• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாலைவன ரோஜா 6

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
பாலைவன ரோஜா 6

இளையவர்கள் அனைவரும் ஊரை சுற்றி பார்க்க போக ஆத்விக் மட்டும் தன் அறையில் அமர்ந்து சட்டப்புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான்.

ஏனோ அவனின் மனம் நிலை கொள்ளாமல் தவித்து துடித்தது.. கையில் இருக்கும் புத்தகத்தில் சிந்தை இல்லை.. ஆனால் மனம் முழுவதும் ஏதோ ஒரு சிந்தனை.. மேலும் அங்கே அறையில் அடைய முடியாமல் கீழே இறங்கி வந்தவனை அமைதியான வீடு வரவேற்கவே அங்கிருந்த வேலையாட்களிடம் எல்லோரும் எங்கே என்று கேட்டான்.

பெரியவர்கள் தோட்டத்திற்கு சென்றதாகவும் சிறியவர்கள் ஊரை சுற்றி பார்க்க கிளம்பியதாகவும் கூற சரி என்று அவர்களிடம் தலையசைத்து விட்டு அங்கிருந்து வெளியேறியவன் தோட்டம் இருந்த திசையை நோக்கி நடந்தான் கையில் ஸ்டிக்குடன்.

போகும் வழி எங்கும் பசுமை படர்ந்திருக்க அதன் அழகு ஏனோ மனதின் ஆழத்தில் மறைந்திருந்த நிலவு பெண்ணை நினைவுபடுத்தியது.

பசுமையின் அழகில் லயித்து பார்த்திருந்தவன் காதுகளில் ஒரு கொலுசு சத்தம் கேட்டது.. ராணுவ வீரன் அதற்குரிய எச்சரிக்கையோடு தான் எப்பொழுதும் இருப்பான்.. கொலுச சத்தம் கேட்டது தான் ஆனால் வித்தியாசமாய் மெல்லியதாய் அதிலும் ஓடி வரும் சத்தம் கேட்டு சுற்றியும் முற்றியும் பார்த்தான்.. யாருமில்லை.. ஆனால் தன் பக்கத்தில் இருந்து சற்று தூரத்தில் இருந்து தானே இந்த சத்தம் வருகிறது என்று பார்த்தவன் கண்களில் தூரத்தே ஒரு பெண் ஓடி கொண்டிருப்பது தெரிந்தது.

யார் இவள் இந்த ஊரோ.. இந்த ஊர் நமக்கு புதுசு ஆனால் இந்த பெண் ஓடுவது ஏதோ விபரீதமாய் தோன்றியது ஆடவனுக்கு.

அவளின் பின்னே வேகமாய் நடந்தான் என்பதை விட ஓடினான் என்பது தான் சிறந்தது.

அவன் ஸ்டிக்கை வைத்து வேகமாய் அவளருகில் செல்வதற்குள் அங்கிருந்த கிணற்றில் குதித்து விட்டாள்.. அதை பார்த்தவன் பதட்டத்துடன் என்ன ஏதோ என யோசிப்பதற்குள்ளாகவே ஸ்டிக்கை கிணற்றில் மேல் வைத்து விட்டு அவனும் குதித்து விட்டான்.

கால் தான் ஊனமே தவிர மனம் இன்னும் நன்றாகத்தான் இருந்தது.. கிணற்றின் ஆழத்தில் அவளை தேடி சென்றவனின் காலில் ஏதோ தட்டுபடவும் அந்த பெண்ணின் கரம் தான் அவனின் கால்களில் இடறியது.


இன்னும் கீழே சென்றவன் அவளின் தலைமுடி கையில் சிக்கவும் அதை பிடித்து இழுத்துக் கொண்டு கிணற்றின் அடியில் இருந்த படியை நோக்கி இழுத்து சென்றான்.

படியில் அவளை கிடத்தியவன் அவனும் அந்த படியில் அமர்ந்தான்.. ஏற்கனவே அடிபட்ட கால் ஆதலால் சற்று வலி எடுத்தது தான் என்றாலும் அந்த பெண்ணை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளின் முகத்தை அவளின் நீண்ட கூந்தல் மறைத்துக் கொண்டிருந்தது.. மெல்ல அதை விலக்கியவனுக்கு அடுத்த அதிர்ச்சியாய் அந்த பெண் ஆரிணியாய் இருந்தாள்.

