• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 21

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 21

மகிமா அன்னையோடு கோவிலுக்கு வந்திருக்க கனகவள்ளியை உள்ளே அனுப்பிவிட்டு சில நிமிடத்தில் வந்து விடுவதாய் சொல்லி சென்றான் சிவா.

"என்ன அண்ணி நீங்க மட்டும் வர்றிங்க?" என்று மாலா கேட்கும் முன்,

"மாமா என்னை வர சொல்லிட்டு அவங்க வரலையா?" என்றாள் மகிமா பாவம் போல விழித்து.

"வர சொன்னானா? சொல்லவே இல்ல நீ?" மாலா கேட்க, அவளும் அவன் பேசியதை கூறினாள்.

"உன்னை வர சொல்லிட்டு வராம இருப்பானா அம்மு? உள்ள போங்க வர்றேன்னு சொன்னான். வந்துடுவான். சாமி கும்பிட்டாச்சா நீங்க?" என்றார் வள்ளி அகம் மலர்ந்த புன்னகையோடு.

"ஆச்சு அண்ணி! நாங்க அங்க இருக்கோம். நீங்க வந்துடுங்க!" என்று மாலா சொல்ல, வள்ளியும் கடவுளிடம் மனதார நன்றி சொல்லி திருமணம் நல்லபடியாய் நடைபெற வேண்டுதலும் வைத்து வந்து அமர்ந்தார் அவர்கள் அருகே.

"எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா மாலா? வீட்டுக்கு வரலாம்ல நாங்க?" வள்ளி ஆசையாய் கேட்க,

"சீக்கிரமே நாள் பார்த்துடலாம் அண்ணி!" என்ற மாலா நடந்ததை கூற, மகிமாவும் இரண்டாம் முறையாய் அன்னை சொல்வதை கேட்டு அமர்ந்தவள், வாசலில் இருந்து உள்ளே வந்து கொண்டிருந்த சிவாவைப் பார்த்ததும்,

"மாமா வந்தாச்சு!" என்று சொல்லி அவனைப் பார்க்க, அவர்களையும் அவர்கள் முகத்தின் மலர்ச்சியையும் பார்த்தபடி தான் சிவா வந்து கொண்டிருந்தான் கையில் கவருடன்.

"இந்தா த்தை!" என மாலாவிடம் கொடுக்க,

"என்னம்மா இது?" என தானுமாய் பார்த்தாள் மகிமா.

"பார்த்தியா! நமக்கெல்லாம் தோணுச்சா ஸ்வீட் வாங்கணும்னு?" வள்ளி மகனைப் பார்த்து சிரித்தபடி சொல்ல,

"ம்மா! நீங்க தானே நல்ல விஷயம் சொன்னிங்க? அதான் வாங்கிட்டு வந்தேன்!" என்றவனைப் பார்த்து இருவருமே சிரிக்க, சிறு நாணம் கொண்டது என்னவோ சிவா மட்டும் தான்.

"எவ்வளவு பொறுப்பு பாரு!" என்று கூறிய மாலா முகத்தில் பயம் அப்பட்டமாய் தெரிய,

"கொஞ்சமாவது கத்துக்கோ அம்மு!" என்றார் மகிமாவிடம். அதில் சிவாவும் மகிமாவை சிரித்தபடி பார்க்க,

"ம்மா ஸ்வீட் வாங்கல்லாம் பொறுப்பு வேணுமா?" என்றதில் நன்றாய் சிரித்தான் சிவா.

"அது சரி!" என்ற மாலா,

"இங்க பாருங்க அண்ணி! இப்படிப்பட்ட இவ தான் வேணும்னு நீங்க இவ்வளவு மெனக்கெடுறிங்க!" என்று சொல்ல,

"ஏன்? ஏன் தங்கத்துக்கு என்ன?" என்றார் அவளை அழகாய் கொஞ்சி. அதில் அவளுமே இன்னும் அழகாய் கண்களை சுருக்கி புன்னகைத்து அத்தைபக்கம் சாய, சிவா பார்த்தபடி அமர்ந்தான்.

"சாமி கும்பிட்டு வாயேன் சிவா!" வள்ளி சொல்ல,

"இருக்கட்டும் ம்மா!" என்றவன்,

"என்ன சொன்னாங்க த்தை மாமா?" என்றான்.

