அத்தியாயம் 24
வெள்ளி ஜரிகை நிறைந்த ஆரஞ்சு வண்ண பட்டுப் புடவை. இந்த ஒரு நாளை எதிர்பார்த்து ஒரு வாரம் முன்பே தந்தை கடையில் எடுத்து தைத்து மகிமா பாதுகாப்பாய் வைத்திருந்ததை எடுத்து தனக்கு பிடித்த விதமாய் தன்னை தானே அலங்கரித்து இதோ சிவாவின் முன்.
பார்ப்பதற்கு அத்தனை சாந்தமாய் வந்து நின்றவள் வணக்கம் வேறு வைக்க, புன்னகையை அடக்க பெரும்பாடுபட்டவன் தான் பின் அவளினில் கொஞ்சம் அதிகமாய் கவனத்தை கொண்டு சென்றான்.
எப்பொழுதும் பார்க்கும் பார்வை நிச்சயம் இல்லை. தனக்கே தனக்கான ஒன்றை ரசிக்கும் பார்வை. இவன் பார்க்கும் சமயத்தில் அவளும் பார்த்தவளுக்கு பளீரென ஒரு புன்னகை. மொத்தமாய் அவன் விழுந்ததும் அந்த பார்வையில் தான்.
பார்த்ததுமே அந்த சட்டையினை கண்டு கொண்டவள் கண்கள் விரிய, அந்த கண்கள் காமித்த பாரட்டைக் கூட படித்துவிட்டான் சிவா.
"இங்க வா அம்மு!" என தன் அருகில் வள்ளி அழைக்க, அவரருகில் வந்து அமர்ந்து கொண்டாள் மகிமா.
வள்ளிக்கு இரு புறமும் சிவாவும் மகிமாவும் இருக்க வாழவந்தான் பார்த்துக் கொண்டு தான் இருந்தார் அப்பொழுதும்.
"என்னம்மா! பொண்ணை பாட சொல்ல போறியா?" என்று சொல்லி பலமாய் கருப்பையா சிரிக்க, வாழவந்தான் வினோதன் தவிர்த்து அனைவருமே அதில் சிரித்திருந்தனர்.
மாலா பத்து முறைக்கு மேல் சொல்லி தான் வெளியே வரவைத்ததே மகிமாவை! தேவை இல்லாமல், யாரும் கேள்வி கேட்காமல் பேசவே கூடாது என்று.
திவாகர் அவர்களை புகைப்படம் எடுத்து கையோடு வனிதா, மகிமா இருவருக்கும் அனுப்பி விட்டிருந்தான் அப்பொழுதே!
"இப்போ சொல்லு ப்பா!" என்று கருப்பையா கேட்க,
"முதல்ல பொண்ணு மாப்பிள்ளைகிட்ட கேளு ண்ணே!" என்றார் கருப்பையாவின் தம்பி.
"அதான! வள்ளி நீயே கேளேன் பக்கத்துல தான இருக்காங்க!" என்று சொல்லவும் வள்ளி மகன்புறம் திரும்ப, அன்னையை திரும்பிப் பார்த்தவன் கண் சிமிட்டி புன்னகைத்தான்.
"ம்ம்ஹும்ம்! பெரியவங்க முன்னால வாயை திறந்து சொல்லிடு. இல்லைனா அது ஒரு பேச்சாகிடும்!" என்றார் வள்ளி மகனிடம்.
"எனக்கு ஓகே தான்ம்மா! அங்க கேளுங்க!" என்றது மகிமாவிற்கே கேட்க, மாலா மகிமா புறம் திரும்பினார்.
"நீ சொல்லு அம்மு! உனக்கு சிவாவை பிடிச்சிருக்கு தான?" என்றார் வள்ளி. சிறு தலையாட்டல் மட்டும் தான் அவளிடம்.
'மாலா த்தை வேலை!' சிவா நினைத்துக் கொள்ள, வள்ளி அதற்கு மேல் எங்கும் தேங்க விடவில்லை.
