இருந்த குற்றச்சாட்டு அவனுக்கு புரியாமலில்லை. ‘இந்த கொரோனா எத்தனை பேரின் குடும்பத்தை காவு வாங்கியிருக்கிறது’ என்று நினைக்கும் போதே அவனையும் அறியாமல் ஒரு பெருமூச்சு வந்தது.

“சாரி மாயா.. எனக்கு உன்னை புரியும். புரிஞ்சதுனாலதான் நான் உன்கிட்ட இவ்வளவு பேசுறேன். நீயும் அவரை நினைச்சு ரொம்பவே கலங்கற. அவரும் தனியாதான் இருக்கார். ரெண்டு பேருக்கும் வயசு போகுது. ஏதோ ஒரு மனஸ்தாபம், நடந்தது நடந்து போச்சு. ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் இறங்கி வந்து பேசினா எல்லாமே சரியாகிடும் இல்லையா.?” என்றவனிடம்,

“ப்ளீஸ் இளா.. எனக்கு இதெல்லாம் பேச வேண்டாம் விடு..” என அந்த பேச்சை மாயா முடிக்க முயல,

“ப்ளீஸ் மாயா, நான் சொல்றதை கேளு, அவர் மேலயே தப்பு இருக்கட்டும். அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா சொல்லு? ஒருவேளை உன்கிட்டையும் மாமாகிட்டயும் பேச முடியாத சங்கடத்துலயோ, இல்ல குற்றவுணர்ச்சியிலயோ கூட இருக்கலாம் இல்லடா. கொஞ்சம் நிதானமா யோசி பேபி. என்னை விட மூத்தவ நீ. நான் உனக்கு அட்வைஸ் பண்ணா நல்லா இருக்குமா.? கொஞ்சமே கொஞ்சம் உன்னோட கோபத்தையும், ஈகோவையும் தள்ளி வச்சிட்டு அந்த மனுசனைப் பத்தி யோசி.” என்றவன் மாயாவின் தலையில் கை வைத்து ஆட்ட,

“ம்ச்..” என்று அவன் கையைத் தட்டிவிட்டதோடு, அந்த பேச்சையும் அப்படியே விட்டாள் மாயா.

பெரியவரின் அறையில் இருந்து வெளியில் வந்த சத்யாவும், இளங்கோ பேசியதைக் கேட்க நேர்ந்தது.

அவன் பேசிய விதம், அவள் மனதுக்குள் இளங்கோவின் மேல் ஒருவிதமான மரியாதையை அந்த நேரம் உருவாக்கியது.

இளங்கோ வந்து சென்ற பிறகு வீடே அமைதியாகிவிட்டது போல் ஒரு மாயை. எப்போதும் மாலை வாக்கிங்க் செல்லும் மாயா அன்று அறையை விட்டு வரவே இல்லை,

பெரியவரும் அறையிலேயே டின்னரை முடித்துக்கொள்ள, மாயாவிடம் பேசலாம் என நினைத்த சத்யாவை “வேண்டாம் சத்யா.. இந்த நேரம் ரொம்ப கஷ்டப்படும் பாப்பா. அதனால யாரையும் பார்க்காது, யார்கூடவும் பேசாது. தனியா இருந்தா கொஞ்ச நேரத்துல அதுவே சரியாகி வந்துடும்.” என கோதை தடுக்க,

மாயாவின் மனநிலையை உணர்ந்த சத்யாவும் அப்படியே அமைதியாகிவிட்டாள்.

அடுத்தநாள் காலை வழக்கம்போல அவள் வாக்கிங்க் முடித்து அந்த கல்மேடையில் அமர்ந்திருக்க, இளங்கோவும் சரியாக அதேநேரம் வந்து அவளருகில் அமர்ந்தான்.

என்ன ஆனாலும் இன்று அவனை பார்த்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில்தான், சத்யா அவசரமாக மூன்று சுற்றை முடித்துவிட்டு வந்து அமர்ந்தாள்.

யாரை பார்க்க வேண்டாம் என்று நினைத்து வந்தாளோ அவனே அவளருகில் வந்தமர, ‘ஊப்ஸ்’ என அவன் அறியாமல் ஒரு பெருமூச்சைவிட்டு கேள்வியாக இளங்கோவை பார்த்தாள்.

