அத்தியாயம் 28
ஒரு மணிக்கு அனைவரும் சாப்பிட சென்றுவிட, சிவா இரண்டு மணிக்கு தன்னுடன் வரும்படி சொல்லி இருந்தான் மகிமாவிடம்.
அப்பொழுதும் கூட சாப்பிடும் இடத்தில் தான் அவன் பேசுவான் என மகிமா எதிர்பார்த்திருக்க, வெளியே அழைத்துவந்துவிட்டான்.
"நான் லஞ்ச் கொண்டு வந்திருக்கேன்" மகிமா சொல்ல,
"நானும் தான் கொண்டு வந்திருக்கேன்!" என்றவன் சொல்லில் அமைதியாகிப் போனாள்.
"அத்தை கேட்டா என் கூட சாப்பிட்டேன்னு சொல்லு!" என்றவன் ஹோட்டலுக்கு அழைத்து சென்று அவளுக்கு தேவையானதைக் கேட்டு சொல்லிவிட்டு அமர்ந்தான்.
"சாரி மாமா!" என குழந்தையாய் மகிமா கூற,
"எதுக்கு?" என்றான் சிவா.
"சொல்ல வேண்டாம்னு தான் நினச்சேன். ஆனா சட்டுனு உங்களை ஆபீஸ்ல பாத்ததும் அழுகை வந்துடுச்சு!"
"என்கிட்ட சொல்ல என்ன அம்மு? நான் தான் சொன்னேன்ல பேச தோணுச்சுன்னா கால் பண்ணுன்னு!"
"சொன்னிங்க! நீங்க தான் நான் கால் பண்றேன்னும் சொன்னிங்க!" என்றாள் கோபத்தை காட்டியும் காட்டாமலும் அவன் முகம் பார்த்தும் பார்க்காமலும்.
"ப்ச்! நேத்து நான் வேலையா இருந்தேன் டா. எல்லாத்தையும் முடிச்சுட்டு மணியை பார்க்கும் போது நைட் லெவன் தாண்டிடுச்சு! அப்பவும் உன்கிட்ட பேச நினைச்சு ஆன்லைன் வந்தேன். நீ இல்ல. தூங்கி இருந்தா டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு விட்டுட்டேன்"
"போங்க மாமா! ஒரு ரெண்டு நிமிஷம் கூடவா கிடைக்கல?" இன்னும் அந்த தாக்கத்தில் இருந்து அவள் வெளிவரவில்லை என புரிந்தவனுக்கு மனம் உருகியது.
"நேர்ல பார்த்தா மட்டும் தான் இப்படிலாம் பேசி என்னை இம்சை பண்றீங்க! உங்களுக்கு நான்....." என்றவள் நிமிர்ந்து அவன் முகத்தினைப் பார்த்திருக்க, அதில் தெரிந்த அந்த குறுகுறு பார்வையும் சின்ன புன்னகையும் என அவள் வார்த்தைகளை நிறுத்தி இருந்தது.
"ம்ம் சொல்லு! எனக்கு நீ?" என்றவன் புன்னகைக்க, இவள் முறைத்தாள்.
"சத்தியமா நீ இவ்ளோ என்னை தேடுவன்னு நான் நினைக்கவே இல்ல அம்மு. ரெண்டு நிமிஷம் பேசினா போதுமா உனக்கு? எனக்கு போதாதே! நிறைய பேசணும்!" என்றவன் பேச்சில் மனதின் ஓரம் ஒரு இனிமை தோன்றினாலும் அவள் முறைத்துக் கொண்டே இருக்க,
"நேத்தெல்லாம் செம்ம ஒர்க் தெரியுமா! பேக்கிங் ஒர்க் ஒரு பக்கம்! பத்து நாள் நான் வீட்டுல இல்லைனா அம்மாக்கு தான் கஷ்டம். வீட்டுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் வாங்கி வைக்கணுமே! தனியா எப்படி ஹண்டில் பண்ணுவாங்க? அம்மா கூட ஸ்டோர் போனேன். அங்க லேட் ஆகிடுச்சு. வந்ததும் அப்பா கடைக்கு ஸ்டாக் வந்திருக்கு பிரிச்சு கணக்கு மட்டும் பார்த்திட்டு வானு சொல்லிட்டாங்க. அதை முடிச்சுட்டு வர தான் லெவன் ஆகிப் போச்சு!" என்றவன் சொல்லில் அந்த நேரமின்மையை உணர முடிந்தது மகிமாவிற்கு.
