அத்தியாயம் 20
"அதான் ஒரு நினைப்பு வந்துட்டு இல்ல? நீயும் தான் நான் சொல்லுதத கொஞ்சம் யோசியேன்! இத்தனை வருசமும் போனது போகட்டும். இனியாவது ஒண்ணு மண்ணா பழகலாம் பாரு!" என்று சொல்ல,
"ப்ச்!" என்று சலிப்பாய் சொல்லி அமர்ந்த வினோதன்,
"ஆமா! அந்த ஆளு இங்க வர சரினு சொன்னதா சொன்னிங்க? அப்போ அங்க பேசிட்டு தான் வரீங்களோ? அவங்க தான் கூப்பிட்டு பேச சொன்னதோ?" என்றார் வினோதன் தன் பெரியப்பாவிடம்.
சிறுதடுமாற்றத்தில் திடுக்கிட்டாலும், "அட ஆமாங்குறேன்! என் மேல நம்பிக்கை இல்லையாங்கும்? அவனே பொண்ணு பாக்க வரேன்னு சொல்லிட்டான். நீ தான் இடும்பு பண்ணுத. தொழில்னா நாலும் இருக்க தான் செய்யும். அதுக்குன்னு அப்படியே கோவத்தை புடிச்சு வச்சுட்டு இருப்பாங்களா? பொண்ணு போட்டோ கூட பாக்காம உன் பொண்ணை பாக்க வரேன்னு சொல்லுதான். வினோதன் கோவக்காரன்னாலும் அவன் பொண்ணை எப்படி வளத்திருப்பான்னு எனக்கு தெரியும்னு சொல்லுதான். அப்போ உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கான் பாத்துக்க!" என்று சொல்ல, வாயில் கைவைத்துவிட்டார் அவர் பொய்யில் மாலா.
சமையலறையில் ஒளிந்திருந்த வனிதா பெரிய சண்டையும் சத்தமும் எதிர்பார்த்திருந்தவள் அப்படி எதுவும் இல்லை என்றதில் மெதுவாய் நகர்ந்து அன்னை அருகே வந்து நின்ற போது அவளுமே இதைக் கேட்டிருக்க, மாலாவும் 'அவ்வா!' என வாயில் கை வைத்தாள்.
தன்னைப் பற்றி பெருமையாய் பேசினால் யாருக்கு தான் பிடிக்காது? அப்படி தான் வினோதனும் அதில் மௌனமாயிருக்க, திவாகரைப் பார்த்து கண் சிமிட்டினார் கருப்பையா.
"உனக்கு வேணும்னா சொல்லு பையன் போட்டோ, ஜாதகம், வேலை பாக்க இடம்னு எல்லாம் கேட்டு வாங்கியாறேன். நீ பார்த்து விசாரிச்சுட்டே சொல்லு!"
"அதான் தாத்தா இவ்வளவு சொல்லுதாங்கல்ல மாமா? பையன் சொந்தம் வேற! உள்ளூர் வேலை. எதுக்கும் பாக்கலாம்னு எனக்கும் தோணுது" என்று தானும் கூறினான் திவாகர்.
வினோதனுக்கு புரிந்தது என்ன கூறினாலும் கருப்பையா தன் பேச்சை கேட்க போவதில்லை என்று.
"பையன் பேரு என்ன தாத்தா?" திவாகர் கேட்க,
"பேரா?... பேரு... பேரு..." என்று விழித்த கருப்பையா மாலாவைப் பார்க்க, மாலாவோ சிவ பிரகாஷ் என வாயசைத்து காற்றில் கோலமிட்டு அவருக்கு எடுத்துக் கொடுக்க முயன்றார்.
"சிவ பிரகாஷ். தெரிஞ்சவங்க சிவானு கூப்பிடுவாங்க" என்று வினோதன் சொல்ல, அனைவருமே ஆச்சர்யமாய் பார்த்தனர் வினோதனை.
"அதான! மருமவன் பேரு மாமனுக்கு மறக்குமாக்கும்?" என்ற கருப்பையா வினோதன் முறைக்கவும்,
"ஆயிரம் இருந்தாலும் தங்கச்சி மவன் மருமவன் தான உனக்கு? அதை சொன்னேன் வினோதா!" என்று கூறினார்.
