அத்தியாயம் 32
"கூடவே இருக்கேனே செவ்வாழ! என்கிட்ட கூடவா இத்தனை நாளும் உனக்கு சொல்ல தோணல? நீ அம்மு பொம்முனு சொன்னியே! அன்னிக்கே நான் உஷார் ஆகிருக்கணும் டா!" கார்த்திக் தான் சிவாவின் திருமண செய்தியை கேட்டதும் மனம் கேளாமல் புலம்பினான்.
"ப்ச்! என்ன டா நீ! அவ்வளவு எல்லாம் ஒண்ணுமில்ல. லாஸ்ட் டுவெண்ட்டி டேஸ்க்குள்ள தான் எல்லாமே முடிவாச்சு!" என்றான் சிவா அப்போதும் முழுதாய் எதுவும் கூறாமல்.
"இந்த டுவெண்ட்டி டேஸ்ல லாஸ்ட் டென் டேஸ் தான மேன் நீ ஊர்ல இல்ல? அதுக்கு முன்ன சொல்லிருக்கலாம்ல?"
"அட விடு டா! எல்லாம் கன்ஃபார்ம் ஆகட்டுமேனு நினச்சேன்! இப்ப என்ன?"
"இப்ப என்னவா? நாலு மாசம் முன்னாடி இந்த மகிமா பொண்ணு சேர்ந்தப்ப மாமா மாமானு உன்னை சுத்தி வந்தா! அப்பவே எல்லாரும் கேட்டோமா இல்லையா? எம்புட்டு நேக்கா சூடம் அடிக்காத குறையா சத்தியம் பண்ணியே டா!"
"டேய்! நிஜமாவே அப்ப அப்படிலாம் எதுவும் இல்லை டா!" என்ற சிவா புன்னகைக்க,
"என்னவோ போ டா மாதவா! என்கிட்ட மட்டுமாச்சும் சொல்லிருக்கலாம் நீ!"
"சொல்லிருக்கலாம் தான்! நான் ஊருக்கு போற டைம் தான் கன்ஃபார்ம் பண்ணினோம்! அப்ப இங்க சொல்லிட்டு அம்முவை தனியா ஆபீஸ்ல விட்டுட்டு போக முடியல! சோ சொல்லல!"
"மறுபடியும் அம்மு! ம்ம்ம் ரைட்றா! புது ஜாப்... புது மாப்பிள்ளை... நீ கலக்கு!" என்று கார்த்திக் சொல்ல, அதற்கும் மென்னகை தான் சிவாவிடம்.
"உன்னையெல்லாம் அம்மாஞ்சினு நினச்சேன் டி! எங்ககிட்ட கூட சொல்லல நீ?" யாழினி மகிமாவிடம் கேட்க,
"இல்ல க்கா! மாமா தான் நானே சொல்றேன் சொன்னாங்க!" என்றாள் மகிமா.
"உன் மாமாவை விடு! அவர் இன்ஃபார்ம் பண்ணதெல்லாம் ஓகே! நீ எங்ககிட்ட முன்னாடியே சொல்லிருக்கணுமா இல்லையா? ஒண்ணுமில்ல ஒண்ணுமில்லனு சொல்லிட்டு அடுத்த மாசம் கல்யாணம்னு இப்ப சொல்ற!" என்றாள் சுஜாதா.
"க்கா! அது வீட்டுல முடிவு பண்ணினது. மாமா ஊருக்கு போனாங்கல்லையா? அதான் அப்பவே சொல்ல முடியல!"
"விடு டி! ஆனா உனக்கெல்லாம் பிரகாஷ் மாதிரி ஆளா! வாழ்வு தான் போ!" என்ற யாழினி சிரிப்பில் முகம் சுருங்கிவிட்டது மகிமாவிற்கு.
"அது என்னவோ நிஜம் தான். பைத்தியம் மாதிரி யாரு என்ன சொன்னாலும் நம்பிடுவ! உனக்கு இவ்ளோ ஸ்மார்ட்டான பையன். எல்லாம் விதி!" என்று சிரித்தாள் சுஜாதாவும்.
