• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாலைவன ரோஜா 21

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
பாலைவன ரோஜா 21

சேட்டு கோபத்துடன் அமர்ந்திருக்க அவனின் முன்னே அவனுக்கும் குறையாத கோபமாய் நின்றிருந்தாள் ரங்கநாயகி.. அவளின் கோபம் அத்தனையும் ஆரிணியின் மேல் தான் திரும்பியது.. ஆனால் தன் கைகளுக்கு எட்டாமல் இருப்பவளை எப்படி தண்டிக்க என புரியாமல் நின்றிருந்தாள்.

"ரங்கநாயகி உன்கிட்ட என்ன சொன்னேன்.. அவ எங்கே உன் தம்பி என்னவோ கதை சொல்லிட்டு இருக்கான்.. ஏன் என்னை பாத்தா இளிச்தவாயனா தெரியுதா.. பாஸ் என்கிட்ட சத்தம் போடறாரு.. நான் படிச்சி படிச்சி சொல்லியும் நீ அவளை இன்னும் தேடி கண்டுபிடிக்காம இருக்க.. இதோ இந்த வெட்டிப் பையன் என்னவோ அவளை பாத்து கொலை பண்ண போனேன் அப்போ ஒரு ஹீரோ மாறி வந்து ஒருத்தன் காப்பாத்திட்டான்.. அப்படின்னு கதையளக்குறான்..

என்ன என்கிட்ட இருந்து தப்பிக்க அக்காவும் தம்பியும் போடற பிளான் ஆஆ இது.. அவ கிடைக்கலைன்னா நீங்க உயிரோட இருக்கறதுக்கு ஒரு பர்செண்ட் கூட வாய்ப்பு இல்லை.. அவளோட பின்புலம் தெரியாம அவளை தொலைச்சிட்டு இருக்க.. ஆனா பாஸோட கையில அவ கிடைச்சா அடுத்த நொடி நமக்கு சங்கு தான் அது நினைவுல வச்சிக்கோ.. இன்னும் ரெண்டு நாள் தான் உனக்கு டைம்.. அதுக்குள்ள அந்த ஆரிணி இங்கே இருக்கனும்.." என்று கட்டளையிட்டு அங்கிருந்து கோபமாய் சென்று விட்டான் அவன்.

அவன் சென்றதும் தன் எதிரே நின்றிருந்த தன் தம்பியை ஓங்கி அறைந்தாள் ஆத்திரத்தில்.

"எங்க டா அவ.. நான் என்ன சொன்னேன் அவளை கொன்னாவது என் முன்னாடி நிறுத்த சொன்னேனா இல்லையா.. ஆனா நீ அவளை விட்டுட்டு வந்து நிக்குற.. இப்போ கேட்டா அந்த வீட்ல அவ இல்லை.. அது இதுன்னு சாக்கு தொல்ற.. எங்கடா போயிருப்பா அவ.." என்றாள் ஆக்ரோஷமாய்.

"எனக்கும் தெரியலை கா.. நானும் அவளை காப்பாத்தினவன் வீட்டுக்கு போய் பாத்துட்டு வந்தேன்.. ஆனா அங்க அவ இல்லை கா.. அந்த வீட்டு வேலைக்காரங்களை கேட்டேன்.. இத்தனை நாளா அங்க தான் இருந்தாளம்.. ஆனா இப்போ அங்கே இல்லைன்னு சொல்றாங்க கா.. எனக்கும் புரியலை.. அவ எங்க போனான்னு யாரை கேட்டாலும் தெரியலைன்னு சொல்றாங்க கா.." என்றான் கண்ணத்தை தடவியபடி.

இல்லை டா இதுல வேற யாரோ இருக்காங்க.. அவளை பொத்தி பொத்தி பாதுகாத்தது எதுக்கு தெரியுமா.. அவளால நமக்கு நிறைய வகையில ஆதாயம் இருக்கு.. அதுமட்டுமில்லாம அவ ஒரு பணங்காய்க்கும் மரம்.. இத்தனை வருஷமா அவளை என்னோட சொந்த பணத்துலையா வளர்த்தேன்.. இல்லை அவளோட பணத்துல தான் நாம வளர்ந்தோம்.. ஆனாலும் அவளை அடிமையா தான் வச்சிருந்தேன்.. ஆனா இன்னைக்கு என்ன தாண்டி போயிருக்கா.. அவளை என்னதான் பண்றது.." என்றாள் நாக்கில் விஷத்தை கக்கியபடி.

"அக்கா கவலைப்படாத சீக்கிரமா இதுக்கு ஒரு வழி பண்ணலாம்.. அவளை சீக்கிரம் கொண்டு வந்து உன் முன்னாடி நிறுத்துறேன்.." என்றான் ஆங்காரமாய்.

