பார்வை - 20
எசகு பிசகாக படுத்திருந்ததோ என்னமோ அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது அருளுக்கு. உடலை நெளித்தவனுக்கு அந்த சோஃபா வசதியில்லாமல் போக பொத்தென்று கீழே விழுந்தான், அதில் அவன் மொத்த போதையும் தெளிந்திருந்தது.
‘உஷ்ஷ்’ என அடிபட்ட இடத்தை தேய்த்துக்கொண்டே அந்த அறையை சுற்றிப் பார்க்க, அவன் இருந்த இடமும், கோலமும் நடந்ததை சொல்ல, ‘அச்சோ’ என தலையில் தட்டிக்கொண்டான்.
‘மூனு கட்டிங்க் அடிச்சா கூட ஸ்டெடியா இருக்கேன், ஒத்த பீர்ல மட்டையாகிடுறேனே இது என்ன வியாதியா இருக்கும்’ என புலம்பியவன், இப்போ எப்படி இளங்கோவை பார்ப்பது யோசித்தபடியே அமர்ந்திருந்தான்.
சில நிமிடங்களில் அவனது போன் அலாரம் அடிக்க, எங்கே இளங்கோவும் பரணியும் எழுந்து கொள்வார்களோ என்ற பயத்தில் அவசரமாக அதைத் தேடி அனைத்துவிட்டு ஆசுவாசமானான்.
இப்படியே உட்கார்ந்திருந்தா வேலைக்கு ஆகாது என உணர்ந்தவன், சத்தம் செய்யாமல் குளித்து கிளம்பி, வெளியில் வந்தான்.
தலைவலி வேறு பின்னியெடுக்க டீ குடிக்கலாம் என்று யோசித்தவன், ரிசப்சனுக்கு அழைத்து சொல்லி, அவர்கள் வந்து ஹாலிங்க் பெல் அடித்து, இவர்கள் எழுந்து விடுவார்களோ என்று நினைத்தவன், அந்த காட்டேஜின் ரெஸ்டாரன்டுக்கே செல்லலாம் என கதவை பூட்டிக்கொண்டு வெளியில் வந்தான்.
அருளின் எண்ணமெல்லாம் இளங்கோ நேற்று பேசியதிலேயே இருந்தது. இளங்கோ யார் என்று தெரியும் முன்னமே அவன் மேல் நல்ல எண்ணம்தான். இப்போது அவன்தான் சத்யாவின் முதலாளி எனும்போது மரியாதையும் சேர்ந்து வந்திருந்தது.
அருளுக்கு இளங்கோ கேட்டதை செய்து கொடுக்க வேண்டும் என்ற யோசனை வந்திருந்தது. அது சத்யாவிற்காக இல்லை. பரணிக்காக! இன்று இல்லாவிட்டாலும், பின்னாளில் நிச்சயம் ஒருநாள் தந்தைக்காக பரணி ஏங்குவான் என்று உணர்ந்தான்.
அதனால் சத்யா என்னதான் பிரச்சினை செய்தாலும், அவளுக்கு இளங்கோவுடனான திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று முடிவே செய்துவிட்டான்.
அதற்கு முதல் அடியாக தன் மனம் கவர்ந்த மலர்க்கொடிக்கு பல வருடங்களுக்குப் பிறகு மெசேஜ் செய்தான்.
‘உன்னிடம் மிக முக்கியமாக பேசவேண்டும், நாளை மாலை கோவிலுக்கு வந்துவிடு’ என அனுப்பியிருந்தான்.
ஆர்டர் செய்த டீயை குடித்தவனுக்கு இப்போது மூளை வேகமாக வேலை செய்தது. மணியைப் பார்த்தான் அதிகாலை ஐந்தரை என காட்ட, தமிழ் இப்போது விழித்துதான் இருப்பான் என நினைத்து அவனுக்கு அழைத்தான்.
