• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாலைவன ரோஜா 1

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
பாலைவன ரோஜா 1


பொன் அந்தி மாலைப் பொழுதில் இருளும் பகலும் இணையும் நேரமதிலே அந்த சபா நிரம்பி வழிந்தது.. எல்லோரின் கண்களும் நாலாபுறமும் அலைந்து திரிந்தது. ஆண்களும் பெண்களும் இளம் தலைமுறையினரும் என அனைவரும் யாருக்கோ காத்திருந்தனர்.

சற்று நேரத்தில் திடிரென அரங்கமே அதிரும் அளவுக்கு பலத்த கரவோஷம்.. ஆம் அது வேறு யாருமல்ல.. அவள் தான் ஆரிணி.. சாண்டல் கலர் காட்டன் புடவையில் நீண்ட கூந்தலை தளர பிண்ணி அதில் இருபக்கமும் மல்லிகை சரம் தொங்க அஞ்சனம் தீட்டிய விழிகள் அங்குமிங்கும் அலைபாய எத்தனை அழகாய் தன்னை காட்டி கொண்டாலும் அவளின் கண்ணோரத்தில் தெரியும் சோகம் அவளை தவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை தான்.


ஆரிணி புகழ்பெற்ற பாடகி என்று சொல்ல முடியாது.. ஆனால் யாருக்கும் தெரியாதவள் என்றும் சொல்ல முடியாது.. பழமையான பாடல்களையும் மனதிற்கு பிடித்தமான பாடல்களையும் தேடி எடுத்து பாடுபவள்.. கால மாற்றத்தில் அழிந்து போன பாடல்களை மீட்டு கொண்டு வருவதில் அவளுக்கு அத்தனை பிடித்தம்.

மேடை ஏறியவளை அனைவரின் கண்களும் ஆர்வமாய் பார்த்தது.. மைக்கை எடுத்து கொண்டு அனைவரின் முகங்களையும் பார்த்தவள் பாட ஆரம்பித்தாள்.




ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம்
அந்த மனம் எந்தன் வசம்

ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

ஜீவனானது
இசை நாதம் என்பது
முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம்
என்னை வாழ வைப்பது
இசை என்றானது
ஆஹா ஆஹா🎵🎵🎵🎶🎵🎵🎵

எண்ணத்தில்
ராகத்தின் மின்
ஸ்வரங்கள் என் உள்ள
மோகத்தின் சங்கமங்கள்
இணைந்தோடுது இசை பாடுது

ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

மீட்டும் எண்ணமே
சுவையூட்டும் வண்ணமே
மலர்ந்த கோலமே ராக
பாவமே அதில் சேர்ந்த
தாளமே மனதின் தாபமே
ஆஹா ஆஹா🎵🎵🎶🎵🎵

பருவ வயதின்
கனவிலே பறந்து திரியும்
மனங்களே கவி பாடுங்கள்
உறவாடுங்கள்

ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம்
அந்த மனம் எந்தன் வசம்..

ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்..🎼🎵🎶🎵🎼


பாடல் முடிந்தது அந்த அரங்கமே அதிரும் அளவுக்கு கரகோஷம் எழும்பியது.. அதை கேட்டு பெண்ணவளின் கண்களில் கண்ணீர் தான் வழிந்தது.. ஆனால் அதை யாரும் பார்க்கும் முன்னே துடைத்து விட்டவள் அவர்களை கண்டு கையெடுத்து வணங்கினாள்.

மக்கள் கூட்டம் அவளருகே வரும் முன்னே சில ஆட்களால் அவளருகே யாரும் நெருங்க முடியாமல் போனது.. ஆம் அவளை பாதுக்காக்கவென்று பாதுகாவலர்கள் உள்ளனர்.. அவளின் நிழலை கூட யாரும் தொட முடியாத அளவுக்கு அவ்வளவு பலத்த பாதுகாப்பு அவளுக்கு.

