• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாலைவன ரோஜா 4

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
பாலைவன ரோஜா 4


அரண்மனை போன்ற அந்த வீட்டின் வாயிலில் அவன் நின்றிருக்க அவனின் முன்னே அவன் குடும்பம் அங்கே கலங்கியபடி நின்றிருந்தது.. அவனின் பெற்ற தாயான கோதையும் வளர்த்த தாயான சீதாலட்சுமியும் அழுது கொண்டே ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டனர்.

தன்னை வந்து அணைத்து இரு தாய்களையும் தானும் அணைத்துக் கொண்டவன் கண்கள் கலங்கியிருந்தாலும் அதை வெளிக் காட்டாமல் இருவரிடமும் திரும்பி, "சீதாம்மா, கோதைம்மா கொஞ்சம் அழுகறதை நிறுத்துறீங்களா.. எனக்கு ஒன்னுமில்லை.. அது தான் நான் வந்துட்டேன் இல்லை.. அப்புறம் என்ன எதுக்கு இந்த அழுகை எல்லாம்.." தன் தாய்மார்கள் இருவரையும் சமாதானம் செய்தவன் அவர்களை அணைத்துக் கொண்டான்.. கூடவே அவனது தம்பி தங்கைகள் அத்தைகள் என அனைவரும் அந்த அணைப்பில் இணைந்து கொண்டனர்.

அவனின் தந்தைகளும் மாமன்களும் அதை சந்தோஷமாய் பார்த்துக் கொண்டனர்.

அப்பொழுது தான் அங்கே வந்த புருஷோத்தமன் வயதானாலும் இன்னும் கம்பீரமாய் காட்சியளித்தார்.

கம்பீரமான தன் பேரன் இன்று இப்படி ஒரு சூழலில் வந்தாலும் அவனின் கால்கள் இந்த நாட்டிற்காக தானே போனது என்று அதற்கும் பெருமை கொண்டார்.

தங்கள் வீட்டு இளவரசனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் நேரம் அங்கே வந்த பாட்டி ஆரத்தி எடுத்து தான் தன் பேரனை உள்ளே அழைத்துக் கொண்டார்.

கிட்டதட்ட எட்டு வருடங்கள் ஆகி போயிற்று.. அவன் படிப்பு வேலை என வீட்டை விட்டு சென்று.. நடுவில் வந்தாலும் அதிகம் தங்காமல் தன் குறிக்கோளை அடைய குடும்பம் தடையாக இருக்கக்கூடாது என்று இங்கே அதிகம் வரமாட்டான்.

இப்பொழுது ஒரு கால் போனதிற்கு பின்பு இங்கே வந்து உறவுகளின் முன்னே தலைகுனிந்து நிற்க அவன் விரும்பவில்லை.

ஆனால் இன்றோ யார் என்று அறியாத பெண்ணவளால் தன் இல்லம் வந்ததை நினைத்து பார்த்தான்.

நீண்ட நாள் கழித்து சந்தித்த உறவுகளில் மகிழ்ச்சியுடன் மனம் நிறைந்து இத்தனை நாள் பேசாத கதைகளையும் பேசினான்.. ஆனால் நடுவே அவ்வப்போது தேன்கூட்டிலிருந்நு விழும் தேன் துளியாய் அவளின் நினைவுகள் வருவதை ஆடவனால் தவிர்க்க முடியவில்லை.

தங்கள் பிள்ளை தங்கள் வீட்டிற்கு வந்துள்ளான் என்பதை சமையலில் தெரியப்படுத்த வீட்டுப் பெண்கள் அனைவரும் சமையல் கட்டில் முடங்க.. ஆண்களோ அவனை ஓய்வெடுக்க சொல்லி அனுப்ப கூட சென்ற இளம் கன்றுகளுக்கு ஆளுக்கொரு வேலையாய் பிரித்து கொடுத்த அனுப்பி வைத்தார்கள் பெரியவர்கள்.

நீண்ட நாட்கள் என்பதை விட வருடங்கள் கழித்து தன் அறைக்கு வந்தவனுக்கு அவனின் அறையில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே அந்தந்தப் பொருள் வைத்த இடத்திலே சுத்தமாய் இருப்பது கண்டு மகிழ்ச்சியுடன் குளியலறைக்கு சென்றான் ஆத்விக்.