"ஏன்! எனக்கென்ன? மாமாக்கு நான்னா ரொம்ப பிடிக்கும்!" மகிமா உடனே முகம் மலர்ந்து சொல்ல,
"வேற வழி? வீட்டுல முடிவு பண்ணிட்டாங்கனு சொல்ற! பிரகாஷை பார்த்தாலே தெரியுமே ஹோம்லி பாய்னு!" என்றவர்கள் பேச்சு சுத்தமாய் பிடிக்கவில்லை மகிமாவிற்கு. ஆனாலும் அவர்களை பிடிக்குமே அவளுக்கு. அதற்காக அங்கே கேன்டீனில் அவர்களோடு அமர்ந்திருக்க,
"சுஜா! நான் இந்த பிரதாப்பை பிரேக்கப் பண்ண போறேன் டி!" என்றாள் யாழினி.
"ஏன் டி?" சுஜாதா கேட்க,
"பின்ன! இவல்லாம் பிரகாஷை கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறம் என் கல்யாணத்துக்கு ஹஸ்பண்ட் கூட வந்தா அங்க நான் பிரதாப் கூட ஸ்டேஜ்ல நிக்க முடியுமா? இதுக்காகவே ஹாண்ட்சம்மா ஒருத்தனை பிடிக்க போறேன்!" என்று சொல்லவும் இருவருமாய் சிரிக்க, சுத்தமாய் அவர்கள் பேச்சை கேட்க முடியாமல் மனமும் முகமும் வாடிவிட்டது மகிமாவிற்கு.
கோபத்தில் அவர்களிடம் சொல்லிக் கொள்ளாமல் அவள் எழுந்து செல்ல, அதை கூட கவனிக்காமல் இருவரும் பேசி சிரித்துக் கொண்டிருந்தது இன்னும் மனதை வருத்தியது.
கோபமும் வருத்தமுமாய் கேன்டீன் கதவை மகிமா திறக்க, வெளியிலிருந்து சிவாவுமே அதை தள்ளி இருந்தான்.
அவனைப் பார்த்ததும் புன்னகைத்தவளைப் பார்த்து தானும் புன்னகைத்தாலும் அவளின் மாறுதலும் கண்களுக்கு புலப்பட, என்னவென்று தலையசைத்தவனுக்கு உடனே ஒன்றுமில்லை என அவள் தலையசைக்க, அவன் பார்த்து நிற்கும் பொழுதே அவள் வெளியில் சென்றுவிட்டாள்.
அங்கே நின்று இவர்களை கவனித்து யாழினியும் சுஜாதாவும் எதாவது பேசி வைத்து விடுவார்களோ என நொடியில் மகிமா மனம் பலதை யோசிக்க, அந்த முகத்தையுமே கவனித்திருந்தான் சிவா.
அலுவலகத்தில் தன்னுடன் பேசவே யோசிக்கும் சிவா எண்ணமும் கொஞ்சமாய் புரிந்தது அந்த நேரம் மகிமாவிற்கு.
"என்ன இவங்க இப்படி இருக்காங்க! கிண்டல் பேசவும் ஒரு அளவு இருக்குல்ல?' தன்னிடத்திற்கு வந்து தனக்கு தானே புலம்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள் மகிமா.
இதை சிவாவிடம் சொல்லவே தோன்றவில்லை. ஏற்கனவே அவர்களுடன் தான் இருப்பதை அடிக்கடி சுட்டிக் காண்பித்திருக்க இதை கூறினால் என்ன சொல்வானோ என்ற பயம் இருந்தது.
ஆனாலும் எதையும் மனதிற்குள் வைத்தும் பழக்கமில்லை. யாரிடமாவது கூறிவிட்டால் தான் மனம் சமாதானம் அடையும் மகிமாவிற்கு.
"ஏன் எனக்கு என்ன? நான் என் மாமாக்கு டெசேர்வ் இல்லையா? அதை சொல்ல இவங்க யாரு?" மகிமா சத்தமாய் புலம்ப,
"என்ன மகி கோவமா இருக்க போல? மார்னிங் தானே குட் நியூஸ் சொன்னிங்க நீயும் பிரகாஷும்? அதுக்குள்ள இப்ப ஏன் முகமெல்லாம் டல்லடிக்குது?" என்றார் பிரியா.
"மேம்! அதெல்லாம் எதுவும் இல்லை மேம்!" என்றவள் தன் தலையில் தானே கொட்டிக் கொண்டாலும் மனது ஆறவில்லை.