இவளா இவள் எங்கே இங்கே.. இவள் எதற்காக தற்கொலை செய்ய முனைந்தாள் என்றவன் யோசிக்க அதன் விடை தான் கிடைத்தபாடில்லை.

அவளின் நிலை நினைவில் வர தன் யோசனையை சற்று தள்ளி வைத்தவன் முதலில் அவளுக்கு முதலுதவி செய்ய முனைந்தான்.

அவளின் வயிற்றில் கை வைத்து அமுக்கலாம் என்றாள் அவளின் மேல் தன் கரத்தை வைக்க அவனின் மனம் தடுத்தது.

இவள் ஒரு பெண்.. இவளை தொடுவதா.. அதுவும் அவள் சுயநினைவில் இல்லாத சமயத்தில் அவன் மனது உரைக்க அவனின் புத்தியோ நீ ஒரு ராணுவ வீரன் எத்தனையோ முறை இது போன்ற சமயத்தில் பெண்களுக்கு நீ உதவியதில்லையா என்ன.. அது போல் இதுவும் ஒரு உதவி தான்.. இவளின் உயிரை காப்பது தான் இப்பொழுது முக்கியம் என்று உழைத்தாலும் மனமோ

டேய் நீ என்ன லூசா இவ ஏற்கனவே ஒரு தடவை பார்த்தப்பவே இவளை பத்தி தான் அதிகமா யோசிச்ச.. இப்போ எப்படி என அவன் தயங்கியபடி இருக்க அப்பொழுது யாரோ வரும் அரவம் கேட்டது.. அவர்களின் பேச்சை கேட்டு அது தன் குடும்பத்து உற்ப்பினர்கள் தான் என்று உணர்ந்தவன் அவனின் தாத்தாவின் குரலை கேட்டு,

"தாத்தா.." என்று அடி வயிற்றை எக்கி கத்தினான்.


தன் பேரனின் குரல் கிணற்றில் இருந்து கேட்கவும் அங்கே வந்த அவனின் குடும்ப பெரியவர்கள் அனைவரும் அங்கே வந்து பார்க்க கிணற்றின் இறுதி படியில் தன் பேரனும் அங்கே ஒரு பெண்ணும் இருப்பதை கண்டவர்கள்,

"ஆத்வி கண்ணா என்னாச்சு பா.." என்றார் புருஷோத்தமன்.

" தாத்தா இந்த பொண்ணு கிணத்துல விழுந்துட்டாங்க.. காப்பாத்த குதிச்சிட்டேன்.. ஆனா இப்போ மேல வரணும்.. நான் மட்டும்னா வந்துடுவேன்.. ஆனா இந்த பெண்ணை கூட்டிட்டு என்னால வரமுடியாது தாத்தா.." என்றான் இயலாமையாய்.

தன் பேரனின் நிலை புரிந்தவர் வேகமாய் தன் ஆட்களை அழைத்து இருவரையும் மேலே அழைத்து வர உத்தரவிட்டார்.


குடும்பத்தினரும் பதட்டத்துடன் காத்திருக்க சற்று நேரத்தில் இருவரையும் மேலே அழைத்து வந்தனர்.

இயலாமை நிறைந்த முகத்துடன் தன் ஸ்டிக்கை எடுத்துக் கொண்டு தன் குடும்பத்தை பார்த்தவன்,

"தாத்தா நான் வாழ்வே தகுதியில்லாதவன் தாத்தா.. என்னால ஒரு உயிரை கூட காப்பாத்த முடியலை.." என்றான் கசந்த குரலில்.

புருஷோத்தமன் பெண்களிடம் திரும்பி, "வதி அந்த பெண்ணை பாருங்க மா.." என்றவர் தன் பேரனிடம் திரும்பி,

"ஏன் ராசா பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற.. இதுவே உன் இடத்துல யாராவது இருந்தா என்னால முடியலைன்னு போயிருப்பாங்க ராசா.. ஆனா நீ உன்னோட குறையை பொருட்படுத்தாத அந்த பெண்ணை காப்பாத்தியிருக்க ராசா.. அதுவே எவ்வளவு பெரிய சாகசம் தெரியுமா ஐயா.." என்றார் தன் பேரனை சமாதானம் செய்யும் நோக்கத்துடன்.

