• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாலைவன ரோஜா 18

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
பாலைவன ரோஜா 18

இரு கைகளையும் பிசைந்தபடி அவனின் முன்னே நின்றிருந்தாள் வஞ்சிமகள்.. ஆடவனோ அவளை ஆராயும் பார்வை பார்த்திருந்தான்.

அவனால் அவளை தவறாய் நினைக்கவும் முடியவில்லை.. அதற்காக நடந்த எதையும் இல்லை என்று மறுக்க முடியவில்லை.. அவனின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியவளோ பயத்துடன் அவன் முன்னே நின்றிருந்தாள்.. ஆனால் அவனின் கேள்விக்கு இந்த பதிலும் கூறாமல்.

" இப்போ நீ சொல்லப் போறியா இல்லையா ஆரிணி.. உன்னை கொல்ல வந்தது யாரு.. எதுக்கு உன்னை கொல்ல வந்தாங்க.." என்றான் அழுத்தமான குரலில்.

அந்த அழுத்தமே சொன்னது இந்த கேள்விக்கு நீ பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டளை இருந்தது.. அதை பெண்மகளும் உணராமல் இல்லை தான்.. ஆனால் அவளால் உண்மையை சொல்ல முடியாதே..

பொருத்து பொருத்து பார்த்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் அமைதியாய் இருக்க முடியாமல் கோபமாய் எழுந்தவன்,

"நான் உன்கிட்ட கேட்ட கேள்விக்கு பதில் இந்த மௌனம் தானா ஓகே இப்பவே இந்த வீட்டை விட்டு போயிடு.. இது ஒன்னும் வந்து போறவங்க தங்கற சத்திரம் சாவடி இல்லை.. இது என்னோட வீடு குடும்பம்..உனக்கு ஒரு பாதுகாப்பு கொடுக்கறேன்னு சொல்லியிருந்தேன்.. இல்லேன்னு நான் சொல்லலை.. ஆனா நீ சொன்னதை உண்மைன்னு நம்பி தான் நான் பாதுகாப்பு கொடுத்தேன்.. ஆனா இப்போ உன்னை கொல்லவே வந்துருக்காங்க.. ஏன் எதுக்கு.. இந்த கேள்வி எனக்குள்ள ஓடிட்டு தான் இருக்கு.. நானே கண்டுபிடிக்க எனக்கு ரொம்ப நாள் ஆகாது..

வெறும் ரெண்டு நாள் போதும் உன்னோட பயோடேட்டா திரட்ட.. ஆனா நீ சொன்னதை உண்மைன்னு நம்பினாதால நான் அதை செய்யலை.. ஆனா இப்போ எனக்கு உன் மேல சந்தேகமா இருக்கு.. நான் ஒரு மிலிட்டரி மேன்.. என்னோட கால் தான் ஊனமே தவிர என்னோட அந்த தைரியம் இன்னும் எனக்குள்ள அப்படியே தான் இருக்கு.. சொல்லுங்க மிஸ் ஆரிணி நீங்க யாரு..?" என்று கேள்வியோடு நிறுத்தினான்.

அவனின் ஒவ்வொரு வார்த்தையும் நங்கையவளை உயிரோடு கொன்று புதைத்தது.. ஆனாலும் தான் வாழ்ந்த இழி நிலையை சொல்ல அவளின் தன்மானம் இடம் தரவில்லை.. ஆதலால் அழுதபடியே தலைகுனிந்து நின்றிருந்தாள்.

அவளின் அமைதி அவனுக்குள் உறங்கி கிடந்த கோபத்தை கிளறி விட்டிருந்தது.

" இப்போ நீங்க சொல்ற பதில்ல தான் இங்கே நீங்க இருக்கலாமா வேணாமான்னு நான் முடிவு பண்ணனும்.. இது உங்களுக்காக மட்டும் இல்லை என்னோட குடும்பத்துக்காகவும் தான்.. உங்களால என்னோட குடும்பத்துக்கு ஏதாவது ஆபத்துன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்.. யாரோ ஒருத்தருக்காக என் குடும்பத்தை நான் இழக்க முடியாது.." என்றான் முடிவாக.


அவனின் இறுதியான வார்த்தையில் அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் வலியினால் துடித்ததை உணர்ந்தவனின் உள்ளம் வலித்தது.. ஆனால் அவளிடம் உண்மையை வாங்கும் வழி இது தான் என்று நினைத்தவன் தன் மனதை இறுக்கிக் கொண்டு நின்றிருந்தான்.

