• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பார்வை - 05

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
949
434
93
Tirupur
பார்த்த பார்வையில் - 05

அவசர அவசரமாக உள்ளே வந்த சத்யாவை ஆராய்ச்சியாக பார்த்தார் பெரியவர்.

அந்த பார்வைக்கு “இளங்கோ சார் வந்துருக்கார்..” என்றாள் மெல்ல.

“ம்ம் போகும் போது வந்து என்னைப் பார்த்துட்டு போக சொல்லும்மா, அப்புறம் உன் பையனை கொண்டு வந்து இங்க விட சொல்லு.. லீவ் முடியும்போது நீ கொண்டு போய் விட்டுட்டு வா.” என்றார்.

“இல்ல இல்ல சார். பரவாயில்ல..” என அவசரமாக மறுக்க,

“நீ கேட்கும் போது நான் ஏன் ஒன்னும் சொல்லல தெரியுமா.? மாயா இதெல்லாம் பார்த்து ஏங்கிட கூடாதுனுதான்.” என்றவர் முகம் கசங்கி போய்விட்டது.

“சார் நீங்க எனக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதே இல்லை. நீங்க சொல்லாமலே எனக்கு புரிஞ்சது..” என புன்னகைக்க,

“ம்ம் பரணியை யார் கொண்டு வந்து விடுவா.? கூட்டிட்டு வர ஆள் இருக்காங்களா.?”

“அம்மாக்கிட்ட கேட்கனும் சார். அப்பாவுக்கு இவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணமுடியாது. பெரிய அண்ணன் குஜராத் பக்கம் லோடு எடுத்துட்டு போயிருக்கான். வரவே பத்து நாளைக்கு மேல ஆகிடும். சின்ன அண்ணன் ஊர்லதான் இருக்கான். அவனுக்கும் வேலை இருந்தா கஷ்டம்தான்..”

“ஓ… உன் சின்ன அண்ணனும் ட்ரைவர் வேலைதானே செய்றான். இளங்கோகிட்ட சொல்லி, நம்ம கம்பெனிலயே வேகன்ட் இருக்கான்னு கேட்டு பார்க்கலாம் இல்ல..”

“அய்யோ அதெல்லாம் வேண்டாம் சார். நான் இவ்வளவு தூரம் வந்ததே யாருக்கும் பிடிக்கல. இனி அவனையும் கூப்பிட்டா பிரச்சினைதான். பெரிய அண்ணன் ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை அப்படித்தான் ஊருக்கு வருவான். நானும் இங்க இருக்கேன். அப்பாவுக்கோ, இல்ல அம்மாவுக்கோ ஏதானும் ஆச்சுன்னா ரொம்ப கஷ்டம். சின்ன அண்ணன் அங்கயே இருந்தா இந்த கஷ்டமெல்லாம் இல்லயில்ல..”

“ம்ம் நீ சொல்றதும் சரிதான். சரியாதான் யோசிக்கிற.. இளா சாப்பிட்டிருந்தா வர சொல்லு, நான் தூங்கிட்டேன்னு அப்படியே போயிட போறான்..”

“ம்ம் இதோ சொல்றேன் சார்..” என்றவளுக்கு முகமெல்லாம் பூரிப்பு.

அதே புன்னகை முகத்துடன் வெளியில் வர, இளங்கோவும் சரியாக சாப்பிட்டு முடித்திருந்தான்.

“அக்கா, சார் இவரை கிளம்ப முன்னாடி வந்து பார்த்துட்டு போக சொன்னார்..” என மாயாவிடம் சொல்ல,

‘இவரா.?’ என இளங்கோ முகத்தைச் சுருக்க

“அச்சா இன்னும் தூங்கலையா.? என்னாச்சு?” என மாயா பதட்டமாகிவிட்டாள்.

“ஒன்னும் இல்லையேக்கா.. நல்லாத்தான் இருக்கார். இவரை வர சொன்னார்.” என மீண்டும் இளங்கோவை காட்டி சொல்ல,

“அவர், இவர்ன்னா எனக்கு என்ன பேர் இல்லையா.? ஏன் எங்கிட்ட நேரா சொல்ல முடியாதா.? நீங்க இங்க ஸ்டாஃப்தானே. மரியாதை தெரியாதா.?” என சத்யாவை பார்த்து முறைக்க,

இளங்கோவின் இந்த புதிய பரிணாமத்தில் விழித்தவள், “அது அது சாரி, நான்.. வந்து சார் உங்களை கூப்பிட்டார் சார்..” என திணற,

