• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாலைவன ரோஜா 2

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
பாலைவன ரோஜா 2


அடர்ந்த பனி கூட்டத்தின் நடுவே அந்த டெண்டில் இருந்து வெளியே வந்தான் அவன்.. இந்திய ராணுவத்தில் முக்கிய பதவி வகிப்பவன்.. அங்குள்ளவர்களுக்கு மேஜர் ஏ கே என்றால் தான் தெரியும்.

ஏ கே ஆத்விக் கிருஷ்ணா அவனின் முழுப்பெயர்.. இருபத்தேழு வயது இளைஞன்.. இந்திய நாட்டின் தீவிர பக்தன் என்று கூட சொல்லலாம்.. நாட்டின் மீது உள்ள தீவிர விசுவாசத்தால் தன் கடின உழைப்பின் மூலம் மிகச் சிறு வயதிலேயே இந்த உயரத்தை அடைந்துள்ளான்.. ராணுவத்தில் மிகச் சிறிய வயதில் பதவி மேஜர் பதவி அவனின் உழைப்பின் உன்னதம்.

ஏ கே என்றால் எதிரிகளும் அஞ்சி நடுங்குவார்கள்.. அவனின் வீர சாகசம் அப்படிப்பட்டது.

நாட்டிற்கு துரோகம் செய்வோரை வேறொடு கழை எடுத்து வருகிறான்.. இதோ இப்பொழுதும் கூட அத்து மீறி உள்ளே நுழைந்து தன் சகோதரர்களை அழித்தவர்களை கருவறுக்க கிளம்பி விட்டான்.

கருப்பும் அல்லாத சிவப்பும் அல்லாத மாநிறம் கொண்டவன்.. பார்த்தவுடன் சொல்லிவிடலாம் இவன் தமிழ்நாட்டின் பூர்வ குடிமகன் என்று.. முறுக்கேறிய புஜமும் அவன் கண்களில் தெரியும் தீட்சன்யமும் எதிராளியை மண்டியிட வைக்கும்.. பயமறியாதவன்.. யாருக்கும் எதற்காகவும் தான் எடுத்த முடிவிலிருந்து மாற மாட்டான்.. கட்டிளங்காளையின் துடிப்புடன் நாட்டிற்கு சேவையாற்ற வந்தவன்.

எதற்காகவும் சுலபமாய் தலைவணங்காதவன் ஒரு விஷயத்தை தவிர.. தேசியகொடி முன்பு மட்டுமே தலை வணங்குபவன்.. தான் தவறே செய்யாத பட்சத்தில் உயர் அதிகாரிகளிடம் கூட தலைவணங்கமாட்டான்.. அவன் கண்களில் பார்த்தாலே ஒரு திமிர் தெரியும்.

அதனாலே சிலரிடம் திமிர்க்காரன் என்றும் பெயர் வாங்கியிருக்கிறான்.. ஆனால் அதை பற்றிய கவலைபடமாட்டான்.. இன்னும் திருமணம் ஆகாத இளைஞன் தான்.. திருமணத்தில் பெரிதாய் நாட்டமில்லை.. இதுவரை எந்த ஒரு பெண்ணின் நிழலையும் தன்னை நெருங்க விடாதவன் இந்த வித்தகன்.

அவனின் உயர் அதிகாரிகள் சிலருக்கு அவனை பிடிக்கவும் செய்யாது.. இந்த இடத்திற்கு அவர்கள் வாழ்நாளில் பாதி போனது என்றால் இவனோ இத்தனை சுலபமாய் இத்தனை பெரிய பதவியில் அல்லவா வந்து அமர்ந்திருக்கிறான்.. அந்த பொறாமை அவன் எப்போது தவறு செய்வான் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள்.

இத்தனை தேசப் பற்றாளனுக்கு இந்த நாடு என்ன தான் தரப் போகிறதோ..?

இதோ தன் கம்பீர நடையுடனும் கண்களில் ஒளிரும் திமிருடனும் போர் நடக்கும் இடத்திற்கு சென்றான்.

அவன் வந்ததும் தான் அங்கிருந்த ராணுவ வீரர்களுக்கு நிம்மதி அளித்தது.. இனி அவன் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதி அது.

வெறி கொண்ட வேங்கையாய் வந்தவன் எதிரிகளை பந்தாடினான்.. அவனின் அந்த மூர்க்க குணத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் எதிரிகள் அஞ்சி ஓடியவர்கள் சிலர் என்றால் அவன் கைகளால் இறந்தவர்கள் சிலர்.


அவன் தீவிரமாய் சண்டையில் கவனமாய் இருக்கும் சமயம் அவன் பின்னால் இருந்த ராணுவ வீரர்கள் பின்னால் ஒரு தீவிரவாதி துப்பாக்கியுடன் மெதுவாய் வந்தான்.

