• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாலைவன ரோஜா 14

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
பாலைவன ரோஜா 14
பசுமையான வயல் வெளிகளுக்கு நடுவே தென்னந்தோப்பின் நடுவே அந்த அரண்மனை போன்ற பங்களா கம்பீரமாய் வீற்றிருந்தது.. அந்த பங்களாவில் ஆங்காங்கே அமைதியாய் ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்க பூஜையறையில் மணியோசை கேட்டது.. இங்கே ஹாலில் இருந்த பெண்கள் தங்கள் கைகளை பிசைந்தபடி நிற்க அவர்களுக்கு சற்று தூரத்தில் நின்றிருந்தவனோ திமிராய் நின்றிருந்தான்.
அதே நேரம் உள்ளே அறையிலிருந்து நடுத்தர வயதுடையோர் வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாய் வந்தார்.. அவரை பார்த்து பெண்கள் இருவரும் கண்ஜாடை செய்தார்கள் நின்றிருந்தவனை காட்டி.. அவரோ தான் பார்த்துக் கொள்வதாக இமை மூடி திறந்தார்.
இவர்கள் பார்வை பரிமாற்றத்தினிடையே பூஜையறையிலிருந்து கம்பீரமாய் வெள்ளை வேட்டியில் இடுப்பில் துண்டுடன் வயதான ஒருவர் வெளியே வந்தார் கையில் ஆரத்தி தட்டுடன்.
அதை எல்லோரிடமும் காட்டியவர் அந்த வாலிபனிடமும் நீட்டினார்.. அவனோ அதை எடுத்துக் கொண்டு அலட்சியமாய் அவரை பார்த்தான்.. தன் கைகளில் இருந்த தட்டை அருகில் இருந்த வயதான பெண்மணியிடம் கொடுத்து விட்டு அவனை ஓங்கி அறைந்தார் ஆத்திரமாக.
அறையை வாங்கி கொண்டவன் அவரை கோபமாக பார்த்தவன், "தாத்தா.." என்றான் கோபமாய்.
அவரும் அவனுக்கு சலிக்காமல் கோபமாய் பார்த்தவர்,
"என்னடா தாத்தா.. இல்லை என்னன்னு கேட்டேன்.. நான் வேணாம்னு இந்த வீட்டு விட்டு ஓடுன ஓடுகாலி நாயை நீ திரும்பவும் கூட்டிட்டு வர பாக்குறியோ.. கொன்னு புதைச்சிடுவேன் ஜாக்கிரதை.." என்றார் கர்ஜனையாக.
அவனோ, "இங்கே பாருங்க தாத்தா.. என்னைக்கு இருந்தாலும் அவ தான் என்னோட பொண்டாட்டி.. உங்களோட வறட்டு பிடிவாதத்துக்கு நான் பொறுப்பாக முடியாது.. நான் உங்களை மாறி ஜாதி மதம் பாக்கலை.. அது போல அவ என்னோட அத்தை பொண்ணுன்னு எனக்கு தெரியாது.. இப்போ தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் விடவும் முடியாது.. அப்படி என்னை நம்பினவளை நான் கைவிடவும் முடியாது.. நான் ஆம்பளை தாத்தா.. உங்களோட அதிகாரத்துக்கு பயந்து என்னோட ஆசையை கைவிட முடியாது.." என்றான் மகிழ்வேந்தன்.
அதை கேட்ட அவனின் தாத்தாவான நரசிம்மனோ தன் பேரனை முறைத்து விட்டு தன் மகனின் பக்கம் திரும்பியவர்,
"இதோ பாரு பார்த்திபா உன் மகன்கிட்ட சொல்லி வை.. நான் நரசிம்மன் என்னோட கட்டுபாட்டுல தான் இன்னமும் இந்த குடும்பம் ஓடிட்டு இருக்கு.. ஆனா அதை உன் மகன் மாத்த முயற்சி பண்றான்.. வேணாம் பார்த்திபா என்னோட கோபத்தை கிளர வேணாம்னு சொல்லு.. அந்த ஓடிப்போனவளோட பொண்ணு இந்த வீட்டுக்கு வரக்கூடாது.." என்றார் கட்டளையாய்.
அவரின் மகன் பார்த்திபனோ தன் மகனை பிரச்சனை வேண்டாம் என்ற கெஞ்சல் பார்வை பார்க்க அதை உணர்ந்தவனோ தன் காலை தரையில் தட்டி விட்டு ச்சீய் என்று கோபத்துடன் சென்றான்.
