• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பார்வை - 17

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
994
508
93
Tirupur
பார்வை - 17

“என்ன? என்னாச்சு அருள்.?” என இளங்கோ பதட்டமாக கேட்க,

“அங்க அங்க முன்னாடி ஆக்சிடென்ட் ஆயிடுச்சு சார்.” என தங்களுக்கு முன்னே காட்டியவன், தன் காரை கொஞ்சம் ஓரமாக நிறுத்தி, இளங்கோ என்ன செய்கிறான் என்று கூட பார்க்காமல் இறங்கி அந்த ஆக்சிடென்ட் ஆன இடத்திற்கு ஓடினான் அருள்.

அங்கு மரங்களை ஏற்றி வந்த ஒரு லாரியும், எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் காரில் வந்தவர்களுக்கு அடி. அதிலும் டிரைவருக்கு நல்ல அடி காருமே நல்ல சேதமாக இருந்தது.

காரில் இருந்தவர்கள் நால்வருமே கல்லூரி மாணவர்கள் போல, கூட்டம் சடசடவென கூடிட ஆளாளுக்கு ஆம்புலன்ஸ் சொன்னார்களே தவிர, தங்களின் காரில் ஏற்றிச் செல்லலாம் என யாரும் நினைக்கவில்லை. இளங்கோ தங்கள் காரில் ஏற்றலாம் என நினைத்து அவர்களிடம் கூற திரும்பும்போதே, 108 ஆம்புலன்ஸ் வந்திருந்தது.

“பரவாயில்லை அருள் ஆம்புலன்ஸ் உடனே வந்துருச்சு..” என்ற இளங்கோவிடம்

“இங்க பக்கத்துலயே கவர்மெண்ட் ஹாஸ்பிடல் இருக்கு சார், அங்க எப்பவுமே ஆம்புலன்ஸ் இருக்கும்.” என்றான் அருள்.

“ஓகே ஓகே..” என அனைத்தையும் பார்த்து என்ன ஏது என்று பேசி, இவர்கள் கிளம்பு போது ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. இந்த கலவரத்தில் அவர்கள் பேச ஆரம்பித்த விஷயமே மறந்து போனது.

கம்பம் சென்று நல்ல ஹோட்டலாக தேடி இளங்கோவை அங்கே விட்டு, கிளம்பும்போது தான் அருளுக்கு அவர்கள் பேசிக் கொண்டிருந்த செய்தியே ஞாபகம் வந்தது.

“சார் நீங்க ஏதோ என்கிட்ட பேசிட்டு இருந்தீங்க..” என யோசனையாக அருள் கேட்க

“ஹான் ஆமா அருள். நானே இத பத்தி பேசணும்னு நினைச்சேன். இப்போ அதுக்கெல்லாம் டைம் இல்ல எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுங்க. நாளைக்கு வரும்போது பரணியை மட்டும் கூப்பிட்டு வாங்க, நான் இங்க வந்தது பரணியை பார்க்கத்தான். நான் வந்தது எதுவுமே பரணிக்கும் தெரிய வேண்டாம். சத்யாவுக்கும் தெரிய வேண்டாம், நாம இதைப்பத்தி நாளைக்கு டீடைலா பேசலாம்.” என்றதும் அருளின் முகம் யோசனையானது.

அதை கவனித்த இளங்கோ “ரொம்ப எல்லாம் யோசிக்காதீங்க அருள், நான் பேச வந்ததே உங்ககிட்டதான். என்னோட இந்த ப்ரோக்ராமே உங்களையும் பரணியையும் மீட் பண்றதுக்குதான். சோ டென்ஷன் ஏத்திக்காம கிளம்புங்க அருள். நாளைக்கு வரும்போது மறக்காம பரணியை கூப்பிட்டு வாங்க அவனுக்கு சர்ப்ரைஸ்.” என இளங்கோ புன்னகைக்க,

“ஓ அப்போ அன்னைக்கு பரணி பேசினது உங்ககிட்டதானா.?” என கலக்கமாக கேட்டவன், “சாரி சார் சின்னபையன் ஏதாவது தப்பா பேசிட்டானா.?” என முழு வருத்தத்துடன் அருள் கேட்கவும்,

