• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாலைவன ரோஜா 23

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
பாலைவன ரோஜா 23
ஆரிணியின் தாய் துவாரகா தாசி குலத்தில் பிறந்தாலும் சிறு வயதிலிருந்து தன் தாய் பட்ட அவலங்களை கண் கொண்டு வளர்ந்தவள் தானும் அதை போல் வாழக்கூடாது என்ற வைராக்கியத்தில் சிறு வயதிலிருந்து ஆடல் பாடலில் சிறந்து விளங்கி சுய சம்பாத்தியத்தில் நிறைவான குடும்பமாய் வாழ வேண்டும் என்ற கனவுகளுடன் வாழ்ந்தார்.
அவரின் இளம்பிராயத்தில் பார்த்திபனிடம் ஏற்பட்ட நட்பு அவரின் வயது கோளாறு காரணமாக மட்டுமல்லாமல் உண்மையான நேசத்தை பார்த்திபனிடம் உணர அது படிப்படியாக காதலாய் மாறியது.
இருவரும் ஒருவருக்கொருவர் நேசத்தை வெளிப்படுத்தும் நேரம் தான் தன் வந்த குலத்தை நினைத்தவர் தன் காதலை சொல்லாமல் மறைக்க முயன்றார்.. ஆனால் பார்த்திபனோ தன் காதலை யாருக்காகவும் மறைக்காமல் தான் நேசித்தவளிடம் சொல்லிவிட அதை ஏற்கச் சொல்லி மனம் உந்தினாலும் இந்த சமூகத்தின் நியாயமற்ற கொள்கைகளுக்காக தன் ஆசையை அடக்கியவர் தன் காதலையும் தன் மனதுக்குள்ளே புதைத்துக் கொண்டார்.
வெட்ட வெட்ட தளிர்க்கும் வாழையைப் போல விலகி செல்ல செல்ல நேசம் அதிகமாய் தான் ஆனதே தவிர சிறுதுளியும் குறையவில்லை வஞ்சியவளுக்கு.
அதே நேரம் பாரத்திபனும் முழுதாய் அவரை நேசிக்க துவாரகாவிடம் தன் காதலை வெளிப்படுத்தினார்.
" துகி நான் உன்னை நேசிக்கிறேன்.. என் உயிரை விட ஆழமா.. நீ என் வாழ்க்கையில இருந்தா நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன் மா.." என்று தன் முன்னே முழு காதலையும் கண்களில் தேக்கி தன் ஆசையை கூறும் காதலனை எந்த பெண்ணிற்கு தான் பிடிக்காது.
துவாரகாவிற்கும் பார்த்திபனை மிகவும் பிடித்து தான் போனது.. ஆனால் அவளின் காதலை சொல்ல முடியாமல் அவளின் பிறப்பு மனதில் ஆழ்நுழைந்த காதலை தடுத்தது.
துவாரகாவின் கண்களில் வழியும் காதலை கண்ட பார்த்திபனுக்கு அவளின் வாயால் அந்த காதலை கேட்க வேண்டும் என்ற ஆசை நிரம்பி வழிந்தது.
தன் முன்னே எதுவும் பேசாமல் தலையை குணிந்த படி நின்று இரு கைகளையும் கோர்த்து பிணைத்தபடி நின்றவளை தன் விழிகளால் அள்ளி பருகியபடி ரசித்திருந்தார் பார்த்திபன்.
தன்னை தான் இமை கொட்டாமல் பார்த்திருக்கிறார் என்று தெரிந்தாலும் ஏனோ அவளின் மனதின் ஆசையை கூற முடியவில்லை பெண்ணவளால்.. அதே போல் எத்தனை நேரம் இப்படி அமைதியாக இருப்பது என்று புரிந்தாலும் அதற்கு மேலும் அமைதியாய் இருக்க முடியாமல் தன் மனதின் ஆசையை ஒதுக்கி உடலை இறுக்கமாய் வைத்துக் கொண்டு பார்த்திபனின் கண்களை நேருக்கு நேராக நின்று பார்த்தவருக்கு பார்த்திபனின் கண்களில் இருந்து வழிந்த காதல் மனதை கலங்க செய்தது.