இயல்பாய் அவனுக்குள் இருந்த நுண்ணிய உணர்வு அவனுக்கு உணர்த்தியது.. தன் சகாக்களை தவிர அயலான் ஒருவன் தன் இடத்தில் இருப்பதை.

ஒருவரின் வாசனையை வைத்த அவனின் ஜாதகத்தையே கொடுத்துவிடுபவன் அன்னியன் ஒருவன் இருப்பதை உணர்ந்து யாரும் அறியாமல் திரும்பி பார்த்தான்.

அவனின் ஆட்களின் பின்னே ஒரு வஞ்சகன் துப்பாக்கியுடன் இருந்தான்.. அவனை தாக்க முற்படுவதற்குள் கண் இமைக்கும் நொடியில் தன் கையில் இருந்த டிரிக்கரை அழுத்தியிருந்தான்.. அந்த தோட்டா சரியாக தன் ஆட்களை தாண்டி குதித்து வந்த ஏ கே வின் கால்களில் பட்டது.

தன் கால்களில் அடிபட்டும் அதற்காக கலங்காமல் அந்த அந்நியனை கொன்று விட்டே மயங்கினான்.

அடுத்த நாள் அவன் முழிக்கும் போது மிலிட்டரி மருத்துவமனையில் இருந்தான்.

அவனருகில் அவனின் உதவியாளர் ஒருவர் மட்டும் இருந்தான்.

அவனை பார்த்தவன், "ஜாபர்.." என்று அழைத்தான்.

அவனின் குரல் கேட்டு, "மேஜர்.." என்று சல்யூட் அடித்தான்.

அதை ஒரு தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டவன், "என்னாச்சி.." என்றான் ஒற்றை வார்த்தையாய்.

அதற்கு அவனின் உதவியாளரோ தயங்கியபடி, "மேஜர்.. அது வந்து.." என்றான் சொல்ல தயங்கியபடி.

அவனோ மேலே சொல் என்பது போல் பார்த்தான்.. அவன் அப்படித்தான் ஒற்றை வார்த்தையிலும் தன் பார்வையிலுமே அனைத்தையும் முடித்து விடுவான்.

ஜாபருக்கு அவனைப் பற்றி நன்றாக தெரியும்.. அவன் தன் வேலையை எந்த அளவு நேசிக்குறான் என்பதும் தெரியும்.. ஆனால் தான் இப்போது சொல்லப் போகும் விஷயம் அவனால் தாங்கி கொள்ள முடியுமா என்று புரியாமல் கலங்கி நின்றிருந்தான்.

ஆனால் படுத்திருப்பவனுக்கு அப்படி எந்த கலக்கமும் இல்லை போல.. தெளிவாகத்தான் படுத்திருந்தான்.

ஜாபரின் முகத்தையே பார்த்திருந்தான் ஏ கே.

இதற்கு மேல் தான் சொல்லாமல் விட்டால் ஆபத்து என்பதை உணர்ந்தவன், "மேஜர் உங்க கால்ல துப்பாக்கி குண்டு பட்டுருக்கு.." என்றான் ஏதோ புதிதாய் சொல்வதை போல.

இது தான் தெரியுமே என்பது போல் அவனை அழுத்தமாய் பார்த்தான்.

அவன் பார்வையின் அழுத்தத்தில், "மேஜர் அது வந்து அந்த குண்டு உங்க கால் நரம்புல பட்டு நரம்பு விட்டுடுச்சி.. நீங்க இனி ஸ்டிக் இல்லாம நடக்க முடியாது.. அதுமட்டுமில்ல மேஜர் கொஞ்ச நேரத்துக்கு முந்தி கர்னல் டேவிட் வந்தாரு.." என்றான் அமைதியாய்.

"ம்ம் என்ன சொன்னாரு.." என்றான் யோசனையாய்.

"மேஜர் அது வந்து உங்களை அன்பிட் பண்ணிருக்காங்க.. நீங்க இனி ராணுவத்துல இருக்க முடியாது மேஜர்.. நீங்க எழுந்ததும் சொல்ல சொன்னாரு.." என்றவனின் குரலில் இருந்த வேதனை ஏ கே அறியாமல் இல்லை.

அவனுக்கும் தெரியும் ராணுவத்தின் ரூல்ஸ்.. உடலில் குறைபாடு ஏற்பட்டால் நிச்சயம் ராணுவத்திலும் சரி இந்திய போலீஸ் துறையிலும் சரி இருக்க முடியாது.

"ஜாபர் கொஞ்சம் வெளியே இரு.." என்றவனின் குரலில் இருந்த இறுக்கம் ஜாபருக்கும் கவலையாக தான் இருந்தது.