“ஏய் என்னப்பா..? அப்படி பேசினா நான் எதுக்கு இங்க வர போறேன், சத்யாகிட்ட சொன்னாலே போதுமே.! இது வேற.. நாம நாளைக்கு பேசலாம் அருள். கண்டிப்பா நாளைக்கு பேசலாம். இப்ப நான் ரொம்ப டயர்டா இருக்கேன். நீங்களும் வீட்டுக்கு போகணும், உங்களுக்காக எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க, நீங்க கிளம்புங்க கார் கூட எடுத்துக்கோங்க, வரும்போது கார்லயே வந்துடுங்க..” என அருள் பேச இடம் கொடுக்காமல் இளங்கோவை பேசி அருளை அனுப்பி வைத்திருந்தான்.

இளங்கோவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அருள் கிளம்பி இருந்தாலும், அவன் மனதெல்லாம் மிகுந்த குழப்பம் சூழ்ந்திருந்தது.

இவர் பேசுவதை வைத்து பார்க்கும் போது சத்யாவின் முதலாளி என்று வரை தெரிகிறது. ஆனால் அவர் ஏன் இங்கு வரை வர வேண்டும். ஏன் பரணியை பார்க்க வேண்டும்? ஏன் என்னிடம் பேச வேண்டும் என்று சொல்ல வேண்டும்? இப்படி பல கேள்விகள் அவன் மூளையை குடைந்து கொண்டே இருந்தது.

எப்படி யோசித்தாலும் விடை இப்போது கிடைக்காது என்று அவனுக்கு புரிந்தது.

‘அந்த சார் எதுக்கு வந்து இருக்காரு சத்யாகிட்ட எதுவும் பிரச்சனையா? அதை பாப்பா கிட்ட சொல்ல முடியாம நம்ம கிட்ட சொல்ல வந்திருக்காரா? இல்லையே இந்த மாதிரி பணக்காரங்க வேலை செய்றவங்ககிட்ட பிரச்சனை இருந்தா எதுவும் சொல்லாம உடனே நிறுத்திடுவாங்களே! இது வேற ஏதோ பிரச்சனை என்னன்னு தெரியலையே.’ இப்படி பல யோசனைகளுடன் வீடு வந்தான் அருள்.

அவன் வரவுக்காகவே வீடே விழித்திருந்தது.

அனைவரும் அவனுக்காக காத்திருப்பதை பார்த்தவன் தன் எண்ணங்களை எல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு “ஏய் கண்ணுங்களா, இன்னும் தூங்கலையா நீங்க? சாரி குட்டிங்களா, ரொம்ப சாரி வர வழியில ஒரு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு, அதனால வர்றதுக்கு லேட் ஆயிடுச்சு.. வாங்க வாங்க முதல்ல சாப்பிடுங்க. சாப்பிட்டு தூங்கலாம். என் செல்லங்களை இவ்வளவு நேரம் முழிக்க வச்சுட்டேனே..!” என உற்சாகமாக தன்னை காட்டிக்கொண்டு, தான் கொண்டு வந்திருந்த பையை தன் அம்மாவிடம் கொடுத்தான் அருள்.

“முதல்ல எல்லாரும் சாப்பிடுங்கம்மா. நான் சாப்பிட்டுட்டேன். எனக்காக எதையும் எடுத்து வைக்காதீங்கம்மா. நான் குளிச்சிட்டு வந்துடுறேன்..” குளியறை நோக்கி வீட்டின் பின்புறமாக சென்றான்.

காமாட்சி எடுத்து அனைவருக்கும் பரிமாற, பல மாதங்களுக்குப் பிறகு அந்த இரவு சாப்பாடு அந்த குடும்பத்திற்கு அவ்வளவு இனிமையை தந்தது.

அருள் குளித்துவிட்டு வந்து பிள்ளைகள் இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டு இருவருக்கும் சிக்கனை பிரித்துக் கொடுத்தான்.

“அப்பா நாளைக்கு வயக்காட்டுக்கு என்னால வர முடியாது. உங்களால பாத்துக்க முடியுமா? இல்ல ஆள் யாராவது வர சொல்லவா.? இன்னைக்கு போன சவாரி நாளைக்கும் இருக்கு. அவங்க ஊருக்கு போற வரைக்கும் நான் கூட இருக்கணும். நாளைக்கழிச்சு சாயங்காலம் தான் போவாங்க. அதுவரைக்கும் நீங்கதான் பாக்குற மாதிரி இருக்கும்.” என்றான் தந்தையிடம்.