எந்த சூழ்நிலையிலும் துவாரகாவிற்கு பார்த்திபனின் காதல் பொய்யானதாய் தெரியவில்லை.. ஆனால் அவரின் மனதை உடைக்க வேண்டிய தன் நிலையை அறவே வெறுத்தார்.
இருந்தும் தன்னை நேசித்த பார்த்திபனின் வாழ்வு நிறைவாக வேண்டுமானால் தான் அவரை நிராகரிக்க வேண்டும் என்று மனதை தேற்றிக் கொண்டவள் அவரின் கண்களை பார்த்து,
"சாரி சார் நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க.. நான் உங்களை காதலிக்கலை.. உங்களை ஒரு நல்ல நண்பனாத்தான் பார்த்தேன்.. ஆனா நீங்க நட்பை தவறா புரிஞ்சிகிட்டு பேசிட்டு இருக்கீங்க..இனிமே இந்த மாதிரி எண்ணத்தோட என்கிட்ட பேசாதீங்க.." என்றவள் கண்களில் வழியும் கண்ணீரை அவனறியாமல் துடைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அதை கேட்ட பார்த்திபனின் மனம் உடைந்து போனது.. அவரே பலமுறை கண்டிருக்கிறார் தன் மேல் பெண்ணவள் கொண்ட நேசத்தை.. அவளின் கயல்விழிகளில் வழிந்த காதல் எத்தனையோ முறை அவரை கட்டி போட வைத்திருக்கிறது.. ஆனால் இன்று வஞ்சியவளின் வார்த்தை அவரை ஆழ்கடலில் தள்ளியது.
எத்தனை மணி நேரம் அதே இடத்தில் நின்றிருந்தாரோ மழையின் துளிகள் மேனியில் விழுந்தும் அதை உணரும் நிலையில் அவர் இல்லை.
வானத்திலிருந்து மழை இன்றோடு கொட்டி முடித்து விடுவது போல் கொட்டியது.. இல்லை அவரின் காதல் தோல்விக்காக அழுதது போல் கொட்டி தீர்த்தது.
கிட்டதிட்ட இவை நடந்து ஒரு வாரம் கழித்து அன்று மருத்துவமனைக்கு தன் தோழிக்கு உடல்நிலை சரியில்லாமல் அனுமதித்திருப்பதாக வந்திருந்த தகவலில் துவாரகா மருத்துவமனை சென்றாள்.
அங்கே தான் மீண்டும் பார்த்திபனை பார்த்தாள் அதுவும் ஆளே அடையாளம் தெரியாமால் உடல்களில் ஆங்காங்கே அடிபட்டு ஒரு வாரத்தில் உருகுலைந்து போயிருந்தார் பார்த்திபன்.
அவரை அப்படி கண்டதும் அதிர்ச்சியில் அவளறியாமல் அவரின் முன்னே போய் நிற்க அந்த நேரத்தில் அவரை எதிர்பார்க்காதவரின் விழிகள் நேசத்தில் மிளிர்ந்தது அந்த நிலையிலும்.
மனதினுள் காதலாய் பொத்தி வைத்தவரை இத்தனை நாட்கள் கழித்து கண்டதும் அமிழ்ந்து கிடந்த காதல் வெளிவந்தது.
தன் காதல் துணையை கண்டதும் துகி என்றார் சந்தோஷத்துடன்.
" உங்களுக்கு என்னாச்சிங்க.." என்றாள் அதிர்ச்சி நீங்காதவராக.
அதை கேட்டதும் தன்னை இந்த நிலையில் கண்டதும் தன்னவள் கொண்ட அதிர்ச்சியே தன் மேல் அவள் வைத்த நேசத்தை உணர்த்த போதுமாய் இருந்தது ஆடவனுக்கு.
"ஹேய் துகி மா எனக்கு ஒன்னுமில்லை.. நீ பயப்படாத அதோ அங்கே வா.. இங்கே எல்லாரும் நம்மையே பாக்குறாங்க மா.. என்னோட துகி யாருக்கும் வேடிக்கை பொருளா இருக்க நான் விரும்பலை மா.." என்றபடி கையோடு அவளை அழைத்துக் கொண்டு சென்றார்.
