பார்வை - 15
என்ன நடந்தது என சத்யா யோசிக்கும் போதே, அனைத்த வேகத்திலேயே அவளை விட்டு விலகியிருந்தான் இளங்கோ.
“சாரி சாரிங்க சத்யா.. கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்..” என மன்னிப்பு கேட்க, சத்யாவின் முகம் இருளடைந்து போயிருந்தது இளங்கோவின் செயலில்.
“சத்யா.. ப்ளீஸ் நான் எந்த இன்டென்ஸ்னோடவும் செய்யல, என் ஹேப்பியை எப்படி வெளிக்காட்டுறதுனு தெரியாம எமோஷனல்ல தான் இப்படி..” என இழுக்க,
சத்யாவிற்கும் அது புரியத்தான் செய்தது. அதனால் வேறுவழியில்லாமல் “இட்ஸ் ஓகே..” என்றவள் மாயா இருந்த அறைக்கு சென்றுவிட்டாள்.
‘ஷப்பா.. கொஞ்ச நேரத்துல எவ்ளோ டென்சன்.. டேய் இளா நீ அடங்கவே மாட்டியா? இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா அவ கூட்டுல இருந்து வெளிய வந்து உங்கிட்ட சாதாரணமா பேசுறா. அதையும் கெடுத்துக்காத.. அடங்கு ராசா அடங்கு..’ என தனக்குத்தானே பேசிக்கொண்டவன் சத்யா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சில நிமிடங்கள் கழித்து நர்ஸ் வந்து “சார் உங்களை டாக்டர் வர சொன்னார்..” என சொல்லிவிட்டு செல்ல, தன் எண்னத்தில் இருந்து வெளியில் வந்தவன், மருத்துவரின் அறைக்குச் சென்றான்.
அவனைப் பார்த்ததும் “கமான் இளங்கோ.. ஆர் யு ஹேப்பி..?” என கேட்கவும்,
“100% யெஸ் டாக்டர்.. தேங்க் யூ சோ மச்..” என மனம் நெகிழ்ந்து கூற,
“நோ. நோ இளா… நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும். நான் உனக்கு செய்ய கடமைப் பட்டிருக்கேன். இந்த சர்ஜரில அவ்வளவு ரிஸ்க் இருந்தும் உங்களுக்காகத்தான் நான் செஞ்சேன். காரணம் உங்களுக்கேத் தெரியும். உங்களுக்கு எந்த வகையிலயாவது நான் உதவனும்னு நினைச்சேன். அதுக்கு அந்த முருகனே வாய்ப்பு கொடுத்திருக்கார். அதை எப்படி மிஸ் பண்ணுவேன்..” என்ற மருத்துவரின் குரலும் நெகிழ்ந்துதான் போயிருந்தது.
“டாக்டர் ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசவே வேண்டாம். நான் செஞ்சது ஒன்னுமே இல்லை. அது வர்ஷினியோட ஆசை. அதைத்தான் செஞ்சிருக்கேன்..” என்ற இளங்கோவிடம்,
“அது அதுதான் சொல்றேன் இளா.. சாகப்போறோம்னு தெரிஞ்சி இப்படி ஆர்கான் டொனேட் பண்றது எல்லாம் சாதாரண விசயம் இல்லையே. இன்னும் என்னால அவங்க பேசினதை மறக்கவே முடியல. அவ்வளவு வலியிலயும் உங்கக்கிட்ட இதை பேசினாங்க பாருங்க..” என்றதும்,
“வர்ஷி எப்பவும் அப்படித்தான் டாக்டர். அவளுக்கு கொஞ்சம் கூட எதுலயும் பயமே இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்துல செத்துடுவோம்னு தெரிஞ்சும் கூட பயமில்லாம எங்கிட்ட பேசிட்டு இருந்தா, குழந்தையைப்பத்தி கூட யோசிக்க மாட்டியாடினு நான் கதறுனதுக்கு, இல்ல.. அவக்கூட நான் இருக்க முடியலன்னு வருத்தம் இருக்கு.. ஆனா கஷ்டமா இல்லை. நீ இருக்கும்போது எனக்கு என்ன பயம். நான் இல்லைன்னா நீயும் பாப்பாவை அப்படியே விட்டுடுவியா.. மாட்ட, விடமாட்ட. எனக்குத் தெரியும். இனி என்னை யோசிக்காத பாப்பாவை பாரு. அத்தையைப் பாருன்னு சொன்னா..” என்ற இளங்கோவின் குரலில் பெருமையும் வருத்தமும் சம அளவில் கலந்திருந்தது.