"வேணாம் தாத்தா என்னை சமாதானம் செய்யாதீங்க.." என்றவனுக்கு ஏனோ பெண்ணவளின் முகம் நினைவில் வந்தது.

இவள் எப்படி இங்கு வந்தாள்.. இவள் ஏன் சாக துணிந்தாள் என்றவனுக்கு அவளை சென்னையில் சந்தித்தது நினைவு வந்தது.


ஏதோ பாடினாளே என்ன பாட்டு அதை கேட்டு தானே நான் என் குடும்பத்துடன் இணைந்தேன்.. ஆனால் இவள் ஏன் இப்படி என்ற கேள்விக்கு விடை சொல்ல வேண்டியவளோ நீரை அதிகமாய் குடித்திருப்பாள் போலும் மயக்கத்தின் பிடியிலே இருந்தாள்.

ஆத்விக் வீட்டு பெண்கள் அவளின் வயிற்றில் இருந்த தண்ணீரை அழுத்தி எடுத்தனர்.

சற்று நேரத்தில் இறுமிக் கொண்டே எழுந்தவுடன் முன்னே தெரிந்த புதிய முகங்களின் கனிவில் சற்று தெளிந்தாலும் தன் சாவும் தான் விரும்பியபடி அமையாதோ என்ற வருத்தம் தான் அவளை கொல்லாமல் கொன்றது.

அவள் விழித்ததும் அவளிடம் வேகமாய் வந்தவன் மற்றவர்களை அங்கிருந்து போக சொல்லிவிட்டு அவளருகில் சென்றான்.

"ஏன் இப்படி பண்ணே.. மத்தவங்க நீ தெரியாத விழுந்ததா தான் நினைக்கிறாங்க.. ஆனா நீயா விழுகறதை நான் பார்த்தேன்.. சொல்லு ஏன் இப்படி பண்ணே.. இந்த உயிர் கடவுள் படைச்சது.. அவனை தவிர அதை எடுக்கற உரிமை யாருக்கும் இல்லை.. ஆனா உன் முகமே சொல்லுது ஏதோ ஒரு இக்கட்டுல தான் நீ இந்த முடிவை எடுத்துருக்கன்னு தெரியுது.. ஆனா எந்த விதமான இக்கட்டானாலும் இது முட்டாள் தனம்.. இப்போ சொல்லு உன் பிரச்சினை என்ன.." என்றான் கம்பீரமாய்.

சற்று தொலைவில் இருந்த அவனின் சொந்தங்களை பார்த்தவள் அவனையும் பார்த்தாள்.. ஏனோ அவனை எந்த விதத்திலும் சந்தேக படமுடியவில்லை.. ஆனாலும் தன் உண்மை நிலையை அவளால் கூற முடியவில்லை..அப்படியே கூறினாலும் அவளையும் அந்த சகதியாய் தான் பார்த்தார்கள் இதுவரை.. இவன் மட்டும் சரியாக எடுத்துக் கொள்ளப் போகிறானா என்ற எண்ணத்தில் அவனிடம் உண்மையை கூறுவதை விடுத்து பொய் தான் கூறினாள்.

" சாரி சார் நான் இந்த ஊர் கிராமத்துல பாட வந்தேன்.. எனக்கு பிடிக்காம எங்க வீட்ல கல்யாணம் செய்து வைக்க முயற்சி பண்ணினாங்க.. எனக்கு பிடிக்கலை நான் வேணாம்னு சொன்னேன்.. ஆனா அவங்க கேட்கலை.. அதுவும் என்னை விட இருபது வயசு மூத்தவருக்கு கல்யாணம் செஞ்சு வைக்க நினைச்சாங்க.. அது பிடிக்காம தான் இப்படி பண்ணிட்டேன்.. எனக்கு எங்க வீட்டுக்கு போக பிடிக்கலை.." என்றாள் தலையை குனிந்தபடி.

