• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாலைவன ரோஜா 15

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
பாலைவன ரோஜா 15



ஆத்விக்கின் பார்வை வந்ததிலிருந்து பெண்ணவளை தான் கள்ளுண்ட வண்டாய் சுற்றிக் கொண்டிருந்தது.. பெண்பாவை உணர்ந்தாலும் அது யாரின் பார்வை என்று உணர முடியாமல் தடுமாறினாள்.. அந்த பார்வை வீச்சு அவளை அருவருக்க வைக்கவில்லை.. மாறாக இதயத்தில் இதுவரை நுழையாத சலனம் குறுகுறுப்பை தோற்றுவித்தது.



ஆனால் இது என்ன மாதிரியான உணர்வு என்று மட்டும் வஞ்சியவளுக்கு விளங்கவில்லை.



இனம் விளங்கவில்லை



எவனோ என் அகம் தொட்டுவிட்டான்..



என்ற வார்த்தையின் பொருளுக்கேற்ப தன் மனதில் தோன்றும் மாற்றங்களை கண்டு வியப்புற்றாள்.



ஆத்விக்கோ தன்னவளை பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தான்.. இயல்பாக தான் இருந்தாள்.. ஆனால் அவளின் வதனத்தில் இனம்புரியா பயம் இருந்ததை கண்டு கொண்டான்.. எதனால் என்று தான் புரியவில்லை.



ஆத்ம இணையின் வலியை உணர அவருடன் ஒட்டி பழகி உறவாடி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.. நம் மனதிற்குள் அவர்கள் நுழையும் தருணம் ஆழம் இது தான் அவ்வலியை கண்டு கொள்கிறது.. அது போல தான் என்று அவள் தான் தன் வாழ்வு என்று நினைத்தானோ அன்றே அவளின் நடவடிக்கை அவனுள் பதிந்து போனது.. இப்பொழுதும் அவள் வலியை கொண்டுள்ளாள் தான் ஆனால் அதன் முழுமையான காரணம் இன்னும் ஆடவன் அறியவில்லை.



பெண்ணவளின் ரத்த நாளங்கள் எல்லாம் சில்லென்ற காற்றில் மிதந்தது.



இது என்ன உணர்வு உடலெல்லாம் மின்சாரம் பாயும் படியாக.. மயில்கால்கள் குத்தீட்டு நிற்க மனதை ஏதோ கசக்கி பிழிவதைப் போல் இருக்கிறதே.. ஏன் இப்படி இத்தனை வருடத்தில் ஒரு நாளும் இது போல் நடந்ததில்லையே.. மனமும் இப்படி துடித்ததில்லையே.. என்று வஞ்சியவளின் மனம் தான் அலைபாய்ந்து கொண்டிருந்தது.



ஆனால் கள்வனவனோ தன் காதலியை இமைசிமிட்டாமல் தீண்டிக் கொண்டிருந்தான் பார்வையால் ஸ்பரிசித்து இம்சித்தான்.



கள்வனின் பார்வையை காதலி அறியாமல் போனாலும் உறவுகள் அறியுமே.. இதோ அறிந்து கொண்டவரும் குறுஞ்சிரிப்புடன் தன் மனாட்டியை பார்த்து இமை சிமிட்டினார்.



அவரும் சந்தோஷமாய் அதை பார்த்து மனம் பூரித்து போனார்.



ஆத்விக் வந்ததால் அந்த வீட்டில் விதவிதமான உணவு வகைகள் சமைக்கப்பட்டது.. எல்லோரும் சந்தோஷமாய் உணவருந்த போகும் நேரம் ஆராத்யா தான் புனிதவதியிடம் திரும்பி,



"பாட்டி இன்னைக்கு உங்க கையால எங்க எல்லாருக்கும் சாப்பாடு உருண்டை பிடிச்சி கொடுக்குறீங்களா.. சாப்பாட்டை மொட்டை மாடிக்கு எடுத்துட்டு போலாம்.." என்றாள் கண்களில் ஆசை மின்ன.