நடந்ததை முழுதாய் கூற அமைதியாய் கேட்டனர் இருவரும்.

"ஓஹ்! போட்டோ வேற பாக்கணுமாமா அப்பாக்கு? அப்போ மாமா நல்லாயில்லைனா என்ன பண்ணுவாராம்?" மகிமா கேட்க, இன்று மட்டும் சிவா பல தடவையாய் அலுவலகத்தில் இருந்து இப்பொழுது வரை கண்டும் காணாததாய் தான் அவளை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

"அவசரப்படாத அம்மு! அவரே வனி வீட்டுக்காரர்கிட்ட சொல்றாரு அன்னைக்கு வளைகாப்பு விழால சிவாவை பார்த்தேன்னு" என்றதும் வள்ளியும் சிவாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

"ரொம்ப பெருமையா சொன்னார் என் தங்கச்சி மாதிரி அசல்ல பார்க்க அம்சமா இருந்தான்னு!" என்று சொல்ல சன்னமான புன்னகையுடன் திரும்பிக் கொண்டான்.

"அதானே அப்போ மாமாவை அப்பாக்கு புடிச்சிருக்கு இல்ல ம்மா?" மகிமா கேட்க, மாலா நியாபகம் வந்தவராய்,

"ஆமா அண்ணி! அண்ணேனுக்கு மகியை பிடிக்கும்ல? வேற எந்த பிரச்சனையும் வராதே!" என்றதும் வள்ளி மகனை தான் பார்த்தார்.

ஏற்கனவே அவன் நினைத்தது தான். இப்படி ஆசையாய் காத்துக் கொண்டு இருப்பவர்களை எப்படி பிரிக்க முடியும்.

"பார்த்துக்கலாம் த்தை!" என்று மட்டும் கூறினான்.

"சரி சிவா நீ போய் சாமி கும்பிட்டு வா. அம்மு நீயும் கூட போய்ட்டு வர்றியா?" என்று வள்ளி கேட்க,

"ம்ம் வர்றேனே!" என்றவள் மகிழ்ச்சி அவள் முகத்திலும் வெளிப்படையாய் தெரிய, அவன் இவர்களின் மலர்ச்சியை தான் கண்டு கொண்டிருந்தான் வந்தது முதல்.

"எல்லாம் நல்லபடியா நடந்தது தானே மாலா? எதுவும் சொதப்பிடலையே?" என்று அவர்கள் சென்றதும் வள்ளி கேட்க,

"கருப்பையா மாமாவை சும்மா சொல்ல கூடாது அண்ணி! எங்க எப்படி பேசினா வேலை நடக்கும்னு தெரிஞ்ச நல்ல மனுஷன். நானெல்லாம் அவருக்கு கோவில் கட்டி கும்பிட்டா கூட பத்தாது. அவரு மட்டும் இல்லைனா இப்படி மனுஷனை ஒரே நாள்ல சம்மதிக்க வச்சுருக்கவே முடியாது" என்ற மாலா,

"பிரளயமே நடக்கும்னு நினச்சு ரொம்ப பயந்து போய் இருந்தேன். நேத்தெல்லாம் கடவுளை மட்டும் நம்பி பேசாம விரதம் இருந்தேன். எதுவும் வீண் போகல. அப்படியே அமைதியாகிட்டார் மகி அப்பா. நிச்சயமா நல்லது மட்டும் தான் அண்ணி நடக்கும்!" என்று சொல்ல, அவர் கைகளை பிடித்தபடி இனி வாழவந்தானிடம் பேச குறித்துக் கொண்டார் வள்ளி.

சிவா கடவுளை வணங்கியபடி கண்மூடி நிற்க, பக்கத்தில் மகிமா அவனை பார்த்தபடி நின்றாள்.

விபூதியை வாங்கிக் கொண்டு பிரகாரத்தில் நடக்க, "நன்றி சொன்னிங்களா மாமா சாமிக்கு?" என்றாள் மகிமா.

"ம்ம்ஹும்!" என்றவன், "இதே மாதிரி கல்யாணம் வரையும் கூடவே இருந்து பார்த்துக்கோன்னு கேட்டேன்!" என்றான்.