உடலில் ஆங்காங்கே அடிபட்டிருக்க தன் கைப்பிடிக்குள் அடிபட்டிருக்கும் தன்னவளின் கரத்தை விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருக்க பெண்ணவளோ தன்னவனின் உடலில் இருந்த காயங்களை தான் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த பார்த்திபனுக்கு என்ன தோன்றியதோ,
"ஏன் துகி இவ்வளவு காதலை மனசுல வச்சிகிட்டு ஏன் என்னை பிடிக்காதவ மாறி ஒதுங்கி போன.. எதுக்காக என்னை விட்டு போனே துகி.." என்றார் ஆதங்கமாய்.
பெண்ணவளுக்கு அவர் கேட்டது எதுவும் காதில் விழவில்லை.. அவரின் உடலில் தான் கவனமாய் இருந்தாள்.
"உங்களுக்கு என்னாச்சி எப்படி அடிபட்டது.. ஒரு வாரத்துல ஆளே அடையாளம் தெரியாத இருக்கீங்க.." என்றவருக்கு வேதனை தான் தீரவில்லை.
அவர் கேட்டதில் உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் இத்தனை காதலை மனதில் வைத்துக் கொண்டு தன்னை விட்டு பிரிந்து செல்ல துணிந்தவளின் மேல் கோபம் தான் வந்தது.
" துகி நான் உன்கிட்ட கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை.. நீ என்னை விரும்புறே தானே.. அதுக்கு முதல்ல பதில் சொல்லு.. நீ கேட்டதுக்கு நானே பதில் சொல்லுறேன்.." என்றார் அழுத்தமாய் பார்த்திபன்.
அவரின் வார்த்தையில் இருந்த அழுத்தத்தில் சுயநினைவு பெற்றவர் அதற்கு மேலும் தன் காதலை மறைக்க முடியாமல் தலையை குணிந்தபடி ஆமென்று தலையாட்டினார்.
தன் காதலை வார்த்தையில் சொல்லவில்லையென்றாலும் மௌனமாய் தலையாட்டிய துவாரகாவின் மேல் அளவில்லாமல் காதல் பொங்கியது.
என்று தன் வலியை அவளின் வலியாய் கண்டாரோ அன்றே தன் மனதில் நீக்கமற நிறைந்தவன் தன்னவன் தான் என்பதை உணர்ந்த பெண்மையும் பார்த்திபனின் தோளில் அடைக்கலம் புகுந்தது.
இருவரும் காதல் கிளிகளாய் வலம் வந்த நாட்களில் கூட கன்னியமாய் தள்ளி காதல் செய்து வந்த பறவைகள் உள்ளத்தால் மட்டுமன்றி உடலால் இணையும் நாளும் வந்தது.
அன்று பார்த்திபனின் பிறந்த தினம் தன் தாயை வணங்கிவிட்டு தன்னவளை காண வந்தவருக்கு ஏனோ அன்று தன்னவளின் அழகில் சொக்கி தான் போனார்.
தான் எடுத்து கொடுத்த அரக்கு நிற பட்டுபுடவையில் எளிமையின் அம்சமாய் நின்றிருந்தவளின் அழகு அந்த இளம் வயதில் தாபத்தை தோற்றுவித்தது.
இருவரும் ஜோடியாய் சென்று அம்மனை வணங்கியவர்கள் தன் கையில் வைத்திருந்த குங்குமத்தை எடுத்து துவாரகாவின் நெற்றியில் வைத்து விட்டார் பார்த்திபன்.
அதை கலங்கிய கண்களுடன் அந்த நேரத்தை அனுபவித்தவருக்கு அந்த நொடியே பார்த்திபனின் மனைவியான உணர்வு.
அன்று தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு அன்று இரவு வரை தன்னுடனே இருத்தி கொண்டார் துவாரகாவை.
அன்றைய நாள் முடியும் தருவாயில் இருவரும் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த இரவு ஏனோ இருவருக்கும் சதி செய்து விட்டது போல் தான்.
