பாலைவன ரோஜா 12
வீட்டில் வரலட்சுமி பூஜை நடக்க அங்கே ஆரிணியை பாட சொன்னார் புனிதவதி.. ஆனால் பெண்ணவளோ தயக்கத்துடன் சீதாவை பார்த்தாள்.. அவருக்கு அவள் மேல் கோபம் தான் என்றாலும் இப்பொழுது பூஜை முக்கியம் என்பதால் பாட சொல்லி தலையாட்டினார்.
அவளும் சற்று சிரித்தபடி பாட ஆரம்பித்தாள்.
குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி..
பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி..
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி..
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி..
அவள் பாடலை கேட்ட ஆடவனுக்கோ ஏனோ தானும் அந்த இடத்தில் இருந்திருக்கலாம் என்று தோன்றாமல் இல்லை.
அவளை விழிகள் மின்ன பார்த்தவன் அவள் உடுத்தியிருந்த புடவையை அப்பொழுது தான் பார்த்தான்.. அந்த புடவை அவன் தான் எடுத்து கொடுத்தான்.. ஆனால் அவளுக்காய் இல்லை.. அவனின் வருங்கால மனைவிக்கு அவனின் தாயாரின் வற்புறுத்தலில் எடுத்து கொடுத்த புடவை.. ஏனோ அந்த புடவை அவன் மனதில் பதிந்து போனது.. ஆனால் தன் மனம் கவர்ந்தவள் இன்று அதை உடுத்தியிருக்கும் போது ஏனோ அவனின் மனமும் நிரம்பி வழிந்தது.
பூஜை முடியும் வரை அவனின் பார்வை அவளை விட்டு இம்மியும் அகலவில்லை.. இபாபொழுதே அவளிடம் சென்று விட மாட்டோமா என்று ஆடவனின் மனம் பெண்ணவளில் பித்து கொண்டது.
என்னதான் அவளை விரும்புவதை மனம் ஏற்றுக் கொண்டாலும் அவனின் நிலை அவளுக்கு தான் பொருத்தம் இல்லை என்று தான் மூளை உரைத்தது.
உண்மையான அன்பு இருந்தால் இந்த குறைகள் பெரிதாய் தெரியாது தான்.. ஆனால் அவளுக்கு தன்னை பிடிக்க வேண்டுமே என்ற எண்ணம் தோன்ற மனதில் பாரம் ஏறியது.
தன்னை அவளுக்கு பிடிக்குமா என்ன.. என்றவனின் கேள்விக்கு பதில் என்னவோ கேள்விக்குறி தான்.
மனதில் வலி தோன்ற உடல் இறுக கேமிராவை அணைத்தவனுக்கு அவனறியாமல் கண்களில் இரு துளி கண்ணீர் துளிர்த்தது.
தன் கண்ணீரை துடைத்தவன் தன் கவனத்தை தன் வேலையில் திருப்பினான்.
இங்கே வீட்டில் பூஜை முடிந்து விட உறவுகள் அனைவரும் சென்று விட சீதா ஆரிணியை அழைத்தாள்.. அனைவரும் அங்கே இருக்க புருஷோத்தமனும் புனிதவதியும் கேள்வியாய் சீதாவை பார்க்க அவரோ ஆரிணியை பார்த்து,
"சொல்லு ஆரிணி நீ ஏன் இப்படி பண்ண.. நான் உன்கிட்ட சொன்னது என்ன நீ என்ன பண்ணிருக்க.." என்றார் கோபமாய்.
அங்கிருந்த யாருக்கும் எதுவும் புரியவில்லை.. அனைவரும் கேள்வியாய் சீதாவை பார்க்க அவரோ,
"எங்கிருந்துடி வந்த.. நான் உனக்கு என்ன சொந்தமா பந்தமா.. எதுக்காகடி எனக்காக இப்படி ஒரு அவமானத்தை ஏத்துக்கிட்டே.. இதோ இவங்க எல்லாருக்குமே தெரியும் நான் ஏன் என் பிறந்த வீட்டை விட்டு விலகி இருக்கேன்னு.. ஆனா எதுக்காக இப்போ என் குடும்பத்துக்கிட்ட போய் பேசி அவமானப்பட்டு வந்து நிக்குற.. இப்போ சொல்ல போறியா இல்லையா ஆரிணி.." என்றார் கண்களில் வழியும் கண்ணீருடன்.
மொத்த குடும்பமும் ஆரிணியை அதிர்ச்சியாய் பார்த்தது.
