அத்தியாயம் 19
"இங்க பாரு மகி! நீ ஆபீஸ் போய்ட்டு வா. அங்க என்ன வாலுத்தனமும் பண்ணாத. இன்னைக்கு அந்த மாமா அப்பாகிட்ட பேசிட்டு போனதும் நானே கால் பண்றேன். நீ மூச்சுக்கு முன்னூறு கால் பண்ணிட்டு இருக்காத" என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் மாலா மகிமாவிற்கு.
"முக்கியமா இந்த கல்யாண விஷயத்தை ஆபிஸ்ல யாருக்கும் சொல்லி வைக்காத. அது சிவாவுக்கு கஷ்டமா போயிட போகுது. எல்லாம் பேசி முடிவான பின்னாடி முதல்ல சிவா சொல்லட்டும். சரியா?" என்று கேட்க, தலையை மட்டும் மொத்தமாய் அங்கும் இங்கும் ஆட்டி வைத்தாள் மகிமா.
காலை பத்து மணி அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் மகிமா. சாப்பிட்டு முடித்து கைப்பையை எடுக்கவும் வனிதா தன் கணவன் திவாகருடன் வந்துவிட்டாள்.
"வாங்க மாமா! எப்படி இருக்கீங்க?" மகிமா கேட்க,
"நீ எப்படி இருக்க மகி? வேலைக்கு போற சரி. வேலை பாக்குறியா?" என கிண்டல் செய்ய,
"உங்க மாமனார் மாதிரியே அங்க ஒரு மேனேஜர் இருக்கார் மாமா. சரியான டெரர் லுக்கு. அதுக்காகவே அப்பப்போ வேலையும் பார்ப்பேன்!" என்றவள் பேச்சில் சிரித்தபடி உள்ளே வந்தான்.
"வாங்க!" என மாலா அழைத்தவர்,
"நீ இன்னுமா அம்மு கிளம்பல?" என்று கேட்க,
"கிளம்பிட்டேன் ம்மா! மாமா தான் பேசிட்டு இருந்தாங்க!" என்றவள்,
"ஈவ்னிங் வெயிட் பண்ணுங்க மாமா. வனி நீயும் தான். வந்து பேசுறேன் பை!" என்றவள் அன்னையிடமும் சொல்லிக் கொண்டு சென்றாள்.
"இவளுக்கா மேரேஜ்?" திவாகர் சிரித்துக் கொண்டே கேட்க,
"ப்ச்! சும்மா இருங்க!" என அன்னையைப் பார்த்தாள் வனிதா.
"அவர் கேட்குறதும் சரி தான வனி!" என்ற மாலா,
"அவளை விடு. உங்க அப்பா வீட்டுல இல்ல. கருப்பையா மாமா வந்துட்டு இருக்காங்களாம். எப்ப வேணா வந்துடுவாங்க!" என்று மாலா கொஞ்சம் பதட்டமாய் சொல்ல,
"பேசுவோம் த்த! நீங்க பயப்படாதீங்க!" என்றான் திவாகர்.
மாலா தான் வனிதாவை கணவருடன் அழைத்திருந்தார். கருப்பையா பேச்சோடு திவாகர் பேச்சிற்கும் கொஞ்சம் மதிப்பிருக்கும் வினோதனிடம்.
"மாமா எங்க போயிருக்காங்க?"
"கடையை திறந்து வச்சுட்டு வர்றேன்னு போயிருக்காங்க!" என்ற மாலா நியாபகம் வந்தவராய்,
"வனி! இந்த மகி என்ன பண்ணிருக்கா தெரியுமா? நேத்து சாயந்திரம் ஆபிஸ்ல இருந்து வரும் போது நம்ம கடைக்கு போயிருக்கா" என்றதும்,
"அய்யயோ! ஜவுளிக்கடைக்கா? அப்பா இருந்திருப்பாரே?" வனிதா கேட்க,
"ஆறு மணிக்கு அவர் வெளில போவார்ல அந்த நேரமா பார்த்து போயி நேத்து புடவை வேணும்னு ஆடுனா இல்ல? புதுசா வந்த பெட்டில இருந்து கடைல வேலை பாக்குறவங்ககிட்ட சொல்லிட்டு ஒண்ணு தூக்கிட்டு வந்திருக்கா!" என்றார்.
