அத்தியாயம் 30
மகன் பேச்சிற்கு பின் வாழவந்தான் எதுவும் யாரிடமும் கேட்கவில்லை. அவர்கள் விருப்பதிற்கு இவனும் ஆடுகிறானே என தான் நினைத்தார்.
வள்ளி அதை மாலாவிடம் சொல்ல, மாலா தன் கணவனிடம் பேசிப் பார்க்க முடிவு செய்தவர் தனியே வினோதனிடம் சிக்கிக் கொண்டது தான் பெரும் அவலம்.
"கொஞ்சமாவது பொண்ணை பெத்தவ மாதிரி பேசு! கல்யாணத்துக்கு மொத்தமா அள்ளிக் குடுத்துட்டு என்ன தெருவுல நிக்க போறியா? அடுத்து என்னல்லாம் செய்யணும்னு நினைப்பு இருக்கா இல்லையா? பெரியவ திடீர்னு விசேஷம்னு சொன்னா என்ன பண்ணுவ? கூடவே அடுத்தவளும் வருவா? யோசிக்க வேண்டாம்? ஏன் கல்யாணத்துக்கு முதல் நாள் நிச்சயம் வச்சா ஆவாதா?"
வினோதனின் பேச்சு சரி தான் என்றாலும் அப்படி ஒன்றும் தாங்கள் ஒன்றுமில்லாமல் இல்லையே! நிச்சயத்தை தனியாய் சிறப்பாய் மண்டபத்தில் வைத்து செய்யும் திறன் வினோதனுக்கு இருக்கிறதே!
இதில் வாழவந்தானை குறை சொல்ல கூடாது. வினோதனை தான் மாற்ற வேண்டும் என நன்றாய் புரிந்தது மாலாவிற்கு.
"சரி தான்ங்க! ஆனா அன்னைக்கு ரிசெப்சன் மாப்பிள்ளை வீட்டு பக்கம் வைக்கணுமே!"
"அது நடக்குறதுக்கு ஒரு மணி நேரம் முன்னாடி நிச்சயத்தை வச்சா போச்சு!" என எளிதாய் அவர் சொல்ல, ஏன் தான் வாயை கொடுத்தோமோ என்று ஆகிப் போன பின் தான் திவாகர் நியாபகம் வந்தது மாலாவிற்கு.
"மாமா! எங்க கல்யாணம் நடந்த மண்டபம் உங்களுக்கு ஓகே தானே மாமா?" என்று திவாகர் கேட்க,
"அதுவா? அது ஆனா மாப்பிள்ளை வீட்டுக்கு தூரமா இருக்குமே!" என்றார் யோசனையோடு!
"அதனாலென்ன மாமா! கல்யாணத்துக்கு தான் ஒரு மாசம் நேரமிருக்கே! அவங்களுக்கும் நமக்கும் பக்கமா இருக்குற மாதிரி மண்டபம் சொல்லுவோம். நிச்சயத்துக்கு இன்னும் பதினைஞ்சு நாள் தானே இருக்கு! அதுக்கு இந்த மண்டபம் போதுமில்ல? ஆளுங்களுக்கு ஏத்த மண்டபம். செலவும் அதிகமிருக்காது. முதல் பொண்ணுக்கு கிராண்டா வச்சுட்டு இப்ப மாத்தவும் முடியாது!" என்று திவாகர் பேச,
"இல்ல மாப்பிள்ள!" என சிறிதாய் வந்த வினோதன் குரல்,
"ஜோசியர் சொன்னாரே! கல்யாணத்துக்கு முன்னாடி கூட வச்சுக்கலாம்னு..." என்று மெதுவாய் சொல்லிவிட,
"அதுக்காக அப்படி முடியுமா மாமா? உங்களுக்கு இருக்குற பேர் என்னாகுறது? அதுவும் ரிசெப்ஸன் நேரத்துல நிச்சயம் வச்சா மாப்பிள்ளை வீட்டு காசுல நாம செஞ்சுட்டோம்னு பேசுவாங்க. உங்களுக்கு அதெல்லாம் சரி வராது மாமா!"
மாலா மகளிடம் புலம்பி திவாகரிடம் பேச சொல்லி இருக்க, கருப்பையாவிடமும் கலந்து பேசி தான் திவாகர் தன் மாமனாரிடம் பேச வந்திருந்தான்.
மற்றவர்களிடம் பேசுவது போல மாப்பிள்ளையிடம் முறுக்கிக் கொள்ள முடியாதே! அதுவும் திவாகரின் பாயிண்ட்டுகள் அத்தனையும் தான் சேமிப்பதாய் நினைத்த பணத்தை விட தன் மரியாதையை அங்கே தூண்டி விட, அது தான் முக்கியமாகி போனது வினோதனுக்கு.
