• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாலைவன ரோஜா 19

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
பாலைவன ரோஜா 19

எங்கு செல்வது என்று தெரியாமல் கால்கள் நடந்த பாதையில் கண்களில் வழியும் விழிநீரை கூட துடைக்காமல் சென்று கொண்டிருந்தாள் பேதை.. இன்னும் எத்தனை இன்னல்களை தான் சந்திக்க முடியும்.. வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை.. ஆனால் நிச்சயம் எல்லோரும் தேடுவார்கள்.. அவர்களை கண்டால் தன்னை தானே கட்டுப்படுத்த முடியாத நிலையில் பார்க்காமலே செல்வது தான் சிறந்தது.

கால் போன போக்கில் சென்று கொண்டிருந்தவளின் முன்னே ஒரு நான்கு சக்கர வாகனம் வந்து நின்றது.. அதிலிருந்து இரு வாட்டசாட்டமான ஆண்கள் கருப்பு உடை அணிந்து முகத்தில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு இறங்கினார்கள்.. யார் என்று அவர்களுக்கு புரியவில்லை தான்.. ஆனால் நிச்சயம் மீண்டும் அந்த சாக்கடையில் நுழைந்தாள் உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் வலுப்பெற்றது.. ஆனாலும் அவளின் மென் உடல் பயத்தில் நடுங்கியது.. வந்தவர்கள் அவளிடம் எதுவும் கேட்காமல் அவளின் முகத்தில் எதோ ஸ்பிரே அடிக்கவும் சட்டென என்ன ஏது என்று உணரும் முன்பே ஆழ்நிலை மயக்கத்தில் விழுந்தாள் பாவையவள்.

புருஷோத்தமனோ தன் முன்னே கலங்கி நிற்கும் பேரனை அதிர்ச்சியாய் பார்த்திருந்தார்.

"ஆத்விக் என்னப்பா ஆச்சி.. நீயாடா இப்படி கலங்கி போய் நிக்குற.. என்ன டா ஆச்சி.." என்றார் பதட்டமாய்.

"என்னோட தப்பு தான் தாத்தா.. இத்தனை நாளா தடுமாறாம இருந்த மனசு அவளை பார்த்ததும் தடுமாறிடுச்சி தாத்தா.. ஆனா அவ எனக்கானவ இல்லை தாத்தா.. இன்னொருத்தனுக்கு சொந்தமானவளை தான் நான் நேசிச்சிருக்கேன் தாத்தா.. என்னோட முதல் நேசமே தப்பாயிடுச்சி தாத்தா.." என்றான் ஆற்றாமையுடன்.

" ஆத்விக் நீ யாரை சொல்ற.. யாரை நேசிச்ச.. எனக்கு தெளிவா சொல்லு.." என்றார் புருஷோத்தமன்.

ஒரு விரக்தி புன்னகையை சிந்தியவன், "உங்களுக்கே தெரியும் என் வாழ்க்கையில கல்யாணம் காதல் இதெல்லாம் இல்லை.. ஆனா நான் மனசு முடங்கி கிடந்த சமயத்துல என் வாழ்க்கையில் ஒருத்தி வந்தா.. அவ யாருன்னு எனக்கு தெரியாது.. நான் யாருன்னு அவளுக்கு தெரியாது.. ஆனா எனக்குள்ள ஒரு மாற்றத்தை கொண்டு வந்தா..

யாரும் வேணாம்னு என் ஊனத்தை நினைச்சி ஒதுங்கியிருந்த நேரம் எதுவும் குறையில்லைன்னு அவ குரலாக ஆறுதல் சொன்னவ இன்னொருத்தரோட சொத்துன்னு தெரியாம ஆசைபட்டுட்டேன் தாத்தா.. அந்த ஏமாற்றம் என்னால தாங்க முடியலை.." என்றான் கரகரத்த குரலில்.

புர்ஷோத்தமனின் மனதில் ஒரு விடயம் தோன்றியது.. அதை மறைக்க முடியாமல் தன் பேரனின் தோளில் கை வைத்து, "ஆத்விக் நீ ஆரிணியை விரும்புறியா.." என்றார் அழுத்தமான பார்வையுடன்.

" விரும்பினேன் இப்போ இல்லை.." என்றான் மறத்து போன குரலில்.

"அதுக்கு அர்த்தம் என்னப்பா.. அப்போ அந்த பொண்ணை நீ இப்போ விரும்பலையா என்ன.." என்றார் கிண்டலாக.