சீதாலட்சுமியின் தாய் வீடு பணக்கார வர்க்கம் தான்.. வீட்டிற்கு ஒரு பெண் ஆண் என இரு குழந்தைகள்.. அந்த காலத்திலே சீதாலட்சுமி ஜானகிராமனை காதலித்து தன் வீட்டை எதிர்த்து மணம் புரிந்தவர்.. என்ன தான் பணத்தில் சம அந்தஸ்து இருந்தாலும் சாதியில் தங்களுக்கு இணையானவர்கள் இல்லையென சீதாவின் குடும்பம் அவர்கள் காதலை ஏற்க மறுக்க பிள்ளைகளின் சந்தோஷத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் புருஷோத்தமன் புனிதவதி இருவரும் அவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொண்டார்கள்.. ஆனாலும் அவர்கள் ஒரு பெண்ணை அவளின் பிறந்த வீட்டை விட்டு பிரித்து வந்த தங்கள் மகனையும் திட்ட தவறவில்லை.
என்று சீதாலட்சுமி தன் குடும்பத்தை எதிர்த்து ஜானகிராமனை திருமணம் செய்து கொண்டாரோ அன்றே அவரின் குடும்பம் அவரை தலைமுழுகியது.
எத்தனை தான் புருஷோத்தமனின் குடும்பம் அவரை நன்றாக பார்த்துக் கொண்டாலும் பிறந்த வீட்டின் நினைவு வராமல் இராது.. அதுபோல் தான் சீதாவும் தன் பிறந்த வீட்டின் நினைவுகள் வந்தாலும் அதை தன் குடும்பத்திடம் மறைத்து விடுவார்.
எந்த ஒரு பெண்ணாலும் எந்த சூழ்நிலையிலும் தங்கள் பிறந்த குடும்பத்தை வெறுக்க மாட்டார்கள்.. அதுவும் அமைதியான சீதாவின் குணம் தன் குடும்பத்தை தாண்டி வந்தாரே ஒழிய தன்னை இளவரிசியாய் வளர்த்த வீட்டை மறக்கவில்லை.
அதுவும் திருமணம் ஆகி நீண்ட வருடங்கள் கழித்து தான் அவருக்கு தாமரை பிறந்தாள்.. அவளின் பிறந்த போது கூட தான் பிறந்த வீட்டுக்கு செல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.. அதுவும் அவரின் தம்பி முழுதாய் அவரை வெறுத்து ஒதுக்கிய பின் அங்கே சென்றாள் அவமானங்கள் மட்டுமே மிஞ்சியது.
தான் புகுந்த வீடும் அவமானபடுவதை தாங்க முடியாதவர் அதன் பின்பு சுத்தமாய் தான் பிறந்த வீட்டை மறந்து விட்டார்.. அவர் மறந்தால் போதுமா அவரின் சுற்றமும் மறக்க வேண்டுமே.. அப்படி மறந்து போகாததின் விளைவு இன்று ஆரிணி தலைகுனிந்து நிற்கிறாள்.
தன் மருமகளின் கோபத்தில் ஒன்றும் புரியாத புனிதவதி அவரிடம்,
"சீதாம்மா எதுக்காக இந்த கோபம்.. ஏன்மா ஆரிணி மேல கோபமா இருக்கே.." என்றவரின் கேள்வி மற்றவர்களின் முகத்திலும் இருந்தது.
" அத்தை இன்னைக்கு இவ என்ன பண்ணிட்டு வந்துருக்கா தெரியுமா.." என்றவர் கேள்வி கேட்கும் போதே அங்கே வந்த தாமரையை பார்த்தவர் கோபமாக அவரிடம் சென்று அவளின் கண்ணத்தில் ஆக்ரோஷமாய் அறைந்தார்.
அதை பார்த்த அனைவரும் பதட்டமாக அங்கே ஒடி வந்தனர்.. புருஷோத்தமன் கோபமாக சீதாவின் பக்கம் திரும்பி,
"சீதா உனக்கு என்னாச்சி.. எதுக்காக இப்போ என் பேத்தியை அடிக்கற.. இதுநாள் வரைக்கும் அவளை யாரும் கை நீட்டி அடிச்சதில்லை.. ஏன் என் பேர பசங்க யாரையும் நாங்க கை நீட்ட விட்டதில்லை.. ஆனா இன்னைக்கு நீ என்ன பண்ணிருக்க.." என்று கோபமாய் பேசியவர் அழுது கொண்டிருந்த தாமரையை தன் தோளில் சாய்த்துக் கொண்டார்.