அதுவும் மூத்த மாப்பிள்ளை பொறுப்பாய் வந்து நிச்சயத்தை அங்கே வைக்கலாமா பேசிவிடவா என்று கேட்டத்திலேயே கொஞ்சம் சாய்ந்திருக்க, அடுத்தடுத்த பேச்சினில் யோசனை தாங்கிய முகம் முடிவுக்கும் வந்துவிட்டது.
"சரி மாப்பிள்ள. நாளைக்கு போய் அட்வான்ஸ் குடுத்து பார்த்துட்டு வந்துடுவோம்!" என்ற சொல்லில் திவாகர் மாலாவைப் பார்க்க, கையெடுத்து கும்பிட்டார் அவர்.
விஷயம் சிவா காதுகளுக்கு செல்ல, அவனுக்கு எந்த தேதியும் தான் பிரச்சனை இல்லையே!
"நீயே உன் அப்பாகிட்ட சொல்லிடு டா! அப்போ தான் கொஞ்சம் மலை இறங்குவார்." என்றார் வள்ளி சிவாவிடம்.
"விடுங்க ம்மா! ரெண்டு நாள் போகட்டும். சொல்லிக்கலாம். இல்லைனா ஒவ்வொண்ணுக்கும் இப்படி தான் முரண்டு பிடிப்பாங்க" என்றவன்,
"ரெண்டு பேர்ல யார் பெரியவங்கனு சண்டை போட்டா நாம என்ன பண்ண முடியும்? நான் அவங்க வீட்டுல போய் பேச முடியுமா? அதை ஏன் அப்பா புரிஞ்சிக்க மாட்றாங்க!" என்றும் கேட்க,
"எங்க! அதுக்கெல்லாம் யோசிக்க எதாவது மண்டையில இருக்கணுமே!" என்றார் வள்ளி.
"ம்மா!" என்று முறைத்தவன்,
"நீங்க இப்படி பேச பேச தான் அப்பாவும் திரும்ப வேணும்னு பேசுறாங்க. நான் வர்ற வரை வேற எதுவும் பேச வேண்டாம். வந்ததுக்கு அப்புறம் எல்லாம் பார்த்துக்கலாம். அதான் நான் வந்த பின்ன ஆறு நாள் இருக்கே!" என்றிருந்தான்.
"பத்திரிக்கைக்கு பேர் எழுத ஆரம்பிக்கணும். இன்னைக்கு வந்ததும் அப்பாகிட்ட சொல்றேன். உனக்கு போட்டோ அனுப்புறேன். ஓகேவா பாரு. நீ வந்ததும் குடுக்க ஆரம்பிச்சிடலாம்" என்று சொல்ல,
"அதான் அப்பாவே நேத்து சொன்னாங்களே! பேசி முடிவு பண்ணுங்க!" என்றுவிட்டான்.
அலுவலகத்தின் கேன்டீனில் அமர்ந்திருந்தாள் மகிமா. மூன்று நாட்கள் ஓடிவிட்டது. ஆனால் மூன்று நாட்களில் திரும்பும் இடமெல்லாம் அவனை தான் அதிகமாய் நியாபகப்படுத்தியது.
தோன்றும் நேரமெல்லாம் அவனுக்கு அழைத்துவிட நினைத்தாலும் அவன் அலுவலகத்தில் இருப்பானே! 'சொல்லு மகி!' என்ற சொல்லே அவன் குறியீடாய் தோன்றும் இவளுக்கு.
இதுவே இலகுவான அவனின் நேரங்களில் வரும் 'சொல்லு அம்மு!' என்ற வார்த்தைக்கு வானத்தில் மிதக்காத குறை தான் மகிமா.
எப்பொழுதும் போல இப்பொழுதும் "மிஸ் யூ மாமா!" என்று அனுப்பிவிட்டு போனில் பேசிக் கொண்டிருக்கும் தோழிக்கு காத்திருந்தாள்.
வாட்சப்பில் காலையில் தினமுமான காதலுடன் தேடல் நிறைந்த பாடல். நாள் முழுவதும் குறைந்தது பத்து முறையாவது வரும் மிஸ் யூ மாமா என்ற செய்தி. காலை எழுந்ததும் முதல் அழைப்போடு இரவு தூங்கும் முன் பேசிக் கொள்வதோடு அழைத்துப் பேசும் தருணங்களுக்கும் பஞ்சமில்லை என்றாலும் சிவாவும் அவளையும் அவள் தேடலையும் அதிகமாய் ரசித்தவன் அவனுமே இன்னும் அதிகமாய் அவளை தேடத் தான் செய்தான்.