"ஓஹ்!" என்றவள் ஒவ்வொன்றையும் தானும் செயல்படுத்த முயன்றாள்.

"அப்போ நானும் வேண்டிக்குறேன்!" என்றவள் அவன் அழைக்கும் முன் உள்ளே சென்று வேண்டுதல் வைத்து வர, அதுவரையுமே அவள் வர காத்து நின்றான்.

"காபி அடிக்குறேன் இல்ல?" என வந்ததும் கூறியவள்,

"கத்துக்குறேன்னு கூட சொல்லலாம் மாமா!" என்றாள் தானாய்.

"உனக்கு என்ன தோணுதோ அதை மட்டும் செய்! அதிகமா வேலை கொடுக்காத மூளைக்கு!" என்றவன் ஓரிடத்தில் அமர,

"என்ன மாமா?" என்றாள்.

"போகலாம்! உட்காரு!" என்றதும் தானுமாய் அமர்ந்தவள்,

"ஏதாச்சும் பேசணுமா?" என்றாள்.

"ம்ம் நிறைய!"

"ஓஹ்!"

"மகி! மேரேஜ் கன்ஃபார்ம். உனக்கு ஓகே தானே?" என்றான் முதல் கேள்வியாய்.

"மாமா! இப்போ தானே ஒரே மாதிரி வேண்டுகிட்டோம்? இதென்ன கேள்வி?" என்றாள் புரியாமல்.

"அதெல்லாம் ஓகே தான். ஆனா நான் சொன்னது நான் ஃபிக்ஸ் பண்ணிட்டேன்னு!"

"சரி!"

"சோ இனி நீ ட்ராப் பண்ண முடியாது!"

"நான் ஏன் மாமா...." என்றவளை பேச தடுத்தவன்,

"நீ கொஞ்ச நாள் முன்ன வரை மேரேஜ் வேணாம்னு சொன்ன தானே? எதுக்கு?"

"அதுவா? அப்ப ஒரு பயம். பிரண்ட்ஸ் ரெண்டு மூணு பேர் சேர்ந்து ரொம்ப பயப்பட வச்சுட்டாங்க"

"இப்போ இல்லையா அந்த பயம்?"

"போன வாரம் வரை இருந்துச்சு. ஏன் ரெண்டு நாள் முன்னாடி கூட" என்றவள்,

"ஆனா இப்போ இல்லையே!" என்று சொல்ல,

"ஹ்ம்! பட் என்ன நடந்தாலும் நீ பின் வாங்க மாட்ட தானே?"

"ஏன் மாமா இப்படி கேட்குறீங்க?" என்றவள் குழப்பத்தில் பார்த்தாள் விளையாட்டுத்தனத்தை எல்லாம் விட்டு.

அவனுக்கு எல்லாம் புரிந்தது. இந்த திருமணமும் அவனைப் பொறுத்தவரை முடிவாகிவிட்டதை போலத் தான். ஆனாலும் அவளின் இந்த சாதாரண பார்வை தான் அவனை அல்லலாடியது.

மதியம் அலுவலகத்தில் வைத்து "ஈவ்னிங் கோவில்ல மீட் பண்ணுவோம்!" என்று சொன்னதும் அவள் தலையாட்டி தன்னிடம் சம்மதம் சொல்லி திரும்பிய போது தான் தனக்கு ஒன்று புரிந்தது தான் எதிர்பார்த்த அந்த ஒன்று என்னவென்று.

கடந்த வெகு சில தினங்களில் அதாவது இரண்டு மூன்று தினங்களில் தன் மாற்றத்தை உணர்ந்திருந்தான். அதுவும் இன்று அவளை பாராமல் பார்த்த சில நேரங்களில் எல்லாம் தன் தேடல் தனக்கே புரிந்து ஒருவித அவஸ்தையை அவனுள் கொண்டு வந்திருந்தது.

நேசம். இவள் தான் என்று மனதுக்கு எப்படி தான் புரிகிறதோ ஒருவர் மேல் வரும் நேசம். அப்படி தான் அவனுக்குமே கடந்த இரு தினங்களாய் மனம் அலைபாய்ந்ததும்.

அவள் இயல்பாய் பேச வருவதை இப்பொழுது இயல்பாய் எதிர்கொள்ள தயக்கம் வர, அவளிடமே பேசிவிட முடிவு செய்து அவள்முன் அமர்ந்திருந்தான்.