"இன்னும் நம்பல தான நீ?" என்றவன்,
"இன்னைக்கு நான் ஆபீஸ் வந்ததே உனக்காக தான்!" என்றதும் அவள் விழிகள் விரிந்த அழகிற்கே மயங்கிப் போனான் சிவா.
"சும்மா சொல்லாதீங்க மாமா! சார் வர சொன்னாங்க சொன்னிங்க?"
"ஆமா பின்ன! அம்முவை பாக்கணும்னு இருந்துச்சு அதான் ஆபீஸ் வந்தேன்னு எல்லார்கிட்டயும் சொல்ல முடியுமா?"
"மாமா!" என்றவள் முறைப்பில்,
"நிஜமா அம்மு! மார்னிங் எழுந்ததும் உனக்கு கால் பண்ண தான் நினச்சேன். அப்புறம் தான் தோணுச்சு!"
"எப்படி என்னை அழ வச்சு பாக்கணும்னா?"
"டேய்!" என்று முறைத்ததில் அவளும் முறைக்க,
"சீரியஸ்லி உனக்காக தான் வந்தேன். பஸ் நைன்க்கு தான். இங்க இருந்துட்டே எப்படி உன்னை பாக்காம இருக்குறதாம்? அதனால தான் என்னை பார்த்து நீ எப்படி ஷாக் ஆகுறனு நான் பார்க்க வந்தேன். நீ எனக்கு ஷாக் குடுத்துட்ட!" என்றான்.
"மறுபடியும் சொல்றேன் அம்மு! நீ தான் பேசணும் நான் தான் பேசணும்னு எல்லாம் நமக்குள்ள இல்லவே இல்ல. உனக்கு என்னை பாக்கணும் பேசணும் தோணுச்சுன்னா உடனே கால் பண்ணு. வீடியோ கால் கூட!" என்றதும் அவள் அதிர்ச்சியாய் பார்க்க,
"ஓய்! என்ன?" என்றான் சின்ன சிரிப்போடு!
"ம்ம்ஹுஹ்ம்ம்!"
"ஹ்ம்! அவ்வளவு மிஸ் பண்ணியிருக்க இல்ல?" என்ற அவன் கூற்றில் முகம் சிவந்தது மகிமாவிற்கு.
"இப்போ நான் தான் என்ன பண்ண போறேனோ பத்து நாள்?" என ஏக்கமாய் சொல்ல,
"கால் பண்ணுங்க மாமா!" என்றாள் கிண்டலாய்.
"ம்ம் சிரிக்குற நீ!" என்றவனும் இணைந்து கொண்டான்.
சாப்பிட்டு முடித்ததும் போகலாம் என மகிமா தலையசைக்க,
"போகலாம்!" என்றவன்,
"ஆனா அம்மு! நீ நீயாவே இரு. என்கிட்டயும். அது தான் நல்லாருக்கு. என்னை தேடினது எனக்கு சந்தோசம் தான். நான் எக்ஸ்பெக்ட் பண்றதும் கூட அது தான். அது உனக்கு என்னை புரியனுமேன்னு மட்டும் தான். மத்தபடி எந்த விஷயத்திலேயும் உன்னை நீயே வீக்கா நினைக்குற அளவுக்கு நீ இருக்க கூடாது. அது எனக்காகவே இருந்தாலும். நான் எங்க போக போறேன். பத்து நாள் தான். மாமா சொன்னபடி பார்த்தா இன்னும் மொத்தமே ரெண்டு மாசம் கூட இருக்காது நம்ம கல்யாணத்துக்கு. சோ!" என்று நிறுத்த, அவன் கூற வருவதும் புரிந்தது.