அந்த பெரிய பங்களாவில் முதலில் வந்த வெள்ளை காரை தொடர்ந்து அடுத்தடுத்த நான்கு கார்கள் வந்தது.. அந்த முதல் காரிலிருந்து இறங்கினாள் ஆரினி.

அவள் உள்ளே செல்ல மற்றவர்கள் காவலுக்கு அந்த வீட்டின் வெளியே நின்றிருந்தனர்..

அவள் வீட்டினுள் நுழைந்த அடுத்த நொடி அங்கே அந்த வீட்டிலிருந்து ஆஆஆஆ என்ற அலறல் சத்தம் அந்த இடத்தையே அதிர வைத்தது.

அந்த சத்தம் சிறிது சிறிதாய் குறைய அந்த வீட்டினுள் பெண்ணின் விசும்பல் சத்தம் கேட்டது.

அங்கே இரு கைகளையும் தன் காலில் கட்டியபடி அமர்ந்திருந்தாள் அவள்.. அவளுக்கு முன்னே கருப்பு உடை அணிந்த ஆடவன் ஒருவன் அமர்ந்திருந்தான்.. அவனருகில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள்.. வைத்தலையை வாயில் போட்டு குதப்பியவாறு அருகே அமைதியாய் அமர்ந்திருந்தாள்.. அவள் ரங்கநாயகி.. அவளின் அந்த அமைதிக்கு பின்னே இருக்கும் பூகம்பத்தை அறிந்தவர்கள் சிலர் மட்டுமே.. அந்த சிலரில் இருவர் அவளின் முன்னே கருப்பு உடையுடன் அவளருகில் அமர்ந்திருக்கும் ஆடவன் கால்களில் தன் கரங்களை கட்டிக் கொண்டு முகத்தை மறைந்திருக்கும் பெண்ணவள் மட்டுமே அறிந்திருந்த ரகசியம்.. ரங்கநாயகி அந்த ஆடவனை பார்த்து கண் அசைக்கவும் அவனோ முன்னே அமர்ந்திருந்தவளை பார்த்து,

"ஏய் நிமிர்ந்து பாருடி.." என்றான் கர்ஜனையாய்.

உடல் நடுங்க நிமிர்ந்தவளின் முகம் எல்லாம் உதிர துளிகள் வழிய இரு கண்ணங்களும் சிவந்து வீங்கி காணப்பட்டது.. அவள் வேறு யாருமல்ல ஆரிணி தான்.. சற்று முன்பு பார்த்த முகத்திற்கும் இந்த முகத்திற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.

சற்று முன்பு சிரித்த முகத்துடன் குயிலிசை குரலுடன் அழகிய சிரிப்புடன் பாடியவள் இவளா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அவளின் முகத்தை சிதைத்து வைத்திருந்தனர் எதிரிலிருந்த மனித மிருகங்கள்.

அவளின் முகத்தை பார்த்த ரங்கநாயகிக்கு அப்பொழுது தான் சற்று நிம்மதி.

ஏனோ தினமும் அவளின் இந்த அழகு முகத்தை சற்று வதைத்த பின்பு வரும் நிம்மதி அவளுக்கு எல்லையில்லாதது.

பின்னே இத்தனை அழகை வைத்துக் கொண்டு தன் தாசி தொழிலுக்கு உபயோகபடுத்தாமல் பாட்டு கச்சேரி என்று அழையும் அவளை கண்டு மனம் வெஞ்சினம் கொண்டது.

ஆம் ரங்கநாயகி செய்து கொண்டிருக்கும் தொழில் தான் அது.. நான்கு பெண்களை கொண்டு விபச்சாரம் செய்து கொண்டிருக்கிறாள்.. அவளின் பிரதான தொழில் தான் இது.. மூன்று வயதிலிருந்து

ஆரிணி அந்த விபச்சார விடுதியில் பிறந்தவள் இல்லை.. தவறியும் வந்தவள் இல்லை.. அவள் தேவதாசி குலத்தில் பிறந்தவள்.

