• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாலைவன ரோஜா 8

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
பாலைவன ரோஜா 8


மறுநாள் ஊரே மாரியம்மன் கோவில் முன்பு திரண்டிருக்க பெண்கள் அனைவரும் பட்டும் பளபளப்புமாய் ஜொலித்து கொண்டே அம்மனுக்கு கோவிலின் முன்பு பொங்கல் வைத்தனர்.

அதில் ஆத்விக் குடும்பத்தின் இளம் தலைமுறைகளும் பொங்கல் வைக்க தங்களின் தாய்க்கு உதவி செய்து கொண்டிருந்தனர்.. அவர்கள் கலாட்டா செய்து கலகலப்பாக பொங்கல் வைக்க அதை தூர இருந்தே இரு விழிகள் ரசித்து கொண்டிருந்தன்.. அந்த விதிகளுக்கு சொந்தக்காரி ஆரிணி தான்.

ஏனோ புருஷோத்தமனின் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் அவளுக்கு நிரம்பவே பிடித்து விட்டது.. இதுவரை உரிமையாய் யாரையும் அவள் அழைத்ததில்லை.. ஆனால் புருஷோத்தமனையும் புனிதவதியையும் கண்ட பின்பு அவளறியாமல் அகத்தில் உரிமை வந்தது.

அவர்களையே வைத்தக் கண் வாங்காமல் அவள் பார்த்ததை நான்கு விழிகள் கண்டுவிட்டது.. அதில் இருவிழகள் சுவாரசியாமாய் அவளை பார்த்தது.. இன்னும் இரு விழிகளோ யோசனையாய் பார்த்தது.

எல்லோரும் பட்டும் நகையும் அணிந்திருக்க பெண்ணவளோ மெஜந்தா கலரில் எம்பிராய்டரி போட்ட புடவையில் தேவதையாய் ஜொலித்தாள்.. எப்போதும் புடவை தான் அணிவாள் என்றாலும் இது போல கோவில் விஷேசங்களுக்கு என காட்டன் புடவையில் எம்பிராய்டரி போட்டது சிலதை வைத்திருப்பாள்.

அவளின் சிவந்த நிற தேகத்திற்கு அந்த புடவை அத்தனை எளிமையாய் அழகாய் இருந்தது.

அப்பொழுது அவளை பாட அழைக்க பெண்ணவளோ பக்தி பரவசத்துடனும் பாடினாள் அம்மனை புகழ்ந்து.

ஊரே கொண்டாட்டத்தில் திளைக்க பெண்ணவளின் மனமோ ஏனோ தவியாய் தவித்து துடித்தது.. அவளின் தவிப்பு இன்னதென்று அவளுக்கும் விளங்கவில்லை.

அங்கே பத்தோடு பதினொன்றாய் அமர்ந்திருந்த புருஷோத்தமன் முகத்திலும் மருந்துக்கும் புன்னகையில்லை.. அவரின் அன்பு பேரன் சென்று விட்டான் அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல்..சென்று விட்டு தான் அவருக்கே போன் செய்தான்.. இன்னும் முழுதாய் குடும்பத்திற்கு தெரியாது.. எப்படி சொல்வது என்ற தவிப்புடன் அமர்ந்திருந்தார்.

தன் பேரனை இப்பொழுது தான் சற்று இயல்புக்கு திரும்பி பார்த்திருந்தார்.. ஆனால் திரும்பவும் அவன் தன் கூட்டுக்கள் சுருண்டு கொண்டானே என்ற ஆதங்கம் அந்ந பெரியவரை வதைத்தது.

அவரின் வாடி வதங்கிய முகம் கண்டு சற்று தூரத்தில் இருந்து பார்த்த ஒரு உருவம் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு, "சாரி தாத்தா நான் இப்போ இங்கே இல்லாம இருக்கறது தான் எல்லாருக்கும் நல்லது.. அவளை பார்த்து தடுமாறுறேன் தாத்தா.. இதுவரைக்கும் நான் இப்படி இல்லை.. ஆனா இப்போ ஏனோ அவ நினைவு அதிகமா வருது தாத்தா.. இது சரியா தப்பா எனக்கு ஒன்னும் புரியலை.. ஆனா ஒன்னு மட்டும் தெரியுது.. அவ எனக்குள்ள வந்துட்டா.. ஆனா என்னோட நிலமையில ஒரு பெண்ணோட வாழ்க்கையை கேள்விக்குறியாக்குனுமா என்ன.. வேணாம் தாத்தா நான் போறேன்.. அது தான் எல்லாருக்கும் நல்லது..