"இந்த வாயை கொஞ்சம் மூடு மகி!" தனக்கு தானே சொல்லிக் கொண்டு வேலையில் கவனத்தை வைத்தாள்.
மாலை ஆறு மணியாகவும் சரியாய் தலைசாய்த்து மகிமாவின் இருப்பிடத்தை சிவா காண, அவளுமே கிளம்பத் தயாராகி இருந்தாள்.
என்றுமே அவனுக்கு முன் கிளம்புவதாய் இருந்தால் அவன் இருப்பிடம் வந்து சொல்லிவிட்டு கிளம்பும் அவள் வழக்கத்தில் இன்றைய தினம் அவன் அவளைப் பார்க்க, அவள் நினைவு முழுதும் நண்பர்கள் நியாபகம் தான்.
இப்படி பேசிவிட்டார்களே என்ற நினைவோடு கிளம்பி அவர்களிடம் சொல்லிவிட்டு செல்லக் கூடாது என எழுந்தவள் அதே வேகத்தில் வாசல் நோக்கி நடந்த பின் தான் சிவா நியாபகத்தில் தன் தலையில் தானே தட்டிக் கொள்ள, அவை முழுதுமே அவன் பார்வைக்கு தான்.
"மாமா!" என்று அழைத்து அருகில் வந்தவள் முகத்தில் ஏகத்திற்கும் கலக்கம்.
"சிட்!" என மூன்று மணிக்கு கிளம்பி இருந்த கார்த்திக்கின் இடத்தை காட்டினான் சிவா.
"ஹ்ம்!" என்று அமர்ந்தவள் முகத்தில் கோவமும் ஆயாசமும்.
சட்டென சிவா திரும்பிப் பார்க்க, அதை எதிர்பாராத யாழினியும் சுஜாதாவும் பதறி அவரவர் வேலையில் கவனத்தைக் கொண்டு சென்றனர்.
முதலில் இருந்தே அவனுக்கு தோன்றியது தான் இவர்களின் மேல் ஒரு எதிர்எண்ணம். இன்று கேன்டீனில் மகிமாவின் முகம் பார்த்துவிட்டு அவளுக்கு பின் அமர்ந்திருந்த இவர்களையும் கண்டான் தானே!
புரிவது போல இருந்தாலும் தானாய் யூகம் வளர்க்க வேண்டாம் என அவன் நினைத்திருக்க, இப்பொழுது மகிமாவின் செயலும் இவர்களின் பதற்றமும் என உறுதி செய்தது சிவாவின் எண்ணத்தை.
"கிளம்பிட்டியா?" கணினியில் வேலையைப் பார்த்தபடி சிவா கேட்க,
"ம்ம் ஆமா மாமா!" என்றவள்,
"சாரி மாமா! ஏதோ நியாபகத்துல அப்படியே கிளம்பிட்டேன்!" என்றாள் பாவமாய் பார்த்து.
"ஹ்ம்!"
"அப்ப நான் கிளம்பவா? நீங்க பத்து மணி ஆகுமா கிளம்ப?"
"ம்ம் ஆமா டா!" என்றவன் பார்வை கணினியில் இருந்து யோசனையோடு அவளிடம் வந்து நின்றது.
"மகி! கார்த்திக் அம்மா ரெண்டு நாள்ல ராம்நாட் போறாங்களாம். வர லேட் ஆகும் சொன்னான். சோ இன்னைக்கு இன்விடேஷன் குடுக்க போறேன். நீ வர்றியா?" என்றான்.
"இன்னைக்கா? இப்பவே லேட் ஆச்சே மாமா? நீங்க ஷிப்ட் முடிச்சு கிளம்ப லேட் ஆகுமே!"
"ஹ்ம்! நான் மட்டும்னா லேட்டா போவேன். நீ வர்றன்னா இப்ப போய்ட்டு வந்துடலாம்!" என்றான்.
சில நொடிகள் சிந்தித்தவள், "ஹ்ம்ம் போலாம் மாமா!" என்றாள்.
"ஹ்ம் அப்ப ஓகே! நீ மாமாகிட்ட கால் பண்ணி சொல்லிட்டு உன் பிளேஸ்ல வெயிட் பண்ணு. ஒரு டென் மினிட்ஸ்ல கிளம்பிடலாம்!"
