• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாலைவன ரோஜா 9

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
பாலைவன ரோஜா 9

கோவில் திருவிழா முடிந்ததும் புருஷோத்தமனின் குடும்பம் தங்களது சொந்த ஊருக்கு கிளம்பியது.. எல்லோரின் மனதிலும் சிறிது வருத்தம் இருக்கத்தான் செய்தது.. இந்த பையன் முழுவதுமாக இல்லாமல் சென்று விட்டானே என்ற ஆதங்கம் எல்லோருக்கும் இருந்தது.. ஆனால் அதை ஒருவரை மற்றவரிடம் சொல்லி மற்றவரையும் வருந்த நினைக்கவில்லை.. அவர்களுடன் ஆரிணியும் இருந்தாள்.

புருஷோத்தமனுக்கோ தன் பேரனின் நினைவை தாண்டி இரவு கோவில் திருவிழா முடிந்ததும் ஆரிணியை தேடி சென்ற போது நடந்தது இன்னும் கண் முன்னே நின்றது.

ஆரிணியை அந்த ஊருக்கு வெளியே தான் பார்த்தார்.. பக்கத்தில் யாருமில்லாமல் தனியாகத்தான் இருந்தாள்.. ஆனாலும் அவளின் பார்வை அங்கிருந்த பருமனான மரத்தை தான் அதிகம் தொட்டது.. அது தான் அவரின் நினைவில் ஓடியது.. ஆரிணியை யோசனையாக பார்த்தார்.. ஆனால் அவர் தன்னை பார்ப்பதை கூட உணராது இரவு நடந்த நிகழ்விலே பெண்ணவளின் மனம் நின்றிருந்தது.


இரவு தன்னை ஒரு அரக்கனிடம் இருந்து காத்தவனின் நடவடிக்கை தான் சந்தேகத்தை கொடுத்தாலும் முன்பே அவனை புருஷோத்தமன் குடும்பத்துடன் கண்டதால் பெரிதாக அவன் மீது சந்தேகம் இல்லையென்றாலும் முழுதாய் அவளின் சந்தேக வட்டத்தில் இருந்து அவன் வெளிவரவில்லை.

அதற்கான காரணமும் இருந்தது..இரவு அவளை காப்பாற்றியவன் அவளை அங்கிருந்து அழைத்து ஊருக்கு வெளியே வந்ததும் சற்று தூரத்தில் புருஷோத்தமன் கார் வருவதை கண்டவன் அவளிடம் திரும்பி,

"இதோ பாரு தாத்தா கார் வருது.. நான் உன்னை அந்த இடத்துல விடறேன்.. அவரு உன்னை கூப்பிட தான் வராரு.. அவரோட போயிடு.. உனக்கு எல்லாமாவும் என் வீடும் என் குடும்பமும் இருக்கும்.. எதுக்கும் பயப்படாத.. அப்புறம் நீ என்னை மறைக்கிறையோ அதை சீக்கிரமா தாத்தாகிட்ட சொல்லிடு.. நிச்சயம் நீ பயப்படறதா நியாயமான ஒரு விஷயம்னா அதை நிச்சயம் என் தாத்தா உன்னை அந்த சிக்கல்ல இருந்து காப்பாத்துவாரு.. அப்புறம் இனி அதுவும் உனக்கு குடும்பம் தான்..கேர் புல்.." என்றவனின் பார்வை இறுதியாக அவளின் முகத்தில் நிலைத்தது.

பிறை வடிவான வட்ட வடிவத்தில் நிலா முகம் சிவந்த நிறமும் அல்லாது கருப்பும் அல்லாத தேன் நிறம்.. கோழி குண்டை உருட்டி விட்டது போல் கண்கள்.. ஒல்லியும் அல்லாத குண்டும் அல்லாத சற்று பூசிய தேகம் தூரத்தில் சென்ற நிலவும் அவளருகில் நின்றால் தோற்றுத் தான் போகும்.. அவள் முகத்தில் சற்று நேரத்திற்கு முன்பு நடந்த நிகழ்வில் பயம் வீற்றிருக்க கண்களோ கண்ணீரை வாரி இறைக்க அவளை பார்க்க வேண்டாம் என்று சொன்ன அறிவிடம் போராட முடியாமல் பார் என்ற மனதையும் தடுக்க முடியாமல் ஆடவனின் நிலையோ சொல்லில் அடங்கவில்லை.