"ரங்கா அவளால நான் ரொம்பவே அசிங்கப்பட்டுட்டேன்.. அதை நான் திருப்பி அவளுக்கு கொடுக்கனும்.. இத்தனை நாளா அவ மேல நான் யாரையும் கை வைக்க விடலை.. ஆனா இனி நீ அவளை என்ன வேணா பண்ணிக்கோ.. அவ கிடைச்ச நம்ம பசங்களையும் சேர்த்துக்கோ.. எந்த கற்பு போகக்கூடாதுன்னு பொத்தி பொத்தி வச்சிருக்காளோ அது இல்லாம அவ வாழனும்.. அவ சாகவும் கூடாது.. ஆனா நிம்மதியா வாழவும் கூடாது.. அதே போல அந்த சேட்டு கைக்கும் அவ கிடைக்க கூடாது.. என்னையே அவன் கொல்ல போறானா.. அவனோட பாஸையும் அவனையும் நான் பாத்துக்குறேன்.. நீங்க முதல்ல அவளை தேடி கண்டுபிடிச்சி அவளை சின்னாபின்னாமாக்குங்கடா.." என்றாள் அரக்கியாய்.

ஒரு பெண்ணாய் இருந்தும் மற்றொரு பெண்ணின் உணர்வை புரிந்து கொள்ளாமல் பெண்ணை வெறும் உடலாய் பார்க்கும் இது போன்ற ஜென்மங்கள் இந்த நாட்டின் தீரா சாபக்கேடு.


அந்த இருட்டறையில் கண்களில் கண்ணீர் வழிய ஒரு மூலையில் முடங்கி அமர்ந்திருந்தாள் நங்கையவள்.. அவளை கடத்தி வந்து கிட்டதிட்ட இரண்டு நாளாகிவிட்டது.. அவளை கடத்தியது யார் என்று தெரியவில்லை.. ரங்கநாயகி என்றால் நிச்சயம் இந்நேரம் அவளின் கண் முன்னே வந்திருப்பாள்.. இத்தனை மணி நேரத்திற்குள் அவள் உணர்ந்து விட்டாள்.. அவளை கடத்தியது ரங்கநாயகியின் ஆட்கள் இல்லை என.

ஆனால் யார் தன்னை கடத்தியிருப்பது என்று ஒன்றும் புரியவில்லை.. இதுவரை யாரும் அவளை வந்து பார்க்கவில்லை.. அவளின் அடிப்படை தேவைகள் அனைத்தும் அங்கேயே இருந்தது.. உணவு மட்டும் ஒரு வாட்டசாட்டமான ஆள் முகத்தை மூடியபடி கொண்டு வந்து வைத்து விட்டு சென்று விடுவான்.. அவனின் பார்வை தரையை தாண்டி அவளை எப்போதும் தீண்டாது.. அவளின் கேள்விக்கு பதிலளிக்கமாட்டான்.

சில சமயம் நினைப்பாள் அவன் ஊமையா என்ன என்று.. ஆனால் பேசும் திறன் அவனில் உண்டு என்பதை அவள் உணவை சாப்பிடாத சமயங்களில் கண்டு கொண்டாள்.

அவளை உணவை சாப்பிடாத போது, "மேம் நீங்க இங்கே இருக்கற வரை கண்டிப்பா சாப்பிடனும்னு சாரோட ஆர்டர்.. இதை மீறினால் கடுமையான தண்டனை கிடைக்கும்னு பாஸ் சொல்ல சொன்னாங்க.." என்று தன்மையாகவே கூறுவான்.

அவள் கோபமாக திட்டினால் கூட அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அங்கிருந்து சென்று விடுவான்.

அவளுக்கு தான் ஒன்றும் புரியாத நிலை.. யார் தன்னை கடத்தியது.. அவர்களுக்கு என்ன வேண்டும் என ஒன்றும் புரியாத நிலை தான் வஞ்சியவளுக்கு.

இங்கே புருஷோத்தமனின் வீட்டில் இருந்த அனைவரும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருக்க யாரின் முகத்திலும் மருந்துக்கும் சிரிப்பில்லை.

ஆரிணி சென்றதிலிருந்து இந்த குடும்பத்தின் சந்தோஷத்தையும் மொத்தமாய் பறித்து சொன்றுவிட்டாள்.

ஆரமுதன் ஆராத்யா ஷிவானி தாமரை என அனைவருக்கும் தெரிந்ததும் ஆத்விக்கின் முன்னால் போய் நிற்க யாரின் கேள்விக்கும் பதில் சொல்லாமல் அமைதியாய் நின்றிருந்தான்.