"இவளுக்கு தைரியம் ஜாஸ்தி தான் ம்மா!" வனிதா சொல்லி கணவனுடன் சிரிக்க,
"தைரியம் இல்ல திமிரு! இவளை என்ன செய்யன்னே தெரியல!"
"விடுங்க ம்மா! ஒரு சேலை தான? அப்பாக்கு தெரிஞ்சுட்டா?"
"தெரிஞ்சுட்டாவா? தெரிஞ்சு அவ மாட்டி இருந்தா பரவால்லயே! அகம் பிடிச்ச கழுத வழியிலயே அவ பிரண்ட்டுகிட்ட தைக்க குடுக்க போயிருக்கா. போற வழில அப்பாகிட்ட மாட்டி அவர் கேள்வி கேட்டுருக்கார்!" என்றதும்,
"அய்யயோ!" என்று வனிதா அதிர்ச்சியாக,
"அப்புறம் பண்ணினது தான் கூத்து. நான் சொல்லி தான் கடையில போய் புடவை எடுத்ததா சொல்லி அம்மாக்கு தான் தைக்க குடுக்க போறேன்னும் சொல்லிருக்கா உங்க அப்பாகிட்ட!" என்று சொல்ல, தன்னையும் மீறி புன்னகை வனிதாவிற்கு.
"அவ எடுத்ததா சொன்னாலே வீட்டுக்கு வந்து என்னைய தான் மனுஷன் கத்துவாரு. நேத்து நான் கேட்டதா சொல்லி என்னைய மாட்டி விட்டு அவர் வீட்டுக்கு வந்து ஒரு சாமியாட்டம் ஆடிட்டார். காசு மரத்துலயா காய்க்குது. உன் அப்பன் வீட்டு காசான்னு அத்தனை கேள்வி. நான் விரதம்ன்ற காரணத்துனால தான் விட்டார் இல்லைனா என் நிலைமையை நினைச்சு பாரு!" என்று சொல்ல,
"ஏன்ம்மா இப்படி பண்றா? சின்ன குழந்தை மாதிரி!" என்ற வனிதா தங்கையை நினைத்து சிரிக்க,
"குழந்தையா கழுதைனு சொல்லு. கோட்டி புடிச்ச கழுதை" என்று பேசியபடி மருமகனுக்கு காபியை எடுத்து வந்து தந்தார்.
"வினோதா..." என்ற வாசல் சத்தத்தில்,
"மாமா வந்துட்டாங்க போல!" என்று மாலா வாசலுக்கு விரைய,
"வாங்க பெரியப்பா!" என அப்போது தான் வினோதனும் வீட்டிற்குள் நுழைந்தார்.
"எப்படி இருக்க வினோதா? கடைல இருந்து வாரியோ?" என்று கேட்க,
"ஆமா பெரியப்பா. கடைய திறந்து வச்சுட்டு வாரேன். மாலா காபி கொண்டு வா!" என்று சொல்ல,
மாலா இரு வார்த்தை நின்று அவரிடம் பேசிவிட்டு காபி எடுத்து வர உள்ளே செல்ல, திவாகர் உள்ளே இருந்து வினோதன் இருக்கும் அறைக்கு வந்தான்.
"நீங்க எப்போ வந்திங்க மாப்பிள்ள?" என்ற வினோதன் ஏற்கனவே பெரியப்பா வந்த காரணம் என்னவாக இருக்கும் என குழப்பத்தில் இருக்க, மருமகனும் இந்நேரம் இருக்கக் கண்டு என்னவாக இருக்கும் என தனித்தனியே தான் யோசித்தார்.
"இன்னைக்கு லீவா தம்பிக்கு?" கருப்பையா கேட்க,
"இல்லைங்க. மதியமா போகனும். மாமாவை பார்த்துட்டு போகலாம்னு தான் வந்தேன்!" என்றதுமே கருப்பையா திவாகர் வரவு ஏன் என புரிந்து கொண்டார்.
"என்ன பெரியப்பா இவ்வளவு தூரம்? எதாவது முக்கியமான விசயமா?" மாலா காபியை கொடுக்கவும் வினோதன் கேட்க, வேகவேகமாய் கணவன் கண்ணில் இருந்து மறையும் தூரத்துக்கு சென்று நின்று கொண்டு காதை மட்டும் தீட்டி வைத்தார் மாலா.
