• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 13

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
684
512
93
Chennai
அத்தியாயம் 13

"இங்க என்ன பண்றீங்க?" என்று கேட்ட ரகு காரையும் நிறுத்தி இருக்க, மூவரின் சலசலப்பும் அப்போது தான் அடங்கியது.

கையின் காயத்திற்கு கட்டு போடப்பட்டு இருக்க, அத்தோடு அவள் வண்டியையும் பிடித்தபடி நின்றதை பார்த்தவன் தர்ஷினி பக்கம் திரும்ப,

"என்ன ஆரா! இங்க தான ரகு நிக்குறான்.. நான் லீவ் சார்.. வரலைன்னு சொல்லு.. நேத்து நீ எப்படி இருந்தன்னு அவனுக்கு மட்டும் தெரியாதா என்ன? ஏன் இப்ப விழுந்தடிச்சு கிளம்புற?" தம்பி நினைத்ததை தர்ஷினி பேச,

"அய்யோ தர்ஷ்! மூச்!" என்று கோபம் போல சொல்லி வாயில் விரல் வைத்து வேறு ஆராத்யா காட்ட, ஒற்றை புருவத்தை உயர்த்தி அதையும் ரசனையாய் பார்த்து வைத்தான் ரகு.

"நீங்க கிளம்புங்க சார்!" என்றாள் மீண்டுமாய் ரகுவிடம்.

"இட்ஸ் ஓகே! லீவ் எடுத்துக்கோங்க.." பெருந்தன்மையாய் ரகு சொல்ல,

"சார்! நான் நல்லா தான் இருக்கேன்.. வீட்டுல இருந்தா தான் சிக் ஆகிடுவேன் போல.. தர்ஷ் பேசியே என்னை காலி பண்ணிடுவாங்க!" என்று இலகுவாய் அவள் பேச,

"ஆரா!" என்று தர்ஷினி பாவமாய் அழைக்க,

"நீயா பேசியது? என் அன்பே... அதானே தர்ஷி?" என்றாள் கல்பனா பின்நின்று.

"பார்த்தீங்க இல்ல?" என்று வேறு ரகுவிடமே கம்பளைண்ட் செய்தது ஆராத்யா.

இத்தனை சாதாரணப் பேச்சுக்கள் எல்லாம் இருவருக்கும் இடையே இத்தனை எளிதில் நடக்கும் என நினைத்தும் பார்த்திராத ரகுவிற்கு அனைத்தும் தர்ஷினியால் தர்ஷினிக்காக என்று புரியாமலும் இல்லை.

"தென் ஓகே!" என்றவன் காரை ஸ்டார்ட் செய்ய,

"எப்பாடி எப்பா! உலக மகா நடிப்பு டா சாமி!" என்ற குரல் கல்பனாவுடையது.

ஆராத்யாவும் வண்டியை ஸ்டார்ட் செய்ய, "ஒரு நிமிஷம் ரகு!" என்றாள் தர்ஷினி.

"சொல்லு தர்ஷி!" என்றவன் அணிந்திருந்த கண்ணாடி வழி பார்வை அனைத்தும் ஆராத்யாவிடம்.

"இப்ப நீ என்னை பார்த்து தான் கேட்குற இல்ல?" என்று தர்ஷினி கேட்க, உடனே அதை கழற்றியவன்,

"சொல்லு!" என்றான் பல்லைக் கடித்து.

"டென்ஷன் ஆகாதீங்க எம்டி சார்! உங்க ஒர்க்கர் வண்டி ஸ்டார்ட் ஆகலை.. நீங்க பெர்மிஸ்ஸன் குடுத்தும் அவங்க லீவ் எடுக்கலை.. அப்ப நீங்களே அழைச்சுட்டு போறது தானே மரியாதை? அதை தான் உங்க சிஸ்டர் சொல்ல வந்தாங்க.. இல்ல தர்ஷி?" என்றாள் கல்பனா.