எனக்கு தெரியும் தாத்தா நீங்க கொடுத்த வாக்குக்காக அவளை காப்பாத்தி அழைச்சிட்டு வருவீங்க.. ஆனா அப்போ நான் அங்கே இருக்க கூடாது தாத்தா.. அது தான் நான் போறேன்.." என்றவன் கலங்கிய தன் கண்களை துடைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

ஆம் அவன் இன்னும் அங்கிருந்து செல்லவில்லை.. கடைசியாக ஒரு முறை அவளை பார்க்க அவன் மனம் ஆவல் கொண்டது.. அதுமட்டுமல்லாமல் தன் குடும்பத்தையும் ஒரு முறை காண ஆவல்.. ஆதலால் தன் முடிவில் மாற்றம் வந்து விடக்கூடாது என்பதற்காக தான் தன் தாத்தாவிடம் ஊருக்கு வந்து விட்டதாக சொல்லிவிட்டான் ஆடவன்.

எத்தனை பெரிய வீரனாயிருந்தாலும் தன்னை சேர்ந்தவர்களுக்கு தன்னால் இடைஞ்சல் வரக்கூடாது என்று எண்ணி சில சமயம் கோழையாய் ஒளிந்து கொள்ள தான் வேண்டியுள்ளது.

ஆத்விக்கும் வீரன் தான்.. ஆனால் என்ன குடும்பம் என்ற அமைப்பிற்குள் கோழையாகி போகின்றான்.

இப்பொழுதும் தன் மனதில் உள்ளதை தன் குடும்பத்திடம் கூறலாம் தான்.. ஆனால் இதில் ஒரு பெண்ணின் விருப்பமும் அல்லவா உள்ளது.. அவள் இருக்கின்ற அழகுக்கும் பாடும் திறமைக்கும் தன்னைப் போல் ஒரு ஊனமானவனா கணவனாக வாய்க்க வேண்டும்.. அதுமட்டுமில்லாம் தன் விருப்பத்தை தன் குடும்பத்திடம் கூறி அவர்கள் மனம் மகிழ்ந்து ஏற்றுக் கொண்ட பின்பு பெண்ணவள் தன் குறையை சுட்டிக் காட்டினாள் தன் குடும்பம் தாங்குமா..? இல்லை தன்னால் தான் தாங்க முடியுமா என்ன..? என்றவனின் அறிவின் கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் தான் ஓடி ஒளிய பார்க்கின்றான்.

ஆனால் ஒரு பெண்ணின் மனதை அவ்வளவு எளிதில் யாராலும் கனித்து விடமுடியாது தான்.. இவனால் மட்டும் முடியுமா என்ன..?

காதல் ஒரு மனிதனை எத்தனை பெரிய கோழையாக்குகிறது..இவனும் அதில் ஒருவன் தானே..

அவன் மனதில் நுழைந்தவளை தன் குறையை நினைத்து வெளியே தள்ள முயற்ச்சிக்கிறான்.. அவனால் முடியுமா என்ன..

மனம் போன போக்கில் தன் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவன் கவனத்தில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம்.. படாரென்று வண்டியை நிறுத்தியவன் சத்தம் வந்த திசையை நோக்கி ஆராய்ந்தான்.

தன் கையில் ஸ்டிக்கை எடுத்துக் கொண்டு வண்டியிலிருந்து இறங்கினான் ஆத்விக்.

அவன் காதுகளில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் நெஞ்சில் நுழைய சத்தம் வந்த திசை நோக்கி வேகமாய் நடந்தான்.. வேகமாய் நடந்ததாலோ என்னவோ அவன் காலில் வலி எடுத்தது.

ஆனால் பெண்மையின் அலறல் சத்தம் அவனை வலியை பற்றி யோசிக்க விடாமல் நகர்த்தியது.

ஊரின் எல்லையில் இருந்த மாந்தோப்பில் இருந்து சத்தம் வர அருகே நெருங்க நெருங்க அந்த குரலை கேட்டதும் ஆடவனின் உயிர் துடித்து போனது.