"தாத்தா உங்க பேரன் அவ்வளவு மோசமானவன் இல்லை.. அடுத்தவனோட பொண்டாட்டியை நேசிக்கிற அளவுக்கு.." என்றான் சற்று கோபத்துடன்.

" அவ அடுத்தவனோட பொண்டாட்டின்னு உனக்கு அவ சொன்னாளா.. இல்லை நீ அவளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சியா.." என்றார் நக்கலாக.

" தாத்தா ஒருத்தன் ஆதாரத்தோட வந்து அவ என் பொண்டாட்டின்னு சொல்லும் போது அதை எப்படி நம்பாம இருக்கறது.. அப்படி சொல்லனும்னு அவனுக்கு என்ன தேவை இருக்கு.." என்றார் ஆத்திரத்துடன்.

"அப்போ அந்த ஆதாரம் உண்மைன்னு நீ நம்புற.. அப்படி அவனுக்கு ஒரு தேவை இருந்தா அவன் பொய் சொல்லலாம் இல்லை.. யாரோ ஒருத்தன் போட்டோவோட வந்து சொல்லிட்டா அது உண்மைன்னு ஆயிடுமா.. நீ ஒரு மிலிட்டரி மேன்.. ஆனா வெளியே அப்படி சொல்லாத.. ஒரு பெண்ணை புரிஞ்சிக்காத நீ எப்படி அவளை நேசிச்சே..

அப்போ உன் மனசு பொய்யான ஒருத்தியை உனக்கு காட்டி கொடுத்துச்சா..

ஆத்விக் காதல்னா என்னன்னு தெரியுமா.. யாரு மேல நமக்கு முழு நம்பிக்கையும் வருதோ.. எந்த சூழ்நிலையிலும் யாரை நாம சந்தேகபடாம அவங்க சொல்றதை நம்பறோமோ அதுக்கு பேரு தான் காதல்..

உன் பாட்டி என் மேல வச்சது காதல்.. அந்த காதலுக்கு மரியாதை கொடுத்து தான் உன் பாட்டியை நான் கல்யாணம் செய்துகிட்டேன்.. எத்தனை இடர்களை தாண்டி உன் பாட்டி என்னை கல்யாணம் செய்துகிட்டா தெரியுமா.. அவளோட சொந்த அப்பா அம்மா ஏன் எனானோட அப்பா அம்மா யாரு சொல்லியும் என்னை தான் கல்யாணம் செய்துப்பேன்னு போராடி தான் கட்டிகிட்டா.. என்னைக்கு அவ என் வாழ்க்கையில வந்தாளோ அன்னைக்கே அவளுக்காக என்னை மாத்திகிட்டேன்.. அதுக்காக உன்னை மாத்திக்க சொல்லலை.. காதல்ல குற்றவுணர்ச்சி சந்தேகம் ஈகோ இதெல்லாம் இருக்க கூடாது.. அப்படி இருந்தா அந்த தம்பதிகளோட வாழ்க்கை பாதியிலே முடிஞ்சிடும்.. சரியாவே அமையாது..

இவ்வளவு ஏன் உன் சீதாம்மா ஜானகிப்பாவும் காதல் கல்யாணம் தான்.. என்னைக்கு சீதா இந்த வீட்டுக்கு வந்தாளோ அன்னையில இருந்து இன்னை வரைக்கும் அவ பிறந்த வீட்டோட நினைவு கூட வராம பாத்துக்குறாரு உன் அப்பன்.. அது காதல்..

ஆனா உனக்கு வந்தது காதல் இல்லை.. ஜஸ்ட் இன்பாக்சுவேஷன்.. இன்னும் தெளிவா சொல்லனும்னா நீ அந்த பெண்ணை நேசிக்கலை.. நேர்ல பாக்கும் போது அழகா தெரிஞ்சிருக்கா.. இன்னும் சொல்லப் போனா அவளை நீ நேசிக்கலை.. இப்பவும் உன் மனசுல என்ன ஓடுதுன்னு நான் சொல்லவா..

உனக்கு உன்னோட ஊனம் குறையா தெரியுது.. எங்கே நாளைக்கு கல்யாணம் ஆகி உன்னோட ஊனத்தை குறையா சொல்லிடுவாளோன்னு பயப்படற.. அந்த பயம் தான் இத்தனை நாளா உன்னோட நேசத்தை அந்த பொண்ணுகிட்ட சொல்லவிடாம பண்ணிருக்கு.. அதுதான் இப்படி சொல்லிட்டு இருக்க.. உனக்கு இன்னொரு உண்மையை சொல்லட்டுமா..