"இன்னைக்கு சண்டே மாமா! வெளில போகலையா?" போனில் அழைத்து மகிமா கேட்க,
"இல்லையே! இன்னும் மூணு நாள் தான்! எப்படா கிளம்புவோம்னு இருக்கு. வெளில போக எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல அம்மு!" என்றான் சிவா.
"என்ன மாமா நீங்க? உனக்கு என்ன வேணும் நான் வரும் போது வாங்கிட்டு வர்றேன்னு கேட்பிங்கனு பார்த்தா நான் கேட்டும் இன்ட்ரெஸ்ட் இல்லைன்னு சொல்றிங்க!"
"ஹே கேடி! உனக்கு வேணும்னா வேணும்னு கேளு! இதென்ன சுத்தி வளைக்குறது?" என்றான் சிரிப்போடு.
"ப்ச்! உங்களுக்கு ஒண்ணுமே தெரியல மாமா!"
"சொல்லி குடேன் அம்மு!" என்றவன் குரல் வித்தியாசமடைய,
"வேண்டாமே! இந்த வாய்ஸ் டோன் வந்தா உங்க பேச்சே மாறிடும். அப்புறம் நான் பேச முடியாது!" என்றதில் நன்றாய் சிரித்தவன்,
"பின்ன! உன்கிட்ட பேசாம!" என்றவன்,
"சரி சொல்லு! என்ன வேணும்?" என்றான் நிஜமாய்.
"அதெல்லாம் நீங்களா கேட்கணும். நான் கேட்டெல்லாம் வேண்டாம்"
"நானா தான டா கேட்டேன்? நீ இப்ப மிஸ் பண்றது என்னை தானே? அப்ப நான் வந்தாலே போதும் தானே உனக்கு?" என்று வம்பு பேசி அவளுடன் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான் என்று தான் கூற வேண்டும்.
நாட்களை நகர்த்தி இதோ பத்து நாட்களை கடந்துவிட்டவன் வரவை துள்ளி குதித்து எதிர்பார்த்து காத்திருந்தாள்.
பத்திரிக்கைகள் அச்சிடப்பட்டு வந்து சேர்ந்திருக்க, சிவா அலுவகத்திற்கு நண்பர்களுக்கு என மகிமாவின் விருப்பத்தைக் கேட்டு தனியாய் போனிலேயே நண்பர்கள் மூலம் சில பத்திரிக்கைகள் தயாராய் ஏற்பாடு செய்து அதையும் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தான்.
"உங்க ஆபீஸ்ல இன்னும் சொல்லாம இருக்கீங்க! நிச்சயம் முடிஞ்சா அப்பா ஆபீஸ் போக விடமாட்டாங்க அம்மு!" என்று மாலா சொல்ல,
"மாமா வந்ததும் சொல்லிடுறேன் ம்மா! ஆமா எவ்வளவு நாள் லீவ் சொல்லணும்?" என்றாள் அன்னையிடம்.
"அதையும் அவன்கிட்டயே கேளு!" மாலா சொல்ல சிவாவிடம் கேட்டதற்கு,
"ஆமால்ல!" என்றவன் எதையோ நினைத்து சிரித்து வைக்க,
"மாமா!" என்றாள் சந்தேகமாய்.
"ஒண்ணுமில்ல டா!" என்றவன்,
"நிச்சயத்துக்கு அப்புறம் ஒரு வாரம் நீ வா! நெக்ஸ்ட் வீக் லீவ் போட்டுக்கோ! மேரேஜ்க்கு அப்புறம்..." என்று யோசித்தவன்,
"ஆபீஸ்ல பேசிக்கலாம். இதை மட்டும் கன்ஃபார்ம் பண்ணிக்கோ. அதை அங்கேயே கேட்டுப்போம்!" என்றுவிட்டான்.
பல முடிவுகள் அலைபேசி வழியே இருவருமாய் பேசி முடிவெடுத்து சிலவற்றிற்கு நாட்களை நேரத்தை ஒதுக்கி, என நேரத்தை பகிர்ந்து வைத்திருக்க, முந்தைய நாள் அவன் பேருந்தில் ஏறியதும் தான் அத்தனை கொண்டாட்டம் மகிமாவிற்கு.
"மாமா! நிஜமா வந்துடுவிங்கல்ல?" என கேட்க,
"டேய்! நம்பிடு!" என்றவனின் வீடியோ அழைப்பை மட்டும் இந்த பத்து நாட்களும் தவிர்த்ததை போல இன்றும் அவள் தவிர்க்க, பேருந்தில் அமர்ந்து போட்டோ எடுத்த கையோடு அவளுக்கு அனுப்பியும் வைக்க,
"ம்மா! மாமா கிளம்பிட்டாங்க!" என்றாள் அன்னையிடம்.
