அத்தியாயம் 18
கண்களை உருட்டி அதன்வழி தன் கோபத்தை மகளிடம் காண்பித்துக் கொண்டிருந்தார் மாலா.
"என்னம்மா இது? எல்லாம் பழைய சாரீஸ். புதுசா எதுவும் இல்லையா?" என்று கேட்டு கபோர்டை ஆராய, பொறுமை இழந்த போதிலும் வாயை திறந்துவிடவில்லை மாலா.
அத்தனை பலமான வேண்டுதல் இன்று. நாளை காலை வினோதனிடம் வாழவந்தான் குடும்பத்தைப் பற்றி பேச அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்க, அதில் எந்த வில்லங்கமும் வராமல் இருக்க இன்று தன்னால் முடிந்த செயல் இந்த மௌனவிரதம் மட்டும் தான் என்று அதை செயலாற்றிக் கொண்டிருந்தார்.
அதையும் விடுவேனா என காலை முதல் பேசி பேசியே மகள் அவரை டென்சனை ஏற்படுத்த, நல்லவேளையாய் வீட்டினுள் நுழைந்தாள் வனிதா.
"அப்பா வெளில கிளம்பிட்டாங்களா? மகி நீ இன்னும் ஆபீஸ் போகல?" என்று வனிதா மகிமா இன்னும் தயாராகாமல் நிற்பதைப் பார்த்து கேட்க,
"கிளம்பனும் வனி! புடவை எதாவது புதுசா இல்ல கொஞ்சம் அழகா இருக்குற மாதிரி இருக்குதானு பார்த்துட்டு இருக்கேன்!" என்றாள்.
"ஏன்? ஆபீஸ்ல எதுவும் ஃபங்க்சனா?" வனிதா கேட்க,
"ஆபீஸ் ஃபங்க்சனா? க்கா உனக்கு விஷயம் தெரியுமா தெரியாதா?" என்றாள் மகிமா.
அய்யோ என்று வந்தது மாலாவிற்கு. "என்ன?" என்ற வனிதா அன்னைபுறம் திரும்பியவள் அப்பொழுது தான் நியாபகம் வந்தவளாய்,
"அம்மு என்ன பண்ற நீ?" என்று கேட்க,
"இல்ல வனி! இன்னும் ரெண்டு மூணு நாள்ல எப்படியும் வள்ளி அத்த வீட்டுல இருந்து வருவாங்க தான? அதான் பொண்ணு பார்க்க வர்றதுக்கு எந்த சாரீ கட்டலாம்னு பார்த்துட்டு இருக்கேன். உன்கிட்ட ஏதாவது புது சாரீ இருக்கா?" என்று கேட்க,
"அம்மா இன்னைக்கு மௌனவிரதம்னு தெரிஞ்சு வேணும்னே டென்ஷன் பண்ணிட்டு இருக்குற இல்ல?" என்ற வனிதா,
"நாளைக்கு அந்த தாத்தா வந்து அப்பாகிட்ட பேசி என்ன நடக்குமோன்னு அம்மா ஏற்கனவே பேயறைஞ்சா மாதிரி இருக்காங்க பயத்துல. நீ வம்பு பண்ணிட்டு இருக்குற? ஆபீஸ்ல மாமாகிட்டயும் இப்படி தான் பண்ணிட்டு இருக்கியா நீ?" என்றாள்.
"ப்ச் என்ன நடந்தாலும் நல்லதா தான் நடக்கும். பச்சி சொல்லுது வனி!" என்றவள்,
"ஈவ்னிங் ஆபீஸ் முடிஞ்சதும் நான் உன் வீட்டுக்கு வர்றேன். உன் சாரீஸ் எல்லாம் காட்டு. எதாவது தேறுதானு பாக்குறேன்!" என்றாள்.
"மணி பத்தாக போகுது. என்ன ஷிப்ட் நீ?"
"அய்யய்யோ! பத்து மணி ஷிப்ட் தான். கிளம்பிட்டேன் கிளம்பிட்டேன்!" என்றவள் வேகமாய் ஒரு குர்த்தியை எடுத்துக் கொண்டு தனதறைக்கு ஓடினாள்.