"சும்மா தான் மகி. நீ நீயா இருக்க எப்பவும் நான் தடையா இருக்க போறதில்ல. ஆனா அதுக்காக மட்டும் நம்ம மேரேஜ் இருக்க கூடாது இல்ல?" சிவா கேட்க,

"மாமா! எனக்கு உங்களை பிடிக்கும் மாமா!" என்றவளுக்கு புரியவில்லை அவன் என்ன நினைக்கின்றான் என.

"ம்ம் உனக்கு என்னை பிடிக்கும் எனக்கும் உன்னை பிடிக்கும். அதனால தான் இந்த ப்ரோபசல். ஆனா அது மட்டும் பத்தாது நாம வாழ" என்றதும் பள்ளியில் அறிவியல் வகுப்பில் மாட்டிக் கொண்டதை போல விழித்தவளைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது சிவாவிற்கு.

"ஓகே! தானா தோணனும். உனக்கும் தோணும். பார்த்துக்கலாம். இன்னும் நமக்கு நேரம் இருக்கு" என்று முடிக்க,

"இல்ல இல்ல! நீங்க முழுசா சொல்லுங்க. இல்ல அம்மா என்னை திட்டும்!" என்றதும் சிவா தான் பதறிவிட்டான்.

"எது? அம்மாகிட்ட சொல்ல போறியா? வெளுத்துடுவேன்!" என்று சொல்ல, அதற்கும் விழித்தாள் அவள்.

அதில் "அம்மு!" என்றவனுக்கு சிரிப்போடு நேசமும் சேர்ந்ததாய் அவளை பார்த்து முறைத்தபடி சிரிக்கவும் செய்ய, ம்ம்ஹும் சுத்தமாய் புரிவேனா என்றது மகிமாவிற்கு.

"இதை தான் சொன்னேன். நீ இன்னும் வளரனும்!" என்றான் சிரித்தபடி.

"மூளையை தானே சொல்றிங்க?" மகிமா கேட்க,

"அதுவும் தான்!" என்று கிண்டல் செய்து எழ, "மாமா!" என்று முறைத்தபடி எழுந்தாள்.

"கொஞ்சம் கஷ்டம் தான்!" என்றவன் அவளை புரிந்து கொண்டானோ இல்லையோ தன்னை தானே நன்றாய் புரிந்து கொண்டான் இப்பொழுது.

"தானா புரியுமா தெரியலை. புரிய வச்சுடலாம்." என்றவன்,

"அப்புறம் அம்மு!" என்றதும் அவள் என்னவென பார்க்க,

"எப்பவும் நீ தானே சொல்லிட்டு இருப்ப எனக்கு உன்னை பிடிக்கும்னு? பொண்ணு பார்க்க வர்றேன். ரெடியாகிக்கோ. அன்னைக்கு நான் சொல்றேன்! ம்ம்?" என்று கேட்டு முன்னே நடக்க, புரியாத மொழி பேசி செல்பவனை பார்ப்பதை போல பார்த்து நின்றவள், இரண்டடி முன்னே சென்றவன் திரும்பிப் பார்த்து வா என புன்னகையுடன் கைகளால் அழைக்கவும் தானாய் அவனோடு சென்றாள்.

தங்களை நோக்கி சிவா மகிமா இருவரும் அருகருகே ஜோடியாய் நடந்து வருவதை பார்த்த பெற்ற அன்னை இருவரின் மனங்களும் குளிர்ந்து தான் போனது.

தொடரும்..
 

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
168
111
43
Dindigul
Achooo.. ippo edhukku inka oru ikkana nnu therilaye..
Siva aen ivlo aluththama ketkuraan.
intha daaddy's rendu perum edhuvum pirachinai seivaankalo..
makimaa avanka appa pecha kettu villaththanam pannuvala
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
Achooo.. ippo edhukku inka oru ikkana nnu therilaye..
Siva aen ivlo aluththama ketkuraan.
intha daaddy's rendu perum edhuvum pirachinai seivaankalo..
makimaa avanka appa pecha kettu villaththanam pannuvala
இல்லை பா.. மகிமா தெளிவா இருக்கிறாளானு செக் பன்றான் அவ்வளவு தான் 😊😊