அவன் கூறியதை கேட்டவளின் பார்வை ஏன் நீ அவர்கள் முன் வரவில்லையா என்ற கேள்வியை தாங்கி இருந்தது.

அதை கண்டவன் அவளிடம் மேலும் எதுவும் பேசாமல் அவளை இறங்க சொன்னவன் அவள் இறங்கியதும் காரை எடுத்து கொண்டு மறைவான ஒரு இடத்தில் காரை நிப்பாட்டினான்.

அதற்குள்ளாகவே ஆரிணியிடம் புருஷோத்தமனின் கார் வந்து நிற்கவும் அவன் அங்கேயே மரத்தின் பின்னே மறைந்து விட்டான்.

அவனைப் பார்த்த பெண்ணவள் அருகில் வந்த புருஷோத்தமன் அவளிடம்,

"ஏம்மா இந்நேரத்துல தனியா இங்கே வந்த.." என்றார் கேள்வியாய்.

"அது வந்து.. அது.. வந்துங்க தா.. தாத்தா.. ஊருக்கு கிளம்பலாம்னு வந்தேன்.." என்றாள் அவனை பார்த்த படியே.

அவள் எங்கோ பார்த்து பதில் சொன்னதை அறிந்தாலும் அவளிடம் அதை பற்றி எதுவும் கேட்காமல்,

"உனக்கு எதோ பிரச்சினை அடைக்கலம் கேட்டியே மா.." என்றார் அவளை அழுத்தமாய் பார்த்தபடி.

"அது.. அது உங்களுக்கு வீணா தொல்லை தர வேணாம்னு தான் தாத்தா கிளம்புனேன்.." என்றவளின் மென்மையான குரலில் இருந்த வலி அவருக்கு புரிந்தது.

"அட என்னம்மா இதுல எனக்கு என்ன தொல்லை.. வீட்ல என் பேரனுங்க பேத்திங்க அத்தனை பேரு இருக்காங்க.. அதுல நீயும் ஒருத்தியா இருக்க போற.. இதுல என்ன தாயி சிரமம்.." என்றார் மென்மையாக அவளின் பார்வை போகும் திசையை பார்த்தபடி.

ஏனோ அவளை அவரால் தவறாக நினைக்க முடியவில்லை.. களங்கமில்லாத நிலவை போன்ற முகம்..

அவளையும் தங்கள் வீட்டு பேரன் பேத்திகளோடு இணை சேர்த்ததும் நங்கையவளுக்கு பேரானந்தத்தை கொடுத்தது.

வாழ்க்கையில் இப்படி ஒரு குடும்பத்தில் அங்கமாய் வாழும் பாக்கியம் இல்லாமல் இழி குலத்தில் பிறந்த ஒரு காரணத்திற்காகவே அவளுமா அந்த நரகத்தில் தள்ள காத்திருந்த கும்பலுக்கு மத்தியிலே தன்னையும் தன் வீட்டு பேரக்குழந்தைகளுடன் ஒப்பிட்ட அவரின் மேல் இனம்புரியாத பாசம் வந்தது.

அவரின் முன்னே தன் இரு கரத்தையும் இணைத்து வணங்கினாள் வஞ்சியவள்.

அவளின் கரத்தை பிடித்து தடுத்தவர், "வாமா எங்க இல்லை நம்ம வீட்டுக்கு போலாம்.. உன்னை தேடி வந்தாங்கன்னா நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன்.." என்றவர் அவளின் கைப்பிடித்து அழைத்து சென்றார்.

தன் தாத்தாவுடன் செல்பவளின் விம்பத்தை மனதில் தேக்கி கொண்டவன் சிரிப்புடன் சென்றான்.

அவன் அங்கிருந்து செல்வதை வண்டியின் கண்ணாடியில் பார்த்திருந்தார் புருஷோத்தமன்.

அதிலிருந்து தான் அவரின் சிந்தனை இந்த பெண்ணுக்கு நம் பேரனை முன்பே தெரிந்திருக்குமோ என்ற எண்ணமே அவளை பற்றியே இருந்தது.

இங்கே வீட்டிற்கு வந்து அனைவரும் ஹாலில் அமர ஆரிணியை அழைத்த புருஷோத்தமன் தன் குடும்பத்தையும் அழைத்தார்.

