அத்தியாயம் 25
பெரும் அலை ஒன்று நெஞ்சில் எழ மொத்தமாய் அவளை சாய்த்துவிட பார்த்து நின்றது. புரியாத உணர்வுகளை எல்லாம் அவளுள் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான் சிவா.
ஏதும் அறியா பிள்ளை போல மலங்க விழித்து நின்றவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொள்ள தான் எத்தனை தவிப்பு?
அவள் மனம் படும்பாடு விழிகளில் பிரதிபலிக்க, உணர்வுகளை மறைக்க முடியாமல் முகம் காட்டும் பாவனையில் நிதானத்தை பிடித்து இறுக்கிக் கொள்ள முடியாமல் பிடித்திருந்த கைகளோடு திரும்பிக் கொண்டான் சிவா.
"மாமா!" இந்த சின்ன விலகலை கூட அவளால் மனதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.
"ஹ்ம்!" என்றவன் மூச்சுக்காற்றுகள் தன் பலத்தை குறைத்துக் கொண்டிருந்தது அவளுக்கு எதிர்புறமாய்.
சில நொடிகள் மட்டுமே அப்படி நின்றவன் தன்னை தானே நிதானத்திற்குக் கொண்டுவந்து அவள்புறம் திரும்பினான்.
"ப்ச்! டென்ஷன் பண்ணிட்டேனா உன்னை?" என்று கேட்டவன் இதழ்கள் மென்னகையை சுமந்திருக்க, அவள் பார்வை அவனை இன்று இந்த நொடி தான் அதிகமாய் கவனித்தது.
"ஓய்!"
"ஹான்! மாமா!"
"என்னாச்சு? பயந்துட்டியா?"
"ம்ம்ஹும்!" என்றவளுக்கு பேச தெரியவில்லை.
"அம்மு!" என்று சிரித்தவன்,
"சரி விடு! நீ எப்பவும் போலவே என்கிட்ட இரு. அது தானே உனக்கு பிடிக்கும்?" என்றவன்,
"ஆனா இன்னும் அதுல எக்ஸ்ட்ரா நீ என்னையும் சேர்த்து அட் பண்ணிக்கணும். வேற வழியே இல்ல!" என்று இன்னும் சிரித்தான்.
"நீ நீயா இருக்குறது ஓகே! ஆனா நீ தான்னு நான் முடிவு பண்ணின அப்புறம் எனக்குள்ள நீ வந்த அப்புறம் என்னால அப்படி சுத்தமா இருக்க முடியல. நீயா புரிஞ்சிக்குவனு நினச்சேன்.. ம்ம்ஹ்ம்ம்!" என்று மீண்டும் சிரிக்க, தன்னை நினைத்தே ஒரு வெட்கப் புன்னகை கூட வெளிவந்தது மகிமாவிற்கு.
அவனுக்கான அவளின் பிரத்யேக சில உணர்வுகளை பேச்சுக்களை நினைவுகளை என எதிர்பார்த்து விழிபார்த்து காத்திருந்தவனுக்கு இன்று தான் பெரும் ஆறுதல் கொடுத்தது அந்த விழிகள்.
"நீ ஓகே தானே அம்மு?" கேட்டவன் புன்னகையை இதழ்களுக்குள் மடிக்க,
"ஹ்ம்ம்!" என்றதற்கு மேல் வார்த்தை இல்லை.
இல்லையே! அவளாய் இருந்தால் இந்நேரம் அவன் ஒரு வார்த்தைக்கு இவளிடம் பத்து வார்த்தைகளாவது விழுந்திருக்குமே. அதை கூறி அவளை குழப்ப விரும்பவில்லை.
அவளுக்கு இதுவும் தெரிய வேண்டுமே! கூடவே தன் மனமும்.
அவள் கையோடு தன் கையை திருப்பி கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவன், அவளை கண்களை மட்டும் உயர்த்திப் பார்த்துவிட்டு தன் கைகளுக்குள் புதைந்திருந்த அவள் கைகளை விரிக்க, மனம் படபடவென்று தன் துடிப்பை அதிகமாக்கியது மகிமாவிற்கு.
