அத்தியாயம் 17
"மாமா!" என்று அழைத்து எப்பொழுதும் போல தன்னருகில் வந்து நின்ற மகிமாவை என்னவென்று பார்த்தான் சிவா.
"ஒரு ஹெல்ப் மாமா! யாழினி அக்கா ப்ரோக்ராம்ல ஏரர் க்ளியர் ஆக மாட்டுதாம். ரொம்ப நேரமா ட்ரை பன்றாங்க. உங்களுக்கு மெயில் பண்ண சொல்லவா செக் பண்றிங்களா?" என்றவளை சுழல் நாற்காலியை அவள் முன்பாய் சுழற்றி அமர்ந்தவன்,
"ஹெல்ப் உனக்கா அவங்களுக்கா?"
"அக்காக்கு தான்!"
"அப்புறம் ஏன் நீ கேக்குற?"
"இப்ப ஏன் நீங்க என்கிட்ட கோவப்படுறீங்க?" என பதிலுக்கு அவள் கேட்க, பக்கத்தில் கணினியைப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கிடம் இருந்து சத்தமில்லாமல் இது தேவையா என ஒரு புன்னகை.
"டேய்!" என அவனை அடக்கியவன்,
"அவங்களுக்கு தேவைனா அவங்க கேட்கட்டும். நீ ஏன் வான்டட்டா வாங்கிக்குற?"
"அட்வைஸ்! ஆரம்பிச்சுட்டீங்களா? ஒரு சின்ன ஹெல்ப்! அதுவும் என் பிரண்ட்க்கு. அதுக்கு இவ்வளவு பேச்சு. முடியும் முடியாதுன்னு எப்ப தான் சொல்லி பழக போறீங்க?" என்று கேட்டவளை இவன் முறைக்க,
"உன்னை யூஸ் பன்றாங்கனு சொல்றேன். அதை காதுல வாங்க மாட்ற!" என்றவன்,
"அனுப்ப சொல்லு! இது தான் லாஸ்ட் நீ அடுத்தவங்களுக்காக என்கிட்ட நிக்குறது!" என்றவன் திரும்பிக் கொள்ள,
"ரொம்பத்தான்!" என்றவள் தன்னிடம் செல்ல திரும்பிவிட்டு மீண்டும் அவன் புறம் திரும்பியவள்,
"மாமா!" என்று கூப்பிட,
"வேறென்ன?" என்றான் அவள்புறம் திரும்பாமலே.
"கொஞ்சம் திரும்புங்க!" என்றதும் என்னவோ என அவனும் திரும்ப,
"என்னவோ டிஃபரென்ட்டா இருக்கே!" என்றாள் அவனை அப்படி இப்படி என திரும்பி திரும்பிப் பார்த்து.
"ப்ச்! இப்ப ஹெல்ப் வேணுமா வேண்டாமா?" அவன் கேட்க, குடுகுடுவென ஓடி சென்று அமர்ந்து யாழினியிடம் பேச ஆரம்பித்து இருந்தாள்.
காலையில் அன்னை கூறி தான் அனுப்பி இருந்தார் மகிமாவிடம் வீட்டில் நடந்த எதையுமே பேச வேண்டாம். தான் மாலாவிடம் பேசிவிட்டு சொல்வதாய்.
வந்ததும் எப்பொழுதும் போல தான் இருந்தாள் அவள். நேற்று போல் அமைதியாய் தெரியவில்லை. அதுவே கொஞ்சம் நிம்மதி அவனுக்கு.
இருக்கும் பல பிரச்சனைகளும் முடியட்டும். அந்த டெல்லி மாப்பிள்ளை முதல் வாழவந்தான் வினோதன் பிரச்சனை வரை அனைத்தும் பேசி முடித்து வரட்டும் என அவரவர் விருப்பதின் பேரில் தான் இப்பொழுது வரை விட்டிருக்கிறான் சிவா.
யாழினியிடமிருந்து மின்னஞ்சல் வந்ததை கண்டவன் அதை எடுத்து அதில் கவனத்தை வைக்க, அலைபேசியின் சத்தம் அவனை கலைத்தது.
