• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரபஞ்ச கொடை

Kingever512

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
1
கல்லிலே கலை வண்ணம் கண்டான்... என்ற பாடல் பன்பலையில் இசைத்துக் கொண்டிருக்க சுகுமாரன் சாலை தள்ளுவண்டி கடையில் இரண்டு இட்லிகளை எடுத்து சாப்பிட்டுக்கொண்டே சாலையை எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அந்த கடைக்காரர் "என்னப்பா ரொசாரியோ எப்போ ஊருக்கு போரதா உத்தேசம்?" என்று கேட்க

சுகுமாரன் "அண்ணா நோ ரொசாரியோ. கால் மி சுகுமாரன்." என்றான்

கடைக்காரர் "சரிங்க சுகுமாரன் சொல்லுங்க சுகுமாரன்..." என்று சொல்லி சிரித்தார்.

சுகுமாரன் என்ற ரொசாரியோ இப்போது இருப்பது மாமல்லபுரம். அங்கு இருக்கும் நகரும் உணவகத்தில் தான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறான்.

ஆனால் இந்த மாமல்லபுரம் அவனுக்கு ஒரு கனவாக இருந்தது முன்னொரு காலத்தில்.

ரொசாரியோ மேற்கு இந்தியத் தீவு ஒன்றைச் சேர்ந்தவன். அவன் பள்ளிப் பருவத்திலே அவனுக்கு ஓவியக்கலை மீது இருந்த தாகத்தால் அவன் ஆசிரியருக்கு அவன் மீது தனிப் பாசம். வறுமை காரணமாக அவனால் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் போக அப்போதும் அவர் அவனுக்கு உதவ முன் வந்தார்.

ஆனால் அவன் வருமானம் ஈட்டுவதில் ஆர்வம் கொண்டான். வரும் வருமானத்தில் ஓவியத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவான் இவ்வாறு இருந்தது அவன் வாழ்க்கை ஓட்டம்.

அப்போது தான் ஒரு நாள் அவன் ஆசிரியர் ஒருசில சிலைகளின் புகைப்படங்களை வந்துக் கொடுத்தார். அவை உலகப் புகழ்பெற்ற சிலைகள் மற்றும் கட்டிடங்களின் புகைப்படங்கள்.

அவற்றில் பெரும்பாலானவை இந்திய நாட்டைச் சார்ந்தவை. கலையின் போதையில் ஊறிய ரொசாரியோவிற்கு அவை தாகத்தை அதிகப் படுத்தி இந்திய நாட்டின் மீதான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவிற்கு செல்ல வேண்டும் அந்த பொக்கிஷங்களை நேரில் பார்க்க வேண்டும் அவற்றைத் தொட்டு ரசித்து ஓவியம் படைக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டான்.

அதற்காக கடினமாக உழைத்து அதிகமாக சம்பாரிக்க தொடங்கினான். பத்து வருடங்களில் சில இந்திய மொழிகளை பேசக் கற்றுக் கொண்டான். ஒரு வல்லியத் தொகையை தேத்திக் கொண்டு இந்தியாப் புறப்பட்டான்.


எல்லோராவை பார்த்து சில ஓவியங்கள் வரைந்தான் அவை அங்கு இருந்த மக்களை வெகுவாக கவர்ந்தது. அந்த சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் அவனை அடிமைப் படுத்தியது.

அடுத்து அவன் வந்த இடம்தான் மாமல்லபுரம். ஆனால் அது அவனுக்கு சோதனை காலமாக பட்டது ஏனெனில் சிற்பத்தால் ஈர்க்கப்பட்டு கல்லாய் நின்ற நேரத்தில் கயவன் ஒருவன் ரொசாரியோவின் கேமரா மற்றும் அவன் பையை கலவான்டு ஓடிவிட்டான்.

கல்லாய் நின்றவன் சுயநினைவு திரும்பிச் சுற்றி திரும்பிப் பார்க்க கயவனை துரத்தி நால்வர் ஓட அனைத்தையும் இழந்த ரொசாரியோ திகைத்து நிற்க அங்கு இருந்த மக்கள் அவனை ஆதரவாக அழைத்துச் சென்று பேசினர்.