வஞ்சியவளோ தன் இரு கைகளையும் இணைத்து அவனை வணங்கியவள், "சார் நான் உங்ககிட்ட முழுசா உண்மையை சொல்லலை தான்.. ஆனா என்னோட மானத்தை காப்பாத்திக்க தான் பொய் சொன்னேன்.. என்னால இந்த குடும்பத்துக்கு எந்த விதமான இடைஞ்சலோ ஆபத்தோ நிச்சயம் வர விடமாட்டேன்.. நானே இந்த வீட்டை விட்டு போயிடுறேன் சார்.." என்றாள் கலங்கிய கண்களுடன்.

அவளின் பதிலுக்கு ஆடவனின் கண்களோ இப்போது கூட உன்னை பற்றி கூற மாட்டாயா.. இல்லை கூறும் அளவுக்கு உன் வாழ்க்கை இல்லையா.. இல்லை இந்த குடும்பத்தின் மேல் உன் நம்பிக்கை அவ்வளவு தானா..? என்று பல கேள்விகளை தாங்கியிருந்தது.

ஆனால் பெண்ணவள் தான் அவனின் கேள்வி புரியாமல் நின்றிருந்தாள்.

அவளிடம் தாவி ஓடும் மனதை தடுத்து பிடித்தவன், "சரி இன்னைக்கே இந்த வீட்டை விட்டு நீங்க போலாம்.." என்று அவளிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாய் சென்று விட்டான்.. அதற்கு மேல் அங்கிருந்தால் அவளை அணைத்து ஆறுதல் சொல்ல கூறும் கரங்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்றுணர்ந்தவன் மனம் வலிக்க அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் சொல்லிச் சென்றதும் நங்கையவளுக்கு எங்கே செல்வது என்று புரியவில்லை.. அதுவுமில்லாமல் அவன் பேசி சென்ற வார்த்தை அவளின் இதயத்தை கூறாக்கி சென்றது.


ஆனாலும் தன்னால் யாருக்கும் எந்த வித ஆபத்தும் வரக்கூடாது என்று எண்ணிய பெண்ணுள்ளம் அந்த வீட்டை விட்டு வெளியேற துணிந்தது.

மருத்துவமனையில் இருந்து வந்ததிலிருந்து அவளை எங்கேயும் அனுப்பாமல் அவனின் கட்டுப்பாட்டிலே வைத்திருந்தவன் தான் ஆனால் இப்பொழுது அவள் உண்மையை கூற மறுக்கவும் அவளை போக சொல்லிவிட்டு அவனொன்றும் சந்தோஷமாய் இருக்கவில்லை தான்.

சீதாவும் ஜானகிராமனும் அங்கே நடந்ததை வீட்டிலே சொல்ல அனைவருக்கும் பயமாய் இருந்தது.. அது ஆரிணியை நினைத்து தான்.

ஆனால் புருஷோத்தமன் மட்டும் இதை எதிர்பார்த்தது போல் ஆத்விக்கை பற்றி யோசித்தார்.

அவருக்கு முன்பே ஒரு சந்தேகம் இருந்தது.. அது ஆரிணி இன்னும் முழுதாய் தங்களிடம் எதுவும் கூறவில்லை.. நிச்சயம் அவளுக்கு எதுவோ ஆபத்து உள்ளது என்பதை அறிந்தவர் தான் எப்பொழுதும் அவளை தன் குடும்பத்துடனே இணைத்துக் கொண்டார்.

இங்கே ஆரமுதன் ஆராதனாவின் முன்பு நிற்க அவளோ அவனை பாராமல் வெளியே தெரிந்த தோட்டத்தில் தன் பார்வையை பதித்திருக்க அவனோ அவளின் பின்னே சென்று தன் கரத்தை அவளின் முன்னே அணைத்துக் கொண்டவன்,

"ஆரா மா என்னாச்சி எதுக்கு இப்போ இந்த கோபம்.. மாமா எதாவது தப்பு செஞ்சிருந்தா சொல்லனும் டி.. அதுக்கு இப்படி வந்து தனியா பேசாம நிற்க கூடாது.. புரியுதா.. இப்போ என்னாச்சி என் ஆரா குட்டிக்கு.." என்று அவளை கொஞ்சினான்.

சற்று நேரத்தில் அவனின் கரத்தில் கண்ணீர் துளிகள் விழ அதில் அதிர்ந்தவன் அவளை தன் பக்கம் திருப்பி, "ஹேய் என்னாச்சி டா குட்டிமா.. எதுக்கு இப்போ இந்த அழுகை.." என்றான் அவளின் கண்ணீரை துடைத்து விட்டபடி.

