அத்தியாயம் 12
மகிமா பேசிய வார்த்தைகள் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது கனகவள்ளிக்கு.
இப்படிப்பட்ட ஒரு எண்ணம் தங்களுக்குள் ஏன் இத்தனை நாட்களும் வரவில்லை என்று தோன்ற, அடுத்த நொடியே இப்பொழுது வருகிறது தானே என்ன செய்வாய்? என்றும் தோன்ற அதே சிந்தனையில் தான் அடுத்த நாள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் வள்ளி.
சிவா மாடிப்படிகளில் இறங்கி வந்தவனுக்கு அந்த வித்தியாசம் நன்றாய் தெரிந்தது. கூடத்தில் எப்பொழுதும் பாடும் சஷ்டிகவசம் ஒலிக்கவில்லை. வாசலில் கோலத்தையும் காணவில்லை.
"ம்மா!" என்று சமையலறையில் எட்டிப் பார்க்க,
"வந்துட்டியா? இன்னும் சமையல் முடியலையே!" என்று வேகமானர் சமையலில்.
"வேகமா பண்றேன்னு கையில சுட்டுக்காதிங்க. என்னாச்சு உடம்புக்கு முடியலையா?" என்று சிவா கேட்க,
"அதெல்லாம் இல்லையே! என்னவோ நியாபகத்துல மெதுவா நின்னுட்டேன்!" என்றவர்,
"சிவா! நீ பண்ண மாட்ட. இருந்தாலும் சொல்றேன். இனி இப்படி மகிகிட்ட கோவமா எல்லாம் பேசாத! அதுக்காக பேசாமலும் இருக்காத. சின்ன பொண்ணு. ஏதோ தோணுனதை மனசுல வச்சுக்காம சொல்லிட்டா. நீ எப்பவும் போல இரு. பாவம் டா. மாலா வேற என்ன நினைச்சுட்டு இருக்காளோ!" என்று சொல்லியதே அவர் கவனமெல்லாம் எங்கே இருக்கிறது என சொல்லாமல் சொல்லியது.
"என்ன புரியுது தான? இன்னும் கோவமா தான் இருக்கியா?" என்று கேட்க,
"ம்மா! கோவமெல்லாம் இல்லம்மா. நம்ம அம்மு தானேனு கொஞ்சம் பேசிட்டேன் அவ்வளவு தான். அதுவும் நீங்க சொன்ன மாதிரி யார் மேலயோ இருந்த கோவம் தான். ப்ச்! சாரி! ஆனா அம்மு பாவம் தான். மாமா ஏன் இப்படி பன்றாரு? வேண்டாம்னா விடலாம் தான? இவ்வளவு ரூல்ஸ் அதுவும் மகிக்கு. அவளால ஒரு இடத்துல அஞ்சு நிமிஷம் பேசாம நிக்க முடியுமா?" என்று கேட்டவனை ஆதங்கமா தவிப்பா என பிரிக்க முடியா பார்வை பார்த்து நின்றார் அன்னை.
"அவ ஸ்கூல் படிக்கும் போது கூட எதுவும் தெரியல. காலேஜ்க்கு சென்னை போய்ட்டா. இப்ப ஆபீஸ் ஜாயின் பண்ண மூணு மாசத்துல அவ்வளவு அட்டகாசம். எங்கேயாவது சவுண்ட் அதிகமா கேட்குதேன்னு திரும்பி பார்த்தா அங்க மகி தான் முதல் ஆளா தெரியுவா!" என்றான் விடாமல்.
"அவளுக்கு போய் அவ்வளவு ரூல்ஸ் போட்டிருக்கான். அதான் அவளும் என்னவெல்லாமோ யோசிச்சு தப்பு தப்பா மைண்ட்ல நினச்சுட்டு இருக்கா!" என்று சொல்ல,
'உனக்கு ஏன் எதுவும் தோணல? ' என தோன்றியதை கேட்க முடியவில்லை அன்னையால்.
