• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 34

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 34

நிச்சயம் முடிந்த இரண்டு நாட்கள் விடுமுறையில் இருந்துவிட்டு அன்று தான் அலுவலகம் வந்திருந்தாள் மகிமா.

வந்ததும் சிவாவின் இடத்தைப் பார்த்தபடி தான் தன் இடம் நோக்கி வந்தாள்.

சென்ற வாரம் அவள் விடுமுறையில் இருக்கும் பொழுதே அவனின் இடம் மாற்றப்பட்டுவிட்டதை சிவா கூறி இருக்க, இனி நினைத்த நேரம் அவன்முன் சென்று நிற்க முடியாதே என்று நினைத்துக் கொண்டு தான் அமர்ந்தாள்.

"ஹாய் க்கா! எங்கேஜ்மென்ட்க்கு நீங்கல்லாம் வருவீங்கன்னு நான் ரொம்ப எதிர்பார்த்தேன்!" என நிஜமாய் வருந்தி கூறினாள் மகிமா நண்பர்களிடம்.

"மேரேஜ் இனி தானே மகிமா? அப்ப வந்துடுவோம்! உன்னை நாங்க என்னவோ பண்ணிட்ட மாதிரி அந்த பிரகாஷ் எங்களை பார்க்கும் போதெல்லாம் நீங்க தானா அப்படின்ற மாதிரி ரொம்ப இன்சல்ட் பண்ற மாதிரி பாக்குறார். ரொம்ப கடுப்பாகுது!" சுஜாதா சொல்ல,

"க்கா! மாமா பத்தி என்கிட்டயே இப்படி பேசுறீங்க! தப்புக்கா! மாமா அப்படிலாம் இல்ல!"

"அய்யயோ! சாரி மகி! நான் வேற! என் வாயை சொல்லணும்! ஆமாமா! நீ எவ்ளோ பெரிய ஆளு! உன்கிட்ட சொல்லிருக்க கூடாது தான் மன்னிச்சுக்கோ ம்மா!" அத்தனை நக்கல் சுஜாதா குரலில்.

"எனக்கு புரியல சுஜா க்கா! இப்பலாம் ஏன் என்கிட்ட இவ்ளோ ஹார்ஷா பிகேவ் பண்றீங்க? நான் என்ன பண்ணினேன்?" என்றாள் நிஜமாய் தெரிந்து கொள்ள வேண்டி.

"அப்படி தான் உனக்கு தெரியும்! இவ்வளவு நாளும் எங்களுக்கு பிரண்ட்டா மட்டும் இருந்த! அதனால நாங்க தப்பா தெரியல. இப்ப எங்களை விட ஆபிஸ்ல முக்கியமான ஆளை புடிச்சாச்சு. இனி அப்படி தான் டி உனக்கு தெரியும்" என்று சொல்ல, அதற்குமேல் சுத்தமாய் அவர்களிடம் பேசிட தெம்பில்லாமல் தன் கணினி பக்கம் திரும்ப,

"பார்த்தியா! நாம என்ன பேசினாலும் இவளுக்கு தப்பு தான்!" என்றாள் சுஜாதா.

"விடு சுஜா! மகிமா இனி நம்ம சீனியர் வைஃப்! அந்த கெத்தை நம்மகிட்ட கூட இவ காட்டலைனா எப்படி?" என்று யாழினி சொல்ல, மனம் தளர்ந்து போனது மகிமாவிற்கு.

"வேர் ஆர் யூ மாமா?" மகிமா செய்தியாய் அனுப்பி வைக்க, நீண்ட நேரத்திற்கு பிறகே பதில் வந்தது.

"கேபின்ல தான் அம்மு!" என்று.

"ஓகே மாமா!" என்று அனுப்பிவிட்டு தன் வேலையைத் தொடர, சுஜாதா யாழினி இருவரும் தங்களுக்குள் பேசியபடி மெதுவாய் எழுந்து செல்வது தெரிந்தாலும் அமைதியாய் இருந்தவளுக்கு மனம் தாளவில்லை.