“எஸ் அவங்க தேவதை இளா.. அதனாலத்தான் கடவுள் அவங்களை சீக்கிரமா தன்னோட அழைச்சிக்கிட்டார் போல, நீங்க அவங்களை ரொம்ப மிஸ் பண்றீங்களா..” என்றதும்,
“ரொம்ப.. ரொம்ப டாக்டர்..” என பட்டென பதில் வந்தது இளங்கோவிடமிருந்து.
இதற்கு என்ன சமாதானம் சொல்வது என்று மருத்துவருக்கு தெரியவில்லை.
இருவரிடமும் பேரமைதி. இருவரும் அந்த நாளை நினைத்துப் பார்க்கின்றனர் என்று சொல்லாமலே புரிந்தது.
“ஸாரி இளா நீங்க மறக்க நினைக்கறதை நான் ஞாபகப்படுத்தி விட்டுட்டேன்.” என மருத்துவர் மன்னிப்பு கோர
“சேச்சே அதெல்லாம் இல்ல டாக்டர், வர்ஷினியை என்னால எப்பவும் மறக்க முடியாது, அவள மறந்து ஒரு வாழ்க்கையை நினைக்கவே முடியாது.” என்றதும்,
“எனக்கு தெரியும் இளா, என்னதான் வெளியே பேசி சிரிச்சிட்டு, எல்லாருக்காகவும் சந்தோசமா இருக்கிற மாதிரி காட்டினாலும், அது உண்மை இல்லை என்று எனக்கு தெரியும். நீங்களும் உங்க மனைவியும் எப்படி வாழ்ந்திருப்பீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியாது, வர்ஷினியோட கடைசி நாள்தான் உங்களைப் பார்த்தேன், அந்த ஒரு நாளே உங்களுடைய வாழ்க்கையையும் அன்னியோன்யத்தையும் எனக்கு புரிய வச்சது. எப்படியும் உங்ககிட்ட அவங்களை திருப்பிக் கொடுக்கணும்னு நினைச்சேன், ஆனா என்னால அவங்களை காப்பாத்த முடியல. ஐ அம் ரியலி வெரி சாரி இளா.. ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி.” என மிகவும் வருத்தமாக மருத்துவர் பேச,
“டாக்டர் ப்ளீஸ், உங்க மேல எந்த தப்பும் இல்ல… உங்களால முடிஞ்ச அளவுக்கு வர்ஷியை காப்பாத்த போராடினீங்க, இதுல நீங்க கில்டியா ஃபீல் பண்ண ஒன்னுமே இல்ல..” என்று இளங்கோ சமாதானம் செய்தான்.
“பாப்பா எப்படி இருக்காங்க இளா.. அம்மா மேனேஜ் பண்றாங்களா?”
“பேபி நல்லா இருக்கா டாக்டர். அம்மாவுக்கு இன்னும் அந்த வலி சரியாகல. ரொம்ப நேரம் நடக்க முடியறது இல்லை.”
“கண்டிப்பா வலி இருக்கும். அவங்க சரியாகி வந்ததே கடவுளோட கிருபைதான். அப்புறம் இளா வெளியே ஒரு பொண்ணு இருந்தாங்களே அவங்க யாரு.?”
“பேர் சத்யா டாக்டர். மாயா வீட்டுக்கு வந்துருக்காங்க. மாமாவை அவங்கதான் பார்த்துக்குறாங்க..”
“ஓ.. கேர்டேக்கரா.?”
“நோ நோ.. அப்படியெல்லாம் இல்ல டாக்டர். ஹெல்புக்கு வந்துருக்காங்க.. ரொம்பவும் நல்ல பொண்ணு. பாப்பாவையும் அவங்கதான் பார்த்துக்கிறாங்க. இதுவரை எந்த பிரச்சினையும் வந்ததில்ல.”
“ஓ.. ஓக்கே இளா.. ரொம்ப நல்ல பொண்ணுன்னா மொத்தமா பிடிச்சு வச்சிடுங்க. அப்புறம் கிடைக்க மாட்டாங்க..”
“கண்டிப்பா டாக்டர். மாமாக்கிட்ட பேசுறேன்..”