"மாலா அண்ணேங்கிட்ட பேசுறதா சொன்னா. இனிமேல் தான் போன் பண்ணுவா. மறுபடியும் சொல்றேன்.. நீ மகிகிட்ட..." என்று சொல்லும் பொழுதே,
"ம்மா! நான் சாரி கேட்க கால் கூட பண்ணேன். கால் போகல. ஆபிஸ் போய்ட்டு பேசிடுறேன்.. சரியா! லஞ்ச் கட்டுங்க!" என்று சொல்லி வெளியில் வந்து அமர்ந்து கொண்டான்.
அலுவலகம் வந்து அவளை தேடி இருக்க அன்று முழுதுமே அவள் வந்தபாடில்லை.
நாளை ஞாயிறு வேறு. விடுமுறை. அவளைப் பார்த்து அவள் இலகுவாய் இவனிடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டால் போதும் என்பதை போல இருந்தது சிவாவிற்கு.
பேசும் பொழுது தான் சொல்வது சரி தான் என்று நினைத்து பேசி இருந்தான். அவள் பக்க நியாயம் ஒன்று அவனுக்கு புரியும் வரை மகி அப்படி பேசியிருக்க என்ன நினைத்திருக்கவே கூடாது என்று தான் வருத்தமே!
அவள் பேசிய பின் தான் அவளின் எண்ணங்களுக்கான அர்த்தம் புரியா விட்டாலும் அவளின் குழப்பமும் பயமும் நன்றாய் உணர முடிந்தது.
"அத்தைகிட்ட பேசினீங்களா? என்ன சொன்னாங்க ம்மா?" என மாலை வந்ததும் சிவா கேட்க,
"நேத்து நைட்டு மாலா ரொம்ப பேசிட்டா போல சிவா. அண்ணே எதுவுமே சொல்லலையாம். ஆனா யோசிக்குற மாதிரி தான் தெரியுதுன்னு சொல்றா!" என்றார்.
"மகி எதுவும் பேசலையா?"
"அம்மு பேசவே இல்லையாம். அந்த மாப்பிள்ளைகாரன் வந்துட்டு போனதுல இருந்தே அவ சரி இல்ல. நான் தான் கவனிக்காம விட்டுட்டேன்னு இவ புலம்புறா. இன்னைக்கு ஆபீஸ் வரலையாமே! இஷ்டம் இல்லைனு சொல்லிட்டு ரூம்லயே இருந்திருக்கா!" என்றவர்,
"ரொம்ப யோசிக்குறா. என்னென்னவோ பேசுறா. பயமா இருக்கு அண்ணினு சொல்றா. நான் அவளுக்கு என்னனு ஆறுதல் சொல்ல." என்று கேட்க அமைதியாய் கேட்டான் சிவா.
"எனக்கும் உன் மேல கொஞ்சம் கோவம் தான் சிவா!" அன்னை சொல்ல, கெஞ்சலாய் பார்த்தான் அவன்.
"நீ கொஞ்சம் அமைதியா இருந்திருக்கனும். ஏற்கனவே நொந்து போய் இருந்த புள்ள உன்னால தான் இப்போ ரொம்ப கவலைப்பட்டுட்டு இருப்பா!"
"ம்மா! நான் வேணும்னு பேசலம்மா. என்ன சொல்ல?" என்றவனுக்கு,
'ஏற்கனவே ஒருத்தி வேண்டாம் என்றுவிட்டாள்.. இவள் ஒருவனை வேண்டாம் என்று என்னை போனால் போகிறது என்பதை போல தேர்வு செய்தாள்!' என்ற வார்த்தை தொண்டைக்குள் நின்றது.
"நாளைக்கு சண்டே தானே? அம்முவை கூட்டிட்டு அத்தையை வெளில வர சொல்லலாமில்ல?" சிவா மெதுவாய் கேட்க,
"நாளைக்கு என் பெரியப்பா பையனோட பொண்ணுக்கு வளைகாப்பு இருக்கு. அங்க போகணும்" என்றார் வள்ளி.
"அப்ப தான் அத்தையும் வருமே!" சிவா சொல்ல,
"என் அண்ணனும் வருவார். அப்பறம் எங்க பேச?"
"அம்மு வருவாளா?"