“என்னங்க நீங்க? நேத்துதான் என்னை உங்களுக்கு தெரியாது? கோபமா போனீங்க. இன்னைக்கு தெரியுமில்ல. இப்போவும் என்னங்க கோபம்.” என சீரியசாக கேட்க,

“இப்போவும் உங்களை எனக்கு தெரியாதுங்க.. நீங்க என் ஓனருக்கு தெரிஞ்சவங்க எனக்கு இல்லை. எனக்கு தெரியாதவங்க கூட எல்லாம் நான் பேசுறது இல்ல..” என பல்லைக் கடிக்க,

“இங்க பாருங்க சத்யா.. சில் க்ளைமேட்தானே இப்போ, எதுக்கு எப்படி வெயில்ல குளிச்ச மாதிரி நெருப்பா முறைக்கீறீங்க. கூல் கூல்.. எனக்கு உங்ககிட்ட பேசனும். அதுக்குத்தான் வந்தேன்..” என அவளைப் பார்க்கும்படியாக திரும்பி அமர,

“ம்ச் உங்களைத் தெரியாதுன்னு சொல்றேன், பேசனும்னு சொல்றீங்க. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல. ஏதோ நேத்து மாயா அக்காவுக்கு ஆறுதலா பேசவும், நல்லவர்தான் போலன்னு நினைச்சேன்.” என அவனை முறைத்துக்கொண்டே பேச,

“இங்க பாருங்க சத்யா.. இவ்ளோ கோபம் உடம்புக்கு ஆகாது சொல்லிட்டேன். ஏன் இப்போ பொசுக்கு பொசுக்குன்னு கோபப்படுறீங்க. என்ன சொல்ல வர்ரேன்னு முதல்ல அந்த காதுல வாங்குங்க..” என்றவன் அவள் காதை உத்துப்பார்க்க, அதில் ஒய்யாரமாய் உட்கார்ந்து அவனைப் பார்த்து பல் இளித்தது ப்ளூடூத்.

‘இதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல’ என முனங்கியவன், “முதல்ல அந்த கருமத்தை கழட்டுங்க.” என்றவன் அவள் முறைக்கவும், சட்டென்று அவள் காதில் இருந்த ப்ளூடூத்தை கழட்டி தன் காதில் மாட்டியிருந்தான்.

“ஹேய் என்ன பண்றீங்க” என அவள் கத்திக் கொண்டிருக்கும் போதே ‘நெருங்கி நின்று பார்த்த பார்வையில் என் உள்ளம் என்ன பள்ளமானது’ என்ற ஜானகியின் குரல் ஒலிக்க,

இளங்கோவின் விழிகள் விரிந்து இதழ்கள் தானாக ‘வாவ்’ என்றது.

“ம்ச் கொடுங்க முதல்ல, பார்க்க டீசன்டா இருக்கீங்க. இன்டீசன்டா பிகேவ் பண்றீங்க..” என சத்யா கடுப்பில் கத்தியபடியே ப்ளூடூத்தை பறிக்க முயல

“வெயிட் வெயிட்..” என்றவன் அவளை விட்டு நகர்ந்து, போக்கு காட்டியபடியே பாட்டு முழுவதும் முடிந்தபிறகே ப்ளூடூத்தை அவளிடம் கொடுத்தான்.

அதற்குள் மேடம் காளி அவதாரம் எடுத்தாச்சு.

“எனக்கு நிஜமாவே ஒரு டவுட்டுங்க சத்யா..” என அவள் கோபத்தை கண்டுகொள்ளாமாலும், சிரிக்காமலும் மிகவும் சீரியசாக இளங்கோ பேச,

அவனின் சீரியசான பாவத்தில், அவளும் தன் கோபத்தை விட்டு “என்ன டவுட்டு.?” என எரிச்சலாக கேட்க

“இப்போ சிட்டில இருக்குறவங்கதான் எங்க என்ன பிரச்சினை நடந்தாலும் நமக்கென்னனு போவாங்க. ஆனா இப்போ கிராமத்துலயும் அப்படித்தான் இருக்காங்க, போறாங்க” என்றான் சலிப்பாக.

“ம்ச் இப்போ எதுக்கு இதை எங்கிட்ட சொல்றீங்க. அதோட எங்க ஊர்ல எல்லாம் யாரும் அப்படியெல்லாம் இல்ல..” என்றாள் எரிச்சல் கூட,

“என்னால நம்ப முடியாது. நீங்களும் அப்படித்தானே இருக்கீங்க. நான் உங்ககிட்ட பேசனும் சொன்னேன். காதுல கூட வாங்காம போனா? நான் என்ன நினைக்க.?” என்றான் கண்ணைச் சிமிட்டி,

சட்டென்று குனிந்து கீழே இருந்து ஒரு கல்லை எடுத்தவள், “நேத்தே உங்க மண்டையை உடைக்கிறது, மாயா அக்கா பேர் சொன்னதுனால தப்பிச்சீங்க. ஆனா இன்னைக்கு கண்டிப்பா உடையும்..” என அந்த கல்லை உருட்ட,

