அத்தியாயம் 2
"என்ன அண்ணி! இவ்வளவு தூரம்? எதாவது விசேஷமா?" என்று கேட்டு கோவில் பிரகாரம் சுற்றி வந்து ஓரிடத்தில் மாலா அமர,
"சிவா பிறந்தநாள்னு உனக்கு தெரியாதா மாலா?" என்றார் வள்ளி.
"அது தெரியும் அண்ணி! ஆனா உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற கோவிலுக்கு தானே வர சொல்லுவீங்க? இப்ப இவ்வளவு தூரம் வந்துருக்கோமே! வேண்டுதல் பலமோ?" என்றார்.
"அதெல்லாம் எப்பவும் வைக்குற வேண்டுதல் தான். அந்த கோவிலுக்கு காலையில போய்ட்டு வந்தேன். இங்க வந்து ரொம்ப நாள் ஆச்சே! அதான். அதுவும் சிவா பைக்ல கூட்டிட்டு வந்தான். அதனால தான்!" என்று சொல்லி,
"பைக்கை விட்டுட்டு வரேன் சொல்லிட்டு தானே போனான். என்ன இன்னமும் காணும்?" மகனை தேடி பார்வையை சுழற்றினார்.
"அவன் வரட்டும் அண்ணி! நீங்க எப்படி இருக்கீங்க? அண்ணே அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க?" என்று மாலா கேட்க,
"அவங்களுக்கு என்ன? வக்கனையா வாய்க்கும் வயித்துக்கும் சாப்பிடுட்டா போதும் சிவாவை தான் கரிச்சு கொட்டுத்தாங்க!"
"ஏன் சிவாக்கு என்னவாம்? நீங்க சும்மாவா விட்டிங்க?"
"சும்மா யாரு விட்டா? ஆனாலும் மனசு கேட்கல. இவனும் பாக்குற பொண்ணை எல்லாம் வேண்டாம்னு தலைகீழா நிக்கான். அவங்களும் குய்யோ முய்யோனு கத்தி தான் பாக்குறாங்க! நான் என்ன செய்ய?" என்று கவலையாய் கூற,
"இங்க இருக்கீங்களா ரெண்டு பேரும்?" என வந்திருந்தான் சிவா.
"வா சிவா! பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா. எப்படி இருக்க?" என்று கேட்க,
"நல்லாருக்கேன் த்தை. தனியாவா வந்த? அம்மு வர்ல?" என்றான்.
"அவளுக்கு மீட்டிங் இருக்காமே! ஆறு மணி ஆகும்னு சொன்னா? உனக்கு இல்லையா டா?" என்றார்.
"சரியா போச்சு!" என்று சிவா சொல்ல,
"என்ன சிவா?" என்றார் வள்ளியும்.
"ம்மா! அத்தையை ஏமாத்திட்டு ஊர் சுத்த போயிருக்கு ம்மா அது. ஏழு மணி ஷிப்ட் தானே த்தை அவளுக்கு? எனக்கும் அதே ஷிப்ட் தான். நானும் மீட்டிங் முடிச்சுட்டு வீட்டுக்கு போய் ரிலாக்ஸ் ஆகி தான் அம்மாவை கூட்டிட்டு வந்தேன்!" என்று முழுதாய் அவன் சொல்ல,
"அடி கோட்டி கழுதை. அவங்க அப்பா காத்துக்கு மட்டும் விசயம் போச்சு.. அவளை உட்டுட்டு என்னை பிடிச்சுக்குவார். இவளை!" என்றபடி அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைத்தார்.
"திமிருக்காரி. எடுக்குறாளா பாரேன்!" என்று பேசியபடியே மாலா இருக்க,
"சரி விடு மாலா. வேலைக்கு போற பிள்ளைங்க கொஞ்சம் நிம்மதியா இருந்துட்டு வரட்டும். இப்ப என்ன ஆகிற போது?" என்று வள்ளி சொல்ல,
"நீங்க வேற அண்ணி! அவ இஷ்டத்துக்கு சென்னைல தான் படிப்பேன்னு சொன்னானு சேர்த்து விட்டாரு. அங்க போய் சும்மா இருந்தாளா? ஒரு காபி குடிக்க போனாலும் அந்த காபி கப்பை போட்டோ எடுத்து போன்ல போட்டு விட்டு என் உசுரை வாங்குதா. அவங்க அப்பாவும் அவளை விட்டுட்டு பிள்ளையா வளத்து வச்சிருக்கனு என்னை ஏசுதாரு!" என்றார் கவலையாய்.