அனைவரும் ஒரு எதிர்பார்ப்புடன் அவரை பார்த்தனர்.. பெரியவர்களிலிருந்து இளையவர்கள் வரை எல்லோரின் முகத்திலிருந்து எதிர்பார்ப்பும் அவரை தலையாட்ட வைத்தது.



ஓஓஓ என்று கூச்சலிட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களின் மகிழ்ச்சியை பார்த்த ஆரிணியும் மகிழ்ந்து போனாள்.



சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தான் என்பது போல் அந்த குடும்பத்தின் சந்தோஷேமே அவளின் மகிழ்ச்சியானது.



எல்லோரும் ஒன்றாக வட்டமாக அமர்ந்திருக்கு புனிதவதியின் கைகளில் சற்று பெரிய பாத்திரத்தில் சாப்பாடு இருந்தது.



அவரின் கைகளால் எல்லோருக்கும் உருண்டை பிடித்துக் கொடுக்க ஆரிணிக்கும் கொடுத்தார்.



அதை மனம் நெகிழ கண்கள் கலங்க வாங்கியவள் எல்லோரையும் மகிழ்ச்சியுடன் பார்த்தபடி உணவை உண்டாள்.



அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவனுக்கு அவளின் மகிழ்ச்சி ததும்பிய கண்ணீர் முகம் வலியை கொடுத்தது.. இந்த பெண் என்ன சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் இப்படி உணர்ச்சி வசப்படுகிறாள் என்று தான் யோசித்தான்.



ஆனால் அவனுக்கு தெரியாதே அவளின் முந்தைய வாழ்க்கை நிலை.. தெரிந்தால் தாங்குவானா..? இல்லை அவளை முழுதாய் தான் ஏற்றுக் கொள்வானா..? விடை என்னவோ காலத்தின் கையில் தான்.



எல்லோரும் உணவருந்தி முடிந்ததும் மீண்டும் எல்லோரும் அப்படியே அமர்ந்து கொண்டார்கள்.. இளைய பட்டாளமோ ஆரிணியை பார்த்து பாடச் சொன்னார்கள்.. பெரியவர்களும் அதை ஆவலாய் பார்த்திருந்தனர்.



அவளின் மனம் மகிழ்ந்து நிறைந்திருக்க அவளுக்கும் பாடும் மனநிலை உண்டானது.. சந்தோஷமாக தலையாட்டியவள் பாட ஆரம்பித்தாள்.



மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா



பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா



மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா



பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா



பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா



ஆயிரம் கோடிகள் செல்வம்



அது யாருக்கு இங்கே வேண்டும்



அரை நொடி என்றால் கூட



இந்த ஆனந்தம் ஒன்றே போதும்



பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா



வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா



சின்ன சின்ன கைகளிலே



வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ



சிரித்து பேசி விளையாடும்



நெஞ்சம் இங்கு மத்தாப்பூ



இன்னும் அந்தி வானில்



பச்சைக்கிளி கூட்டம்



என்ன சொல்லி பறக்கிறது?



நம்மை கண்டு நானி



இன்னும் கொஞ்ச தூரம்



தள்ளி தள்ளி போகிறது



எங்களின் கதை கேட்டு



தலையாட்டுது தாமரைப்பூ



மயிலே நாம் ஆடிய கதையை நீ பேசு



அலைகள் வந்து மோதாமல்



கடலில் கரைகள் கிடையாது..



எந்த அலைகள் வந்தாலும்



எங்கள் சொந்தம் உடையாது..



பெண்ணவள் பாடிய அடுத்த நொடியில் ஆடவனும் அவளுடன் இணைந்து கொண்டான்.. பாடியவள் அதை உணரவில்லை.. ஆனால் குடும்ப மொத்தமும் அதை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.



சுற்றி சுற்றி வருதே



பட்டு தென்றல் காற்று



இங்கே இங்கே பார்க்கிறது..



மொட்டு விடும் மலரை



காஞ்சி பட்டு நூலில்



கட்டி தர கேட்கிறது..



