• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாலைவன ரோஜா 7

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
பாலைவன ரோஜா 7

புருஷோத்தமன் ஆரிணியின் அருகில் வந்தவர் அவளின் கண்களை பார்த்து,

"எனக்கு உன்னை எங்கேயோ பார்த்தது போல இருக்கு மா.. நீ எங்கேயாவது என்னை பாத்துருக்கியா.. ஆனா உன்னை பத்தின தகவல் எதுவும் நீ முழுசா சொல்லலை.. எங்ககிட்ட சொன்னது பாதி தான் உண்மை.. ஆனா நான் உன்னை நம்புறேன்.. இப்போ நான் உன்கிட்ட எதுவும் கேட்கலை.. என்னோட குடும்பமும் கேட்காது.. என் பேரனோட மனசுக்கு சரின்னு தோனனுதால தான் உன்னை எங்க வீட்ல இருக்க அவன் ஒத்துக்கிட்டான்.. மத்தபடி இந்த வீட்டோட தூண் அவன் தான்.. ஏன் எல்லா முடிவும் இங்கே அவன் தான் எடுப்பான்.. ஆனா நீ பயப்படாத உனக்கு என் வீடு பாதுகாப்பு கொடுக்கும்.. இது நான் உனக்கு தர்ற வாக்கு.. உன்னோட மானத்தை காப்பாத்துறது என் பேரனோட பொறுப்பு.. நீ இங்கே எதுக்காக வந்தீயோ அந்த வேலையை முழுசா முடிச்சிட்டு வா.. நாங்க இங்கே தான் இருப்போம்.." என்றார் அவளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாய்.

அதை கேட்டவளுக்கு அதிர்ச்சி தான் தோன்றியது.. தான் முழுதாய் உண்மையை கூறவில்லை.. ஆனாலும் இவர்கள் தன்னை நம்புகிறார்களே இது தான் நல்லவர்களின் உண்மை முகமோ.

அவர்களை கையெடுத்து வணங்கியவள் எல்லோரையும் ஒரு முறை கண்களில் நிரப்பி கொண்டு சென்றாள்.. தான் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாள் இப்படிபட்ட குடும்பம் நமக்கும் கிடைத்திருக்குமோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

இந்த குடும்பத்தை சந்திக்க காரணமானவனை பார்த்தாள்.. அவனின் விழிகளில் என்ன தெரிந்ததோ மனதில் ஒரு நம்பிக்கையுடன் சென்றாள்.

அவளை தங்க வைத்த வீட்டிற்கு வந்தவளுக்கு இன்று சந்தித்த குடும்பம் அவளுக்குள் வாழும் ஆசையை தோற்றுவித்தது.. அவளுக்கு நன்றாக தெரியும் தன்னை பற்றி தெரிந்தால் அவர்கள் இதே பாசத்துடன் தன்னிடம் பேசுவார்களா என்ன என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை தான்.. ஆனால் அந்த வீட்டில் ஒரு வேலைக்காரியாக இருக்க கூட அவளின் உள்ளம் பேராவல் கொண்டது.

அவள் இங்கு வரும் போதே ஆயிரம் பாதுகாப்புடன் தான் அவளை அனுப்பி வைத்தாள் ரங்கநாயகி.. இந்த ஒரு கச்சேரி அவளின் கடைசி கச்சேரி என்பதும் அவளுக்கு புரிந்தது.. ஆனால் ரங்கநாயகியின் விருப்பத்திற்கு தான் ஒருவனுக்கு வப்பாட்டியாகவோ விலைமாதுவாகவோ வாழ அவளுக்கு விருப்பம் இல்லை.

ஆனால் தான் மாட்டியிருப்பது தப்பிக்க முடியாத சிலந்தி வலை என்று தெரியாதவள் அல்ல அவள்.. அதனால் மானத்தைக் காக்க தன் உயிரை மாய்க்க துணிந்தாள்.. ஆனால் அதுவும் கடவுளுக்கு பொருக்கவில்லையோ என்னவோ ஆத்விக்கின் வடிவில் அவளை காப்பாற்றி விட்டது.