பையில் அதிக பணம் வைத்திருந்ததாக காவல்துறையிடம் சொல்லுமாறு அறிவுரை தந்தனர். சிறிது நேரத்தில் அந்த சரக காவல்துறை அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

ஆனால் ரொசாரியோ அப்போது தன் பையில் தன் நாட்டிற்கு திரும்பிச் செல்ல விமானத்திற்கும் அன்று கைச் செலவிற்கு சொற்ப்ப பணமும் மட்டும் வைத்திருந்ததாக சொன்னான். ஆனால் தன்னிடம் இருந்ததிலேயே அவனது கேமரா தான் விலை உயர்ந்தது என்றும் மற்றும் அது மட்டுமே அவனது சொத்து என்றும் வாக்குமூலம் தந்தான்.

அவனை விசாரித்த காவல் ஆய்வாளர் அங்கிருந்து சென்றதும் அவனுக்கு உதவி செய்ததில் ஒருவர் "பணம் நிறைய இருந்துச்சுன்னு சொல்லிருக்கலாம்ல?" என்று கேட்ட போது

"அப்படி சொல்லி இருந்தால் அந்த திருடனுக்கும் தனக்கும் ஒரு மாறுதலும் இருந்திருக்காது." என்றான்.

பிழைக்கத் தெரியாதவன் என்று கூட்டம் களைந்தது. அரும்பாடு பட்டு பணம் சேர்த்து கலைக்காக தாயகம் விட்டு வேறுநாடு வந்து அவன் செய்த பயணம் இப்போது இப்போது பயனற்று போய்விட்டதோ என்று எண்ணும்போது ஒரு தொலைக்காட்சி நிருபர் வந்து அவனிடம் பேட்டி எடுக்கத் தொடங்கினார்.

அவன் தான் பழகிய தமிழில் திக்கில் திணறிப் பேசத் தொடங்கினான் "நான் ஒரு வேற்று நாட்டவன் இங்கு இருக்கும் கலைப் பொக்கிஷங்களை கண்டு ஓவியம் வரைய வந்தேன். அந்த கேமரா நான் வாங்க என்னுடைய ஒரு வருட உழைப்பைப் போட்டிருக்கிறேன். இந்தியாவிற்கு வருவதற்கு நான்கு வருடம் கடுமையான உழைப்பு தேவைப் பட்டது.

நான் இந்தியாவின் மற்ற பகுதிகளில் பயணம் செய்து நான் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அந்த கேமராவோடு போய்விட்டது. என் இத்தனை வருட உழைப்பு எல்லாம் வீணாகி விட்டது. நான் தாய் தந்தை அற்றவன் கலை தான் என் தாய். நான் எடுத்த புகைப்படங்களை வைத்து ஓவியம் வரைவதே எனது எண்ணமாக இருந்தது.

ஆனால் நான் ஓய்வதில்லை எனது நாட்டுக்கு சென்று மறுபடியும் பணம் சம்பாதித்து இங்கு வருவேன் எத்தனை வருடங்கள் அதற்கு தேவைப்பட்டாலும் நான் அதை செய்வேன். ஆனால் திரும்ப செல்ல பணம் இல்லை. ஆனால் நான் அதை சம்பாதித்து கொள்வேன் அதற்கு நான் பணம் சம்பாதிக்கும் வரை இந்த நாட்டில் தங்கி வேலைப் பார்க்க எனக்கு அனுமதி அளிக்க வேண்டுகிறேன்." என்று கோரிக்கை வைத்தான்.

பேசும்போது அவன் கண் கலங்கியது அதை பார்த்தவரை நெகிழ வைத்தது. அவன் பிச்சி பிச்சி பேசிய தமிழ் அனைவருக்கும் நன்றாகவே புரிந்தது‌. அவனுக்கு பண உதவி செய்ய பலர் முன் வந்த போதும் "நான் யாசகம் பெற விருப்பமில்லை." என்று மறுத்துவிட அங்கு சில வேலைகளைப் பார்த்து பணம் ஈட்டத் தொடங்கினான். அப்படியாக ஒரு மாதம் சென்றிருக்க.

ஒருவன் ரொசாரியோவைத் தேடி வந்தான் "நண்பா என்னை நினைவிருக்கிறதா?" என்று கேட்க அவனுக்கு நினைவில்லை என்று பதிலளித்தான்.

வந்தவன் ஒன்றும் பேசாமல் ஒரு சிறிய பெட்டியை அவன் கையில் கொடுத்தான். அதை திறந்துப் பார்க்க அதில் ஒரு மெமரி கார்டு இருந்தது. அதை கையில் எடுத்துக் கொண்டு கொடுத்தவனைப் பார்த்தான் ரொசாரியோ.