'பாரு டி இவளை!' எனும் விதமாய் மாலா வனிதாவைப் பார்க்க,
"விடுங்க ம்மா! நாலு நாள் முன்னாடி அவ இருந்ததுக்கு இது ஓகே தான். இப்படியே இருக்கட்டும்!" என்றாள் வனிதாவும்.
அதுவும் சரி தான் என்றாலும் இன்னும் இப்படி கவலை தெரியாமல் இருக்கிறாளே என்ற கவலை மாலாவிற்கு.
நேற்று காலை தான் மகிமாவை அன்று பெண் பார்க்க வந்து சென்றவர்களில் மாப்பிள்ளையின் தந்தையும் தாய்மாமாவும் மீண்டுமாய் வந்திருந்தனர் வினோதனிடம் நியாயம் வேண்டி.
வந்த தோரனையும் அவர்கள் பேசிய விதமும் சுத்தமாய் பிடித்தமில்லை வினோதனுக்கு.
"உங்க இஷ்டத்துக்கு வேண்டாம்னு சொல்ல முடியாது. அன்னைக்கே பூ கொண்டு வந்தோம்ல?" என்று மாப்பிள்ளையின் தந்தை கேட்க,
"அன்னைக்கே பொண்ணு மாப்பிள்ளையா நிக்க வச்சு போட்டோ எடுத்துருக்கணும். நாம தான் சூதனமில்லாம இருந்துட்டோம்!" என்றார் தாய்மாமா.
கோபம் வந்த போதும், "இங்க பாருங்க! எங்க பொண்ணுக்கு பிடிக்கல. அதுக்கு காரணம் உங்க வீட்டு பையன் தான். இப்போ நீங்க பேசின மாதிரி அவனும் பேசத் தெரியாம எண்ணத்தையோ பேசி வச்சு தான் இவ வேண்டாம்னா வேண்டாம்னு நிக்குதா. எங்க வீட்டு பொண்ணுங்களுக்கு பிடிக்காம என்னனு நான் கல்யாணத்த பேச?" என்று வினோதன் தன் பக்கத்தை எடுத்து கூற,
"பொண்ணுக்கு பிடிக்கலைனா நீங்க தான் எடுத்து சொல்லணும் எவ்வளவு பெரிய இடம். மாப்பிள்ளைக்கு எப்படிப்பட்ட வேலைனு" என்று தற்பெருமை பேச,
"இப்போ என்ன பண்ணனும்னு நிக்கிங்க? அதான் வேண்டாம்னு முடிவு பண்ணியாச்சு சொல்லுதோம் தான? புரியலையா உங்களுக்கு? இல்லைனா அம்புட்டு உசந்த வேலைல இருக்க பையனுக்கு பொண்ணு கிடைக்கலையா?" என்று சத்தமிட்டார் வினோதணும்.
"எங்க பையனுக்கு பிடிச்சிருக்கேன்னு பேச வந்தா ரொம்ப பேசுதீங்க நீங்க!"
"உங்க பையனுக்கு பிடிக்கான்னு நீங்க பாக்குற மாதிரி என் பொண்ணுக்கு நான் பாக்கணுமில்ல? போய் உங்க மகன்கிட்ட எங்க என்ன பேசணும் எப்படி பேசனும்னு சொல்லி குடுங்க!" என்று சொல்ல, பதிலுக்கு அவர்கள் பேச என்று வாய் தகராறு ஏற்பட்டு அவர்களை கலைக்கவே பெரும்பாடாய் போனது.
அத்தோடு நில்லாமல் டெல்லியில் இருந்து மாப்பிள்ளை வேறு வினோதனுக்கு அழைத்து மகிமாவின் எண்ணைக் கேட்க, அவ்வளவு தான் ஆடிவிட்டார் அவனிடமே!
இப்படி நேற்று தான் அந்த பேச்சே ஒருவழியாய் முடிந்து சேர்ந்திருக்க, நேற்று இரவு வள்ளி மாலாவிற்கு அழைத்து சொல்லி இருந்தார் பெரியப்பா நாளை மறுநாள் வருகிறார் என்று.