மனதில் ஆயிரம் போராட்டத்துடன் அன்றைய முளைப்பாரி திருவிழாவிற்கு தன்னை தயார் செய்தவள் கோவிலுக்கு சென்றாள்.

அங்கே புருஷோத்தமன் குடும்பமும் இருந்தது.. அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பாசமாய் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ஆரிணிக்கு தானும் அந்த குடும்பத்தில் ஒருவளாய் பிறந்திருக்க கூடாதா என்ற ஏக்கம் வந்தது.

சிறு வயதில் இருந்தே அவள் வளர்ந்த சூழல் அவளுக்கு குடும்பம் ஒன்று இருப்பதையே மறக்க வைத்து விட்டது.. அவள் கண்ட நெறிமுறை அனைத்தும் காமம் மட்டுமே நிறைந்ததாய் இருந்தது.

ஆனால் இன்றோ அந்த சூழ்நிலை முற்றிலுமாக மாறி பருஷோத்தமன் குடும்பம் முழுவதும் அவளுக்கு பிடித்ததாயிற்று.

அவர்களையே வைத்த கண் வாங்காமல் ரசித்து பார்த்தாள்.. அவள் வந்ததுமே ஆத்விக் அவளை கண்டு கொண்டான்.. ஆனால் பாராதது போல் இருந்தான்.. அவள் கண்களில் தெரிந்த ஏக்கமும் பாசமும் ஆடவனுக்கு இயலாமையை தோற்றுவித்தது.. என்ன இவள் குடும்பத்தை இத்தனை நாள் பார்க்காது ஏதோ புதிதாய் பார்ப்பது போல் பார்க்கிறாள்.. இதற்கு முன் இவள் குடும்பத்தையே பார்த்ததில்லையா என்ன என்ற யோசனை தான் தோன்றியது.

அதற்குள்ளாகவே அவளின் ரசனையை கலைக்கவே அங்கே வந்த ஊர் தலைவர் அவளை பாடி முளைப்பாரி திருவிழாவை துவங்கும் படி கேட்டுக் கொள்ள அதற்கு இசைந்து அவருடன் சென்றாள் பெண் பாவை.. அவள் பாடிய ஆரம்பிக்க ஊரில் உள்ள கன்னிப் பென்கள் அனைவரும் முளைப்பாரியை சுற்றி கும்மி தட்ட ஆரம்பித்தனர்.. அதில் ஆத்விக் குடும்பத்தின் இளம் பெண்களும் கலந்து கொண்டனர்.


அடி கெழக்காலே செவுத்து பக்கம்
கவுலி சொல்லுதடி..
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல
குயிலு கத்துதடி..
மேகாத்து வீசயிலும்
வேர்த்து கொட்டுதடி ஓய்
மாமன் வரவச்சொல்லி
மனசு சுத்துதடி..

ஏனோ இந்த வரிக்கு பெண்ணவளின் பார்வை ஆத்விக்கை தொடர்ந்தது.

பூச மஞ்ச கிழங்கரச்சேன் மாமா என்
பூ முகத்துல சேரலயே மாமா
வாச மல்லி தலையில் வச்சேன் மாமா என் வாட்டம் பட்டு வதங்கிருச்சே மாமா
படுத்தா ஒறக்கம் வல்ல
பாய் படுக்க தீயாச்சு
அடுத்த தலைமுறைக்கும்
உன் நினைப்பே நோயாச்சு
பச்ச வெல்ல சோளம்
வெளையிர நீரும்
அச்சுவெல்லம் போல
நான் வருவேன் சேர
ஓ... ஓ...ஓ... ஓய்..

என்றவளின் சிரிப்புடன் கூடிய பாடல் அந்த அரங்கத்தையே நிறைத்தது.

அவளின் பாடலை முன்பே கேட்ட பின்பும் கூட இப்பொழுது அவள் பாடிய பாடல் அதுவும் நாட்டுபுற பாட்டு ஆடவனின் மனதை வசியம் செய்ய வைத்தது.

அவனையே பெணணவள் வசியம் செய்தாளோ என்னவோ ஆடவனின் கூரிய பார்வை பெண்ணவளின் மேனியை சுற்றி வந்தது.