வேலிகள் கிடையாது



எந்த வெள்ளமும் நெருங்காது



நிலவே இது கொஞ்சும் கிளிகளின் இசைப்பாட்டு..



குடும்பம் மொத்தமும் இருவரையும் மகிழ்ச்சியாக பார்த்தது.. அதுவும் அவனின் குரலில் இருந்த மென்மை அவனின் குடும்பத்தாரையே யோசிக்க வைத்தது.







அதுமட்டுமல்லாமல் அவனுக்கு பாடவும் தெரியுமா என்ன..? என்பது தான் அவர்களை மூக்கின் மேல் விரலை வைக்க வைத்தது.



அந்த வீட்டின் ஆண்மகனுக்கும் பாடத் தெரியும் என்பது வீட்டின் உறுப்பினர்களுக்கே இப்போது தான் தெரியும் போல எல்லோரும் அவனையே பார்த்திருந்தனர்.



அதை உணர்ந்தவனும் மற்றவர்களிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்து தனது அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.



மற்ற எல்லோரும் அந்த நேரத்தை சந்தோஷமாய் அனுபவித்த படி அங்கிருந்து சென்றனர்.



ஆதவன் உதிக்கும் அதிகாலை பொழுதில் நரசிம்மனின் வீட்டுக்குள் அந்த அழுகுரல் சத்தம் கேட்டது.



அது ராதாவின் அலறல் சத்தம் தான்.."அத்தை இங்கே பாருங்க.. என்னாச்சி உங்களுக்கு.. மகிழா மாமா என்னங்க சீக்கிரம் வாங்க இங்கே.. அத்தை மூச்சு பேச்சில்லாம இருக்காங்க.." தன் மடியில் நினைவில்லாமல் படுத்திருந்த பெரியநாயகியை பார்த்தபடி அனைவரையும் கத்தி அழைத்தார்.



அவரின் குரலுக்கு அனைவரும் ஓடி வர முதலில் வந்த மகிழ்வேந்தன் தன்னை தாயாய் தாங்கி வளர்த்த தன் பாட்டியின் நிலை கண்டு கலங்கியவன் அடுத்த நொடி அவரை தூக்கி கொண்டு காருக்கு சென்றான்.



பார்த்திபனும் நரசிம்மனும் பதட்டமாய் அவனின் பின்னே அமர்ந்தனர்.. ராதாவும் மகிழனுடன் முன்னே அமர்ந்து கொள்ள அடுத்த நொடி அந்த கார் மருத்துவமனையை நோக்கி சீறிப் பாய்ந்தது.



நரசிம்மன் இறுகிப் போய் அந்த அறையின் வராண்டாவில் அமர்ந்திருந்தார்.. அவரின் அருகே பார்த்திபனும் ராதாவும் பதட்டத்துடன் இருக்க மகிழன் மட்டும் நொடிக்கொரு முறை அறையின் வாசல் திறக்குமா என்று ஏக்கத்துடன் பார்ததிருந்தான்.



உள்ளே அந்த கட்டிலின் சுற்றி டாக்டர்கள் இருக்க நடுவே பெரியநாயகி முகத்தில் ஆக்ஸிஜன் மாட்டப்பட்டு படுத்திருந்தார்.



எல்லோரும் பதட்டமாய் தங்களுக்குள் விவாதித்து கொண்டிருக்க பெரியநாயகியின் விழிகள் மட்டும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தது போலும்.



சற்று நேரத்தில் வெளியே வந்த மருத்துவர் குழுவை கண்ட மகிழன் வேகமாய் அவர்களின் அருகே வந்து நின்றான்.



" டாக்டர் என்னாச்சி என்னோட பாட்டிம்மாக்கு.." என்றான் பதட்டமாய்.



அவனைத் தொட்டு ராதாவும் பார்த்திபனும் அதே கேள்வியை விழிகளில் தொக்கி நின்றிருந்தனர்.