குளித்து முடித்து வந்தவன் படுக்கையில் கண்கள் மூடி படுத்தவனின் விழிகளில் பெண்ணவளின் பிம்பம் தான் தெரிந்தது.. ஏனோ அந்த பாடல் அவனுக்காக மட்டுமல்ல அதில் அவளின் சோகமும் அல்லவா தெரிந்தது.

நிச்சயம் அவளுக்கும் ஏதேனும் மனக்குறை இருக்க வேண்டும் என்று எண்ணினான்.. தன் எண்ணப் போக்கை பார்த்தவனுக்கு வியப்பாய் தான் இருந்தது தன்னை நினைத்து.

பிறந்து வளர்ந்த இத்தனை வருடங்களில் எந்த பெண்ணின் நினைவையும் தன்னை அண்ட விடாதவன் இன்று யார் என்றே அறியாமல் ஒருவளையே நினைத்து பார்த்துக் கொண்டிருப்பது விசித்திரமாகத் தான் தோன்றியது.

தன்னையே நினைத்து ஆச்சர்யப்பட்டவன் இனி அவளை பற்றி நினைக்கக் கூடாது என்று நினைத்தவன் தன் தலையை குலுக்கிக் கொண்டு ஒரு சட்ட புத்தகத்தை எடுத்து பிரித்து படிக்க துவங்கினான்.. மனதிற்கு பிடித்தமானதை நினைத்தாள் தேவையில்லாத விஷயங்களை போய்விடும் என்று எண்ணி தான் அவளை பற்றி நினைக்க கூடாது என்று நினைத்தான்.. ஆனால் அவன் அறியவில்லை அவனின் ஆழ்மனதில் அவள் துயில் கொண்டுள்ளாள் என்பதை.. அறியும் நேரம் விதி தன் கோரதாண்டவத்தை இருவருடைய வாழ்க்கையிலும் நிகழ்த்தியிருக்கும்.

இங்கே அவனின் நினைவுக்கு சொந்தமானவளோ கண்களெல்லாம் கண்ணீரின் காய்ந்த தடம் பதிந்திருக்க எழக்கூட முடியாமல் தவழ்ந்து சென்று அருகில் இருந்த தண்ணீரை எடுத்து காய்ந்து வறண்டு கிடந்த தொண்டையை நனைத்துக் கொண்டாள்.

இன்று வெளியே கோயிலுக்கு சென்ற நேரம் யாரோ ஒரு ஆடவன் அவளிடம் அட்ரஸ் கேட்க அதை சொல்லிவிட்டு வந்தவளை பார்த்த ரங்கநாயகியின் ஆட்கள் தவறுதலாக புரிந்து கொண்டு ரங்கநாயகியிடம் அவள் யாரோ ஒரு ஆடவனிடம் பேசினாள் என்றும் ஒரு வேளை காதலிப்பவனாக இருக்கலாம் என்றும் தங்களுக்குள் தோன்றிய கற்பனையை கதையாய் அவளிடம் கூறிட இது தான் சமயம் என்று தன் வெஞ்சினத்தை தீர்த்துக் கொள்ள அவளின் கால்களின் பாதத்தில் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியை வைத்து ஆத்திரம் தீர மட்டும் தீட்டிவிட்டாள் ரங்கநாயகி.

அதன் விளைவு தான் உடலெல்லாம் அனலாய் கொதிக்க தீ பட்ட இடம் எரிந்தது.

வலியில் கண்களில் கண்ணீர் வழிய இருந்த இடத்தை விட்டு எதற்காகவும் அசைய முடியாமல் அமர்ந்திருந்தாள்.. மனம் முழுவதும் வலித்தது.. யாரிடமும் ஆறுதல் தேட முடியாத தன் நிலை யாருக்கும் வரக்கூடாது என்று எண்ணினாள்.

ஏனோ இப்பொழுது அவளுக்கு ஆறுதலாய் யாரேனும் அருகில் வேண்டும்.. அவளின் தாய் முகத்தை அவள் கண்டதில்லை.. அறியா மழலை பருவத்திலிருந்தே தாயாய் கண்டது ரங்கநாயகியை தான்.. ஆனால் என்று அவள் தன் தாய் இல்லை என்றானதோ அன்றே சற்று விலகியவள் அவள் தன்னை எதற்காக வளர்த்தாள் என்ற காரணத்தை கேட்கவும் முற்றிலும் வெறுத்து விட்டாள்.. இங்கிருந்து எப்படியாவது தப்பிக்கலாம் என்றாலும் வெளியே இதை விட மனித மிருகங்கள் வாழ்கிறதே என்ற பயம் அவளை அப்படியே நிறுத்தியது.