"படிப்பு வேலைனு எதுவும் உன் பொண்ணுக்கு குறைச்சு எல்லாம் இல்ல அந்த பையனும். உன் தங்கச்சி குணமும் உனக்கு தெரியும்! தங்கமா பாத்துக்குவா உன் பொண்ணை" என்று மேலும் மேலும் அவரை யோசிக்கவிடாமல் எடுத்து சொல்லிக் கொண்டே இருந்தார் கருப்பையா.
"எல்லாம் சரி தான். கையோட ஒரு போட்டோ கொண்டு வந்திருக்கலாம்ல தாத்தா? நாங்களும் பாத்திருப்போம்" திவாகரும் சேர்ந்து கொண்டான்.
"போட்டோ என்னையா போட்டோ. ஊன்னு ஒரு வார்த்தை சொல்ல சொல்லு உன் மாமனாரை ஆளையே கூட்டிட்டு வாரேன்!"
"அது சரி!" என திவாகர் கண் சிமிட்ட,
"அந்த ஆளை மாதிரிலாம் பிள்ளை மேல அக்கறை இல்லாம இருக்க முடியாது. முதல்ல நீங்க சொன்ன போட்டோல இருந்து எல்லாத்தையும் வாங்கியாங்க. நான் பாத்து விசாரிச்சுட்டு பிறவு தாக்கல் சொல்லுதேன். என் பொண்ணுட்டையும் கேட்டுக்கணும். டெல்லில அவ்வளவு பெரிய உயரத்துல இருக்கவனையே வேண்டாம்னு சொன்னவ என் மவ. அப்போ அவளுக்கு நான் எம்மாதிரி மாப்பிள்ள பாக்கணும்? கொஞ்சம் யோசிச்சு சொல்லுதேன்!" என்று சொல்ல, அவர் சம்மதமே சொன்னது போல அத்தனை அத்தனை நிம்மதி மாலாவிற்கு.
"அதுவும் சரி தான்!" என்று இழுத்த கருப்பையா போதுமா என்பது போல மாலாவைப் பார்க்க, இரு கையின் கட்டை விரல்களையும் காட்டி ஆனந்தமாய் தலையசைத்தார். கூடவே மூத்த மகளோடு ஒரு கைக்குலுக்கலும்.
"அப்போ என்ன? வந்த வேலை முடிஞ்சது. நான் கிளம்புறேன்!" என்று அவர் சொல்ல, மாலா ஓடிவர,
"அட இருங்க பெரியப்பா. வீட்டுக்கு வந்து எவ்வளவு நாளாச்சு? இன்னைக்கு சாப்பிட்டு போகலாம். மாலா..." என்று வினோதன் அழைக்க,
"எல்லாம் தயாரா இருக்கு. சாப்பிட வாங்க மாமா. நீங்களும் வாங்க மாப்பிள்ளை" என அழைத்தார் முகம் மலர்ந்த புன்னகையுடன் மாலா.
அதையுமே கண்கள் சுருங்க சந்தேகமாய் பார்த்தார் வினோதன். மாலாவும் வள்ளியும் அத்தனை சினேகிதமாய் இருந்தனர் பல வருடங்களுக்கு முன்பு. வாழவந்தானோடு பிரச்சனையான பின் மாலாவும் அந்த வீட்டோடு தொடர்பில் இல்லை என்று தான் நினைத்திருந்தார் வினோதன்.
இப்பொழுது மாலா முகத்தில் தெரிந்த மலர்ச்சியை கூட அவர்களோடு இணைய போகும் மகிழ்வில் வந்தது என புரிந்து கொள்ள முடிந்தது.
ஆனாலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடிக்க நினைக்கவில்லை. யோசித்து பேசி பார்த்து முடிவு செய்ய தான் நினைத்தார்.
மற்றவர்களை விட வாழவந்தானை நேரில் சந்திப்பது பற்றியும் அத்தனை யோசனை வினோதனிடம்.
'நீ இல்லைனா என்னால வாழ முடியாதா?' என்றெல்லாம் பேசி அப்பொழுது சண்டையிட்டு இருக்க, அவரை சந்திக்க சிறு சங்கடம் என்று தோன்றிய நொடியே,
'நானா அவங்க பையனை கேட்டு போறேன். அவங்க தான என் பொண்ணை கேட்டு வாராங்க. இது போதும் நாலு பெரியவங்க முன்னாடி நமக்கு மரியாதை தான இது?' என்றும் தோன்ற தன்னையே பெருமையாய் நினைத்துக் கொண்டார்.
