• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாலைவன ரோஜா 17

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
பாலைவன ரோஜா 17

தன்னவளையே ஓர விழியில் பார்த்த படியே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான் ஆத்விக்.. ஆனால் வஞ்சியவளின் நினைவில் அவன் இல்லை என்றாலும் அவனின் பார்வை பெண்ணவளின் உடலை சிலிர்க்க வைத்தது என்னவோ உண்மை தான்.

அந்த தனியார் மருத்துவமனையின் வாயிலில் வண்டியை நிறுத்தியவன் மூவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விசாரித்து கொண்டு சென்றான்.

அந்த ஐ சீ யூவின் வாயிலில் மகிழனும் பார்த்திபனும் ராதா என மூவரும் இருந்தனர்.. மூவரின் முகத்திலும் சோகம் இருந்தது.

நரசிம்மன் மட்டும் அந்த இடத்தில் இல்லை.. அவர்களை பார்த்த சீதா தன் தம்பியை பார்த்து,

"பார்த்திபா.." என்று அழைத்தார்.

தன் தமக்கையின் குரலில் திரும்பியவர் நீண்ட வருடங்கள் கழித்து பார்த்ததில், "அக்கா.." என்றார் பாசமாய்.

ஒரே ஊரில் இருந்தாலும் இதுவரை அதிகமாய் இருவரும் பார்த்ததில்லை.. ஆனால் இன்று பார்த்ததும் இருவராலும் பாசத்தை மறைக்க முடியவில்லை.

ஓடி வந்து தமக்கையை அணைத்துக் கொண்டவர்,

"அக்கா எப்படி இருக்கீங்க.. வாங்க மாமா.." என்று ஜானகிராமனையும் அழைத்தார்.

"பார்த்திபா அம்மாக்கு என்னடா ஆச்சி.. இப்போ எப்படி டா இருக்கு.." என்றார் அழுதபடியே.

"அக்கா அம்மாக்கு ஆஞ்சியோ பண்ண சொல்லிருக்காங்க கா.. அப்பா எங்கேயோ போனாரு.. இன்னும் வரலை.. வந்து உங்களை பார்த்தா கோபப்படுவாரு.. இப்போ நீங்க போய் முதல்ல அம்மாவை பாத்து பேசுங்க.. நீங்க பேசுனா அம்மா எழுவாங்க கா.." என்றார் தன் தமக்கைக்கு ஆதரவாய்.

வேகமாய் உள்ளே சென்றவர் கட்டிலில் ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டிருக்கும் தன் தாயை பார்த்தவருக்கு மனம் ரணமாய் வலித்தது.

பிறந்தது முதல் பார்த்த தாயின் முகம் இடையில் அவரின் திருமணத்தில் பிரிந்து போன தாயின் அன்பு எத்தனையோ முறை பார்க்க துடித்த தாயின் முகத்தை தந்தையின் மீதிருந்த பயம் மறக்கடிக்க நீண்ட நெடிய வருடங்கள் கழித்து இந்த நிலையிலா தன் தாயை காண வேண்டும் என்று ஒரு மகளாய் சீதாவின் மனம் தவித்து துடித்தது.

இங்கே வெளியே பார்த்திபன் தோளில் ஆதரவாய் தட்டி கொடுத்த ஜானகிராமனின் முகத்தை பார்த்தவருக்கு அழுகை தான் வந்தது... எல்லாம் சரியாகும் என்று கண் மூடி திறந்தார்.

ஆத்விக்கோ மகிழனின் அருகில் வந்தவன், "உனக்கு உண்மையிலே என் தங்கச்சியை பிடிச்சிருக்கா மகிழா.. எத்தனை தடை வந்தாலும் அவளை கை விட மாட்டியே.." என்றான் அவனின் கண்களை பார்த்து.

மகிழனோ, "என்ன மச்சான் இப்படி கேட்குறீங்க.. அவ தான் என்னோட வாழ்க்கை.. யாரு எதிர்த்தாலும் அவ தான் என்னோட மனைவி.. இதுல எப்பவும் எந்த மாற்றமும் இல்லை.. இது நான் உங்களுக்கு தர வாக்கு.." என்றான் அவனின் கைகளில் சத்தியம் செய்த படி.

அழுத்தம் கொடுத்து அவனின் கைகளை பற்றிக் கொண்ட ஆத்விக்கிற்கு நிரம்பவே சந்தோஷம்.. அவனும் மகிழ்வேந்தனை பற்றி விசாரித்த வகையில் அவனின் அன்னையின் அன்பினை கொண்டுள்ளவன் என்று தெரிந்து கொண்டதுடன் சத்தியத்திற்கு கட்டுப்பட்டவன் என்றும் புரிந்தது.