"எங்களுக்கு மகியை ரொம்ப பிடிச்சிருக்கு ண்ணே! நீங்களே நல்ல நாளை பார்த்தா அன்னைக்கே நிச்சயத்தை வச்சுக்குவோம்!" என்று நேராய் தன் அண்ணன் வினோதனிடம் பேச, தங்கையை நினைத்து ஆச்சர்யன் தான் வினோதனுக்கு.
"இப்படி சம்மந்திக்குள்ள பேசிகிட்டா தான் எந்த பிரச்சனையும் இல்ல. நான் பெருசா நீ பெருசானு போட்டி போட்டு எதுக்கு?" என்ற கருப்பையா,
"மாலா! நீ என்னம்மா சொல்ற?" என்றார்.
"அண்ணி சொன்னது தான் மாமா. எனக்கு ரொம்ப சந்தோசம்!" என கணவரைப் பார்க்க, வினோதன் சிவாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
தங்கை மகனாகவே இருந்தாலும் தெரிந்தவர்களிடம் விசாரிக்கவும் மறக்கவில்லை. அவருக்கு எல்லாம் திருப்தி தான் என்றாலும் அப்படி நேருக்கு நேர்ல வாழவந்தான் வள்ளி முன் முன்பான போல பேசிக் கொள்ள முடியவில்லை.
"நாள் குறிக்க ரெண்டு வீடும் தான போவணும்? எப்போனு கேட்டு சொல்லுங்க!" வினோதன் சொல்ல,
'இத்தனை இறங்கி வருகிறானா?' என்று பார்த்தார் வாழவந்தான்.
"இனிமே நீங்க தான் பேசிக்கணும். கேட்டு சொல்ல சொல்லுத?" என்றவர் வாழவந்தானைப் பார்க்க, கூடவே சிவாவும் அவரை தான் பார்த்தான் திரும்பி.
"இவன் வேற!" நினைத்தவர்,
"போவோம் மாமா!" என்றார் கருப்பையாவிடம்.
"அப்போ பூவை வைக்க தான வள்ளி?" என்று சொல்லவும் வள்ளி எழ, சிவா மகிமா இருவரும் எழுந்து கொண்டனர்.
வனிதாவை உதவிக்கு அருகில் வைத்துக்கொண்டு கொண்டு வந்த பூவை மகிமா தலையில் கனகவள்ளி வைக்க, தனக்கு முன் நின்ற சிவாவைப் பார்த்து கண் சிமிட்டினாள் மகிமா.
உயிர்வரை சென்று திணறடித்தது அந்த பார்வை. தடுமாறிப் போன மனதின் உணர்வுகள் பொங்கி பிறவாகமெடுக்க அந்த கண் அசைவும் அவளின் பளிச்சிட்ட முகமும் போதுமானதாய் இருந்தது.
சனி ஞாயிறு இரண்டு விடுமுறை நாட்கள் முடிந்து அடுத்த நாள் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த சிவா இந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்து கிளம்பி இருந்தான். பெரும்பாலும் அவனுக்கு கொடுக்கப்படுவது என்னவோ காலை ஏழு மணி என்ற முதல் ஷிப்ட் வேலை தான். அப்படி இல்லையென்றால் மதியம் ஒரு மணி முதல் இரவு பத்து மணி வரை என்பதாய் இருக்கும்.
இன்றும் காலை ஏழு மணிக்கு உள்ளே வர, அப்பொழுது தான் கார்த்திக்கும் வந்திருப்பான் போலும்.
"குட் மார்னிங் டா!" என்றபடி சிவா வந்து அமரவுமே கேட்டுவிட்டான் கார்த்திக்.
"என்ன டா புது மாப்பிள்ளை மாதிரி பளிச்சுனு இருக்க?" என்று.
அதில் இன்னும் மனதுக்குள் பனிச்சாரல்கள் சிதற, "சும்மாவே இருக்க மாட்டியா டா நீ?" என்றவன் மதியம் சாப்பிடும் முன் அனைவர்க்கும் தெரிவிக்க நினைத்திருந்தான்.
பத்து மணிக்கு தான் மகிமாவிற்கான வேலை நேரம். அன்று நேரில் பார்த்துக் கொண்ட பின் இன்னும் இருவரும் அலைபேசியில் கூட பேசிக் கொள்ளவில்லை.
