• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாலைவன ரோஜா 20

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
பாலைவன ரோஜா 20

புருஷோத்தமன் எதுவோ யோசனையில் அமர்ந்திருக்க அங்கே வந்த புனிதவதி தன் கணவரின் யோசனையான முகத்தை பார்த்ததும் அவரருகே வந்து அமர்ந்து அவரின் தோளை தொட்டு,

"என்னங்க யோசிக்குறிங்க.. ஏன் எதுவோ போல இருக்கீங்க.. ஆமா இந்த ஆரிணி பொண்ணு எங்கங்க ஆளை காணலை.." என்றார் விழிகளை நாலாபுறமும் சுற்றியபடி.

அதை கேட்டதும் மனம் தெளிந்த புருஷோத்தமன்,

"வதி சீதாவும் ஜானகிராமனும் எங்கேம்மா.." என்றார் பேச்சை மாற்றியபடி.

"அவங்க சம்பந்தி அம்மாவுக்கு இன்னைக்கு ஆப்ரேஷன் இல்லை.. அதுக்கு அனுப்பி வைச்சேன்ங்க.. ஒருவேளை ஆரிணியும் அவங்களோட போயிருப்பாளோ.." என்றார் தாடையை தாங்கி.

அவரின் கேள்வியில் பெருமூச்சு விட்ட புருஷோத்தமன்,

"வதிம்மா ஆரிணி இந்த வீட்டை விட்டு போயிட்டா.." என்றார் கண்களை மூடியபடி.

அதில் அதிர்ந்த புனிதவதி, "என்ன சொல்றிங்க.. அவ எங்க போனா.. ஏன் போனா.." என்றார் அதிர்ச்சியில்.

"ஆத்விக் அனுப்பிட்டான்.." என்றவருக்கு மனம் தாளவில்லை தன் பேரனின் செயல்.

எவனோ ஒருவனின் சொல் கேட்டு தன் பேரன் நடந்து கொண்ட விதம் இன்னும் அதிகமாய் மனதை பாதித்தது.. அதுவும் ஒன்றுமறியாமல் ஒரு அப்பாவி பெண் மேல் பழி சுமத்தி அனுப்பியதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

"என்னங்க என்ன ஆச்சி ஏன் ஆத்விக் அனுப்பினான்.." என்றார் எதுவும் புரியாமல்.

" உன் பேரன் சொந்த புத்தியை இழந்துட்டான் வதி.. அது தான் யாரோ எவனோ எதுவோ சொன்னான்னு இந்த பொண்ணை அனுப்பி வச்சிருக்கான்.. படித்த முட்டாள்.." என்றார் கோபத்துடன்.

"எனக்கு ஒன்னும் புரியலை யார் என்ன சொன்னாங்க.. எனக்கு முதல்ல சொல்லுங்க பிரச்சினை என்னன்னு.." என்றார் பதட்டமாய்.

எதற்காகவும் தன் பேரனை விட்டுத் தராத தன் கணவன் இன்று இப்படி பேசியதிலிருந்தே தெரிந்தது தன் பேரன் ஏதோ தவறு செய்துள்ளான் என்று.

எந்த ஒரு பிரச்சனையும் தன் மனைவியிடத்தில் மறைக்க தெரியாத புருஷோத்தமனுக்கு இன்று தன் பேரன் செய்த காரியத்தில் மனம் வலிக்க ஆத்விக் ஆரிணியிடம் பேசியதிலிருந்து தன்னிடம் அவளை விரும்புவது குறித்து அனைத்தையும் கூறிவிட்டார்.


கணவன் கூறியதை கேட்ட புனிதவதிக்கு, "ஏங்க அப்போ ஆரிணி பொண்ணுக்கு உண்மையாலுமே கல்யாணம் நடந்துருச்சா என்ன.." என்றார் யோசனையாய்.

" ஏன் வதி அந்த பொண்ணை பாத்தா முன்னவே கல்யாணம் ஆன மாறியா இருக்கா.. ஏன் நீயும் உன் பேரனை போல அந்த பொறுக்கி சொன்னது தான் உண்மைன்னு சொல்ல போறியா.." என்றார் சற்று காட்டமாக.