வந்தவன் "ஊரக் கூட்டிடாதிங்க நான் தான் அந்த திருடன். நிறைய திருடிருக்கேன் நண்பா ஆனா உங்க கிட்ட செஞ்சது ரொம்ப தப்புன்னு உருத்திடுச்சி நேத்து நான் பார்த்த வீடியோனால. ஒரு யூடியூப் சேனல் உங்களுக்கு காசு கொடுக்க முன்வந்தப்போ வேண்டாம் நான் உழைச்சு சம்பாரிச்சுக்கிறேன்னு சொன்னிங்க. அதே சானல்ல ஒரு மாசம் முன்ன உங்க பழைய வீடியோ பார்த்தேன் மனசுக்கு கஷ்டமாச்சு நண்பா.

உங்க பணத்தை என்னால தர முடியாது கேமராவையும் உடனே வித்தாச்சு. நான் எப்பவும் கிடைக்கும் மெமரி கார்டு மட்டும் எடுத்து வச்சிக்குவேன் நேத்து உங்க வீடியோ பார்த்ததும் உங்க மெமரி கார்ட் தேடி எடுத்து பார்த்தேன் நீங்க எடுத்த படங்கள் எல்லாம் ரொம்ப நல்லாருக்கு. இதான் என்னால செய்ய முடிஞ்சது வாழ்த்துக்கள் நான் கிளம்புறேன்." ன்னு சொல்லி நகர்ந்தவனை ஆச்சர்யமாக பார்த்தான் ரொசாரியோ.

அவனை அழைத்து அணைத்துக் கொண்டான் ரொசாரியோ "தேங்ஸ்... நன்றி..." என்று சொல்லி கண்ணீர் சிந்த வந்தவன் மகிழ்ச்சி அடைந்தான்.

ரொசாரியோ "நண்பா இந்த திருட்டு பழக்கத்தையும் கைவிட்டு வாழலாமே." என்று சொல்ல.

வந்தவன் "ஏதோ பாவமா இருக்கேன்னு வந்து கொடுத்தேன். நீ என் மண்டய கழுவாத." என்று சொல்லி நகர்ந்தவனை "ஒரு நிமிடம்." என்று தடுத்து நிறுத்திய ரொசாரியோ "நண்பா. என் நிலை அந்த வீடியோவில் வந்ததால் உங்களுக்கு தெரிந்தது அல்லவா? இல்லையெனில் தெரிந்திருக்காது. நீங்களும் இப்போது என்னைப் பார்க்க வந்திருக்க மாட்டீர்கள் அல்லவா?

ஆனால் உங்களால் பாதிக்கப் பட்ட மற்றவர்களின் நிலை உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை அல்லவா? கடந்த வாரம் பேங்க் வாசலில் ஒருவர் பணப்பெட்டியை ஒருவன் திருடிச் சென்று விட்டான் அவர் அங்கேயே மயங்கி விழுந்து இறந்துவிட்டார். அவர் இறந்தது அவனுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். அதேபோல் இதே சாலையில் நடந்துச் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை வண்டியில் வந்த ஒருவன் பிடித்து இழுக்க அந்த பெண் ரோட்டில் தர தரவென இழுத்துச் செல்லப்பட்டு உடல் எல்லாம் காயமடைந்து கழுத்தில் சங்கிலியால் அறுபட்டு சாலையில் கிடந்தாள்.

108 ஆம்புலன்ஸ் வந்து அழைத்துச் சென்றது என்ன ஆனது என்று தெரியவில்லை. இது போன்ற விளைவுகள் பல இருக்கின்றன இவை எல்லாம் நான் வெளிப்பட பார்த்தது.

பேங்க் வாசலில் பணமிழந்தவர் உடனே இதயம் வெடித்து இறந்தார் என்றால் அந்த பணம் அவருக்கு எவ்வளவு தேவையாக இருந்திருக்கும் என்பது புரிகிறதா? நம்மிடம் இல்லாத அல்லது நமக்கு உரிமை அல்லாத ஒன்றின் மேல் நமக்கு ஏன் ஆசை ஏற்பட வேண்டும்?" என்று கேட்ட உடன்.

வந்தவன் யோசனை செய்தபடி பதில் ஏதும் சொல்லாமல் நடந்தான். ரொசாரியோ "நண்பா ஒரு நிமிடம்... உங்கள் பெயர் என்ன?" என்று கேட்க அவன் "சுகுமாரன்..." என்றான்.