“என்ன அருள் என்னடா? என்ன இன்னேரத்துக்கு பன்ற? அப்பாவுக்கு ஒன்னுமில்லையே?” என பதட்டமாக கேட்க,
“அட ஏண்டா நீ வேற? அதெல்லாம் ஒன்னுமில்ல, எனக்கு உங்கிட்ட பேசனும். ரொம்ப முக்கியமான விசயம்.. அதான் கூப்பிட்டேன்.. இப்போ பேச முடியுமா.?” என அருள் கேட்க,
“இப்போதாண்டா வண்டியை நிறுத்தினேன்… இனி எட்டு மணிக்குதான் எடுப்பேன். சொல்லு என்ன பிரச்சினை. மலர் வீட்டுல பிரச்சினையா.?” என்றான் ஆசுவாசமான குரலில்.
“அதுவும் தான். ஆனா அதுமட்டும் பிரச்சினை இல்லை.” என்று நேத்து நடந்த அனைத்தையும் கூற, தமிழ் செல்வனுக்கு என்ன பதில் கொடுப்பது என்றே தெரியவில்லை.
“பாப்பா என்ன சொல்லுமோ தெரியலையேடா.? பாப்பாவுக்கு விருப்பம் இல்லைன்னா எப்படி.?” என தமிழ் தயங்க,
“இங்க பாரு தமிழு… நீ பாப்பாவுக்காக யோசிச்சா நாம எப்பவும் எதுவும் பண்ண முடியாது. நீ பரணியை மனசுல வச்சு யோசி போதும்.” என எரிச்சலாக சொல்ல,
“டேய் டேய் ஏண்டா..? எனக்கு மட்டும் ஆசை இருக்காதா.? ஆனா மறுபடியும் ஒரு பிரச்சினைன்னா அதை தாங்குற சக்தி நம்ம யாருக்குமே இல்லடா..” என தமிழ் வருத்தமாக கூற,
“தமிழ்.. நான் பார்த்த வரைக்கும் ரொம்ப நல்ல மனுசனாதான் இருக்கார். அம்மாவும் கூட அன்னைக்கு போய்ட்டு வந்து நல்ல மாதிரிதான் சொன்னாங்க. பரணி முகத்துல அவ்வளவு சந்தோசம்டா.. அதை நீயோ நானோ கொடுக்கல. அவர்தான் கொடுத்துருக்கார். என்ன ஆனாலும் இந்த கல்யாணத்தை முடிச்சிடலாம்னுதான் எனக்கு தோனுது. நீ அண்ணிக்கிட்ட இதைப்பத்தி பேச வேண்டாம். அப்பா காதுல மட்டும் போடு போதும்…” எனவும்,
“சரிடா.. அப்பா காட்டுக்கு போற நேரம் பார்த்து பேசுறேன். நீ சத்யாவைப்பத்தி அவருக்கு எல்லாமே சொல்லிடு. நாளைக்கு இதனால ஒரு பிரச்சினை வந்துடக்கூடாது..” என்ற தமிழும் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.
“சரி தமிழ்.. உடம்ப பார்த்துக்கோடா..” என்று வைத்தவன் தங்கள் காட்டேஜுக்கு வந்தான்.
இன்னுமே இளங்கோ எழுந்து கொள்ளவில்லை. அங்கிருந்த சோபாவில் அமர்ந்தபடியே போனை பார்க்க ஆரம்பித்தான். அப்போது மலர்க்கொடியிடமிருந்து மெசேஜ் வந்திருக்க, வேகமாய் திறந்து பார்த்தவன் பல்லைக் கடித்தான்.
வரிசையாக செருப்பு இமோஜி வந்து விழுந்து கொண்டிருந்தது.
‘கொழுப்பு.. கொழுப்பு.. கொஞ்சமாவது பயம் இருக்கா பாரு’ என நினைத்தாலும், அவள் முகம் இப்போது எப்படியிருக்கும் என்று நினைத்து சிரிப்பு வந்தது.
கொதிக்கும் எண்ணெயில் கடுகை அள்ளிப்போட்டால் எப்படி பொரியுமோ அப்படித்தான் இருக்கும் என நினைத்து நினைத்து சிரிப்பு வந்து கொண்டே இருந்தது.