சனிக் கிழமை அவள் வீட்டிற்கு சென்று வந்ததும் மகிமா திவாகர் அனுப்பிய புகைப்படத்தை சிவாவிற்கு அனுப்பி இருக்க, அதற்கு ஹார்ட் ஒன்றை அனுப்பியதோடு சரி.
இன்று அவளோடு சேர்ந்து நின்று அனைவர்க்கும் தெரியப்படுத்தும் ஆர்வத்தில் இருந்தான் சிவா.
பத்து மணி அளவில் "சிவா உன்னை சார் கூப்பிடுறாங்க!" என்று ஒருவர் சொல்லி செல்ல, மகிமா இருப்பிடத்தை பார்த்துவிட்டே உள்ளே எழுந்து சென்றான் சிவா.
மகிமா வரும் பொழுதே சிவா இருப்பிடம் பார்த்து தான் வந்தாள்.
"உன் மாமா இன்னைக்கு லீவு!" மகிமாவை பார்த்த கார்த்திக் அவள் கேட்கும் முன் சொல்ல,
"நான் பேக் இருக்கறதை பார்த்துட்டேனே! அதையும் மறைச்சு வச்சிருந்தா நம்பிருப்பேன்ல?" என்றாள் சிரித்துக் கொண்டு.
"ம்ம்க்கும்! அது ஒண்ணு தான் எனக்கு வேலை!"
"மாமா எங்க? கேன்டீனா?"
"சொல்ல மாட்டேனே!"
"ஓஹ்! அப்போ வட்டி எப்போ தருவிங்க?"
"சார் கூப்பிட்டாங்க. உள்ள போயிருக்கான். போய் அஞ்சு நிமிஷம் தான் ஆச்சு!" ரோபோ போல மொத்த தகவலையும் கொடுத்தான் கார்த்திக்.
"அந்த பயம் இருக்கட்டும்!" என்று சிரித்துவிட்டு அவளிடம் செல்ல,
"இவளை கந்துவட்டில போலீஸ்கிட்ட பிடிச்சு கொடுக்கனும்!" என்று முணுமுணுத்துக் கொண்டான் கார்த்திக்.
வெளியில் வந்த சிவாவின் முகம் அத்தனை யோசனைகளை காண்பிக்க, வந்து தன் இடத்தில் அமர்ந்தான்.
"இப்போ தான் உன் மாமன் மக வந்து போனா. வட்டி காசு கேட்டு கொடுமை படுத்துறா டா. என்னனு கேளு!" என்று கார்த்திக் சொல்லியதில் மகிமா இடம் நோக்கி சிவா தலைசாய்க்க, அவள் கேன்டீனிற்கு பறந்திருந்தாள்.
இதை எதிர்பார்க்கவில்லை எனும் விதமாய் மனம் அலைபாய்ந்தது. ஆனாலும் எதுவும் செய்துவிட முடியாதே!
இன்னும் மூன்று மாதத்தில் மகிமாவின் பிறந்தநாள். இரட்டைப்பட வயதில் திருமணம் கூடாதென்று சொல்லி இன்னும் மூன்று மாதத்திற்குள் திருமணத்தை வைக்க பெரியவர்கள் சேர்ந்து பேசி இருந்தனர்.
அதற்கு முன் நிச்சயதார்த்தமும் வைக்க தான் நாள் குறிக்க செல்ல இருக்கின்றனர்.
நினைத்தபடி சிவா இருக்க, "குட் மார்னிங் மாமா!" என தன்முன் வந்து நின்றவளைப் பார்த்து சட்டென முகம் மாறி புன்னகை கொடுத்தவன்,
"மார்னிங் அம்மு!" என்றான்.
பக்கத்தில் இருந்த கார்த்திக் "ம்ம்க்க்கும்ம்ம்!" என்று பெரிதாய் தொண்டையை செரும, அதை இருவருமே கண்டு கொள்ளவில்லை.
அன்றும் அம்மு என்று சொல்லவும், "என்ன டா அம்மு பொம்முனு!" என்று கார்த்திக் கேட்டதற்கு, தெரிய வேண்டியது தெரிய வேண்டிய நேரம் தெரிய வரும் என்று சொல்லிவிட்டானே சிவா.