எந்த தவறும் செய்யாமல் ஒதுக்கி வைக்கப்படும் வலி. சிவாவும் அங்கில்லை இவர்களும் தன்னை தனித்துவிட, அத்தனை ஆசையாய் முதல்நாள் என்று கிளம்பி வந்தவளுக்கு வந்த சிறிது நேரத்திலேயே அலுவலகம் பற்றிய ஒரு பயம் அவளுக்கு.

இப்படி தனியாய் அமர்ந்து, பேச யாருமில்லாமல் அமைதியாய் எல்லாம் அவளால் இருக்க முடியாதே!

"ப்ராஞ்ச் மாறிக்கோ அம்மு!" என்ற செய்தி தனது அலைபேசியில் வர, சட்டென திரும்பி சிவாவின் பழைய இடத்தில் பார்த்தாள் மகிமா. அங்கே அவனில்லை.

சுற்றிலும் பார்க்க, எங்குமே அவன் தென்படவில்லை. ஆனாலும் மனம் அமைதியை பெற்றிருக்க, உதடுகளில் மெல்லிய புன்னகை கூட.

கார்த்திக்கை காண வந்த சிவா அவளைப் பார்த்துவிட்டு சென்றதை அவள் அறியவில்லை.

இவன் எதிரில் வரும் பொழுது தான் யாழினி சுஜாதா இருவரும் எழுந்து சென்றது. தலை உயர்த்தி பார்த்த பொழுது மகிமா தலையில் கைவைத்து அமர்ந்திருக்க, கார்த்திக்கிடம் பேசிவிட்டு தனது கேபின் சென்றவன் சென்ற வேகத்தில் ப்ராஞ்ச் மாத்திக்கோ என்று அனுப்பியும் வைத்தான்.

தன்னை தேடுவாளே என்பதோடு தனியாய் அவளும் பழகிக் கொள்ள வேண்டும் என்று தான் நினைத்தான்.

இத்தோடு பலமுறை கூறியும் அவள் தான் கேட்பதாய் இல்லை.

"நான் இங்கேயே தனியா பழகிக்குவேன்!" என்றவள் தான் இப்படி ஓய்ந்துபோய் அமர்ந்திருக்கிறாள்.

"கடந்து வந்து பார்க்கட்டுமே!" என்ற எண்ணம் தான் சிவாவிற்குமே!.

நாட்கள் நகர நகர அவனாலும் அதிகமாய் அவளுடன் நேரத்தை செலவிட முடியவில்லை.

புதிதாய் கிடைத்திருக்கும் வேலை ஒருபுறம் திருமண வேலைகள் ஒருபுறம் என அவன் நேரம் போதாமல் சுற்றிக் கொண்டிருந்தான்.

அவ்வபோது தானே அழைத்து பேசுபவன் சில நிமிடங்களில் வைத்துவிடுவான். இவள் அழைக்கும் பொழுதும் எத்தனை வேலைகளில் இருந்தாலும் எடுத்து பேசிவிடுவான் என்றாலும் முன்பு போல நிறுத்தி நிதானமாய் பேசிட முடியாது.

அலுவலக நேரங்களில் சொல்லவே வேண்டாம். வீட்டிற்கு சென்றுவிட்டாலும் திருமண வேலைகளில் தந்தையுடனோ உறவினருடனோ இருக்க, நேரம் குறைந்தது இருவருக்கும்.

அதிகமான தேடல் என்று கூறும் அளவுக்கு அவனை தேடியது மகிமா மனம்.

"மகி! என்ன இவ்வளவு சைலன்ட்! அதுவும் நீ இருக்குற இடத்துல? கல்யாணக் கனவா?" பிரியா மேம் கேட்டு சிரிக்க,

"அதெல்லாம் இல்லை மேம்!" என்பவளுக்கு தானே தெரியும் பேசிட யாருமில்லை என்று.

யாழினி சுஜாதா இருவருமே ஹாய், வா, போ என்றளவில் மட்டும் இருக்க, அதை நினைத்து கவலை கொள்ளவெல்லாம் இல்லை மகிமாவும்.

வேறிடம் மாறிவிட்டாலும் போதும் என்பதை போல அவர்கள் நடந்து கொள்ள, பிரியா அனைத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.

இருந்தாலும் அவராய் எதிலும் தலையிட்டுக் கொள்வதில்லை.

