போனால் போகட்டும்
வழக்கம் போல் காலையில் சுப்ரபாதத்தை ஆரம்பித்தாள், கமலா.
வயசான காலத்துல வீட்டுக்கு பாரமா ஏந்தா இருக்காங்கலோ, போயி சேர வேண்டிய தான, நா வீட்டுலயும் வேலை பாக்கனு, வெளிய போயும் வேலை பாக்கனும்னு என் தலையில் எழுதி இருக்கு போல .
காதில் எதுவும் விழாதது போல் உட்கார்ந்து டீ குடித்தபடி பேப்பர் படித்துக் கொண்டிருந்தார், காசி.
நான் பேசுறது இப்ப உங்களுக்கு கேட்குதா இல்லையா என்று பேப்பரை பிடுங்கினாள், கமலா.
காலையிலே பேப்பரை கூட நிம்மதியா படிக்க முடியலை.
ஆமா,வீட்டுல என்ன ஏதுன்னு பாக்காம உலகத்துல என்ன நடக்குதுனு தெரிஞ்சு என்ன செய்ய போறீங்க.
இப்ப, என்ன கமலா ஆச்சி என்றார்.
உங்க அம்மாவுக்கு நீங்க மட்டுந்தா பிள்ளையா? உங்க அண்ணேங்க இல்லையா? அவுங்க வீட்டில போய் விட வேண்டியது தானே.
அவுங்க ரெண்டு பேரும் மாச மாச பணம் கொடுக்குறாங்க அப்புறம் என்ன செய்ய
சொல்லி முடிப்பதற்குள் கமலா, பணத்தை கொடுத்தா போதுமா வைச்சி பாக்க வேணா உங்களுக்கு என்ன சொல்லிட்டு போயிருவிங்க,நான் படும் பாடு உங்களுக்கு என்ன தெரியும், என்றாள்.
எழில் அவன் அறையில் இருந்து வெளியே வந்தான். ஏ இப்படி தினமும் கத்திகிட்டே இருக்கிங்க, இப்ப ஆரம்பிச்சா இரத்திரி வரைக்கும் ஓயாது . போயி டீ எடுத்துட்டு வாமா என்றான்.
கமலா உள்ளே செல்ல, விட்டதே போதும் என்று அலுவலகம் கிளம்ப சென்றார். காசி.
இதை எல்லாம் கேட்டு மனம் நொந்து கொண்டு இருந்தார், கமலி பாட்டி.
கமலி பாட்டிக்கு முன்று மகன்கள். காசி தான் கடைசி மகன். மூத்த மகன்கள் இருவருக்கும் திருமணம் ஆனதும் கடைசி மகன் உடன் தங்கியிருந்தார், பாட்டி. எப்போதாவது இரண்டு மகன்கள் வீட்டுக்கு சொல்வதும், இரண்டு முன்று நாட்கள் கழித்து மீண்டும் காசியிடமே வந்துவிடுவார். காசிக்கு திருமணம் ஆனதுக்கு பிறகும் இப்படி தான் இருந்தார். எழில் பிறந்த பிறகு அங்கு செல்வதை குறைத்து கொண்டார். அவர்களும் மாதம் மாதம் பணம் கொடுப்பது, வந்து பார்ப்பதும் என்று இருந்தனர்.
எழிலை குழந்தையில் இருந்து இன்று வரை பார்த்து கொண்டது பாட்டி தான். அவனை மட்டுமில்லை வீட்டு வேலைகளையும் பாட்டியே செய்வார்,எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த ஒன்றரை வருடம் பாட்டி உடல் நிலை சரியில்லாமல் போனதால் வேலை செய்ய முடியவில்லை.
ஆகையால், தினமும் பிரச்சனை. காசியோ கமலாவையும் கண்டிக்கமாட்டார், அம்மாவுக்கும் ஆர்தல் சொல்லமாட்டார். எதுவும் தெரியாதது போல் இருப்பார்.
எழில் தான் பாட்டிக்கு ஆர்தல் சொல்வான். பாட்டி தான் அவன் உயிர். பாட்டியும் எழிலுக்காக தான் கமலா பேசுவதை எல்லாம் பொருத்து கொண்டு இருக்கிறார்.
காசியும் கமலாவும் வேலைக்கு சென்றனர். எழில் கல்லுரிக்கு போயிட்டான். பாட்டி வீட்டில் தனியா சின்ன சின்ன வேலையை பார்த்த படி இருந்தார். இப்படியே நாட்கள் கழிந்தன.
ஒருநாள், கமலாவின் வார்த்தைகள் எல்லை மீறியது. எழிலுக்கு கோபம் வந்து அம்மாவுடன் சண்டை போட்டான்.