அவனின் அமைதியில் இருந்த அழுத்தம் மற்றவர்களுக்கு பயத்தை கொடுக்க யாராலும் எதுவும் பேச முடியாமல் நின்றிருந்தனர்.. அனைவரும் அவனின் முகத்தையே பார்த்திருக்க அவனோ இறுக்கமாய்,

"போய் எல்லோரும் வேலையை பாருங்க.. எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும்.." என்றவனின் வார்த்தையில் இருந்த உறுதி எல்லோரையும் அமைதி ஆக்கியது.

யாரும் எதுவும் பேசாமல் கேட்காமல் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

போகும் எல்லோரையும் வலியுடன் பார்த்தவன், 'ராட்சசி வந்த கொஞ்ச நாள்ல எல்லோரையும் மயக்கி வச்சிருக்கா..' என்று முனுமனுத்துக் கொண்டான்.. அந்த மயக்கத்தில் அவனும் உள்ளடக்கம் என்பதை மறந்துவிட்டானோ என்னவோ..?

அவனின் முகமும் அவளில்லாத குறையை அப்பட்டமாய் காட்டியது.. இத்தனை நாளாக இறுகப் பூட்டியிருந்த மனது கொஞ்ச நாளாக வஞ்சியிடம் சாய்ந்திருக்க இழுத்துக்பிடிக்கும் வகையறியாமல் தொலைத்து விட்டவன் இன்று தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.

பால்கனியின் முகப்பில் நின்று நிலவை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு நிலவில் தெரிந்த முகத்தில் ஒரு மந்தகாச புன்னகை விரிந்தது.. அவனைப் பற்றி தெரிந்தவர்களுக்கு அவனின் புன்னகையும் ஒரு அதிசயம் தான்.

"ஏன்டி என் வாழ்க்கையில வந்த.. நீ வராத இருந்திருந்தா நான் எப்பவும் போல எல்லாத்துல இருந்தும் விலகியிருந்துருப்பேன்.. ஆனா நீ வந்து என்னை மாத்திட்டு இப்படி தவிக்க விட்டுட்டு போறதுக்கா.. என்னால முடியலை ஆரிமா.. நான் ஏன்டி உன்னை நேசிக்கனும்.. எத்தனையோ போரை சந்திச்சி வந்தவன் டி.. ஆனா இன்னைக்கு என்னையே என்னால சமாளிக்க முடியலை.. அந்த அளவுக்கா டி நீ என் மனசுல வந்துட்ட.. இட்ஸ் ஹார்டிங் மீ டி.." என்றான் மனதோரமாய்.


அவனின் சிந்தனையை கலைக்கவென்று அவனின் தோளில் ஒரு கரம் அழுத்தமாய் பதிந்தது.. அதன் அழுத்தத்தில் கண்டு கொண்டான் அது யார் என்று..

"தாத்தா.." என்றழைத்தான்.

" என்ன பேராண்டி என்ன பெருசா யோசனை.. வீட்டையும் உங்க அழுத்தமான குரலால அமைதியாக்கிட்டீங்க.. ஒரு அப்பாவி பொண்ணு மேலேயும் பழியை சுமத்தி அனுப்பி வச்சிட்டீங்க.. அடுத்த என்ன பண்ணலாம்னு யோசனை பண்றீங்களா.." என்றார் நக்கலாக.

" தாத்தா.." என்றவனின் குரலில் வலி இருந்தது.

"என்ன டா தாத்தா.. அந்த பொண்ணை நான் என் பேத்தியாவே தத்தெடுத்துக்கிட்டேன் டா.. அவளை உனக்கு கல்யாணம் செய்து வச்சி எங்க பேரனை எங்களோடவே வச்சிக்கனுமனு ஆசைப்பட்டேன் டா.. ஆனா நீ அதை பேராசைன்னு சொல்லி அதை அணைச்சிட்டே ஆத்விக்.. இப்போ இந்த குடும்பத்தோட சந்தோஷம் இல்லாம போயிடுச்சி.. அதை மீட்டு கொண்டு வரது உன்னோட கையில இருக்கு.. இன்னமும் என் பேரன் மேல நம்பிக்கை இருக்கு.." என்றபடி அவனின் தோளை தட்டியபடி அங்கிருந்து சென்றார்.

அவர் சென்றதும் மீண்டும் நிலவை வெறித்தவனின் வதனம் ஏனோ வலியை தான் கொண்டிருந்தது.

சிலையாய் நின்றிருந்தவனின் காதில் ஒரு மென் குரல் ஒலித்தது கிருஷ்ணா என.

தன் இதயத்தை தடவியவன் அம்மு என்றழைத்தான் மென்மையாய்.

