அத்தியாயம் 29
அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் தூக்கக் கலக்கத்தோடே"குட் மார்னிங் மாமா!" என்று சொல்ல,
"மார்னிங் டா அம்மு! இன்னுமா தூங்குற? மணி ஆகுதே!"
"இவ்வளவு சின்சியரிட்டி எல்லாம் எனக்கு ஆகாது. கொஞ்சம் குறைச்சுக்கோங்க!" என இன்னும் தூக்கம் கலையாமல் பேசியவள்,
"எப்ப ரீச் ஆனிங்க?" என்றாள்.
"நாலு மணி இருக்கும். உனக்கு மெசேஜ் போட்டு தூங்கிட்டேன். அவ்வளவு ட்ராவல் பண்ணி வந்த நானே எழுந்து கிளம்பிட்டேன். உனக்கென்ன இன்னும் தூக்கம்?" என்றபடி அலுவலகம் செல்ல தேவையானதை எல்லாம் எடுத்து வைத்தான்.
"மாமா! தூங்கும் போது நடுராத்திரி ஒரு மணி! எப்படி எழுந்திங்க நீங்க?"
"நான் தூங்கு காலையில பேசுறேன் சொன்னேன். கேட்டியா நீ? மணி ஒன்பதாக போகுது. அத்தை வந்து அடிக்கும் முன்ன எந்திச்சு ஓடிடு!" என்றான் இன்னும் சிரித்து.
"ம்ம்ம்ம்! இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா தூக்கம் கலையுது. ஒரு பத்து நிமிஷம்!".
"சரி அப்ப தூங்கு. கிளம்பிட்டு எனக்கு கால் பண்ணு!".
"வேண்டாம் மாமா. பேசுங்க!"
"டேய்!" என்றவன் சிரிக்க,
"எனக்கு இன்னைக்கு ஆபீஸ் போகவே பிடிக்கல. லீவ் போடவா!"
"இரு உன் அப்பாக்கு கால் பண்ணி கேட்குறேன்!"
"கிளம்பிட்டேன்!"
"ம்ம் என் மாமாக்கு இருக்குற பயம் இந்த மாமாக்கு இல்லைல்ல?"
"மிஸ் பண்றேன் மாமா! சீக்கிரம் வாங்க!"
"ம்ம் சீக்கிரமா வர்றேன். பத்தே நாள்ல! போய் கிளம்பு டா!"
"ஆபீஸ் எவ்வளவு தூரம் உங்களுக்கு!"
"ரொம்ப பக்கம். நடக்குற டிஸ்டன்ஸ் தான். பத்து நிமிஷம் கூட ஆகாது!"
"ஓஹ்!"
"அம்மு!"
"ம்ம் சொல்லுங்க மாமா!"
"ஐ லவ் யூ!" என்றதில் படக்கென கண்ணை திறந்தவள்,
"மாமா! என்ன சொன்னிங்க?" என்றாள் தூக்கம் முற்றிலுமாய் கலைந்து.
"ம்ம் ஆபீஸ் பக்கம் தான் சொன்னேன். ஏன் அம்மு?" என்றவன் சிரிப்பை அடக்குவது புரிய,
"மாமா!" என்று முறைத்தவள் முகம் சிவந்து மனம் நிறைந்தது.
"அதான் முழிச்சுட்டியே! போய் ரெடியாகு. நான் ஆபிஸ் பார்த்துட்டு அப்புறமா கால் பண்றேன்! இல்லைனா.."
"நானே பண்றேன் மாமா!"
"குட் கேர்ள்! பை!" என்றவன் கிளம்ப, தானும் சிறு புன்னகையோடு நொடிகள் அமர்ந்தவள் எழுந்து கிளம்பினாள்.
வெளியே மாலா அத்தனை பரபரப்பாய் அனைத்தையும் தயார் செய்து கொண்டிருந்தார். இன்று கருப்பையாவுடன் கணவர், மாப்பிள்ளை, வாழவந்தான் என அனைவரும் திருமண விஷயமாய் செகின்றனர் ஒன்றாய்.
அதற்கே அத்தனை பரபரப்பு. மாலை வள்ளியும் கோவிலுக்கு அழைத்திருக்கிறார். திருமணம் பேசி முடித்தபின் மாலா வள்ளி இருவரும் போனில் பேசிக் கொண்டாலும் இன்று தான் நேரில் பார்த்து பேசிக் கொள்ள இருக்க, அப்போது தான் நியாபகம் வந்தவராய்,
"அம்மு! சிவாக்கு கால் பண்ணியா? தங்குற இடத்துக்கு போய்ட்டானா?" என்று கேட்டார்.
