• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாலைவன ரோஜா 22

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
பாலைவன ரோஜா 22
கோபம் ஆத்திரம் ஏமாற்றம் துரோகம் வஞ்சகம் என ஒட்டு மொத்த கோட்பாடுகளின் கோபமாய் நின்றிருந்தார் பார்த்திபன்.
தான் கேட்டது உண்மையா பொய்யா என ஒன்றும் புரியாமல் நின்றிருந்தார்.
யாரின் மேல் கோபம் கொள்வது என அவருக்கு புரியவில்லை.. ஆனால் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது மட்டும் நிதர்சனமான புரிந்தது.
தன் தந்தையா தனக்கு துரோகம் செய்தார் என நம்பமுடியாமல் தன்னையே நிந்தித்துக் கொண்டிருந்தார்.. மனம் உண்மையை ஏற்க முடியாமல் தவிக்க அறிவோ உண்மை இது தான் என பொட்டில் அறைந்தது போல் கூற அதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் நின்றிருந்தார்.
தன் நிலையை எண்ணி தவித்தவரின் தோளில் அழுத்தமாய் ஒரு கரம் பதிய அந்த கரத்தை இறுகப் பற்றிக் கொண்டு கரத்திற்கு சொந்தமானவனின் தோளில் சாய்ந்து.ஆறுதல் தேடினார் அந்த மனிதர்.
அந்த கரத்திற்கு சொந்தமானவனோ, "மாமா என்ன இது சின்ன புள்ளை மாறி.. இங்கே பாருங்க நீங்களே இப்படி மனசொடிஞ்சி போனா மத்தவங்க எப்படி இதை தாங்கிப்பாங்க.. பொறுமையா இருங்க தாத்தா ஏன் இப்படி பன்னாருன்னு கேட்கலாம்.." என்றான் ஆறுதலாய்.
"எதை கேட்க ஆத்விக்.. என்னை பெத்தவரு எனக்கு நல்லது தான் செய்வாருன்னு இத்தனை நாள் நம்பியிருந்தேன்.. ஏன் சீதாக்கா கல்யாணத்தை அவர் ஏத்துக்க மறுத்த போது கூட அவருக்கு புரிய வைக்கலாம்.. இதோ என் பையனோட கல்யாணத்துக்காவாது என் அக்கா குடும்பத்தோட சந்தோஷமா இருக்கனும்னு நினைச்சேன்.. ஆனா என்னோட குடும்பம் மொத்தமா சிதறி போக காரணமா அவரு இருப்பாருன்னு நான் நினைக்கவே இல்லையே..
எல்லாத்தையும் பண்ணிட்டு இன்னைக்கு அம்மா கேட்கவும் அம்மாவையும் கொல்ல முயற்சி பண்றாரு.. இவரு மனசனா இல்லை மனுச உருவில இருக்கற அரக்கனா.. இவரை இத்தனை நாளா அப்பான்னு நினைச்சி மதிச்சதுக்கு நல்லாவே செஞ்சிருக்காரு ஆத்வி.." என்றார் மன வேதனை தாளாமல்.
ஆத்விக்குக்கும் இந்த விஷயம் புதிது தான்.. ஆனாலும் நரசிம்மன் இந்த அளவுக்கு தன் குடும்பத்திடமே நடித்திருக்க கூடாது தான்.. அவனின் அருகிலே கோபமாய் மகிழனும் நின்றிருந்தான்.
அவனாலும் இதை நம்ப முடியவில்லை தான்.. என்ன தான் ஒரு மனிதனுக்கு ஜாதி வெறி இருந்தாலும் இப்படியா நடந்து கொள்வார்.. ஏனோ அவரின் மேல் கோபம் இருந்தாலும் குடும்பத்திற்காக அவர் பார்த்து பார்த்து செய்த விஷயம் உண்மை.. அதில் தான் தாத்தா என்ற மரியாதை அவனுக்கு மனதில் உண்டு.
ஆனால் இன்று பட்ட காயம் என்றும் மாறாதது மறையாதது.
உள்ளே பெரியநாயகியை மருத்துவ குழு சூழ்ந்திருக்க அதிக பட்ச அழுத்தத்தை தாங்காமல் மூச்சு வாங்கி கிடந்தார்.. அதுவும் நரசிம்மனின் வெறி செயலில் துவண்டு போனவர் மனபலமும் உடல் பலமும் குறைய தீவிர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்திருந்தனர்.
வெளியே ராதா ஒரு ஓரத்தில் அடிக்கடி தன் கணவரையும் பார்த்த படி உள்ளே இருக்கும் தன் மாமியாரை நினைத்து வருந்திய படியும் அமர்ந்திருந்தார்.
அவரருகே சீதாவும் சிலையாய் சமைந்திருந்தார்.. அவராலும் இதை முழுதாய் நம்ப முடியவில்லை.. தன்னை பெற்ற தகப்பனே தன் தாயை கொல்ல துணிந்ததை அவரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
அதற்குள்ளாகவே அங்கே வந்த புருஷோத்தமன் புனிதவதி இருவரும் சீதாவின் அருகே வந்தார்கள்.
புருஷோத்தமன் வேகமாக ஆத்விக்கை நெருங்கி ,
"ஆத்விக் என்னாச்சி சம்பந்தியம்மா இப்போ எப்படி இருக்காங்க.. எப்படி பா அவருக்கு மனசு வந்துச்சி.. ஏன் இதெல்லாம் பண்ணாரு.. சொந்த மனைவியையே கொலை பண்ற அளவுக்கு.." என்றார் ஆதங்கமாய்.
"அவருக்கு ஜாதி வெறி அதிகமாயிடுச்சி மாமா.. அது தான் இப்படி பண்றாரு.." என்றார் பார்த்திபன் வேதனை தாளாது.
புருஷோத்தமன் அவரின் வேதனை உணர்ந்து ஆறுதலாய் பார்த்திபனின் தோளை தட்டி கொடுத்தார்.
அதே நேரம் ஆத்விக்கின் அலைபேசி ஒலிக்க அதை எடுத்து காதில் வைத்தவனுக்கு அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் விழ,
