• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 11

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
684
512
93
Chennai
அத்தியாயம் 11

ஒரு மணி நேரத்தில் ஆராத்யா கண் விழித்த போது உடல் எல்லாம் நடுங்கிக் கொண்டிருக்க, காய்ச்சலும் கொதித்தது.

விஷால் மீண்டும் கேட்ட போதும் "ஃபர்ஸ்ட் அவங்க எழுந்துக்கட்டும்.. அப்புறமா வீட்டுக்கு அனுப்பலாம்!" என்று மட்டும் கூறிய ரகு, அறைக்கு செல்லாமல் அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு இடையே அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தான்.

சிந்தனை முழுதும் இன்றைய தினத்தில் தான்.. காலையில் தெரிந்த மலர்ந்த முகமும் சற்று முன் தன் பின்னே அவள் பயந்து ஒதுங்கி ஒடுங்கி நின்ற விதமும் என ரகுவின் மனதில் கோபத்தையும் ஆற்றாமையையும் விதைத்தது அந்த பரமசிவத்தை தான் எதுவும் செய்யாமல் அனுப்பிவிட்டதில்.

இன்னுமே அவன் அணிந்திருந்த சட்டையை மாற்றியிருக்கவில்லை. ரெஸ்ட் ரூம் சென்றவன் கண்ணாடியில் தனக்கு பின்னே பார்த்து அதில் இருந்த அவளின் ரத்தத்தினை பார்த்து முகம் சிவக்க, தன்னை நிதானப்படுத்தவே மணி கணக்கில் நேரம் தேவைப்பட்டது அவனுக்கு.

'வெளியில் யாரிடமும் விசாரிக்கவோ கேட்கவோ விருப்பம் இல்லை.. அவள் மூலம் மட்டுமே அவள் குடும்பத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்..' என்று நினைத்தவன் பொறுமையை இழுத்து பிடித்து வைத்திருந்தான்.

வந்தவன் யார் எங்கே இருக்கிறான் அவன் மூலம் ஆராத்யாவிற்கு பிரச்சனை என்றால் அடுத்து என்ன செய்வது என்பது வரை அவன் சிந்தனைகள் சுழன்று கொண்டிருக்க,

"சார்! ஆரா முழிச்சுட்டா.. ஆனா பிவேர் அதிகமா இருக்கு.. கை கால் எல்லாம் நடுங்குது தான்.. இன்னும் பயந்துட்டு இருக்கா!" என்று கார்த்திகா வந்து சொல்ல,

"வாங்க!" என்று கூறி அவளோடு உள்ளே சென்றான் ரகு.

"ஆரா! இங்க பாரு டி!" கார்த்திகா கன்னம் தட்டி அழைக்க, கண்களை திறக்க முடியவில்லை அவளுக்கு.

ஆராத்யாவின் நெற்றியில் கைவைத்துப் பார்த்த ரகு, "கூட்டிட்டு வாங்க!" என்று கூறி முன்னே சென்றான்.

"விஷால்! பார்த்துக்கோ.. வந்திடுறேன்!" என்று மட்டும் சொல்லியவன் தர்ஷினிக்கு அழைக்க நினைத்து பின் முடிவை மாற்றி கல்பனாவிற்கு அழைத்து பேசிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய, கார்த்திகாவோடு நடக்க முடியாமல் சிரமமாய் நடந்து வருபவளை கண்ணாடி வழி பார்த்து கைகளை மடக்கி தன்னை நிதானித்து அமர்ந்திருந்தான் ரகு.

"பிரேம்! ஆராத்யா அவங்க பிரண்ட் வீட்டுல தானே இருகாங்க.. அதாவது சார் பக்கத்து வீட்டுல? இல்ல மாறிட்டங்களா?" விஷால் பிரேமிடம் கேட்க,

"ஆமா சார்! அங்க தான் இருக்கா.. ஆரா பிரண்ட்டும் ஒர்க் பண்ணறாங்கனு சொல்லுவா.. அவங்க அம்மாவும் கூட தையல் ஒர்க் பண்றதா சொல்லி இருக்கா.. இப்ப வீட்டுல கொண்டு விட்டாலும் அவ தனியா தான் இருக்கனும்.. என்ன பண்ண போறானு தெரியல.." என்று கவலையாய் பிரேம் கூற,

"விடு டா.. சார் ஏதாச்சும் அர்ரேஞ் பண்ணுவாரா இருக்கும்.. கூட கார்த்தியும் போறா இல்ல.. நாம ஈவ்னிங் போய் பார்த்துட்டு வரலாம்!" என்றான் விக்ரம்.