அப்பொழுது தான் நியாபகம் வந்தவனாய் மொபைலில் வாட்சப் எடுத்து சிவா பார்க்க, 'பிரியாணியும் நானும்' என்ற எழுத்துக்களோடு அவள் புகைப்படமும் ஸ்டேட்டஸ் இருந்தது.
சந்தேகம் கொண்டவன், "அத்தை! உன் போனை குடு" என்று கேட்டு வாங்கியவன்,
"நினைச்சேன்!" என்று கூறி,
"ம்மா! அத்தையை ஹைட் பண்ணி ஸ்டேட்டஸ் போட்ருக்கா பாரு! சரியான கேடி ம்மா!" என்று அவன் சிரித்தபடி அலைபேசியை காட்ட, அதை வேகமாய் பிடுங்கிய வள்ளி,
"சும்மா இரு டா! அவளே புலம்பிட்டு இருக்குறா! நீ விவரம் சொல்லிட்டு இருக்க!" என்று மகனை அதட்டியவர்,
"எப்பவாச்சும் வெளில போனா தான அதுங்களுக்கும் நல்லாருக்கும்? நீயும் நானும் இந்த வயசுல அவ பண்றதை பண்ண முடியுமா? சும்மா அவளை குறை சொல்லிட்டே இருக்காம அவளை பார்த்துக்கோ!" என்றார்.
"நீங்க தான் மெச்சிக்கணும். கொஞ்சமும் உடம்புல பயமே இல்ல" என்ற மாலா நியாபகம் வந்தவராய்,
"ஆமா! உனக்கு ஒரு பரிசு குடுத்து விட்டேனே! தந்தாளா இல்லையா?" என்று கேட்க,
"அவகிட்ட ஏன் த்தை குடுத்து விட்ட? ஆபீஸ் முழுக்க டிரம்ஸ் அடிச்சு வச்சுட்டா காலையிலேயே! இதுல பிரிச்சு பார்க்க சொல்லி வேற அடம். அடிக்காத குறையா விரட்டி விட்டேன்!" என்றான் சிவாவும்.
"அவங்க அப்பாவை ஏமாத்தி நான் எப்படி கையில கொண்டு வர? அதான் காலங்காத்தால போறாளேனு குடுத்து விட்டேன். அப்பவும் சந்தேகம் தான் குடுப்பாளா இல்லையானு!" என்கவும் சிவா சிரிக்க,
"நீ அவளை ஏதாவது சொல்லிட்டே தான் இருப்ப!" என்ற வள்ளி,
"வாட்ச் ரொம்ப நல்லா இருந்தது" என்று சொல்ல, முழுக்கை சட்டையை மடித்துவிட்டு வாட்சை நன்றாய் காட்டினான் சிவா தன் அத்தைக்கு.
"நீ எதுக்கு த்தை மாமாக்கு தெரியாம வாங்கி கஷ்டப்படுற?" சிவா கேட்க,
"வேற யாருக்கு செய்ய போறேன் சிவா? இதுவும் அந்த கழுத மகி காசு தான். சிவா மாமாட்ட காசை வாங்குதேனா இல்லையா பாருன்னு அவ்வளவு பேச்சு!" என்று சொல்ல, வள்ளியும் சிவாவும் சிரித்தனர்.
மாலா கனகவள்ளியின் அண்ணன் வினோதனின் மனைவி. வினோதன் வாழவந்தான் இருவருக்கும் பேச்சுக்கள் கிடையாது பல வருடங்களாய். இருவருமே ஜவுளிக்கடை வியாபாரம் தான். கொடுக்கல் வாங்கல் என ஒன்றாய் இருந்தவர்கள் தான்.