உடனே வேண்டுதல் வைத்து தனது படபடப்பை எல்லாம் கடவுளிடம் அனுப்பி வைத்து நாளைக்காக காத்திருக்கிறார் மாலா.
கனகவள்ளி, வாழவந்தான் இருவருக்கும் பெரியப்பா முறைவரும் கருப்பையா என்பவரை தான் நாளை பேச வர சொல்லி மாலாவும் வள்ளியும் நேரில் சென்று அவரிடம் பேசி இருந்தனர்.
உறவுகள் பலருமே வேடிக்கை பார்க்கவும் சண்டை இழுத்து விடவும் தான் உடனிருப்பர். சிலரிடம் மட்டுமே உண்மையான அக்கறை இருக்கும்.
அப்படிப்பட்டவர் தான் கருப்பையா. இருவர் வீட்டு விஷேசத்திலும் முன் நிற்பார். யாரையும் எங்கேயும் விட்டுக் கொடுப்பதில்லை. அவர்களை அறிந்தவர் கூட.
"சரி தான் ம்மா! உங்க விருப்பம் புரியுது. வினோதா சரியான கோவக்காரன். இத்தனை வருஷமில்லாமல் என்னனு அவன்கிட்ட பேச?" என்றார் முதலில் அவருமே!
"கொஞ்சம் பார்த்து பேசுங்க பெரியப்பா. உங்களை நம்பி தான் வந்திருக்கோம். இப்போ இல்லைனா ரெண்டு குடும்பமும் ரெண்டு பக்கமா போய்டுமே!" என்று வள்ளி சொல்ல,
"ஆமா மாமா! நீங்க பேசினா தான் கொஞ்சம் பொறுமையா கேட்கவாவது செய்வார் அவர்!" என்றிருந்தார் மாலாவும்.
"சரி பேசி பார்ப்போம்" என்றவர் வாழவந்தான் சம்மதம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டார் அவர்களிடம்.
"அவரும் மகனுக்காக ஒத்து வர்ற மாதிரி தான் இருக்கார். அண்ணே சரினு சொன்னா போதும்!" என்று வள்ளி சொல்ல, இரண்டு நாட்கள் விவசாயம் சம்மந்த வேலை இருப்பதால் வியாழன் அன்று வருவதாய் கூறி இருந்தார் கருப்பையா.
அதற்கு தான் இந்த மௌன விரதமும் கூட. காலையில் எழுந்து வினோதன் காபி கேட்க மகிமா கொடுத்துவிட்டு,
"அம்மா இன்னைக்கு மௌனவிரதம் ப்பா! எதாவது வேணும்னா என்கிட்ட சொல்லுங்க!" என்று சொல்ல, யோசனையாய் பார்த்தார் அவர்.
மனைவி மௌனவிரதம் இருப்பதெல்லாம் அரிது. வேண்டுதல் பெரிதாய் இருந்தால் தான் அவர் அமைதியாய் இருப்பார். அதிகமாய் வேண்டுதல் வைப்பதில்லை. பிள்ளைகளின் சிறு வயதில் தனக்கு அதீத காய்ச்சல் வந்த போது அடுத்து மகிமா பெரிய பெண் ஆன போது பின் வனிதாவின் திருமணம் என பார்த்திருக்கிறார்.
"இப்போ என்ன வேண்டுதலாம்?" என்று மகிமாவிடம் கேட்க, திருதிருவென அவள் விழித்தாள்.
'இவளே காட்டிக் கொடுத்துடுவா!' பார்த்துக் கொண்டிருந்த மாலா நினைத்தபடி தலையில் அடித்துக் கொண்டார்.
"தெரில ப்பா. அம்மா சொல்லல. நாளைக்கு விரதம் முடியவும் கேட்டு சொல்லட்டா?" என்ற மகளை முறைத்துவிட்டு கிளம்பிவிட்டார்.
"கிரேட் எஸ்கேப்!" தனக்கு தானே பெருமையாய் சொல்லிக் கொண்டு மாலாவையும் கோபப்பட வைத்து ஒருவழியாய் மகிமா கிளம்பி இருந்தாள் அலுவலகத்திற்கு.