கேட்டுக் கொண்டு நின்ற விஷால் ரகுவைப் பற்றி தான் நினைத்து நின்றான் புரிந்து கொள்ளவே முடியவில்லை எனும் விதமாய்.

காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது அவ்வபோது கண் விழித்து பார்ப்பதும் கண்களை மூடுவதுமாய் ஆராத்யா இருக்க, முன்னே இருந்த கண்ணாடி வழி அவளைப் பார்த்துக் கொண்டு தான் வந்தான் ரகுவும்.

மருத்துவமனைக்கு அழைத்து வந்தவன், நர்ஸ் வந்து ஆராத்யா பெயரை அழைக்கவும் ரகு வெளியே இருந்து கொள்வான் என கார்த்திகா நினைக்க, ஆராத்யாவை அழைத்த நொடி தானுமே எழுந்து கொண்டான் அவர்களோடு.

மருத்துவரிடமும் அவனே பேச கார்த்திகாவும் கொஞ்சம் ஆச்சர்யமாய் தான் பார்த்து நின்றாள் ரகுவை.

இவை எதுவுமே ரகுவின் கவனத்தில் இல்லை. "இன்ஜெக்ஷன் இப்போ வேண்டாம்னு சொல்லி இருக்காங்க.. இந்த டேப்லெட்.." என கார்த்திகாவிடம் இழுத்த ரகு,

"இதை போட சொல்லுங்க.." என்று கூறி தண்ணீரும் தர,

"விட்டா இவரே போட்டு விட்ருப்பாப்ல போலயே! இவரை நோட் பண்ணணுமோ?" என்று நினைத்துக் கொண்டது கார்த்திகாவின் மனம்.

"இப்ப என்ன பண்றது தான் சார்? ஆராவை வீட்டுல ட்ரோப் பண்ணிடலாமா?" கார்த்திகா ஆராத்யா அருகே அவளை தாங்கிப் பிடித்தபடி அமர்ந்திருந்து கேட்க, அவள் கைகளைப் பற்றிக் கொண்டு கண் கலங்க பார்த்தாள் ஆராத்யா.

இன்னும் பயம் முழுதாய் அகலவில்லை.. வீட்டிற்கு சென்று தனியாய் தான் மட்டும்.. நினைக்கவே இன்னும் நடுக்கம் பிறந்தது அவளுக்கு.

புரிந்தது போல "நான் கூட இருக்கேன் ஆரா! அப்படி எல்லாம் தனியா விட மாட்டேன்!" கார்த்திகா சொல்ல, சிரிக்க முயல மட்டுமே முடிந்ததை ரகுவும் பார்த்துக் கொண்டு தான் நின்றான்.

"நடக்க முடியும் தானே ஆரா?" என்று ரகு கேட்க, இப்பொழுது தெளிவாய் அவன் அழைப்பைக் கண்டு கண் விரித்தாள் கார்த்திகா.

"ஆராவா? என்ன இவரே பேர் வச்சதாட்டம் கூப்பிடுறாரு!" என்று மயக்கம் வராத குறையாய் கார்த்திகா விழிக்க,

"உங்ககிட்ட தான் சொல்றேன் கார்த்திகா கேட்குதா?" என ரகு சத்தமாய் கேட்ட பின் தான்,

"என்ன சார்? என்ன சொன்னிங்க?" என்று விழித்தாள் அவள்.

"வர்றேன்னு சொல்றாங்க.. பார்த்து கூட்டிட்டு வாங்கனு சொன்னேன்.. உங்களுக்கு கூட வர்றதுல எந்த ப்ரோப்லேமும் இல்லையே?" ரகு கேட்க,

"சார்! ஆரா என் பிரண்ட்.. நான் செய்யாம எப்படி சார்?" என்றவள்,

"வா ஆரா!" என்று கைபிடித்து எழுப்பி காருக்கு அழைத்து வந்தாள்.

காரில் ஏறியவள் "சார்! நான் வர்றதனால உங்களுக்கு ஒன்னும் ப்ரோப்லேம்...." என்று கூறி முடிப்பதற்குள்,

"வாட்?" என்று ரகு திரும்பிவிட,

"இல்ல இல்ல.. எங்களைனு பொதுவா சொன்னேன்.." என்று ஆராத்யாவையும் இழுத்துக் கொள்ள, எதுவும் கூறாமல் காரை கிளப்பினான் ரகு.