"எப்படி அண்ணி?" தர்ஷினி ஆச்சர்யமாய் கேட்க,

"ரகு மாதிரி ஒருத்தருக்கு சிஸ்டரா பொறந்த நீங்க என்ன நினைப்பிங்கன்னு உங்க வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்த இந்த பச்ச மண்ணுக்கு தெரியாம போகுமா?" என்று கல்பனாவும் தர்ஷினியும் பேசிக் கொண்டிருக்க,

குடும்பத்திற்குள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று விட்டு வண்டியை செல்ஃப் ஸ்டார்ட் செய்து பின்னால் உதை உதை என உதைத்து வண்டியை கிளப்ப முயற்சித்துக் கொண்டிருந்த ஆராத்யா கல்பனா தன்னையும் அழைத்து செல்ல ரகுவிடம் சொல்லியதில் அதிர்ந்து நின்றவள்,

"அச்சோ! நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்களே!" என்று விட்டு,

"நீங்க கிளம்புங்க சார்! நான் ஆட்டோ புடிச்சு வந்துடுறேன்.." என்றாள் மீண்டும் ரகுவிடம்.

"அதெப்படி போவாரு?" கல்பனாவும் விடாமல் சொல்ல,

"ஷ்ஷ்ஷ்!" என்று மீண்டும் ஆராத்யா சொல்ல, உதடுகளை மடித்து புன்னகையை அடக்கி இருந்தான் ரகு.

இப்போதைக்கு அண்ணியோடு சகோதரியுமே ஆராத்யாவை விட்டு வைக்க போவதில்லை என்று உணர்ந்தவன்,

"கெட் இன்!" என்று கூற,

"இதை.. இதை.. இதை தான் எதிர்பார்த்தேன்!" கல்பனா. அந்த இடத்தில் சுத்தமாய் இருவரையும் அடக்கும் வழி தெரியாமல் அவர்களை பார்க்கவும் முடியாமல் கிளம்பினால் போதும் என்பதை போல ஆனது ரகுவிற்கு.

எத்தனை தான் அவனிடம் உதவி கேட்டு நிற்பது? நேற்று முழுதுமே தன்னால் எத்தனை கஷ்டம்? என்று ஆராத்யா நினைத்து அவள் கல்பனாவிடம் வேண்டாம் என்று பார்வையால் மிரட்டி,

"சார்!" என அப்போதுமே வேண்டாம் என்று கெஞ்சலாய் பார்த்து, தயங்கி என அவள் நிற்க, இதற்குமேல் நிற்பது சரி இல்லை என உணர்ந்தவன்,

"நீங்க ஆட்டோ இனி புக் பண்ணி அது வந்து நீங்க ஆபீஸ் எப்ப வர்றது? ஆபீஸ் டைமிங் நியாபகம் இருக்குல்ல?" என்று கேட்டவன் குரலில் தடதடவென கைப்பை, மொபைல் என வண்டியில் இருந்து எடுத்துக் கொண்டு முன் பக்கமாய் ஏறி அமர்ந்து கொண்டாள் அவன் கோபத்திற்கு பயந்து.

"அடப்பாவி! எப்படி பிக்கப் பன்றான் பாரேன்!" என்று தர்ஷினியே வியந்து பார்க்க, திரும்பியும் பாராமல் கிளம்பிவிட்டான் ரகு.

கார் தன் தெருவை கடந்து நெடுஞ்சாலையில் மற்ற வாகனங்களோடு கலந்து நகர்ந்து வர, அமைதியாய் வெளிப்பக்கம் திரும்பி அமர்ந்திருந்தாள் ஆராத்யா.

சில நிமிடங்களுக்கு பின் ரகுவே பேச்சை ஆரம்பித்தான்.

"ரொம்ப மெச்சூர்டுனு நாம நினைக்குற எல்லாரும் அப்படி இல்லை போல!" என்ற ரகு குரலில் ஆராத்யா திரும்பி அவனைப் பார்க்க, அவன் கவனம் சாலையில்.

ப்ளூடூத் காதில் இருக்க, அதில் தான் பேசுகிறான் என்று நினைத்து திரும்பிக் கொண்டாள் மீண்டும். தன்னிடம் பேச என்ன இருக்கிறது என்பதை போன்ற ஒரு முகபாவத்தில் அவள் திரும்பிக் கொள்ள,

"சுத்தம்! இப்படி இருந்தா நான் எப்படி பேசுறது.. எப்ப சொல்றது...!" என்று உள்ளுக்குள் கதறியவன் முகம் மட்டும் எந்த மாறுதலையும் காட்டிடவில்லை.