அவன் சென்றதும் யோசனையாய் தன் மகனையும் மருமகள் மனைவியையும் பார்த்தவர்,
"என்ன உங்களுக்கு துளிர் விட்டு போச்சா.. அந்த கேடுகெட்டவளை திரும்பவும் வீட்ல சேர்க்க முயற்சி பண்றீங்க போல.. நான் உயிரோடு இருக்கற வரைக்கும் அது நடக்காது.. என் கோபத்தை பத்தி தெரியும் இல்லை.. எல்லோரும் ஒழுங்கா இருங்க சொல்லிட்டேன்.." என்று கத்திவிட்டு கோபத்துடன் அங்கிருந்து சென்றார்.
அவர் சென்றதும் மூவரும் ஆசுவாசமாய் பெருமூச்சு விட்டனர்.
அங்கிருந்த இரு பெண்களும் பார்த்திபனை சுற்றியிருந்தனர்.. அதில் வயது முதிர்ந்த பெண்,
"டேய் பார்த்திபா என்னடா உன் ஐயன் இப்படி பேசிட்டு போறாரு.. எம்பொண்ணு இனியாவது இந்த வீட்டுக்கு திரும்ப வருவான்னு நினைச்சேனே.. ஆனா உங்க ஐயன் இன்னமும் இந்த ஜாதியை கட்டி அழுதுட்டு இருக்காறே டா.. எம் பேத்தி எம்புட்டு அழகா இருக்காடா.. அவ பிறந்ததுல இருந்து இன்னும் தூக்கி அழகு பாக்கலையே.. அதுக்குள்ள இம்புட்டு அழகா வளந்து நிக்குறாளே.. டேய் பார்த்திபா எப்படியாவது அவளை என்ற பேத்தியை உம்மருமகளா ஆக்கிக்கோடா.. அப்பவாவது எம்பொண்ணு இந்த வீட்டுக்கு வந்துட்டு போகட்டும்.. அங்கே மகாராணி யா அவளை வச்சிருக்காங்களாம் டா.. நிறைய பேரு சொன்னாங்க.. அந்த குடும்பம் நம்ம வீட்டு பொண்ணை தங்கமா தாங்குது.. ஆனா அந்த வீட்ல இருந்து வந்த பொண்ணை உங்க ஐயன் அம்புட்டு கேவலப்படுத்தி அனுப்பியிருக்காரு.. ம்ம் என்னைக்கு எம்பொண்ணு எங்கிட்ட வருவாளோ.. பெருமாளே உனக்கே வெளிச்சம்.." என்று மகனிடம் ஆரம்பித்து கடவுளிடம் முடித்தார் பெரியநாயகி.
" அம்மா கவலைப்படாதீங்க சீக்கிரமே நம்ம சீதா நம்ம குடும்பத்தோட வருவா.. அவளோட பொண்ணு தாமரை தான் என் வீட்டு மருமக.. அதை யாராலும் மாத்த முடியாது.. ராதா அம்மாவை கூட்டிட்டு போய் சாப்பிட வை.. நான் வெளியே போயிட்டு வர்றேன்.." என்று மனைவி தாய் இருவரிடமும் விடைபெற்று அங்கிருந்து சென்றார் பார்த்திபன்.
பார்த்திபனின் மனைவியான ராதாவும் தன் தாயான மாமியாரை உள்ளே அழைத்து சென்றார்.
அந்த உயர்ரக கார் அந்த வீட்டின் போர்டிகோவில் நுழைந்து நின்றது.. கார் சத்தம் கேட்டு புனிதவதி வெளியே வந்து பார்த்தவர் அதிர்ந்து தான் போனார்.. ஆம் அங்கே நின்றது அவரின் மூத்த பேரன்.. அந்த வீட்டின் முதல் வாரிசான ஆத்விக் கிருஷ்ணா.
அவனை பார்த்ததும் சந்தோஷத்தில் முகம் பூரித்தவர்,
"கண்ணா ஆத்விக் வா வா.. என்ன பா நீ பாட்டு சொல்லாத போயிட்ட.. எவ்வளவு வருத்த பட்டோம் தெரியுமா.. உனக்கு முதல்ல ஒரு கால் கட்டு போட்டா தான் எங்களை விட்டு நீ பிரிஞ்சி போகமாட்டே.. வா உள்ளே வா.. உன்னை பாத்தா எல்லோரும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க.. வாடா உள்ளே.." என்று ஆராவாராத்துடன் உள்ளே அழைத்து சென்றவர் நடுஹாலில் நின்று,
"என்னங்க சீதா கோதை எல்லாரும் வாங்க யாரு வந்துருக்காங்கன்னு பாருங்க.." என்ற தன் வயதையும் மறந்து கத்தினார்.