“ம்ம்.. அந்த பயம் இருக்கனும்” என்ற்வன், ‘விட்டா நம்மள கிறுக்கனாக்கிடுவாங்க போல’ என புலம்பியபடியே பெரியவரின் அறைக்குள் நுழைய

“உஷ்ஷ்” என்றவள், “அக்கா இவர் எப்பவுமே இப்படித்தானா.?” என பாவமாக கேட்க,

“ஹாஹா” என வாய்விட்டு சிரித்த மாயா, “இப்படித்தான் எப்பவுமே, இல்லைன்னா அவனோட இழப்புகள்ள இருந்து அவனால வெளிய வந்துருக்க முடியாது..” என்றார்.

‘என்னாச்சு’ என கேட்க வாய் வர வந்த வார்த்தைகளை அப்படியே தொண்டையோடு நிறுத்தி, பரணியை அழைத்து வர, பெரியவர் சம்மதம் சொன்னதை கூற,

“சூப்பர் சத்யா, ஏற்கனவே ரெண்டு நாள் லீவு முடிஞ்சிருக்குமில்ல, அதனால இன்னைக்கு நைட்டே கிளம்பி வரச்சொல்லு..”

“நானும் அப்படித்தான் நினைச்சேன் க்கா. ஆனா அண்ணன் ஊர்ல இருக்கானா தெரியல? அவன் இல்லைன்னா கூப்பிட்டு வர முடியாது.”

“ஓ.. பேசிப்பாரு சத்யா..”

“சரிக்கா..” என தன் மொபைலை எடுக்க போக,

“ஹேய் சத்யா இரு, இன்னைக்கு நமக்கு குமுளில இருந்து சரக்கு வருது. அங்க இருந்தே ஆறு மணிக்குதான் கிளம்பும். இளாக்கிட்ட அவனால எதுவும் பண்ண முடியுமான்னு கேட்குறேன்..”

“அய்யோ அக்கா அதெல்லாம் வேண்டாம்..” என மறுத்துக் கொண்டிருக்கும் முன்னே இளா வந்துவிட, என்ன என்றவனிடம் மாயா செய்தியைக் கூற,

“அட இதெல்லாம் ஒரு விசயமே இல்ல. பரணிகூட யார் வர்ரதுனு கேட்டுட்டு சொல்லுங்க. மத்ததெல்லாம் நான் பார்த்துக்குறேன். அவன் மட்டும் வந்தாலும் ஓக்கேதான். பசங்க சேஃபா கூட்டிட்டு வந்துடுவாங்க.”

“என்ன தனியாவா?” என அதிர்ந்தவள் “அப்படியெல்லாம் வேண்டாம், சின்ன அண்ணா இருக்கானான்னு கேட்குறேன்..” என்றவள் போனோடு வெளியே செல்ல,

“ஏண்டா இப்படி டென்சன் ஏத்துற அவளுக்கு..” என மாயா சலிக்க,

“பின்ன எனக்கும் ஒரு என்டர்டைமென்ட் வேண்டாமா.? எப்போ பாரு உர்ருன்னு இருந்தா மனுசனுக்கு காண்டாகுதில்ல..” என்றபடியே ஃபைலோடு கிளம்பியிருந்தான்.

‘இந்த பொண்ணைப் பத்தி தெரியாம வாலாட்டிட்டு இருக்கான், ஒருநாள் அந்த வாலை ஒட்ட நறுக்கப்போறா, அப்போதான் தலைவர் அடங்குவாரு’ என புலம்பிக்கொண்டே சுபாவைத் தேடி சென்றார்.

சத்யா வீட்டில் பேச, அவளின் சின்ன அண்ணனோ “பாப்பா காலைல தண்ணி பாய்ச்சனும், என்னால வரமுடியாது. அம்மாவையும் பரணியையும் தேனில வந்து பஸ் வச்சு விடுறேன். காலைல நீ போய் கூப்பிட்டுக்கோ..” என்றுவிட, சத்யாவால் மறுக்கமுடியவில்லை.

மாயாவிடம் அனைத்தையும் கூறியவளுக்கு மனமெல்லாம் சந்தோசத்தில் நிரம்பி வழிந்தது.

அதே மகிழ்வுடன் அன்றைய நாள் முடிவுக்கு வர, இளங்கோவும் சுபாவும் கிளம்பவும், குழந்தையோ சத்யாவை விட்டு விலகாமல் அழ ஆரம்பிக்க, ‘அய்யோ’ என்றாகிவிட்டது எல்லோருக்கும்.