"மிஸ் ஆராத்யா! உங்ககிட்ட தான் நான் பேசுறேன்.. நாம ரெண்டு பேர் தான் இங்க இருக்கோம்!" தெளிவாய் ரகு கூற,

"சாரி சார்! நீங்க காதுல... ப்ளூடூத்..." என்றவள் கோபமாய் பேசுகிறானோ.. என்ன பேசினான் என்றெல்லாம் யோசித்து,

"என்ன சொன்னிங்க சார்?" என்றும் கேட்டுவிட,

"உங்க கையில என்ன?" என்றான் காயத்தை பார்த்து.

இதற்கு என்ன பதில் சொல்ல என்று அவள் அமைதியாகிவிட,

"யார் அவன்? வேண்டாத, பிடிக்காத.. என்னவோ ஒன்னு தானே? அவனுக்காக உங்க உயிரை ரிஸ்க்ல விடுற அளவுக்கு முக்கியத்துவம் குடுக்குறீங்களா?" என்று கேட்க,

"அப்படி எல்லாம் இல்ல சார்.. கிட்ட வரவும் என்ன பண்ணனு தெரியாம.. எப்படி பண்ணினேனு எனக்கே தெரியல.." என்றாள் தலை கவிழ்ந்து.

"சிசிடிவி வேணா காட்டவா?" என்றான் நிஜமான கோபத்தோடு.

நேற்று வந்தவன் மீதிருந்த கோபத்தில் சமமாய் ஆராத்யா மேலும் கோபம் தான். ஏன்? பிடித்து வைத்து நான்கு அரை விட்டிருக்க வேண்டாமா? என்ன செய்து விடுவான்? என்று நினைத்தவனுக்கு அதை அவளிடம் காட்டாமலும் இருக்க முடியவில்லை.

சில நிமிட அமைதிக்கு பின் "சாரி சார்! நேத்து என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம்.. எனக்குன்னு தனியா அலைஞ்சு, கார்த்திகாவையும் ஒர்க் பண்ண விடாம பண்ணி.." என்றவள் நினைவு வந்தவளாய்,

"சார்! நேத்து ஹாஸ்பிடல்ல பில் எவ்வளவு வந்துச்சு?" என்று சட்டென கேட்க, எங்கே முட்டிக் கொள்ளலாம் என வந்தது ரகுவிற்கு.

தான் என்ன நினைத்து பேச, அதை அவள் எங்கு கொண்டு சேர்த்து வைக்கிறாள் என்று.

"பில் இருக்கா சார்? என்கிட்ட கேஷ் இல்ல.. ஜி பே பண்ணவா? இல்ல நாளைக்கு எடுத்து குடுக்கவா?" என்று கேட்க, கார் அலுவகம் வந்திருந்தது.

"இறங்குங்க!"

"சார்! கேஷ் எவ்ளோன்னு..." அவள் இழுக்க,

"கணக்கு பார்த்து சொல்றேன்.." என்று பிடித்து வைத்த பொறுமையோடு சொல்ல,

"ஓகே சார்!" என்றவள்,

"சார்!" என்று இறங்கி விண்டோ வழியே அவனை அழைக்க,

"என்ன? கார்ல வந்ததுக்கும் பே பண்ண போறிங்களா?" என்றான் கோபமாய் பார்த்து முறைத்து.

அதில் விழித்தவளுக்கு எதற்கு இந்த கோபம் என்று மட்டும் புரியவில்லை.

"இல்ல சார்! தேங்க்ஸ் சொல்லலாம்னு.." என்று கூறி,

"ரொம்ப ட்ராபிள் கொடுக்குறேன்னு தெரியுது.. சாரி சார்.. இனி இப்படி நடக்காது!" அவளாய் ஒன்றினை நினைத்து கூறிவிட்டு சென்றுவிட,

"ஓஹ் காட்!" என்று தலையில் கைவைத்துக் கொண்டான்.

'இந்த தர்ஷி அவ கூட மெர்ஜ் ஆகுற வேலையை மட்டும் பார்த்து வச்சிருக்கா என்னை அம்போனு விட்டுட்டு.. அவகிட்ட மட்டும் இந்த ஆராவும் முறைக்குறா சிரிக்குறா, பேசுறா.. இதுக்கா ஊர்ல இருந்து வந்து கிழிக்குறேன்னு சொன்ன? இதுல மாமா வேற அவளுக்கு சப்போர்ட்டு..'