பல நாட்களுக்குப் பிறகு, இல்லை பல வருடங்களுக்குப் பிறகான மனம் விட்டு சிரிக்கும் சிரிப்பு.
“ஸாரிடி குட்டி.. மாமா மேல என்ன கோபமா இருந்தாலும், நாளைக்கு நீ நேர்ல வந்து காட்டிக்கோ, இல்ல கட்டிக்கோ.. ஆனா வந்துடுடி செல்லம்..” என தமிழில் மெசேஜ் அனுப்ப, அதை உடனே பார்த்ததோடு சரி. அடுத்து மலர் எதுவும் ரிப்ளை செய்யவில்லை.
தானாக ஒரு பெருமூச்சு வந்தது அருளுக்கு. தன்னவளை அதிகமாக நோகடித்து விட்டோம் என்று அவனுக்கு புரியாமல் இல்லை. ஆனால் அவன் சூழலும் அப்படியாகத்தான் இருந்தது. இனி அவளை எப்படி சமாதானம் செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
அருளின் சிரிப்பு சத்ததிலேயே இளங்கோவிற்கு முழிப்பு வந்துவிட்டது. ஆனால் மெல்ல அசைந்தாலும் பரணி எழுந்துகொள்வான் என்பதால் மெதுவாக அவனைத் தன்னிடமிருந்து பிரித்து நன்றாக படுக்க வைத்துவிட்டு வெளியில் வந்தான்.
இளங்கோ வெளியில் வரும் போது ஏதோ பெரும் யோசனையில் இருப்பது போல் இருந்தது அருளின் முகம்.
‘இப்போதான கெக்கபிக்கன்னு சிரிச்சிட்டு இருந்தான், அதுக்குள்ள என்ன சோக படம் ஓட்டிட்டு இருக்கான். குடும்பமே இப்படித்தானோ’ என யோசித்தபடியே அவனுக்கு எதிரில் அமர்ந்தான்.
அமரும் உணர்வு கேட்டு நிமிர்ந்து பார்த்த அருள், “என்ன சீக்கிரம் எழுந்துட்டீங்க..” என்றவாறே நன்றாக அமர,
“நீங்கதான்.. அருந்ததி உன்னை விடமாட்டேன்டி…ண்னு சோனு சூட் சொல்றமாதிரி கர்ண கொடுரமா சிரிச்சீங்களே, அந்த சத்தத்துலதான் விழிச்சேன்..” என படு சீரியசாக சொல்ல, நிஜமாகவே அப்படித்தான் சிரிச்சோமோ என அருளுக்கே சந்தேகம் வந்துவிட்டது இளங்கோவின் இந்த பாவனையில்.
அவன் திருதிருவென விழிக்க, இப்போது இளங்கோ விழுந்து விழுந்து சிரித்தான்.
“என்ன மேன் நீ..? எல்லாத்துக்கும் ரியாக்ட் பண்ணிட்டு இருக்க.” என்றவன், “எனக்கு காபி உங்களுக்கு என்ன வேணும்..” என இன்டர்காமை எடுக்க,
“நான் இப்போதான் குடிச்சேன்.” என வாய்க்குள் முணுமுணுக்க
“அதனாலென்ன எனக்கு கம்பெனி கொடுப்பா..” என அருளுக்கும் சேர்த்து காபி சொல்லிவிட்டு, “என்ன ஓடுது உங்க மண்டைல.. நான் பேசினது நிஜமா இல்லையான்னு யோசிக்கிறீங்களா..?” என்றான் இளங்கோ.
“அதுவும்தான்… ஆனா எப்படி? உங்க வசதி வாய்ப்பே வேற, நாங்க உங்க வீட்டு முன்னாடி நிற்க கூட தகுதி இல்லாதவங்க. எனக்கு ரொம்ப பயமாவும், குழப்பமாவும் இருக்கு..” என்றான் தன் எண்ணத்தை வெளிக்காட்டி.