"அதெல்லாம் காலையில நாலு மணிக்கெல்லாம் போய்ட்டாங்க ம்மா. இப்ப ஆபீஸ்க்கே போயிருப்பாங்க!" என்றாள் மகிமா சாப்பிடபடி.
மகிமா கிளம்பிய ஒரு மணி நேரத்தில் வனிதாவை அன்னையுடன் விட்டுவிட்டு திவாகர், வினோதன் இருவரும் கிளம்பி வாழவந்தான் வீட்டிற்கு செல்ல, கருப்பையாவும் அங்கே வந்துவிட்டார்.
வீட்டை சுற்றிலும் பார்த்தார் வினோதன். ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் தான் வந்து போய் இருந்த வீடு தான். இன்னும் அதை அழகாய் மேம்படுத்தி இருந்தான் சிவா.
வினோதன் உள்ளே வரும் நேரம் ஈஸ்வரி ஹாலில் அமர்ந்திருந்தவர் ஒரு தலையாசைப்போடு உள்ளே சென்றுவிட்டார்.
"இவங்களுக்கு ஒரு நாள் இருக்கு!" என மனதோடு சொல்லிக் கொண்டார் கனகவள்ளி.
வள்ளி கொடுத்த காபியை வாங்கிக் கொண்டு வினோதன் அமர்ந்துவிட, திவாகர் வள்ளியிடம் பேசிக் கொண்டிருந்தான்.
வாழவந்தான் கருப்பையாவிடம் பேசிக் கொண்டு வினோதனையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.
பிடிக்காதத்தன்மை எங்கேனும் அவர் முகத்தில் தெரிகிறதா என்று தான் வாழவந்தான் கவனித்தது. அப்படி ஒன்றும் தெரியவில்லை.
'வேலை பார்த்து கைநிறைய சம்பளம் வாங்குறான். உள்ளூர்ல பொண்ணை குடுக்க கசக்குமா!' இப்படி மட்டும் தான் இருந்தது வாழவந்தானின் நினைப்பு.
சில பொதுவான கருத்துக்களை பேசிவிட்டு மீதியை நாளை குறித்துவிட்டு பார்த்துக் கொள்ளலாம் என கிளம்பி இருந்தனர் இவர்கள்.
இரண்டு மணியையும் கடந்துவிட்டது கிளம்பியவர்கள் வீடு வந்து சேர. வினோதன் திவாகர் அங்கிருந்தே சென்றிருக்க, வாழவந்தானோடு கருப்பையா மட்டுமே வந்திருந்தார்.
"எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா பெரியப்பா?" வள்ளி கேட்க,
"ஆமாம்மா! எல்லாருக்கும் திருப்தி தான். நிச்சயதுக்கு தான் ரெண்டு நாள் குறிச்சிருக்கு. நீங்க ரெண்டு குடும்பமா பேசி அதை மட்டும் முடிவு பண்ணுங்க!" என்று சொல்லி அவரும் கிளம்பிவிட்டார்.
"அங்கேயே அண்ணேகிட்ட பேசி ஒரு நாளை பார்த்து வச்சிருக்கலாம்லங்க?" வள்ளி வாழவந்தானிடம் கேட்க,
"ம்ம் உன் அண்ணனும் உன்ன மாதிரி இருந்தா நான் என்ன பண்றது?" என்ற பதிலில் வள்ளி தான் அமைதியாகிவிட்டார்.
திருமண விஷயம். கல்யாண நாளைப் பற்றி முதல்முதலில் பேசும் பொழுது வாக்குவாதம் வேண்டாம் என அமைதியாகவே கேட்டார் வள்ளி.
"நிச்சயம் வச்சு பதினைஞ்சு நாள்ல ஒரு நாள் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. சரி அப்ப கல்யாணம் வச்சுக்கலாம்னு சொன்னா.. கல்யாணத்துக்கு குறிச்சிருக்க நாளுக்கு முந்தின நாளும் நல்லாருக்குன்னு அந்த ஜோசியர் சொன்னத கேட்டு அன்னைக்கே நிச்சயத்தை வச்சுக்குவோம்னு சொல்லுதான் உன் அண்ணே!" என்று சொல்ல, யாரை குற்றம் சொல்ல என தெரியவில்லை கனகவள்ளிக்கு.