தன்னை சந்தோஷமாக வரவேற்ற தன் பாட்டியின் முகத்தை பார்த்தவனுக்கு மனதில் ஒரு ஓரத்தில் நிம்மதி தோன்றியது.
புனிதவதியின் குரல் கேட்டு வீட்டிலிருந்து அனைவரும் வந்து பார்க்க அங்கே நின்றிருந்தவனை கண்டதும் அனைவரின் முகத்திலும் சந்தோஷம் இருந்தாலும் புருஷோத்தமன் மட்டும் தன் பேரனை சந்தேகமாக பார்த்தார்.
இப்படி வந்து நிற்கிறான் என்றால் நிச்சயம் அதில் ஏதோ அவனுக்கு தெரிந்து இருக்கலாம் என்று யோசித்தவரின் முன்னே அவனின் அலைபாயும் விழிகளை கண்டு கண்கள் இடுங்கினார்.
இவன் யாரை தேடுகிறான் எல்லோரும் இங்கே இருக்கும் போது இவனின் விழிகள் ஏன் அலைபாய்கிறது என்று பேரனை பற்றிய ஆராய்ச்சியில இறங்கினார் அந்த அனுபவசாலி.
விழிகளால் வட்டமிட்டு தேடிக் கொண்டிருந்தவன் வட்டத்துக்குள் விழுந்தாள் பெண் வண்டு.. அவளை கண்டதும் அவனின் முகத்தில் வந்த பிரகாசம் அவனின் மனநிலையை உணர்த்தியது.. அதை உணர்ந்த புருஷோத்தமனின் இதழ்களில் மர்ம புன்னகை வந்தது.
ஓ மை பேரா உன்னை வீழ்த்த ஆள் வந்தாச்சா.. அப்போ உன் பாட்டியும் நானும் சரியாத்தான் யோசிச்சிருக்கோமா என்ன.. என்றவரின் எண்ணத்திற்கு யார் தடை போடுவது அவரின் பேரன் அவனின் சந்தோஷத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முனைகிறான் என்பதை.
நான்கு திசைகளிலும் விழிகளால் தேடிக் கொண்டிருந்தவனின் கண்களுக்கு விருந்தளித்தவளை இமைகளால் ஸ்பரிசித்து கொண்டிருந்தான் ஆடவன்.
ஆனால் அவனறியாமல் அவன் பார்வையை பெரியவர்கள் கண்டு கொண்டவர்கள் மகிழ்ந்து போயினார்கள்.
வெண்மை நிற புடவையில் தலைநிறைய மல்லிகை சூடி கைகள் குலுங்க வளையல் அணிந்து மெல்லினமாய் நடந்து வந்தவளை விழி அகற்றாமல் பார்த்தான் கள்வன்.
பெண்ணவளோ அவனை யார் என்ற ரீதியில் தான் பார்த்து வைத்தாள்.. அவனை இரு முறை மட்டும் நேரில் பார்த்திருந்தாலும் வஞ்சயவளின் நெஞ்சமதில் பதியாது போனான் காரிகையின் கள்வன்.. ஆனால் அவனின் விழிகள் நங்கையவளின் நெஞ்சத்தில் ஆழப் புதைந்து போக அதில் மூழ்கி போக முடியாமல் அவளின் கட்டுப்பாடுகள் அவளை வழி நடத்தின.
எல்லோரும் அவனை சுற்றி நின்றிருக்க அவள் மட்டும் தூரத்திலிருந்து அந்த குடும்பத்தின் மகிழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சற்று நேரத்தில் இணை கோடுகளாய் இருவரின் விழிகளும் சந்திக்க எதிரெதிர் துருவம் ஒன்றையென்றை ஈர்க்கும் சக்தியாய் இருவரையும் இழுத்தது.. அதிலிருந்து மீண்டு வர விருப்பமில்லாமல் அவனும் மீண்டு வர முடியாமல் அவளும் தத்தளித்தனர்.
சற்று நேரத்தில் அங்கே வந்த தாமரை தமையனை கண்டதும், "அண்ணா..ஆஆ" என்று ஓடி வந்து அணைத்துக் கொண்டவளின் குரலில் தன்னுணர்வு பெற்றவன் தானும் அணைத்துக் கொண்டவன், "தாருமா.. என்ன டா இது எதுக்கு இந்த அழுகை.. முதல்ல கண்ணை தொட.. அது தான் நான் வந்துட்டேன் இல்லை.. நான் பாத்துக்கிறேன் இனி.." என்றவனின் வார்த்தையில் இனி எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்று உறுதி இருந்தது.