தன் கணவரின் எண்ணவோட்டத்தை அறிந்த புனிதவதி,

"இப்போ எதுக்கு என்கிட்ட பாஞ்சிட்டு வர்றிங்க.. முதல்ல உங்க பேரன் ஏன் அப்படி சொன்னான்னு கேளுங்க.. அதுபோல அந்த விஷயத்துல எந்தளவுக்கு உண்மை இருக்குன்னு தெரிஞ்சுக்குங்க.. உங்களுக்கு எந்தளவுக்கு அந்த புள்ளை மேல நம்பிக்கை வச்சிருக்கீங்களோ அதே அளவு நானும் நம்புறேன் புரியுதா.. முதல்ல என்னை திட்றதை விட்டுட்டு அவன் ஏன் அப்படி அடுத்தவன் சொன்னதை நம்பினான்னு பாருங்க..

எங்க எல்லாரையும் விட அவனை உங்களுக்கு தான் நல்லா தெரியும்.. அவன் அப்படி யாரோட சொல் பேச்சு கேட்டு நடக்கறவன் இல்லை.. இது உங்களுக்கே தெரியனும்.. ஆனா அவன் மனசார விரும்புன ஆரிணியை அனுப்பியிருக்கான்னா வேறு எதுவோ ஒன்னு இதுல இருக்குங்க.." என்றார் பேரனை அறிந்த பாட்டியாய்.

அதே நேரத்தில் ஊருக்கு தெற்கே இருக்கும் அடர்ந்த வனத்தின் நடுவே அந்த மர வீடு இருந்தது.. வெளியில் இருந்து பார்ப்பதற்கு அது வீடாய் தெரியாது.. அது ஒரு அழகான பசுமையான மரமாய் தான் தோன்றும்.. ஆனால் அதனுள்ளே குகை போல் ஒரு வீட்டிற்குள் என்னென்ன இருக்குமோ அது அத்தனையும் இருந்தது.

அந்த வீட்டின் ஒரு இருட்டு அறையில் தான் ஆரிணி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆழ்ந்த மயக்கத்திலிருந்தாள்.

அந்த மர வீட்டின் கதவை திறந்து கொண்டு ஒரு உருவம் உள்ளே வந்தது.. அதன் கைகளில் சாப்பாட்டு தட்டு இருந்தது.. அதை அவளருகில் வைத்து விட்டு அங்கிருந்து சென்ற அந்த உருவம் கதவை நெருங்கையில் அவளை பார்த்தது.. அதன் விழிகளில் பாவம் தங்கியிருந்தது.

ஒரு பெருமூச்சுடன் அவளை பார்த்து விட்டு சென்று விட்டது அந்த உருவம்.

மருத்துவமனையில் முழுதாய் இரண்டு நாட்களுக்கு பின்பு கண்களை திறந்தார் பெரியநாயகி.

அவரின் முன்னே பார்த்திபன் சீதா மகிழன் ராதா ஜானகிராமன் என அனைவரும் இருந்தனர்.

அந்த இடத்தில் நரசிம்மன் மட்டும் இல்லை.. அதை பெரிதாக யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

சீதா தன் தாயை கண்டவர்," அம்மா.." என்றார் அழுதபடி கண்களில் வழியும் கண்ணீருடன்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு தன் மகளை கண்ட பெரியநாயகிக்கும் கண்களில் மகிழ்ச்சி பொங்க, "அம்மாடி சீதா.." என்றார் ஆதங்கமாய்.

பத்து மாதம் கருவிலும் இருபது வயது வரையிலும் மனதிலும் சுமந்த மகளை அவள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விட்டாள் என்பதற்காக ஒதுக்கி வைத்ததை கொடுமை என்று தெரிந்திருந்தும் இத்தனை ஆண்டுகளாய் எதுவும் செய்ய முடியாமல் இருந்த தன் அடிமைத்தனத்தை அறவே வெறுத்தார்.

கண்களில் வழியும் கண்ணீருடன் தன் மகளை கண்டவருக்கு சந்தோஷமாய் இருந்தது.. தன் உயிர் பிரிவதற்குள்ளாகவாது தன் மகளை பார்க்க மாட்டோமா என்று தவித்த தவிப்பை வார்த்தையில் அடக்கிட முடியாது.


இதோ தன் மகளும் அவளின் துணைவனும் கண்ணார கண்டவருக்கு இப்பொழுதே தன் உயிர் மடிந்தாலும் சந்தோஷமே.. ஆனாலும் தனக்காக இருக்கும் தன் மகனும் மருமகளும் பேரன் இவர்களுக்காக இன்னும் சிறிது நாட்கள் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவருக்கு சிறிதும் தன் கணவரை காண வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

அதே நேரம் அங்கே கதவை திறந்து உள்ளே வந்த நரசிம்மனை கண்ட பெரியநாயகிக்கு விழிகள் சிவக்க கோபம் வந்தது.. தன் கணவரை காண பிடிக்காமல் முகத்தை புறத்தே திருப்பிக் கொண்டார்.