இங்கே பெரியநாயகியை நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்ட பிறகும் தன் கணவனை பாராமல் மகனையும் மருமகளையும் பேரனை மட்டுமே தன் அருகே அண்ட விட்டவர் நரசிம்மன் அருகில் வந்தாலோ பொசுக்கும் பார்வையை பார்த்தார்.

அவரின் விழியில் இருந்த பார்வை வித்தியாசம் அத்தனை திமிரானவரை அசிங்கப்படுத்தும் பார்வையாய் இருந்தது.

அது மற்றவர்களுக்கு புரியவில்லை என்றாலும் நரசிம்மனுக்கு புரிந்த விஷயம் சற்று யோசனையைத் தான் தந்தது.

அன்று பார்த்திபனும் ராதாவும் கோவிலுக்கு சென்றிருக்க மகிழனும் தனது பாட்டியின் உடல் நலத்தை விசாரிக்க மருத்துவரை காண செல்ல இதை பயன்படுத்திக் கொண்ட நரசிம்மன் யாரும் இல்லா சமயம் பெரியநாயகியின் அறைக்குள் நுழைந்தார்.

பெரியநாயகியின் கணவன் என்றதால் அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் யாரும் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

அறையில் கண் மூடி நித்திரையில் இருந்த பெரியநாயகியின் முன்னே நின்ற நரசிம்மன் அவரின் தலையில் கை வைத்து மென்மையாய் வருடிக் கொடுக்க முனையும் போது அவரின் சுவாசித்தல் கண் விழித்த பெரியநாயகி தன் கணவரை முறைத்தார்.

"எங்க வந்த.." என்றார் படுத்தபடியே.

"ஏய் நாயகி உனக்கு என்னாச்சி டி.. எதுக்கு இப்போ என் மேல இவ்ளோ கோபப்படற.. உனக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்துட்டேன் டி.. நீ என்னவோ கொலைகாரனை பாக்கற மாறி பாக்குறவ.." என்றார் சிடுசிடுப்பாய்.

நக்கலாய் தன் கணவனை பார்த்து சிரித்தவர், "அப்போ நீ கொலை பண்ணலைன்னு சொல்ல வர்றியா.. அநியாயமா ஒரு பெண்ணோட வாழ்க்கையை கெடுத்து அவளோட மகளை அவகிட்ட இருந்து பிரிச்சி அவளை மரண வாசல்ல தள்ளின நீ கொலைகாரன் இல்லையா..

பெத்த பையனோட ஆசையை கொன்னு பெத்த பெண்ணையும் தலை முழுகன நீயெல்லாம் ஒரு ஆம்பளை.. ச்சீய் இத்தனை வருஷமா இது தெரியாம உன்னோட படுத்த இந்த உடம்புல இன்னும் உயிர் இருக்கறதை நினைச்சி வெட்கப்படுறேன் யா.." என்றார் அவரை அசிங்கமாய் பார்த்தபடி.

தன் மனைவியின் வார்த்தையில் அதிர்ச்சியில் இருந்த நரசிம்மன் மீண்டும் வெளிவந்து,

"ஏய் நாயகி இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்.. யாரு உனக்கு சொன்னா.." என்றார் பதட்டமாய் சுற்றிலும் பார்த்தபடி.

அதை கேட்டு ஆ ஆ ஆஆ என ஆங்காரமாய் சிரித்தபடி, "நீதான் யா சொன்னே.. இது மட்டும் என் பையனுக்கு தெரிஞ்சதுனா அடுத்த நிமிஷம் நீ உயிரோட இருக்க மாட்டே.. ஆனா தொலைஞ்சி போனவங்களுக்காக இருக்கற என் பையனை உயிரோட சாகடிக்க நான் விரும்பலை.. ச்சீய் போ என் கண் முன்னாடி வராத.." என்றார் கோபமாய்.

இத்தனை நாள் தனக்கு கீழ் படிந்த தன் மனைவியின் அலட்சியம் நிறைந்த வார்த்தை ஒரு ஆணாக அவரை அசிங்கப்படுத்த அதில் மிருகமானவர்,

"ஏய் நாயகி.." என்று ஆத்திரத்தில் அறிவிழந்த நரசிம்மன் அறுவை சிகிச்சை முடிந்த மனைவியின் கழுத்தில் கையை வைத்து விட்டார்.

இதையெல்லாம் பார்த்திருந்த மற்றொரு உருவம் கோபத்தில் கண்கள் சிவக்க அந்த அறையின் கதவை உடைத்து வந்தது.


அடுத்தடுத்த பாகத்தில் பாக்கலாம் மக்களே.. இந்த கதையை பத்தின உங்க பொன்னான கருத்துக்களை பதிவிட்டு செல்லவும் மக்களே.