எவ்வளவோ சமாதானம் செய்தும் அழுகை நின்றபாடில்லை.

என்ன செய்வது என எல்லோரும் சத்யாவின் முகத்தையே பார்க்க, அவ்ளோ பாவமாக இளங்கோவை பார்த்தாள்.

அவளின் பார்வையில் என்ன உணர்ந்தானோ, “ம்மா, பாப்பா ரொம்ப அழறா, அழவெச்சு தூக்கிட்டு போனா நைட் முடியாம போயிடும். அதனால நீங்க இங்கேயே இருங்க. நான் போய் உங்க டேப்லெட் எல்லாம் எடுத்துட்டு வரேன், இன்னைக்கு நைட் இங்கயே ஸ்டே பண்ணிக்கோங்க.” என்றதும், சுபாவுக்கும் அதுதான் சரியென்றுபட்டது.

சுபா மாயாவின் அறைக்குள் சென்றுவிட, அழுத குழந்தையை சமாதானம் செய்தபடி சத்தியா இளங்கோவின் பின் நடந்தாள்.

சிறிது தூரம் சென்ற பிறகுதான் தனக்கு பின்னால் சத்யா வருகிறாள் என்று இளங்கோவுக்கு தெரிந்தது.

நின்று திரும்பி பார்த்தவன் ‘என்ன’ என்பது போல் புருவத்தை உயர்த்த,

“அது அது சாரி, சாரி சார். உங்களுக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே” என தயக்கமாக கேட்க,

“சத்யா நீங்க புரியிற மாதிரியே பேசமாட்டீங்களா, எனக்கு என்ன வருத்தம் என்ன கோபம?” என அவளிடம் நிதானமாக கேட்க

“இல்ல, இல்ல சார், அதுவந்து பாப்பா இப்படி என்கிட்ட இருந்து அடம் பிடிச்சது உங்களுக்கு ஒன்னும் கோபம் இல்லையே” என அப்போதும் தயங்கியபடியே கேட்க,

“எனக்கு நெஜமாவே புரியலங்க. இதுக்கெல்லாம் ஏன் கோபப்படணும், குழந்தைகள்ன்னா அப்படித்தான் இருப்பாங்க அடம்பிடிச்சாதான் அது குழந்தை, இல்லன்னா பொம்மை. நான் என்ன பொம்மையா வளர்க்கறேன்.” என சிரித்தபடியே கேட்க,

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார், பாப்பாவை பார்த்ததிலிருந்து எனக்கும் அவளைவிட முடியல, என்னோட பாப்பாவே என்கிட்ட வந்த மாதிரி இருக்கு..” என வருத்தத்துடன் கூற,

“சாரி, வெரி சாரி சத்யா. ஐ நோ யுவர் ஃபீலிங்ஸ், ப்ளீஸ் பீல் பண்ணாதீங்க. உங்களுக்கு விருப்பம் இருந்தா, உங்களால மேனேஜ் பண்ணிக்க முடியும்னா, டைம் கிடைக்கும் போதெல்லாம் போய் பாப்பாவ பார்த்துட்டு வாங்க, நானும் அம்மாவும் ஒன்னும் சொல்லமாட்டோம், அம்மாவுக்கு இதுல சந்தோசம்தான். அவங்களுக்கும் வயசாகுது இல்லையா, பாப்பாவை பார்த்துக்க ரொம்பவே கஷ்டப்படுறாங்க. நீங்க பார்த்துகிட்டா ரொம்ப சந்தோசம்.” என்றதும்,

“நான்.. நானா? நான் எப்படி.?” என திணறியவளிடம்,

“நீங்க.. நீங்கதான் பாத்துக்கணும். மாமா எதுவும் பிரச்சனை செய்வாரோன்னு பயப்படுறீங்களா?”

“இல்ல.. இல்ல அப்படியெல்லாம் எதுவுமில்லை, சார் அப்படியெல்லாம் யோசிக்கவும் மாட்டார்.”

“வேற என்ன பிரச்சனை? மாமாகிட்ட நான் பேசுறேன்.”

“இல்ல அதெல்லாம் வேண்டாம், பாப்பாவை நான் பார்த்துக்கிறேன். ஆனா அங்க போய் பார்க்க முடியாது. இங்க சாருக்கு எப்பவும் நான் கூடவே இருக்கணும். நான் பக்கத்துல இல்லனா ரொம்ப டென்ஷன் ஆயிடுறாரு. காலையில நீங்க ஆபீஸ் போகும்போது பாப்பாவை கொண்டு வந்து என்கிட்ட விட்டுட்டு போயிடுங்க, நைட்டு தூங்கும்போது நான் கொண்டு போய் விட்டுடுறேன்..” என தயங்கியபடியே தன் மனதில் உள்ளதை கூற, எரிச்சலாக பார்த்தான் இளங்கோ.