வினோதன் கொஞ்சம் பேராசைக்காரர். இடையில் உள்ளவர்களை நம்பி பணத்தை கொடுத்து ஏமாந்தது என்னவோ வினோதன் தான்.
அதற்காக கோபத்தில் பேசிய வாழவந்தான் பேச்சில் கோபம் கொண்டு வினோதனும் பேச, வாய் வார்த்தைகள் அதிகமாகி உறவே இல்லை எனும் விதமாய் பேசிவிட்டனர்.
இவையெல்லாம் சிவா பள்ளி வயதில் நடந்தது. அப்பொழுது இருந்து ஒருவர் வீட்டுக்கு மற்றவர் சென்றதில்லை என்றாலும் இப்படி தான் சந்தித்து உறவை வளர்த்துக் கொண்டிருந்தனர்.
வினோதன் மாலாவிற்கு வனிதா, மகிமா என இரு பெண் குழந்தைகள். வனிதா திருமணம் முடிந்து கணவனுடன் இதே ஊரில் தான் வாசித்து வருகிறாள்.
வனிதாவின் திருமணத்திற்கு கூட தங்கை குடும்பத்தை அழைக்கவில்லை வினோதன். மாலா கேட்டும் மறுத்துவிட்டார். அதற்கொரு அழுகை கனகவள்ளியிடம் சொல்லி மாலா அழ,
"விடு மாலா! அண்ணே அப்படி தான்னு தெரியாதா? வனியை கல்யாணத்துக்கு அப்புறம் அவ வீட்டுல போய் நான் பாத்துக்குறேன்!" என்று சொல்லி, சொல்லியபடி பார்த்து அவளுக்கென முடிந்ததை செய்துவிட்டு தான் வந்தார் கனகவள்ளி.
வாழவந்தானிற்கு கூட ஓரளவு தெரியும் மனைவி தன்னை மதிக்காமல் அவர்களை பார்க்க தான் செல்கிறாள் என்று. கேட்டாலும் பதில் பேசிவிடுவார் என்று தெரிந்து கண்டும் காணாமல் இருந்தால், வினோதனுக்கு சுத்தமாய் தெரியாது மாலா இப்படி வள்ளியை சந்தித்து பேசி வைத்து இருப்பது.
சிவாவிற்கு மாலா என்றாள் அத்தனை பிடிக்கும். சிறு வயதில் இருந்தே அவரிடம் அவ்வளவு ஒட்டுதல் அவனுக்கு. அந்த உறவு இப்பொழுது வரை அவர்களுக்கு அப்படியே தான் இருக்கிறது.
வனிதா, மகிமா, சிவ பிரகாஷ் என எல்லாம் சிறு வயதில் ஒன்றாய் வளந்தவர்கள் தான். அவரவர் படிப்பு கல்லூரி, வேலை என்றானபின் கொஞ்சம் தள்ளி சென்ற உணர்வு.
அதுவும் மகிமா விடுதியில் தங்கி சென்னையில் தான் கல்லூரி படிப்பேன் என்று அழுது புலம்பி தந்தையை ஒத்துக்கொள்ள வைக்க அத்தனை குட்டிக்கரணமிட்டு சென்னை சென்றாள்.
படிப்பு முடிந்ததும் மாலா கேட்டு தான் சிவா தனது அலுவலகத்தில் அவளுக்கு வேலைக்கு உதவியது. மூன்று மாதங்கள் தான் ஆகிறது வேலைக்கு சேர்ந்து. ஆனால் அனைவருக்கும் தெரியும் இந்த வாலில்லா வானரத்தை.
"வனி வந்தாளா மாலா? எப்படி இருக்கா?" என்று அவர்கள் பேச, சிவா அமர்ந்திருந்தான் உடன்.
"மகிக்கு மாப்பிள்ளை பாக்கணும்னு ரெண்டு நாள் முன்னாடி பேச ஆரம்பிச்சார். வாயை வச்சுட்டு சும்மா இல்லாம கல்யாணம் வேண்டாம் பண்ணிக்க மாட்டேன்னு அவங்க அப்பாகிட்ட பெரிய இவளாட்டம் பேசிட்டா!"
