பாலைவன ரோஜா 5
வீட்டிற்கு வந்து ஒரு வாரமாகிவிட்டது.. நாட்கள் கடந்து போனதே தெரியவில்லை ஏ கே விற்கு.. தம்பி தங்கை அக்கா மாமா அத்தைகள் மாமாக்கள் அப்பா அம்மா தாத்தா பாட்டி என இவர்களுடனான பொழுதுகள் இனிமையாய் கழிந்தன ஆத்விக்கிற்கு.
ஏன் அவ்வப்பொழுது பெயர் அறியாத பெண்ணவளின் வதனமும் கண் முன்னே வந்து போக அவளின் நினைவில் ஏதேதோ உணர்வு வந்து போனதை தடுக்க முடியாமல் போனது ஆத்விக்கிற்கு.
ஏனோ அவளின் நினைவு வரும் பொழுது எல்லாம் சில்லென்ற சாரல் மனதை தாக்குவதை உணர முடிந்தது ஆடவனுக்கு.
அவன் ஒன்றும் பெண்களை அறியாதவன் இல்லை.. ஏன் இதே வீட்டில் அத்தைகளின் பெண்களுடன் வளர்ந்தவன் தான்.. வெளியே அவனின் கம்பீரத்தில் எத்தனையோ பெண்களை அவனை சுற்றி வந்து காதலை கூறிய சம்பவமும் நடந்துள்ளது.. ஆனால் அவை எதுவும் ஆடவனின் மனதை தொடவும் இல்லை.. நினைவில் தங்கவும் இல்லை.. வீட்டு பெண்களுக்கு அடுத்ததாக அவனின் மனதில் தங்கி போனவள் தான் ஆரிணி.
ஏனோ அன்று அவள் பாடிய பாடலை ரெக்கார்ட் செய்தான் தன் அலைபேசியில்.. அன்று காரணம் அறியாமல் செய்த செயல் இன்றும் அதன் காரணம் முழுவதும் விளங்காமல் தான் அவ்வப்பொழுது அவளின் நினைவுகளின் தாக்கத்தில் இருந்து வெளியேற அவளின் குரலையே உபயோகப்படுத்திக் கொண்டான் ஆடவன்.
ஆனால் அவன் மனதில் தங்கி போனவளின் நிலை தெரிந்தால் அவளை ஏற்றுக் கொள்வானா..? இல்லை வேசி என தூற்றிவிடுவானா..? காலத்தின் கையில் தான் பல துன்பங்கள் இன்பங்களை கடந்து வந்துள்ளோம்.
அவளின் வாழ்வில் அவன் இன்பமா..? துன்பமா..?
அன்று குடும்பமே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே சில வெள்ளை வேட்டி சட்டையும் மஞ்சள் வேட்டி சட்டையும் அணிந்தவர்கள் சிலர் வந்தார்கள்.
" அய்யா வணக்கமுங்க.." என்றார் அந்த கும்பலில் இருந்த பெரியவர் ஒருவர்.
"அடடே வாங்க வாங்க சண்முகம்.. எப்படி இருக்கீங்க.. ஏது இவ்வளவு தூரம் ஊரையே திரட்டிட்டு வந்துருக்கீங்க.. வதி போய் எல்லாருக்கும் தண்ணீர் கொண்டு வந்து கொடும்மா.." என்று மனைவியை ஏவியவர் வந்தவர்களை சந்தோஷமாய் வரவேற்றார் புருஷோத்தமன்.
தன் கணவனின் சொல்லுக்கு இணங்க மனைவியும் அந்த வீட்டின் மருமகள்களும் சமையல் கட்டிற்கு சென்றார்கள்.
புனிதவதி முதலில் தண்ணீர் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தார்.. அதை வாங்கி சந்தோஷமாக தாகத்திற்கு பருகியவர்கள் புருஷோத்தமனிடம் திரும்பி,
"அய்யா உங்களைதாங்க பாக்க வந்தோம்.. ஊர்ல திருவிழா வருதுங்க.. அது உங்க அம்மா பிறந்த ஊர்னு ஊருக்கு நீங்க நிறைய நல்லது செஞ்சிருக்கீங்க.. இந்த வருஷ திருவிழாவுக்கு உங்க குடும்பத்தோட வரனுமுங்க.. அதுமட்டுமில்லை ஊரே உங்களுக்கு முதல் மரியாதை செய்யனும்னு ஆசைப்படுதுங்க.. அரசாங்கமே செய்யாத சலுகையை நீங்க சொந்த செலவுல செஞ்சிருக்கீங்க.. அதுக்காகவாது வரனுமுங்க.. இது ஊர்மக்களோட வேண்டுகோள்ங்க.. நீங்க வர்றீங்கன்னு சொன்ன நாங்க மத்த வேலையை பாக்குலாமுங்க ஐயா.." என்றார் வர வேண்டும் என்ன வேண்டுதலுடன்.