மூடி இருந்த கைகளுக்குள் ஈரம். அவளின் மனவோட்டத்தை தெளிவாய் அது கூற,
"என்கிட்ட என்ன இவ்வளவு டென்ஷன் அம்மு?" என்றவன் கேள்வி அவள் காதில் விழாமல் அம்மு என்ற வார்த்தை மட்டும் தெளிவாய் நுழைந்தது.
பத்து மகி வரும் நேரத்தில் அரிதாய் வீட்டில் அழைக்கும் அம்மு என்ற வார்த்தையை ஒரு முறை உபயோகிப்பான். அதை அவள் இதுவரை நினைத்துப் பார்த்ததில்லை.
மகி என்ற பெயரே நியாபகம் இல்லாததை போல இங்கே வந்தது முதலான அவனின் அம்மு என்ற அத்தனை அழைப்புக்களும் மனதுக்குள் வரிசைகட்டி வந்து நின்று இதற்கு முன்னான அவனின் அழைப்புக்களை எல்லாம் வித்தியாசத்துடன் மனதுக்கு கைகாண்பித்துக் கொடுத்தது.
"ம்ம் எவ்வளவு பேச வைக்குற நீ?" என்றவன் அவள் விரல்களைப் பிடித்தபடி திரும்பி நடக்க சொல்லி தலையசைக்க தானும் உடன் நடந்தாள்.
இதுவே பெரிய மாற்றம். பேச நிறைய இருந்தும் அவளின் இந்த அமைதி அவளின் மாற்றத்தை உணர்த்தியதில் இப்போதைக்கு போதும் என்று முடிவெடுத்தான்.
மணி ஆறை தொட இருந்தது. சுத்தமாய் நேரம் சென்றதே தெரியவில்லை. அப்பொழுது தான் நினைவு வர அலைபேசியை எடுத்துப் பார்த்தான் சிவா.
இரண்டு முறை அன்னை அழைத்திருக்கிறார். திரும்ப அவருக்கு அழைத்தவன்,
"ம்மா ஒரு ஹால்ப் அன் ஹவர்! மொபைல் சைலன்ட்ல விட்ருக்கேன் போல" என்று சொல்ல, கேட்டிருந்தாலும் மகிமா அவன்புறம் திரும்பவில்லை. இன்னமும் அவள் விரல்களையும் தான் விடவில்லை அவன்.
"இவ்வளவு நேரமா சிவா? நாலு மணிக்கெல்லாம் வந்துடுவியே. இன்னும் வரலையேனு இப்ப தான் அம்முக்கு போன் போடலாம்னு எடுத்தேன். நீ பண்ணிட்ட!" என்றதும் முகம் மலர்ந்தவன்,
"உங்க அம்மு கூட தான் ம்மா இருக்கேன்!" என்றதும் அவள் அவன்புறம் திரும்ப,
"பேசுறியா?" என்றான் சத்தமின்றி. வேகவேகமாய் அவள் மறுத்தத்தில் மீண்டும் அடக்கப்பட்ட புன்னகை அவனிடம்.
மகன் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்த வேகத்தில் வள்ளிக்கு அப்படி ஒரு சந்தோஷம்.
"சரி டா சரி டா! பார்த்து வாங்க!" என்று சொல்லி உடனே வைத்துவிட்டார்.
தனது பைக் அருகே வரும்வரை பேச்சுக்கள் இல்லை இருவரிடமும். மனம் முழுதும் புரியாத உணர்வுகளை புரிய வைக்கும் முயற்சியில் இருக்க மகிமா தன்நிலையில் இல்லை.
தன் எண்ணங்களை அவளிடம் சேர்த்துவிட்ட நிறைவில் இருந்தவன் அவளின் மாற்றத்தில் மகிழ்ந்திருந்தான்.
"நான் சென்னை கிளம்பலாம் தானே?"
"ம்ம் போய்ட்டு வாங்க மாமா!"
"அப்போ தேடமாட்ட?"