“அருள் உங்க பயத்தை நான் தப்புன்னு சொல்லவே மாட்டேன். ஏற்கனவே ஒரு பெரிய அடி வாங்கிருக்கீங்க. அதனால அடுத்து என்ன செஞ்சாலும் அந்த அடியோட வலி உங்களை யோசிக்க வைக்கும். எனக்கு புரியுது. அதனால நீங்க கில்டியா இருக்க வேண்டாம். ஃபீல் ஃப்ரீ.” என சமாதானமாக பேச
“பாப்பாவுக்கு ஒரு நல்லது நடக்குதுன்னா எல்லாருக்கும் சந்தோசம்தான். ஆனா இதெல்லாம் கண்டிப்பா யோசிப்பாங்க..” என்றான் அருளும்.
“வசதியெல்லாம் ஒரு பொருட்டே இல்ல அருள். உங்க பாப்பாக்கிட்டயே கேளுங்க. நாங்க பணத்துக்கோ, வசதி வாய்ப்புக்கோ முக்கியத்துவம் கொடுக்குறவங்களான்னு. இதெல்லாம் பழகிப் பார்க்காம, விசாரிக்காம ஒரு முடிவுக்கு வரமுடியாது. வரவும் கூடாது..” என இளங்கோ பேசிக் கொண்டிருக்கும் போதே ஹாலிங்க் பெல் அதிர, அருள் சென்று வாங்கி வந்தான்.
காஃபி அருந்தி முடிக்கும் வரை இருவருக்குள்ளும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை.
சில நிமிடங்களில் “பாப்பா பத்தி உங்களுக்கு முழுசா தெரியுமா.?” என்ற அருளிடம் ‘இல்லை’ என்பது போல் தலையை மட்டும் ஆட்டினான் இளங்கோ.
“ம்ம்ம்ம்” என பெருமூச்சு விட்டவன், “பாப்பாவுக்கு நாங்கதான் உலகம். நாங்க சொல்றதை ஏன் எதுக்குனு கேள்வியே கேட்காம செய்யும். கல்யாணமும் அப்படித்தான் பண்ணிக்கிச்சு..” என்றவனுக்கு குரல் அடைத்தது.
அருளைத் தடுக்க கூட மனம் வரவில்லை இளங்கோவிற்கு. அவன் மனதில் இருப்பதை கொட்டட்டும். அதன் பிறகாவது அருளின் மன அழுத்தம் குறையும் என்று நினைத்து அமைதியாக வேடிக்கை பார்த்தான்.
“ஒரு பழமொழி சொல்வாங்க தெரியுமா.? கிளியை வளர்த்து குரங்கு கைல கொடுத்த மாதிரின்னு, எங்க வீட்டுலயும் அதுதான் நடந்தது. கல்யாண பேச்சை ஆரம்பிச்சதும் தெரியல, கல்யாணம் முடிஞ்சதும் தெரியல. எல்லாமே அவ்வளவு வேகமா நடந்தது. அவங்க அம்மா உடம்பு சரியில்லாம இருக்குறாங்கன்னு சீக்கிரமே கல்யாணம் வச்சாங்க..”
“எங்களுக்கும் அது தப்பா தெரியல, சாகப்போற பொம்பள பையனோட கல்யாணத்தை பார்த்துட்டு கண்ண மூடனும்னு நினைக்குது போலன்னு நினைச்சோம். ஆனா கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் தெரிஞ்சது அந்த பொம்பளைக்கு ஆயா வேலை பார்க்க ஆளில்லன்னு, எங்க பாப்பாவை கொண்டு போயிருக்காங்க..” என்றவன் முகத்தை அழுந்த துடைத்தான்.