“ஹேய்.. இப்போ என்ன சொன்னேன்னு நீ கல்லை எடுக்குற, உண்மையை சொன்னா இப்படித்தான் கோபம் வரும். அதுக்காக நான் பொய் சொல்ல முடியுமா.?” என்றவன் அவள் பார்வை தீயாக மறுவதை உணர்ந்து,

“ஓகே ஓகே கூல்.. சும்மா கிண்டல் பண்ணேன். நான் நிஜமாவே உங்ககிட்ட மாயாவைப்பத்தி பேசத்தான் வந்தேன்.” என அவளை சமாதானம் செய்ய,

‘மாயா என்ற பெயர் அவளுக்குள்ளும் மாயம் செய்ய, “அக்காவைப்பத்தி என்கிட்ட என்ன பேசனும்..?” என்றாள் இளங்கோவை முறைத்தபடி.

“உட்கார்ந்து பேசலாம். உங்களுக்கு இன்னும் டைம் இருக்குதானே..” என்றவனின் குரல் இப்போது சற்று சீரியசாக மாற,

தன் மொபைலில் டைம் பார்த்தவள், “இன்னும் ஹாஃப் அன் ஹவர் டைம் இருக்கு, சீக்கிரமா சொல்லி முடிங்க.. சார் எந்திரிக்க முன்னாடி போகனும்.” என்று மீண்டும் அந்த கல் மேடையில் அமர்ந்தாள் சத்யா.

“ம்ம்ம்” என்று பெருமூச்சுவிட்டவன், “மாயாவைப் பத்தி உனக்கு என்ன தெரியும், எவ்வளவு தெரியும்..?” என்றான் கேள்வியாக.

“எனக்கு அதிகமா ஒன்னும் தெரியாது, தெரிஞ்சுக்கவும் விரும்பல. அக்கா அவங்க ஹஸ்பண்டை விட்டு தனியா இருக்காங்கன்னு மட்டும் தெரியும்.” என்றாள் பொதுப்படையாக.

“ஏன்.. ஏன்.. தெரிஞ்சுக்க விரும்பல, பொதுவா லேடீஸ் இந்த மாதிரி விஷயத்துல ஆர்வமாத்தானே இருப்பாங்க..?” என்றான் பேச வேண்டியதை விட்டு.

“என்னதான் பிரச்சினை உங்களுக்கு.?” என சலிப்பானவள், “எனக்கு அதுல விருப்பம் இல்லங்க.. அக்காவைப்பத்தி என்னதான் பேசனும், சீக்கிரம் பேசுங்க..” என்றவளுக்கு எரிச்சல் கூடிக்கொண்டே போனது.

“என்னங்க நீங்க, ஒரு கியூரியாசிட்டில கேட்டேன். அதுக்கு இவ்ளோ சலிப்பா.?” என்றவன், அவள் கிளம்புவது போல் வேகமாக எழவும்,

“ப்ளீஸ்… இனி மாயா தவிர வேற பேசமாட்டேன். உட்காருங்க..” என்றான் பாவமாக.

“ம்ம் சொல்லுங்க..” என்றவளிடம்

“இவ்வளவு கோபம் வரக்கூடாதுங்க..” என்றவன், அவள் முறைப்பில் “மாமாவும் என் அம்மாவும் கூட பிறந்தவங்க. எங்க நேட்டிவ் கேரளா. மாமா இங்க பிசினஸ் ஆரம்பிக்கவும், எல்லாருமே இங்க வந்துட்டாங்க. அப்படியே இங்கேயே செட்டிலும் ஆகிட்டாங்க. எல்லாமே நல்லாதான் போச்சு.”

“மாயாவுக்கு மியூசிக் மேல ரொம்ப இன்ட்ரெஸ்ட். மியூசிக்தான் படிச்சா. மாமவுக்கு அது பிடிக்கல. அவருக்காக பிசினஸ் மேனேஜ்மென்ட் படிச்சா. பிசினஸும் பார்த்துக்கிட்டா, ஆனாலும் அவளால மியுசிக்கை விட முடியல. அப்படி ஒரு ஸ்டேஜ் ஷோல பாடும் போதுதான் அத்தான் பழக்கம். அது அப்படியே லவ்வாகிடுச்சு.”

“லவ் ன்னாலே பிரச்சினைதானே, மாமாவுக்கு பிடிக்கல. அவங்க பக்கம் ரொம்பவும் ஆச்சாரம் அது இதுன்னு நிறைய பார்க்க, எதுவுமே செட்டாகல. அவரும் சரி மாயாவும் சரி ஐந்து வருசம் வெயிட் பண்ணாங்க. மாயாவோட பிடிவாதம் மாமாவை இறங்கி வர வச்சது. மாயாவுக்கு வயசும் கூடிட்டே போறதுதான் இதுக்கு காரணம்.”