புருஷோத்தமன் திரும்பி தன் மனையாளையும் தன் மக்களையும் கண்டார்.. அனைவரின் பார்வையும் சிரிப்புடன் இருக்க புனிதவதியும் கணவரின் பார்வையை புரிந்து சரி என்று தலையாட்டினார்.
தன் மனைவி பிள்ளைகளின் ஒப்புதல் கிடைத்ததும் சந்தோஷமாக அவர்களிடம் திரும்பி,
"சரிங்க சண்முகம் இந்த வருஷம் நாங்க வர்றோம்.. நிச்சயம் என் குடும்பத்தோடவே வர்றேன்.. பயப்படாத போங்க.. ஆஆ ஒரு நிமிஷம்.." என்றவர் திரும்பி தன் மனையாளை பார்த்தார்.
தன் கணவனின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவர் வேகமாக உள்ளே சென்று கையில் பணக்கட்டுடன் வெளியே வந்தவர் அதை தன் கணவனிடம் தந்துவிட்டு சமையலறைக்கு சென்றார்.
அதற்குள்ளாகவே அவரின் இரண்டு மருமகள்கள் கையில் காபி கோப்பை அடங்கிய டிரேயுடன் வந்தார்கள்.. முகத்தில் பொங்கிய புன்னைகயுடன், "போய் குடுங்கம்மா.." என்று வழிவிட்டு நின்றார்.
அவர்களும் முகத்தில் வழியும் புன்னகையுடன் ஹாலுக்கு வர அங்கே தன் மாமனாரிடம் அமர்ந்திருந்த அனைவருக்கும் டீ கோப்பைகளை நீட்டினார்கள்.
அனைவரும் மன நிம்மதியாக சந்தோஷத்துடன் அதை எடுத்து பருகியே விடைபெற்றனர்.
அவர்கள் வெளியே செல்லவும் ஆத்விக் உள்ளே வரவும் சரியாய் இருந்தது.. வந்தவர்கள் அவனையும் வணங்கிவிட்டு சென்றனர்.
"அப்பா மாமா அவங்கலாம் யாரு... எதுக்கு வந்துட்டு போறாங்க.." என்றவனின் கேள்விக்கு பதில் புருஷோத்தமனிடம் இருந்து வந்தது.
" அவங்க எங்க அம்மா ஊரு ஆத்விக்.. கோவில் திருவிழாவுக்காக வந்து கூப்பிட்டாங்க.. இந்த முறை நாம எல்லாரும் திருவிழாவுக்கு போகனும்.. நீயும் கண்டிப்பா வரணும் ஆத்விக்.. உனக்கு எதுவும் அப்ஜெக்சன் இல்லையே.." என்றார் பேரனை கேள்வியுடன்.
"தாத்தா நான் எப்படி அங்கெல்லாம் வரது.." என்றான் தயக்கத்துடன்.
" வேணாம் ஆத்விக் நீ என்னோட பேரன்.. இந்த நாட்டுக்காக உன் உடலை தானம் பண்ணிருக்க.. இதுல ஏன் இப்படி தாழ்வு மனப்பான்மை.. என் பேரன் இப்படி யோசிக்க மாட்டான் ஆத்விக்.. உனக்கு தெரியும் இல்லை.. குறையில்லாத மனிதன் இந்த உலகில் இல்லை.. ஏன் அந்த கடவுளே குறையுள்ளவன் தான்.. என் பேரன் நாட்டுக்கு தான் தியாகம் செஞ்சான்.. தலைநிமிர்ந்து தான் நிக்கனும்.. சரியா.. இன்னும் நாலுநாள் தான் திருவிழா வரதுக்கு இருக்கு.. அதுக்குள்ள எதாவது முக்கியமான வேலை இருந்தா முடிச்சிடு.. ஜானகிராமா அங்கே இருக்கற நம்ம வீட்டை சுத்தபடுத்தி வைக்க சொல்லு... எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க.. இந்த திருவிழாவுக்கு நாம எல்லாரும் போகனும்.. இப்போ போய் எல்லாரும் வேலையை பாருங்க.." என்று உத்தரவிட்டு தன் மனையாளை அழைத்துக் கொண்டு சென்றார் பருஷோத்தமன்.