நந்தகுமார்.. அதுதான் அந்தாளோட பேர். நல்ல வேலை. நல்ல சம்பளம். ரெண்டு அக்கா.. ரெண்டு பேருமே உள்ளூர்லதான் இருக்காங்க. உள்ளூர்லயே இருந்தாலும், அந்த வீட்டுலயே நாள் முழுக்க இருந்தாலும், அவங்க அம்மாவை ரெண்டு பேரும் பார்த்துக்கிறது இல்லை. ஒரு ஆள் வச்சிதான் பார்த்துக்கிட்டாங்க போல, அந்தம்மாவுக்கு இவங்க பேச்சு வார்த்த எதுவும் பிடிக்காம போக, வேலையை விட்டு நின்னுருக்கு. அதுக்கப்புறம் ரெண்டு பொண்ணுங்களும் வீட்டுக்கு வந்தா நாமதான் பார்க்கனுமோன்னு பயந்து வரதே இல்லையாம். அப்பாவும் மகனும் பேசி கல்யாணம் செய்யலாம்னு முடிவு பண்ணி பொண்ணு பார்த்திருக்காங்க. புரோக்கர் மூலமா வந்த சம்மந்தம் தான். நாங்களும் அதிகமா விசாரிக்காம விட்டுட்டோம். எங்க வீட்டுல முதல் விசேஷம் ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செஞ்சோம். நாங்க என்ன செஞ்சாலும் அவங்க எல்லாத்துக்கும் சரி சரின்னு சொல்லும்போதே யோசிச்சிருக்கனும். விட்டுட்டோம். கல்யாணம் முடிஞ்சி விருந்து அது இதுன்னு எல்லாமே நல்லாதான் போச்சு. ஒரு மாசம் கழிச்சு நாங்க பார்க்க போறோம்.. அங்க எங்க பாப்பா இல்லை. பாப்பா மாதிரியே ஒரு பொண்ணு. அப்படித்தான் இருந்தா. ஒரு நல்லத் துணி கூட போடாம, தலைக்கு எண்ணெய் வைக்காம, பரட்டத் தலையோட, தொழுவத்துல சாணி அள்ளிட்டு இருந்தா, அதைப் பார்த்து எங்கம்மா மயங்கியே விழுந்துட்டாங்க. நான் என்னாச்சு என்னாச்சு ன்னு அழறேன், ஒன்னுமே சொல்லல. சிரிச்சிட்டே இருந்தா.”
“அம்மாவுக்கு மனசே கேட்கல. பத்து நாள் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு கேட்டதுக்கு, அவனோட அக்காவுங்க ரெண்டு பேரும் அவ்வளவு பிரச்சினை செஞ்சாங்க. நிஜமாவே எங்களுக்கு ஒன்னுமே புரியல. ஒரு மாதிரி அதிர்ச்சியில இருந்தோம். இது எதுக்குமே சத்யாக்கிட்ட இருந்து எந்த எதிர்ப்பும் மறுப்பும் வரல.. முதல் தடவையா பாப்பா வாழ்க்கையை நினைச்சு பயம் வந்தது. அப்புறம் அக்கம்பக்கம் விசாரிக்கும் போதுதான் எங்களுக்கு எல்லாமே தெரிஞ்சது.”
“அந்த பொம்பள இருந்த வரைக்கும் எந்த நல்லது கெட்டதுக்கும் பாப்பாவை எங்கேயும் அனுப்ப மாட்டாங்க, நாங்கதான் போய் பார்த்துட்டு வருவோம். அப்பவும் அவ முகம் தெளிவில்லாம இருக்கவும், என்னாச்சுன்னு கேட்டா சொல்லவே மாட்டா. நாங்களாவது நிம்மதியா இருக்கட்டும்னு நினைச்சிருப்பா போல..” என்றவனுக்கு அந்த நாள் ஞாபகம் வந்தது.
அப்போது சத்யா 5 மாதம் கர்ப்பமாக இருந்தாள். லாரிக்கு சென்று இருந்த தமிழ், விடுமுறை என வீடு வந்திருக்க, தங்கைக்கு வாங்கி இருந்த பொருட்களோடு தன் அம்மாவையும் அழைத்துக் கொண்டு அவளின் வீட்டிற்கு வந்திருந்தான்.
அவர்கள் உள்ளே நுழையும் நேரம் சத்யாவின் மாமனார் அவளின் கையைப் பிடித்து ஏதோ கோபமாக பேசிக்கொண்டிருக்க, சத்யாவின் முகமோ கோபத்திலும் அறுவெறுப்பிலும் சிவந்து, விழிகள் உக்கிரமாக மாறிக்கொண்டிருந்தது.