வள்ளி தான் அழைத்திருந்தார். அதை கண்டவன் எழுந்து மொபைலுடன் கேண்டீன் புறம் சென்றான்.
"சொல்லுங்க ம்மா!"
"சிவா அண்ணே அந்த டெல்லிக்காரங்க சம்மந்தத்தை வேண்டாம்னு சொல்லி அங்க ஒரே பிரச்சனையாம் டா!" என்றார் எடுத்ததும்.
"வேண்டாம்னு சொன்ன அப்புறம் என்ன பிரச்சனை?"
"அந்த மாப்பிள்ளை வீட்டுல தான் பிரச்சனை பண்ணி இருக்காங்க. பையனுக்கு மகியை ரொம்ப பிடிச்சிருச்சாம். அவங்களும் அவங்க சொந்தக்காரங்க எல்லாருகிட்டயும் பொண்ணு முடிவானதா சொல்லிட்டாங்களாம். இப்ப போய் இப்படி சொல்றிங்களேனு நைட்டு போன் பண்ணி ரொம்ப பேசிட்டாங்க போல!"
"ஹ்ம்!"
"என்ன சிவா?"
"சரி தானம்மா? வேண்டாம்னு சொன்ன வரை ஓகே தான். ஆனா அன்னைக்கே பூ வைக்க வந்தவங்க. பின்ன பேச தான செய்வாங்க. ஃபேஸ் பண்ணி தான ஆகணும்? மாமா என்ன சொன்னாராம்?"
"அண்ணே வேண்டாம்னா வேண்டாம்னு சொல்லிட்டாராம். இன்னைக்கு நேர்ல வந்தாலும் வருவாங்கன்னு மாலா சொன்னா!"
"ஓஹ்! மகிக்கு தெரியுமா?"
"அவளும் வீட்டுல தானே இருந்திருப்பா? தெரியுமா இருக்கும். நீ எதுவும் பேசலையே!"
"ம்ம்! நீங்க அத்தைகிட்ட என்ன சொன்னிங்க?"
"நடந்ததை தான் டா சொன்னேன். உன்னை அடிச்சிட்டார்னதும் அவ பதறிட்டா"
"சொல்லாதீங்க சொன்னேன்ல?"
"பேசும் போது அப்படியே சொல்லிட்டேன். விடு டா. அண்ணேகிட்ட பேச சொன்னேன். பயமா இருக்குனு சொன்னா. ஆனா பேச மாட்டேன்னு சொல்லல"
"ம்மா ம்மா! இப்பவே ஏன் சொல்றிங்க? முதல்ல அங்க பிரச்சனை சால்வ் ஆகட்டும்!" என அவன் பேச மகிமா உள்ளே நுழைந்தாள் இன்னொரு பெண்ணுடன்.
"நானும் அப்படி தான் சொல்லி இருக்கேன் சிவா. இப்ப சொல்லி பிரச்சனையா போய்டும். உங்க அப்பா மாதிரி தான் அண்ணனும். மாலாவை நினச்சா எனக்கும் பயமா தான் இருக்கு. அவளை அடிச்சுட்டா?" என்று கேட்க,
"கொஞ்சம் தள்ளி நிக்க சொல்லுங்க!" என்றான் சிறு புன்னகையுடன் மகிமாவை பார்த்தபடி.
"கிண்டல் பண்றியா? சரி தான். மகிமா என்ன பண்றா? பேசினயா அவகிட்ட?"
"ம்ம் பேசினா. அவ ஓகே தான். அப்பா என்ன பன்றாங்க?"
"அப்பா கிளம்பி ஒரு மணி நேரமாச்சு. அவருக்கெதிரா உன்னை பேச வச்ச மாதிரி முறைச்சிட்டே இருக்கார்"
"ம்ம்!"
"சரி நீ பாரு டா" என்று சொல்லி அவர் வைத்துவிட, இவன் வைக்கவும் அவன் முன் காபியை நீட்டியபடி நின்றாள் மகிமா.
"வேணுமா?" பார்த்தும் வாங்காமல் இருப்பவனிடம் அவள் கேட்க, வாங்கிக் கொண்டவன் எதிரில் அமர்ந்தாள்.