இதுவரை எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதவன் தான் ஏ கே.. ஆனால் இந்த சிறு பெண்ணோ ஆடவனை தன் கந்தர்வ குரலால் கவர்ந்திழுத்து கொண்டிருக்கிறாள் பேதை.


அவள் கண்ணில் குடும்ப பாசத்திற்கான ஏக்கத்தை பார்த்திருக்கிறான்.. ஆனால் அவளின் வாழ்க்கை அவனுக்கு தெரியாதே.. தெரிந்தாலும் அவளின் முந்தையை வாழ்க்கை ஆடவனை பாதிக்காதா என்ன.. என்னத்தை கேள்விகள் சூழ்ந்து நின்ற போதிலும் ஆடவனின் பார்வை ஏனோ மங்கையை கவர்ந்திழுத்தது.

அங்கிருந்த ஊர்மக்கள் அவளின் குரலில் கவரப்பட அனைவரும் அவளிடம் ஆசையாய் பேசினார்கள்.. அவளுக்கு உண்பதற்கு என உணவையும் பாசத்தையும் சேர்த்தே கொடுத்தார்கள்.. கலங்கிய கண்ணீருடன் அதை பெற்றுக் கொண்டாள் பெண்ணவள்.


புருஷோத்தமனும் புனிதவதியும் தங்களின் பார்வையை பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.. வயதான காதல் அரிதிலும் அரிதாய் காண்பதாய் போன இந்த காலத்திலும் அவர்களின் நேசப்பார்வை மற்றவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.


ஆரிணி அங்கிருந்த ஆட்களிடம் விடைபெற்று கிளம்பினாள்.. அவளுக்கு பாதுகாப்பாய் வந்தவன் அங்கிருந்த பெண்களை பார்த்த பார்வையில் விரசம் இருந்ததை கண்டு கொண்ட ஆரிணி அங்கிருந்து வேகமாய் சென்று விட்டாள்.. வேறு வழியில்லாமல் அவனும் அவளின் பின்னே சென்றான்.

அவள் தங்கும் இடம் வந்ததும் வெளியிலே அமர்ந்து கொண்டவனை உள்ளே அழைத்தவள்,

"ராசு நீ எனக்கு காவலுக்கு தான் வந்துருக்க.. வந்த இடத்துல என்ன வேலை பாத்துட்டு இருக்க.. அவங்கெல்லாம் கள்ளம் கபடமில்லாத குழந்தைகள்.. அவங்ககிட்ட உன்னோட கேவலமான புத்தியை காட்டுன நான் மனுசியா இருக்கமாட்டேன் பாத்துக்கோ.." என்றாள் கோபமாய்.

அவளை அலட்சியமாய் பார்த்தவன், "ஏய் என்னை அதிகாரம் பன்ற வேலை வச்சிக்காதே.. நான் அக்காவுக்கு மட்டும் தான் கட்டுபடுவேன்.. நீ என் கூட படு நான் அவங்களை பாக்கலை.. எப்படியும் அடுத்த வாரம் அந்த சேட்டு கூடத் தான இருக்க போற.. அதுக்கு முதலா நானே அச்சாரம் போடறேன்.. நீ உம் னு சொல்லு.. எனக்கு சந்தோஷம் உனக்கும் அனுபவம் கிடைக்கும்.. வெளியே சொன்னா தான நீ கன்னி கழிஞ்சவன்னு தெரியும்.. சொல்லாம இருந்துட்டு போலாம் என்ன சொல்ற.." என்றான் கேவலமான இழிப்புடன்.

"ஏய் போயிடு இங்கேயிருந்து.." என்றாள் பயத்துடன்.

அவனோ அவளை மேலிருந்து கண்களை விரசமாய் படரவிட்டவன் அவளின் நெஞ்சாங்குழி மேட்டில் அவன் பார்வை வந்து நிற்க அவன் பார்வை போன திசையை பார்த்தவள் தன் புடவையை இறுக்கமாய் இழுத்து போர்த்திக் கொண்டு உள்ளறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

அவனின் பார்வை இன்னுமும் அவள் மேல் இருப்பது போல் தோன்ற குளியலறைக்கு சென்றவள் தன் மேலிருந்து புடவையை கலைத்து விட்டு தன் கூரிய நகத்தால் உதிரம் வர தன் உடலை தேய்த்து குளித்தவள் அழுகையுடன் அங்கேயே அமர்ந்து கொண்டாள் தன் விதியை நொந்து.