அது கூட வேண்டாம் என்பதை போல சமையலறையோடு அமர்ந்து கொண்டாள் வனிதா.
"உனக்கு தங்கச்சின்னு ஒருத்தி இருக்காளே நியாபகம் இருக்கா இல்லையா?" என்று தான் ஆரம்பித்தார் கருப்பையா.
"என்ன பெரியப்பா பேசுதீங்க? உங்களுக்கு தெரியாததா? அந்த வீட்டுக்கும் நமக்கும் ஆகாதுன்னு? இதுக்கு தான் இவ்வளவு தூரம் அலைஞ்சு வந்தீங்களாக்கும்?" கருப்பையா கேள்விக்கு இப்படி தான் மெதுவாய் இருந்தது வினோதனின் பதில்.
"ஆகாதுன்னா என்ன ஆகாது? சொத்து சண்டையா? உன் சொத்தை ஏமாத்தி புடிங்கிட்டாங்களா என்ன? சண்டைனு வந்தா நாலு வார்த்தை கூட குறையா வர தான் செய்யும். இத்தனை வருஷமாவுது இன்னமும் உன் தங்கச்சி நியாபகம் வரலையோ உனக்கு?" என்று கேட்க,
நெஞ்சோரம் அன்று வளைகாப்பு மண்டபத்தில் தங்கையை கண்டதும் தங்கையின் மெலிந்த தோற்றம் கண்களுக்குள் நிழலாட தான் வினோதனுக்கு.
"இப்போ எதுக்கு பெரியப்பா?" என்று விட்டேற்றியாய் கேட்க,
"என்னப்பா இப்படி சொல்ற? ஆயிரம் இருந்தாலும் வள்ளிக்கு அண்ணே நீ! அவளுக்கு கல்யாண வயசுல ஒரு பையன் இருக்கான். தெரியுமா தெரியாதா உனக்கு?"
"ஓஹ்! அவனுக்கு கல்யாணமாக்கும்? தாய்மாமா வேணும்னு சொல்லி விட்டாங்களோ?"
"அட அதில்ல வினோதா. நான் சொல்லுதே முதல்ல கேளு!"
"பெரியப்பா! நீங்க வந்து போய் இருக்கதெல்லாம் எனக்கு சந்தோசம் தான். ஆனா அந்த வீட்டு பேச்சு இவ்வளவு நாளும் மாதிரி இனியும் இந்த வீட்டுல வேண்டாம்! வேற எதாவது இருந்தா சொல்லுங்க!" என்றார் நேரடியாய்.
"மாமா! தாத்தா அப்படி என்ன தான் சொல்ல வர்றாங்கனு கேட்போமே! எதாவது முக்கியமான விஷயமா கூட இருக்கலாமில்ல?" என்றான் திவாகரும்.
"அட என்ன மாப்பிள்ள நீங்களும்!" என்றவர்,
"சரி சொல்லுங்க பெரியப்பா!" என்று சொல்ல,
"ஏன் டா. என்னனு நினைக்குற நீ? சொந்தம்னா நாலும் இருக்க தான் செய்யும். அன்னைக்கு உன்கூட சண்டை போட்டு மல்லுக்கு நின்ன வாழவந்தான் தான் இப்போ உன் வீட்டுக்கு அவனே வரேன்னு சொல்லுதான். உனக்கு என்னங்கேன்? இதுக்கு மேல என்ன வேணும்ங்கேன்!" என்று கேட்க,
"ஆத்தீ!" என்ற மாலாவிற்கு அடுத்து என்னவாகுமோ என பதட்டமாய் வந்தது.
"என்ன வேணுமாம் அந்த ஆளுக்கு?" என்ற வினோதனுக்கு, இப்போதுமே நினைப்பு அவர்கள் பையனுக்கு திருமணம். தான் சென்று தாய்மாமாவாய் சபையை நிறைக்க வேண்டும் அவ்வளவு தானே என்று தான்.
ஆனாலும் நான் வரமாட்டேன் என சொல்ல தான் நினைத்திருந்தார்.