"ஆபீஸ்ல எனக்கு நம்ம பெர்சனல் பேச இஷ்டம் இல்ல அம்மு! சிலர் தூரமா இருந்தாலும் நாம பேசுறதை கேட்க வாய்ப்பு இருக்கு. வேணும்னோ இல்லை தெரியாமலோ கூட இருக்கலாம். பட் அதுக்கு நாம இடம் குடுக்க வேண்டாம் தான?"
"புரியுது மாமா! ஆனா நேத்து என்னவோ ரொம்ப கஷ்டமா போச்சு!" என்றவளை மென்மையாய் பார்த்து அவன் புன்னகைக்க,
"நானெல்லாம் எவ்வளவு ஸ்ட்ரோங் தெரியுமா? மேரேஜ் பண்ணிக்கலாமானு நான் கேட்டப்ப கூட எனக்கு எதுவும் தோணல. இப்ப பாருங்க. பத்து நாள்! ஹப்பா! இதோ! இப்படி கண்ணை மூடி திறக்குறதுக்குள்ள போயிடாதானு இருக்கு!" என்றவள் சொல்லில் பார்வையால் அவளை அணைத்துக் கொள்ள முயன்றான்.
"எனக்கும் தான் டா! இப்படி ஒரு குட்டிப் பொண்ணை ஆபீஸ்ல எப்படி தனியா விட்டுட்டு போக?" என்றவன்,
"நீயும் வர்றியா அம்மு சென்னைக்கு?" என்றான் உடனே.
"ஆமா ஆமா! விட்டுட போறாங்க!" என்றவளுக்கும் ஆசை வந்தது அவனோடு செல்ல.
"ம்ம் போகலாம்! போவோம்!" என்றவன் பேச்சை திருப்பி,
"இங்க பாரு! உன் பிரண்ட்ஸ் தான் அவங்க இல்லைனு சொல்லல! ஆனா அவங்களுக்காக நீ எல்லாம் பண்ணிட்டு இருந்தா உன் ஒர்க்கை முடிக்க முடியாது. லாஸ்ட் ரெண்டு மாசமும் போர்டு பார்த்த தானே? அவங்க எல்லாம் முன்னாடி தான் இருக்காங்க. பிரண்ட்ஸ்க்கு ஹெல்ப் பண்ணலாம். ஆனா அவங்க சோம்பேறி ஆகுற அளவுக்கு நீ ஹெல்ப் பண்ண கூடாது. அவங்க போன் பேச எல்லாம் நீ கூட போய் காவல் இருக்கனும்னு அவசியம் இல்ல" என்றவன்,
"ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கேன். இப்ப மிரட்டுறேன்னு கூட நினைச்சுக்கோ. எனக்கு ரைட்ஸ் இருக்கு அம்மு. முதல்ல உன் வேலையை தான் நீ கவனிக்கணும்" என்று தீவிரமான முகம் கொண்டு அறிவுரை சொல்ல,
"அதெல்லாம் நான் பாத்துக்குறேன் மாமா! நீங்க அங்க போயும் இதே மாதிரி என்னை மறந்துட மாட்டிங்களே!" என்று மகிமா கேட்கவும் தன் அறிவுரையை அவள் காதில் வாங்கவில்லை என்பதில் முறைத்தவன் அவள் கேள்வியில் அவளை பார்த்தபடி எழுந்து,
"சரிங்க மேடம்! எப்ப டா போனை வைக்க போறனு உன்னை கேட்க வைக்குறேனா இல்லையா பாரு!" என்று சொல்லி எழ,
"பாக்கலாம்!" என்று எழுந்தாள் அவளும்.
"இப்ப ஓகே தானே அம்மு?" என்று அலுவலகம் வரையும் கேட்க,
"அப்படி தான் நினைக்குறேன் மாமா!" என்றவள் முகம் தெளிவுற்று இருக்க,
"அதான் தெரியுதே!" என்று புன்னகைத்தவன்,
"இப்படி சிரிச்சிட்டே இரு. நான் போய்ட்டு சீக்கிரம் வந்துடுறேன்." என்று சொல்லி தான் அலுவலகம் உள்ளேயே சென்றான்.