"அய்யயோ! அண்ணங்கிட்டயா?" வள்ளி பதற, சிவாவும் பார்த்தான் என்ன செய்தாரோ என்று.
"அதான் சொன்னேனே! கொஞ்சமும் பயமில்ல. என்னனு வளந்தாளோ! அடிக்க போய்ட்டார். நான் கூட பயந்துட்டேன்!" என்று மாலா சொல்ல,
"நீ போய் தடுத்துட்டியா?" என்றான் சிவா.
"நான் ஏன் போறேன்? அவளுக்கு விழ வேண்டியது எனக்கு விழுந்துற கூடாதுன்னு தூரமா நின்னுல்ல பார்த்தேன்!" என்று மாலா சொல்ல, சிவா அப்படி சிரித்தான் மாலா சொல்லிய பாவனையில்.
"எனக்கென்ன கோட்டியா அவ அடியை நான் வாங்க. வாய் பேச தெரியுது இல்ல வாங்கட்டும்னு தான் நின்னேன். ஆனா வனியும் வனி மாப்பிள்ளையும் அந்த நேரம் வந்துட்டாங்க. அதான் தப்பிச்சுட்டா!" என்று சொல்ல, இன்னும் சிரித்த மகனை அடித்த வள்ளி,
"சும்மா அவளை எதாவது சொல்லிட்டே இருக்காம அப்பா சொல்றதை கேளுன்னு எடுத்து பேசு. அவ மனசுல வேற எதுவும் இருக்காது. விளையாட்டுத்தனம் மட்டும் தான் அதுகிட்ட. எதுக்கும் தனியா பேசு. மனசுல என்ன இருந்தாலும் அவளே சொல்லிடுவா!" என்று சொல்ல,
"ம்ம்க்கும்! கழுதைக்கு நீங்க வேற ஒத்து பேசிகிட்டு. ஆனா ஒண்ணு! இவ இல்லைனா இந்த வீடு எப்படி இருக்குமோனு எனக்கு இப்பவே நெஞ்ச அழுத்துது. என்னனு இருக்க போறேனோ!" என்று சொல்ல கனிந்து பார்த்தான் சிவா தன் அத்தையை.
"அதுவும் சரி தான். இதுங்களுக்கு கல்யாணம் பண்ணின பின்னாடி நாம நம்ம பிள்ளைங்கன்னு பேச யோசிக்க தான் செய்யணும்" என்றார் வள்ளியும்.
மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு மாலா கிளம்புவதாய் சொல்ல,
"அம்மா பீச் போனும்னு கேட்டாங்க அத்தை. நீயும் வர்றியா?" என்றான் சிவா.
"நீ கூட்டிட்டு போய்ட்டு வா டா. நான் போய் இவ வந்துட்டாளா பாக்குறேன். வரலைனா குளிர் ஜுரம்னு சொல்லி ரெண்டு போர்வையை மூடி நான் படுத்துக்கணும். இல்லைனா மனுசன் என்னை பிடிச்சு வச்சு செய்வார்!" என்று சொல்ல, சிரித்தபடி விடைபெற்றனர் இருவரும்.
அன்னையுடன் அடுத்த இரண்டு மணி நேரங்கள் செலவு செய்து சிவா வீட்டிற்கு வரும் பொழுது மணி எட்டைத் தொட்டிருந்தது.
"அப்பா சாப்பிட வருவார்" வள்ளி சொல்ல,
"க்ரில் சிக்கன் சாப்பிட்ட இல்ல? அப்பாக்கும் வாங்க வேண்டியது தானே?" என்றான் சிவா கிண்டலாய்.
"தோலை உறிச்சி தொங்க விடவா? சாம்பார் செஞ்சு வச்சுட்டு தான் வந்தேன். போய் இட்லியை மட்டும் செஞ்சு வச்சுடனும்!" என்று வேகமாய் கிட்சன் செல்ல, அங்கே இட்லிக்கு தட்டில் மாவை ஊற்ற ஆரம்பித்திருந்தார் ஈஸ்வரி.
தொடரும்..