ஒரு வாரம் முடிந்திருந்தது. இன்னும் ஒரு வாரம் சரியாய் ஏழே நாட்களில் திருமணம்.

"இனி லீவ் எடுத்துக்கோ அம்மு!" என்று சிவாவே கூற,

"ம்ம்ஹும்! அக்கா பெங்களூர் மாமா கூட போயிருக்கா. வர ரெண்டு நாள் ஆகும். வீட்டுல இருந்தாலும் போர் தான் மாமா."

"இங்க நேரம் போகுதாமா?"

"போகுதோ இல்லையோ! உங்களை பார்க்கலாமில்ல?"

"டேய்!" என்றவன் மனம் நெகிழ்ந்தது.

"என்னவோ கூடவே இருக்குறேன்ற மாதிரி சொல்ற! இப்ப பார்த்து ஒர்க் அதிகமா இருக்கு அம்மு! வெளில வரவே முடியல"

"அதான் அப்பப்ப எப்பவாச்சும் பாக்குறேனே! அது போதும்!"

"கேட்கமாட்ட! சரி வனியும் திவாகர் அண்ணாவும் வரவும் நீ ஆபீஸ் வர வேண்டாம்!"

"மாமா!"

"சொன்னா கேளு அம்மு! எனக்கு கஷ்டமா இருக்கு டி. ஜாலியா சுத்தி வந்து உன்னை பார்த்துட்டு இப்ப என்னவோ நானே உன்னை கட்டி வச்சா மாதிரி இருக்கு. நான் ஆபீஸ்ல பேசிக்குறேன். லீவ் எக்ஸ்ட்டென் பண்றதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்!" என்றவன்,

"என்ன ஓகே தானே?" என்று கேட்க,

"மாமா சொன்னா சரி தான்!" என்றவள் சொல்லில் மென்னகையுடன் தலையசைத்துக் கொண்டான்.

அடுத்த இரண்டாவது நாள் விடுமுறை விண்ணப்பித்து அது கிடைத்துவிட, அன்று மதியம் ஒன்றரை மணிக்கு பிரியா, யாழினி, சுஜாதா என அனைவரும் சாப்பிட எழும் நேரம் மகிமாவும் தன்னுடையதை எடுத்துக் கொண்டு எழ இருந்த நேரம் நேராய் அவள் இருக்குமிடம் தேடி வந்திருந்தான் சிவா.

"என்ன பிரகாஷ் இந்த பக்கம்?" என்று பிரியா கிண்டல் செய்ய,

"மகியை பார்க்க வந்தேன் மேம்!" என நேராய் கூறியவன்,

"போலாமா?" என மகிமாவிடம் கேட்டு தலையசைக்க, ஏன் எங்கே என்ற எந்த கேள்வியும் இன்றி பளிச்சென்ற முகத்துடன் அத்தனை வேகமாய் தலையாட்டினாள் மகிமா.

மற்ற இருவரையும் சிவா கண்டு கொள்ளவே இல்லை என்றால் மகிமாவிற்கு சுற்றி இருப்பவர்கள் எல்லாம் நினைவிலேயே இல்லை சிவா தன்னை தேடி வந்ததும்.

"எங்க போறோம் மாமா?" வெளியே வந்ததும் கேட்க,

"அப்படியே ஒரு லாங் ட்ரைவ் போலாம் தான்! டைம் இல்லையே! சோ லஞ்ச் முடிச்சுட்டு வரலாம்!" என்று சொல்லி அழைத்து சென்றான்.

இடைவேளை நேரத்தை அதிகமாய் எடுத்துக் கொண்ட போதும் போதாது என்றே தோன்றியது இருவருக்கும்.

நீண்ட நாட்களுக்கு பின் இருவருமாய் தனியே. சில வார்த்தைகள் சில மௌனங்கள் என்று நேரம் பறந்து சென்றிருந்தது.

"ரெடியா அம்மு?"

"எங்க மாமா?"

"எங்கேயா? நம்ம வீட்டுக்கு வரணுமே! நாலு நாள் தான். அடுத்த நாள் ரிசெப்ஷன்... நெக்ஸ்ட் மார்னிங் மேரேஜ். அவ்ளோ தான். இனி அத்தையை நீ ஏமாத்த வேண்டாம். ஹைட் பண்ணாம ஸ்டேட்டஸ் வைக்கலாம்"

"மாமா! என்னவோ இதுக்காகவே கல்யாணம் பண்ற மாதிரி சொல்றிங்களே!"