தனக்கு மிகவும் பிடித்த கண்ணனை மனதார வணங்கியவள் தன் வலி தீரவும் மென்மையாய் பாடினாள்.


என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை...



இந்த ஜென்மத்தில் கிடைத்திருக்கும் இந்த வாழ்வே ஒரு தவம் தான் எனும் போது இதை பரிகசிப்பதில் என்ன பலன்.. இத்தனை இடர்கள் வந்த போதும் இங்கிருந்து போனாள் போதும் என்றிருந்தவளுக்கு எங்கு செல்வது யாரை நம்பி செல்வது என்று தான் சுத்தமாய் புரியவில்லை.

தன் உயிரை விட தன் மானமே பெரிதென்று வாழ்பவளுக்கு இங்கிருந்து போய் மானத்துடன் வாழ்ந்தாள் போதும்.. அவளின் ஆசை மிகவும் எளிது தான்.. அதுவும் தாய் தந்தை இருக்கும் ஒரு சராசரி பெண்ணின் ஆசை தான் அவளுடையதும்.. ஆனால் அவளின் பாதை முட்கள் நிரம்பியது.. தினமும் தன்னை காத்துக் கொள்ளவே பெரிதும் சிரமபட்டாள்.

என்ன நடந்தாலும் சரி ரங்கநாயகியின் கேவலமான தொழிலில் மட்டும் விழக்கூடாது என்று வைராக்கியத்துடன் இருக்கிறாள்.

ஒரு பெண்ணின் சராசரி ஆசையே அன்பான மாமனார் மாமியார் ஆசையான கணவன் இதில் தாத்தா பாட்டி அத்தை மாமா சித்தி சித்தப்பா என பெரிய கூட்டு குடும்பத்தில் வாழும் பாக்கியம் கிடைத்தால் போதும் என்று நாளும் பொழுதும் தான் வேண்டுகிறாள்.


அன்றும் காலில் எரிந்து கொண்டிருந்த காயத்திற்கு மருந்து போட்டவள் மெதுவாய் எழுந்து லைட் போடாமல் சத்தம் போடாமல் சமையல் கட்டிற்கு சென்றாள்.

கொஞ்சம் சுடுதண்ணீர் வைத்து எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வரும் வழி தான் ரங்கநாயகியின் அறையும்.. அதை தாண்டும் போது அவளின் பெயர் அடிபடவும் அங்கேயே நின்று விட்டாள்.. இருளும் நிலவும் மட்டும் அவளுக்கு துணையிருக்க இரவின் நிசப்தத்தில் உள்ளே அவர்கள் பேசிக் கொண்டது இவளின் காதுகளில் தெளிவாக கேட்டது.

ஒரு ஆணின் குரலும் ரங்கநாயகியின் குரலும் இணைந்து ஒலித்தது.

" ஏன் அக்கா எத்தனை நாளைக்கு அந்த புள்ளையை இப்படி பொத்தி பொத்தி வச்சிருக்க போறீங்க.. இதுல வேற அதோட விருப்பத்துக்கு நீ ஸ்டேஜ்ல பாட வச்சிருக்க.. எனக்கு கொஞ்சமும் பிடிக்கலை கா.. ஏதோ நீ சொல்றதால அமைதியா இருக்கேன்.." என்றான் ரங்கநாயகியின் அல்லக்கை ஒருவன்.. அவளுக்கு தம்பி போன்றவன் அது தான் இத்தனை தூரம் அவளிடம் பேச முடிகிறது.

"அடேய் வரதா அவளை அப்படி விடறதிலேயும் எனக்கு லாபம் தாண்டா.. அது தான் அவளுக்கு நாளுக்கு நாள் மவுசு கூட்டிட்டு போகுது.. அதுமட்டுமில்லாம காரணமில்லாமையும் நான் அவளை அப்படி விடலை.. அதுக்கும் முக்கிய காரணமும் இருக்கு.. இதுக்கு மேல அவளோட பிறப்பு ரகசியம் எனக்கு தெரியும்னு அவகிட்ட சொல்லி வச்சிருக்கேன்.. ஆனா எனக்கு எதுவும் தெரியாதுன்னு அவளுக்கு தெரியாது இல்லை.. அதனால அவ எப்படி இருந்தாலும் எனக்கு லாபம் தான் வரதா.." என்றாள் ஏதோ திட்டத்துடன்.