அதற்குமேல் குடும்பத்தை பற்றி எல்லாம் கூறி இருக்கவில்லை. அதனால் இது சாதாரணமா இல்லையா என்று குழப்பம் தான் இன்று வரை கார்த்திக்கிற்கு.
சிவா கையில் இருந்த பேப்பரை மொபைலில் போட்டோ எடுத்து மகிமாவிற்கு அனுப்பிவிட்டு அங்கிருந்தே அவளை கவனித்தான்.
தன் இடத்திற்கு வந்தவள் மொபைலை எடுத்துப் பார்க்க சிவா தான் வாட்சப்பில் என்னவோ அனுப்பி இருந்தான். இப்பொழுது தான் அனுப்பி இருக்கிறான் என நேரத்தை பார்த்துவிட்டு அதை ஓபன் செய்து படித்தவள் விழிகள் ஒளிர்ந்து பின் சுருங்கியது.
திரும்பி அவனைப் பார்க்க, அவனும் தன்னை காண்பதைப் பார்த்து எழவும் வேண்டாம் என தலையசைத்து கண்ணமர்த்த அப்படியே அமர்ந்து கொண்டாள்.
உடனே கேட்டு தான் பழக்கம். இப்படி இதையே யோசித்துக் கொண்டிருக்கவா என பாவமாய் அவள் பார்க்க, ஈவ்னிங் வெளில போலாம் என்றொரு செய்தி மீண்டும் அவனிடம் இருந்து வர, முகம் தெளிவுற்றது அவளுக்கு.
சட்டென நின்று பேசி முடிக்கின்ற விஷயமும் இல்லை அதற்கானவளும் இல்லை அவள். அதனால் அப்போதைக்கு பேச வேண்டாம் என முடிவு செய்து அமைதி காத்தான்.
இதோ நான்கு மணிக்கு இருவரும் மட்டும் கடற்கரையில்.
"கோவிலுக்கு தான் போவோம் நினச்சேன்! வாவ் மாமா!" என்றாள் சுற்றிலும் பார்த்து.
வெயிலும் இல்லை மழையும் இல்லை. ரம்மியமான சூழல்.
"மெசேஜ் பார்த்தியா அம்மு?" சிவா கேட்க, சட்டென நியாபகம் வந்தவளாய்,
"கங்கிரட்ஸ் மாமா! ப்ரோமோஷன்க்கு!" என்று சொல்லி கை நீட்ட, புன்னகையோடு கைகுலுக்கிக் கொண்டான்.
"நடக்கலாமா?" கைகளைப் பிடித்தப்படியே சிவா கேட்க, நெஞ்சில் முதல்முறையாய் ஒரு பதைபதைப்பும் கண்களில் அதை மறக்கும் பாவமும் வெளிப்படையாய் மகிமாவிடம்.
அதை கவனிக்கவுமே செய்தான். ஆனாலும் கண்டு கொள்ளாதவனாய் கைகளை தானே நன்றாய் அவளோடு கோர்த்துக் கொள்ள, அப்பட்டமாய் விழி விரித்தவள் பேச மறந்துவிட நடக்கவே ஆரம்பித்துவிட்டான் அவன்.
"நீ என்ன நினைக்குற அம்மு?" என்ற கேள்வியில்,
"ஹான்?" என்றவளுக்கு என்ன என்றே புரியவில்லை.
"அதான் லெட்டர் பார்த்தியே! சென்னைல டென் டேஸ் ட்ரைனிங்!" என்றதும் தான் நியாபகம் வர,
"ஆமா மாமா! ஆனா ட்ரைனிங் மட்டும் தானே? வேலையை மாத்த மாட்டாங்க தானே?" என்றவள் கைகளை மறந்துவிட்டாள் அவன் சாதாரணமாய் பேசிக் கொண்டு நடந்ததில்.
"அப்படி தான் நானும் நினைக்குறேன். ஆனாலும் இந்த டைம் எப்படி? வீட்டுல என்ன சொல்வாங்க தெரில"
"எங்கேஜ்மென்ட் இருக்குல்ல? அப்போ என்ன பண்றது மாமா?" என்றாள்.