ஆம் அங்கே வஞ்சியவள் தான் ஒரு வஞ்சகனின் கரத்தில் சிறையிடப்பட்டிருந்தாள்.. முழுதாய் போதையின் பிடியில் அரக்கனாய் இருந்தவனின் கைகள் அவளின் உடலில் வளைவு நெளிவுகளை தொட்டு தடவியது.. அந்த அருவருப்பில் முகம் சுளித்தவளின் அதரங்கள்,

"ப்ளீஸ் என்னை விட்டுடு.. என்ன எதுவும் செஞ்சிடாத.." என்றாள் கண்களில் வழியும் கண்ணீருடன்.

அதை கண்டதும் உடமையானவனுக்கு கோபம் கண் மண் தெரியாமல் வந்தது.

ஏய் என்றவனின் கர்ஜனை அந்த இடத்தையே அதிர வைத்தது.

அவனின் கர்ஜனையில் போதையில் இருந்த மிருகமோ பயத்தில் பின்னே நகர்ந்தது.. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பேதையவளோ அவனை தள்ளி விட்டு ஓடி வந்து அவனின் மார்பில் முகத்தை மறைத்து அவனை இறுக்கமாய் கட்டிக் கொண்டாள்.

அவளின் உடல் நடுக்கமே கூறியது பேதையவள் எவ்வளவு பயந்துள்ளாள் என்று.

மெதுவாக தன் கரத்தை உயர்த்தியவன் அவளின் முதுகை தடவி அவளை சமாதானம் செய்தவன் அவளை தன்னிடமிருந்து பிரித்து விட்டு அங்கே போதையில் இருந்தவனை தன் கையில் இருந்த இரும்பு ஸ்டிக்கை வைத்து தாக்கியவன் அவனின் தலையில் உதிரம் வழிய அவனை விட்டு தன் அலைபேசியை எடுத்து தன் ஆட்களுக்கு அழைத்தவன் அங்கே நடுங்கியபடி நின்றிருந்தவளை மனம் வலிக்க பார்த்தான்.

அவளோ தலையை பூமியில் புதைத்து அழுது கொண்டிருந்தாள்.

" ஆரி.."என்றான் மெல்லிய குரலில்.

அவன் குரலில் என்ன இருந்ததோ மெதுவாய் தலையை நிமிர்த்தி அவனை பார்த்தாள்.

"இங்கே ஏன் வந்தே.. இவன் யாரு.." அவளிடம் மட்டும் மென்மையோ என்று எண்ணுமளவுக்கு.

பெண்ணவளோ பதிலை சொல்லாமல் தலைகுணிந்தபடி நின்றிருந்தாள்.

" உன்னை தான் கேட்குறேன்.. யாரு இவன்.. இங்கே எப்படி வந்த.." என்றவனின் வார்த்தையில் இருந்த அழுத்தம் நீ இப்போது பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டளை அவனின் குரலில் இருந்தது.

அதை கேட்டதும் இன்னும் அழுகை வர தன் அழுகையை அடக்கிக் கொண்டவள், "தெரியலை நான் தங்கியிருக்க இடத்துக்கு போலாம்னு வந்தேன்.. இவ என்னை இங்கே கடத்திட்டு வந்துட்டான்.." என்றாள் மெல்லினமாய்.

ஏனோ அவளின் வார்த்தையும் அவனுக்கு பாடுவது போல் தான் இருந்தது அவளின் குரலின் மென்மை.

'அய்யோ அப்பாவி மாறி முகத்தை வச்சிக்கிட்டு கொல்றாளே..' என்று மனதில் நினைத்தவன் அவளிடம்,

"அது தான் அவன் குடிச்சிருக்கான் இல்லை.. ரெண்டு தட்டு தட்டிட்டு போக வேண்டியது தானே.." என்றான் கட்டளையாய். உன்னை நீதான் காத்துக் கொள்ள வேண்டும் என்ற அழுத்தம் அதில் இருந்தது.

"இல்லை அவனை அடிக்க முயற்சி பண்ணினேன்..ஆனா என்னால முடியலை.." என்றாள் சிறுபிள்ளையாய்.

உண்மை தான் அவனை அடிக்க எவ்வளவோ முயன்றும் மென்மையான பெண்ணவளால் வலிமையான ஆடவனை தாக்க முடியவில்லை.