"பேச்சா டா பேசின? கொஞ்ச நஞ்ச பேச்சா பேசின? சோனமுத்தா! போச்சா?" என்ற வடிவேலு வீடியோ மகிமாவின் வாட்சப் ஸ்டேட்டஸில் வர,
"எவ்வளவு பெரிய வேலைய எவ்வளவு அசால்ட்டா செஞ்சு வச்சுட்டு இந்த நக்கல் வேற! இவளை என்னனு நான் சமாளிக்க?" இப்படி தான் இருந்தது சிவாவின் எண்ணம்.
காலை ஏழு மணிக்கு அலுவலகம் வந்தவன் கணினியை உயிர்ப்பித்துவிட்டு அலைபேசியைப் பார்த்த போது தான் மகிமா இந்த வேலையை செய்து வைத்திருந்தது.
இருவர் வீட்டின் தற்போதைய நிலையும் வள்ளி, மாலா இருவர் அலைபேசி பேச்சின் மூலமும் சிவா காதிற்கு வந்து கொண்டு தான் இருந்தது.
மகிமாவிற்கு ஏற்பாடு செய்திருந்த திருமணம் நின்றது வரை காலையில் அன்னை கூறி இருந்தார். அடுத்து பெரியவர் வினோதனிடம் பேச இருக்கிறார் என்பதையும் கூறி இருந்தார்.
வினோதன் அத்தனை எளிதில் இதை ஏற்று கொள்வார் என்ற நம்பிக்கை இல்லை தான். ஆனால் வள்ளியும் மாலாவும் அதை அப்படியே விட போவதில்லை என்றும் புரிந்தது.
அனைத்திலும் ஒன்று தெளிவாய் புரிந்தது அவனுக்கு. அன்னைக்கும் அத்தைக்கும் மகிமாவுடன் தன் திருமணம் என்பதில் எத்தனை ஆசை என்று.
அவர்கள் இருவரின் மெனக்கெடல் தெளிவாய் புரிய, ஒரு பெருமூச்சுடன் தானுமாய் அதை ஏற்க முயன்றான்.
அதற்கென அவன் மெனக்கெடவெல்லாம் இல்லை. அவள் தன்னை அப்படியே ஏற்றுக் கொள்ள தயாராய் இருப்பது போல தானும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.
இப்படி தான் தனக்கென வரும் பெண் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் எதுவுமில்லை அவனிடம். அதனால் மகிமாவைப் போலவே அவனுமாய் இருக்க முடிவு செய்ய முடிந்தது.
நேற்று இரவில் இருந்து தான் நீண்ட யோசனைக்கு பின் இந்த தெளிவான முடிவிற்கு அவன் வந்ததுமே! இதுதான் என்று அனைவரும் முடிவிற்கு வர தான் மட்டும் ஏன் குழம்பி என்று நேற்றிலிருந்து யோசித்து தான் இந்த முடிவை ஏற்றிருந்தான்.
வாட்சப்பில் மகிமா பெயரை எடுத்து அவளின் முகப்புப் படத்தைப் பார்க்க, பாவாடை தாவணியில் வனிதாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட அவளின் தனிப்பட்ட புகைப்படம்.
அதற்கு கூட அன்று கதை கூறினாளே! 'செல்ஃபீ எடுத்தா கொஞ்சம் குண்டா தெரியுறேன் மாமா. அதான் செல்ஃபீயே எடுக்குறதில்ல. என்னவோ இது மட்டும் கொஞ்சம் நல்லா இருக்குற மாதிரி இருக்கும்'.
சில நொடிகள் பார்த்தவன் சட்டென மொபைலை அனைத்து மேஜையில் வைத்துவிட்டு நேரே அமர்ந்து சுற்றிலும் பார்த்தான்.
'லூசா டா நீ? எங்க இருந்துட்டு என்ன பண்ற நீ? நல்லவேளைக்கு யாரும் இல்ல' என்று நினைத்து வேலையில் கவனத்தை கொண்டு செல்ல முயன்றான்.
தொடரும்..