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல தம்பி, அம்மா கூட வருவாதாணே, நான் பாத்துக்குறேன். நீ கவனமா போயிட்டு வா. நாளைக்கு அண்ணியும் தம்பியும் அவங்க ஊருக்கு போறாங்க. அண்ணியோட அம்மாவுக்கு கொஞ்சம் மேலுக்கு சரியில்லையாம், உன் அண்ணன் போக சொல்லி இருக்கான்.” என்றார் அருளின் தந்தை.

“அப்படியா சரிப்பா, அப்போ பரணியை நான் கூப்பிட்டு போறேன், அவனும் எங்கேயும் போகாம வீட்டிலேயே இருக்கான். நாளைக்கு நான் போற சவாரில, அவங்களே சொன்னாங்க உங்க வீட்ல குழந்தைங்க இருந்தா கூப்பிட்டு வாங்கன்னு. நான் கூடதானே இருப்பேன் பார்த்துக்கிறேன்.” என்றான் வழி கிடைத்த மகிழ்வில்.

சின்ன மகனின் பேச்சில் இப்போதுதான் காமாட்சிக்கு மூச்சே வந்தது.

பெரிய மருமகள் ஊருக்கு போகிறாள், அதிலும் குழந்தையை அழைத்துக் கொண்டு போகிறாள் என்றதிலிருந்தே பரணியின் முகம் கூம்பிவிட்டது.

பெரிய மகன் பரணியின் மேல் காட்டும் அக்கறையை போல, மருமகள் காட்டுவதில்லை. அதை எதிர்பார்க்கவும் முடியாது. பெரியவர்களுக்கு அது புரியத்தான் செய்கிறது. ஆனால் சிறு குழந்தைக்கு புரிய வேண்டுமே.

மருமகள் ஒரு பேச்சுக்குகூட “நீயும் வா பரணி..” என்று அழைக்கவும் இல்லை. அதுவே காமாட்சிக்கு மிகுந்த வருத்தம்தான்.

அவர்கள் கிளம்பியதும் பரணியை எப்படி சமாதானம் செய்வது என்ற யோசனைதான் அவருக்கு. ஒரு வழியாக அந்தப் பிரச்சனையை சின்னமகன் தீர்த்து வைத்து விட்டான் என்பதில் நிம்மதி பெருமூச்சு வந்தது அவருக்கு.

சாப்பிட்ட அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, மகனைத் தேடிக் கொண்டு காமாட்சி வெளியில் வர, மிகுந்த யோசனையுடன் வராண்டாவில் நடந்து கொண்டிருந்தான் அருள்.

“என்ன தம்பி ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு.?” என்றார் வாஞ்சையாக.

“ஒன்னும் இல்லமா. என்னமோ இன்னைக்கு முழுக்க எனக்கு பாப்பா ஞாபகமாவே இருக்கு. அதுகிட்ட பேச நேரமே இல்லை. நீங்க சாயங்காலம் பேசினீங்களா எப்படி இருக்கு? தம்பி பேசினானா?” என வரிசையாக கேள்விகளை அடுக்க,

“அதெல்லாம் நேரம் தவறாமல் கரெக்டா பேசிடும் தம்பி, அவங்க வீட்ல ஒருத்தருக்கு உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரில இருக்காங்க. அதனால வேலை அதிகம்னு சொல்லுச்சு. உனக்கு மனசு கஷ்டமா இருந்தா நாளைக்கு கூப்பிட்டு பேசேன் தம்பி..” என்ற தாயிடம்,

“சரிமா நான் நாளைக்கு பேசுறேன், அப்பாவை காட்டுல ரொம்பவும் வேலை செய்ய விடாதீங்க. அவருக்கு முடியலன்னா விட்டுட சொல்லுங்க, நான் வந்து செஞ்சுகிறேன். ரெண்டு நாள்தானே பாத்துக்கலாம். நீங்க போய் படுங்க நேரம் ஆயிடுச்சு.” என்று அவரை அனுப்பியவன், தன் அறைக்கு சென்றான்.

அந்த சிறிய அறையில் கிடந்த கட்டிலில் சுவரை ஒட்டி படுத்திருந்தான் பரணி.