"வருவானு தான் நினைக்குறேன். அவளுக்கு அக்கா முறை இல்ல? ஆனா அவ மனசு சரி இல்லாம இருக்குதே! என்ன பன்றாளோ!" என்றார் கவலையாய்.
"நம்ம அப்பா பாட்டி வர்றாங்களா?" சிவா கேட்க,
"அவங்க எங்க வர போறாங்க? நீ என்னை நாளைக்கு கொண்டு விட்டுடு சிவா. வரும் போது ஆட்டோ போட்டுக்குறேன்!" என்று சொல்லி இருந்தார்.
அடுத்த நாள் மாலா, வினோதனோடு மகிமாவும் மண்டபதிற்கு வந்திருக்க, வனிதா தன் கணவனோடு விழாவிற்கு வந்திருந்தாள்.
"நிஜமாவே உள்ள வர்றியா?" வள்ளி மகனைக் கேட்க, முறைத்தான் அவன்.
இப்படி நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் வர விரும்புபவன் இல்லை. அதுவும் வளைகாப்பு தானே என்று அவனை வள்ளியும் வருகிறாயா என்று கேட்கவில்லை.
"ட்ராப் பண்ணிட்டு கிளம்பு சிவா!" என்று வீட்டில் இருந்து கிளம்பும் சமயம் வள்ளி கேட்க,
"ஒரு மணி நேரம் ஆகுமா? முடியவும் ஆட்டோ போட்டு கிடைக்கலைனா உங்களுக்கு கஷ்டம். கொஞ்ச நேரம் தானே? நானும் வர்றேன்!" என்றவன் சொன்னது போலவே அன்னையுடன் மண்டபதிற்குள் நுழைய, அன்னையே அதிசயமாய் தான் பார்த்தார்.
அந்த பெண்ணிற்கு வளையல் அணிவித்து தெரிந்தவர்களிடம் பேசி என மேடையில் நின்ற அன்னையை பார்த்துவிட்டு சுற்றிலும் பார்க்க, அவனுக்கு முன்பே அவனைப் பார்த்துவிட்டு அவன் தன்னை பார்க்க காத்திருந்த மாலா வேகமாய் கையசைத்தார் அருகிலிருந்த வினோதன் அறியாமல்.
"அத்தை!" என்று புன்னகைத்து கையசைத்தவனும் அங்குமிங்குமாய் பார்க்க, வினோதன், மாலா, வனிதாவின் கணவன் மட்டுமே இருந்தனர்.
தலையசைத்து முன்னே திரும்பிக் கொண்டவன் அருகில் அன்னை வந்து அமர்ந்தவர்,
"மாலா வந்தாளா தெரியலயே!" என்று சொல்லி திரும்ப அவருமே கண்டு கொண்டார் மாலாவின் குடும்பத்தை.
வள்ளி மேடைக்கு சென்று வளையல் அணிவித்து சொந்தங்களுடன் பேசும் வரை சாதாரணம் போல என்றாலும் தங்கையை பார்க்க மறக்கவில்லை வினோதன்.
இப்பொழுது தங்கை தங்கள் பக்கம் திரும்பவும் முகத்தை திருப்பிக் கொண்டார்.
"எல்லாரும் தான் வந்திருக்காங்க போல!" என்று சொல்லி முன்னே நிகழ்ச்சியைப் பார்க்க,
"வனி வரலை போலம்மா!" என்றான் சிவா.
"அப்ப மகி பக்கத்துல இருக்குறது யாராம் டா? அதுக்குள்ள அவ முகம் மறந்து போச்சா உனக்கு?" என்று அன்னை சொல்லி சிரிப்பது காதில் கேட்டாலும் அன்னையின் பாதி வார்த்தைகளில் மீண்டுமாய் அவர்களை திரும்பி பார்த்திருந்தான் சிவா.
மகிமாவும் இவன் திரும்பும் நேரம் பார்த்தவள் பின் முறைத்து முகத்தை திருப்பிக் கொள்ள புன்னகை தான் வந்தது சிவாவிற்கு.