யார் மேலோ கோபம் கொண்டு அதை யார் மேலோ திருப்பி தலையை உலுக்கியவன் தானுமாய் இறங்கி அலுவலகம் உள்ளே சென்றான்.

***********

"ராம் சாரா? வாய்ப்பே இல்ல!" விக்ரம் சொல்ல,

"நிஜமா டா.. நீ பார்த்திருந்தா தான் உனக்கு புரியும்!" என்ற கார்த்திகா,

"ரெண்டு வார்த்தைக்கு மேல தொடர்ந்து பேச காசு கேட்பாரோன்னு நினைச்ச ராம் சார் நேத்து அவ்வளவு கொஸ்டின்.. டேப்லெட் எப்ப எப்படி போடணும்னு வரை கேட்டாருன்னா பார்த்துக்கோயேன்.." என்று கதை போல பிரேம் விக்ரமிடம் சொல்லிக் கொண்டு இருக்க,

"லூசு மாதிரி பேசாத! நம்ம ஆராத்யா டி அவ.. தெரிஞ்சா பீல் பண்ண போறா!" என்றான் பிரேம்.

"டேய் லூசு! நான் ஆராவை எதுவும் சொல்லல.. என் டார்கெட் எல்லாம் ராம் சார் மேல மட்டும் தான்!" என்றதும் இருவரும் அவளை முறைக்க,

"அய்யோ! உங்களுக்கு என்னனு நான் புரிய வைப்பேன்?" என்று புலம்பியவள்,

"ஆபீஸ் லிப்ட்ல இறங்குனா நாலே எட்டுல அவர் ஆபீஸ் ரூம்க்குள்ள போறவர் நேத்து கூடவே அலைஞ்சிருக்கார்.. பிளஸ் அவர் கூப்பிட்ட விதம்.. பார்த்துகிட்ட விதம்னு எங்கேயோ இடிக்குது டா!" என்றாள்.

"இடிக்குதுனா தள்ளி வை டி!" என்று விக்ரம் கூற,

"உங்களுக்கு எல்லாம் சொன்னா புரியாது.. இன்னைல இருந்து இந்த ஆபீஸ்ல என் வேலை இந்த கம்ப்யூட்டர்ல இல்ல.. ராம் சார்ன்ற ரோபோகிட்ட தான்.. நான் சொல்றது உண்மைனு ப்ரூப் பன்றேனா இல்லையானு பாரு!" என்று சபதம் எடுக்க,

"இரு இரு! ஆமா நீ முடிவா என்ன சொல்ல வர்ற? ராம் சார் சரி இல்லைனு சொல்றியா?" என்றான் விக்ரம்.

"ச்ச! ச்ச! அப்படி இல்ல.. அது வந்து.. அது எப்படின்னா.. நம்ம ஆராகிட்ட சார் வந்து..." என்று சொல்ல தெரியாமல் இழுக்க,

"முதல்ல நீ கண்டுபிடி என்னனு.. அப்புறமா எங்களுக்கு ப்ரூப் பண்ணு!" என்று சிரித்தபடி தன் இடத்திற்கு சென்றுவிட்டனர் இருவரும்.

"என்ன டா நம்ப மாட்டேன்றிங்க.." என்ற கார்த்திகாவிற்குமே இப்பொழுது குழப்பம் தான் எந்த விதத்தில் ராம் என்ற மனிதனை நினைக்கின்றோம் என்று.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
190
63
Coimbatore
தர்ஷி கல்பனா கூட்டணி 😂😂😂😂😂 செம்ம.....
ரகு மாட்டிக் கிட்டான் கார்த்திகா பார்வையில்..... 🤩🤩🤩
 
  • Haha
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
684
512
93
Chennai
தர்ஷி கல்பனா கூட்டணி 😂😂😂😂😂 செம்ம.....
ரகு மாட்டிக் கிட்டான் கார்த்திகா பார்வையில்..... 🤩🤩🤩
இத்தனை வேளை பண்ணினா மாட்டாமலா போவான் 🤣🤣