"இவ என்ன பண்ணான்னு கேளுங்க மாமா.. என்னை மட்டும் திட்டாதீங்க.. இவ பண்ண வேலைக்கு இவளை கொன்னாலும் பரவாயில்லை.. இவளால ஆரிணிக்கு எவ்வளவு பெரிய அவமானம் இன்னைக்கு.." என்றார் அழுது கொண்டே.
அதை கேட்ட ஆரிணியோ தலையை தூக்கி, "அம்மா நான் அப்படி நினைக்கவே இல்லை.. தாமரையோட சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்.." என்றாள் மென்மையாய்.
" நீ பேசாத ஆரிணி.. உன்மேல செம்ம கோபத்துல இருக்கேன்.." என்றார் கோபமாய்.
சீதாவின் இந்த புதிய அவதாரத்தில் வீட்டில் அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை தான்.. ஆனால் எப்பொழுதும் சீதாவின் கோபத்தில் ஒரு நியாயம் இருக்கும் என்பதை உணர்ந்தவர்கள் கேள்வியாய் அவரையே பார்த்திருந்தனர்.
ஜானகிராமனோ தன் மனைவியிடம் வந்து, "சீதா என்னாச்சுமா.. எதுக்காக இந்த கோபம்.. நம்ம பொண்ண நீ அடிக்கவே மாட்டியே மா.." என்றார் மென்மையாய்.
அவர் அப்படி கேட்டதும் அவரின் தோளில் சாய்ந்தவர், "நான் தப்பு பண்ணிடேனோன்னு தோணுதுங்க.. நம்ம பொண்ணு லவ் பண்றாளம்.." என்றார் அழுகையுடன்.
அதை கேட்ட அனைவருக்கும் ஒரு பெரிய நிம்மதி வந்தது.
" ஏம்மா சீதா இதுக்கா இவ்வளவு கோபம்.." என்றார் புனிதவதி சிரித்தபடி.
கோதையோ சீதாவின் அருகில் வந்து, "அக்கா இதுக்கா என் பெண்ணை அடிச்சீங்க.. அத்தை மாமா லவ் பண்ணி தான் கல்யாணம் செஞ்சிகிட்டாங்க..ஏன் நீங்களும் மாமாவும் லவ் பண்ணி தானே கல்யாணம் செஞ்சிகிட்டிங்க.. இப்போ என் பொண்ணு லவ் பண்ணா மட்டும் எதுக்கு அடிக்கிறீங்க.." என்றார் தாமரையை தன் தோளில் தாங்கியபடி.
" அய்யோ கோதை இவ யாரை லவ் பண்றா தெரியுமா.. என் தம்பி மகனை.." என்றார் கத்தியபடி.
எல்லோரும் ஒரு நிமிடம் அமைதியாகிவிட்டனர்.. முதலில் தெளிந்த புருஷோத்தமன், "அதுக்கு ஏன்ம்மா ஆரிணியை திட்டுனே.." என்றார் கேள்வியாய்.
"இதோ இந்த பெரிய மனுசிக்கு அது தெரிஞ்சி நேத்து என் தம்பி வீட்டுக்கு போயிருக்கா.. இவ என்கிட்ட வந்து சொன்னா நான் தாமரையை கூப்பிட்டு மிரட்டி விட்டுட்டேன்.. ஆனா இவ என் சொல்லை மீறி போய் பேசி அவமானப்பட்டு வந்துருக்கா.. என்னோட பிறந்த வீடு சாதி வெறி புடிச்ச கூட்டம்.. ஆனா அதுங்க இவளை மோசமா பேசி அனுப்பிருக்காங்க.. இவளுக்கு ஏன் இந்த வேலை.." என்றார் அழுதபடி.
தான் பிறந்த வீட்டிற்கு சம்பந்தம் இல்லாத ஒரு பெண் தன் பிறந்த வீட்டால் அவமானப்பட்டு வந்து நிற்பதை அவரால் தாங்க முடியவில்லை.. அந்த கோபம் ஆரிணி தாமரை இருவரின் மேலும் இருந்தது.
அதை தான் இப்பொழுது காட்டி கொண்டிருந்தார்.. மற்றவர்கள் அனைவரும் ஏன் என்பது போல் ஆரிணியை பார்த்தனர்.. அவளோ பதில் பேசாமல் அமைதியாய் நின்றிருந்தாள்.