"சார் அவங்களோட பிரஷர் லெவல் அதிகமா இருக்கு.. அதீதமான மன அழுத்தம் இல்லை எதையாவது மனசுல போட்டு அழுத்தி அதோட ஆழம் தாங்காம கூட இப்படி ஆகியிருக்கலாம்.. அவங்களோட மனசை முதல்ல ரிலாக்ஸா வைங்க.. இருபத்தி நாலு மணிநேரம் அவங்க அப்சர்வேஷன்ல இருக்கட்டும்.. அதுக்கப்புறம் தான் அவங்களோட நிலையை முழுசா சொல்ல முடியும்.." என்றார் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர்.



அதை கேட்டதும் அனைவரின் மனமும் பாரமானது.. ஏன் நரசிம்மனின் மனமும் ஒருங்கே இன்னுமுமாய் இறுகிப் போனது.



அவர் கண் விழிக்க வேண்டி பார்த்திபனும் ராதாவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்கள்.



மகிழன் மட்டும் தன் தாத்தாவின் முன்னால் சென்று நின்றவன் கோபமாய் அவரை பார்த்து,



"போதுமா நல்லா பாருங்க அங்கே என் பாட்டி உயிருக்கு போராடிட்டு இருக்காங்க.. ஆனா அதை பத்தி உங்களுக்கு என்ன கவலை.. பெத்த பொண்ணு ஆசைப்பட்டவனை கட்டிகிட்டதுக்காக இத்தனை வருஷமா அவங்களை வீட்டுக்குள்ளே கூட நீங்க விடலை இல்லை.. அப்படி உங்க ஜாதி வெறி புடிச்சி ஆட்டுது இல்லை.. நல்லா எல்லாரையும் கொன்னுட்டு நீங்க மட்டும் உங்க ஜாதி சனம்னு கட்டிட்டு ஆளுங்க..



நாங்க மட்டும் தானே இருக்கோம்.. ஒட்டுக்கா எங்களையும் கொன்னுடுங்க.. இனி நீங்களே ராஜா நீங்களே மந்திரின்னு உங்க இஷ்டம் போல இருங்க.. எம்பாட்டிக்கு மட்டும் எதாவது ஆகட்டும்.. அதுக்கப்புறம் இந்த மகிழனை நீங்க வேற ஆளாத்தான் பார்ப்பீங்க.. அப்பா உங்க அப்பாகிட்ட சொல்லி வைங்க.. இனி இவரோட நிழல் கூட எம்பாட்டி மேல படக்கூடாது.. எனக்கு தெரியும் என் பாட்டியை எப்படி காப்பாத்தனும்னு.. முதல்ல இவரை இங்கிருந்து போக சொல்லுங்க.." என்றான் அவரிடமிருந்து மூஞ்சியை திருப்பியபடி.



அவன் அத்துனை பேசியும் எதுவும் பேசாமல் அவனை பொருள் விளங்கா பார்வை பார்த்தவர் அங்கிருந்து எழுந்து சென்றார்.. ஆனால் அவரின் நடையில் எப்போதும் இருக்கும் கர்வம் இல்லாமல் இருந்ததை யாரும் உணரவில்லை.



ஏன் பார்த்திபனும் ராதாவும் கூட அவனை தடுத்து எதுவும் கூறவில்லை.



அந்த வீட்டின் ஆணிவேர் என்றால் அது பெரியநாயகி தான்.. இன்று அவரின் நிலை மற்றவர்களை எதுவும் சிந்திக்க விடாமல் செய்தது.



ஏன் நரசிம்மனுக்கு மட்டும் தன் மனைவியை இந்த நிலையில் காண்பது இனிக்கவா செய்கிறது.. இல்லையே இத்தனை வருடம் தன் நிழல் போல் வந்தவள் இன்று படுக்கையில் இருந்தது அவருக்கு பெரும் வலியை கொடுத்ததை தான் யாரும் அறியவில்லை.
பார்ப்போமே இனி வரும் காலத்தின் கையில் நிகழும் மாற்றங்களை..
வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது..
மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது..
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே..
மடி மீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே..
நல்ல மனையாளின் நேசமொரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோழி..


அடுத்த பாகத்தில பாக்கலாம் மக்களே.. மன்னிக்கவும் என் பாலைவன ரோஜாக்களே.