தாமரையோடு சேர்த்து மொத்த வானர படைகளும் அவனை அணைத்துக் கொண்டார்கள்.. அவனை பிரிந்திருந்த ஏக்கம் அனைவருக்கும் இருந்தது.. அவனின் இரு தாய்களும் அத்தைகளும் கூட அவனை அணைத்துக் கொண்டு பாசமழை பொழிந்தார்கள்..கூடவே தந்தைகளும் மாமன்களும் இணைந்தார்கள்.
எல்லோரையும் தனது வார்த்தைகளில் சமாதானம் செய்தவன்,
"அத்தை அம்மா கொஞ்சம் எல்லாரும் அமைதியா இருங்க.. இனி எப்பவும் நான் உங்களோட தான் இருக்க போறேன்.. என்னோட கம்பெனி மொத்தமும் நான் இங்கிருந்தே பாத்துக்க போறேன்.. எமர்ஜென்ஸின்னா கண்டிப்பா போயிட்டு வருவேன்.. இனி உங்க யாரையும் என்னால பிரிஞ்சிருக்க முடியாது.." என்று சொன்னவனின் பார்வை வஞ்சியவளின் மலர் மேனியில் திளைத்திருந்தது.
அதை கேட்ட அனைவருக்கும் இன்னும் சந்தோஷமாய் இருந்தது.. எது எப்படி இருந்தாலும் இனி இந்த குடும்பத்தின் சந்தோஷ சாரல் வீசப்போவது உறுதி என அனைவரும் உணர்ந்தார்கள்.. இனி எதையும் கடந்து வந்து விட முடியும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வந்தது.
அன்பாளன் ஒருவனின் ஒவ்வொரு வார்த்தையும் மலையும் மாற்றிப் போடும் வல்லமையை தருகிறது.
குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் அவன் வந்தது ஆனந்தம் என்றால் அந்த குடும்பத்தின் ஒட்டு மொத்த சந்தோஷத்தை கண்டதுமே பெண்ணவளின் வதனத்தில் பேரானந்தம் தான்.
அவர்களின் சந்தோஷத்தை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு யாரோ தன்னை உற்றுப் பார்ப்பது போல் தோன்ற சுற்று முற்றும் பார்த்தாள்.. ஆனால் அவளின் மைவிழிகளுக்கு யாரும் தெரியவில்லை.. கள்வன் அவளின் தேடலை உணர்ந்து பார்வையை மாற்றிக் கொண்டான்.
அந்த வீட்டின் மூத்த பேரன் வந்ததற்கு அந்த வீடே கோலாகலமாய் கொண்டாடியது.. எப்பொழுதும் வந்தால் பெரிதாய் தெரியாது.. ஆனால் எப்பொழுதாவது வந்தால் அது அரிய பொக்கீஷம் தானே.. அப்படி தான் ஆத்விக் வந்ததும்.
தாய்மார்களும் அத்தைமார்களும் அவனுக்கு பிடித்தமானதை சமைக்க சென்றனர்.. அவர்களுடன் புனிதாவும் சென்றார் தன் பேரனுக்கு தன் கைகளால் சமைக்க.
ஆண்கள் தங்கள் வீட்டின் தங்க மகனுடன் பேசி கொண்டிருந்தனர்.. அவர்களுடன் இளையவர்களின் பட்டாளமும் சேர்ந்து கொண்டது.. அதை சந்தோஷமாக பார்த்து கொண்டு சென்றவள் தஞ்சமடைந்தது என்னவோ சமையலறை தான் தாய்மார்களுடன்.
இங்கே இவர்கள் குடும்பமாய் சந்தோஷமாய் இருக்கு அந்த சந்தோஷத்தை அழிக்க நரசிம்மன் ஆட்களை நியமித்தார்.

சாரி பா நானும் இதே சாரி சொல்லி சலிச்சி தான் போறேன்.. என்ன பண்ண ஆனா வேற வழி இல்லையே.. சோ சே டூ சாரி... நேரமில்லை கைய்ஸ்.. ஆனா இதையும் முடிக்கனும்னு ஒரு உத்வேகம் இருக்கு.. இது சில்லி ரீசன் தான் பட் முடிஞ்ச வரைக்கும் ஐ நீட் அப்டேட்.