இருவரையும் பார்த்த பார்த்திபன் ஜானகி ராமனுக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது.

உள்ளே சீதாவுடன் ராதாவும் பெரியநாயகியுடன் இருந்தனர்.

இங்கே ஆரிணி மட்டும் அனைவருக்கும் டீ வாங்கி வர கேண்டின் சென்றிருந்தாள்.

டீ வாங்கி கொண்டு வரும் வழியில் தான் அவனை பார்த்தாள்.. இவன் எங்கே இங்கே.. இவன் தன்னை பார்த்தாள் அடுத்த நொடி தன்னை மீண்டும் அந்த சேற்றில் அமிழ்த்தி விடுவானே என்று பயந்தவள் அவனுக்கு பயந்து அங்கிருந்த சுவற்றின் பின்னால் ஒளிந்து கொண்டவள் அவன் யாருடனோ பேசுவதை பார்த்தவளுக்கு அந்த இன்னோர் ஆள் யாரென்று தெரியவில்லை.

அவன் எப்போது இங்கிருந்து செல்வான் என்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் வேறுயாருமில்லை எந்த சாக்கடையில் இருந்து யாரிடமிருந்து தப்பி வந்தாளோ அந்த ரங்கநாயகியின் தம்பியான ரங்கன் தான் அங்கே நின்றிருந்தான் யாருடனோ பேசியபடி.

சற்று நேரத்தில் அங்கு பேசியவரிடமிருந்து விடை பெற்று சென்றவனை கண்டு பெரு மூச்சு விட்டவள் அவன் பேசிவிட்டு சென்ற ஆளை பார்த்ததும் அதிர்ச்சியில் சிலையாய் நின்று விட்டாள்.

ஆம் ரங்கனிடம் நின்று இதுவரை பேசியது வேறு யாருமில்லை சீதாவின் தந்தையான நரசிம்மன் தான்.

தாத்தா ஏன் அவனுடன் பேச வேண்டும்.. அவனுக்கும் தாத்தாவிற்கும் என்ன சம்பந்தம்.. இல்லை என்னை தேடி வந்திருப்பானா என்ன.. இல்லை வேறு ஏதேனும் வேலையாய் வந்திருப்பானா என்ன.. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.. ஆனால் புரிந்த விஷயம் அவளுக்குள் பயத்தை விளைத்தது.

இவன் என்னை தேடி வந்தால் நான் யார் என்று வீட்டிற்கு தெரிய வந்தால்.. ஆத்விக்கிற்கு தெரிய வந்தால்.. என்ற எண்ணத்தில் சூடு தாங்காமல் கண்கள் கலங்க அங்கிருந்த பிள்ளையார் கோவிலின் முன்னே சென்று நின்றுவிட்டாள்.

கண்களில் கண்ணீர் வழிய அந்த யானை முகத்தனை நோக்கி கரம் குவித்து நின்று விட்டாள்.

" முக்கன் முதல்வனே யானை முகத்தானே உன்னையே ஒவ்வொரு நாளும் கும்பிடறேனே.. ஏன் இன்னும் எனக்கு கஷ்டத்தை குடுத்துட்டு இருக்க.. எந்த சாக்கடையில இருந்து தப்பி வந்துட்டேனு நினைச்சேனோ திரும்ப அங்கேயே விழுந்துடுவேனோன்னு பயமா இருக்கே.. அந்த குடும்பம் என்னை ரொம்பவே நம்புறாங்க.. ஆனா நான் எங்கிருந்து வந்தேன்னு தெரிஞ்சா என்னை ஏத்துப்பாங்களா.. இப்போ எனக்கு கிடைக்கிற மரியாதையான வாழ்க்கை கிடைக்குமா.. வேணாம் கடவுளே என்னை இன்னும் தண்டிக்காத.. உன்கிட்ட நான் காசு பணம் வேணும்னு கேட்கலை..

ஆனா என்னை ஒழுக்கமா வாழ விடு.. ஒரு தாசி பெத்த பொண்ணுன்னா நானும் அந்த தொழிலுக்கு தான் போகனும்னு விதி இருக்கா என்ன.. அந்த விதியை மாத்தற வல்லமை உனக்கில்லையா..