உடனே ரொசாரியோ "உங்களால் இனி திருட முடியாது நண்பா... உங்கள் மனம் மாறி விட்டது." என்று சொல்லி புன்னகைத்தான்.

சுகுமாரனும் குழம்பிய மனதுடன் ரொசாரியோவை பார்த்து சிறிய புன்னகை சிந்தி சென்றுவிட்டான். அன்றிலிருந்து ரொசாரியோ தான் சந்திக்கும் நபர்களிடம் தன் பெயரை சுகுமாரன் என்று சொல்ல ஆரம்பித்தான். ஏனோ சுகுமாரன் அவன் மனதில் நல்ல இடம் பிடித்தான்.

அங்கு வசிக்கும் அனைவரிடமும் நன்கு பழகிவிட்டான் ரொசாரியோ துறவியிடம் தினமும் பேசுவான் அவர் மெய்ஞ்ஞான தேடலின் வார்த்தைகள் அவன் மனதிலும் பாதிப்பு ஏற்படுத்திக் கொண்டு இருந்தது.

அவரிடம் சுகுமாரனைப் பற்றி சொன்னான்.

துறவி "சுகுமாரன் உன்னால திருந்தனும்ன்னு விதி. அது தான் அவன் வாழ்க்கை பயணத்தோட ஒரு திருப்பம் உன்னால ஏற்பட்டுருக்கு. நீ இந்த ஊருக்கு வந்ததுக்கும் எதாவது காரணம் இருக்கும்.

வாழ்க்கைல நாம சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் நமக்கும் எதாவது தொடர்பு இருக்கும். ஒருத்தர் நம்ம வாழ்க்கையில வர எதாவது காரணம் இருக்கும்." என்று சொல்ல

ரொசாரியோ அன்று மிகவும் யோசித்தான் சொல்லப் போனால் அன்றுமுதல் யோசித்தான். ஒவ்வொரு நாளும் தன் பிறப்பிற்கான காரணம் தேடி நகர்ந்தான். ஆனால் அதை அறிவது ஒன்றும் அவ்வளவு சுலபம் அல்லவே!

ஒரு வருடத்தில் அவன் போதுமான அளவு பணம் சேர்த்துவிட்டான் அங்கு இருந்த மக்களிடம் நல்லபடியாக பழகிவிட்டான். எல்லா வேலைகளையும் செய்தான் அவன் ஓவியங்கள் எல்லோராலும் ரசிக்கப் பட்டது. முதலில் தான் வரைந்த ஓவியங்களை அவன் விற்க மறுத்தான் பிறகு குருவின் அறிவுரை கிடைத்தது "நீ வரைந்த ஓவியங்கள் வேறொருவர் வீட்டை அல்லது பூசை அறையை அலங்கரித்தால் அது உன் திறமைக்கு பெருமை தானே? திறமையை பெருமை செய்..." என்றவாறு அவனுக்கு கிடைத்த அறிவுரையால் தான் வரைந்தை ஓவியங்களை விற்றான்.

இப்போது கூட சாப்பிட்டுக்கொண்டு இருந்தவன் அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை உணவை வைத்துவிட்டு கை கழுவியவன் வரைபலகையை எடுத்துக் கொண்டு அமர்ந்து வெளியே காணும் கட்டிடத்தை ஒரு சாய்வில் அமர்ந்து பார்த்து வரைந்துக் கொண்டிருந்தான்.

கடைக்காரர் "அதான் பணம் சேர்த்துட்டதா சொன்னியேப்பா?" என்று கேட்க

ரொசாரியோ "அண்ணா... பாஸ்போர்ட் இன்னும் வரவில்லை. வந்ததும் கிளம்பிடலாம்." என்று சொல்லி விட்டு வெளியே வந்தான்.

டூரிஸ்ட் விசாவில் வந்த அவன் ஒரு வருடம் இங்கே பிரவேசிக்க அரசாங்கம் ஒரு முக்கிய காரணம். அவனும் தன் விசா காலம் முடிந்த பிறகு தான் அவன் தனக்கு பாஸ்போர்ட் வழங்க கோரினான். அரசாங்கம் அவனுக்கு பாஸ்போர்ட் வழங்க தாமதமாகி விட்டது.

விசா காலம் முடிந்ததால் இந்திய அரசு அவனை வெளியேற உத்தரவிட்டது. ரொசாரியோ தான் இங்கேயே வாழ விரும்புகிறேன் என்று சொல்லி இந்தியக் குடியுரிமை கோரினான். ஆனால் குடியுரிமை மறுக்கப்பட்டது. அவனை அவன் நாட்டிற்கே அனுப்பிவிட்டனர்.