"மாமா..." என்றவள் சிணுங்களில் சிரித்துக் கொண்டவன்,
"சரி சரி! நாளன்னைக்கு கிளம்ப சொல்லிருக்காங்க. அங்கேயே ரூம் கொடுத்திருக்காங்க. டென் டேஸ் தானே? சமாளிச்சுக்கலாம். பட் எங்கேஜ்மென்ட் மாமா உடனே வைக்கணும் சொன்னாங்க!" என்று யோசனையாய் பார்த்தவன்,
"வந்ததும் முதல் நல்ல நாள் எதுவோ அப்ப வைக்க சொல்லலாம். அப்படியே ஆபீஸ்ல கூட நாம இன்ஃபார்ம் பண்ணிடலாம். அத்தைகிட்ட பேசு. நான் அம்மாகிட்ட பேசிட்டு சொல்ல சொல்றேன்!" என்றதற்கும் அவள் தலையாட்ட,
"நாளைக்கு ஆபீஸ் வந்துடுவேன். வேற எதுவும் கேட்கணுமா அம்மு?" என்று கேட்டதற்கு,
"ம்ம்!" என்றவள் உடனே இல்லை என்று தலையாட்ட,
"என்னவாம்!" என்றான் மனம் குறுகுறுக்க.
"கேட்பேன். ஆனா..." என்றவள் அவன் எதுவும் நினைத்துக் கொள்வானோ என தயங்குவது புரிய,.
"கேளு டா!" என்றான் கனிவாய் விளையாட்டின்றி.
"இப்ப நான் என்ன பண்ணனும் மாமா?" என்றவள் பாவமான கேள்வியில் பலமாய் சிரித்தான் சிவா.
"நீ எதுவுமே பண்ண வேண்டாம் அம்மு!" என்று சிரித்தபடி சொல்லியவன் அவள் கண்ணங்களை கிள்ளிக் கொள்ள எழுந்த ஆவலில் கைகளை நீட்டி விட்டாலும் அதை தொடராமல் தலையில் கைவைத்து வாஞ்சையாய் ஆட்டிவிட்டான்.
"தானா நடக்கட்டும். அடிக்கடி கால் பண்ணு. தப்பில்ல! பேச தான் கால் பண்ணனும்னு இல்ல. பேச தோணினாலும் பண்ணலாம்!" என்று சொல்ல, புரிவது போலவும் புரியாதது போலவும் விழித்தவள் தலையசைத்து வைத்தாள்.
"போலாமா?" என்று சிவா கேட்க, வரும் பொழுது இல்லாத தயக்கம் இப்பொழுது அவனுடன் செல்ல வந்த தயக்கத்தில் பதிலின்றி பார்த்தாள்.
"பழகிக்கலாம். பழகிக்கனும்!" என்றவன் புன்னகையில்,
"போலாம் மாமா!" என்று அவனோடு இணைந்து கொண்டாள்.
****************************************
"நிஜமாவா சொல்ற சிவா?" என்று அதிர்ச்சியாய் கேட்டார் கனகவள்ளி.
"விளையாடற நேரமா இது?" என்றவனுக்கும் அன்னை நினைப்பது புரிந்தது.
"என்ன சிவா இப்படி சொல்ற? நம்ம ஊர்ல பூ வச்ச பொண்ணுக்கு கல்யாணம் உடனே செஞ்சு தான் பழக்கம். எதாவது அவசரம்னாலும் நிச்சயத்தையாவது வைக்கணும். இப்படி நாளைக்கே நீ கிளம்பினா நான் என்னனு என் அண்ணே வீட்டுல பேச? அண்ணே என்ன நினைப்பார்?" என்று வள்ளி பயந்து கூற, அதை கேட்டபடி தான் வீட்டினுள் வந்திருந்தார் வாழவந்தான்.
"என்ன? எங்க கிளம்ப போற?" என்றார் புரியாமல்.
"ப்ரோமோஷன் ப்பா! ட்ரெயினிங் பத்து நாள் சென்னைல!" என்றான்.
"பத்து நாளா?" என்றவர்,
"எப்ப போகணும்?" என்று யோசனையாய் கேட்க,
"நாளன்னைக்கு" என்றான்.
"என்ன டா சொல்லுத நீ? பூ வச்ச பொண்ணை விட்டுட்டு ஊருக்கு போறேன்னு நிக்குற? இதுக்கு தான் அவ்வளவு அவதியா போய் பேசிட்டு வந்தியளா?" என்று வந்துவிட்டார் கனகவள்ளியை பேசியபடி ஈஸ்வரியும்.