:ஏன் மாமா நான் உங்களை கஷ்டப்படுத்துறேனா.." என்றாள் அவனின் விழிகளை பார்த்தபடி.

"ஏய் லூசு என்னடி பேசுற.. உன்னை போய் நான் அப்படி நினைப்பேனா.. நீ என் உயிர் டி.. சின்ன வயசுல இருந்து உன்னை நேசிக்கிறவன் டி.. இப்போ என் குட்டிமாக்கு ஏன் இந்த யோசனைலாம்.. நம்ம வீட்லேயும் நம்ம காதல் தெரிஞ்சி எல்லாரும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க.. ஆத்விக் மாமாக்கும் தாமரைக்கும் கல்யாணம் முடிஞ்சா அடுத்ததா நம்ம கல்யாணம் தான்.. அதோட ஆராத்யா ஷிவானிலாம் சின்ன பொண்ணுங்க.. அவங்களுக்கு கல்யாணத்துக்கு இன்னும் வருஷம் இருக்குடி.. நான் தாமரையை கிண்டல் பண்ண தான் சொன்னேன்னு உனக்கு நல்லாவே தெரியும்.. அப்புறம் ஏன் இந்த கண்ணீர் இந்த ஸாரிலாம்.. என்ன டா என்ன ஆச்சி.." என்றான் அவளை அணைத்து பிடித்தபடி.

" இல்லை மாமா நீங்க அக்காகிட்ட பேசுனதை நான் பெருசா எடுத்துக்கலை.. ஆனா நீங்க என்னை மட்டும் தான் பாக்கனும் பேசனும்னு நினைக்கிறது தப்பு தானே.. அது ஏனோ அந்த சமயத்தில உங்களை யாருகிட்டேயும் விட்டு கொடுக்க முடியலை மாமா.." என்றாள் சிறுபிள்ளையாய்.

அவளுக்கு அவள் செய்யும் செயல் சிறுபிள்ளைதனமாய் தெரிந்தாலும் தனக்கு மட்டுமே சொந்தமானவனை மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்கவும் சிறு பெண்ணிற்கு மனம் வரவில்லை.

"ஹேய் குட்டிமா என்னை நீ விட்டு கொடுக்கவே வேணாம் டி.. நானும் என் குட்டிமா இருந்த எடத்துல யாரையும் வைக்க தோனலை.. ஆனா ஒன்னு இது நம்மோட குடும்பம் இதுல நம்ம எல்லாரோட சந்தோஷமும் நமக்கு முக்கியம்.. இன்னும் ஒன்னு புரிஞ்சிக்கோ உன்னோட இந்த அதீதமான காதல் நம்ம வாழ்க்கையை வளமாக்க தான் பயன்படனும் புரியுதா.." என்றான் சமாதானமாய்.

அதை கேட்டு புன்னகையுடன் தலையாட்டியவள், "கண்டிப்பா மாமா.. நம்ம எல்லாரையும் நிச்சயம் சந்தோஷமா வச்சிப்போம்.." என்றபடி சந்தோஷமாய் அவன் மார்பில் தலைசாய்த்தாள்.

ஆராதனாவிடம் உள்ள சிறிய மைனஸ் பாயிண்ட் அது தான்.. அவளுக்கு சொந்தமானதை யாரிடமும் விட்டு கொடுக்க மாட்டாள்.. ஆனால் எடுத்து சொன்னாள் புரிந்து கொள்வாள்.

இங்கே கோவிலின் குளக்கரையில் அமர்ந்திருந்தான் மகிழ்வேந்தன்.. அவனின் அருகே தாமரையும் அமர்ந்திருந்தாள்.

" என்னாச்சி வேந்தா பாட்டி எப்படி இருக்காங்க.. அம்மாகிட்ட பாட்டி பேசுனாங்களா.. பாட்டி சீக்கிரம் சரியாகிடுவாங்க இல்லை.." என்றாள் குளத்தில் பார்வையை பதித்தபடி.

" ம்ம் ஆஞ்சியோ பண்ணனும் தாமு.. அத்தை அழுதுட்டாங்க.. அப்புறம் பேசி சரிபண்ணியாச்சி.. இப்போ ஆஞ்சியோ லாம் சாதரணமா ஆயிடுச்சி.. டாக்டர் ஓகே தான் சொல்லிருக்காங்க.. பாக்கலாம்.. நிச்சயம் நம்ம கல்யாணத்துக்குள்ள சரி ஆகிடுவாங்க.." என்றான் நம்பிக்கையாய்.

"நம்மோட கல்யாணம் எல்லோரோட ஆசிர்வாதத்தோட நடக்குமா வேந்தா.. எனக்கு பயமா இருக்கு.." என்றாள் கம்மிய குரலில்.