( தேவதாசி (தேவன்- இறைவன் = தாசி - அடிமை) இறைவன் அடிமை என்று பொருள். தேவதாசி என்பவர்கள் பெரிய கோவில்களில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் சிறுவயதிலேயே நேர்ந்து விடப்பட்ட பெண்கள்.. இவர்கள் இறைவனுக்கு சேவை செய்ய பிறந்தவர்கள் என்று இறைவனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள்.. இறைவனை திருமணம் செய்ததால் இவர்கள் நித்திய சுமங்கலியாக கருதப்பட்டனர்..இவர்களில் சிலர் ஆடல் பாடல் கலைகளில் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கினார்கள்.. அதில் விருப்பம் இல்லாதவர்கள் கோவில்களை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டார்கள்.

இந்தியா முழுவதும் கோவில்களில் இருந்த பெண்கள், 'தேவதாசி, மாதங்கி, நாயகி, மாத்தம்மா, பசவி, சூலி மகே, ஜோகினி, ஆடல் காணிகை, ருத்ர காணிகை, தளிச்சேரி பெண்டிர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டனர்.

ஒரு காலத்தில் மதிப்பு மிக்கவர்களாக கருதப்பட்ட இவர்கள் கால மாற்றத்தில் வசதி படைத்தோர்களின் இச்சையை தீர்க்க பயன்படுத்தப்பட்டனர்.


இப்படி பாவப்பட்ட பெண் ஜென்மத்தின் முறையான தேவதாசி முறை 1947 அக்டோபர் 9 ல் அப்போதைய நீதிகட்சியின் ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய பெண் மருத்தவர் முத்துலெட்சுமி ரெட்டியால் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.. அவரது சட்டமன்ற உரையில் தேவதாசிகள் புனிதமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி.)


அந்த தாசி குலத்தில் வந்தவள் தான் ஆரிணி.. அவளின் தாய் செய்த வினையோ இல்லை அவளின் முன்னோர்கள் செய்த வினையோ அறியா பருவத்தில் ரங்கநாயகியிடம் சிக்கிக் கொண்டாள் ஆரிணி.

என்ன தான் தேவதாசி ஒழிப்பு சட்டம் கொண்டு வந்தாலும் இன்னும் சில கிராமங்களில் சட்டத்திற்கு புறம்பான இம்முறை பின்பற்றப்பட்டு வருகிறது.. கோவில்களுக்க சேவை செய்யும் முறை போய் இப்பொழுது பணக்கார வர்க்கத்தின் உடல் இச்சையை தீர்க்க அந்த பெண்களை பயன்படுத்துகிறார்கள்.. அப்படித் தான் ஆரிணியின் தாயும் அந்த குலத்தில் பிறந்து சிக்கி கொண்டவள் தனக்கு பின் தன் மகள் இதை தொடரக் கூடாது.. அவளாவது குடும்பம் குழந்தை மரியாதையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று முடிவு செய்தவர் யாருமறியாமல் அவளை அந்த கிராமத்திலிருந்தே அனுப்பியிருந்தார் அதுவும் முன் பின் தெரியாத பார்த்து பழகி சிறிது நாளே ஆனே நங்கநாயகியை நம்பி.. அது தான் அவர் செய்த மாபெரும் தவறாயிற்று.

அவரிடம் நல்லவள் போல் நம்பி அவரின் பெண்ணை அழைத்து வந்த ரங்கநாயகி ஒன்றும் அத்தனை நல்லவள் கிடையாது.. ஆனால் ஆரிணியின் தாயான துவாரகாவிடம் நடித்து நல்ல பெயரை வாங்கி விட்டாள்.. அவளை துவாரகா நம்புவதற்கு காரணமும் இருந்தது.. வாழ்க்கையில் தீய வழியில் சென்று வாழ்வை தொலைத்த பெண்ணை அவள் வாழ்நாள் முடியும் நேரம் காப்பாற்றி அவளுக்கு நல்ல வாழ்வை ஏற்படுத்தி தந்த ரங்கநாயகி துவாரகாவிற்கு தெய்வமாய் தெரிந்தாள்.. அது தான் யாரையும் எளிதாக நம்பாத துவாரகாவும் ரங்கநாயகியை நம்பி தன் மகளை ஒப்படைத்தாள்..