ஏனோ பரணியை பார்க்கும் போது சொல்ல முடியாத வேதனை ஒன்று அருளின் நெஞ்சை போட்டு அடைத்தது.

‘எப்படி இருந்திருக்க வேண்டியவன், அவன் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது, கடைசி வரைக்கும் இப்படித்தான் இந்த சின்ன குருத்தின் வாழ்க்கை அமைந்துவிடுமா.?’ என மனதுக்குள் தோன்றிய வேதனையுடன் அவனுக்கு அருகில் படுத்து, பரணியின் காலை தூக்கி தன்மேல் போட்டுக் கொண்டான்.

‘மாமா இளா சார் நாளைக்கு வரேன்னு சொன்னார், ஆனா இப்ப வரைக்கும் ஒரு போன் கூட எனக்கு பண்ணல, அப்போ என்கிட்ட சும்மா சொன்னாரா?’ என தூக்கத்தில் உளற ஆரம்பித்தான் பரணி.

இங்கு அறைக்கு வந்த இளங்கோவின் உடலும் மனமு ஓய்வுக்கு கெஞ்சியது. அதனால் கசகசவென இருந்த ஆடைகளை கலைந்து, வென்னீரில் ஒரு குளியலைப் போட்டவன், இடையில் கட்டிய துண்டோடு வந்து அப்படியே கட்டிலில் விழுந்தான்.

அவன் விழுந்ததும் அவன் உடல் மெல்ல தளர்ந்தது. ‘ஷப்பா’ என்றபடி கண்ணை மூடி திறந்தவன் பக்கத்தில் கிடந்த மொபைலை எடுத்து நேரம் பார்த்தான். நேரம் பத்தைக் கடந்திருக்க, மாயாவிற்கு அழைத்து மாதவனைப் பற்றிக் கேட்டு, அவளையும் விசாரித்து வைத்தான்.

இப்போது சத்யாவிற்கு அழைக்கலாம் என்று யோசிக்கும்போது, ‘ஏன் கூப்பிட்டன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி கேட்பா, என்ன பதில் சொல்லுவ’ என மனசாட்சி கேட்க, ‘ஹ்ம்ம்ம் காரணமா இல்ல, என் பொண்ணு இருக்க, என் அம்மா இருக்காங்க, என் மாமா இருக்கார், இவங்களைப்பத்தி கேட்க கூப்பிட்டேன்னு சொல்லுவேன்.’ என சிரித்துக்கொண்டே தன் மனசாட்சிக்கு பதில் சொல்லி அடக்கிவிட்டு, சத்யாவிற்கு அழைத்தான்.

காரணங்கள் வரிசையாக வைத்தாலும் அதை நம்பும் அளவிற்கு சத்யா என்ன முட்டாளா.?

அவனின் முதல் ரிங்கிலேயே போனை எடுத்தவள், “என்ன.?” என குரலை தழைத்து மெதுவாக என்றாலும் கோபமாக கேட்க,

“ம்ம் என்னாச்சுங்க சத்யா? நான் இப்போதான் ரூமுக்கு வந்தேன். பாப்பா அப்புறம் அங்க எல்லாம் ஓகேதானே..” என அவனும் அவளைப்போலவே மெதுவாகவே கேட்க,

தன் காதோரத்தில் ஒலித்த இளங்கோவின் ஹஸ்கி வாய்ஸ் அவளுக்கு என்னமோ செய்தது. சிதைந்து கிடந்த அவள் உணர்வுகள் மொத்தமும் உயிர் பெற்று வந்தது போல, ஏதோ ஒரு பெயர் தெரியாத உருவம் அவளை மொத்தமாய் தனக்குள் சுருட்டிக் கொண்டது போல, பிரம்மை. அதை உணர்ந்த நேரம் தன் கையில் இருந்த போன் அவளிடமிருந்து நழுவி கீழே விழுந்தது கூடத் தெரியாமல் அதிர்ச்சியில் நின்றிருந்தாள் சத்யா.
 