எப்படி இருந்தாலும் திருமணம் நல்லபடியாய் முடிந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர் கனகவள்ளியோடு மாலாவும்.
"கஞ்சம் பிடிக்கிறானாம் கஞ்சம்! எங்க கொண்டு போய் போட போறானோ! முதப் பொண்ணு கல்யாணம் தான் முடிஞ்சு போச்சுல்ல? கடைசி பொண்ணுக்கு நல்லா செஞ்சா தான் என்னவாம் அவனுக்கு?" என வாழவந்தான் பேச, எங்கே இதுவே பிரச்சனையாகி விடுமோ என பயந்தார் கனகவள்ளி.
"நீங்க எதுக்கும் சிவாகிட்ட கேளுங்களேன்! அவன் என்ன சொல்றான்னு பார்ப்போம். ஆபீஸ்ல லீவ்லாம் சொல்லணுமில்ல? அவனுக்கு நாள் தோது படனும்!" என்று வள்ளி மாற்றிவிடப் பார்த்தார்.
"அதான! நினச்சேன் இப்படி எதாவது தான் நீ சொல்லுவன்னு!" என்ற கணவனைப் புரியாமல் வள்ளி விழிக்க,
"பையனுக்கு அப்பா நான்! நான் எந்த முடிவையுமே எடுக்க கூடாதா? எல்லாமே அவங்கவங்க விருப்பத்துக்கு தான்ன?" என சொல்ல அவர் கோபம் என்னவென்று அப்பொழுது தான் புரிந்தது.
"கல்யாணத்துக்கு முந்தி வரவேற்பு வைப்பானா இல்லைனா நிச்சயத்தை வைப்பானா? கேட்டா நான் கெட்டவன் உங்களுக்கெல்லாம்!" என்று சொல்ல, வள்ளி மணியைப் பார்த்தார்.
இதுவே மகன் இங்கே இருந்திருந்தால் அலுவலக நேரம் என்று கூட பார்க்காமல் மகனை அழைத்து சொல்லி இருப்பார். இன்று தான் அங்கே முதல் நாள் சென்றிருப்பானே அழைக்கவா என நினைத்து அமைதியாய் அவர் நிற்க,
"நான் பேசுவேன் உன் மகன்கிட்ட. நான் சொன்னது தான். அவன் வந்த ஆறாவது நாள் நிச்சயம். அடுத்த பதினைஞ்சாவது நாள் கல்யாணம்!" என்று வாழவந்தான் சொல்லி சொல்ல, ஒரு பக்கம் பயமிருந்தாலும் ஒரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது வள்ளிக்கு.
கொஞ்ச நாளுக்கு முன் இந்த திருமணமே வேண்டாம் என்று அதற்கும் இப்படி தானே குதியாய் குதித்தார் என்று.
ஆனால் சிவாவும் வீட்டிலும் கவனம் வைத்திருந்தானே! ட்ரைனிங் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு அவனது திருமண வேலைகளும் முக்கியம் தானே!
மதியம் சாப்பிடும் பொழுதே அன்னைக்கு அழைத்திருந்தான். இன்னும் தந்தை வந்திருக்கவில்லை என்றதும் மீண்டுமாய் மூன்று மணிக்கு அழைக்க, வாழவந்தானும் அப்பொழுது வீட்டில் தான் இருந்தார்.
"உன் மவன் தான? பேசு!" என்று சொல்லவும்,
"சொல்லு சிவா!" என்று அழைக்க,
"அப்பா வந்தாச்சா ம்மா?" என்றான்.
"வந்தாச்சு டா!" என்றவர் கணவனைக் கண்டு தயங்க,
"என்னனு சொல்லுங்க! இல்லை அப்பாகிட்ட குடுங்க!" என்றான் அம்மாவின் தயக்கம் அறிந்து.
"ஒண்ணுமில்ல சிவா!" என்றவர் வாழவந்தான் கூறியதை சொல்ல,
"ம்ம்ம்!" என கேட்டுக் கொண்டவன்,
"இதுல என்னம்மா இருக்கு? கல்யாணத்துக்கு முன்னாடி வச்சா என்ன?" என்றான் அவனும்.