"அப்ப வேற எதுக்காக?"

"மாமா!" என்றவள் முறைப்பில்,

"இன்னுமே தெரிலயே உனக்கு!" என்று சொல்லி சிரிக்க,

"சிரிக்காதிங்க மாமா! ஷை ஆகுதுல்ல?"

"அப்போ அவ்ளோ தெரியுதா பொண்ணுக்கு!"

"மா.. மா!" என்றவள் சிணுங்களை ரசித்தவன்,

"ரெடியா அம்மு?" என்றான் மீண்டுமாய்.

"எல்லாம் ரெடியா இருக்கு. பெட்டியை கட்டி அனுப்பிவிட உங்க மாலாத்தை எப்பவோ பேக் பண்ணி ரெடியாகிட்டாங்க!" என்றவள் சொல்லில் மௌனமாய் புன்னகைக்க,

"நீங்க ரெடியா மாமா?" என்றாள் பதிலாய்.

"ஹ்ம்ம்! எப்பவோ!" என்றான் அதே புன்னகை கொண்டு.

"சும்மாவே டார்ச்சர் பண்ணுவா. கூடவே இருந்து என்ன பண்ண போராளோனு தானே உங்க மைண்ட் வாய்ஸ் சொல்லுது?" என்று மகிமா கேட்க,

"இல்லையே! அப்படியே ஆப்போஸிட்டா சொல்ற நீ!" என்றவன் கண்ணங்களை பற்களுக்குள் உள்ளிழுத்துக் கொண்டான்.

"இப்ப ஒர்க் எல்லாம் கஷ்டமா இருக்குதா உங்களுக்கு? ரொம்ப பிரஷர் எடுத்துக்குறிங்களா மாமா?"

"பிரஷர் எல்லாம் இல்ல டா. இப்ப தானே கத்துக்குறோம். அது பழக பழக சரியாகிடும். நானும் ஃபோர் டு ஃபைவ் டேஸ்ல லீவ் அப்ளை பண்ணனும். சோ அதுக்குள்ள எதாவது செஞ்சு காட்டணுமே! அதனால தான் கொஞ்சம் பிஸியா தெரியுறேன்!" என்றவன் திருமண வேலைகள் குறித்து அவளோடு பேசி அவளை ரசித்து அவளையும் கொஞ்சம் இலகுவாக்கி தான் மீண்டுமாய் அலுவலகம் அழைத்து வந்ததே!

"நாளையில இருந்து நம்ம மேரேஜ் அண்ட் என்னை பத்தி மட்டும் யோசிச்சுட்டு இரு. நான் அப்பப்ப கால் பண்றேன். ரொம்ப லேட் ஆச்சுன்னா..."

"நான் தூங்க மாட்டேன் மாமா!"

"உதை வேணுமா? நல்லா தூங்கி எழுந்து பிரெஷ்ஷா இருந்துக்கோ!" என்றவன் இப்படியாக பேசுவதே எப்பொழுதாவது அரிது தான். ஆனாலும் அது மகிமாவிற்கு புரிந்தால் தானே அதிசயம்.

"லேட் ஆச்சுன்னா கூட மெசேஜ் போட்டுட்டு தான் தூங்குவேன்னு சொல்ல வந்தேன்! ரிலாக்ஸ்டா ஹப்பியா இரு! சீக்கிரமே பாக்கலாம்!" என்று கூறி அவள் தலையில் கைவைத்து ஆட்ட, அளவில்லா மகிழ்ச்சியுடன் தான் அவனிடம் இருந்தும் அந்த அலுவலகத்தில் இருந்தும் அன்று விடைபெற்றாள்.

காலம் ஓடும் வேகத்தில் நாட்கள் எல்லாம் பறந்து ஓட, இதோ இரு மனம் இணையும் அந்நாள்! அனைவரின் மனம் நெகிழ செம்மையாய் நிகழ்ந்தேறியது சிவா மகிமாவின் திருமணம்.

தொடரும்..