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
59
10
8
Ullagaram
பார்த்த பார்வையில்..!
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 17)


இந்த சத்யா ஏன் இப்படி இருக்கிறா...? ஏதோ செய்யக் கூடாத தப்பை செஞ்ச மாதிரி ஏன் ஃபீல் பண்ணுறா...?
இதுவே நல்லவனா, நேசத்துக்குரியவனா இருந்திருந்தா.... அவன் செத்தப்பிறகும் மனசுல வைச்சு
கொண்டாடி இருக்கலாம். அவனுக்காக வாழ்க்கை முழுக்க சிலுவையை சுமந்திருக்கலாம். ஆனா, இவளோட புருசன் தூக்கிப்போட்டு மிதிச்சவன் தானே..? புள்ளையையும் பொண்டாட்டியையும் தூக்கி போட்டுப் போனவன் தானே..?
அப்புறம் ஏன் இப்படி பயந்து, பயந்து உள்ளத்து உணர்வுகளையெல்லாம் மறைச்சு, புதைச்சு வாழணும்.
பள்ளமா இருக்கிற இடத்தை நோக்கித்தானே தண்ணீர் ஓடும். அது மாதிரி தான் இதுவும்... நமக்கு கிடைக்காத அன்பு, அக்கறை, நேசம், பாசம் இதெல்லாம் எங்க கிடைக்குதோ
அதைத்தேடித்தானே மனசும் உடலும் ஓடும். இஷ்டமிருந்தா ஏத்துக்கிட்டு வாழ வேண்டியது தான். இல்லையா அந்த வீணாப் போனவனையே நினைச்சுக்கிட்டு, பெத்த புள்ளையோடத் தேவைகளையும் புரிஞ்சுக்காம அவனுக்கு மனசுக்குள்ள சிலை வை ச் சு கும்பிட்டிக்கிட்டு
கடைசி வரைக்கும் இப்படியே வாழ்ந்து முடிக்கட்டும்.
அவ்வளவு தான், எதுவானாலும் சாய்ஸ் அவளோடது தானே..?
தீதும், நன்றும் பிறர் தர வாரா..!


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
  • Like
Reactions: Sailajaa sundhar

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
80
62
18
Dindigul
பார்த்த பார்வையில்..!
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 17)


இந்த சத்யா ஏன் இப்படி இருக்கிறா...? ஏதோ செய்யக் கூடாத தப்பை செஞ்ச மாதிரி ஏன் ஃபீல் பண்ணுறா...?
இதுவே நல்லவனா, நேசத்துக்குரியவனா இருந்திருந்தா.... அவன் செத்தப்பிறகும் மனசுல வைச்சு
கொண்டாடி இருக்கலாம். அவனுக்காக வாழ்க்கை முழுக்க சிலுவையை சுமந்திருக்கலாம். ஆனா, இவளோட புருசன் தூக்கிப்போட்டு மிதிச்சவன் தானே..? புள்ளையையும் பொண்டாட்டியையும் தூக்கி போட்டுப் போனவன் தானே..?
அப்புறம் ஏன் இப்படி பயந்து, பயந்து உள்ளத்து உணர்வுகளையெல்லாம் மறைச்சு, புதைச்சு வாழணும்.
பள்ளமா இருக்கிற இடத்தை நோக்கித்தானே தண்ணீர் ஓடும். அது மாதிரி தான் இதுவும்... நமக்கு கிடைக்காத அன்பு, அக்கறை, நேசம், பாசம் இதெல்லாம் எங்க கிடைக்குதோ
அதைத்தேடித்தானே மனசும் உடலும் ஓடும். இஷ்டமிருந்தா ஏத்துக்கிட்டு வாழ வேண்டியது தான். இல்லையா அந்த வீணாப் போனவனையே நினைச்சுக்கிட்டு, பெத்த புள்ளையோடத் தேவைகளையும் புரிஞ்சுக்காம அவனுக்கு மனசுக்குள்ள சிலை வை ச் சு கும்பிட்டிக்கிட்டு
கடைசி வரைக்கும் இப்படியே வாழ்ந்து முடிக்கட்டும்.
அவ்வளவு தான், எதுவானாலும் சாய்ஸ் அவளோடது தானே..?
தீதும், நன்றும் பிறர் தர வாரா..!


😀😀😀
CRVS (or) CRVS 2797
Mikavum sariya sonneenka sis..
 

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
80
62
18
Dindigul
சத்யா நீ ஃபீல் பன்றது ஒரு வேஸ்ட் ஃபெல்லோக்காக, அது உனக்கு புரியுதா இல்லையா.?