“மாமியும் மாமாவை சமாதானம் செஞ்சி ஒருவழியா கல்யாணம் முடிஞ்சது. அத்தான் மொத்தமா இங்க வந்துட்டார். எல்லாமே நல்லாத்தான் போச்சு. மாமாவுக்கே அத்தானை ரொம்ப பிடிச்சது. அவ்ளோ நல்லவர் அத்தான். ரெண்டு வருசம் கழிச்சு மறுபடியும் ஒரு பிரச்சினை அத்தான் வீட்டு சைட்ல. குழந்தை இல்லைன்னு ஆரம்பிச்சாங்க.”

“மறுபடியும் முதல்ல இருந்தான்னு மாயாவுக்கு பயம். மாயா ரொம்பவே சென்சிடிவ். யார் என்ன சொன்னாலும் உடனே ரியாக்ட் ஆகிடுவா.? அத்தைதான் சமாதானம் செஞ்சி ஹாஸ்பிடல் போக சொன்னாங்க.”

“செக்கப் முடிஞ்சி வந்தா ரெண்டு பேர் முகத்துலயுமே கவலை. அத்தானுக்குத்தான் பிரச்சினை தெரிஞ்சது. மாமாவும் சரி மாமியும் சரி எதுவுமே சொல்லல. பேபியை அடாப்ட் பண்ணிக்கலாம்னு தான் சொன்னாங்க. ஆனா அத்தானுக்கு குற்றவுணர்ச்சி. அதிகமா குடிக்க ஆரம்பிச்சார். வீட்டுக்கு வராம, அவங்க வீட்டுக்கு போக, மாயாவை அவாய்ட் பண்ண ஆரம்பிச்சார். இது எல்லாமே மாயாவை டிப்ரசனுக்கு கொண்டு போயிடுச்சு. அப்போதான் கோவிட் வந்தது. கோவிட்லதான் அத்தை இறந்தாங்க. மாமா கோவிட் வந்து ஹாஸ்பிடல்ல இருக்காங்க. அப்போ வந்த அத்தான் கொஞ்ச நேரம் கூட இருக்கல, உடனே கிளம்பி போய்ட்டாங்க. அதுல இருந்து தான் மாயா ரொம்பவே இறுகிப் போயிட்டா.?”

“அவளைப்பத்தி, அவளோட பயம் எல்லாமே அவருக்குத் தெரியும். அம்மா இறந்து, அப்பா ஹாஸ்பிடல்ல இருக்கும் போது இவ தனியா என்ன செய்வான்னு கூட யோசிக்காம மொத்தமா விட்டுட்டு போயிட்டார். அதுக்குப் பிறகு எத்தனையோ முறை அம்மாவும், மாமாவும் பேசியும் கூட மாயா இறங்கி வரவே இல்லை.”

“அவளோட காயம் ரொம்ப அதிகம், அதனால அவளை அப்படியே விடுங்கன்னு நான் சொல்லிட்டேன். மியூசிக் பக்கம் போகவிடாம பிசினஸ்க்குள்ள இழுத்து, அவ கவனத்தை திசை திருப்பி, அந்த வேதனையில் இருந்து வெளியேக் கொண்டு வர ரொம்பவே கஷ்டப்பட்டோம்.”

“இப்போ சிரிக்கிறாதான். ஆனா அதுல உயிர்ப்பே இல்ல சத்யா. மாமாவுக்கு அவளோட கவலைதான் அதிகம். என்னதான் நான் அவளை நல்லா பார்த்துப்பேன்னாலும், அத்தான் கூட இருந்தா மாமா நிம்மதியா இருப்பார். நேத்தும் பார்த்தீங்க இல்ல. அவரைப்பத்தி பேசினாலே ரெண்டு நாள் யார்கூடவும் பேசாம ரூமுக்குள்ளயே குடியிருப்பா.? இவளை எப்படி என்ன செஞ்சி மாமா கூட சேர்த்து வைக்கிறதுனு புரியாம நான்தான் லூசா அலையுறேன்..” என தன் நீண்ட பேச்சை முடிக்க,

“இதைத்தான் எங்கிட்ட பேசனும் நினைச்சீங்களா சார்..” என்றாள் சத்யா அமைதியாக.

“ம்ம் ஆமாங்க..” என்றான் அவனும் அமைதியாக.

“ஓ.. ஆமா இதெல்லாம் எதுக்கு நீங்க எங்கிட்ட சொல்றீங்க..?” என அவனைப் பார்த்து கேள்வியாக கேட்க,

‘எத எதுக்கு சொன்னீங்களா? அடிப்பாவி..’ என அதிர்ச்சியில் எழுந்து நின்றே விட்டான் இளங்கோ.
 
  • Like
Reactions: shanmugasree

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
949
434
93
Tirupur