ஏனென்று தெரியாமலே அவளின் மனம் ஆத்விக்கின் குடும்பத்தை தேடியது..அவள் எதிர்பார்த்த தாய் பாசம் தந்தை பாசம் அத்தை மாமா தாத்தா பாட்டி என அனைத்து பாசமும் ஒரு இடத்தில் கிடைக்குமானால் அது ஆத்விக் குடும்பத்தில் தான் கிடைக்கும் என்று அவள் மனம் கூப்பாடு போட்டது.


அவளின் நினைவுக்கு சொந்தக்காரனும் அவளைத் தான் நினைத்துக் கொண்டிருந்தான்.

ஏனோ அவள் தன்னிடம் கூறியதாக அவளின் குடும்ப கதை பொய் என்று தெரிந்தும் அவள் மேல் கோபம் வரவில்லை.. அதை நினைத்து தானே தன்னை பரிசோதித்துக் கொண்டான் ஆடவன்.

பொய்மையும் வாய்மையிடத்து என்பதை படித்து வந்தவன் தான் ஆனாலும் பொய் சொல்லி தப்பித்துக் கொள்வதை விட உண்மையை சொல்லி மாட்டிக் கொள் என்பது தான் அவனின் வழக்கம்.. இன்று அவ்வழக்கம் அவளிடத்து மாறிப் போனது.. அதன் காரணம் தான் என்னவோ..?

தனது அறையில் பால்கனியில் நிலவை ரசித்துக் கொண்டிருந்தவன் நினைவில் நாளை பௌர்னமி தானே என்ற நினைவு வந்தது.. ஒவ்வொரு பௌர்னமி அன்றும் வானில் தோன்றும் வர்னஜாலத்தை ரசிக்க ஆசைக் கொண்டவன் மனது இப்பொழுது அவனறியாமல் அவன் மனதில் நுழைந்திட்ட வஞ்சியவளின் முகம் பௌர்னமி நிலவில் தோன்றுவதில் ஆச்சர்யம் தான் என்ன.


பார்த்த நொடியிலிருந்து இன்று வரை அவளை மட்டுமே நினைக்க வைத்தவள் எண்ணி வியந்தவனின் நினைவில் தன் நிலை முன்னே நிற்க ஆடவனின் மனம் கூம்பி போனது.

'தேவதை போன்ற அவளின் அழகிற்கு நான் சற்றும் பொருத்தம் இல்லாதவன்.. வேண்டாம் ஏ கே இத்தனை நாளாக எதையும் ஆசைப்படாதவன் என்ற கர்வம் உனக்குள் உண்டு.. இன்று அதை உடைத்தெறிந்து விடாதே.. உன் நிலை என்ன.. உன்னைப் போன்ற ஒருவனையா வஞ்சியவள் தேர்வு செய்வாள்.. முன்பே அவள் வீட்டில் பிடிக்காத திருமணம் என்றல்லவா வெளியே வருகிறாள்.. இது என்ன அவளை காப்பாற்றி நீயும் அவளை வற்புறுத்த போகிறாயா..' என்ற மனதின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஆணவனின் மனம் அடிபட்டு போனது.


ஏனோ அந்த நினைவே ஆடவனின் மனம் வலித்தது.. தன் மனதை தேற்றி இந்த நிலையிலிருந்து மீண்டு வர ஆடவன் ஒரு வழியை கண்டறிந்தான்.. ஆனால் அது அவனுக்கே சவாலாய் அமைந்து போனது.



அடுத்த பாகத்துல பாக்கலாம் மக்களே.. இந்த கதை பிடித்திருந்தால் உங்க பொன்னான கருத்துக்களை பகிர்ந்து விட்டு செல்லவும் செல்லம்ஸ்.
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
190
63
Coimbatore
சேர்ந்த இடம் சரியில்லை ஆனால்
சேர போகுமிடம்
சரியாக அமைந்து விட்டால் சந்தோஷம் தானே👍🏻👍🏻👏💕💕💐💐🤩🤩
 
  • Like
Reactions: kkp49