நாங்க உனக்காக பாத்த பொண்ணு ஆரிணி தான்.. அவ தான் இந்த வீட்டோட மூத்த மருமகளா வரணும்னு நான் மட்டும் இல்லை உன் அப்பாக்கள் அம்மாக்கள் அத்தைகள் உன் பாட்டின்னு நாங்க எல்லாருமே ஆசைப்பட்டோம்..

ஆனா நீ அந்த பொண்ணோட மனசை கொன்னு புதைச்சி நீ அனுப்பிவச்சிருக்க.. நீயும் உன்னோட காதலையும் நம்பலை நீ காதலிச்சவளையும் நம்பளை.. இது தான் இப்போ உன் காதலை தோக்க வச்சிருக்கு..

நீ திரும்ப வந்ததும் நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.. அதுவும் உன் பார்வை அந்த அப்பாவி பொண்ணு மேல இருந்ததும் நீயும் அவளை விரும்புற கூடிய சீக்கிரம் என் பேரன் அவன் வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுடுவான்னு சந்தோஷப்பட்டேன்.. ஆனா நீ அதை கெடுத்து குட்டி சுவராக்கிட்ட..

இன்னொன்னு சொல்லவா நீ விரும்புன பொண்ணுக்கு இன்னைக்கு வர கல்யாணம் ஆகலை.. அடுத்தது அவ வளர்ந்த இடம் தான் தப்பே ஒழிய அவ தப்பானவ இல்லை.. இதுக்கு மேல நான் சொல்ல எதுவும் இல்லை..

இது உன் வாழ்க்கை.. உன் மனசை கேட்டு பாரு அது சொல்லும் நீ தப்பான ஒரு பொண்ணை விரும்லைன்னு.." தன் மனதில் உள்ள ஆதங்கத்தையும் அதிருப்தியையும் தன் பேரனிடம் கொட்டியவர் அங்கிருந்து சோகமாய் சென்று விட்டார்.

அவன் சென்று பல மணி நேரம் ஆகியும் ஆத்விக் அந்த இடத்தில் இருந்து சிறிதும் நகரவில்லை.. அவன் மனமே அவனுக்கு எதிராய் திரும்பியிருந்தது.. ஒரு வேளை தாத்தா சொல்வது தான் உண்மையோ.. நான் தான் என்னவளை தவறாய் கணித்து விட்டேனா.. இல்லையே அவன் கூறியது பொய் என்றாலும் அவன் காட்டிய அந்த புகைப்படம் உண்மை தானே..

நேற்று ஆரிணியை காப்பாற்றிய பிறகு அவளின் ஆட்களை வைத்து தன்னவளை கொல்ல வந்தவனை வலைபோட்டு தேடி பிடித்து வந்தவன் கூறியது இப்பொழுதும் நன்றாக நினைவில் உள்ளது.

ஆத்விக்கை அந்த இடத்தில் எதிர்பாராதவன்,

"சார் நீ தான் அடிச்சி விட்டுட்டியே.. அப்புறம் ஏன் சார் திரும்ப கூட்டிட்டு வர சொன்ன.. அவளை நான் விட்டுறேன் சார்.. ப்ளிஸ் என்னை விட்டுங்க.." என்றான் ஆரிணியை கொல்ல வந்தவன்.

ஆத்விக்கோ அவன் கூறியதை காதில் வாங்காமல், "யார் நீ எதுக்காக அவளை கொல்ல வந்த.. அவளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.." என்றவனின் குரலில் இருந்த மிரட்டலில் எதிரே இருந்தவன் பதறிப் போய்,

"சார் அவ என் பொண்டாட்டி சார்.. என்கிட்ட கோவிச்சுட்டு வீட்டை விட்டு வந்துட்டா சார்.. அவளுக்கு பணத்தாசை அதிகம் சார்.. பணக்காரனா பாத்து வளைச்சி போட்டு லைப் ல செட்டில் ஆகணும்னு அவளுக்கு ஆசை சார்.. அது தான் சார் என்னை விட்டு வந்துட்டா.." என்றான் படபடப்பாய்.

"எது உன் பொண்டாட்டியா.. அதுக்கு என்ன டா ஆதாரம் இருக்கு.." என்றான் அந்த வார்த்தைய தாள முடியாமல்.

"சார் நீங்க நம்ப மாட்டீங்க.. இதோ பாரு சார் ஆதாரத்தை.." என்றவன் தன் முதுகின் பின்னே இருந்து ஒரு புகைப்படத்தை உருவி அவனிடம் கொடுத்தான்.