"இங்க பாரு! உனக்கு தெரிஞ்சது தான். வள்ளிக்கு ஒரே பையன். ஆஸ்தி அந்தஸ்துக்கு எல்லாம் எந்த குறையும் இல்ல. பையன் உள்ளூர்லயே கைநிறைய சம்பளம் வாங்குறான்!" என்று சொல்ல, தாடையை தேய்த்தபடி கேட்டுக் கொண்டிருந்த வினோதன் கண்கள் சுருங்க பார்த்தார் தன் பெரியப்பாவை.
"உங்க ரெண்டு பேர் சண்டையை வச்சு குடும்பத்தை உடைச்சு போடாதீங்க. ரெண்டு பொண்ணுங்க சடங்கு, வீட்டு கிரகபிரவேசம் ஏன் ஒரு பொண்ணு கல்யாணத்தையே அவ அத்தைக்கு சொல்லாம முடிச்சு வச்சுட்ட. இன்னும் பாக்கி உன் ரெண்டாவது பொண்ணு கல்யாணம் மட்டும் தான்!"
"என்ன பெரியப்பா சொல்ல வர்றிங்க? வேண்டாம்னு தான அவங்களும் இவ்வளவு நாளா இருக்காங்க. என்னமோ நான் மட்டும் தான் இருந்த மாதிரி சொல்லுதீங்க?"
"சரி தான் ப்பா! இப்போ அவங்க தான் சமாதானமா வாராங்களே! ஏத்துக்க வேண்டியது தானேங்கேன்!"
"நேரா விசயத்துக்கு வாங்க!" என்ற வினோதனுக்கு ஓரளவு புரிந்தாலும் தந்தை ஸ்தானத்தில் இருப்பவரிடம் சட்டென கோபத்தை காட்ட முடியவில்லை. கூடவே மூத்த மாப்பிள்ளை வேறு இவர்களை பார்த்த வண்ணம்.
"அதான் சொல்றேனே! இவ்வளவு நேரமா உனக்கு புரியாம கிடக்கு? உன் பொண்ணை தான் வாழவந்தான் வீட்டுக்கு கேட்டு வந்திருக்கேன்!" என்று சொல்ல, அடி நெஞ்சில் இருந்து ஒரு பயம் எழுந்ததில் கண்கள் கலங்கி வந்தது மாலாவிற்கு. அழுகை எல்லாம் இல்லை. பயத்தில் மட்டும் தான். அதிகமாய் உணர்வு வெளிப்படும் தருணம் வருமே அப்படி ஒரு நேரம் அவருக்கு இது.
"பெரியப்பா என்ன பேச்சு இது? அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு. நீங்க இப்படி வருவீங்கனு நான் நினைக்கவே இல்ல. ஏற்கனவே ஒத்த பொண்ணை குடுத்துட்டு நான் இருக்காது போதாதா?" என்ற வினோதன் எழுந்திருந்தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து.
"அட இரு ப்பா! முதல்ல உட்காரு!" என்ற கருப்பையா இதை எதிர்பார்த்தது தானே!
"என்ன உனக்கு? வள்ளிய குடுத்து அங்க அவ என்ன கஷ்டப்பட்டுட்டா இருக்கா? புருசன் புள்ளைன்னு நல்லா தான வாழவந்தான் வச்சிருக்கான்?"
"எப்படி பெரியப்பா உங்களுக்கு இப்படி ஒரு நினைப்பு வந்தது? ரெண்டு வீட்டுக்கும் ஆகாதுன்னு உங்களுக்கு தெரியாதாக்கும்?" என்று வினோதன் கேட்க, கருப்பையாவின் பார்வை வெளிவாசலில் எட்டிப் பார்த்த மாலாவிடம் சென்றது.
"மாமா!" என கையெடுத்து கும்பிட்டவள் தலையை வேகவேகமாய் இடவலமாய் ஆட்டினார்.
தாங்களே கேட்க சொன்னதாய் சொல்லி தான் அன்று வள்ளியும் மாலாவும் கருப்பையாவிடம் சொல்லி இருந்தனர்.
இப்போதிருக்கும் சூழ்நிலையிலும் பெரியப்பாவின் மேல் காட்ட முடியாத கோபத்தில் இருக்கும் வினோதனிடம் தான் மாட்டினால் நிச்சயம் வதம் செய்துவிடுவார் என்று புரிந்து மாலா உடனே கட்சி மாறி தலையை ஆட்ட, பார்த்த கருப்பையா, திவாகர் இருவருமே மௌனமாய் அதில் சிரித்துக் கொண்டனர்.