ஆனால் பச்சோந்தியும் நிறம் மாறுவதில் தோற்றுப் போகும் நங்கநாயகியிடம்.. அனாதையாய் வாழும் அபலை பெண்கள் வாழ்வில் தடம் மாறி திருந்திய பெண்கள் என அவளின் கண்ணில் படும் பெண்களை வைத்து பிழைப்பை நடத்தும் பெண்ணிணத்திற்கே கலங்கமானவள் அவள்.

தன் கையில் சிறுமலராய் கிடைத்த ஆரிணியை வயது வந்த அன்றே அவளின் ஈனத் தொழிலுக்கு இழுத்து வரத்தான் முனைந்தாள்.

ஆனால் தாயின் வார்த்தைகள் எப்பொழுதும் அவளின் காதுகளில் ஒலிக்கும்.. என்ன தான் சிறு வயதானாலும் ஆரிணிக்கு விவரம் தெரியும் வயதிலிருந்தே துவாரகா சொல்லித் தான் வளர்த்தாள்.

தன்னோடு இந்த வம்ச பெயர் அழிந்து விடட்டும்.. அதன் நிழல் கூட அவளின் மேல் விழக்கூடாது என்று அவள் விவரம் அறியும் வயது வந்து உடனே சொன்ன வார்த்தை நன்றாக படித்து மரியாதை மிக்க வேலைக்கு சென்று தன் சொந்த காலில் தனிச்சி வாழ்ந்து உண்மையான காதலுடன் எந்த ஆண்மகன் அவளிடம் வந்து சேர்கிறானோ அவனை ஊரறிய உலகறிய திருமணம் செய்து குடும்பம் குழந்தை என்று வாழ வேண்டும்.. இது அந்த தாயின் ஏக்கம் என்றே கூற வேண்டும்.. அதையே தன் மகளின் மனதிலும் பதிய வைத்து விட்டு சென்று விட்டாள் துவாரகா.

தாயின் வார்த்தைகள் ஆழமாய் மனதில் பதிந்ததாலோ என்னவோ அச்சிறு பெண்ணிற்கு ஒழுக்கமே முதலானாதாய் தெரிந்தது.


ரங்கநாயகியின் எந்த மிரட்டலுக்கும் அடி பணியாமல் பட்டினி போட்டாலும் வெறும் தண்ணீரை குடித்து உயிர் வாழ்ந்து தன் மானத்தை காத்துக் கொள்ள முயன்றாள்.

அவளை தன் தொழிலுக்கு கொண்டு வர முடியாத கோபம் அவளை அடித்து துவைத்து எடுத்தாள் ரங்கநாயகி.

அவளின் அடிக்கு கூட தன் உடலை கொடுத்து விட்டு வலி தாங்கி கொள்ளும் பெண்ணவள் அடிக்கு பயந்து தன்னை அடகு வைக்க முனைந்ததில்லை.

ஏன் ரங்கநாயகி கூட முதலில் அவளை அடித்து துன்புறுத்தி அவளை அடகு வைக்க முனைந்த தருணத்தில் சீறும் பெண் வேங்கையாய் தன் அருகில் வந்த ஆணை கத்தியால் குத்திவிட்டாள்.