"வாட் என்னாச்சி எப்படி இது நடந்துச்சி.. நான் என்ன சொன்னேன் உன்கிட்ட.. யூ இடியட்.. நான் உடனே வர்றேன் வை போனை.." என்று போனை வைத்தவன் பதட்டமாய் தன் தாத்தாவை பார்த்தவன்,
"தாத்தா ஒரு எமர்ஜென்சி நான் போயிட்டு வர்றேன்.. நீங்க இங்கே பாருங்க.." என்றவன் அவரின் அடுத்த கேள்விக்கு கூட பதிலளிக்காமல் உடனே அங்கிருந்து சென்றவன் சற்று தூரம் சென்று விட்டு மீண்டும் அங்கு வந்து மகிழனிடம் திரும்பி ,
"மகிழ் எனக்கு உன்னோட உதவி கொஞ்சம் தேவைப்படுது வர்றியா.." என்றான் அவசரமாய்.
அவனின் அவசரம் உணர்ந்த மகிழனும், "ம்ம் போலாம் ஆத்விக்.." என்று மற்றவர்களிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து இருவரும் வேகமாய் சென்று விட்டனர்.
ஊருக்கு ஒதுக்கு புறமான அந்த அரண்மனை போன்ற பங்களாவில் விடியல் நெருங்கும் அந்த வேலையிலும் விட்டில் பூச்சியாய் விளக்கொளி மின்ன அந்த வீட்டின் ஹாலில் இருவர் அமர்ந்திருக்க நிழல் மட்டுமே தெரிந்தது.
அதில் ஒரு உருவம், "என்னாச்சி சேட்டு எங்கே அவ நான் என்ன சொல்லி அவளை உங்ககிட்ட கொடுத்தேன்.. ஆனா நீ இப்படி தளத்துக்கு வந்துருக்க.. இடியட்.. அவளை இப்படி தொலைச்சிட்டு வர நான் உனக்கு பணம் கொடுத்து அவளை வளர்க்க சொல்லலை.." என்றது கர்ண கொடுரமாய் அந்த குரல்.
சேட்டோ அவனிடம் தலைவணங்கியபடி, "சாரி பாஸ் நானும் ரங்கநாயகிகிட்ட சொல்லி தான் இருந்தேன்.. ஆனா எப்படி இப்படி தப்பிச்சி போனான்னு தெரியலை பாஸ்.." என்றான் தலைகுணிந்தபடி.
எனக்கு இந்த விளக்கம் தேவையில்லை சேட்.. அவ வரனும் அவ எங்கே இருக்கான்னு எனக்கு தெரியும்.. ஆனா நான் போய் கூட்டிட்டு வர முடியாத இடத்துல இருக்கேன்.. அதுமட்டுமில்லாம இப்போ அவ அங்க இல்லைன்னும் கேள்விப்பட்டேன்.. அவளை வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க.. ஆனா அவ எங்க போனா என்ன ஆனான்னு இன்னும் ஒரு தகவலும் கிடைக்கலை.. சீக்கிரம் அவ கிடைக்கனும்.. அவளுக்கு நான் நரகத்தை காட்டியும் மீண்டும் என் வழியில வரா அப்படின்னா அதுக்கு மேல நான் அவளை விடலாமா.. இல்லை விடமாட்டேன்.. என் கையால அவளுக்கு மரணத்தை காட்டுவேன்.. போ போய் அவளை கண்டுபிடிச்சி கொண்டா.." என்று உத்தரவிட்டான் அந்த முகமறியா மனிதன்.
அதை கேட்டு தலையாட்டியபடி அங்கிருந்து சென்றான் சேட்டு.
இங்கே புருஷோத்தமனோ ஆழ்ந்த யோசனையில் இருந்தார்.. புனிதவதியும் அவரருகே வந்து அமர்ந்தார்.. சற்று நேரத்தில் கோதை ரகுராமன் ராஜ்மோகன் யமுனா கங்கா அவர்களின் கணவர்கள் என அனைவரும் அங்கே வந்தனர்.
அனைவரின் முகத்திலும் பதட்டம் இருந்தது.. எல்லோரின் கவலையும் சீதாவை நினைத்து தான்.
எல்லா பெண் குழந்தைகளுக்கும் பெரிய ரோல் மாடல் அவர்களின் தந்தை தான்.. அது போலத்தான் சீதாவும் தன் தந்தையை தான் மிகவும் பெரியதாய் எண்ணியிருந்தாள்.. ஆனால் இன்று அவரின் அரக்க குணம் தெரிந்ததும் உடைந்து போயிருந்தார் அதுவும் தான் தாயின் வார்த்தைகளில் இருந்த உறுதியில்.
யமுனா தான் அந்த மௌனத்தை கலைத்தது.
"அப்பா எப்படி அண்ணி இந்த விஷயத்தை தாங்கிட்டாங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு பா.. அண்ணி ரொம்பவே சென்சிடிவ்.. அவங்க அப்பாவை அவங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.. அவங்களால நிச்சயம் தாங்கவே முடியாது பா.." என்றார் கலங்கியபடி.
அதை கேட்டு அனைவரும் ஆமோதித்தனர்.
புருஷோத்தமனோ சற்று நேரம் மௌனமாய் இருந்தவர்,
"இனிமே யாரும் இதைபத்தி பேச வேணாம்.. முதல்ல நாம சீதாவை இதிலிருந்து மீட்டு கொண்டு வரனும்.. அதை முதல்ல பாருங்க.. யாரும் இதை பத்தி சீதாகிட்ட கேட்க வேணாம்.." என்றார் வலியுடன்.
அவருக்கும் தன் மருமகளை நினைத்து கவலையாய் இருந்தது.
சமூகத்தில் மிகப்பெரிய மனிதன் அவரின் இன்னொரு முகம் அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது.
இளையவர்களுக்கும் அது பெரிய அதிர்ச்சி தான்.
இங்கே மருத்துவமனையில் சீதா சிலையாய் அமர்ந்திருந்தார்.. அருகிலே அவரின் தமையன் பார்த்திபனும் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தார்.
யாராலும் இருவரையும் சமாதானம் செய்ய முடியவில்லை.. ஏன் பெரியநாயகியும் அதே நிலையில் தான் இருந்தார்.