மருந்தின் தாக்கத்தில் கார்த்திகா தோள்களில் ஆராத்யா தூங்கிவிட, அதையும் கண்டவன் அத்தனை மெதுவாய் இயக்கினான் காரை.

'நடந்து போயிரலாம் போலயே! கார்த்தி! ராம் சார் சரி இல்ல.. நோட் பண்ணிக்கோ.. புடிக்குறேன்.. சீக்கிரமே புடிக்குறேன்!' மனதுக்குள் கார்த்திகா சொல்லிக் கொள்ள, தன் வீட்டு கேட்டிற்கு முன் காரை நிறுத்தினான் ரகு.

ஆராவை கார்த்திகா எழுப்ப, மீண்டும் ரகு கல்பனாவிற்கு கால் செய்த போது கல்பனாவோடு தர்ஷினி நந்தாவும் வெளியே வந்தனர்.

"என்ன ரகு என்னாச்சு?" என்று பதட்டமாய் இவர்கள் வர, ஆராத்யாவும் கண் விழித்திருக்க, கண்ணால் சைகை காட்ட,

"ஆரா!" என்று அருகில் சென்று மற்றொரு பக்கமாய் நின்றுவிட்டாள் தர்ஷினி.

"இங்க வா.. வீட்டுக்கு வா ஆரா.. நான் பாத்துக்கறேன்!" என்று தர்ஷினி அழைக்க, சங்கடமாய் நெளிந்தாள் ஆராத்யா.

"அவளுக்கு கம்ஃபோர்ட்டா இருக்கனும் தர்ஷி இப்ப.. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.." என்ற கல்பனா,

"சாவி குடு ஆரா நான் வீட்டை திறக்குறேன்!" என்று கூறவும் தன் வீட்டு சாவியை ஆராத்யா எடுத்து கொடுக்க, உள்ளே சென்றனர் நால்வரும்.

'என்ன டா நடக்குது இங்க?' என்று விழித்தபடி தான் உள்ளே சென்றாள் கார்த்திகா. இன்னும் உடன் செல்லும் தர்ஷினி, கல்பனா இருவரும் யார் என தெரியவில்லை அவளுக்கு.

ரகு காரில் சாய்ந்து பார்திருந்தவனை உள்ளே செல்வதற்கு ஒரு நொடி முன் நின்று ஆராத்யா திரும்பி பார்க்க, சிநேகமாய் ஒரு புன்னகை கொடுத்தான் ரகு.

அவளும் மெல்ல புன்னகைத்து தலை அசைத்து உள்ளே சென்றுவிட, ஒரு பெருமூச்சோடு நந்தா அழைத்தவுடன் தன் வீட்டிற்கு வந்தான் ரகு.

"பேசாம ஆராவை நம்மோட வச்சுக்கலாம் அண்ணி!" என்று தர்ஷினி கூறிய போது குழப்பமாய் பார்த்த கல்பனாவிற்கு, ரகுவின் அந்த ரகசிய புன்னகையும் நந்தாவின் கிண்டல் பார்வையும் என எதையோ உணர்த்த,

"நான் நினைக்குறது சரி தானா?" என்று தர்ஷினியிடம் வியப்பு குறையாமல் கல்பனா கேட்க,

"நான் சொன்னேன்லங்க.. என் அண்ணா அகி மாதிரி அண்ணி டியூப்லைட் இல்ல.. ஹிண்டு குடுத்தா புடிச்சிப்பாங்கனு சொன்னேன்ல?" என்று தர்ஷினியும் அவள் நினைப்பை உறுதிபடுத்தினாள்.

"மிஸ்டர் நார்! வாட் இஸ் திஸ்?" என்று கல்பனா தன் பக்க அதிர்ச்சியையும் சந்தோசத்தையும் காட்ட,

"அண்ணி!" என்று முறைக்கவும் முடியாமல் புன்னகைக்கவும் முடியாமல் பார்த்தவன்,

"நான் கிளம்புறேன்!" என்று கூறி கிளம்பி இருந்தான் அலுவலகத்துக்கு.

"தர்ஷி! உன் ப்ரோ வெட்கம் எல்லாம் படுறாரு பா.. நைட்டுக்கு வரட்டும்.." என்று சொல்லி முழு கதையை கேட்க, தர்ஷினியும் தனக்கு தெரிந்தவற்றை கூறி இருந்தாள் கல்பனாவிற்கு.