அத்தனை நாளாக பொத்தி வைத்திருந்த தாபம் அதீதமான நேசம் காதல் ஒருவருக்கு மற்றவரின் மேல் உள்ள நம்பிக்கை அனைத்தும் சேர்ந்து அணை உடைத்த வெள்ளமாய் ஓட அதன் விளைவு அதீத காதலில் இருவரின் தாம்பத்யம் நடந்தேறியது அந்த வெட்டவெளியில்.
இது தான் விதியோ என்னவோ.. உரிமையுள்ள மனைவியாய் தொட வேண்டும் எண்ணியிருந்த பார்த்திபனுக்கும் சரி கழுத்தில் தன்னவன் சூட்டிய மஞ்சள் தாலியுடன் இல்லறம் தொடங்க வேண்டும் என்று நினைத்த துவாரகாவுக்கும் சரி அந்த நேரத்தில் அந்த இடத்தில் நடந்தேறிய தாம்பத்யம் தான் முதலும் கடைசியும் என்பதை அறியாமல் போயினார்கள்.
நன்றாக இருட்டு சூழ்ந்திருக்க நிலவொளியில் தலையை முட்டியில் பதித்து அமர்ந்திருந்த தன்னவளை விழி அகற்றாமல் பார்த்திருந்த பார்த்திபனுக்கு மனமெங்கும் குற்றவுணர்ச்சி தான் தோன்றியது.
தன்னை நம்பி தன்னை நேசித்தவளுக்கு உண்மையான அங்கீகாரத்தை கொடுக்காமல் அவளின் பெண்மையை அபகரித்ததை நினைத்து தன்னையே அருவருப்பாய் உணர்ந்தார்.
" துகி மா சாரிடா நா.." வார்த்தையை முடிக்க முடியாமல் கண்களில் நீர் கசிய அமர்ந்திருந்தார் பார்த்திபன்.
துவாரகாவோ தன்னை முதலில் தேற்றி தன்னவன் கொண்ட குற்றவுணர்ச்சியை போக்குவது தான் முதல் கடமையாக பட தன் முகத்தில் பெரிதாய் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அவரிடம் திரும்பி,
"பரவாயில்லை மாமூ.. இப்போ நடந்ததுக்கு நானும் தானே பொறுப்பு.. ஆனா என்னை கைவிட்ற மாட்டீங்களே.." என்றவருக்கு இறுதி வார்த்தை தொண்டைக்குள் சிக்கியது போலானது.
அவரின் பிறப்பின் ரகசியத்தை இன்னும் பார்த்திபனிடம் சொல்லவில்லை.. அதுவே பெண்ணவளை உறுத்திக் கொண்டிருந்ததது.. அத்துடன் சேர்த்து இப்போ அரங்கேறிய சம்பவம் அவரை அலைகழித்தது.. அதன் வெளிப்பாடு தான் அந்த இறுதி வார்த்தை.
" ஏய் என்ன பேசுற நீ.. உன்னை எப்படி டி நான் கைவிடுவேன்.. நீ என் உயிரு டா.. இதோ பாரு எப்போ உன்னை தொட்டேனோ அப்பவே நீ என் மனைவி தான்.. என்னைக்கு உன்னை நேசிக்க ஆரம்பிச்சேனோ அப்பவே என்னில் பாதி தான் நீ.. அப்படிலாம் பேசாதடி.." என்றவர் தன் கழுத்தில் இருந்த பரம்பறை சங்கிலியை கழட்டி துவாரகாவின் கழுத்தில் போட்டுவிட்டார் பார்த்திபன்.
அதை சந்தோஷத்துடன் பார்த்த துவாரகாவின் முகத்தில் மகிழ்ச்சி மின்னல் தோன்றியது.
ஆனால் இருவரும் அறியாதது அவர்களின் இந்த வாழ்க்கை இன்றுடன் முற்று பெறப் போவது என்பதை.. அறிந்தால் அவர்களின் நிலையும் வலியும் சொல்லில் அடங்குமா என்ன..?
அடுத்த பாகத்துல பாக்கலாம் மக்களே.. அப்புறம் இந்த பாலைவன ரோஜா ஆசிரியர் யாருன்னு தெரிஞ்சிக்கனுமா ஒரு மெசேஜ் தட்டிவிடுங்க பா.