“மாமாக்கிட்டயும் பேசுங்க.. நீங்களும் யோசிங்க.. உங்க வர்ஷினி இடத்தை யாருக்கும் கொடுக்க வேண்டாம். ஆனா பேபிக்கு ஒரு அம்மா வேணும். அவங்களுக்காக யோசிங்க.”
“ம்ம் டெஃபனட்லி டாக்டர்..” என்று இளங்கோ ஒருவழியாக சரியென்றதும் தான் அவனை விட்டார் மருத்துவர்.
“இளா.. நான் கிளம்பறேன். என் அசிஸ்டெண்ட்ஸ் பார்த்துப்பாங்க. நான் மார்னிங்க் வந்து பார்க்குறேன். ஒன் அவருக்கு ஒன்ஸ் எனக்கு அப்டேட் வந்துட்டே இருக்கும். சோ பயப்பட வேண்டாம்..” என்றவரிடம்,
“ஓக்கே டாக்டர்.. அஸ் யூஸ்வல் என்ன ப்ரொசீயூஜரோ அதை ஃபாலொவ் பண்ணுங்க. மாயா விழிக்க எவ்வளவு நேரம் ஆகும் டாக்டர்..” என இளங்கோவும் கேட்க.
“அவங்க தூங்கட்டுமே இளா.. ஓவர் ஸ்ட்றெஸ்.. தூங்காம உடம்பை கெடுத்து வச்சிருக்காங்க. அவர் விழிக்கிற வரை இவங்களும் ரெஸ்ட் எடுக்கட்டும். நைட் நீங்க ஸ்டே பண்ண முடியுமா பாருங்க. இல்லைன்னா நர்ஸ் பார்த்துப்பாங்க..” என மருத்துவர் விடைபெற, இளங்கோவும் அவருக்கு நன்றி சொல்லி வெளியில் வந்தான்.
இங்கு மாயாவின் அறைக்குள் வந்த சத்யாவிற்கு உடல் எல்லாம் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது. இதயத்துடிப்பு வழக்கத்திற்கும் மாறாக வேகமாக துடிக்க, இரு கைகளையும் சேர்த்து தன் மார்பு பகுதியை அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.
‘அவன் சாதாரணமாகத்தானே அனைத்தான், உனக்கு ஏன் உயிர்வரை சுடுகிறது, அப்படியா ஏங்கி போய் இருக்கிறாய், ஒரு சிறு அனைப்பு அதற்கே உன் மனம் ஏன் தடுமாறுகிறது’ என அவளது மனசாட்சியே அவளை நிற்கவைத்து கேள்வி கேட்க சத்யாவிடம் அதற்கு பதிலே இல்லை.
இத்தனை ஆண்டுகள் இறுக்கி பிடித்திருந்த மனதை இளங்கோ தகர்க்க ஆரம்பிக்கிறான் என்று அவளுக்கு சில நாட்களாகவே தோன்றத்தான் செய்தது. எப்படியும் இதுபற்றி பேசுவான் என்று அவள் நினைத்தாள். அப்படி பேசும்போது ‘சரி வராது’ என தெளிவாக விளக்கிவிட வேண்டும் என்று யோசித்தெல்லாம் வைத்திருந்தாள்.
ஆனால் ஒரு சிறு அனைப்பிற்கே தன் மனம் அவனை ஏற்கிறது என்றால்.? யோசிக்கவே முடியவில்லை சத்யாவால். அப்படியென்றால் நான் சரியில்லையா? வாய்ப்பிற்காக காத்திருந்தேனா? என் சுயக்கட்டுப்பாடு அவ்வளவுதானா.?’ என பலவாறு யோசித்து யோசித்து தன்னையே மிகவும் கீழாக நினைக்க ஆரம்பித்தாள்.
அதன்பிறகு அங்கு ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை அவளால். இளங்கோவிடம் சொல்லாமலே கிளம்பிவிடலாம் என்றாலும் சூழ்நிலை முற்றிலும் வேறாக இருந்தது. மாயாவிற்கு கண்டிப்பாக ஒரு துணை வேண்டும். இளாவால் கண்டிப்பாக முடியாது.
என்ன செய்ய? என்ன செய்ய? என தவித்தபடி அங்குமிங்கும் நடைபயின்றுக் கொண்டிருக்க, கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான் இளங்கோ.