"ஏம்மா ஆரிணி நீ ஏன் மா எங்ககிட்ட சொல்லாம போன.." என்றார் பருஷோத்தமன் வலியாக.
அவளோ தலைகுனிந்தபடியே நின்றிருக்க, "இவ எப்படி மாமா சொல்லுவா.. பெரிய தியாகி இவ.. குடும்பத்தை சேர்த்து வைக்க முயற்சி பன்றாளாம்.." என்றார் ஆதங்கமாய்.
பெண்ணவளோ எதுவும் பேசாமல் தலைகுனிந்தபடியே நின்றிருக்க அவளின் தலையை தூக்கிய சீதா, "இதோ பாரு ஆரிணி இந்த விஷயத்துல இனிமே நீ தலையிடாத சரியா.." என்றார் கோபமாக.
அதை கேட்டதும் அதிர்ச்சியாய் தன் விழி மலர்த்தியவள் வலியை அதிகமாய் தாங்கி இருந்தது.
நான் இந்த குடும்பத்தை சேர்ந்தவள் இல்லையா என்ன என்றவளின் விழியின் கேள்விக்கு யாராலும் பதில் சொல்லமுடியவில்லை.
என்ன தான் இருந்தாலும் சீதா இப்படி ஒரு வார்த்தையை சொல்லியிருக்க கூடாது தான் என அனைவருக்கும் தோன்றியது.. ஆனால் யாரும் எதுவும் சொல்லவில்லை.. காரணம் சீதாவின் குணம் அங்கே அனைவருக்கும் நன்றாக தெரியும்.. அவர் மனதார இந்த வார்த்தையை சொல்லியிருக்கமாட்டார் என.
ஆரிணியின் மனம் அடிபட்டு போனது சீதாவின் வார்த்தையில்.. கண்கள் கலங்க அனைவரையும் ஒரு முறை பார்த்தவள் புருஷோத்தமனிடம் திரும்பி,
"தாத்தா நான் எதுலேயும் தலையிடக்கூடாதா.. நானும் இந்த குடும்பத்துல ஒருத்தி இல்லையா.. இந்த வீட்டு பிரச்சனையில தலையிட எனக்கு உரிமையில்லையா.. சொல்லுங்க பாட்டி சீதாம்மா சொன்னது சரியா..
எனக்குன்னு ஒரு குடும்பம் கிடைக்கவே கிடைக்காதான்னு நான் ஏங்கினது எத்தனை நாளு தெரியுமா.. ஆனா இங்கே வந்த கொஞ்ச நாள்ல இது என்னோட குடும்பமா தான் நினைச்சேன்.. அப்போ இதுல ஒரு மான அவமானம் எனக்கு இல்லையா.. தாமரையோட ஆசை நியாயமானது தானே.. அவ யாரை ஆசைப்பட்டா அவ தாய்மாமன் பையனை தானே.. சீதாம்மா எந்த உறவுகளும் இல்லாத எனக்கு தான்மா உறவுகளோட அர்த்தம் தெரியும்..
உண்மையான உறவு கிடைக்கிறது ரொம்பவே கஷ்டமா.. ஆனா எனக்கு அப்படி உறவுகள் கிடைக்கவே இல்லை.. ஆனா எப்போ இந்த வீட்டுக்கு வந்தேனோ அப்பவே எனக்கு எல்லா உறவுகளும் கிடைச்சிட்டதா தான் நினைக்குறேன்.. ஆனா இப்போ நீங்களும் உனக்கு உறவு நாங்க இல்லைன்னு சொல்லிட்டீங்க இல்லை.. எனக்கும் சொந்தத்தத்துக்கும் குடுப்பனை இல்லை போல இல்லை தாத்தா.." என்றாள் வலிகள் தாங்கிய குரலுடன்.
அதை கேட்டு அனைவருக்கும் மனம் கனத்து போனது.. ஒருவனின் கண்கள் சிவக்க அவள் கூறியதை கேட்டு கொண்டிருந்தான்.
ஒரு நாள் மட்டும் சிரிக்க ஏன்
படைத்தான் அந்த இறைவன் என்று
கேட்டது பூக்களின் இதயம்..
மறு நாள் அந்த செடியில்
அந்த மலர் வாடிய பொழுதில்
பட்டுக் கிடந்ததே இறைவனின் மனமும்..
ஹாய் மக்களே எல்லாருக்கும் வணக்கம்.. பாலைவன ரோஜா எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க பா.