" எல்லாரும் வந்தாச்சா.." என்றார் அனைவரையும் பார்த்து.

"வந்தாச்சு.." என்றனர் அனைவரும் கோரஸாக.

அதை கண்டதும் சிரிப்புடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர் .

அதை சந்தோஷத்துடன் பார்த்தாள் பெண்ணவள்.

அவளின் சந்தோஷமான முகமே அவளுக்கு குடும்பத்தின் மீதுள்ள பிடிப்பை புரிந்து கொண்ட புருஷோத்தமன் ஆரிணியிடம் திரும்பி,

"அம்மா ஆரிணி இங்கே வாமா.." என்று தன் பக்கத்தில் அழைத்து அருகே அமர்த்திக் கொண்டார்.


அவளின் முகத்தை பார்த்து இந்த குடும்பத்தை பத்தி நீ தெரிஞ்சிக்கனும் மா.. அதுக்காக எல்லாரையும் உனக்கு அறிமுகம் செய்து வைக்குறேன் மா.. இது என் பெரிய பையன் மா ஜானகிராமன்.. இது அவனோட மனைவி சீதாலட்சுமி.. என் வீட்டு ராமன் சீதை இவங்க.. அடுத்து என் ரெண்டாவது பையன் ரகுராமன் இது அவனோட மனைவி கோதை.. அடுத்தாக மூணாவது என் பொண்ணும் மாப்பிள்ளையும் யமுனா சிவநேசன்.. அடுத்ததா என் ரெண்டாவது பொண்ணு கங்கா சிவராம்.. இது என்னோட கடைசி பையன் ராஜமோகன்.. இவனுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துலேயே அவன் மனைவி இறந்துட்டா.. நாங்களும் எவ்வளவோ முயற்சி செஞ்சும் அவனுக்கு மறு கல்யாணம் செய்து வைக்க முடியலை.." என்று சோகமாய் முடித்தார்.

அவரின் சோகம் அவளை வந்து தாக்கியதோ என்னவோ தாத்தா என்று மென்மையாய் அவரின் கரத்தில் தன் கரத்தை வைத்து அழுத்தினாள்.

அதில் தெளிந்தவர், "சாரி மா..அதை விடு அப்புறம் இவங்கெல்லாம் யாருன்னா என்னோட பேர பசங்க.. இது தாமரை எங்க வீட்டோட முதல் லட்சுமி.. ராமன் சீதாவோட பொண்ணு.. அப்புறம் இது ஆராதனா என் ரெண்டாவது பையனோட பொண்ணு.. அவனுக்கு ஒரு பையனும் இருக்கான்.. அன்னைக்கு உன்னை காப்பாத்துனான் இல்லை ஆத்விக் கிருஷ்ணா.. இந்த வீட்டோட சிங்கம்.. எனக்கடுத்த என் குடும்பத்தை வழி நடத்த போற தளபதி என் பேரன்.. அடுத்ததா இது ஆரமுதன் ஆராத்யா என் முதல் பொண்ணோட பசங்க.. இது ஷிவானி எங்களுக்கு செல்ல பேத்தி.. இது தான் மா நம்ம குடும்பம்.." என்றார் அவளையும் சேர்த்து.

இளசுகள் அனைவரும் அவளிடம் ஹாய் என்று பேச ஆரம்பிக்க பெரியவர்கள் அனைவரும் ஓய்வெடுக்க ஆரம்பித்தனர்.

ஆரிணியும் அவர்களுடன் சகஜமாக பேச ஆரம்பித்துவிட்டாள்.. அனைவரும் அவளையும் அந்த வீட்டில் ஒருத்தியாக பார்க்க ஆரம்பித்து பழகினார்கள்.


இங்கே ரங்கநாயகி கோபத்தின் எல்லையில் இருந்தாள்.. தன் முன்னே நின்றவனை கை நீட்டி தன் பலம் கொண்ட மட்டும் அறைவிட்டாள்.


அறைவாங்கியவனோ கண்ணத்தில் கை வைத்தபடி அப்படியே நின்று விட்டான்.