ஏனோ அவளின் சிறுபிள்ளை தனத்தில் சிரிப்பு தான் வந்தது ஆடவனுக்கு.

ஆனால் அதை வெளியே காட்டாமல் அவளை முறைத்தபடியே நின்றான்.

சற்று நேரத்தில் அவனின் ஆட்கள் வந்து விட அந்த இடத்தை சுத்தப்படுத்த சொல்லிவிட்டு அடிபட்டவனை மக்களின் கண் பார்வை படும் இடத்தில் போட்டு விட்டு வரும் படி அவர்களுக்கு உத்தரவிட்டவன் அவளிடம் திரும்பி,

"நீ வா போலாம்.." என்றான் அவளை ரசித்தபடியே.

ஏனோ இன்னும் பயத்தில் இருந்து தெளியாதவள் அவனை பார்த்து பயந்து கொண்டே, "இல்லை நான் வேற எங்கேயாவது போறேன்.. உங்களுக்கு சிரமம் வேணாம்.." அவன் முதல் நாள் அவளை நம்பாத பார்வை பார்க்க அந்த பார்வையில் ஆடவன் தான் உள்ளம் நொந்து போனான்.. ஆனால் அதை தன் முகத்தில் காட்டாமல்,

"இதோ பாரு நேத்து நீதானே என் தாத்தாகிட்ட காப்பாத்த சொல்லி கேட்ட.. இப்போ நான் அதை தான் பன்றேன்.. என் தாத்தா வாக்கு கொடுத்தா அதை எப்பாடுபட்டாவது நிறைவேத்துவாறு.. இப்போ இவன்கிட்ட இருந்து நீ தப்பிச்சிட்ட.. ஆனா இவன் எழுந்தான்னா உனக்கு தான் கஷ்டம்.. அதுமட்டுமில்லாம இன்னையோட திருவிழாவும் முடிஞ்சிருச்சி.. நாளைக்கு நீ உன்னோட ஊருக்கு கிளம்பனும்.. அப்போ இப்பவே கிளம்பு.. நான் உன்னை பாதுகாப்பா விட்டுட்டு எனக்கு வேலையிருக்கு நான் கிளம்பனும்.." என்றான் பட்டும் படாமலும்.

அவனின் பதிலில் ஏனென்று தெரியாமல் பெண்ணவள் உள்ளம் தான் காயம்பட்டு போனது.

வேறு எதுவும் பேசாமல் அவனுடன் கிளம்பினாள் நங்கை.

அவர்கள் இருவரையும் சுமந்தபடி அந்த கார் திருமலை ஊர் எல்லையை தாண்டியது.

இவர்களின் இந்த பயணம் வாழ்க்கையோடு இணையுமா..? இல்லை ஆடவனின் முடிவுதான் நிறைவேறுமா..? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

அந்த காரில் இருந்த சீ டி பிளேயரை ஆன் செய்தான்.. அதிலிருந்து ஒலித்தது பாடல் வரிகள்.

சொந்தம் யாரு பந்தம் யாரு நிலவே பாரு எனைப் பாரு
நெஞ்சில் பாரம் கண்ணில் ஈரம் துடைப்பார் யாரு பதில் கூறு
உள்ளம் தோறும் கள்ளம் நூறு அதை நீ பார்த்து எடை போடு
உன்னை காக்க தொல்லை தீர்க்க வருவோம் நாங்கள் துணிவோடு
வானத்தோடு கோவம் கொண்டு நீ போவதேன் பால் நிலாவே
வானம் காக்க நாங்கள் உண்டு நீ நம்பியே பார் நிலாவே
தேவ கன்னியே.. தேய்வதென்ன நீ தன்னாலே..

ஏனோ பெண்ணவளின் நிலையும் ஆடவனின் மனதையும் படம் போட்டு காட்டியது அந்த பாடல்.. அந்த பாட்டின் வரிகளோடு அவளையும் கடைக்கண்ணால் பார்த்தான்.. அவன் நினைத்தது போலவே பெண்ணவள் அந்த பாடலோடு இணைந்து விட்டாள் போலும்.. கண்களை மூடியபடி அந்த பாடலை ரசித்துக் கொண்டிருந்தாள்.



நாளைக்கு பாக்கலாம் மக்களே.. இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்க பொன்னான கருத்துக்களை சொல்லிட்டு போங்க பா.