"என்னவா? ஏன் டா! அவன் கஞ்சத்தனத்தைக் காட்ட உன் கல்யாணம் தான் அவனுக்கு கிடைச்சுதா? நீ எங்களுக்கு ஒரே புள்ளை டா!" ஸ்பீக்கரில் மகன் பேச்சைக் கேட்டு கொதித்துவிட்டார் வாழவந்தான்.
"ப்பா! இதை கஞ்சத்தனம்னு ஏன் நினைக்கணும்? பொண்ணு வீட்டுல தான் கல்யாண செலவுன்றது நம்ம வழக்கம் தானே? அதுல அவங்களுக்கு எது வசதியோ அதை செய்யட்டுமே! பெருசா என்ன வித்யாசம் வர போகுது?" என்றான் அவன் சிந்தனைப்படி.
"பாத்தியா! இப்பவே எப்படி அந்த வீட்டுக்கு வாக்கா பேசுதான்னு? தெரியும்! அம்மாவும் மகனும் இதுல ஒன்னா தான இருப்பிங்க?" என மறுபடியும் ஆரம்பித்துவிட்டார்.
அவ்வளவும் அவன் கேட்டு தான் அமர்ந்திருந்தான் அலுவலகத்தின் ஓய்வு அறையில்.
"ப்பா!" என்று ஆயாசமாய் அழைத்தவன்,
"சரி ப்பா! உங்க இஷ்டப்படி செய்யலாம்! நான் உங்களுக்கு ஒரே பையன் வேற! எனக்காக கல்யாண செலவுல பாதியை நீங்க பார்த்துக்க மாட்டிங்களா? நமக்கும் அது பெருமை தான?" என்றவன் பேச்சில் கனகவள்ளி நமட்டு சிரிப்போடு கணவனைக் காண, பேச முடியாமல் வாயடைத்துப் போயிருந்தார் அவர்.
"ம்மா! அத்தைகிட்ட நீங்க சொல்லிடுங்க!" என்றவன்,
"இல்ல வேண்டாம்! அதுவும் இஸ்ஸு ஆகும். அப்பாவே மாமாகிட்ட சொல்லட்டும். ரெண்டு பேருமா சேர்ந்தே செய்யட்டும்!" என்று சொல்ல, இன்னும் அகலமானது வாழவந்தான் கண்கள்.
"சரி ம்மா! வேலை இருக்கு அப்பறமா கூப்பிடுறேன்!" என்றவன் வைத்துவிட, கணவன் தெளியும் முன் தானுமாய் அங்கிருந்து நகர்ந்துவிட்டார் கனகவள்ளி.
அன்னையின் அழைப்பை துண்டித்துவிட்டு தனக்கு அழைத்துக் கொண்டிருந்தவளின் அழைப்பை எற்றான் சிவா.
"மாமா! பிஸியா?"
"ஆமா தான்! பட் சொல்லு மகி!"
"அப்பா வந்துட்டாங்க! அம்மா இப்ப தான் கால் பண்ணினாங்க!" மகிமா சொல்ல,
"அம்மாவும் கால் பண்ணினாங்க அம்மு! மேரேஜ் டேட் ஓகே போல. எங்கேஜ்மெண்ட் டேட்க்கு தான் முட்டிக்குறாங்க அப்பாவும் மாமாவும். விடு! ஈவ்னிங் டிசைட் பண்ணுவோம்!" என்று சொல்லி வைத்தான்.
மகனுக்காக செலவு செய்வதில் எல்லாம் வாழவந்தானுக்கு விருப்பம் தான். ஆனால் அது வினோதனுக்காக என்பதில் தான் பிரச்சனையே அவருக்கு.
எல்லாவற்றிற்கும் தலையை ஆட்ட வைக்கிறானே! என கொந்தளிப்பாய் வந்தாலும் அமைதியாய் இருக்கும்படி இருந்தது அவர் நிலைமை.
இப்படி பேச்சுக்கள் எல்லாம் இரண்டு மூன்று நாட்களுக்கு தான். அதன்பிறகு நாட்கள் நகர நகர அத்தோடு திருமண வேலைகளும் தொய்வின்றி நடைபெற ஆரம்பிக்க, அவரவர் நேரங்கள் கடந்ததோடு புதிதாய் இணைய இருக்கும் மனங்களும் தங்களுக்குள் தங்களுக்கான கனவுகளுடன் நாட்களை நகர்த்தி வந்தனர்.
தொடரும்..