"ஏய் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அவ தப்பிச்சி போயிட்டான்னு சொல்லுவே.. அவளை பாதுகாக்க தானே உன்னை நம்பி அனுப்பினேன்.. ஆனா இப்படி ஒ பொம்பளை பிள்ளையை கூட பாதுகாக்க முடியாத துப்புகடடவனே.. உன்னை நம்பி அனுப்பினேன் இல்லை.. என்னை சொல்லனும்.. அவளோட மார்க்கெட் ரேட் என்னன்னு தெரியுமா டா இடியட்.. கிட்டதிட்ட ஒரு கோடி டா அவளோட விலை.. ஆனா அவளை இப்படி தப்பிக்க விட்டு வந்துருக்கியே பொறுக்கி.. கண்ட இடத்துல பொம்பளை சுகம் தேவைப்படதோ ராசாவுக்கு.. அவளை தேடி கொண்டு வந்தா தான் நீ உயிரோட இருக்க முடியும்.. நீ மட்டும் இல்லை நாம எல்லாரும் உயிரோட இருக்கனும்னா அவ இங்கே வரணும்.. அவ இல்லாத இந்த வீட்டு வாசப்படியை கூட மிதிக்க கூடாது நீ.. போட வெளியே.. டேய் ரங்கா இவனை இழுத்து வெளிய தள்ளிட்டு கதவை சாத்து.." என்று கட்டளையிட்டு உள்ளே சென்றாள்.

அவனோ இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளி வராமல் இருந்தான்.. கேவலம் ஒரு பெண்ணின் உடம்பிற்கு ஒர் கோடியா என்று தான் அதிர்ச்சி கொண்டான்.

ஆனால் அவன அறியாதது அரிணியின் உடலுக்கு மட்டும் அந்த விலை அல்ல... அவளை அவள் போக்கில் விடுவதற்கான காரணமும் இன்னும் அறியவில்லை அவன்.. போக போக தெரிந்து கொள்வானோ என்னவோ பொறுத்திருந்து தான் பார்ப்போமே..?

இங்கே தன் அறையில் அமர்ந்திருந்த ஆத்விக் தன் வீட்டு ஹாலில் மாட்டப்பட்டிருந்த கேமிராவிலிருந்து தன் தம்பி தங்கைகளுடன் அமர்ந்த பேசிக் கொண்டிருந்த பெண்ணவளையே பார்த்திருந்தான்.

சற்று நேரத்தில் அந்த வீடியோவை அணைத்து விட்டு தலையை பிடித்தபடி அமர்ந்து விட்டான்.

'நீ வந்த கொஞ்ச நாள்ல என்னை ஏதோ பண்ணிட்டே டி.. உன் நினைப்பாவே இருக்கு.. ஏதோ வசியம் பண்ணிட்டியோன்னு தோனுதுடி வசிக்காரி..' என்றவனின் மனம் அவனை வசியம் செய்தவளையே நினைத்தது.


தன் வீட்டு பெண்களை போலத்தான் அடுத்த பெண்களையும் நினைப்பான் ஆடவன்.. ஆனால் அவனை பொறுத்தவரை இந்த உலகில் அவனை கட்டிக் கொள்ளப்போகும் தாரத்தை தவிர அனைவரும் அக்கா தங்கை தான்.. அப்படித்தான் அனைவரையும் பார்ப்பான்..ஆனால் இதில் பெண்ணவள் மட்டும் வித்தியாசமாய் இடம் பிடித்துக் கொண்டாள் ஆடவனின் மனதில்.

முதலில் அவனின் பிடித்தத்திற்கு முழுமையான அர்த்தத்தை உணர்ந்தால் அவளை சேரும் வழி மிகவும் குறைவு தான்.. ஆனால் அவளை தனக்கு சொந்தமாக்க நிறைய பாடுபட வேண்டும் என்பதை ஆடவன் இன்னும் அறியவில்லை.

எறும்பு ஊற கல்லும் தேயும் என்பது போல் ஆடவனின் மனதில் சிறிதாய் சலனத்தை ஏற்படுத்தி தாரகையவள் கல்லையும் கரையை வைத்துக் கொண்டிருக்கிறாள்.


கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன..
நெஞ்சிக்குள்ள அன்பின் பாரம் என்ன..
நீ என்ன மாயம் செய்தாய்..
நீருக்குள் தீயை வைத்தாய்..
நீ தந்த காதல் சொந்தம்..
வாழட்டும் கண்ணா என்று..



அடுத்த பாகத்துல பாக்கலாம் மக்களே.. இந்த கதை பிடித்திருந்தால் உங்க கருத்துக்களை சொல்லிட்டு போங்க பட்டூஸ்.