மாலை கிளம்பும் பொழுது நேற்றிருந்த அதே வெறுமை அவளிடம் தெரிய, சிவாவுமே அதில் கலந்து அல்லாடிவிட்டான்.
"டேக் கேர் டா. கால் பண்றேன். லேட்னு தோணுச்சுன்னா...." என்றவன் முடிக்கும் முன்,
"நானே கூப்பிடுறேன் மாமா!" என முடித்துவைத்தாள்.
"ஹ்ம் குட்!" என்றவன் விடைபெற தலையசைத்து கிளம்ப, அவன் சென்ற ஐந்து நிமிடங்களில் தானும் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள் மகிமா.
கனகவள்ளியும் கலங்கிய கண்களை துடைத்தபடி தான் அவனுக்கு தேவையானவற்றை எல்லாம் பார்த்து பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் அவன் கிளம்பும் நேரம்.
"பருப்பு பொடி வச்சேனே! காணும்!" என்று சொல்லி சமையலறை செல்லப் பார்க்க,
"ம்மா! அதெல்லாம் பேக்ல எடுத்து வச்சுட்டேன். பத்து நாள் தானே?" என்றான்.
"வேலைக்கு போறவனை இப்படி கண்ணீரோடவா அனுப்புவாங்க!" என்ற ஈஸ்வரி முணுமுணுப்பாய் தான் கூற முடியும். சத்தமாய் பேசிவிட்டால் தான் அன்னையும் மகனும் திருப்பி கொடுத்துவிடுவார்களே!
வாழவந்தானிடம் போனில் அழைத்து கிளம்பும் நேரம் சொல்ல, அவரும் போய்ட்டு வா என்று சொல்லி கடையில் இருந்து கொண்டார்.
"ம்மா! மிஸ் யூ!" என்றவன் அன்னையை அணைத்துக் கொண்டான். வள்ளி அழுகையும் அதை அவனிடம் காட்டாமல் மறைக்கும் முகமும் என பார்த்தவனுக்கும் கவலை தான்.
ஒன்று இரண்டு நாட்கள் என நண்பர்களுடன் சென்றிருக்கிறான் தான். இப்படி முழுதாய் பத்து நாள் எல்லாம் மகனை பிரிந்ததே இல்லை.
"அப்பாகிட்ட சண்டை போட கூடாது. எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க ம்மா. சின்ன விஷயம் தானேனு எல்லாம் என்கிட்ட சொல்லாம இருக்காதிங்க!" என அத்தனை அறிவுரை.
"அதெல்லாம் உன்கிட்ட சொல்லாம இருப்பாளா உன் அம்மா?" என்று ஈஸ்வரி சொல்ல,
"நீங்களும் அம்மாவை ரொம்ப பேசாம இருங்க பாட்டி!" என்று சொல்லி சிரித்துவிட்டு தான் கிளம்பி இருந்தான்.
பேருந்தில் ஏறி தன் படுக்கையில் அமர்ந்து கொண்டவன் அன்னைக்கு அழைத்து கூறிவிட்டு மணியைப் பார்க்க, மணி ஒன்பது பதினைந்து.
மகிக்கு அழைக்க நினைத்தது தான் தாமதம். சொன்னது போலவே அவளிடம் இருந்து அழைப்பு அதே நேரம் வர, அகம் முழுதும் அவள் வாசம் தான் சிவாவிற்கு.
அவளிடம் பேசியபடி தான் அமைந்தது சிவாவின் சென்னை நோக்கிய பயணம்.
முதல் அழைப்பு அத்தனை இனிதாய் அமைய, இருவரும் உறவுகள் என்ற முறையை தாண்டி தங்கள் உணர்வுகளை பரிமாறிக் கொள்ள ஏதுவாய் அமைந்தது அந்த பயணம்.
தொடரும்..