"ப்ச்! பாட்டி இது இன்னைக்கு தான் எனக்கு தெரியும். முன்னாடியே தெரிஞ்சிருந்தா போய்ட்டு வந்து பார்த்துக்கலாம்னு அன்னைக்கே நான் சொல்லிருப்பேனே?" என்றான் சிவாவே.
"நல்லா சொன்ன போ! இதென்ன பூ வச்சுட்டு வந்ததும் தடங்கல்?" ஈஸ்வரி சொல்ல, கனகவள்ளி பதறினார் இப்படி பேசுகிறாரே என்று. ஆனாலும் அத்தையிடம் அன்றைக்கு அவர் பேசிய விதத்தில் இன்னும் பேசவில்லை.
"தடங்கலா? அவளை எனக்குன்னு முடிவு பண்ணினதும் என் வாழ்க்கைக்கும் அடுத்த உயரத்துக்கு ஒரு வழி கிடைச்சிருக்கு பாட்டி. இதை தடங்கலா எப்படி சொல்ல முடியும் நீங்க? பேசணும்னு எதுவும் பேசாதீங்க!"
"என்னவோ! இப்போ அந்த வீட்டுல என்னத்த சொல்ல?" என்றதும் சிவா வாழவந்தானைப் பார்க்க,
நானெல்லாம் போய் நிக்க மாட்டேன்!" என்றார் உடனே அவர்.
"ஹ்ம் சரி! நானும் அம்மாவும் போறோம். நாங்களே பேசிக்கிறோம்!" என்றவன் குரலில் என்ன உணர்ந்தாரோ,
"கூட வர்றேன்னு சொல்லேன். உடனே அம்மா கூட போவானாம். அப்பா கூட எப்ப தான் நிக்க போறானோ!" என்றவர்,
"என்னைக்கு போகணும் நீ?" என்று கேட்க,
"நாளன்னைக்கு!"
"அப்போ நாளைக்கு போய் பேசிட்டு வந்துடுவோம்!"
"நீங்களும் அம்மாவும் தான் போறீங்க!"
"ஏன்? நீ வரலாம்ல? உன் அம்மா கூட மட்டும் போறேன்னு நின்ன?"
"எனக்கு ஆபீஸ்ல ஒர்க் இருக்கு பா. முடிச்சு குடுத்தா தான் நாளன்னைக்கு நான் கிளம்ப சரியா இருக்கும்!"
"எப்ப தான் நான் பேசுறதுக்கு சரினு நீ சொல்லி பழக போறியோ!" என்றபடி அவர் உள்ளே செல்ல, கணவனை மகன் கையாண்ட விதத்தில் ஒரு புன்னகை வள்ளிக்கு.
"அப்பா கூட போய்ட்டு வந்துடுங்க ம்மா. நாள் இப்பவே குறிச்சு வச்சுட்டாலும் ஓகே தான். எக்ஸக்ட்டா பத்து நாள் தான். வந்துடுவேன். அடுத்த நாளே நிச்சயம் வச்சாலும் ஓகே தான்!" சிவா சொல்ல,
"சரி டா பெரிய மனுஷா!" என்று சிரித்தார் வள்ளி.
"ம்மா!" என்றவனுக்கும் வெட்கத்தில் உதடுகள் வளைய,
"அம்மு என்ன சொன்னா?" என்றார்.
"ம்ம் நல்லா சொன்னாளே!" என்றவன் பதிலில் அதற்குமேல் கேட்கவில்லை அவர்.
"அத்தைகிட்ட சொல்ல சொன்னேன். வேற எதுனாலும் கூட ஆபீஸ்ல பேசி பார்த்திருப்பேன். ப்ரோமோஷன்னும் போது தான் என்னால பேச முடிலம்மா!"
"நீ சொன்ன மாதிரி நல்ல விஷயம் தான சிவா? அப்புறமென்ன? இனி எல்லாம் உனக்கு நல்லதா அமையட்டும்!" என வாழ்த்தினார்.