"காபி குடிக்கலாம் வானு சொல்லி கூப்பிட்டுட்டு போன்ல பேசிட்டு இருக்காங்க. அதான் இங்க வந்துட்டேன்!" அவன் கேட்காமலே இவள் கூற,
"அதான் சொல்றேன் உன்னை யூஸ் பன்றாங்கனு!"
"ப்ச்! அவங்கெல்லாம் என் ஃப்ரண்ட்ஸ் மாமா!"
"அப்போ நீ ஹெல்ப் பண்ணனும். என்னை செய்ய சொல்ல கூடாது. சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்ற!"
"சரி ஓகே ட்ராப்!" மகிமா சொல்ல, தலையசைத்துக் கொண்டவன் காபியை குடிக்க ஆரம்பித்தான்.
"என்ன மாமா திடீர்னு?" மகிமா கேட்க,
"என்ன?" என்றான் புரியாமல்.
"அவ்வளவு கோவமா கோவில்ல வசனம் பேசிட்டு எங்க வீட்டுக்கு பொண்ணு பாக்க போவோம்னு மாமாகிட்ட சொன்னிங்கலாமே?" என்றதும் கண்களை விரித்தவன் ஒரு நொடி அதிர்ந்தவன் சுற்றிலும் பார்த்தான்.
"இதை இங்க பேச கூடாதா?" என அதையும் அவனிடம் கேட்க, ஆயாசமாய் உணர்ந்தவன் தலையில் கைவைத்து மேஜையில் சாய்ந்தான்.
"நைட்டு அம்மா சொன்னாங்க! நேத்து நான் உங்ககிட்ட பேசினதை சொன்னதுக்கே அம்மா ஒரே திட்டு என்னை. நீங்க இப்படி சொன்னதா அத்தை சொல்லவும் தான் கொஞ்சம் சமாதானம் ஆன மாதிரி இருந்துச்சு அம்மா" என்றாள்.
"அங்க என்ன சண்டை?" முதலில் அவள் சொன்னதை விடுத்து இவன் கேட்க,
"அந்த டெல்லி வவ்வாலுக்கு என்னை தான் பிடிச்சிருக்காம். புடிச்சு கூண்டுக்குள்ள அடைக்க பாக்குது!" என்றதும் அவன் முறைக்க,
"உண்மைய சொன்னேன்!" என்றாள்.
"நான் நேத்து கண்டுக்கவே இல்ல. அப்பா வேண்டாம்னா வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அந்த வீட்டாளுங்க தான் இன்னைக்கு நேர்ல வர்றதா சொல்லி இருக்கும் போல. அப்பாவை இன்னும் அதுங்களுக்கு தெரியல. வந்து நல்லா வாங்கிட்டு போகட்டும்!" என சிரித்தாள்.
"நல்ல மரியாதை!" என்றவன் மீண்டும் வைத்த காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.
"என்னை பவுடர் யூஸ் பண்றீங்க மாமா? அடிச்ச தடமே தெரியல! பவுடரும் ரொம்ப தெரியல" என கிண்டல் செய்தவள் கண்கள் புருவத்தை உயர்த்திக் காட்டி சிரிக்க,
கோபப்பட்டால் அமைதியாகி விடுவாளோ என நினைத்தவன் கண்டிக்கும் விதமாய் பார்க்க,
"எனக்கு அன்னைக்கே தோணுச்சு மாமா! நான் தான் சொன்னேன்ல? உங்களுக்கு நான்னா புடிக்கும்!" என்று சிரித்தபடி கூறியவளை என்ன செய்ய என நினைக்கும் முன் அவள் பேசிய விதத்திலும் புன்னகை தான் வந்தது சிவாவிற்கு.
"மகி!" என்றவன் மீண்டுமாய் சுற்றிலும் பார்த்தான்.
"நம்ம ஆபீஸ் தான் பரவால்ல சொல்லுங்க மாமா!" என அவள் சொல்ல, அவளை திருத்த முடியாதே என்ற பார்வை பார்த்தவன்,
"மேரேஜ்னா ஜஸ்ட் கழுத்துல மூணு நாட் போட்டுக்குறது மட்டும் இல்ல!" என்று சொல்ல,
"ஹான் தெரியுமே! அடுத்து அம்மா வீட்டுல இருந்து மாமியார் வீட்டுக்கு ப்ரோமோஷன்! அது தானே மாமா?" என்றவளை எண்ணி கண்களை இறுக்கமாய் மூடி திறந்தான்.