ஒரு குடும்பமே நிலைகுலைந்து இருக்க மகிழனின் விழிகளோ ஆத்திரத்தில் செவந்து போய் இருந்தது.
ராதாவோ தன் கணவரையே பார்த்திருந்தார்.. மனைவியின் பார்வையை உணர்ந்தாலும் அதை தாண்டி அவரின் தந்தை செய்த செயல் அனைத்தையும் உடைத்தது.
அதே நேரம் அங்கே வந்த ஆத்விக் அனைவரின் நிலையும் உணர்ந்தவன் தன் தாயின் அருகில் வந்தமர்ந்தவன் சீதாம்மா என்றான் மென்மையாய்.
மகனின் குரலில் உயிர்த்தெழுந்தவர் அவனைக் கண்டதும் ஆது என்றவனை கட்டிக் கொண்டார்.
தாயின் உள்ளக்கிடக்கை அறிந்தவன் அவரின் தோளை தட்டிக் கொடுத்தவன்,
"ம்மா அழாதீங்க ப்ளீஸ் எதுவும் இல்லை.. இப்பவாது தெரிஞ்சிதுன்னே சந்தோஷப்பட வேண்டியது தான்.. ஆனா எனக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே தெரியும்மா.." என்றான் பார்வையை நிலத்தை நோக்கிய படி.