அதை கண்டு பயந்த ரங்கநாயகி அவளை அடித்து துவைத்து எடுத்து விட்டாள்.. என்ன செய்தும் தன் விருப்பத்திற்கு இருக்கும் சண்டிக் குதிரையாய் இருக்கும் ஆரிணியை கண்டு கோபம் பொங்கி எழும் தான்.. ஆனால் அவளை உயிருடன் விடுவதற்கும் காரணமிருந்தது.. அந்த ஒரு காரணம் தான் ஆரிணியை ரங்கநாயகியிடம் இருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

எப்படியோ அடி வாங்கி திட்டு வாங்கி கேவலமான வார்த்தைகளை கேட்டு கேட்டு மனம் இறுகி போனவள் சிறுவயதில் இருந்து ஆசைப்பட்ட பாட்டை முறைப்படி கற்றுக் கொண்டாள்.

ஆரிணிக்கு பாடல் என்றால் மிகவும் பிடித்தமானது.. சிறுவயதில் இருந்தே வானொலியை மட்டுமே தன் தோழைமையாக்கி கொண்டு அவளின் பொழுதுகள் அந்த சாக்கடையில் கழியும்.


ஒரு வயதுக்கு பின்னால் அவளின் குரலில் மயங்கிய நிறைய பேர் அவர்களின் இல்லத்தில் நடக்கும் விழாவில் அவளை பாட அழைத்தனர்.. அதன் மூலம் வரும் வருவாய் வைத்து ரங்கநாயகியின் வாயை அடைத்து விடுவாள் ஆரிணி.

அங்கிருந்த எத்தனையோ பெண்களை விருப்பமில்லாமலும் அந்த தொழிலை நடத்த வைக்கும் ரங்கநாயகி ஆரிணியை மட்டும் அவளின் விருப்பத்திற்கு விடக் காரணம் என்ன..?


பனிமுகடுகள் போர்த்திய அந்த காலை வேலையிலே இந்திய நாட்டின் எல்லையான காஷ்மீரின் எல்லையில் துப்பாக்கி சத்தம் அரக்கத்தனமாய் கேட்டது.

இந்திய நாட்டின் தாய்மகன்களுக்கும் எதிரி நாட்டின் துரோகிகளுக்கும் நடந்த இந்த சண்டையில் வீர மரணம் அடைந்த சிலர் என்றால் துப்பாக்கி அடி பட்டு துடித்தது சிலர்.

அதே நேரத்தில் அந்த டெண்டில் கட்டிலில் படுத்திருந்த உருவம் துப்பாக்கி சத்தம் கேட்டதும் அடுத்த நொடி கண் விழித்தது.. அதற்குள்ளாக அந்த உருவத்தின் அருகில் இருந்த வாக்கி டாக்கி அலறியது.

அதை ஆன் செய்து காதில் வைத்த நொடி, "சீஃப் நம்மோட பதுங்கு குழியை எதிரிகள் அழித்து விட்டனர்.. நமது வீரர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர் சீஃப்.. இட்ஸ் எமர்ஜென்ஸி சீஃப்.." என்றது ஒரு கட்டைக்குரல்.

அவனோ, "டூ மினிட்ஸ் ஜாபர்.." என்று கட் செய்து விட்டு வேகமாய் கிளம்பினான்.

ரோஜா துளிரும்..🌹


ஹாய் செல்லம்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க.. இது கனா காணும் பேனாக்கள் போட்டிக்காக எழுதும் கதை.. நானும் உங்கள்ல ஒருத்தி தான் பா.. என்னோட பேரை மறைச்சி தான் நான் எழுத போறேன்.

சோ படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க பா..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
பாலைவன ரோஜா 🌹🌹🌹🌹
பாவையை வர்ணித்து விட்டு
பட்டு கொண்டிருக்கும் வலி
பதைக்கிறது மனது...
பாடும் குயில்
பாவம் அடைபட்டு இருக்கு....
பறந்து செல்ல காலநேரம்
பார்ப்பதென்னடி ......
வாழ்த்துக்கள் மா 💐💐💐🤩🤩🤩
 
  • Like
Reactions: kkp49