"ம்ம் சரி மாமா!" என்றவள் நொடியில்,
"இல்ல வேணாம் மாமா! நான் வெளில வெயிட் பண்ணவா?" என்றாள்.
மீண்டும் அங்கே சென்று அமர்ந்து... அவர்கள் ஏதாவது கேட்டு... தன் மனம் வருந்தி... என நினைத்தவள் அதை தவிர்க்க நினைத்தாள்.
"ப்ச்!" என்று அவளைக் கண்டவன்,
"சரி கேன்டீன்ல வெயிட் பண்ணு! கால் பண்றேன்!" என்றான் அவள் பார்வை செல்லும் திசை உணர்ந்து.
"இதை வச்சுக்கோ! முடிஞ்சா பேர் எழுதி வை! நான் வர்றேன்!" என அழைப்பிதழை அவளிடம் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு சென்றாள்.
தன் அவசர வேலையை முடித்துக் கொண்டு ஒரு மணி நேரம் இடைவெளியும் கேட்டு வாங்கிக் கொண்டு அவளையும் அழைத்து வெளியில் வந்தவன் முதலில் கார்த்திக் வீட்டிற்கு சென்று முறையாய் அவன் தாய் தந்தைக்கு அழைப்பு வைத்துவிட்டு இருபது நிமிடங்களில் வேலையை முடித்தவன் அடுத்து மகிமாவுடன் ஒரு ரெஸ்டாரண்டில் சென்று அமர்ந்தான்.
வெளியில் வந்ததுமே ஒரு உற்சாக மனநிலைக்கு வந்திருந்தாள் மகிமா. சுத்தமாய் அலுவலகத்தை மறந்தவளை கவனித்துக் கொண்டு தான் வந்தான்.
"சாண்ட்விச் ஓகே தானே அம்மு?"
"மாமா பர்கர்?" என்று உடனே கேட்டவளைப் பார்த்து சிரித்தபடி தலையசைத்து வாங்கி வந்தான்.
"வாவ்!" என்று கண்களை விரித்தவள் அதை வாயில் வைக்க,
"ஹ்ம் அப்புறம்!"
"மாமா! நிஜமா பர்கர் சாப்பிடணும் போல இருந்துச்சு! நீங்களே கூட்டிட்டு வந்துட்டீங்க!"
"ஹ்ம்ம்!" என்றவன்,
"என்ன சொன்னாங்க உன் பிரண்ட்ஸ்?" என்றதும் சட்டென முகத்தில் ஒரு மாற்றம் மகிமாவிற்கு.
பிடிக்கவில்லை என்பதை விட இயலாமை தான் அதில் அதிகமாய் தெரிந்தது.
"அம்மு!"
"ஹான் மாமா!" என்றவள் மீண்டுமாய் மௌனமாகிவிட்டாள். நண்பர்கள் என தான் அத்தனையும் பேசி பகிர்ந்து உண்மையாய் தானே இருந்தேன்.
எதற்காக தன்னை இத்தனை கிண்டல் கேலி? என்று நினைத்தவள் தன்னை தானே ஒருமுறை பார்த்துக் கொள்ள,
"மகி!" என்ற அழுத்தமான அழைப்பில்,
"மாமா! நான் ஒண்ணு கேட்கவா?" என்றாள்.
"என்ன?"
"நான் எப்படி இருக்கேன்?"
"மீன்ஸ்?"
"மாமா! நான் அழகா தானே இருக்கேன்! எப்படினா!" என்று யோசித்தவள்,
"இப்போ நாம நடந்து வந்தா நாம மேட்ச்சா இருப்போம் தான? அதாவது உங்களுக்கு நான் மேட்சா இருப்பேன்ல?." என்றவளை அழுத்தம் கொண்டு பார்த்தவன் பார்வை மாறி ஆராய்ந்து பின் கவனிக்க ஆரம்பித்தது.
கையில்லாத நாகரீகமான நீள குர்த்தி. கழுத்து வரை விரிந்த முடியை இரு பக்கம் தளர்த்தி விட்டிருந்தாள். குட்டி ஜிமிக்கியோடு வட்ட வடிவத்தில் குட்டியாய் ஒரு பொட்டு.