அவனை நேரேப் பார்க்க முடியாமல் தவித்தவள், “நான் கிளம்பட்டுமா சார்? பாப்பாவை தனியா சமாளிக்க முடியாது, நான் போய்ட்டு கோதை அக்காவை அனுப்பி வைக்கிறேன்..” என்று கேட்க,
தன்னைப் பார்க்காமலே ஏன் பேசுகிறாள் என யோசித்தவனுக்கு, சட்டென விடை கிடைக்க, “ஓ சாரி சத்யா.. நீங்க இவ்ளோ கில்டியா ஃபீல் பண்ணாதீங்க. எனக்கு கஷ்டமா இருக்கும். நான் யோசிக்காம செஞ்சிட்டேன். ஐம் ரியல்லி சாரி.” என்றவன், “அம்மாவும் கால் பண்ணாங்க. பாப்பா அழுதுட்டே இருக்காளாம். நீங்க கிளம்புங்க. நாளைக்கு வந்தா போதும்.” என்றதும்,
விட்டால் போதுமென்று நினைத்தவள் வேறொன்றும் பேசாமல் “ஓக்கே சார்..” என்று கிளம்பிவிட்டாள்.
சத்யாவின் ஓட்டத்தைப் பார்த்து சிரிப்புதான் வந்தது இளங்கோவிற்கு. தெரியாம கட்டிப்பிடிச்சதுக்கே இப்படி ரியாக்ஷனா? தெரிஞ்சே கட்டிப்பிடிச்சு கல்யாணம் செய்துக்கலாம்னு சொன்னா என்ன செய்வா.?’ என நினைத்து சிரித்தவன், உடனே அப்படி மட்டும் கேட்டிருந்தா ‘எப்பா சும்மாவே ஆடுவா, இப்போ பத்ரகாளி ஆகிடுவா.. வேப்பிலையே இல்லாம சாமியாடிட்டுதான் மறுவேலையே பார்ப்பா..’ என மேலும் சிரித்தவன் மாயாவின் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
வீட்டிற்கு வந்தும் கூட சத்யாவால் நிதானமாக இருக்கமுடியவில்லை. அவளையும் அறியாமல் இளங்கோ அவள் மனதுக்குள் வந்துவிட்டான் என்று அவளுக்கு புரிந்தது.
எப்படி இதிலிருந்து வெளியில் வருவது? வேலையைவிட்டு போய்விடலாமா? என்று கூட யோசிக்க ஆரம்பித்திருந்தாள். ‘இந்த மனசு உடம்பு எல்லாம் செத்து சுண்ணாம்பாகிடுச்சுன்னு நினைச்சிட்டு இருந்தா.. ஊப்ஸ்.. இனி என்ன நடக்கும்.. நான் இங்க இருந்தா இந்த மனசாட்சியோட சண்டை போட்டே நான் சுடுகாடு போய்டுவேன் போல, யாருக்கும் சொல்லாம இங்க இருந்து போய்டனும். மாதவன் சார் டிஸ்சார்ஜ் ஆகி வர அன்னைக்கு நாம இடத்தை காலி பண்ணிடனும். யார் என்ன கேட்டாலும் எப்படியாவது சமாளிக்கனும். அதுவரைக்கும் இளங்கோவிடம் பேசுவதையும், அவனைப் பார்ப்பதையும் குறைத்துக் கொள்ள வேண்டும்..’ என தனக்குத்தானே ஒரு முடிவுக்கு வந்தவள், தன்னை இங்கு வேலைக்கு அனுப்பிய ஏஜென்ட் பெண்மணியிடம் பத்து நாட்களில் வேறு இடம் பார்த்து தருமாறு கேட்டாள்.
வீட்டிற்குள் நுழைந்தவளை அனைவரும் பிடித்துக்கொள்ள, மருத்துவமனையில் நடந்த அனைத்தையும் கூறி, இவளைப் பார்த்ததும் குழந்தையிடம் “அம்மு கொஞ்ச நேரம் இருங்க, குளிச்சிட்டு வந்து தூக்குறேன்..” என சமாதானம் செய்துவிட்டு ஓடியவள், அவசர அவசரமாக் குளித்து, அதைவிட அவசரமாக துணியை மாற்றிக்கொண்டு வந்து அதுல்யாவை வாங்கிக்கொண்டாள்.
இளாவிடமிருந்து அவள் ஒதுங்கினால் மட்டும் போதுமா? அவனும் ஒதுங்க வேண்டுமே..!