"அதான் தெரியுதே உன் சத்தத்துல!" என்று சிரித்தவருக்கு சிவா அழைத்து இரவே பேசிவிட,
அடுத்த நாள் காலை படு உற்சாகமாய் எழுந்தவள் ஒன்பது மணிக்கெல்லாம் தயாராகி தன்னை தானே கண்ணாடியில் பார்த்துக் கொண்டவள் முகம் அத்தனை ஜொலித்தது.
இடையில் நான்கு முறை மகிமா அழைத்தும் அவன் அழைப்பை ஏற்கவில்லை.
'என்ன பன்றாங்க! ஏழு மணிக்கெல்லாம் ரீச் ஆயிடுவேன் சொன்னாங்க! என்ன ஷிப்ட்னு கேட்கணுமே!' என முணுமுணுவென்று பேசியபடியே அவனுக்கு அழைக்க, அழைப்பு செல்லவில்லை.
"ப்ச்! சார்ஜ் இல்லையோ!" என்றவள்,
"அவ்ளோ கேர்லெஸ்ஸா இருக்க மாட்டாங்களே! நெட்ஒர்க் ப்ரோப்லேம் போல!" நினைத்து மணியைப் பார்த்தவள்,
"ரெகுலர் ஷிப்ட் வந்துடுவாங்களா இருக்கும். இல்லைனா ஒரு மணி ஷிப்ட்! அதுவரை என்ன பண்றது? எப்படி பார்க்காமல் இருக்குறது?" புலம்பி தவித்து அழைத்து களைத்து தான் போனாள்.
"கார்த்தி ண்ணா! மாமா என்ன ஷிப்ட் இன்னைக்குன்னு பார்த்து சொல்றிங்களா?" என கார்த்திக்கிற்கு அழைத்து கேட்க,
"அவனுக்கு இன்னைக்கு லீவ்வாமே! அத்தை பெத்த ரத்தினத்துக்கிட்ட சொல்லலையா?" என்றான் கார்த்திக் விளையாட்டாய்.
"ஏன் லீவ்?"
"அதெல்லாம் உன் மாமா சொல்லல. இதுவே இங்க சங்கர் சார் தான் சொன்னாங்க. சிவா இன்னைக்கு லீவ் நாளைக்கு கேபின் சேஞ்ச் ஆகும்னு!"
"ஓஹ்!" என்றவளுக்கு தன்னிடம் ஏன் அவன் கூறவில்லை என நினைத்த நேரம் உற்சாகமெல்லாம் வடிந்து போக,
"லஞ்ச் கட்டிட்டேன். சாப்பிட்டு கிளம்பு அம்மு!" என்று வந்தார் மாலா.
"ஒன்பதறை ஆச்சா? இன்னும் அவருக்கு சத்து மாவு கஞ்சி ரெடி பண்ணலையே!" என்றபடி மாலா சமையலறை சென்றார்.
'இவ்ளோ நேரம் நான் தேடுவேன்னு தெரியாதா மாமா?' என்று நினைத்தபோது எப்பொழுதும் கிளம்பும் நேரத்தையும் தாண்டியது.
மீண்டுமாய் ஒருமுறை முயற்சித்தும் அழைப்பு செல்லவில்லை. 'அத்தைக்கு அழைத்து கேட்டுவிடுவோமா?' நினைத்துக் கொண்டு நின்றவளுக்கு பயம் கூட.
"என்ன டி பண்ற! காலிங் பெல் சத்தம் கேட்கல? அப்பாவா இருக்க போகுது. போய் திற!" என்ற மாலா,
"மணி ஆகுது! பஸ்ஸை விட்டுட்டு கடை பையனை கொண்டு விட சொல்ல போற! உன் அப்பாகிட்டயும் வாங்கி கட்டிக்க போற பாரு நீ!"
அன்னை திட்டுவது காதில் கேட்க, கலங்கிய மனதோடு சென்று கதவை திறந்துவிட்டு உள்ளே திரும்பிய நேரம் தான் பார்த்தது பிரம்மையோ என்று நொடி நேரம் நின்றவள் சட்டென திரும்பிப் பார்க்க,
ஆம் அவனே தான்! இதோ நொடியில் மனம் தன் கலக்கத்தை நீக்கி மகிழ்ச்சியை தோற்றுவிக்க, அதன் பலன் முகமெங்கும் பிரதிபலிக்க ஒளிவீசி நின்றவளைக் கண்டு கண் சிமிட்டி சிரிக்கின்றானே மனம் கொய்தவன்.
தொடரும்..