இவரை போல் ஒரு வீரரிடம் வேலை செய்வது மிகவும் கஷ்டம்.. ஏன் இந்திய ராணுவத்திற்கு இனி இவரைப் போல் ஒரு மாவீரன் என்றும் கிடைக்கப் போவதில்லை.. தன்னால் வறுத்தப்படத் தான் முடியுமே தவிர அவராலும் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.

அவன் சென்றதும் படுத்திருந்தவனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.. அதை ஆடவன் தடுக்க முடியவில்லை.. அவனுக்கு தன் காலை இழந்தது கூட அவ்வளவு பெரிதாய் தெரியவில்லை.. ஆனால் இனி தன்னால் நாட்டுக்கு சேவையாற்ற முடியாது என்பதை ஏனோ அவனின் மனம் ஏற்க மறுத்தது.


உடலுக்கு தானே ஊனம் மனதுக்கில்லையே என்ற வாக்குவாதம் வெறும் பேச்சுக்கு தான்.. ஆனால் அங்கே இருக்கும் கட்டளை உடல் நலமாய் இருந்தால் தான் அங்கே இருக்க வேண்டும் என்பது.

இத்தனை நாளாய் அழுகை என்று ஒன்றை அறியாதவனின் கண்களில் இன்று கண்ணீரின் தடம்.

தன் கண்களை துடைத்துக் கொண்டவன் இறுதியாய் முடிவு எடுத்துக் கொண்டான்.

அந்த அரண்மனை போன்ற பங்களாவில் பெண்கள் சத்தம் அதிகமாய் தான் கேட்டது.

அங்கே இருந்த அத்தனை அறைகளிலும் பெண்களின் சிணுங்கல் சத்தமும் ஆண்களின் முத்த சத்தமும் அதிகமாய் கேட்டது.

பெண்ணவளோ பூஜையறையில் அவளின் கண்ணனுக்கு பூஜை செய்து கொண்டிருந்தாள்.

நேற்று அடித்த அடியின் தடம் இன்னும் இருந்தது.. வீட்டில் இருக்கும் பொழுது எப்பொழுதும் இயற்கை அழகுடன் தான் இருப்பாள்.

அந்த வீடு அவளைப் பொறுத்த வரைக்கும் நரகம்.. அந்த நரகத்திலும் சற்று நிம்மதியான இடம் என்றால் அது பூஜை அறை மட்டும் தான்.

ஆனால் தற்போது எல்லாம் அவளின் பூஜையை கெடுப்பதற்காகவே அந்த சிணுங்கல் சத்தமும் அவளின் காதுகளில் விழுந்து அவளின் நிம்மதியான பூஜை வேலையை கெடுத்தது.

அவளையும் அறியாமல் வழியும் அந்த கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் வெளியேற்றினாள்.

அவளை அடித்து உதைத்து சித்ரவதை செய்யாமல் இப்படி அவளின் உள்ளுணர்வை வைத்து மனரீதியாக துன்புறுத்துகிறாள் ரங்கநாயகி.. உணர்வுகள் தூண்டப்பட்டாலாவது தன் வலையில் விழுவாளா அவள் என்ற எதிர்பார்ப்புடன்.

அவளின் அழகுக்கு எத்தனையோ பேர் அவளை அடைய துடிக்க எத்தனை கோடி வேணாலும் செலவு செய்ய தயாராய் இருக்க இவ்ளோ கேவலம் ஐந்துக்கும் பத்துக்கும் தன் குரலே வருத்தி பாடி கொண்டிருக்கிறாளே என்ற கோபம் ரங்கநாயகிக்கு.

ஏன் எத்தனையோ முறை ஆரிணியிடம் அது தெரிவித்தும் இருக்கிறாள்.

"அடியே ஆரிணி என்னடி என்னவோ அப்படி இந்த உடம்பை கட்டி காப்பாத்தி எவனகிட்டடி கொடுக்க போறே.. ஏன்டி கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் நடக்க தானே போகுது.. அது இப்பவே நடக்குதுன்னு நினைச்சிக்கோ.. இந்த அழகான உடம்புக்கு அவ அவன் நாயா பேயா அலையுறான்.. நீ என்னவோ எந்த ராசாதி ராசா வரப்போறான்னு இதை கட்டி காப்பாத்த இப்படி ஒளியறவா..

ஆமா உன்னை என்ன புதுசாவா இதை செய்ய சொல்றேன்.. உன்ற ஆத்தா இதைத்தானே பொழைப்பா எடுத்து நடத்துனா.. நீ என்ன ஒருத்தனுக்கா பொறந்த.. இல்லை உன்ற ஆத்தா தான் ஒருத்தனுக்கு முந்தி விரிச்சாளா.." என்றாள் நாக்கில் நரம்பில்லாமல்.