அவன் கூறியதை கேட்டதும் சீதா அதிர்ச்சி நிறைந்த விழிகளுடன் அவனை பார்த்தார்.


மற்றவர்களும் அவனின் வார்த்தையில் அங்கே வந்திட, "ஆமாம்மா எனக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே தெரியும்.. அதுமட்டுமில்லாம தாத்தா தேடிட்டு இருக்க அந்த பொண்ணை உங்களுக்கும் நல்லாவே தெரியும்.." என்றான் அடுத்தடுத்த அதிர்ச்சியாய்.


அதை கேட்ட பார்த்திபனோ, "மாப்பிள்ளை என்ன சொல்றீங்க.. அந்த பொண்ணு எங்க இருக்கான்னு உங்களுக்கு தெரியுமா என்ன.." என்றவரின் விழிகள் ஆசையில் பளபளத்தது.


கணவனின் பேச்சில் இருந்த ஆர்வம் மனதோரத்தில் ராதாவுக்கு வலியை கொடுத்தாலும் அவருக்கும் யார் அந்த பெண் என்ற ஆர்வம் இருந்தது.


" ம்ம் தெரியும் மாமா.. உங்க கடந்த காலத்தோட உயிர் விதை இன்னும் நிழலா இந்த பூமியில நடமாடிட்டு இருக்கு.." என்றான் வலியாய்.


ஏன் மகிழனும் அவனின் விடைக்காக காத்திருந்தான்.


ஜானகிராமனோ தன் மகனின் முகத்தை பார்த்து, "ஆத்விக் யாரு அந்த பொண்ணு சொல்லுபா.. ஒரு பெண்ணோட பாவம் நம்ம குடும்பத்துக்கு வேணாம் பா.." என்றார் தழுதழுத்த குரலில்.


தன் மாமனாரின் செயல் அவரையும் பாதித்திருந்தது.


இனி மறைக்க எதுவும் இல்லை என்ற நிலையில், "மாமா உங்க முதல் மனைவி துவாரகா இப்போ உயிரோட இல்லை.. ஆனா அவங்க பொண்ணு இன்னும் இருக்கா.. அந்த பொண்ணு நீங்களும் பாத்துருக்கீங்க.. சீதாம்மா அது வேற யாருமில்லை நம்ம வீட்ல இத்தனை நாளா இருந்தாளே ஆரிணி அவதான் உங்க தம்பியோட முதல் பொண்ணு.. உங்க அப்பா கொல்லனும்னு தேடிட்டு இருக்கறதும் அவளைத்தான்.." என்றான் கண்களை மூடியபடி.


அதை கேட்ட சீதா மட்டுமல்லாமல் அனைவரும் அதிர்ச்சியில் இருக்க அதிலிருந்து மீண்டு வந்த சீதா,


"ஆனா ஆது அந்த பொண்ணு ஏதோ விபச்சார விடுதியில இருந்ததா தானே அம்மா சொன்னாங்க.. ஆனா ஆரிணி.." என்றவருக்கு அதற்கு மேல் பேச முடியாமல் நாக்கு மேலனத்தில் ஒட்டிக் கொள்ள அமைதியாய் இருந்தார்.


எல்லோரின் விழிகளும் அதே கேள்வியை தாங்கியிருக்க அதை உணர்ந்தவன் ஒரு பெருமூச்சுடன்,
"ம்ம் ஆமாம்மா ஆரிணியும் அந்த இடத்துல வளர்ந்தவ தான்.." என்றான் அடுத்த அதிர்ச்சியாய்.
இங்கே புருஷோத்தமனின் கைகளில் இருந்த புகைப்படத்தில் ஆரிணி கைக்குழந்தையாய் இருந்தாள் நரசிம்மனின் கைகளில்.

இன்னும் இரண்டு பாகத்துடன் கதை முடிந்து விடும் மக்களே.. உங்களின் ஆதரவை தர வேண்டுகிறேன்.
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
190
63
Coimbatore
ஒருவரின் ஜாதி வெறியில்
இரு உயிர் ஊசலாட
மூன்று பேர் வாழ்க்கையை
நாலா பக்கமும் சிதறி கிடக்க
அஞ்சாமல் செய்த பாவச் செயல்
ஆறாது என்றும்
ஏழு பிறப்பு எடுத்து வந்தாலும்....