அவர் அதுபோல் சொல்லவும் அவனின் காதுகளில் அந்த கந்தர்வ குரல் ஒலித்தது.
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா..
குறையொன்றுமில்லை கண்ணா.. அவன் காதுகளில் ஒலித்த குரலை தட்டி கழிக்க முடியாமல் தன் தாத்தா சொல்லுக்கு தலையாட்டினான்.
தங்கள் வீட்டின் தலைவர் சொல்வதை கேட்ட யாரும் அதை தட்டி கழிக்காமல் ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய சென்றனர்.
ஏனோ ஆத்விக்கும் செல்லுமாறு மனம் உந்த தன் மனதின் உணர்வினை புரியாதவன் தன் தாத்தாவின் சொல்லுக்காக சென்றான்.
இங்கே ஆரிணியின் கண்ணத்தில் பளிரென தன் கைரேகைகள் பதிவது போல் அறைந்தாள் ரங்கநாயகி.
"உனக்கு என்னடி பெரிய அல்லிராணின்னு நினைப்பா.. இந்த ஒரு கச்சேரி தான் உனக்கு கடைசி.. அடுத்த மாசத்துல இருந்து நீ ஒரு கச்சேரிக்கும் போக போறது இல்லை.. உனக்கு பிடிக்குதோ இல்லையோ நீ இந்த தொழிலுக்கு வந்து தான் ஆகனும்.. சரி நீ எல்லாரோடவும் இருக்க முடியலைன்னா அந்த துபாய் சேட்டை மட்டும் நல்லா கவனிச்சு விடு.. அவனால் எனக்கு எவ்வளவோ நடக்க வேண்டியது இருக்கு.. அந்த சேட் உன்னை கேட்டு டார்ச்சர் பண்றான்.. உன்னை அவனுக்கு கொடுத்தா நான் கேட்டது எல்லாம் செய்யறேன்னு சொல்லியிருக்கான்.. இந்த சேலத்துல நடக்குற கச்சேரி தான் உனக்கு கடைசி.." என்று எச்சரித்து விட்டு சென்றாள் தன் அடியாட்களுடன்.
அடிவாங்கி சிவந்த கண்ணத்துடன் கண்களில் வழியும் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் ஆரிணி.
ரங்கநாயகி சொல்லி சென்ற சேட்டினால் தான் இன்று ஆரிணி அடிவாங்க நேரிட்டது.
அவன் அங்கு எந்த நொடியில் ஆரிணியை அங்கே கண்டானோ அன்றே ஆரிணிக்கு பிடித்தது பீடை.. ஆரிணியின் அழகில் மயங்கிய சேட் அவளை அடைய முயற்சிக்க செய்ய அதை தடுக்க தன்னையே தாக்கி கொண்டாள் ஆரிணி.. அவளின் அழகு மேனியில் கண்ணாடி குத்தி ஆங்காங்கே காயங்கள் ஏற்பட அதில் இருந்த வந்த உதிர கசிவு சேட்டிற்கு பயத்தை கொடுக்க அவளை விட்டு விலகியவனுக்கு அவனுக்கு அங்கே தன்மானம் அடிவாங்கியது போல் தோன்றியது.
அவனின் அழகுக்கு எத்தனையோ பெண்களை அவனுடன் உல்லாசமாய் இருக்க முனைய ஆனால் இதில் விதிவிலக்காய் ஆரிணி அவளையே தாக்கி அவனை அவமானப்படுத்தவும் அவளை அடைய வேண்டும் என்ற வெறி அதிகமாகி அவளை அடைய அவனால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தான்.
அதன் விளைவாய் ரங்கநாயகிக்கு ஆசையை அதிகப்படுத்தி அவளின் கையாலே ஆரிணியை விருந்தாக்க துடித்தான் கயவன்.
ஒவ்வொரு முறையும் வருபவன் ஆரிணியை கண்களால் கற்பழித்து விட்டு ரங்கநாயகியிடம் அவளை தனக்கே தரச் சொல்லி பேரம் பேசுபவன் இத்தனை நாள் படியாமல் போனதில் இந்த முறை படிந்து விட்டது போலும் ரங்கநாயகிக்கு.