என்னைப் போல பொண்ணுங்க குடும்பம் கண்வன் குழந்தைன்னு சந்தோஷமா வாழக்கூடாதா.. ஏன் எனக்கு இந்த தண்டனை.. என்னால ஓட முடியலை.. இல்லை என்னை கொன்னுடு..

நானும் ஒரு பொண்ணுன்னு இப்போ தான் எனக்கு ஒருத்தர் உணர்வுபூர்வமா உணர்த்தியிருக்காரு.. அது என்னன்னு நான் முழுசா உணர்வதற்குள்ளாகவே என்னை மீண்டும் சாக்கடையில தள்ளிடாத பா.. என்னால தாங்க முடியாது.." என்றாள் கண்களில் வழியும் கண்ணீருடன்.

மனம் நிறைய வலிகளுடன் ஒரு பெண் ஒழுக்கமாய் வாழ இங்கே நிறைய போராட வேண்டியிருக்கிறது.

இங்கே சூழ்நிலையும் சந்தர்ப்பமும் எல்லாவற்றையும் மாற்றி அமைக்கிறது.. ஒழுக்கமாய் வாழ நினைக்கும் பெண்ணை சந்தர்ப்ப சூழ்நிலையும் நம்மை சூழ்ந்த உறவுகளும் மாற்றி வைக்கின்றனர்.. செய்யாத தவறை செய்ததாய் சித்தரிக்கும் உலகம் அதற்கு உத்வேகம் அளிக்கிறது.

அந்த வகையில் ஆரிணியும் கூட சேற்றில் முளைத்த செந்தாமரை அவள்.

தாயின் தாசி தொழில் தன் நிழலை கூட அண்டக்கூடாது என்று லட்சியத்தை கொண்டதால் பல இன்னல்களை அனுபவித்தவள்.. ஆனால் அதற்காக அவள் இழந்தது அவளின் மழலை பருவத்தின் கொண்டாட்டத்தை.

இதோ புருஷோத்தமன் வீட்டிற்கு வந்த இந்த கொஞ்ச நாளாகத்தான் அவள் அவளாக இருக்கிறாள்.. ஒரு குடும்பத்தின் ஒற்றுமையை உணர்கிறாள்.. தாய் தந்தை தங்கை தாத்தா பாட்டி பாசத்தை அனுபவிக்கிறாள்.. ஆனால் இது நிரந்தரமானதா என்று கேட்டாள் நிச்சயம் இல்லை என்று தான் சொல்வாள்.. என்று அவளை பற்றி அந்த குடும்பத்திற்கு தெரிகிறதோ அன்றே அவளை வெளியேற்றினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது பாலும் கள்ளும் ஒன்று தான்.. அது போல தான் அவள் வாழ்ந்த இடத்தை தான் மற்றவர்கள் பார்ப்பார்களே அன்றி அவளின் நெருப்பு வாழ்க்கையை யாரும் அறியமாட்டார்கள்..

இங்கே ஆத்விக்கோ தன்னவள் சென்று இத்தனை நேரம் ஆகியும் வரவில்லையே என்ற பதட்டத்துடன் அவளை தேடி வந்தவன் கண்களில் விழுந்தது ஆரிணியின் அருகில் நின்றிருந்தவன் அவளை நோக்கி கத்தியை கொண்டு சென்றது தான்.

அதை கண்டதும் ஆடவனின் உள்ளம் ஏனோ ஒரு நொடி நின்று தான் போனது.. அடுத்த நொடியே தன்னை மீட்டவன் யாருமறியாமல் அவனிடம் வேகமாய் சென்றது தான்.

அவன் கத்தியை அவளின் வயிற்றில் குத்த போகும் சமயம் சரியாய் அங்கே வந்தவன் அவன் கைகளை பிடித்து முறுக்கி கத்தியை இறுக்கமாய் பிடித்துக் கொண்டான்.

தன் அருகில் கேட்ட சத்தத்தில் கண் திறந்தவள் கண்டது ஆத்விக் ஒருவனின் கையை இறுக்க பிடித்திருப்பதும் அந்த கத்தி அவளை நோக்கி இருந்ததும் அவளுக்குள் அச்சத்தை விளைவித்தது.

ஆஆஆ என்ற அவளின் அலறல் சத்தம் நான்கு திசைகளிலும் கேட்டது.