தன் வாழ்வு தான் மட்கி போனது.. தன் மகளாவது குடும்பம் கணவன் குழந்தை மாமனார் மாமியார் என வாழ வேண்டும் என்று நினைத்து இக்கட்டான சூழ்நிலையில் மரணத்தின் விளிம்பில் இருந்த ஒரு தாய் தன்னிடம் தந்த குழந்தையை கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் அவளையும் சாக்கடையாய் மாற்ற இன்னும் எத்தனை வழிகள் தான் மேற்கொண்டுள்ளாளோ வஞ்சகி.

அங்கே நடக்கும் எதிலும் பெரிதாய் கண்டு கொள்ளாமல் தான் அவளும் இருக்க முனைந்தாள்.. ஆனால் அவளை விட வேண்டுமே.

அன்றும் அப்படித்தான் கோவிலுக்கென்று கிளம்பியவளை நிற்க வைத்து ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறாள் ரங்கநாயகி.

அது அபத்தம் என்று தெரிந்தும் அதற்கு பதில் சொல்லி கொண்டிருக்கிறாள் ஆரிணி.


ஒரு வழியாய் நான்கு தடியர்களுடன் அவளை கோவிலுக்கு அனுப்பி வைத்தாள் ரங்கநாயகி.

ஆரிணிக்கு பிடிக்கவில்லை என்றாலும் எங்கே வேண்டாம் என்று சொன்னாள் கோவிலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறிவிடுவார்களோ என்ற பயத்தில் எதுவும் பேசாது அவர்களுடன் கோவிலுக்கு சென்றாள்.

அந்த பெருமாள் கோவிலின் குளத்தங்கரையில் அமர்ந்திருந்தான் அவன் ஏ கே.

முகத்தில் எப்பொழுதும் இருக்கும் கம்பீரம் இருந்தாலும் கண்களில் ஏதோ இழந்ததை போல் ஒரு வலி.

காஷ்மீரிலிருந்து வந்து ஒரு வாரம் ஆயிற்று.. சொந்த ஊருக்கு செல்லவில்லை.. இங்கே சென்னையிலே சொந்த தொழிலை தொடங்கி இங்கேயே இருந்து விட்டான்.

எப்பொழுதும் தன் குடும்பத்துடன் ஒட்டாமல் இருப்பவன் இப்பொழுது சுத்தமாய் பார்ப்பதையும் பேசுவதையும் நிறுத்தி விட்டான்.

யாரும் அவன் மனக் காயத்திற்கு ஆறுதல் தரமாட்டார்கள்.. மேலும் குத்தி குத்தி அதை சீழ் பிடிக்க வைத்து விடுவார்கள் அவனது உறவுகள்.

அவனின் அந்த ஆழ்நிலை அமைதியை கலைத்தது.. கோவிலிருந்து வந்த ஒரு மென் குரல்.


இறுக்கமாய் இறுகி போனதாலோ என்னவோ..
என் இதழ்களில் புன்னகைக்கும் பஞ்சமாய் போனது..
மென் குரலை கேட்டதாலோ புதிதாய் ஒரு மாற்றம்..
நன்மையா தீமையா என்று ஆராய்ந்து பார்க்க தெரியவில்லை..
ஆனாலும் மனதோரம் மத்தாப்பு உன் குரலில் வசியத்தால் எனை கட்டி வைத்த வசியக்காரியே..


ரோஜா துளிரும்..🌹

ஹாய் செல்லம்ஸ் இந்த கதை பிடிச்சிருந்தா உங்க கருத்துக்களை பகிர்ந்திட்டு போங்க பா.
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
உள்ளத்து வேதனையை
உன் குரலில் உரைத்திட
உணர்ந்திடும் உள்ளம் உன்னருகே வந்திடுமோ....
❤️❤️❤️😭😭
ஊனம் உரிமையை பறிக்க
உடைந்த உள்ளம்
உலாவிக் கொண்டிருக்க
உன்னதமான குரல்
உள்ளத்தை உருக்குதே....... 💐💐💐💐💐
 
  • Like
Reactions: kkp49

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
உள்ளத்து வேதனையை
உன் குரலில் உரைத்திட
உணர்ந்திடும் உள்ளம் உன்னருகே வந்திடுமோ....
❤️❤️❤️😭😭
ஊனம் உரிமையை பறிக்க
உடைந்த உள்ளம்
உலாவிக் கொண்டிருக்க
உன்னதமான குரல்
உள்ளத்தை உருக்குதே....... 💐💐💐💐💐
நன்றி