வந்தவன் சும்மாவும் போகாமல் அவளை ஒரு நாள் தன்னுடன் இருக்க வைக்க முயல பெண்ணவளோ இந்த முறை கோவில் கச்சேரியில் பாடுவதால் விரதம் இருப்பதாக கூறி தப்பிக்க இருந்தவளை அவனோ போதையின் தாக்கத்தில் அவளை வலுக்கட்டாயமாக அடைய முயல அதிலிருந்து தப்புவதற்காக அவனின் தலையில் சொம்பை வைத்து அடித்து விட்டாள்.. அவனுக்கும் பெரிதாக அடி ஒன்றும் இல்லையென்றாலும் தன்னை அடித்தவளை பலி வாங்க அடுத்த முறை தான் வரும்போது அவள் இறந்தாலும் பரவாயில்லை தன்னோட அனுப்ப உத்தரவிட்டு சென்றுவிட்டான் அந்த அரக்கன்.
அதன் பிரதிபலிப்பை தான் இப்போது ரங்கநாயகி ஆரிணியின் கண்ணத்தில் காட்டி விட்டு சென்றதும் மிரட்டியதும்.
இங்கே புருஷோத்தமனின் மொத்த குடும்பமும் அந்த திருமலைகிரி கிராமத்தில் வந்து இறங்கியது.
அங்கே அவர்களுக்கென சொந்தமாய் வீடும் தோட்டம் துரவு என எல்லாமும் இருந்தது.. அது புருஷோத்தமனின் தாய் வழி சொத்துக்கள்.. அதை பராமரிக்கவென விசுவாசமான ஒரு குடும்பத்தை நியமித்திருந்தார் புருஷோத்தமன்.
அவர்களும் வருடத்திற்கு ஒரு முறை வந்து குத்தகை பணத்தை கொடுத்து விட்டு செல்வார்கள்.. அவர்கள் கொடுப்பதை மட்டுமே வாங்கி கொள்வார்கள் புருஷோத்தமன் தம்பதிகள்.
திருமலைகிரி திரும்பிய பக்கம் எங்கும் மலைகள் சூழ்ந்து அழகான கோயில் குளங்கள் அமைத்து அமைதியான மக்களிடையே அம்சமாய் காட்சியளித்தது.
ஏனோ ஆத்விக்கிற்கு அந்த கிராமமும் அந்த வீடும் மிகவும் பிடித்து போயின.. அங்கே எல்லோருக்கும் தனி தனி அறைகள் இருக்கு எல்லோரும் சென்று குளித்து கிளம்பி வந்தார்கள்.. அனைவரும் வந்து சாப்பிடவும் ஊரின் முக்கியஸ்தர்கள் வரவும் சரியாக இருந்தது.
அன்று இரவு தான் காப்பு கட்டும் நிகழ்வும் மறுநாள் பொங்கல் வைபவமும் இரவு பக்தி பாடல் கச்சேரி நடைபெறப் போவதாகவும் சொல்லிவிட்டு சென்றனர்.
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே சுகம் பல தரும் தமிழ்ப்பார்
சுவையோடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு...
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம் தமிழிசையே தனியிசையே
தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு...
ஏனோ அவளை சந்தித்த நாளிலிருந்து அதிகமாய் பாடலை தேடி தேடி கேட்கிறான்.. அதுவும் இந்த பாடல் அவளின் குரலுக்கு நன்றாக இருக்குமா என்ற எண்ணத்தில் நாளும் வலம் வர தொடங்கினாள் பெண்ணவள்.
இப்படி ஒருவன் தன் நினைவில் இருப்பதையும் அறியாது தன்னை பிண்ணி பினைந்திருக்கும் சிலந்தி வலையில் இருந்து எப்படி வருவது என புரியாமல் பைத்தியமாயிருந்தாள் பெண்ணொருத்தி.
காப்பு கட்டுதல் தொடங்கி மறுநாளில் அந்த குடும்பத்தில் புதிதாய் ஒருத்தி வந்து இணைந்தாள்.. அவளால் குடும்பத்தில் பிளவும் வந்தது.. சந்தோஷமும் வந்தது.
அவள் யாரென அடுத்தடுத்த பாகங்களில் காண்போம் மக்களே..
சாரி சாரி ஒரு பெரிய சாரி பா.. இனி பாலைவன ரோஜாவை முடிந்தளவுக்கு சீக்கிரம் முடிந்துவிடுகிறேன் மக்களே.