அதுவே பார்த்திபனுக்கும் ராதாவுக்கும் சிந்தனையை தோற்றுவித்தது.. ஏன் மகிழனுக்கும் சீதாவுக்கும் தான்.

இத்தனை நாளாக கணவனின் சொல் கேட்டு கட்டியவன் கிழித்த கோட்டை தாண்டாத பெரியநாயகி இன்று கோபத்தை காட்டியது அனைவருக்கும் அதிர்ச்சியாய் இருந்தது.

கணவன் சொல்லிவிட்டான் என்ற ஒரு காரணத்திற்காகவே பெற்ற பெண்ணிடமே இதுவரை பேசாதிருந்தவர் இன்று அவரின் நடவடிக்கை பெரிய அதிர்ச்சி தான் அனைவருக்கும்.

ஆனால் அதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் மகிழனிடம் திரும்பி,

"மகிழா முதல்ல அந்த ஆளை இங்கிருந்து போக சொல்லு.. அந்த ஆளோட முகத்தை கூட பார்க்க எனக்கு விருப்பமில்லை.. இந்த ஆளோட பணத்திமிரும் ஜாதி வெறியும் இன்னைக்கு எம்புள்ளையோட வாழ்க்கையை அழிச்சிடுச்சி.. அநியாயமா ஒரு பெண்ணோட பாவத்தை சுமந்துட்டோம்.. எனக்கு யாருடனும் பேச புடிக்கலை மகிழா.. அவரை போக சொல்லு.." என்றார் மூஞ்சியை திருப்பியபடி.

பெரியநாயகியின் அந்த பேச்சு இத்தனை நாளாய் மனைவியின் மேல் இருந்த அந்த சின்ன பற்றும் காணாமல் போயிருந்தது நரசிம்மனுக்கு.. அவரின் முகத்திருப்பல் ஆணுக்குள் மறைந்திருந்த கர்வமும் ஆணவமும் தலைதூக்க ,

"ஏய் நாயகி என்ன உனக்கு திமிரு ஏறிடுச்சா.. இத்தனை நாளாக என் காலையே சுத்தி வந்துட்டு இன்னைக்கு என்னையே எதிர்த்து பேசுற அளவுக்கு வந்துட்டியா.. ஏதோ இத்தனை நாளா என் கூட இருந்தவளுக்கு உடம்பு முடியாம போச்சேன்னு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி.. ஆனா இப்போ இப்படியே கடந்து செத்து போடி.. ஏய் பார்த்திபா வாடா போலாம்.. ஒரு பொம்பளை இவளுக்கே இவ்வளவு திமிரு இருக்கும் போது ஒரு ஆம்பளை எனக்கு எவ்வளவு திமிரு இருக்கும்.." என்றார் கர்ஜனையாய்.

அதைக்கேட்டு பொறுக்கமாட்டாமல் மகிழன்,

"தாராளமா நீங்க போலாம் தாத்தா.. என் பாட்டியை பாத்துக்க நாங்க இருக்கோம்.. நீங்க தேவையில்லை.. போங்க.. உயிர் பிழைச்சி வந்தவங்களை பார்த்து என்ன பேச்சு பேசுறீங்க.. நீங்கெல்லாம் மனசனா என்ன.. ஒரு மனிதாபம் கூடவா இல்லாம போச்சி.. இத்தனை நாளா உங்களோட இருந்தோம்னு நினைக்கும் போது ரொம்பவே அவமானமா இருக்கு.." என்றான் முகத்தை சுழித்தபடி.

அதை கேட்டு அதிகமாய் கோபம் வந்தது நரசிம்மனுக்கு.. இத்தனை நாளாய் தான் கிழித்த கோட்டை தாண்டாத தன் மகனும் பேரனும் இன்று தன் மனைவியின் பேச்சை கேட்டு நடந்து கொண்டது அவரை அவமதித்ததாய் கருதியவர் அங்கிருந்து கோபமாய் வெளியே சென்று விட்டார்.

அவர் சென்றதும் நிம்மதியாய் பெருமூச்சு விட்ட பெரியநாயகியிடம்,

"அம்மா என்னாச்சி உனக்கு எதுக்காக இப்போ அப்பாகிட்ட இப்படி பேசிருக்க.. நீ எப்பவும் அப்பாகிட்ட இப்படி நடந்துக்க மாட்டியே மா.. இப்போ என்னாச்சி உனக்கு.." என்றார் ஆதங்கமாய்.