எப்ப பாரு பாட்டிய திட்டுறீங்களே அவுங்க உடம்பு முடியாம தான வேலை பாக்கலை , இல்லையினா எல்லா வேலையும் பாட்டி தான பாப்பாங்க கொஞ்சமாவது மனசாட்சியோட பேசுங்க அம்மா. ஏ அப்பா நீங்களாவது சொல்லகூடாதா என்றான், எழில்.
நான் என்ன பண்ண என்றார், காசி.
ம்ம்ம், அம்மா பேசியே பாட்டிய கஷ்டபடுத்துறாங்க, நீங்க பேசாமலே கஷ்டப்படுத்துங்க. ஒரு நாளாவது பாட்டி கூட உட்கார்ந்து பேசுறீங்களா. உங்கள பாத்தாலே எனக்கு எரிச்சல இருக்கு என்று சொல்லி விட்டு போய்விட்டான்.
எழில் வெளியே போனதும் கமலா, பாத்தீங்களா அவனை எப்படி பேசிட்டு போறானு, இதை எல்லாம் உங்க அம்மா சொல்லி தா அவன் இப்படி எல்லாம் பேசுறான் , என் பிள்ளை என்னையே எதுத்து பேசுற அளவு அவன் மனசை உங்க அம்மா மாத்திருக்காங்க பாருங்க, என்றாள். அப்போதும் கூட எதுவும் சொல்லாமல் கிளம்பினான், காசி.
வேலை முடிந்து இருவரும் வீடு வந்தனர். எழில் அமைதியாக தலை குனிந்து உட்கார்ந்து இருந்தான்.
என்ன பா இன்னும் கோபம் குறையிலையா என்று தோளில் கை வைத்தார், காசி.
தன் கையில் இருந்த பேப்பரை கொடுத்தான், எழில்.
படிக்க ஆரம்பித்தார். அதில்
"என்ன இத்தன வருச பாத்து கிட்டதுக்கு நன்றி. நா வீட்ட விட்டு போறே, என் கிட்ட பணமும் நகையும் கொஞ்சம் இருக்குது அத உன் மனைவிக்கு வைச்சிகோ காசி. எழில் அம்மா அப்பா கூட சண்டை போடாத அவுங்கள பாத்துக்கோ, நா உன் பக்கத்தில் இல்லைனாலும் உன்ன நினைச்சிட்டே தா இருப்பே பா , பாட்டி உன்ன விட்டுட்டு போறதுக்கு மன்னிச்சிடு எழில்" என்று எழுதி இருந்தார்.
காசி உடனே இரு அண்ணன்களுக்கும் போன் செய்து நடந்ததை சொல்ல, இருவருமே அலட்டிக் கொள்ளாமல் போனால் போகட்டும் நம்ம என்ன செய்வது என்று சொன்னார்கள்.
கமலா, இப்படி சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியே போன அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என்ன சொல்லுவாங்க, நா கொடுமை செஞ்சி வெளியே அனுப்புனேனு சொல்வாங்க என்று புலம்ப ஆரம்பித்தாள்.
சிறிது நேரம் கழித்து இருவரும் எழில் பக்கத்தில் அமர்ந்து
விடுப்பா , நீ எதுவும் கவலைபடாத நம்ம நல்லாதா பாத்துகிட்டோம் அவுங்க போனா என்ன பண்றது என்றனர்.
எழில் நிமிர்ந்து பார்த்தான்.
குடும்பத்தில் சண்டை சச்சரவு இருக்க தான் செய்யும் அதுக்குனு இப்படி வீட்டைவிட்டு வெளியே போறதா,நீ போயி சாப்பிட்டு படி போ , போனால் போகட்டும் நம்ம என்ன செய்வது என்று சொன்னார், காசி.
அப்போ நா போனாலும் இப்படி தா போனால் போகட்டும் னு சொல்லுவிங்களா என்றான், எழில்.
என்னப்பா சொல்லுற நீ என்னேட புள்ளைடா உன்ன எப்படி நாங்க அப்படி விட்டுருவோம். என்றார், காசி.
சிரித்தபடி, உங்கள பத்து மாசம் சுமந்து பெத்தவுங்களையே போனால் போகட்டும் னு சொல்றீங்க, அப்ப நா எல்லாம் உங்களுக்கு என்ன பெருசா தூக்கி போட்டுட்டு போயிடுவீங்க என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்றான் , எழில்.
மகனின் வார்த்தைக்கு பதில் வார்த்தை இன்றி தலைகுனிந்து இருந்தனர், இருவரும்.
***
நன்றி.