"அவ இப்படி பாட போறதுல என்னக்கா லாபம்.. ஏதோ அவளை பத்தியனியாவே வச்சிருக்க போற மாறி.. நம்மளும் அவளை ரெண்டு தடவை பெரிய பிஸ்னஸ் மேன்கிட்ட அனுப்பனா அவனுங்க என்னவோ தொடாத ரோஜாவா அப்படியே அனுப்புறானுங்க.. நம்ம இடத்துல இருந்துகிட்டு இன்னும் கன்னி கழியாமா இருக்கா கா.. அதுவும் அவ சின்ன வயசுல இருந்தே வேற இருக்கா.. பாத்துக்கா எங்கேயாவது கம்பி நீட்டிட போறா.." என்றான் எச்சரிக்கையாக.

அப்படி எல்லாம் விட மாட்டேன் வரதா.. இந்த முறை எங்கேயோ சேலம் பக்கமா ஏதோ கச்சேரி போறா இல்லை.. போயிட்டு வரட்டும்.. அவளை ஒரு கோடி ரூபாய்க்கு பேசியிருக்கேன்.. ஒரு பெரிய பார்ட்டி க்கு.. சமூகத்துல பெரிய ஆளு தான்.. ஆனா இவளை ஏதோ தனித்தீவுக்கு கொண்டு போகப் போறானாம்மா.. நமக்கு என்ன பணம் கைக்கு வந்தா சரி தானே.. பொருளை கைமாத்தி விட்டதுக்கு அப்புறம் அது என்ன ஆனா நமக்கு என்ன டா.. எதுக்கும் கூடுதலா கொஞ்சம் ஆளை சேத்துக்கோ.. அவ எங்கேயும் போக கூடாது.. அவளோட அந்த வனப்புக்கு தான் இந்த பணமே.. அதுல அவளோட அந்த அழகு தான் அவனுக்கு ரொம்ப புடிச்சிருக்குன்னு சொன்னான்.. அதனால அவ பத்திரம் வரதா.. சரி நீ போய் தூங்கு.. எனக்கும் தூக்கம் வருது.." என்று அவனை அனுப்பியவள் தானும் தூங்க போனாள்.

இதையெல்லாம் கேட்ட பெண்ணவள் வாயை பொத்தி கண்ணீரில் கரைந்து போனாள்.

எதற்காக இந்த நரகத்தில் தங்கியிருந்தாலோ அந்த காரணமே இப்போ இல்லாதிருக்கும் போது இனி இங்கே இருப்பது தவறு.. தன் உயிரே போனாலும் பரவாயில்லை மனத்தோடு போக வேண்டும்.. இங்கே இறந்தால் இறந்த உடலை கூட விட்டு வைக்காத மிருகங்கள் இவர்களை என்பது பெண்ணவளுக்கு விளங்கி போனது.

அடுத்து அவள் எடுத்த முடிவு அவளின் வாழ்வையே திசை மாற்றியது.



வேட்டை ஆடும் மானானேன்
வித்தை காட்டும் பொருளானேன்
காட்டில் வாழும் கிளியாகாமல்
நாட்டில் வாழும் பெண்ணானேன்

அன்னை பெற்றாள் பெண் என்று
அதனால்தானே துயர் இன்று
கண்ணைத் தந்த தெய்வங்களே
கருணை தந்தால் ஆகாதோ
ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. சாரி பா லேட்டா யூடி போடறதுக்கு.. மன்னிச்சு.. படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க தங்கம்ஸ்
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
சிறையில் அடைந்திருக்கும் சிட்டுக்குருவியே....
சூடு பட்டும்
சோதனைகள் பல கடந்தும்
சோகத்தில் இருப்பவளே சுதந்திர காற்றை
சுவாசிக்க நேரம் வருகிறதோ சிந்தித்து செயல்படு சுதந்திரமாய் பறந்து விடு..... 💐💐💐💐👍🏻💕💕💕👏.......
 
  • Like
Reactions: kkp49

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
சிறையில் அடைந்திருக்கும் சிட்டுக்குருவியே....
சூடு பட்டும்
சோதனைகள் பல கடந்தும்
சோகத்தில் இருப்பவளே சுதந்திர காற்றை
சுவாசிக்க நேரம் வருகிறதோ சிந்தித்து செயல்படு சுதந்திரமாய் பறந்து விடு..... 💐💐💐💐👍🏻💕💕💕👏.......
Thank you for valuable comment sis