"நிச்சயம் நடக்கும் தாமு.. நானும் உன் அண்ணனும் நடத்தி காட்டுவோம்.. நீ கவலைப்படாதே.. சரி ரொம்ப யோசிச்சிட்டு இங்கே இருக்காதே.. நீ கிளம்பு நானும் ஹாஸ்பிடல் போறேன்.. பாய் மா.." என்றபடி அவளையும் அனுப்பி வைத்து விட்டு இவனும் கிளம்பி விட்டான்.


அதே நேரம் இங்கே ரங்கநாயகியின் முன்னே நின்ற ரங்கனை ஆத்திரத்துடன் இரண்டு கண்ணத்திலும் அடித்தவள், "டேய் அவளை நேர்ல பாத்துட்டு அப்படியே விட்டுட்டு வந்துருக்கியே.. அவளை கொன்னு அவளோட ரத்தத்தை காட்டியிருந்தாவது எனக்கு சந்தோஷமா இருக்குமே.. இப்போ என்னன்னா கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலைங்கற கதையா இல்லை அவளை விட்டுட்டு வந்துருக்க.." என்றவளின் கோபம் ஆரிணியை உயிரோடு விட்டு வந்து விட்டானே என்ற ஆத்திரம் தான் இருந்தது.



அதே கோபத்துடன் அவனும் "அக்கா அவளை பாத்துட்டேன்.. ஆனா அவளை கூட்டிட்டு வர முடியலை.. அவளுக்கு பாதுகாப்பா ஒருத்தன் இருக்கான்.. நான் அந்த நரசிம்மனை பார்க்க போனேன்.. அவன் என்னவோ உத்தமன் மாறி நான் சொல்ற வேலையை செய்யமாட்டேன்.. அவன் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை அது இதுன்னு கதை சொன்னான்.. அவனை மிரட்டிட்டு வரும் போது தான் இவளை பார்த்தேன்.. ஆத்திரம் கண்ணை மறைக்க அவளை கொன்னுடனும் ஆதங்கத்தோட தான் போனேன்.. ஆனா அதுக்குள்ள எவனோ வந்து காப்பாத்திட்டான்.. அவ எங்க இருக்கான்னு தெரிஞ்சிருச்சி இல்லை.. இனி அவ தப்பிக்க முடியாது கா.. அவளை விடவும் மாட்டேன்.." என்றபடி ஆக்ரோஷமாய் அங்கிருந்து சென்றான்.

அந்த இரவு வேலையில் புருஷோத்தமன் கோபமாய் அமர்ந்திருக்க அவரின் முன்னே தலைகுணிந்தபடி ஆத்விக்கும் அமர்ந்திருந்தான்.

"ஏன் ஆத்விக் இப்படி பண்ணே.. அந்த பெண்ணோட முகத்தை பார்த்துமா இப்படி ஒரு முடிவு எடுத்த.. நானும் கொஞ்சம் சந்தோஷப்பட்டேன்.. ஆனா எங்களோட சந்தோஷத்தை குழி தோண்டி புதைச்சிட்ட ஆத்விக்.. இதை உன் பாட்டியால நிச்சயம் தாங்க முடியாது.. நாங்க எவ்வளவோ கனவோட இருந்தோம் தெரியுமா.. அந்த பொண்ணு இந்த வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் இந்த வீடே சந்தோஷமா இருந்துச்சி.. ஆனா நீ என்ன பண்ணி வச்சிருக்க தெரியுமா.." என்றார் கோபமாய்.

ஆடவனின் விழகளோ நிலத்தை பார்த்திருந்தது அமைதியாய்.

அவனின் அமைதி புருஷோத்தமனுக்கு மேலும் கோபத்தை கிளர ஆத்விக்கின் தோளை தொட்டு அவனை திருப்பியவர் கோபத்தில் ஆத்விக் என அவனை அறையப் போகும் நேரம் அவனின் கண்களை பார்த்து அதிர்ச்சியில் கையை கீழே இறக்கிவிட்டார்.

ஆண்மகனின் கண்களில் கண்ணீர் துளிகள் கரையைத் தாண்ட துடிக்க அவனின் வதனமோ வாடியிருந்தது.

தன் பேரனின் நிலை கண்டு அதிர்ந்தவருக்கு அடுத்த அவன் கூறிய செய்தி பேரிடியை தந்திருந்தது.


அப்படி என்னவா இருக்கும்...🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 யோசிசிட்டு இருங்க மக்களே அடுத்த பாகத்துல பாக்கலாம்.