"மாமா!" என்று கையசைத்த வனிதா கணவனிடமும் சிவாவைக் காட்டி,
"எப்படி இருக்கீங்க?" என சைகையில் கேட்க, அதற்கும் தலையசைத்தவன் அவள் கணவனிடமும் புன்னகைத்து மீண்டுமாய் மகிமாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பினான்.
"மகி தான் மெலிஞ்ச மாதிரி தெரியுறா!" அன்னை சொல்ல,
"எதே! ஒரு நாள்லயா? இதெல்லாம் ஓவர் ம்மா!" என்று சிரித்தவனை முறைத்தவர்,
"சாப்பிட போறேன். நீ?"
"ம்ம் நானும் தான்!" என்றவனும் எழுந்து கொண்டான்.
"மழை கீழேருந்து மேலாக்க வர போகுது இன்னைக்கு!" என மகனை கிண்டல் செய்து சாப்பிட வர, மாலா அதை கண்டவர்,
"வனி! அவரை சாப்பிட கூட்டிட்டு போ! மகி நீயும் கூட போ. நீங்க வந்ததும் நானும் அப்பாவும் போறோம்!" என்று அனுப்பி வைத்தார்.
"மகி!" சாப்பிட கை கழுவிவிட்டு திரும்பும் இடத்தில் சிவா அழைக்க, அவனை முறைத்துவிட்டு முகத்தை திருப்பியவளைக் கண்டு அவன் புன்னகைக்க,
"அம்மு!" என கண்டிப்புடன் அழைத்த வனிதா,
"எப்படி இருக்கீங்க அத்தான்?" என சிவாவிடம் கேட்க,
"ஃபைன் வனி! நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?" என்றான்.
"ரொம்ப பன்றாளா இவ?" வனிதா கேள்விக்கு,
"இல்ல வனி.. நான் தான் பண்ணிட்டேன்.." என்றவன் அடுத்து பேசும் முன் வனிதா கணவன் அழைத்திருந்தான் தூரத்தில் இருந்து தன் உறவினர் ஒருவருடன் நின்றபடி.
"மகி நீ பேசிட்டு வா.. மாமா ஒரு நிமிஷம்!" என்று சொல்லி அவள் நகர,
"ஏன் ஆபீஸ் வர்ல?" என்றான் சிவா மகிமாவிடம்.
"மகி உன்கிட்ட தான்"
"வர்ல!"
"அதான் ஏன்னு கேட்டேன்!"
"ஏன் எப்பவும் உங்ககிட்ட சொல்லிட்டு தான் லீவ் போடணுமா?"
"அதுக்கில்ல.. கார்த்தி ஒரு தௌஸண்ட் குடுத்தான்...." என்று இழுக்க,
"அது என் காசு. நீங்க ஏன் வாங்கினீங்க?"
"நீ தான தண்டோரா போட்டது என் மாமா என் மாமானு? வட்டிக்கு மேல வட்டி போடுறியாம். குடுத்து முடியலை டா இதை நான் குடுத்தேன்னு சொல்லி குடுனு குடுத்தான். நீ வேற ரிசைன் பண்ற பிளான்ல இருக்குற. அதான் சேஃபா நான் வாங்கி வச்சேன்!"
"யார் சொன்னது நான் ரிசைன் பண்றேன்னு?"
"நான் தான். நீ தான் என் மேல கோவமா இருக்கியே!"
"அதுக்காக ஆபீஸ் வர மாட்டேனா? அது என்ன உங்க ஆபிஸா?"
"அப்ப ஆபீஸ் வர்ற?"
"சொல்ல மாட்டேன்!" என்றவள் கோபம் சிறுபிள்ளைத்தனம் தான்.
"சாரி மகி! நான் பேசின மீனிங் வேற. உன்னோட அண்டர்ஸ்டாண்டிங் வேற! ஆனாலும் நீ ஹர்ட் ஆயிட்ட தான? அதுக்காக தான் சாரி" என்றான் நீளமாய்.
"போங்க மாமா! சும்மா சொல்லணும்னு சொல்றிங்க. நான் அப்படிதான்தான்னு எனக்கே தெரியும்!" என்றவளை கனிவோடு கண்டான்.
தொடரும்..