“ஏங்க.. பாப்பா விஷயத்துல எல்லாம் என்ன நம்பாதீங்க. நான் எல்லா நாளும் வீட்டிலேயே இருப்பேன்னு சொல்லமுடியாது. சில நாள் வீட்டுக்கு வராமல் ஆபீஸ்லயே இருப்பேன். அப்புறம் ஃபாரின் ட்ரிப் இருக்கும். சோ நீங்க எப்படி உங்க செட்யூல மாத்திக்க முடியுமோ, அதுபோல மாத்திக்கங்க. வேணும்னா ஒன்னு செய்யலாம். மார்னிங் நீங்க போய் பாப்பாவை எடுத்துட்டு வந்துருங்க. நைட் நான் போகும்போது தூக்கிட்டு போயிடுறேன். அதுவும் நான் இங்க இருக்கிற வரைக்கும் மட்டும்தான்.” என்றதும் வேறு வழியே இல்லாமல் சரி என்று விட்டாள் சத்யா.

“சரி நான் போய் அம்மாவோட டேப்லட்ஸ் எடுத்துட்டு வரேன்.” என நகர போனவனிடம்,

“இன்னும் ஒன்னு கேட்கணும்” என அவனை நிறுத்த,

“இன்னும் ஒன்னா சீக்கிரம் கேளுப்பா, ஐ ஃபீல் சோ டயர்ட்” என உடலை முறுக்க,

“சாரி” என்றவள் “பாப்பாவோட பேர் என்ன?” என ஆர்வமாக கேட்டாள்.

“ஏங்க, நீங்க விளையாட நான்தான் கிடைச்சேனா? இவ்வளவு நேரம் உங்க கூட இருந்திருக்கா? பாப்பா பேரு கூட தெரியலன்னு சொன்னா நம்பற மாதிரி இருக்கா?” என சத்யாவை கிண்டலாக பார்க்க,

“ம்ச்..” என எரிச்சலானவள், “இப்ப என்ன சொல்ல வரீங்க நான் தெரிஞ்சுக்கிட்டே உங்ககிட்ட கேட்கிறேன் நினைக்கிறீங்களா? அப்படி எந்த அவசியமும் எனக்கு இல்ல நான் மாயா அக்காகிட்டயே கேட்டுக்குறேன்..” என திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

“இத்தனை பேர் இருக்காங்க யாராவது ஒருத்தராவது பேர் சொல்லி கூப்பிடலாம் இல்ல, எல்லாரும் பாப்பா பாப்பானுதான் கூப்பிடுறாங்க, நான் என்னனு நினைக்க” என அவன் காதில் விழும்படியே முணுமுணுத்துக் கொண்டு நடந்தாள்.

சத்யாவின் பேச்சில் வாய்விட்டு சிரித்தவன் “ஏங்க சத்யா..” என சத்தமாக அழைத்தான்.

அவளோ நின்று திரும்பி, கடுப்பாக பார்த்து வைக்க,

“எனக்கு ஒன்னு தோணுது அதை சொன்னா நீங்க என்னை அடிச்சிடமாட்டீங்களே!” என அதே சிரிப்புடன் கேட்க,

“என்ன” என்றவள் சட்டென்று “ ஏடாகூடமா கேட்டா கண்டிப்பா அடிச்சிடுவேன்” என முன்னெச்சரிக்கையாக பதில் சொல்ல, அதில் பக்கென்று சிரித்துவிட்டான் இளங்கோ.

“என்ன கேட்கனுமோ, அதை சீக்கிரம் கேளுங்க. பாப்பாவுக்கு தூக்கம் வந்துடுச்சு.” என அவசரப்படுத்த,

“எனக்கு என்னமோ இனி பாப்பா உங்களை விடமாட்டான்னுதான் தோணுது.” என்றதும் அவள் முகம் பூவாக மலர,

“அப்படியே பாப்பாவோட அப்பாவும்..” என்றவன், சத்யா அதிர்ந்து நிற்பதை, ஒரு நொடி ரசனையாக பார்த்துவிட்டு நிற்காமல் நடந்துவிட்டான்.
 
  • Like
Reactions: shanmugasree