கூடவே சில கணக்கீடல்கள். ஒரே மகன் என்றால் சொத்துக்கள் அனைத்தும் வெளியில் போகாதே! அதனோடு தன் தந்தை தங்கைக்கு கொடுத்ததெல்லாம் தன் மகளுக்கு தானே இனி? என பல யோசனை செய்தவர் இனி அடுத்தும் அவர்களாய் தேடி வரட்டும் அதன்பின் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டார்.
"இப்போ சந்தோசம் தான மருமகளே?" சாப்பிட்டு கைகழுவ வந்த இடத்தில் மாலாவிடம் கருப்பையா கேட்க,
"மாமா! உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்லனு தெரியல. ரொம்ப ரொம்ப சந்தோசம் மாமா. கூடவே இருந்து நீங்க தான் இந்த கல்யாணத்தையும் நல்லபடியா நடத்தி கொடுக்கணும்!" என்றார் மனமார்ந்த மகிழ்வோடு.
"நன்றிலாம் எதுக்கும்மா? கல்யாணத்தை சிறப்பா செஞ்சிடுவோம். அப்போ நான் கிளம்புறேன். போட்டோ எல்லாம் நானே வாங்கி அவன்கிட்ட குடுத்தனுப்புறேன்" என்றவர்,
"உங்க ரெண்டு பேரோட நல்ல மனசுக்கு ரெண்டு குடும்பமும் நல்லா இருப்பிங்கத்தா!" என ஆசிர்வாதமாய் கூறி தான் சென்றார்.
"என்ன மாமா! முழு மனசா தான சம்மதம் சொன்னிங்க?" கருப்பையா சென்றதும் திவாகர் வினோதனிடம் கேட்க,
"பின்ன! அவரு என்னை எங்க பேச விட்டாரு! ஆஹா ஓஹோன்னுல்ல புகழ்தாரு!" என்றார் பதிலாய்.
"என்னம்மா! வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறுது?" வனிதா அன்னை காதில் கிசுகிசுக்க,
"அதான!" என மாலாவும் பதற,
"நான் ஒன்னும் தெரியாம எல்லாம் அவருகிட்ட பேசல" என்று வினோதன் சொல்ல, கால்கள் எல்லாம் வெலவெலத்து போனது மாலாவிற்கு.
"நீங்க மாட்டிக்கிட்டிங்கனு நினைக்குறேன்!" வனிதா அன்னையிடம் சொல்ல,
"போன வாரம் ஒரு வளைகாப்புக்கு போனோமே! நியாபகம் இருக்கா?" என்றதும், அன்று மகிமா சிவா பேசியதை பார்த்த வனிதா, மாலாவோடு திவாகருமே பயந்து போய் தான் பார்த்தான் தன் மாமனாரை.
"ஆத்தி! செத்தோம் நாம!" என்று தான் வனிதா நினைத்தது.
"அன்னைக்கு பார்த்தேன்! சும்மா சொல்ல கூடாது என் கூடப் பிறந்தவ சாயல்ல நல்லா அம்சமா தான் இருந்தான் அவன்" என்று சொல்ல விரிந்த கண்களோடு வனிதாவும் மாலாவும் பார்த்துக் கொள்ள, திவாகருமே ஒரு பெருமூச்சுடன் நெஞ்சில் கைவைதான்.
"அட மாமாக்கு அப்போ மாப்பிள்ளைய தெரிஞ்சிருக்கு. நான் தான் கவனிக்காம போயிட்டேன்!" என்றான் திவாகர்.
"எங்க கல்யாணத்துக்கு சீர் செய்ய வந்ததுல இருந்து ரெண்டு நாள் முன்ன வரைக்கும் சிவா மாமாகிட்ட போன் பேசிட்டு, இப்ப எப்படி ரீல் சுத்துறாரு பாருங்க ம்மா!" என வனிதா கிண்டல் செய்ய, மனைவியைப் பார்த்து கண்ணடித்தான் திவாகர்.
மதியம் வனிதா கணவனோடு கிளம்பி சென்றதும் வினோதன் கொஞ்சமாய் கண்ணசந்திருக்க, மெதுவாய் மொபைலை எடுத்து வள்ளிக்கு அழைத்து நல்ல விஷயம் தான் என்று மட்டும் கூறி மாலை கோவிலுக்கு வர சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.