அவனும் தன் தாய் நாட்டிற்கு திரும்பினான். ஆனால் அவன் நினைவு இந்தியாவிலேயே இருந்தது. அவன் எடுத்து வந்த படங்கள் எல்லாம் ஓவியம் ஆயின...

இப்போது அவன் வரைந்த ஓவியங்களில் உயிரோட்டம் நிரைந்ததை உணர்ந்தான். அனைத்து ஓவியங்களையும் உணர்ந்து அனுபவித்து தீட்டினான்.

அவன் ஓவியங்கள் உலக கலா ரசிகர்களிடம் பொக்கிஷமாக போய் சேர்ந்தது. நிறைய வெகுமதி பெற்றான். உலகின் அனைத்து மூலைகளுக்கும் அவனை இழுத்துச் சென்றது அவனது கலை தாகம்.

அதே போல் அவன் பெயரை எங்கும் பரவச் செய்தது இந்த பிரபஞ்சம். ஆனால் இவை எல்லாம் வெகு சுலபமாக நடந்திட வில்லை. பல இடர்பாடுகளை சந்தித்தான் தகர்த்தான் நகர்ந்தான்.

ஆனால் அவன் இந்திய குடியுரிமை மட்டும் நிறைவேறா கனவாக இருந்தது. அதை நிறைவேற்ற துடித்தான் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்தான். சிவப்பு கம்பல வரவேற்பு அளித்தது இந்திய அரசு.

நேராக மாமல்லபுரம் சென்றவன் பழகியவர்கள் அனைவரையும் சந்தித்தான். அந்த நகரில் ஒரு வீடு விலைக்கு பேசினான். ஆனால் அவன் குருவை மட்டும் பார்க்க முடியவில்லை அவர் அந்த ஊரை விட்டு வெளியேறி விட்டார்.

ஆனால் அவர் செல்லும்போது ஒரு கடிதம் எழுதி அவன் நண்பனிடம் கொடுத்துவிட்டு சென்றார்.

அவன் நண்பன் அவனிடம் "நீ திரும்ப வருவன்னு எனக்கு நம்பிக்கை இல்லடா. ஆனா அவர் சொன்னாரு நீ கண்டிப்பா வருவேன்னு. அதான் இதை பத்திரமா வச்சிருந்தேன்." என்று சொல்லி அவனிடம் கொடுத்தான்.

கடிதத்தில்

"உனக்கு இறைவனின் கொடை உனக்குள் இருக்கும் திறமை. அது இப்போது பண்மடங்கு வளர்த்திருப்பாய் என்று நம்புகிறேன் கல்வியும் திறமையும் ஊட்ட ஊட்ட வளரும் இன்னும் நீ வளருவாய்...

உன் திறமை ஒரு இடத்தில் நிலைக்க வேண்டும் என்று என்னுகிறாயா?

தாய் தந்தை உனக்கு அளித்த உடலையும் பெயரையும் தொலைக்காதே...

இறைவன் ஆசிர்வாதம் உன்னை அடையட்டும்." என்று எழுதி இருந்தார்.

அவன் நண்பன் அவனிடம் "ஒன்னும் புரியல என்னடா சொல்றாரு? இன்னும் நீ நல்லா வரையனும்னு சொல்ல வராரா?" என்று கேட்க

ரொசாரியோ "வாழ்க்கை எளிதில் யாருக்கும் புரிவதில்லை நண்பா... விலை பேசிய வீட்டை வேணாம்னு சொல்லிடு. நான் கிளம்புறேன்." என்று சொல்ல

"உன் சொந்த நாட்டுக்கா?" என்று கேட்ட நண்பனிடம்

"நிலையற்ற உடலுக்கு சொந்த வீடு, சொந்த ஊர், சொந்த நாடு. அர்த்தம் விளங்கவில்லை நண்பா எனக்கு. அர்த்தம் தேடி செல்கிறேன்." என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

"எந்த ஊருக்கு போற?" என்று கேட்க

"சிதம்பரம், தஞ்சாவூர், ராமேஸ்வரம் அங்கிருந்து எங்கு செல்வது என்று எண்ணம் இல்லை." என்று சொல்லி விட்டு தன் வாழ்க்கை தேடலை ஆரம்பித்தான்.

நன்றி,
ராஜசேகரன் போஸ்
 
Top