எங்கே தன்னால் தன் தாய் தந்தைக்கும் சண்டை வந்துவிட்டதோ என்ற ஆதங்கம் அவருக்கு.

அவரோ மகளின் கேள்விக்கு பதிலளிக்காமல், "சீதாம்மா எனக்கு ஒரு மாறி இருக்கு.. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் மா.." என்றபடி கண்ணை மூடிக் கொண்டார்.


அவரின் பேச்சும் செயலும் அங்கிருந்த அனைவருக்குமே சந்தேகத்தை கொடுத்தாலும் டாக்டரின் அறிவுரையின் பேரில் அவரை அதிகமாய் கோபப்படாமல் இருப்பதே நலம் என்ற எண்ணத்தில் அங்கிருந்து அனைவரும் வெளியே சென்றனர்.

அனைவரும் வெளியே சென்றதை அறிந்ததும் கண்ணை திறந்த பெரியநாயகியின் கண்களில் கண்ணீர் ஆறாய் பொங்கியது.. தன் கணவனின் இழி செயல் இதுவரை நடந்திருக்கிறது என்பதை அறியாத பேதையாய் வாழ்ந்துள்ளோமே என்று தன்னையே நிந்தித்துக் கொண்டார்.

ஜாதி வெறி உள்ள மனிதர் என்று தெரியும்.. ஆனால் அது ஒரு பெண்ணின் வாழ்க்கையை இன்னலில் கொண்டு சென்றதை ஏனோ ஒரு பெண்ணாய் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தன் கணவனின் அரக்கத்தனம் அவரின் உடலில் ஒரு நடுக்கத்தை தோற்றுவித்தது.

இங்கே மெதுமெதுவாய் மயக்கத்தில் இருந்து எழுந்த ஆரிணிக்கு முதலில் எங்கு இருக்கிறோம் என்றே புரியவில்லை.. அது பகலா இரவா என பிரித்தறிய முடியாமல் எப்பொழுதும் அந்த அறை இருட்டாய் தான் இருந்தது.. ஆனால் அதிலும் சிறிதாய் விடி விளக்கு இருந்தது.. ஒரு மணி நேரத்தில் அந்த இருட்டே கண்களுக்கு பழக்கப்பட்டு போக அதில் தான் தெரிந்தது.. அவளின் முன்னே உணவு தட்டு வைக்கப்பட்டிருப்பதை.

அதை திரும்பியும் பாராமல் தன் மனதிற்கு பிடித்தமான கடவுளை வாய்விட்டு அழைக்க ஆரம்பித்தாள்.

கிருஷ்ணா கிருஷ்ணா என ஜெபமாய் அந்த வார்த்தையை விடாமல் கண்களை மூடியபடி சொல்லிக் கொண்டிருந்தாள் பேதை.

இங்கே இரவு வீட்டிற்கு வந்த ஆத்விக்கை வீட்டிலுள்ளவர்கள் சுற்றி நின்று கொண்டார்கள்.. பெரியவர்கள் முதல் இளைய பட்டாளங்கள் என அனைவரின் முகத்திலும் கோபம் இருந்தது.. அதிலிருந்தே தெரிந்தது ஆரிணி அங்கிருந்து சென்றது அனைவருக்கும் தெரிந்திருந்தது.. ஆனால் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாத ஆத்விக் அவர்களை தாண்டி செல்ல முனைய அதற்கு முட்டுக்கட்டாய் ஆராத்யாவிடமிருந்து கேள்வி விழுந்தது.

அந்த கேள்வியில் ஆடவன் அப்படியே அதே இடத்தில் நின்றுவிட்டான்.. அவள் மட்டுமல்ல இளைய பட்டாளங்கள் அனைவரின் கேள்வியும் ஒன்று தான் என்று அவர்களின் முகங்களே சொன்னது..



சிறகே இல்லாத பூங்குருவி
ஒன்று வானத்தில் பறக்கிறது..
துடுப்பே இல்லாத படகு ஒன்றை
இன்று ஆழ் கடல் குடிகிறது..
உதய காலமே இரவு ஆனதே
யார் செய்த பாவமடி..
விழுது இன்று தான் வேரைத்
தின்றதே யார் செய்த சாபமடி..



அடுத்த பாகத்தில் பாக்கலாம் மக்களே.. நாளை அடுத்த பாகம் வரும் பா.. இந்த கதையை பத்தின உங்க பொன்னான கருத்துக்களை சொல்லிட்டு போங்க பா.