இப்படி சந்தோசமாய் ஆரம்பித்த நாளின் அடுத்த மூன்று நான்கு மணி நேரத்தில் ரகுவோடு சோர்ந்த முகமாய் வந்து சேர்ந்த ஆராத்யாவை பார்த்து தாளவே முடியவில்லை தர்ஷினிக்கு.

கல்பனாவுமே அத்தனை வருத்தமாய் தான் இருந்தாள். இன்னும் ரகு முழுதாய் என்ன பிரச்சனை என்று சொல்லி இருக்கவில்லை. இப்பொழுது கேட்கும் சூழலும் இல்லை என்பதை விட ஆராத்யா நிம்மதி முக்கியம் என அமைதியாய் இருந்தனர் மற்றவர்கள்.

"என்னால உங்களுக்கு எல்லாம் கஷ்டம் இல்ல?" என்று ஆராத்யா அத்தனை மெல்லிய குரலில் கேட்க,

"ப்ச்! நீ வேற! எனக்கு பிரியாணி வேணும்.. சண்டே செஞ்சு தர்றதா சொல்லிட்டு இப்படி படுத்துட்டியேன்னு தான் நானெல்லாம் கவலைல இருக்கேன் தெரியுமா?" என்ற தர்ஷினி ஆராத்யாவை மீட்கவே பேசிக் கொண்டிருக்க, கல்பனாவும் தன் வீட்டில் இருந்து கஷாயம் செய்து கொண்டு வந்து கொடுத்து அருகில் இருந்தாள்.

கார்த்திகாவிற்கு இருவரையும் ஆராத்யா அறிமுகம் செய்து வைக்க, "எது? இவங்க ராம் சார் ரிலீட்டிவ்ஸ்ஸா?" மனதுக்குள் சொல்வதாய் நினைத்து சத்தமாய் சொல்லி இருந்த கார்த்திகா அதிர்ந்து எழுந்தும் நின்றுவிட,

"எதுக்கு இவ்வளவு ஷாக்? ராம் சார்க்கு அவ்வளவு பயமா?" என்றாள் கல்பனா.

"சாரி மேடம்.. அப்படியெல்லாம் இல்ல.." என்று சமாளித்து அமர்ந்த கார்த்திகாவிற்கு மண்டையே வெடித்துவிடும் போல ஆனது அங்கே நடப்பவற்றை பார்த்து.

ஒரு மணி நேரம் சென்று மதியம் மணி ஒன்றை தொட இருக்க, "உங்களுக்கு சாப்பிட என்ன வேணும்?" என்று கார்த்திகாவிடம் கல்பனா கேட்க,

"இல்ல பரவாயில்ல மேடம்.." என்று அவள் சொல்ல,

"ரெண்டு பேருக்கும் எதாவது எடுத்துட்டு வாங்க அண்ணி!" என்றாள் தர்ஷினி.

"நீ இன்னும் சாப்பிடலையே! நீயும் சாப்பிடு கொண்டு வர்றேன்!" என்று சொல்ல,

"அப்ப அவங்களை சாப்பிட சொல்லுங்க அண்ணி நான் இங்க சாப்பிடுக்குறேன்னும் சொல்லிடுங்க!" என்று கணவனுக்கு தர்ஷினி சொல்ல,

"ரொம்ப பாசம் தான்.. சொல்லிடுறேன்!" என்று சொல்லி சென்றாள் கல்பனா.

கல்பனாவிடம் ஆராத்யாவின் உடல்நிலை பற்றி விசாரித்து தெரிந்து கொண்ட ரகு இரண்டு மணிக்கு பின் சட்டையை மாற்றிக் கொண்டு கிளம்பி அலுவலகம் சென்றான்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
190
63
Coimbatore
பின்ன படிக்கர எங்களுக்கே ஷாக்...
பாக்குற உங்களுக்கு வராதா
🤩🤩🤩🤩🤩
கார்த்திகா.....
கல்பனாக்கும் தெரிந்து விட்டது....
அண்ணனுக்கும்
அம்மாக்கும் தான் பாக்கி....
🤩🤩🤩🤩
 
  • Haha
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
684
512
93
Chennai
பின்ன படிக்கர எங்களுக்கே ஷாக்...
பாக்குற உங்களுக்கு வராதா
🤩🤩🤩🤩🤩
கார்த்திகா.....
கல்பனாக்கும் தெரிந்து விட்டது....
அண்ணனுக்கும்
அம்மாக்கும் தான் பாக்கி....
🤩🤩🤩🤩
🤣🤣🤣sewkiram avangalukum theriyatum