ஆத்விக் தன் ஒற்றைக் கையாலே அவனை அடித்து துவைத்து விட முகத்தில் ஆங்காங்கே ரத்ததுடன் அரைமயக்க நிலையில் இருந்தவனை கண்டதும் ஆரிணிக்கு பயம் வர வேகமாய் வந்து ஆத்விக்கின் கரத்தை பிடித்துக் கொண்டவள்,

"வேணாங்க அவனை விட்டுருங்க.. செத்துற போறான்.." என்று இறுக்கமாய் அவனின் கைகளை நடுக்கத்துடன் பிடித்துக் கொண்டாள்.

அவளின் நடுக்கம் உணர்ந்தவன் அடித்தவனை விட்டு விட்டு தன்னவளை இறுக்கமாய் பிடித்துக் கொண்டான்.

ஒருவரின் நெருக்கம் மற்றவர் உணரவில்லை.. இங்கே அடிவாங்கியவனோ உயிர் தப்பித்தாள் போதும் என்ற பயத்தில் ஆரிணியை கோபமாய் பார்த்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான் தன் உயிர் காத்துக் கொள்ள.

அவளின் நடுக்கம் சற்றும் குறையாததில் பயம் கொண்டவன் அவளை அணைத்தபடியே , "ஒன்னுமில்லை டா அம்மு.. அவன் போயிட்டான் பாருமா.." என்றான் அவளுக்கு ஆறுதல் தரும் விதமாய்.

தன் மனதுக்குள்ளாகவே அவளுக்கு வைத்த பெயரை உரைத்ததை அவனும் அறியவில்லை.. பெண்ணவளும் பயத்தின் வீரியத்தில் அறியவில்லை.

சற்று நேரத்தில் அங்கே வந்த மகிழனும் ஜானகிராமனும் இருவரையும் பார்த்து வேகமாய் அங்கே வந்தவர்கள்,

"ஆத்விக் என்னாச்சி ஏன் ஆரிணி இப்படி பயந்துருக்கா.." என்றார் பதட்டமாய்.

"தெரியலை பா யாரோ ஒருத்தன் இவளை கொல்ல வந்துருக்கான்.. நல்லவேளை நான் பார்த்தேன்.. இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்.." என்று தான் மார்பில் நடுக்கத்துடன் சாய்ந்தபடி நின்றவளை பார்த்து கொண்டே சொன்னான்.


"அம்மா ஆரிணி இங்கே பாருமா அவன் போயிட்டான்.. அவ்ளோ சீக்கிரம் உன்கிட்ட யாரும் நெருங்க முடியாது மா.. அப்படி நாங்க விட்ருவோமா என்ன.." என்றார் அவளின் தலையை தடவி ஆறுதல் தந்தபடி.

அவரின் ஆறுதலில் வெளி வந்தவள் அப்போது தான் உணர்ந்தாள் ஆறுதலுக்காக பற்றற்ற கொடியாய் அவனின் மார்பில் சாய்ந்திருந்ததை.

அதைக் கண்டு விதிர்த்து போனவள் வேகமாய் அவனிடமிருந்து விலகியவள் அங்கிருந்து அவனை பயத்துடன் பார்த்துக் கொண்டே ஓடி விட்டாள் அங்கிருந்து.

போகும் அவளை யோசனையாய் பார்த்தான் ஆத்விக்.. அவளின் பயந்த முகம் ஆடவனுக்கு எதுவோ இருப்பது போல் உணர்த்தியது.

அதுமட்டுமன்றி தங்களிடம் அவள் எதையோ மறைக்கிறாள்.. இல்லை என்றால் யார் அவளை கொல்ல துணிந்து இதுவரை வந்தது என்றும் புரியவில்லை.. அதுவும் இத்தனை ஆள் நடமாட்டம் உள்ள இடத்திலே துணிந்து இதை செய்ய துணிந்தவர்கள் நிச்சயம் பெரிய கையாகத் தான் இருக்கும் என்று நினைத்தான்.. ஆடவனுக்குள் சந்தேக விதையை தூவி விட்டு பெண்ணவள் பயத்துடன் இல்லத்தில் அடைக்கலம் புகுந்து விட்டாள்.

அவளை பற்றிய உண்மை தெரிந்தால் ஆடவனின் முடிவு என்னவாக இருக்குமோ..?


காலம் கிழித்த கவிதையில்
மீண்டும் எழுத ஆசைகள்..
பாதி வரைந்த கோலத்தை
விரைந்து முடிக்க ஆசைகள்..
ரசிகனே ரசிகனே ரசிக்கவா
மீண்டுமே ராகத்தோடு
தாளம் சேர்ந்து விட..


அடுத்த பாகத்துல பாக்கலாம் மக்களே.. அனைவருக்கும் தீப ஒளி வாழ்த்துக்கள்.