அவள் தலைகுனிந்ததிலேயே தன்னிடம் பொய் சொல்கிறார் என்று நினைத்தவன் எதுவும் சொல்லாமல்,

"பெத்தவங்களே இப்படி செய்வாங்களா என்ன.." என்றான் யோசனையாய்.

ஏனோ அவளை சந்தேகிக்க முடியவில்லை ஆடவனால்.. ஆனாலும் தன்னிடம் வேறு எதையோ மறைக்கிறாள் என்று யோசித்தவன் தான் இப்படி கேட்டான்.

விரக்தியாய் புன்னகைத்தவள், "பெத்தவங்க யாரும் பண்ணமாட்டாங்க தான்.. ஆனா பணத்துக்காக வளர்த்தவங்க பண்ணுவாங்களே.." என்றாள் வலியுடன் கூடிய குரலில்.

" என்ன சொன்னே.." என்றான் கண்களை சுருக்கியபடி.

"ஆமா சார் அவங்க என்னை பெத்தவங்க இல்லை.. நான் சின்ன வயசுல இருக்கும் போதே இறந்துட்டாங்க.. இவங்க என் சித்தப்பா சித்தி சார்.. அவங்களுக்கு பணம் தான் தேவை.. அது தான் என்னை வியாபாரம் பண்றாங்க.." என்றாள் கலங்கிய குரலில் பாதி உண்மையும் பாதி பொய்யுமாக.

ஏனோ அந்த வார்த்தையில் மனம் கனிந்து போனான் ஆடவன்.

அவளோ தன் நிலை உணர்ந்து அவனிடமும் அவன் குடும்பத்தையும் பார்த்தபடி,

"சார் ப்ளீஸ் என்னை உயிரோட காப்பாத்திட்டீங்க.. இப்போ என் மானத்தையும் காப்பாத்தி தாங்க.. உங்ககிட்ட பிச்சையா கேட்குறேன் சார்.. எனக்குன்னு பெருசா எந்த உறவுகளும் இல்லை.. நீங்க யாருன்னு தெரியாது.. ஆனா இப்போ எனக்கு உதவி செய்ய உங்களை விட்டா யாருமில்லை சார் ப்ளீஸ் சார்.." என்றாள் கலங்கிய குரலில்.

அப்பொழுது அதை கேட்டு வந்த புருஷோத்தமன், "ஆத்விக் கண்ணா என்னாச்சு பா.. இந்த பொண்ணு என்ன சொல்லுது.." என்றார் கேள்வியாக.

அதற்குள்ளாக அவனுடைய குடும்பமும் அங்கே வந்தது.

அவளை பார்த்து கொண்டே அவள் கூறிய அனைத்தையும் தன் குடும்பத்திடம் முடிவை தன் குடும்பத்திடமே விட்டு விட்டான்.

புருஷோத்தமனின் போலிஸ் பார்வை பெண்ணவளை வியர்க்க வைத்தது.. முகத்தில் கள்ளம் கபடமில்லாமல் கண்களில் வலியை தேக்கி நின்றிருந்த பெண்ணை பார்த்ததும் புருஷோத்தமனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.. அவரின் வீட்டினருக்கும் அவளை மிகவும் பிடித்துவிட்டது.

உடல் நடுங்கியபடி நின்றிருந்தவளின் அருகே வந்த புருஷோத்தமன் அடுத்ததாய் கூறிய வார்த்தையில் அதிர்ச்சியாய் நின்றுவிட்டாள் நங்கையவள்.


உயிர் சிலையே எந்தன் வரம் நீயடி..
கனவினிலேனும் என் கரம் சேறடி..
தடம் புரண்டேனே உன் மடி மீதடி..
தவிழ்ந்திட வேண்டும் நீ என் தாய் மடி..


அடுத்த பாகத்துல பாக்கலாம் செல்லம்ஸ்.. சாரி பா யூ டி லேட் ஆகுறதுக்கு.. நானும் முயற்சி தான் பண்றேன்.. ஆனா எழுதவே முடியலை பா.. நீங்களாவது ஒரு எனர்ஜிடிக் டானிக் உங்க விமர்சனத்துல குடுங்க.. தினம் எபி வரும் பா.