"குட்டிப் பிசாசே!" என்று அவள் தலையை அழுந்தப் பிடித்தவன்,
"எந்திச்சு போ!" என்று சொல்ல,
"இல்ல இல்ல நான் அமைதியா இருக்கேன். நீங்க சொல்லுங்க!" என்றாள்.
"மகி! இப்ப நீ என்கிட்ட பேசுறது என்ன? புரியுதா உனக்கு? நம்ம ரெண்டு பேரோட கல்யாண விஷயம். அதை இவ்வளவு சாதாரணமா உன்னால எப்படி பேச முடியுது?" என்றான்.
"வேற எப்படி பேசணும்?" என்று யோசிப்பதை போல பார்த்தவள்,
"தெரில மாமா! வேற யாரோன்னா என்ன பண்ணி இருப்பேன்? அமைதியா அம்மா வனி சொல்றதை கேட்டு அதுபடி நின்னுருப்பேன். உங்ககிட்ட எப்படி இருக்கனும்னு எனக்கு தெரியலையே!" என்றவளை பாவமாய் பார்த்தான் சிவா.
"உங்களுக்கு எதுவும் எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்குதா மாமா?" என்று கேட்க,
"எனக்குமே ஐடியா இல்லை. ஆனா...." என்றவனுக்கு அதை சொல்ல தெரியவில்லை. என்னவோ எதிர்பார்க்கிறான். அதை அவனே இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.
"எனக்கும் தெரியல!" என்று முடித்து மேஜையில் கைகளை கட்டி முகத்தை மறைத்து விழுந்துவிட, சிரித்துவிட்டாள் மகிமா.
"ஒருவேளை சினிமால வர்ற மாதிரி எதுவும் ஆசை இருக்குதோ?" என்று அவள் கேட்க,
"அடிங்க! ஓடி போய்டு!" அலுவலகம் என்பதை உணர்ந்து அவளுக்கு மட்டும் கேட்கும்படிக்கு மெதுவாய் கூற,
"ஒண்ணே ஒண்ணு! சொல்லிட்டு ஓடிடவா?" மகிமா அருகில் வந்து கேட்க,
"விடமாட்டல்ல?" என்றவனை சட்டை செய்யாமல்,
"எனக்கு இது தான் மாமா வேணும்! எவ்ளோ கேசுவலா இருக்க முடியுது உங்ககிட்ட?" என்று கேட்க,
"ம்ம் அப்படியே என் நெத்தியில இளிச்சவாயன்னு எழுதி இருக்கான்னு பார்த்துக்கோ!" என்று சொல்ல, கோபமே வரவில்லை அவளுக்கு.
"அதெல்லாமில்ல! என் அழகு மாமா நீங்க!" என ஐஸ் வைத்து பேச, அவனுக்குமே கோபம் இல்லை மிதமான புன்னகை தான்.
"தேங்க்ஸ் மாமா!" என்று துள்ளி குதித்து ஓடும் வளர்ந்த குழந்தையை பார்த்து சிரித்திருந்தவன் அவள் சென்ற பின் யோசித்தான் தனக்கு என்ன வேண்டும் என்று.
எதுவும் தோன்றவில்லை. ஆனாலும் மகியின் இந்த பேச்சும் விளையாட்டுத்தனமும் என நினைக்கும் பொழுதே தான் நினைத்தது சரி என்று புரிந்தது அவனுக்கு.
அவள் அவளாய் இருக்க அவள் தேர்ந்தெடுத்திருக்கும் வழி இந்த திருமணம்.
வினோதன் பேசிவிட்டால் இனி அந்த திருமணம் நின்றது நின்றது தான் என புரிந்தது சிவாவிற்கு. அடுத்து என்ன? அன்னை கூறியது போலா மாலா அத்தைக்கு எதுவும் ஆகுமோ? என நினைக்கும் பொழுதே கைகள் கண்ணத்தை தேய்த்துக் கொண்டது.
தொடரும்..