அதை விரல்கள் நடுங்க வாங்கியவனின் விழிகள் தெறித்து விடும் அளவில் ஆரிணி அந்த புகைப்படத்தில் மணப்பெண்ணாய் அமர்ந்திருந்தாள் முன்னே இருந்தவனுடன்.

அவனின் கண்களையே அதை நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் அந்த புகைப்படத்தை பார்த்து அது உண்மையான புகைப்படம் தான் என ஊர்ஜிதம் செய்து கொண்டவனின் மனம் பாறையாய் வெடித்து சிதறியது.

யாரை தன் உறவாய் உயிராய் நினைத்தானோ அவளுக்கு திருமணம் முடிந்து விட்டதா.. அதுவும் மாற்றானுடன் என்றவனின் மனம் கலங்கி போக அதை உபயோகப்படுத்திக் கொண்டவன் ஆத்விக்கிடம் இருந்து தப்பித்து விட்டான் ரங்கன்.

இதை நினைத்தவனின் உள்ளம் மேலும் வலிகளை சுமந்தது.

சொல்லாத காதல் செல்லாததாய் மாறிப்போனதே..
ஊனமான வாழ்வில் விடிவெள்ளியாய் வந்தவளே..
காரிருளில் கண்ணீர் சுமக்க வைத்தாயே..
உன்னையே நினைத்து உருகிய உள்ளமதை..
எதை கொண்டு அணைப்பது என்னுயிரே..

தன்னவளையே நினைத்தவனுக்கு நெஞ்சமதில் வலியெங்கும் பரவ இருளில் தெரியும் நிலவில் தன்னவளின் வதனத்தை தேடி தவித்து நின்றான் ஆடவன்.

இங்கே பெரியநாயகிக்கு அறுவை சிகிச்சை ஆரம்பமாகிட சீதாவும் ஜானகிராமனும் வந்திருந்தனர்.. அவர்களை கண்டதும் நரசிம்மன் எதுவும் கூறவில்லை.. அமைதியாய் தான் இருந்தார்.

அவரின் அமைதி மற்றவர்களுக்கு பயத்தை கொடுத்தாலும் சற்று ஆசுவாசமாய் உணர்ந்தனர் அவரின் பிரச்சனை இல்லாமல்.

அடுத்த நான்கு மணி நேரத்திற்குள் பெரியநாயகியின் அறுவை சிகிச்சை முடிந்து அவர் கண் விழிப்பதற்காக அனைவரும் காத்திருந்தனர்.. இந்த இடைப்பட்ட நேரத்தில் சீதா தன் தந்தையை பார்த்து விழிகளால் யாசிக்க அதை உணர்ந்தவர் அவளிடம் பேசாமல் அமைதியாய் திரும்பி கொண்டார்.

அவர் என்ன நினைக்கிறார் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.. எதுவோ ஒன்று அவரின் அமைதி கொஞ்சம் நிம்மதியை தந்தது என்னவோ உண்மை தான்.


அடந்த வனத்தின் நடுவே அமைந்திருந்த அந்த பெரிய பங்களாவின் இருட்டு அறையில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்களில் வழியும் கண்ணீருடன் வாயும் கட்டப்பட்ட நிலையில் படுத்திருந்தாள் ஆரிணி.

அவளை யார் கடத்தியது என்று இதுவரை சுத்தமாய் அவளுக்கு புரியவில்லை.. அங்கே வந்த கொஞ்ச நேரத்திலே புரிந்து கொண்ட விஷயம் தான் அவளுக்கு சுத்தமாய் விளங்கவில்லை.

தன்னை கடத்தி வந்தும் ரங்கநாயகி இன்னும் வந்து அவளை பார்க்கவில்லை.. தன் மேல் கொலைவெறியில் இருப்பாள் என்று உணர்ந்தாலும் அவளின் கைகளால் செத்தால் கூட சந்தோஷம் தானே ஒழிய அந்த சாக்கடையில் மட்டும் விடக்கூடாது என்று வைராக்கியத்தை கொண்டுள்ளாள் பெண்ணவள்.

பாலைவனத்தின் நடுவே ஒரு துளி
நீருக்காய் தவிக்கும் ரோஜாவின் தவிப்பை கண்டவர்களே சொல்லுங்கள்
வஞ்சியவளின் வஞ்சகமான கதையை..

யார் அவளை கடத்தியிருப்பாரோ.. அடுத்தடுத்த பாகங்களில் பாக்கலாம் மக்களே..