அடுத்ததாய் மகிமாவிற்கு மாலா அழைத்து நடந்ததை சொல்ல, அதே நேரம் சிவாவிற்கு வள்ளியும் அழைக்க மகிமாவை லேசாய் சாய்ந்து பார்த்தபடி அழைப்பை ஏற்றிருந்தான் சிவா.
காலையில் இருந்து அவனுமே இதை தான் நினைத்தபடி வேலையில் இருந்தான். அங்கே நடப்பது என்னவென்று தெரியாமல் கொஞ்சம் பதட்டம் தான் அவனுக்குமே!
நல்ல செய்தி என்று மாலா கூறியதாய் கூறி மாலை அவனையும் கோவிலுக்கு வர சொல்லி வள்ளி வைத்துவிட, கண்கள் விரிய புன்னகை முகம் நிறைக்க அன்னையிடம் கதை கேட்டுக் கொண்டிருந்த மகிமாவின் கண்களே சிவாவிற்கு கதை கூறியது.
'இவ இருக்குற எக்ஸைட்மென்ட்க்கு ஆபீஸ்னு கூட பாக்காம இங்க தான் வருவா கத்திகிட்டே!" நினைத்த சிவா அவளை தடுக்க என எழுந்து உள்ளே செல்ல நினைக்கும் முன் அவனைப் பார்த்தபடி மொபைலை காதிலிருந்து எடுத்துக் கொண்டு ஓடி வந்தாள் மகிமா.
"போச்சு போச்சு!" என அப்பொழுது தான் பதட்டம் கூடியது அவனுக்கு.
"ஷ்ஷ்!" என வாயில் விரல் வைத்துக் காட்டியதை எல்லாம் கவனிக்காமல் அவனருகே வந்தவள் "மாமா மாமா!" என சத்தமிட,
"எத்தன மாமா?" என்றது சிவா அருகிலிருந்த கார்த்திக்.
"மகி ஷ்ஷ்! ஐ க்நொவ்! பேசலாம்!" என்று சிவா மெதுவாய் சொல்ல,
"அத்தை சொன்னாங்களா மாமா? அம்மா சொன்னாங்க எனக்கு. அப்பா கல்யாணத்துக்கு...." என்று அவள் பேச பேச,
"மகி ஒரு நிமிஷம்.. மகி சொல்றதை கேளு.. மகி.. மகி எனக்கு தெரியும்.." என மெதுவாய் சொல்லிக் கொண்டிருந்த சிவா, அவள் ஆர்வக் கோளாறாய் முழுதாய் சொல்லிவிட போகிறாள் என உணர்ந்து,
"அம்மு!" என்று சத்தமிட, அவளுமே அந்த சத்தத்தில் அமைதியாகிவிட்டாள்.
"அம்முவா?" இப்படி அழைத்து பார்த்திராத கார்த்திக் கண் காது வாய் என அனைத்தையும் திறக்க, அவனை கண்டுகொள்ளவில்லை சிவா.
"ஜஸ்ட் கீப் குயட்! ப்ளீஸ்!" என்று சிவா அவளிடம் சொல்ல,
'முதல்ல ஆபீஸ்ல சிவா சொல்லட்டும் நீ எதாவது பண்ணி வச்சுடாத!' என்ற அன்னை குரலும் அப்பொழுது தான் நியாபகம் வந்தது மகிமாவிற்கு.
"ம்ம்!" என தலையை வேகவேகமாய் அசைத்த மகிமா தன் இடத்திற்கு திரும்பி செல்லப் பார்க்க, அதுவுமே சிவாவை பாதித்தது.
தன் செயலில் வருந்திவிட்டாளோ என நினைத்தவன் உடனே, "மகி!" என அழைக்க,
"மாமா!" என்று பளிச்சென்ற புன்னகையுடன் அவன்புறம் திரும்பியவளைப் பார்த்து நிம்மதியாய் புன்னகைத்தவன்,
"ஈவ்னிங் கோவிலுக்கு வா அத்தை கூட!" என்று சொல்ல, "ம்ம்ம் ஓகே மாமா!" என கொள்ளையாய் புன்னகை கொண்டு கொண்டாட்டமாய் கூறியவளை முதன்முறையாய் ரசனையாய் பார்த்தான்.
தொடரும்..