"வீட்டுல பேசி பாக்கணும் அம்மு. வேற என்ன பண்ண? இந்த சான்ஸ் விட முடியாதே!"
"ம்ம்!"
"உனக்கென்ன தோணுது?"
"ப்ரோமோஷன் நல்லது தானே மாமா?" என்று சொல்ல,
"ஆனா இன்னும் டூ டேஸ்ல நான் சென்னை கிளம்பனும். உனக்கு ஓகேவா?" என்று கேட்டது புரியவில்லை என்றாலும் மனதை என்னவோ செய்தது மகிமாவிற்கு.
"டென் டேஸ் நான் ஆபீஸ் வர மாட்டேன். என்னை பார்க்க முடியாது!" ஓரிடத்தில் நின்று தெளிவாய் அவன் சொல்ல,
"ஹ்ம்!" என்றவளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
கோர்த்திருந்த கைகளை தூக்கியவன் செயலில் மனதில் இன்னும் படபடப்பு கூடிவிட, அவள் விழித்த விதத்தில் இதமாய் ஒரு புன்னகை சிவாவிற்கு.
"என்னோட ஃபர்ஸ்ட் கிப்ட்!" என்றவன் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய டப்பாவை எடுக்க,
"மாமா?" என்றவள் கண்களில் அத்தனை வியப்பு. மயில் வடிவம் இருக்கும் மெல்லிய மோதிரம்.
"உன் கிப்ட்க்கு பதில் கிப்ட்னு எல்லாம் நினைச்சுடாத. இப்ப நீ அஃப்பிசியல்லி சிவாவோட பார்ட்னர். இன்னும் கொஞ்ச நாள்ல மகிமா சிவபிரகாஷ். அதை நீயாபகப்படுத்த தான் இது"
பிடித்திருந்த கையினை இன்னும் விட்டிருக்கவில்லை சிவா. தலையசைத்து சம்மதம் கேட்டு புருவம் உயர்த்த, சம்மதமாய் தன்னால் தலை அசைந்தது அவளிடம்.
"இன்னைக்கு ஆபீஸ்ல எல்லாருக்கும் இன்ஃபார்ம் பண்ணிட்டு உன்னை இங்க கூட்டிட்டு வர நினைச்சேன். இந்த லெட்டர் வரவும் இப்ப ஆபீஸ்ல சொல்ல வேணாம்னு தோணுச்சு. போய்ட்டு வந்து சொல்லவா?" என்று கேட்க, அதற்கும் சம்மதமாய் தலை அசைத்தாள்.
"டென் டேஸ் சென்னைல.." என்று சொல்லி சிவா அமைதியாக, புரியாத உணர்வொன்று ஆட்டி வைத்ததில் அத்தனை அமைதி மகிமாவிடம்.
"மிஸ் பண்ணுவேன் அம்மு!" சொல்லியே விட்டான்.
விரிந்த விழிகள் படபடப்போடு அலைபாய்ந்து மனம் முழுதும் என்னவோ செய்ய, அலைபாய்ந்த அந்த விழிகளில் அவனின் தேடலை கண்டு கொண்டான்.
"ஆனா இந்த பத்து நாள் நிச்சயம் உனக்கும் எனக்கும் வேணும்!" சிவா சொல்ல,
"மாமா?" என்றவளுக்கு புரியவில்லை.
"மாமான்றதை தாண்டி நீ இன்னும் நிறைய யோசிக்கணும். நான் இனி யார் உனக்கு? நீ எனக்கு? இதையெல்லாம் நாம பேச இந்த பத்து நாள் கண்டிப்பா வேணும்!"
"இந்த ரிங் என்னை உனக்கு நியாகப்படுத்த இது தான் கரெக்ட் டைம். அன்எக்ஸ்பெக்டட் டைமிங்!" என்று புன்னகைத்தவன் அவள் கைகளை பிடித்து விரலில் மோதிரத்தையிட, பார்வை முழுதும் அவனிடம் தான் மகிமாவிற்கு.
'என்ன பேசுகிறான்!' என்பதாய் பார்த்து வைத்தாள்.
தொடரும்..